++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிரகங்களுக்கும் கோட்டா உண்டு!
கிரகங்களுக்கும் கோட்டா உண்டு! அதாவது ஒதுக்கீடு உண்டு!
வாத்தியார், என்ன புதிதாகவும், புதிராகவும் இருக்கிறதே என்று சொல்லாமல் இன்றைய பதிவு முழுவதையும் படியுங்கள். உங்களுக்கே தெரியவரும்!
ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு!
இதன் துவக்கப் பகுதி, இதற்கு முன் உள்ள இடுகையில் உள்ளது. அதைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
------------------------------------------------------------
12
அசுபயோகம்-Asubhayoga: தீய கிரகம் அல்லது தீய கிரகங்களின் கூட்டால் ஏற்படும் தீமையான பலன்கள்.
A Combination caused by evil planets
13
அசுரயோகம்-Asurayoga: தீய கிரகங்கள் ஆட்சி, ஆதிபத்யம், காரகம் ஆகியவற்றால், ஜாதகனுக்குக் கொடுக்கும் நன்மையான பலன்கள் A Combination for tyrannical and demoniacal characteristics tyrannical - characteristic of an absolute ruler or absolute rule; having absolute sovereignty!
---------------------------------------------------------
14.
அதிபதி (Owner): உரியவன். சொந்தக்காரன். கிரகங்களைப் பொறுத்தவரை ராசிக்கு உரியவன். வீட்டிற்கு உரியவன் ஆட்சிக்கு உரியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
15
ஆதிபத்யம் (Ownership) இடங்களுக்கு, ராசிகளுக்கு, வீடுகளுக்கு உரிமையாளர்கள். பட்டா போட்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது:
மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி - செவ்வாய்
ரிஷபத்திற்கும், துலாமிற்கும் அதிபதி - சுக்கிரன்
மிதுனத்திற்கும், கன்னிக்கும் அதிபதி - புதன்
தனுசுவிற்கும், மீனத்திற்கும் அதிபதி - குரு
மகரத்திற்கும், கும்பத்திற்கும் அதிபதி - சனி
இவர்கள் ஐவருக்கும் இரண்டு இடங்களுக்கான பட்டா கிடைத்துள்ளது
சூரியனுக்கு ஒரு இடம்தான் - அது சிம்மம்
சந்திரனுக்கும் ஒரு இடம்தான் - அது கடகம்
ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த இடம் இல்லை. வாடகை வீடுதான். ஆனால் அவைகள் குரல் கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளன. தினசரி 90 நிமிடங்கள் ராகுவிற்கும் 90 நிமிடங்கள் கேதுவிற்கும் கொடுக்கப்பெற்றுள்ளது. அதைத்தான் ராகுகாலம், எமகண்டம் என்பார்கள்!
-----------------------------------------------
16
அஷ்டகவர்க்கம் - Ashtagavarga: எட்டு விதமான வழிகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் சக்தி - Eight sources of energy of the planets. அவைகள் பரல்கள் எனப்படும் மதிப்பெண்கள் மூலம் ஜாதகத்தில் கொடுக்கப்பெற்றிருக்கும்
17
ஆரோஹணம் -Arohana: கடிகாரச் சுற்று Ascending directions
18
அவரோஹணம் -Avarohana: கடிகாரச் சுற்றுக்கு எதிரான வழியில் சுற்றுவது -Descending direction
19
உச்சபலம் - occhabala: உச்சமான கிரகத்தின் வலிமை -Exaltation strength
20
கதி -Ghati: 24 நிமிடங்களுக்குச் சமமான நேரத்தைக் குறிப்பது. ஒரு நாளில் 1/60 பாகம்
21
சத்பலம் - Shadbala: ஆறுவிதமான நிலைகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் வலிமை சத்பலம் எனப்படும். Six sources of planetary and house strengths Shad Bal consists of the following strengths
1. ஸ்தானபலம் Sthan Bal (Positional strength)
2. திக்பலம் Dig Bal (Directional strength)
3. காலபலம் Kaal Bal (Temporal strength),
4. சேஷ்டபலம்Chesht Bal சுழற்சியால் கிடைக்கும் பலம் (Motional strength)
5. நைசர்கிகபலம் Naisargika Bal - இயற்கையான வலிமை (Natural strength)
6. த்ரிக்பலம் Drik Bal - பார்வையால் கிடைக்கும் பலம் (Aspectual strength)
These strengths are computed for the seven Grahas from Sun to Saturn. The nodes (Rahu & Ketu) are not considered.
--------------------------------------------------------------------
22
சத்ரு-Satru: எதிரி-Enemy
23
சஷ்டக அஷ்டகம் (அல்லது அஷ்டக சஷ்டகம், அல்லது அஷ்டமம்,
சஷ்டமம் ): ஒருவருக்கொருவர் 6ஆம் மற்றும் 8ஆம் இடத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைமை!
24
திரிசாம்சம் - ராசியில் 1/30 பாகம்.1/30th division of a sign
25
தீய இடம் Dusthana: தீய இடங்கள் அல்லது மறைவிடங்கள் - அவைகள் முறையே 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும் An evil place, namely, the 6th, 8th and 12th houses
26
துவதசாம்சம் - Dwadasamsa: ராசியில் 1/12 பாகம் 1/12th division of a sign
27
தோஷம் Dosha: கெட்டுவிட்ட நிலைமை Affliction
28
நவாம்சம் - Navamsa: ராசியில் 1/9 பாகம் 1/9th division of a sign. ராசியின் விரிவாக்கம்தான் நவாம்சம். அதை மனதில் கொள்க! Navamsam is the magnified version of a Rasi Chart!
29
நீசம்-Neecha: ஒருகிரகத்தின் செயல் இழந்த நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் செல்லாக் காசாகிப்போன நிலைமை Debilitated
30
நீசபங்கம் Neechabhanga: நீசம் நிவர்த்தியாகும் அல்லது நிவர்த்தியாகிவிட்ட நிலைமை-Cancellation of Debility
31
பரிவர்த்தனை - Parivartana: உன் வீட்டில் நான், என் வீட்டில் நீ என்று கிரகங்கள் வீடு மாறி அமர்ந்திருக்கும் நிலைமை -mutual exchange of signs
-----------------------------------------------------
விடுபட்டவை:
நேற்றைய பதிவில் விடுபட்டவை:
தலைப்பு: பஞ்சாங்கம்
நாட்கள் அல்லது வாரம்: ஒருநாள் சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் அல்லது நேரம் ஒரு நாள் எனப்படும்
சூரியனுக்கான நாள் - ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்கு - திங்கட்கிழமை, செவ்வாய்க்கு - செவ்வாய்க்கிழமை, புதன் கிரகத்திற்கு புதன் கிழமை, குருவிற்கு வியாழக்கிழமை, சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை, சனீஷ்வரனுக்கு சனிக்கிழமை. அன்றைய நாட்களின் ஆதிக்க நாயகர்கள் அவர்கள்தான்!
----------------------------------------------------
யோகம்:
இரு வகையான யோகங்கள் உள்ளன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரத்தை வைத்துக் கணக்கிடப் படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் பாகைகளைக் கூட்டினால் வருவதே இந்த யோகம். அவைகள் மொத்தம் 27 ஆகும். கீழே கொடுக்கப்பெற்றுள்ளன:
1.விஷ்கும்பம், 2.ப்ரீத்தி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்யம், 5. சோபனம், 6.அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9.சூலம், 10.கண்டம், 11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம், 4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான், 19.பரீகம், 20. சிவம், 21. சித்தம், 22. சாத்தீயம், 23. சுபம், 24.சுப்ரம், 25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.
மற்றைய யோகம் சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.
நட்சத்திரத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.
ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.
மரண யோகத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது. அதுபோல முதன் முதலாக சிகிச்சைக்குச் செல்பவர்களும் மரணயோகத்தில் செல்லக்கூடாது
-------------------------------------------------------------------------
கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.
கரணத்தின் பலன் என்ன என்பது பஞ்சாங்கத்தில் கொடுக்கப்படவில்லை. தஞ்சாவூர்ப் பெருந்தகையாளர் திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் வந்து சொல்வார். பொறுமை காக்கவும்
------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஜோதிட அருஞ்சொற்கள் பகுதி இரண்டு,
நன்கு புரியும்படியும்,விவரங்குளுடனும் கொடுத்துள்ள
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-06-15
கரணத்தைப் பற்றி நான் கூற வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பது மகிழ்ச்சி
ReplyDeleteஅளித்தாலும், அதைப் பற்றிய செய்திகள் குறைவாகவே கிடைப்பதால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பினை நிறைவு செய்வேன் என்பது சந்தேகமே!
தாங்கள் கூறியது போல் கரணம் என்பது திதியில் சரிபாதி என்பது முதல்படி. வளர்பிறையில் ஒரு திதிக்கு உள்ள இரண்டு கரணங்களே,தேய்பிறைக்கும் வராது. உதாரணமாக,
தசமி வளர்பிறைத் திதி தைதுலை,கரசை என்று இரண்டாகப் பிரியும்.
தசமி தேய்பிறைத் திதி வணிசை, பத்திரை என்று இரண்டாகப் பிரியும்.
ராசிக்கு இரண்டு வீடுகள் இருப்பதுபோல் திதிக்கும் இரண்டு பகுதிகள்.ஒன்று சிறப்பு;மற்றது ஆர்டினரி.சிறப்பு பகுதியில் முஹுர்த்தம் அமைக்க வேண்டும்.எனக்குள்ள சந்தேகம் இதில் எது சிறப்பு, எது ஆர்டினரி என்று தெரியவில்லை. அனந்த் திருஅரங்க உலக்கையைப் பிடியுங்க!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ஜோதிட அருஞ்சொற்கள் பகுதி இரண்டு,
நன்கு புரியும்படியும்,விவரங்குளுடனும் கொடுத்துள்ள
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி /////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
//////kmr.krishnan said...
ReplyDeleteகரணத்தைப் பற்றி நான் கூற வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பது மகிழ்ச்சி
அளித்தாலும், அதைப் பற்றிய செய்திகள் குறைவாகவே கிடைப்பதால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பினை நிறைவு செய்வேன் என்பது சந்தேகமே!
தாங்கள் கூறியது போல் கரணம் என்பது திதியில் சரிபாதி என்பது முதல்படி. வளர்பிறையில் ஒரு திதிக்கு உள்ள இரண்டு கரணங்களே,தேய்பிறைக்கும் வராது. உதாரணமாக,
தசமி வளர்பிறைத் திதி தைதுலை,கரசை என்று இரண்டாகப் பிரியும்.
தசமி தேய்பிறைத் திதி வணிசை, பத்திரை என்று இரண்டாகப் பிரியும்.
ராசிக்கு இரண்டு வீடுகள் இருப்பதுபோல் திதிக்கும் இரண்டு பகுதிகள்.ஒன்று சிறப்பு;மற்றது ஆர்டினரி.சிறப்பு பகுதியில் முஹுர்த்தம் அமைக்க வேண்டும்.எனக்குள்ள சந்தேகம் இதில் எது சிறப்பு, எது ஆர்டினரி என்று தெரியவில்லை. அனந்த் திருஅரங்க உலக்கையைப் பிடியுங்க! ////////
எழுதும்போது ஒருமுறை பஞ்சாங்கத்தில் தேடிப்பார்த்தேன். விவரம் இல்லை. நன்றி கிருஷ்ணன் சார்!
ஜோதிடச் சொல்லகராதி சுரம் பிரிக்கப் படுகிறது..
ReplyDeleteநன்றிகள் ஐயா!
அருஞ்சொற்பொருள் விளக்கம் உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது.....பதிவிற்க்கு நன்றி......
ReplyDeleteஐயா ,
ReplyDeleteகுரு சுக்கிரன் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? இம்முன்று கிரகங்களும் கேந்தரத்தில் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுமா? தயவு கூர்ந்து விளக்கவும்
நன்றி,
குமார் .S
////Alasiam G said...
ReplyDeleteஜோதிடச் சொல்லகராதி சுரம் பிரிக்கப் படுகிறது..
நன்றிகள் ஐயா!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
//////astroadhi said...
ReplyDeleteஅருஞ்சொற்பொருள் விளக்கம் உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது.....பதிவிற்க்கு நன்றி...../////.
நன்றி ஆதிராஜ்!
//////kumar.S said...
ReplyDeleteஐயா ,
குரு சுக்கிரன் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? இம்முன்று கிரகங்களும் கேந்தரத்தில் இருந்தால் இந்த தோஷம் ஏற்படுமா? தயவு கூர்ந்து விளக்கவும்
நன்றி,
குமார் .S/////
நீங்களாக புதிதாக எதையாவது கிளப்பாதீர்கள். குரு, சுக்கிரன் இரண்டும் சுபக்கிரகங்கள். அவற்றிற்கு ஏது தோஷம்? செவ்வாய்க்கு மட்டுமே தோஷம் உண்டு. அதில் சில விதிவிலக்குகள் உண்டு. மேஷம், மற்றும் விருச்சிக லக்கினக்காரகளுக்கு செவ்வாய் அதிபதி. அதாவது owner ஆகவே அவர்களுக்கு செவ்வாயால் தோஷம் கிடையாது. வேறு சில அமைப்புக்களாலும் செவ்வாய் தோஷத்திற்கு விலக்கு உண்டு. அதை மொத்தமாகப் பின்னூட்டத்தில் எழுத முடியாது. உங்களுக்கு உங்கள் ஜாதகத்தை வைத்துப் பாருங்கள்
Dear sir,
ReplyDeleteVery useful lessons.
Thanks a lot sir!
வணக்கம் சார்,
ReplyDeleteசார் இரண்டு நாட்களா பாடம் ரொம்ப நல்லாயிருந்தது. எனக்கு சிற்சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது அதனால் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது இப்போ எனக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் குறைந்து வீட்டது.
ரொம்ப நன்றி சார் ஜாதக புத்தகம் வேண்டும்.
சுந்தரி.
அய்யா,
ReplyDeleteஅருமையான விளக்கம்.
"சத்பலம் - Shadbala: ஆறுவிதமான நிலைகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் வலிமை சத்பலம் எனப்படும். Six sources of planetary and house strengths Shad Bal consists of the following strengths
1. ஸ்தானபலம் Sthan Bal (Positional strength)
2. திக்பலம் Dig Bal (Directional strength)
3. காலபலம் Kaal Bal (Temporal strength),
4. சேஷ்டபலம்Chesht Bal சுழற்சியால் கிடைக்கும் பலம் (Motional strength)
5. நைசர்கிகபலம் Naisargika Bal - இயற்கையான வலிமை (Natural strength)
6. த்ரிக்பலம் Drik Bal - பார்வையால் கிடைக்கும் பலம் (Aspectual strength)"
மேல் குறுப்பிட பலங்கள் பற்றிய குறிப்பு, பல கணினி கணிக்கும் ஜாதகங்களில் (output) நான் பார்த்து இருக்கிறேன், அதன் விளக்கம் அல்லது அதை கொண்டு தெரிந்து கொள்ள கூடிய அடிப்படையை பற்றி விளக்க முடியுமா?
நன்றி
ஸ்ரீதர்
///Dr.Vidhya said...
ReplyDeleteDear sir,
Very useful lessons.
Thanks a lot sir!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்!
///sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
சார் இரண்டு நாட்களா பாடம் ரொம்ப நல்லாயிருந்தது. எனக்கு சிற்சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது அதனால் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது இப்போ எனக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் குறைந்து வீட்டது.
ரொம்ப நன்றி சார் ஜாதக புத்தகம் வேண்டும்.
சுந்தரி.////
முதல் புத்தகம் கிருஷ்ணன் சாருக்கு. இரண்டாவது புத்தகம் உங்களுக்கு. பொறுத்திருங்கள்
//////Sridhar Subramaniam said...
ReplyDeleteஅய்யா,
அருமையான விளக்கம்.
"சத்பலம் - Shadbala: ஆறுவிதமான நிலைகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் வலிமை சத்பலம் எனப்படும். Six sources of planetary and house strengths Shad Bal consists of the following strengths
1. ஸ்தானபலம் Sthan Bal (Positional strength)
2. திக்பலம் Dig Bal (Directional strength)
3. காலபலம் Kaal Bal (Temporal strength),
4. சேஷ்டபலம்Chesht Bal சுழற்சியால் கிடைக்கும் பலம் (Motional strength)
5. நைசர்கிகபலம் Naisargika Bal - இயற்கையான வலிமை (Natural strength)
6. த்ரிக்பலம் Drik Bal - பார்வையால் கிடைக்கும் பலம் (Aspectual strength)"
மேல் குறுப்பிட பலங்கள் பற்றிய குறிப்பு, பல கணினி கணிக்கும் ஜாதகங்களில் (output) நான் பார்த்து இருக்கிறேன், அதன் விளக்கம் அல்லது அதை கொண்டு தெரிந்து கொள்ள கூடிய அடிப்படையை பற்றி விளக்க முடியுமா?
நன்றி
ஸ்ரீதர்/////
அதைப்பற்றி முன்னரே விளக்கமாக எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் தேடிப்படியுங்கள் நண்பரே!
எனக்குத் தெரிந்த வரையில் முதல் 7 கரணங்கள் ஒரு சந்திர மாதத்தில் 8 முறை ஒன்றன் பின் ஒன்றாக மாறி வரும். கடைசி 4 நிலையானது. (சந்திர) மாதத்திற்கு ஒரு முறைதான் வரும். இதே சந்திர மாதத்தில் 29 தேதி ஆரம்பித்து 1ம் தேதி முடிவுரும். சற்றேரக் குறைய கிருஷ்ண பட்ச சதுர்தசியில் ஆரம்பித்து சுக்ல பட்ச பிரதமையில் முடிவுறும். இவற்றில் 7ம், 10ம் அசுப பலன்களைக் கொடுக்க கூடியது. இவற்றின் பலன். கீழே கொடுக்கபட்டுள்ள வலை தளத்தில் இருக்கிறது. படித்து மகிழுங்கள். http://astrobix.com/articles/Parts-of-Panchang-Karana.aspx
ReplyDeleteராகு கேதுக்கள் தம் சொந்த வீடாக முறையே கும்ப விருச்சிக ராசியை சனி/செவ்வாயோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பிருஹத் பராசர ஹோரையில் 47ம் அத்தியாயத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. வேறு சமஸ்கிருத ஜோதிட நூல்களில் வேறு விதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய ஜோதிடர்கள் பெரும்பாலும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. தாங்கள் சொல்வது போல் சொந்த வீடு இல்லை என்றுதான் வாதிடுகிறார்கள். இதை அவரவர் முடிவுக்கே விட்டு விட வேண்டியதுதான். யாருடைய கருத்தையும் விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை.
ReplyDeleteDear Sir,
ReplyDelete"What is written without effort is in general read without pleasure."
The above words suits all of your followers in the classroom.
1) You put hard work in understanding the Jothish concepts
2) You think very hard how to pass the message so that we easily understand the topics.
3) Like a movie you do lot of hard work behind the scene.
End result :- we are reading with pleasure.
God bless you.
- Ram
////ananth said...
ReplyDeleteஎனக்குத் தெரிந்த வரையில் முதல் 7 கரணங்கள் ஒரு சந்திர மாதத்தில் 8 முறை ஒன்றன் பின் ஒன்றாக மாறி வரும். கடைசி 4 நிலையானது. (சந்திர) மாதத்திற்கு ஒரு முறைதான் வரும். இதே சந்திர மாதத்தில் 29 தேதி ஆரம்பித்து 1ம் தேதி முடிவுரும். சற்றேரக் குறைய கிருஷ்ண பட்ச சதுர்தசியில் ஆரம்பித்து சுக்ல பட்ச பிரதமையில் முடிவுறும். இவற்றில் 7ம், 10ம் அசுப பலன்களைக் கொடுக்க கூடியது. இவற்றின் பலன். கீழே கொடுக்கபட்டுள்ள வலை தளத்தில் இருக்கிறது. படித்து மகிழுங்கள். http://astrobix.com/articles/Parts-of-Panchang-Karana.aspx/////
மேலதிகத் தகவல்களை பிடித்துக் கொடுத்தமைக்கு நன்றி ஆனந்த்!
///ananth said...
ReplyDeleteராகு கேதுக்கள் தம் சொந்த வீடாக முறையே கும்ப விருச்சிக ராசியை சனி/செவ்வாயோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பிருஹத் பராசர ஹோரையில் 47ம் அத்தியாயத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. வேறு சமஸ்கிருத ஜோதிட நூல்களில் வேறு விதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய ஜோதிடர்கள் பெரும்பாலும் இதை ஏற்றுக் கொள்வதில்லை. தாங்கள் சொல்வது போல் சொந்த வீடு இல்லை என்றுதான் வாதிடுகிறார்கள். இதை அவரவர் முடிவுக்கே விட்டு விட வேண்டியதுதான். யாருடைய கருத்தையும் விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை./////
கருத்துக்களையும், எண்ணங்களையும் சொல்லலாம். அதில் ஒன்றும் குற்றம் வராது!
/////Ram said...
ReplyDeleteDear Sir,
"What is written without effort is in general read without pleasure."
The above words suits all of your followers in the classroom.
1) You put hard work in understanding the Jothish concepts
2) You think very hard how to pass the message so that we easily understand the topics.
3) Like a movie you do lot of hard work behind the scene.
End result :- we are reading with pleasure.
God bless you.
- Ram /////
உங்களுடைய மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே! எழுதுபவர்களுக்கு இதுபோன்ற பாராட்டுக்கள்தான் ஊக்க மருந்தாகும்! (Tonic)
ஐயா,
ReplyDeleteஜோதிட அருஞ்சொற்கள் பகுதி இரண்டு மிக அருமை...நன்றி.
சட் பலன்களைப் பற்றிய பழைய பாடத்தை நானும் தேடினேன். கிடைக்கவில்லை..ஒருவேளை மின்னஞ்சல் பாடமோ?..மூத்த மாணவர்களின் உதவி தேவை...
அன்புடன்
செங்கோவி
http://classroom2007.blogspot.com/2009/12/doubts_25.html
ReplyDeleteநான் கேட்ட ஷட் பலம் இங்கே உள்ளது...
http://classroom2007.blogspot.com/2009/12/doubts_25.html
கண்டு கொண்டேன்..கண்டு கொண்டேன்..
அன்புடன்,
செங்கோவி
/////SHEN said...
ReplyDeletehttp://classroom2007.blogspot.com/2009/12/doubts_25.html
நான் கேட்ட ஷட் பலம் இங்கே உள்ளது...
http://classroom2007.blogspot.com/2009/12/doubts_25.html
கண்டு கொண்டேன்..கண்டு கொண்டேன்..
அன்புடன்,
செங்கோவி //////
தேடுதலில் இருந்து நானும் தப்பித்தேன். தப்பித்தேன். நன்றி! நன்றி!
ஐயா,
ReplyDeleteசிலருடைய ஜாதகத்தில் ராகு/கேது, நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும். ஆகவே, அவர்கள் ராகுகாலத்தில் / எமகண்டத்தில் காரியங்களைச் செய்தால் வெற்றி எளிதில் கை கூடுமா?
( ரொம்ப கேள்வி கேட்கிறேனோ?)
அன்புடன்,
செங்கோவி
/////SHEN said...
ReplyDeleteஐயா,
சிலருடைய ஜாதகத்தில் ராகு/கேது, நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும். ஆகவே, அவர்கள் ராகுகாலத்தில் / எமகண்டத்தில் காரியங்களைச் செய்தால் வெற்றி எளிதில் கை கூடுமா?
( ரொம்ப கேள்வி கேட்கிறேனோ?)
அன்புடன்,
செங்கோவி ////
உங்கள் ஜாதகத்தில் அப்படி ஒரு அமைப்பு இருந்தால், நீங்கள் முயன்று பார்த்துவிட்டு எங்களுக்குச் சொல்லுங்கள் சுவாமி!