மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.6.10

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்!

==================================================
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்!

புகழ்பெற்ற பாடல்கள் - அதாவது இறைவனின் புகழைச் சொல்லும் பாடல்களின் வரிசையில் அடுத்த பாடலை இன்று பதிவாக இடுவதில் மகிழ்வு கொள்கிறேன்!
----------------------------------------------------------------------------------
குன்னக்குடி வைத்யநாதன் அவர்கள், தன்னுடைய தனிப்பாடல்கள் ஆல்பத்திற்காக இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேட்ட இயக்குனர் திரு. ஏபி. நாகராஜன், குன்னக்குடியாரிடம் அனுமதிபெற்றுத் தன்னுடைய கந்தன் கருணை படத்தில் இதை சேர்த்துப் பாடலுக்கும் பெருமை சேர்த்ததோடு, தன்னுடைய படத்திற்கும் பெருமை சேர்த்தார்.
-------------------------------------------------------------------------------

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
(திருப்பரங்குன்றத்தில்)

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்)


வரிகள்: பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா
படம்: கந்தன் கருணை
-----------------------------------------------------------------------------
வாத்தியார் 3 தினங்கள் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு 3 நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 8.6.2010 அன்று நடைபெறும். அனைவரும் பழைய பாடங்களைப் படியுங்கள். அதாவது ஒருமுறை புரட்டிப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

17 comments:

Alasiam G said...

தமிழ் என்றால் அழகு! அழகென்றால் முருகு!
அவனே அழகு! அந்த சரவணனே அழகு!!
பாடல் அருமை, பாடலில் ஐந்து படைகளே இருப்பதாக
உண்கிறேன் அதற்காகவே இந்த ஆறாவதாக
என் சிற்றறிவுக்கு எட்டிய வடிவில் கிறுக்கியுள்ளேன்.

"சுவாமிக்கு உபதேசம் செய்த முருகா
சுவாமி மலை வாழ் மால்மருகா
ஆறுபடை கொண்ட வேல்முருகா - அண்டினோரை
ஆதரித்து ஆட்க்கொள்ள வேணுமடா பாலமுருகா.
(திருப்பரங்குன்றத்தில்)"

நன்றிகள் குருவே!

kmr.krishnan said...

திருபரம்குன்றம் குடைவரைக்கோயில்! முருகன் ச்ன்னதிக்கு அருகிலேயே சிவன் சன்னதி அம்பாள் அனைவரும் அடக்கம். 5 சன்னதிகள் அங்கேயே உள்ளன.ஆனால் முருகனை மட்டுமே காட்டுவார்கள்.அர்ச்சகரின் தயவினை
வேண்டிப் பெற்று உள்ளே சென்றால் அழகான, அபூர்வமான அர்ச்சா மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

முருகனின் புகழைச் சொல்லும் பாடல்களில்,

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்"----

இந்த இனிமையான பாடலை கேட்கும்போது திருப்பரங்குன்றம்,திருத்தணி,
திருச்செந்தூர்,பழனி,பழமுதிர்சோலை,
கந்த கோட்டம்,மனக்கண் மூலமாக
சுவாமிமலையும் சேர்த்து தரிசிக்க முடிகிறது.
நினைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும்
தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-06-04

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
தமிழ் என்றால் அழகு! அழகென்றால் முருகு!
அவனே அழகு! அந்த சரவணனே அழகு!!
பாடல் அருமை, பாடலில் ஐந்து படைகளே இருப்பதாக
உண்கிறேன் அதற்காகவே இந்த ஆறாவதாக
என் சிற்றறிவுக்கு எட்டிய வடிவில் கிறுக்கியுள்ளேன்.
"சுவாமிக்கு உபதேசம் செய்த முருகா
சுவாமி மலை வாழ் மால்மருகா
ஆறுபடை கொண்ட வேல்முருகா - அண்டினோரை
ஆதரித்து ஆட்க்கொள்ள வேணுமடா பாலமுருகா.
(திருப்பரங்குன்றத்தில்)"
நன்றிகள் குருவே!////

உங்களுக்குத் தமிழின்மேல் இருக்கும் ஆர்வத்தினால், நிச்சயம் தமிழ்க்கடவுள் முருகனின் அருள் உங்களுக்கு உண்டு ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
திருபரங்குன்றம் குடைவரைக்கோயில்! முருகன் சன்னதிக்கு அருகிலேயே சிவன் சன்னதி அம்பாள் அனைவரும் அடக்கம். 5 சன்னதிகள் அங்கேயே உள்ளன.ஆனால் முருகனை மட்டுமே காட்டுவார்கள்.அர்ச்சகரின் தயவினை வேண்டிப் பெற்று உள்ளே சென்றால் அழகான, அபூர்வமான அர்ச்சா மூர்த்திகளைத் தரிசிக்கலாம்./////

உபயோகமான தகவல். நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
முருகனின் புகழைச் சொல்லும் பாடல்களில்,
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்"----
இந்த இனிமையான பாடலை கேட்கும்போது திருப்பரங்குன்றம்,திருத்தணி,
திருச்செந்தூர்,பழனி,பழமுதிர்சோலை,
கந்த கோட்டம்,மனக்கண் மூலமாக
சுவாமிமலையும் சேர்த்து தரிசிக்க முடிகிறது.
நினைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும்
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nalla padal Sir...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SHEN said...

மிக அருமையான பதிவு அய்யா..மனதிற்கு இனிமை தந்தது...

முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும் - அழகன்
எங்கள் குமரன் என்று
மனமொழி கூறும்.

--அன்புடன்,
செங்கோவி

mike said...

hello sir, hope ur diong great as ever. thanx for the lessons and sorry for not posting any comment for too long.

sir firstly, im hearing a lottaf good things about k.p system invented by the late krishnamurthy who was a senior government officer in the 60s. in kp they divide evry star into 9 subs,each owned by 9 planets. its very interesting and im told very accurate when it comes to timing the events.

mike said...

also write about kanchanoor haradattar too when you the time sir.when is basic and advanced books getting released?


anybody here read books written by matheswaran from attur?

sir is ti true that if in a chart the 11ht house has greater parals than 10th and 12th house lesser parals than 10th and 1st house,then the concerned person will be succesful in life ?

vkdigit said...

Sir ,
just one month before i entered in our class room.astrology is my favorite subject.5 years before i went to weekend classes to learn astrology.but i can't continue it.because my wife got transfer.but now i learn astrology through our classroom.thank u thanku verymuch sir.within 2 months i learn basic and i will join with regular.my mailid vkdigit@gmail.com

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்பனே முருகா..

எங்க ஐயாவை கவனமா பார்த்துக்க..! உன் புகழ் பாடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்..!

அவனைக் கவனிக்க வேண்டியது உன் கடமையப்பா..!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Nalla padal Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

//////SHEN said...
மிக அருமையான பதிவு அய்யா..மனதிற்கு இனிமை தந்தது...
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும் - அழகன்
எங்கள் குமரன் என்று
மனமொழி கூறும்.
--அன்புடன்,
செங்கோவி////

நல்லது நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////mike said...
hello sir, hope ur diong great as ever. thanx for the lessons and sorry for not posting any comment for too long.
sir firstly, im hearing a lot of good things about k.p system invented by the late krishnamurthy who was a senior government officer in the 60s. in kp they divide evry star into 9 subs,each owned by 9 planets. its very interesting and im told very accurate when it comes to timing the events.////

ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை!

/////mike said...
also write about kanchanoor haradattar too when you the time sir.when is basic and advanced books getting released?/////

இரண்டு மாதம் பொறுத்திருங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

anybody here read books written by matheswaran from attur?
sir is ti true that if in a chart the 11ht house has greater parals than 10th and 12th house lesser parals than 10th and 1st house,then the concerned person will be succesful in life ?////

11ஆம் வீட்டில் அதிகப்பரல்கள் இருந்தால், குறைந்த முயற்சி, அதிகப்பலன் என்பது விதி!

SP.VR. SUBBAIYA said...

vkdigit said...
Sir ,
just one month before i entered in our class room.astrology is my favorite subject.5 years before i went to weekend classes to learn astrology.but i can't continue it.because my wife got transfer.but now i learn astrology through our classroom.thank u thanku verymuch sir.within 2 months i learn basic and i will join with regular.my mailid vkdigit@gmail.com///////

நல்லது. நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்பனே முருகா..
எங்க ஐயாவை கவனமா பார்த்துக்க..! உன் புகழ் பாடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்..!
அவரைக் கவனிக்க வேண்டியது உன் கடமையப்பா..!///////

இல்லை சுவாமி! வேறு தொழிலையும் அவர் கொடுத்திருக்கிறார். அதற்கும் அவர் உதவிக் கொண்டிருக்கிறார்.
உங்களைப் போன்ற அனபர்கள் பலரையும் எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு நான் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.