மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

19.6.10

யான் பெற்ற இன்பம்!

---------------------------------------------------------------------------------
யான் பெற்ற இன்பம்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 8

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற  பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------------------------------
பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

நீயல்லால் தெய்வமில்லை - எனது 
நெஞ்சே நீவாழும் எல்லை -  முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)

-----------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16 comments:

Alasiam G said...

ஆஹா! அற்புதம்!! அருமை!!!

"நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்"

அற்புத வரிகள்... என்றும் நன்றியோடு கூடிய நல்லவனாக வாழ, ஒளியாய் விளங்குபவனே! எனக்கு, ஓயாமல் உனது அருளைத் தந்தாய்...எந்தாய் அப்பனே முருகா!.......
காஞ்சிப் பெரியவர் சொன்னார்கள்... மனம் என்பது தாமிர செம்பைப் போன்றது ஆகவே, அதை எப்போதும் சுத்தம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் அது எளிதில் கெட்டு விடும் என்று... எவ்வளவு எளிமையாக சொல்லியுள்ளார்கள் அதைப் போன்றதொரு அற்புத வரிகளே இது... நல்லவனாக்க ஓயாமல்....
நன்றிகள் ஐயா!..

சகாதேவன் said...

சீர்காழி அவர்கள் பாடிய இந்த பாட்டும்,
"முருகா, முத்துக்குமரா என்பேன்" என்ற பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சகாதேவன்

Arulkumar Rajaraman said...

Dear Sir

Padal nandru sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

kmr.krishnan said...

"லாஇலாஹி இல்ல‌ல்லா.." என்பதற்கு "அல்லாவைத் தவிர வேறு தெய்வமில்லை" என்று பொருள்.

"ஆண்டவனே இல்லையே‍ தில்லைத்தாண்டவனே உன் போல்
ஆண்டவனே இல்லையே....."

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
ஆஹா! அற்புதம்!! அருமை!!!
"நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்"
அற்புத வரிகள்... என்றும் நன்றியோடு கூடிய நல்லவனாக வாழ, ஒளியாய் விளங்குபவனே! எனக்கு, ஓயாமல் உனது அருளைத் தந்தாய்...எந்தாய் அப்பனே முருகா!.......
காஞ்சிப் பெரியவர் சொன்னார்கள்... மனம் என்பது தாமிர செம்பைப் போன்றது ஆகவே, அதை எப்போதும் சுத்தம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் அது எளிதில் கெட்டு விடும் என்று... எவ்வளவு எளிமையாக சொல்லியுள்ளார்கள் அதைப் போன்றதொரு அற்புத வரிகளே இது... நல்லவனாக்க ஓயாமல்....
நன்றிகள் ஐயா!..//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////சகாதேவன் said...
சீர்காழி அவர்கள் பாடிய இந்த பாட்டும்,
"முருகா, முத்துக்குமரா என்பேன்" என்ற பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சகாதேவன்/////

சீர்காழியின் அத்தனை பாடல்களுமே நன்றாக இருக்கும்! நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Padal nandru sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
"லாஇலாஹி இல்ல‌ல்லா.." என்பதற்கு "அல்லாவைத் தவிர வேறு தெய்வமில்லை" என்று பொருள்.
"ஆண்டவனே இல்லையே‍ தில்லைத்தாண்டவனே உன் போல் ஆண்டவனே இல்லையே....."//////

எல்லா மதங்களும் தெய்வத்தின் அருமையை வலியுறுத்தான் மக்களை நல்வழிப்படுத்துகிறது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
முருகன் படம் மிக மிக நன்றாக உள்ளது.

முருகனின் புகழைப் பாடும் இந்த பாடல்
என்றென்றும் மனதில் நிலைத்து இடம்பெற்ற பாடல்
- - - - - - --- - - - - - - - - - -

நீயல்லால் தெய்வமில்லை - எனது
நெஞ்சே நீவாழும் எல்லை - முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளில் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
தொழுவதோன்றே இங்கு யான் பெற்ற இன்பம்
உன்னைத் தொழுவதோன்றே இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)
- - - - - - - - - - - - - - - - - -

இதனைத் தற்போது நினைவூட்டிய
தங்களுக்கு மிக்க நன்றி.


வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-06-19

SP.VR. SUBBAIYA said...

////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
முருகன் படம் மிக மிக நன்றாக உள்ளது.
முருகனின் புகழைப் பாடும் இந்த பாடல்
என்றென்றும் மனதில் நிலைத்து இடம்பெற்ற பாடல்
- - - - - - --- - - - - - - - - - -
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

பின்னூட்டம் எழுதும்போது, பதிவில் உள்ள அத்தனை வரிகளையும் வெட்டி ஒட்டாதீர்கள். இரண்டு வரிகளைக் குறிப்பிட்டால் போதும். பின்னூட்டம் மிகவும் பெரிதாகிவிடும். நன்றி!

Dammam Bala (தமாம் பாலா) said...

வ‌லை உல‌கில் ந‌ம் வ‌குப்பு அறை
அது என்றென்றும் முக‌ப்பு அறை
ப‌ல‌வ‌கையில் த‌னிச்சிற‌ப்பு அறை

கோவையிலிருந்து கோர்வையாக‌
எழுதி அச‌த்தும் அன்பு ஆசானுக்கும்
என் ச‌க‌ மாண‌வ‌ க‌ண்ம‌ணிக‌ளுக்கும்
விய‌ட்னாமிலிருந்து வ‌ண‌க்க‌ங்க‌ள்

மீண்டும் உங்க‌ளுட‌ன் இணைவ‌தில்
ம‌கிழ்ச்சி,நேர‌ம் கிடைக்கும்போது
ந‌ம்ம‌ வீட்டுக்கும் வாருங்க‌ளேன்
ஸாபாவை சுற்றிப் பார்க்க‌லாம் :)

http://bala-win-paarvai.blogspot.com/2010/06/4.html

SHEN said...

மிகவும் அருமையான பாடல். நல்ல கருத்துக்கள். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

அன்புடன்,
செங்கோவி

iyer said...

அய்யா . . .

எப்போதுமே பாட்டு என ஒன்று எழுதியதும் . . உங்கள் அனுபவ மற்றும் சிந்தனைகளாக 2 வரிகள் எழுதுவீர்கள் . .
ஆனால் இந்த பாட்டில் அது இல்லையே . . ஏன்?

பாடலோடு உங்கள் அனுபவ மற்றும் சிந்தனை வரிகள் . .
இன்னமும் ஆர்வத்தை ஊட்டும். . .

அது அந்த பாடலை இன்னம் ஒரு முறை படிக்க அல்லது கேட்கும் படி செய்யும் . .

உங்களின் அந்த பாணி தொடர வேண்டும் அது தான் உங்கள் மாணவனின் விருப்பம் . .
அநேக மாக எல்லா மாணவர்களும் அதைத்தானே விரும்புவார்கள். . .

SP.VR. SUBBAIYA said...

/////Dammam Bala (தமாம் பாலா) said...
வ‌லை உல‌கில் ந‌ம் வ‌குப்பு அறை
அது என்றென்றும் முக‌ப்பு அறை
ப‌ல‌வ‌கையில் த‌னிச்சிற‌ப்பு அறை
கோவையிலிருந்து கோர்வையாக‌
எழுதி அச‌த்தும் அன்பு ஆசானுக்கும்
என் ச‌க‌ மாண‌வ‌ க‌ண்ம‌ணிக‌ளுக்கும்
விய‌ட்னாமிலிருந்து வ‌ண‌க்க‌ங்க‌ள்
மீண்டும் உங்க‌ளுட‌ன் இணைவ‌தில்
ம‌கிழ்ச்சி,நேர‌ம் கிடைக்கும்போது
ந‌ம்ம‌ வீட்டுக்கும் வாருங்க‌ளேன்
ஸாபாவை சுற்றிப் பார்க்க‌லாம் :)
http://bala-win-paarvai.blogspot.com/2010/06/4.html////

நல்லது. நன்றி பாலா! அனைவரும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////SHEN said...
மிகவும் அருமையான பாடல். நல்ல கருத்துக்கள். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
அன்புடன்,
செங்கோவி//////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
அய்யா . . .
எப்போதுமே பாட்டு என ஒன்று எழுதியதும் . . உங்கள் அனுபவ மற்றும் சிந்தனைகளாக 2 வரிகள் எழுதுவீர்கள் . ஆனால் இந்த பாட்டில் அது இல்லையே . . ஏன்?
பாடலோடு உங்கள் அனுபவ மற்றும் சிந்தனை வரிகள் . .
இன்னமும் ஆர்வத்தை ஊட்டும். . .
அது அந்த பாடலை இன்னம் ஒரு முறை படிக்க அல்லது கேட்கும் படி செய்யும் . .
உங்களின் அந்த பாணி தொடர வேண்டும் அது தான் உங்கள் மாணவனின் விருப்பம் . .
அநேக மாக எல்லா மாணவர்களும் அதைத்தானே விரும்புவார்கள். . .////

பாடல் எளிமையாக தன்னிலை விளக்கத்துடன் இருப்பதால் எழுதவில்லை நண்பரே! அடுத்து எழுதுகிறேன். நன்றி!