மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.09

இருட்டான இடங்கள்!

இருட்டான இடங்கள்!

இருட்டாக இருந்தால் நாம் செயல் இழந்துவிடுவோம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அறை அல்லது வீடு இருட்டாக இருந்தாலும் அதே நிலைதான்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
வெளிச்சம் வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

ஜாதகத்தில் மூன்று வீடுகள் இருட்டான வீடுகள்.
ஆறாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகளைப்
பற்றித்தான் அப்படிச் சொல்கிறேன்.

ஜோதிட வல்லுனர்கள் அவற்றை மறைவிடம் என்பார்கள்
(They are called as hidden Houses)

மறைவிடம் என்றால் ஒளிந்து நின்று பார்க்கும் வசதி இல்லாத மறைவிடங்கள்.
எதையும் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத இடங்கள் அவைகள்.

6ஆம் வீடு கடன் நோய் எதிரி ஸ்தானம் (House of Debt, Diseases and enemies)
8ஆம் வீடு சிரம ஸ்தானம் (House of difficulties and life span)
சிரம ஸ்தானம் என்பது சிரமங்களைக் கொடுக்கும் இடம். இன்றைய நிலையில் உயிர்
வாழ்வதே சிரமமான காரியம். அதானால்தானோ என்னவோ அந்த இடம்தான்
ஆயுளுக்கும் உரிய இடம். (Place for span of life)
12ஆம் வீடு - விரைய ஸ்தானம் (House of losses)

இந்த மூன்று வீடுகளும் படுத்தாமல் இருந்தாலே போதும் மனிதன் நிம்மதியாக வாழலாம்

இந்த மூன்றோடு இன்னொரு வீடும் இருக்கிறது. அதுதான் 3ஆம் வீடு.
அந்த வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதுவும் படுத்தி எடுக்கும்.

அந்த் மூன்றாம் வீட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் அது எட்டாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாகும் (The third house is the eighth from the eighth)
இருட்டிற்குப் பழகியவனே துணிச்சலாக இருப்பான்.
அதானால்தனோ என்னவோ இந்த வீடுதான் மனிதனின் துணிவிற்கும் உரிய வீடாகும்.

The third house is the eighth from the eighth.
Since the Eighth house represents death, the eighth from the eighth.
The third House is considered dangerous.
On the positive side, younger co-borns & Help are indicated by the Third House.
If the third house is aspected by malefic, help from others will be found wanting.
==================================================
மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்

1
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்:

இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும்.
ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச்
செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து
இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான்.
செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான்.

ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும்.
அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக
இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான்.
அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக
மாறிவிடும்.

சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும்
சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி
வெற்றி பெறுவார்கள்.
இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும்
ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று
நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில்
சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.
===================================================
2
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.

இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.

சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்

இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
வாழ்க்கை வாழ்வான்.

சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
சொல்லவும் வேண்டுமா?

If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic
He/she do not take his/her undertakings seriously.
Their image may be spoiled by their headstrong behavior
They may not keep punctuality and they may not also keep up the decencies of debate.
They may not have good relations with the younger co-borns.
They may have hostile neighbors.
=========================================================
3.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே
(in his own house) இருந்தால்:

அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால்,
ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர்
சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால்
ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும்
சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது.

ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான்.
பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான்.
போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள்.

சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.

பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.

மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி
செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப்
பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும்

If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters.
They view everything philosophically.
They are confident that everything happens for the good.
They are not the type who cry over the things lost.
They do not bother about the past which is gone
==========================================================
4
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப்
பெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அதை மனதில் கொள்க!

குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

The life of the native will be happy on the whole

மூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக
இருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்
===========================================================
5.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான்.

ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.
ஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது.
அதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும்.

ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.

சிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும்.
சிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம்
கிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.

Since the 3rd lord is in the 5th, the native will be virtuous
Their brothers will definitely help them in their hour of need.
They are best suited to agriculture as they know when to sow and when to reap.
They may not have much happiness from their children.
===============================================================
6.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக
மாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.
வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில்
பணம் கரையும்.

சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத்
தொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது.

ஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான
பலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள்
குறைந்துவிடும்.

மொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான்.
அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்

Since the 3rd lord is in the 6th, it will be difficult for the native to
maintain good relationships with brothers and sisters
Their honesty and sincerity in financial dealings have got drawbacks.
Their mind will be troubled by enemies.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி (for the next six houses) நாளை வெளிவரும்.
இன்று இவ்வளவுதான் எழுதித் தட்டச்சமுடிந்தது சாமிகளா!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!

53 comments:

  1. ஐயா,

    எனக்கு மீன லக்னம். மூன்றாம் வீடு சுக்ரனது.அவர் 10 வீடான தனுசுவில் இருக்கின்றார். 10 ஆம் வீட்டின் பலன்கள் பார்க்கலாம் என மவுஸ் ஸ்கோரலை தள்ளிக்கொண்டு வந்தால்...ம் அதற்கும் அதிர்ஸ்டம் வேண்டும்.. பலன்கள் வரும்வரை இருட்டிலேயே காத்திருக்கின்றேன்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. Hi,
    It seems it is more sufferings in every body's jyathakam on the average than happiness!! Probably that is why westerner's life is better on the average? Any explanations why we who keep good cultural values are suffering? Why our population growth is so high? Can we look at India's future?
    Thanks,
    Sriram

    ReplyDelete
  3. எனக்கு 3ம் அதிபதி செவ்வாய் 5ல் ராகுவுடன் உச்சம். எது இருக்கிறதோ இல்லையோ சகோதரர்களின் உதவி இருக்கிறது. அது போதும். எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர். அவர் மூலமாகதான் எனக்கு வகுப்பறை பற்றி தெரிய வந்தது. சகோதர ஸ்தானத்தை பற்றி பாடம் நடக்கும் இந்நேரத்தில் இதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். அத்துடன் அவருக்கு எனது முதற்கன் நன்றியை உரித்தாக்குறேன். அடுத்த நன்றி ஆசிரியருக்கு. 3வது நன்றி சக மாணவர்களுக்கு.

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா,
    என்னதான் வீடுகளைப் பற்றி திரும்பத் திரும்பப் படித்தாலும் புரியாதது, உங்களுடைய அறிமுக எழுத்துக்களில் நன்றாக புரிந்து விடுகிறது. அந்த ‘இருட்டு' படமும், உங்கள் அழுத்துக்களும் பசுமையாக மனதில் நிற்கும். 8-க்கு 8-ஆம் வீடு அன்று சொல்லி விளக்கியது அருமை. (என் மூன்றாம் வீடு பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்)
    நன்றி,
    சீனு

    ReplyDelete
  5. பாடம் அருமை

    //2
    மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:

    இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
    இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
    இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
    சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
    சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.

    இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
    இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
    ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.

    சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
    மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்

    இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
    தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
    வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
    வாழ்க்கை வாழ்வான்.

    சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
    சொல்லவும் வேண்டுமா? //

    எனது நண்பருக்கு 3ம் அதிபதி (செவ்வாய்) 2ல் (துலாம்) உள்ளது, பலன்கள் அனைத்தும் உண்மை.

    ஆனால் வாயை திறந்து ஒன்றும் சொல்லமாட்டான்.

    1. ஆரோக்கியம் - குறைவு
    2. சகோதர / சகோதரி உறவு - இல்லை

    மேலும் லாபாதிபதி (சந்திரன்), 6ம் இடத்தில் (கும்பத்தில்)!!

    சம்பாத்தியம் எல்லாம் போகிற இடம் தெரியவில்லை (கடன், வங்கி லோன்)!!

    எனக்கு 3ம் அதிபதி 9ல், அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

    ஒரு சந்தேகம் ஐயா,

    நாம் ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டுமா இல்லை பாவ சக்கரத்தை வைத்து சொல்ல வேண்டுமா?

    ReplyDelete
  6. Hello Sir,

    Padam arumai. All comments we are writing on all lesson. so, the book ur going 2 publish also will be included this commets? if you include like question and ans it will be very useful. not all comments selectively

    Yoganandam

    ReplyDelete
  7. /////Blogger வேலன். said...
    ஐயா,
    எனக்கு மீன லக்னம். மூன்றாம் வீடு சுக்ரனது.அவர் 10 வீடான தனுசுவில் இருக்கின்றார். 10 ஆம் வீட்டின் பலன்கள் பார்க்கலாம் என மவுஸ் ஸ்கோரலை தள்ளிக்கொண்டு வந்தால்...ம் அதற்கும் அதிர்ஸ்டம் வேண்டும்.. பலன்கள் வரும்வரை இருட்டிலேயே காத்திருக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    ஒரு நாள் மட்டுமே! சற்றுப் பொறுத்திருங்கள் வேலன்!

    ReplyDelete
  8. /////Blogger E.S.Sriram said...
    Hi,
    It seems it is more sufferings in every body's jyathakam on the average than happiness!! Probably that is why westerner's life is better on the average? Any explanations why we who keep good cultural values are suffering? Why our population growth is so high? Can we look at India's future?
    Thanks,
    Sriram///////

    அது அவர்களின் மனப்பான்மையால் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்ளப்படுவதால், அதிகம் பேசப்படுவதில்லை!
    ஜனத்தொகை கடந்த 25 ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. "நாம் இருவர் நமக்கு இருவர்" கட்டுப்பாடு இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

    ReplyDelete
  9. Blogger ananth said...
    எனக்கு 3ம் அதிபதி செவ்வாய் 5ல் ராகுவுடன் உச்சம். எது இருக்கிறதோ இல்லையோ சகோதரர்களின் உதவி இருக்கிறது. அது போதும். எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர். அவர் மூலமாகதான் எனக்கு வகுப்பறை பற்றி தெரிய வந்தது. சகோதர ஸ்தானத்தை பற்றி பாடம் நடக்கும் இந்நேரத்தில் இதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். அத்துடன் அவருக்கு எனது முதற்கன் நன்றியை உரித்தாக்குறேன். அடுத்த நன்றி ஆசிரியருக்கு. 3வது நன்றி சக மாணவர்களுக்கு./////

    நன்றி! உங்கள் சகோதரரின் பெயர் என்ன? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

    ReplyDelete
  10. /////Blogger Cheenu said...
    அன்புள்ள ஐயா,
    என்னதான் வீடுகளைப் பற்றி திரும்பத் திரும்பப் படித்தாலும் புரியாதது, உங்களுடைய அறிமுக எழுத்துக்களில் நன்றாக புரிந்து விடுகிறது. அந்த ‘இருட்டு' படமும், உங்கள் அழுத்துக்களும் பசுமையாக மனதில் நிற்கும். 8-க்கு 8-ஆம் வீடு அன்று சொல்லி விளக்கியது அருமை. (என் மூன்றாம் வீடு பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்)
    நன்றி,
    சீனு//////

    உங்கள் பராட்டிற்கு நன்றி சீனு!

    ReplyDelete
  11. ////Blogger SP Sanjay said...
    பாடம் அருமை
    //2
    மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:
    இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
    இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
    இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
    சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
    சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.
    இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
    இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
    ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.
    சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
    மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்
    இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
    தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
    வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
    வாழ்க்கை வாழ்வான்.
    சிலர் தங்கள் இளவல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
    சொல்லவும் வேண்டுமா? //

    எனது நண்பருக்கு 3ம் அதிபதி (செவ்வாய்) 2ல் (துலாம்) உள்ளது, பலன்கள்
    அனைத்தும் உண்மை. ஆனால் வாயை திறந்து ஒன்றும் சொல்லமாட்டான்.
    1. ஆரோக்கியம் - குறைவு
    2. சகோதர / சகோதரி உறவு - இல்லை
    மேலும் லாபாதிபதி (சந்திரன்), 6ம் இடத்தில் (கும்பத்தில்)!!
    சம்பாத்தியம் எல்லாம் போகிற இடம் தெரியவில்லை (கடன், வங்கி லோன்)!!
    எனக்கு 3ம் அதிபதி 9ல், அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
    ஒரு சந்தேகம் ஐயா,
    நாம் ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டுமா இல்லை பாவ சக்கரத்தை வைத்து சொல்ல வேண்டுமா?//////

    ராசியை வைத்துத் தான் பலன். Fine tuningற்கு பாவச்சக்கரம்.

    ReplyDelete
  12. ////Blogger Geekay said...
    Present Sir!!
    :-))////

    வருகைப்பதிவு போட்டாயிற்று ஜீக்கே!

    ReplyDelete
  13. ////Blogger YOGANANDAM M said...
    Hello Sir,
    Padam arumai. All comments we are writing on all lesson. so, the book ur going 2 publish also will be included this commets? if you include like question and ans it will be very useful. not all comments selectively
    Yoganandam/////

    அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே! புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது!

    ReplyDelete
  14. 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோலே 3ம் இடத்து(கெட்டவன்) 6,8,12 இடத்தில்(கெட்ட இடம்) அமர்தால் நன்மைதானே நடக்கனும்?

    >>எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர்.<<

    >>உங்கள் சகோதரரின் பெயர் என்ன?<<

    நான்தான் அவன்...

    ReplyDelete
  15. Dear Sir

    Nice Lesson Sir.. Thanks sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. ஐயா , வணக்கம்..
    "மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து மூன்றிலேயே இருந்தால் ஜாதகன் சகோதரர்களை பறிகொடுக்க நேரும்" என்று சொல்லியிருந்தீர்களே..
    எனக்கு மூன்றாம் செவ்வாய் , மூன்றிலேயே (விருச்சிகம்)..
    ஒரு இளய சகோதரி..."பொது விதி" என்று கூட எழுதவில்லையே...பயமுறுத்துகிறீரே :(

    ReplyDelete
  17. தான் யாரென்று என் சகோதரரே எழுதி விட்டார். 8ம் இடத்தை house of death என்கிறீர்களெ ஆயுள் வளர்வது/ வளர்ப்பது அந்த ஸ்தானத்தின்/ஸ்தானாதிபதியின் வேலை இல்லையா. வெறும் மரணத்தைப் பற்றி மட்டும்தான் குறிக்குமா.

    ReplyDelete
  18. வாத்தியாரே..

    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..

    ReplyDelete
  19. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று சில ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காரணம் 8ம் அதிபதி ஒருவருக்கு கெட்டவனாக இருக்கலாம். ஆனால் அவர் கெட்டால் ஆயுளும் கெடும். மரணமும் துர்மரணமாகவோ அகால மரணமாகவோ இருக்கும்.

    ReplyDelete
  20. //அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே! புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது!
    //

    வாத்தியார் அய்யா,

    வால்யும் 1,2,3 ன்னு போடுங்க.
    உங்கள் படைப்பு கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும்.

    ReplyDelete
  21. Iyya
    enadhu kulandhaiikku 3kku daiyan 8il.
    Palangalai naalai edhir paarkkiraen.
    anbudan,
    Maanavan.

    ReplyDelete
  22. எப்போதும் போல பாடம் அருமை அய்யா,எணக்கு 3 ம் அதிபதி குரு, 7 ல் உச்சம் பெற்று கடகதில் இருகிறார். உங்கள் பாடத்திற்க்காக ஆவலுடண்....
    இப்போதுதாண் தமிழில் டைப் ஸெய்ய பழகுகிறேண் தவறு இருந்தால் மண்ணிக்கவும்...

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா
    எனக்கு எனக்கு கும்ப ராசி மூனுக்கு அதிபன் செவ்வாய் அவரது வீட்டில் பத்தாம் இடத்தில ஆட்சியில் இருக்கிறார் ,நாளை உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்
    கடைசியில் அந்த டிஸ்கி மிகவும் அருமை !

    ReplyDelete
  24. /////Blogger மதி said...
    'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோலே 3ம் இடத்து(கெட்டவன்) 6,8,12 இடத்தில்(கெட்ட இடம்) அமர்தால் நன்மைதானே நடக்கனும்?
    >>எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர்.<<
    >>உங்கள் சகோதரரின் பெயர் என்ன?<<
    நான்தான் அவன்...////

    கெட்டவன் கெட்டிடில் என்பதெல்லாம் சொல்லடைகள்
    பூராடம் நூலாடாது' என்பார்கள். அதாவது பூராட நட்சத்திரப்பெண்ணிற்கு கழுத்தில் நூலாடாது (மாங்கல்யச்சரடு தங்காது)
    என்பார்கள். அதில் உண்மையில்லை. அது வெறும் சொல்லடை. எத்தனையோ பூராட நட்சத்திரப்பெண்கள் நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலரை நான் அறிவேன்!

    ReplyDelete
  25. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice Lesson Sir.. Thanks sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  26. //////////Blogger DevikaArul said...
    ஐயா , வணக்கம்..
    "மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து மூன்றிலேயே இருந்தால் ஜாதகன் சகோதரர்களை பறிகொடுக்க நேரும்" என்று சொல்லியிருந்தீர்களே..
    எனக்கு மூன்றாம் செவ்வாய் , மூன்றிலேயே (விருச்சிகம்)..
    ஒரு இளய சகோதரி..."பொது விதி" என்று கூட எழுதவில்லையே...பயமுறுத்துகிறீரே :(//////

    இங்கே எழுதுவது எல்லாமே பொதுவிதிகள் சகோதரி. தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அதனதன் பல்வேறு அமைப்பு பார்வைகள் சேர்க்கைகளை வைத்தும் அஷ்டகவர்கத்தை வைத்தும் பலன்கள் மாறும். இது வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதானே! இதுவரை 190 பாடங்களை நடத்தியுள்ளேன். அவற்றில் எத்தனையோ முறைகள் மேற்கண்ட கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
  27. //////Blogger ananth said...
    தான் யாரென்று என் சகோதரரே எழுதி விட்டார். 8ம் இடத்தை house of death என்கிறீர்களே ஆயுள் வளர்வது/ வளர்ப்பது அந்த ஸ்தானத்தின்/ஸ்தானாதிபதியின் வேலை இல்லையா. வெறும் மரணத்தைப் பற்றி மட்டும்தான் குறிக்குமா.//////

    இல்லை எட்டாம் இடத்திற்குப் பல வேலைகள் உள்ளன. பாடங்கள் வரிசையில் எட்டாம் வீடுதான் கடைசிப் பாடம். சற்றுப் பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே. அதை அசத்தலாகவும் விரிவாகவும் எழுத உள்ளேன்.

    ReplyDelete
  28. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..////////

    நன்றி உனா தானா!

    ReplyDelete
  29. //////////Blogger ananth said...
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று சில ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காரணம் 8ம் அதிபதி ஒருவருக்கு கெட்டவனாக இருக்கலாம். ஆனால் அவர் கெட்டால் ஆயுளும் கெடும். மரணமும் துர்மரணமாகவோ அகால மரணமாகவோ இருக்கும்.//////////

    உண்மை. அவர் கெட்டுவிட்டால் நீண்ட நாட்கள் உயிர்வாழலாம் என்பதெல்லாம் கனவு!

    ReplyDelete
  30. /////////////Blogger Indian said...
    //அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே! புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது!
    // வாத்தியார் அய்யா,
    வால்யும் 1,2,3 ன்னு போடுங்க.
    உங்கள் படைப்பு கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும்.//////

    நன்றி நண்பரே. அப்படித்தான் செய்வதாக உள்ளேன்

    ReplyDelete
  31. ////////////Blogger kandhiah said...
    Iyya
    enadhu kulandhaiikku 3kku daiyan 8il.
    Palangalai naalai edhir paarkkiraen.
    anbudan,
    Maanavan.//////////

    நாளை வரும்! பொறுத்திருங்கள்

    ReplyDelete
  32. ///////////Blogger VA P RAJAGOPAL said...
    எப்போதும் போல பாடம் அருமை அய்யா,எணக்கு 3 ம் அதிபதி குரு, 7 ல் உச்சம் பெற்று கடகதில் இருகிறார். உங்கள் பாடத்திற்காக ஆவலுடண்....
    இப்போதுதாண் தமிழில் டைப் செய்யப் பழகுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.../////////

    ஆகா, பழகுங்கள். சிறிது நாட்களில் தட்டச்சு வசப்பட்டுவிடும்!

    ReplyDelete
  33. ///////////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    எனக்கு கும்ப ராசி மூனுக்கு அதிபன் செவ்வாய் அவரது வீட்டில் பத்தாம் இடத்தில ஆட்சியில் இருக்கிறார் ,நாளை உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்
    கடைசியில் அந்த டிஸ்கி மிகவும் அருமை !///////////

    ராசியை வைத்தா பலன்களைப் பார்க்கிறீர்கள்? லக்கினம் என்ன ஆனது சுவாமி?

    ReplyDelete
  34. ஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது
    thanks
    ganesan

    ReplyDelete
  35. எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

    குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

    எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

    இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

    எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

    இப்படிக்கு
    சாவின் விளிம்பில் உள்ள
    உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

    please help us..........

    ReplyDelete
  36. Dear Sir

    Next Lesson waiting sir..

    3ikkuriyavan 9il(Kadakam) - Pusham Natchatira kalil (Saturn) - Viruchiga Lagnam

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  37. Hello Friend, Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.


    Regards
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com

    ReplyDelete
  38. For my son 3rd house lord is in the 1st house. Every statement including quick temper matches. For me the 3rd lord is in the 6th house, eventhough I had 3 brothers and 4 sisters I do not have good relation with them for no worthwhile reason. I always wondered why I had so many enemies in work place and for my properties. I now know the reason. I was capable of overcoming the adversaries as the Venus is strong with 7 parals and 6th house with 37 parals.

    ReplyDelete
  39. ஹலோ சார்,

    என்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)

    //ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு கூட இல்லயே...

    //ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்

    //ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..
    என்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...

    இப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த
    அஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாதியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)

    ReplyDelete
  40. ////Blogger choli ganesan said...
    ஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது
    thanks
    ganesan////

    விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) ராமாயணத்தைக் கேட்டுவிட்டு. அதிகாலையில் சீதைக்கு ராமர் சித்தப்பா உறவு என்றானாம் ஒருவன். அதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி.

    பலன்கள் எல்லாம் லக்கினத்தை வைத்துத்தான் சாமி.
    கோச்சாரம் மட்டும் ராசியை வைத்து!

    ஓக்கேயா?

    ReplyDelete
  41. /////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Next Lesson waiting sir..
    3ikkuriyavan 9il(Kadakam) - Pusham Natchatira kalil (Saturn) - Viruchiga Lagnam
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////////

    பொறுத்திருங்கள் உங்களுக்கான பகுதி நாளை வெளிவரும்!

    ReplyDelete
  42. //////Blogger Mehar said...
    Hello Friend, Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
    Regards
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com//////////////

    உங்களுக்குப் பதில் தனி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன் சகோதரி.

    ReplyDelete
  43. /////////Blogger krish said...
    For my son 3rd house lord is in the 1st house. Every statement including quick temper matches. For me the 3rd lord is in the 6th house, eventhough I had 3 brothers and 4 sisters I do not have good relation with them for no worthwhile reason. I always wondered why I had so many enemies in work place and for my properties. I now know the reason. I was capable of overcoming the adversaries as the Venus is strong with 7 parals and 6th house with 37 parals./////////

    கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு குறைகளுக்கும் ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதனால்தான் அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 எனும் கணக்குக் கூடி வருகிறது!

    ReplyDelete
  44. ////////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    என்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)
    //ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு கூட இல்லயே...
    //ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்
    //ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..
    என்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...
    இப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த
    அஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாத்தியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)////////

    26.9. 2009ல் அஷ்டமத்துச் சனி விலகிவிடும் சகோதரி!

    ReplyDelete
  45. அய்யா,

    மூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.

    சற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  46. Dear Sir,

    What will be prediction for jupiter retrograde in third house for thulam lagnam with a view of Saturn from lagna...

    Regards
    Vinod

    ReplyDelete
  47. ஐயா வணக்கம்
    நம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  48. ////Blogger Sridhar said...
    அய்யா,
    மூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.
    சற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்
    நன்றி,
    ஸ்ரீதர்//////

    இது இணைய வகுப்பு. தாமதத்தைப் பற்றிய கவலை எதற்கு?

    ReplyDelete
  49. /////Blogger Vinodh said...
    Dear Sir,
    What will be prediction for jupiter retrograde in third house for thulam lagnam with a view of Saturn from lagna...
    Regards
    Vinod///////

    துலாம் லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவன் உச்சம் பெற்று லக்கினத்தில் அமர்ந்திருப்பது நன்மையல்லவா?
    மூன்றாம் இடத்தில் குரு வக்கிரமாக இருந்தாலும், யோககாரகனின் பார்வையால் நன்மையான பலன்களே கிடைக்கும். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  50. /////Blogger choli ganesan said...
    ஐயா வணக்கம்
    நம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை
    நன்றி
    கணேசன்///

    அதனாலென்ன கணேசன். பரவாயில்லை!

    ReplyDelete
  51. Hi Sir,

    I found very good details abt the rd house..
    I have a question regarding my 3rd house... i believe the 3rd house is related to communication..isn't it also...wat is the effect if Rahu neecham there + 3rd lord venus is in house 12 with mars...just curious to know...i also have good parals like 30 & 6 from the hora...I am meena lagnam..awaiting your answer

    ReplyDelete
  52. //////Blogger Darcy said...
    Hi Sir,
    I found very good details abt the rd house..
    I have a question regarding my 3rd house... i believe the 3rd house is related to communication..isn't it also...wat is the effect if Rahu neecham there + 3rd lord venus is in house 12 with mars...just curious to know...i also have good parals like 30 & 6 from the hora...I am meena lagnam..awaiting your answer//////////

    The particulars are not sufficient. Send your birth details with one specific and straight question

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com