மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.09

குட்டிக்கதை: உண்மையில் யார் எப்போதும் ஏழை?

குட்டிக்கதை: உண்மையில் யார் எப்போதும் ஏழை?

பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம்

குறுநில மன்னன் ஒருவன் தன் படைவீரர்களுடன் அண்டை நாட்டின்மீது
போர் துவக்கப் புறப்பட்டுச் சென்றான்.

செல்லும் வழியில் அடர்ந்த காடு. அந்தக்காட்டில் ஒரு துறவி தவத்தில்
இருந்தார் - உடலில் எந்த ஆடையும் இல்லாத நிலையில்.

இந்தக் குளிரில் இப்படி ஆடைகள் எதுவுமின்றி இவர் இருக்கிறாரே என்று
பரிதாபப்பட்ட மன்னன், தன்னிடம் இருந்த விலையுயர்ந்த போர்வை
ஒன்றை எடுத்துத் தவநிலையில் உட்கார்ந்திருந்த துறவியின் மீது
போர்த்தினான்.

போர்வை தன் உடம்பை மூடியவுடன் கண்விழித்த அந்தத் துறவி,
மன்னனைப் பார்த்தார். கூட இருந்த வீரர்களையும் பார்த்தார்.
பார்த்தவுடன் சொன்னார்:

"அன்பரே, எனக்குப் போர்வை எதுவும் வேண்டாம். ஏதாவது ஒரு ஏழைக்கு
இந்தப் போர்வையைக்கொடு!"

மன்னன் கேட்டான், " சுவாமி, ஆடைகள் எதுவுமின்றி இருக்கிறீர்கள்.
தங்களைவிட ஏழ்மையானவர் இந்தக் காட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?"

முனிவர் பதிலுக்கு மன்னனைக் கேட்டார்:" எங்கே நீ சென்று கொண்டிருக்கிறாய்?"

"அண்டை நாட்டின் மீது போர் தொடுக்கப்போய்க் கொண்டிருக்கிறேன்,"
என்று மன்னன் பதில் உரைத்தான்.

உடனே துறவி சொன்னார். "மன்னா! உன் படைவீரர்கள் பலரின் உயிரைப்
பணயம் வைத்துப் போர் செய்யப்போகின்றாய். இருப்பது போதுமென்று
இல்லாது, ஏதோ ஆதாயத்திற்காகப் பலபேரின் உயிரைப் பணயம்
வைக்கிறாய். உண்மையில் நீதான் ஏழை! போதுமென்ற மனமில்லாத
நீதான் ஏழை! ஆகவே உன் போர்வையை நீயே வைத்துக்கொள்!"

மன்னனின் அறிவுக் கண்கள் திறந்தன! தவறை உணர்ந்த மன்னன்
துறவியை வனங்கிவிட்டு, தான் வந்தவழியே திரும்பினான்.

ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
ஒரு துறவியின் போதனையால்.

போதுமென்ற மனமில்லாதவன்தான் எப்போதும் ஏழை!

வாழ்க வளமுடன்!

42 comments:

  1. வணக்கம் ஐயா.
    நல்ல கதை.
    தமக்கு பணிப் பளு மிகவும் அதிகமாகிவிட்டதென தெரிகிறது.
    சரி தானே ஆசான் அவர்களே?

    ReplyDelete
  2. குட்டிக்கதை! ஆழ்ந்த கருத்து... நண்றி அய்யா..

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,

    அருமையான கதை. நல்ல கருத்து.

    நன்றி
    அன்புடன்
    சரவணகார்த்திகேயன்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,பொன் செய்யும் மருந்து எது? போதும் என்ற மனமே
    நல்ல கதை
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  5. /////Blogger தியாகராஜன் said...
    வணக்கம் ஐயா.
    நல்ல கதை.
    தமக்கு பணிப் பளு மிகவும் அதிகமாகிவிட்டதென தெரிகிறது.
    சரி தானே ஆசான் அவர்களே?/////

    ஆமாம். கடந்த ஒருவாரமாக அதிகமான பணிச் சுமைகள்!
    இன்னும் பத்து நாட்கள் கழிந்தால் சரியாகிவிடும்!

    ReplyDelete
  6. /////Blogger VA P RAJAGOPAL said...
    குட்டிக்கதை! ஆழ்ந்த கருத்து... நண்றி அய்யா../////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  7. Blogger saravana karthikeyan said...
    வணக்கம் ஐயா,
    அருமையான கதை. நல்ல கருத்து.
    நன்றி
    அன்புடன்
    சரவணகார்த்திகேயன்////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ///Blogger krish said...
    Very good moral. Thanks./////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  9. /////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,பொன் செய்யும் மருந்து எது? போதும் என்ற மனமே
    நல்ல கதை
    நன்றி
    கணேசன்/////

    புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி கணேசன்!

    ReplyDelete
  10. உள்ளேன் அய்யா. இனிய மற்றும் வளமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அதே... ஒத்துப் போகிறேன்... :))

    ReplyDelete
  12. nalla kadhai, Puthandu Vazthukal ayya...

    S.Prabhu Navaneethakrishnan

    ReplyDelete
  13. நானும் உள்ளேன் ஐயா. இந்த கதை அடுத்த பாடத்திற்கு முன்னோட்டமா. எதிலும் நிறைவு காணும் மனம் எல்லோருக்கும் வர வேண்டும். நான் அடிக்கடி இறைவனிடம் வேண்டுவதும் இதுதான்.

    ReplyDelete
  14. நல்ல கருத்து ஐயா,

    ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா ...

    ஒருவேளை எட்டாம் வீடுக்கான பீடிகையோ?

    அன்புடன் சீனு

    ReplyDelete
  15. Dear Sir

    Good Story Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. மனம் என்ற குரங்கு அமைதியாய் இருந்தால் போதும் ஜயா, போதும் என்ற மனம் தன்னாலே வந்திவிடும்.

    ReplyDelete
  17. Jagannatha Hora Programmeல் அதன் ஆசிரியர் கிரக யுத்தம்/அஸ்தமனம் ஆகியவற்றை குறிப்பிட்டுருக்கிறார். ஒரு ஜாதகத்தில் இவை இருக்கின்றனவா என்பதை ஒரு mouse click மூலம் தெரிந்து கொள்ளலாம். என்ன தங்கள் கருத்துக்கும் அவருடைய கருத்துக்கும் ஒத்து வரவில்லை. தாங்கள் இதைப் பற்றி பின்னாளில் எழுதுவதாக
    சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இதைப் பற்றிய சர்ச்சை இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. கதை அருமை.வாத்தியார் வந்தவுடன் வகுப்பறை களைகட்டிவிட்டது.
    அன்புடன்
    ஆனந்தன்.N.K.S.

    ReplyDelete
  19. துறவியைப் பற்றி கதை படித்தவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது நான் முன்பே ஆசிரியரிடம் கேட்க நினைத்தது. தங்களின் 200வது பதிவில் 33 பிரபலங்களின் ஜாதக விபரங்களை கொடுத்திருந்தீர்கள். பிரபலமில்லாதவர், ஏழைகள் (பிறப்பிலிருந்து இறப்பு வரை) நடுத்தர வர்கத்தினர், துறவிகள் ஜாதகம், இப்படி பலதரப்பட்ட ஜாதகக் குறிப்புகளை கொடுத்து இருந்தால் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்க்கவும், ஒரு ஜாதகத்தை பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் வாழ்க்கையில் எற்ற இறக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளவும் சுலபமாக இருக்கும். தங்களுக்கு அதிக சிரமம் கொடுக்கிறேன். இருந்தாலும் எனக்கும் வேறு வழி தோன்றவில்லை ஆசிரியரே.

    ReplyDelete
  20. சிந்திக்க வைக்கும் நல்ல கதையை இன்று வகுப்பறையில் சொன்ன வாத்தியாருக்கு நன்றிகள் பல :)

    ReplyDelete
  21. /////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா. இனிய மற்றும் வளமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//////

    நன்றி அமரபாரதி!

    ReplyDelete
  22. ////////Blogger VIKNESHWARAN said...
    அதே... ஒத்துப் போகிறேன்... :))///////

    நன்றி விக்னேஷ்வரன்!

    ReplyDelete
  23. //////Blogger Prabhu said...
    nalla kadhai, Puthandu Vazthukal ayya...
    S.Prabhu Navaneethakrishnan//////

    நன்றி பிரபு!

    ReplyDelete
  24. //////Blogger ananth said...
    நானும் உள்ளேன் ஐயா. இந்த கதை அடுத்த பாடத்திற்கு முன்னோட்டமா. எதிலும் நிறைவு காணும் மனம் எல்லோருக்கும் வர வேண்டும். நான் அடிக்கடி இறைவனிடம் வேண்டுவதும் இதுதான்.//////

    இல்லை. இது, ஒரு மாறுதலுக்காக பதிவிடப்பட்டுள்ள கதை. சும்மா, ஜோதிடப்பாடங்களையே படித்துக்கொண்டிருந்தால், அலுத்துவிடாதா ஆனந்த்?

    ReplyDelete
  25. /////Blogger Cheenu said...
    நல்ல கருத்து ஐயா,
    ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா ...
    ஒருவேளை எட்டாம் வீடுக்கான பீடிகையோ?
    அன்புடன் சீனு////////

    இல்லை சீனூ! எட்டாம் வீட்ட்டைப் பற்றிய பாடத்தில் ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளேன். அது என்னவென்று நேரம் வரும்போது சொல்கிறேன்!:-)))

    ReplyDelete
  26. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Story Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  27. //////Blogger Emmanuel Arul Gobinath said...
    மனம் என்ற குரங்கு அமைதியாய் இருந்தால் போதும் ஜயா, போதும் என்ற மனம் தன்னாலே வந்துவிடும்.//////

    அந்த குரங்கு மனப்பான்மையினால்தான் பல பிரச்சினைகள்!:-)))))

    ReplyDelete
  28. /////////Blogger ananth said...
    Jagannatha Hora Programmeல் அதன் ஆசிரியர் கிரக யுத்தம்/அஸ்தமனம் ஆகியவற்றை குறிப்பிட்டுருக்கிறார். ஒரு ஜாதகத்தில் இவை இருக்கின்றனவா என்பதை ஒரு mouse click மூலம் தெரிந்து கொள்ளலாம். என்ன தங்கள் கருத்துக்கும் அவருடைய கருத்துக்கும் ஒத்து வரவில்லை. தாங்கள் இதைப் பற்றி பின்னாளில் எழுதுவதாக
    சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இதைப் பற்றிய சர்ச்சை இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன்.//////

    அதன் ஆசிரியர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஜோதிடர்களுக்கும், ஆந்திர ஜோதிடர்களுக்கும் அடிப்படையில் சில முரண்பாடுகள் உள்ளன. நாம் சனிக்கிழமைகளில் திருமணங்களை நடத்துவதில்லை. ஆந்திராவில் சனிக்கிழமைகளில் திருமணங்கள் நடக்கும். நானே ஒரு திருமணத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். அதுபோல சூரிய உதயத்திலிருந்து பகல் பன்னிரெண்டு மணிக்குள்தான் நமது திருமண முகூர்த்தங்கள் இருக்கும். ஆந்திராவில் திருமணங்கள், இரவிலும், நடு நிசியிலும் கூட இருக்கும். அவற்றை எல்லாம் நாம் எப்படிச் சரியென்று எடுத்துக்கொள்ள முடியும். அதுபோல அமாவாசையை நாம் எடுத்துக்கொண்டு காரியங்களைச் செய்வோம். அமாவாசைக்கு அடுத்த நாளைப் பாட்டியமை என்று எடுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களுக்கு அமாவாசை ஆகாது. அதற்கு அடுத்த நாளைச் சிலாக்கியமாகப் பேசுவார்கள்.

    ஆகவே சற்றுப் பொறுமையாக இருங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிப் பின்னால் எழுதுகிறேன். நான் எனக்குத் தெரியாத எதையும் இங்கே எழுதுவதில்லை. எழுதுவது அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது!

    ReplyDelete
  29. ////////Blogger N.K.S.Anandhan. said...
    கதை அருமை.வாத்தியார் வந்தவுடன் வகுப்பறை களைகட்டிவிட்டது.
    அன்புடன்
    ஆனந்தன்.N.K.S./////

    எல்லாம் உங்களைப் போண்று திரளாக வரும் மாணவக் கண்மணிகளால்தான்!
    ஒரு மேடைப் பேச்சின் சிறப்பு, பேசுபவரைவிட, வரும் கூட்டத்தைப் பொறுத்துத்தான் சிறப்பாக அமையும். அதாவது வரும் கூட்டத்தை வைத்துத்தான் பேச்சாளரும் சிறப்பாகப் பேசுவார்.

    ReplyDelete
  30. /////Blogger ananth said...
    துறவியைப் பற்றி கதை படித்தவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இது நான் முன்பே ஆசிரியரிடம் கேட்க நினைத்தது. தங்களின் 200வது பதிவில் 33 பிரபலங்களின் ஜாதக விபரங்களை கொடுத்திருந்தீர்கள். பிரபலமில்லாதவர், ஏழைகள் (பிறப்பிலிருந்து இறப்பு வரை) நடுத்தர வர்கத்தினர், துறவிகள் ஜாதகம், இப்படி பலதரப்பட்ட ஜாதகக் குறிப்புகளை கொடுத்து இருந்தால் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்க்கவும், ஒரு ஜாதகத்தை பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் வாழ்க்கையில் எற்ற இறக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளவும் சுலபமாக இருக்கும். தங்களுக்கு அதிக சிரமம் கொடுக்கிறேன். இருந்தாலும் எனக்கும் வேறு வழி தோன்றவில்லை ஆசிரியரே.///////

    பாடங்கள் முடிந்தவுடன் அடுத்தகட்டத்தில் ஜாதகங்களை வைத்து அலசுவோம். அப்போது தருகிறேன் நண்பரே!

    ReplyDelete
  31. /////Blogger பட்டாம்பூச்சி said...
    சிந்திக்க வைக்கும் நல்ல கதையை இன்று வகுப்பறையில் சொன்ன வாத்தியாருக்கு நன்றிகள் பல :)//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. எனது முந்தைய பின்னூட்டத்திற்கு தாங்கள் கொடுத்த நீண்ட விளக்கத்திற்கு நன்றி. தங்கள் பாடத்தைப் பற்றி கேள்வி எழுப்புவதற்காக அதைச் சொல்லவில்லை. எதை எடுத்துக் கொள்வது எதை விடுவது என்று சிறு குழப்பம். அதன் வெளிப்பாடுதான் அது. இறுதியாக தாங்கள் சொல்வதையே உறுதியாக எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  33. ஆசிரியரே பாவம் ஐயா தாங்கள். புதிய பாடத்தை பதிவிடுவதற்கும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதற்கும் ஒன்று அதிகாலையிலேயே எழுகிறீகள் அல்லது நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கிறீகள். சில நேரங்களில் காலை/மாலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இடைவேளையின் போதும் இதைச் செய்கிறீகள் போல் தெரிகிறது. உண்மையில் தாங்கள் மெழுகுவர்தி போன்றவர். எனக்கு ஜாதகத்தில் புதன் 8ல் மறைந்து விட்டதால் எதையும் உன்னிப்பாக கவனித்து அனுமானிக்கும் ஆற்றல், ஞாபக சக்தி சராசரியை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  34. /////Blogger ananth said...
    எனது முந்தைய பின்னூட்டத்திற்கு தாங்கள் கொடுத்த நீண்ட விளக்கத்திற்கு நன்றி. தங்கள் பாடத்தைப் பற்றி கேள்வி எழுப்புவதற்காக அதைச் சொல்லவில்லை. எதை எடுத்துக் கொள்வது எதை விடுவது என்று சிறு குழப்பம். அதன் வெளிப்பாடுதான் அது. இறுதியாக தாங்கள் சொல்வதையே உறுதியாக எடுத்துக் கொள்கிறேன்.////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  35. /////Blogger ananth said...
    ஆசிரியரே பாவம் ஐயா தாங்கள். புதிய பாடத்தை பதிவிடுவதற்கும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதற்கும் ஒன்று அதிகாலையிலேயே எழுகிறீகள் அல்லது நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கிறீகள். சில நேரங்களில் காலை/மாலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இடைவேளையின் போதும் இதைச் செய்கிறீகள் போல் தெரிகிறது. உண்மையில் தாங்கள் மெழுகுவர்த்தி போன்றவர். எனக்கு ஜாதகத்தில் புதன் 8ல் மறைந்து விட்டதால் எதையும் உன்னிப்பாக கவனித்து அனுமானிக்கும் ஆற்றல், ஞாபக சக்தி சராசரியை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.//////

    உண்மைதான். பெரும்பாலும் அதிகாலைகளில் எழுதுவேன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன்.
    சிலசமயம் நடுநிசிவரை விழித்துதிருந்து எழுதுவதும் உண்டு. பகலில் எனது வியாபார மற்றும் சொந்த அலுவல்களுக்கு நேரம் சரியாக இருக்கும். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு என்று வைத்துக்கொள்ளுங்கள்:-))))

    ReplyDelete
  36. வணக்கம் வாத்தியார் சார்,

    புதுப் பையன். நல்லா கதை சொல்றீங்க. நல்ல பாடம்.

    -திருநாவுக்கரசு

    ReplyDelete
  37. Anaivarukkum Iniya Puthaandu vaalthukkal!!!

    Nalla karuthulla kadhai.. migavum rasikkum padi irundhadhu. .. nanri aasaan avarghaley.

    ReplyDelete
  38. /////Blogger thiru said...
    வணக்கம் வாத்தியார் சார்,
    புதுப் பையன். நல்லா கதை சொல்றீங்க. நல்ல பாடம்.
    -திருநாவுக்கரசு/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. /////Blogger kandhiah said...
    Anaivarukkum Iniya Puthaandu vaalthukkal!!!
    Nalla karuthulla kadhai.. migavum rasikkum padi irundhadhu. .. nanri aasaan avarghaley.////////

    நன்றி கந்தையா!

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com