மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.4.09

லேகியப் பதிவுகள்


லேகியப் பதிவுகள்

லேகியத்தில் இரண்டு வகைகள் உண்டு.

குறிப்பிட்ட மருந்து அல்லது மூலிகைகளுடன் நெய் கலந்து பாகுபோலக்
காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து ஒருவகை. போதை தருவதற்காகத்
தயாரிக்கப்படும் லேகியம் மற்றொருவகை.

போதைதரும் லேகியங்களைப் பற்றி விரிவாக எழுத முடியாது.
இது வகுப்பறை அதனால் எழுத முடியாது.

தமிழகத்தில் சில பிரபல வார இதழ்கள் இப்போது போதைதரும்
லேகியங்களாகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. இளம்
நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் படங்களைப் போட்டுப்
பல கட்டுரைகளை அல்லது செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன

அவற்றை நாங்கள் லேகியப் பத்திரிக்கைகள் என்போம்.

அதுபோல சில லேகியப் பதிவுகளும் உள்ளன.

லேகியப் பதிவுகளுக்குக் கூட்டம் சேர்வதைப் பற்றி ஆராயத் தேவையில்லை.
ஒரே வரியில் சொன்னால் கலிமுற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

நான் கடும் மருந்தான ஜோதிடத்தைப் பாடமாக்கிப் பதிவுகளை எழுதிக்
கொண்டிருக்கிறேன். பலரும் ஆர்வமுடன் வந்து படிப்பது வியப்பாக
உள்ளது.

ஒவ்வொரு பதிவிற்கும் சராசரியாக இரண்டாயிரம் பார்வையாளர்கள்
வந்து செல்கிறார்கள் Hit counter மூலம் அது தெரிகிறது

அதோடு மாணவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.

வருகைப் பதிவு செய்துள்ள அத்தனை மாணவர்களுக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் வருகைப் பதிவு எண்ணிக்கைதான்
என்னை மென்மேலும் உற்சாகமாக எழுத வைக்கிறது.

அந்த எண்ணிக்கைதான் எனக்கு லேகியம்:-)))))
-------------------------------------------------------------------------------------
சரி, இன்றையப் பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்

தலைப்பு: விடுபட்டவை:

லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
சூரியனுடன், சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் எழுத்து,
அல்லது ஓவியம், அல்லது பேச்சு ஆகியவற்றில் அதீதத் திறமை உடையவர்.
பெயர் புகழ் அவரைத் தேடிவரும்.
இந்த மைப்பு அமாவாசை யோகம் எனப்படும்.

சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அவருடைய
தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருக்கும்.
தொழிலில் பல இன்னல்கள் ஏற்படும்.
இந்த அமைப்புள்ள சிலர் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில்
பணிபுரிந்து சிறப்படைவார்கள்

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள்
திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர்
ஜாதகர் பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

சூரியனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் தானகவே எதையும்
கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர்.
பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும்.
இரக்க சுபாவம் உடையவர்.
அதோடு முன்போபத்தையும் உடையவர்,

சூரியனுடன் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்குக் கடத்தல் தொழிலில்
ஈடுபாடு உண்டாகும். ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவார்.
ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்.
சிலருக்குத் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.

சூரியனுடன் சனி இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் இணக்கம்
இருக்காது. ஜாதகருக்கு இரும்பு, எந்திரம், வாகனம் போன்றவற்றில்
நல்ல அறிவு இருக்கும். அவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும்
ஜாதகர் சிறப்படைவார்.

சூரியனுடன் ராகு இணைந்தால் நல்லதல்ல.
தீயவழிகளில் பணம் வரும் அல்லது ஜாதகர் தீயவழிகளில் பணத்தைச்
சேர்ப்பார். சிலர் பாபகரமான தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

சூரியனுடன் கேது சேர்ந்தால், ஜாதகருக்கு ஜோதிடம், மாந்திரீகம்,
வைத்தியம் ஆகியவை கைவந்த கலையாக இருக்கும். அதில்
ஈடுபடுபவர்கள் பெரும்பொருள் சேர்ப்பார்கள்
===================================================
வாத்தியார் சொந்த வேலையாக 3 நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
இருப்பதால், திங்கள் மற்றும் செவ்வாய் வகுப்பறைக்கு விடுமுறை.
அடுத்த வகுப்பு 22.4.2009 புதன்கிழமையன்று நடைபெறும்.

அந்த இரண்டு நாட்களில் அனைவரும் முன்பாடங்களைப் புரட்டிப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

60 comments:

  1. எனக்கும் செவ்வாய்க் கிழமை வரை விடுப்பு தேவைபடுகிறது. வகுப்புக்கும் விடுமுறை என்றால் நல்லதாகப் போய்விட்டது. பல காரணங்களால் முன்பு வந்த பாடத்தை படிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  2. Thanks for the lesson about Sun...Sun is pathakathipathi to me..So I just read with a little fear..

    ReplyDelete
  3. //அதுபோல சில லேகியப் பதிவுகளும் உள்ளன.//

    சூப்பர்

    ReplyDelete
  4. கூடிய சீக்கிரமே 200 மணவ எண்ணிக்கை 400 (ஏன் அதற்கு மேலும் ஆகட்டுமே) ஆக எனது வாழ்த்துகள். தங்கள் எழுத்து நடையும் அதற்கு தாங்கள் கொடுக்கும் தலைப்பும் பிறரை வசீகரிக்கத் தான் செய்கிறது. தாங்கள் ஒரு வசீகர வில்லன் சாரி நாயகன் ஆசிரியரே.

    11ல் எந்த கிரகம் இருந்தாலும், அது பிறந்த ஜாதகத்திலாகட்டும் அல்லது கோச்சாரத்திலாகட்டும் நன்மைதான் செய்கிறது. மற்ற எந்த வீடாக இருந்தாலும் ஒரு கிரகம் நன்மை செய்தால் மற்றொன்று தீமை செய்யும். ஒன்றிற்கு ஒத்துப் போனால் மற்றொன்றிற்கு ஒத்துப் போகாது. சரியா ஆசிரியரே.

    ReplyDelete
  5. ஆசிரியரே ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. சூரியனுடன் பிற கிரக இணைப்பு 10 பாகைக்கு மேல் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. விட்டால் நிறைய எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் அடுத்த பாடம் வரை என் கையை நானே சங்கிலியால் கட்டி வைத்துக் கொள்கிறேன். இது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. //11ல் எந்த கிரகம் இருந்தாலும், அது பிறந்த ஜாதகத்திலாகட்டும் அல்லது கோச்சாரத்திலாகட்டும் நன்மைதான் செய்கிறது. மற்ற எந்த வீடாக இருந்தாலும் ஒரு கிரகம் நன்மை செய்தால் மற்றொன்று தீமை செய்யும். ஒன்றிற்கு ஒத்துப் போனால் மற்றொன்றிற்கு ஒத்துப் போகாது.//

    அமாம் நண்பரே 11 ல் எந்த கிரகம் வந்தாலும் நன்மை செய்கிறது ",ராவணனுக்கு
    பயந்து அணைத்து பாவ கிரகங்கள் அவன் ஜாதகத்தில் 11 சென்று அமர்ந்து கொண்டது "
    என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன் .

    ReplyDelete
  7. >>அந்த இரண்டு நாட்களில் அனைவரும் முன்பாடங்களைப் புரட்டிப்
    படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்<<

    சரி வாத்தியார் ஐயா..

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா

    நிங்கள் சொல்வது சரி ஐயா நிறைய பேர் இங்கு வருகிறார்கள்
    உங்கள் பதிவை படிகிறார்கள் .அதுவும் தொடர்ந்து வந்து அவர்கள்
    கருத்துகளை பின்னுடம் இடுகின்றனர் .நானும் இரண்டு மாதமாக
    முதலில் பின்னுடம் இட வேண்டும் என்று முயற்சித்தேன் .எவ்வளவு
    சீக்கிரம் வந்தாலும் நீங்கள் பதிவிட்ட 5 நிமிடங்களிலேயே10 or 15 பின்னுடம்
    வந்துவிடுகிறது .இனிமேல் இது வகுப்பறை அல்ல பெரிய பள்ளிக்கூடம் ....

    ReplyDelete
  9. வாத்தியார் ஐயா !

    வணக்கம் , என் உடைய மனைவி நன்றாக ஓவியம் வரைவார். அவருடைய ஜாதகத்தில் சந்திரனும் , சூரியனும் சேர்ந்து இருக்கிறார்கள் . அமாவாசை யோகம் . கணிப்பு சரியாக தான் இருக்கிறது.

    நன்றியுடன்
    பிரேமானந்தன்

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயா !

    வணக்கம் , என் உடைய மனைவி நன்றாக ஓவியம் வரைவார். அவருடைய ஜாதகத்தில் சந்திரனும் , சூரியனும் சேர்ந்து இருக்கிறார்கள் . அமாவாசை யோகம் . கணிப்பு சரியாக தான் இருக்கிறது.

    நன்றியுடன்
    பிரேமானந்தன்

    ReplyDelete
  11. Dear Sir

    Suriyan lesson is good.

    Enakku 10il Suriyan (Simmathil)-- Happy , but Kooda Sukkiran (Simmathil).. Neengal veru kadatthal endru sollivittergal ....Naan Appadi illai sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. சூப்பர் சார்

    எனக்கு சூரியனும், புதனும் கன்னி ராசி-ல் இருக்கிறது. ஒரு yogam-மாவது இருக்கிறதே.......!

    ReplyDelete
  13. ////////Blogger ananth said...
    எனக்கும் செவ்வாய்க் கிழமை வரை விடுப்பு தேவைபடுகிறது. வகுப்புக்கும் விடுமுறை என்றால் நல்லதாகப் போய்விட்டது. பல காரணங்களால் முன்பு வந்த பாடத்தை படிக்கத்தான் வேண்டியிருக்கிறது./////

    படித்து முக்கியமான விதிகளை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் ஜோதிடம் வசப்படும்!

    ReplyDelete
  14. ////////Blogger Ragu Sivanmalai said...
    Thanks for the lesson about Sun...Sun is pathakathipathi to me..So I just read with a little fear../////////

    பயம் எதற்கு? நல்லது & கெட்டது கலந்ததுதான் ஜாதகம். ஒரே ஒரு ஆறுதல் அனைவருக்கும் மொத்தப்பரல்கள் 337 மட்டுமே!

    ReplyDelete
  15. /////////Blogger ஆ.ஞானசேகரன் said...
    நன்றி ஐய்யா/////////

    நன்றி ஞானசேகரன்!

    ReplyDelete
  16. /////////Blogger புருனோ Bruno said...
    //அதுபோல சில லேகியப் பதிவுகளும் உள்ளன.//
    சூப்பர்/////////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  17. ///////////Blogger krish said...
    Thanks for the lesson.////////

    நன்றி நண்பரே!///////////Blogger ananth said...
    கூடிய சீக்கிரமே 200 மணவ எண்ணிக்கை 400 (ஏன் அதற்கு மேலும் ஆகட்டுமே) ஆக எனது வாழ்த்துகள். தங்கள் எழுத்து நடையும் அதற்கு தாங்கள் கொடுக்கும் தலைப்பும் பிறரை வசீகரிக்கத் தான் செய்கிறது. தாங்கள் ஒரு வசீகர வில்லன் சாரி நாயகன் ஆசிரியரே.
    11ல் எந்த கிரகம் இருந்தாலும், அது பிறந்த ஜாதகத்திலாகட்டும் அல்லது கோச்சாரத்திலாகட்டும் நன்மைதான் செய்கிறது. மற்ற எந்த வீடாக இருந்தாலும் ஒரு கிரகம் நன்மை செய்தால் மற்றொன்று தீமை செய்யும். ஒன்றிற்கு ஒத்துப் போனால் மற்றொன்றிற்கு ஒத்துப் போகாது. சரியா ஆசிரியரே./////////////

    உண்மைதான் ஆனந்த்!

    ReplyDelete
  18. ///////////Blogger ananth said...
    ஆசிரியரே ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. சூரியனுடன் பிற கிரக இணைப்பு 10 பாகைக்கு மேல் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. விட்டால் நிறைய எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் அடுத்த பாடம் வரை என் கையை நானே சங்கிலியால் கட்டி வைத்துக் கொள்கிறேன். இது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது.//////////

    ஆமாம்! அது பற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்!

    ReplyDelete
  19. ////////Blogger sundar said...
    //11ல் எந்த கிரகம் இருந்தாலும், அது பிறந்த ஜாதகத்திலாகட்டும் அல்லது கோச்சாரத்திலாகட்டும் நன்மைதான் செய்கிறது. மற்ற எந்த வீடாக இருந்தாலும் ஒரு கிரகம் நன்மை செய்தால் மற்றொன்று தீமை செய்யும். ஒன்றிற்கு ஒத்துப் போனால் மற்றொன்றிற்கு ஒத்துப் போகாது.//
    அமாம் நண்பரே 11 ல் எந்த கிரகம் வந்தாலும் நன்மை செய்கிறது ",ராவணனுக்கு
    பயந்து அணைத்து பாவ கிரகங்கள் அவன் ஜாதகத்தில் 11 சென்று அமர்ந்து கொண்டது "
    என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன்////////

    அது கட்டுக் கதையாக இருக்கும்! ராவணணின் பிறந்த தேதி தெரிந்தால் சரியா என்று பார்க்கலாம்!

    ReplyDelete
  20. ///////Blogger மதி said...
    >>அந்த இரண்டு நாட்களில் அனைவரும் முன்பாடங்களைப் புரட்டிப்
    படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்<<
    சரி வாத்தியார் ஐயா..//////////

    ஆமாம், படியுங்கள். படித்து முக்கியமான விதிகளை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் ஜோதிடம் வசப்படும்!

    ReplyDelete
  21. //////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    நிங்கள் சொல்வது சரி ஐயா நிறைய பேர் இங்கு வருகிறார்கள்
    உங்கள் பதிவை படிகிறார்கள் .அதுவும் தொடர்ந்து வந்து அவர்கள்
    கருத்துகளை பின்னுடம் இடுகின்றனர் .நானும் இரண்டு மாதமாக
    முதலில் பின்னுடம் இட வேண்டும் என்று முயற்சித்தேன் .எவ்வளவு
    சீக்கிரம் வந்தாலும் நீங்கள் பதிவிட்ட 5 நிமிடங்களிலேயே10 or 15 பின்னுடம்
    வந்துவிடுகிறது .இனிமேல் இது வகுப்பறை அல்ல பெரிய பள்ளிக்கூடம் ..../////////

    முதல் அல்லது இரண்டாவது என்ற கணக்கு எல்லாம் கிடையாது. உங்கள் அனைவருடைய பின்னூட்டமும் எனக்கு முக்கியமானதுதான் சுந்தர்!

    ReplyDelete
  22. /////////Blogger Prem said...
    வாத்தியார் ஐயா !
    வணக்கம் , என் உடைய மனைவி நன்றாக ஓவியம் வரைவார். அவருடைய ஜாதகத்தில் சந்திரனும் , சூரியனும் சேர்ந்து இருக்கிறார்கள் . அமாவாசை யோகம் . கணிப்பு சரியாக தான் இருக்கிறது.
    நன்றியுடன்
    பிரேமானந்தன்///////////

    எனக்கும் அந்த விதி பொருந்திவரும். நானும் அமாவாசையன்றுதான் பிறந்தவன். என் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக உள்ளார்கள். எனக்கு எழுதவும் வரும் ஓவியங்கள் வரையவும் வரும்.

    ReplyDelete
  23. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Suriyan lesson is good.
    Enakku 10il Suriyan (Simmathil)-- Happy , but Kooda Sukkiran (Simmathil).. Neengal veru kadatthal endru sollivittergal ....Naan Appadi illai sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////////

    பார்வைகளை வைத்தும் நவாம்சத்தை வைத்தும் பல விதிவிலக்குகள் உள்ளன. அதனால் கவலைப்பட வேண்டாம்!

    ReplyDelete
  24. /////////Blogger MarmaYogi said...
    சூப்பர் சார்
    எனக்கு சூரியனும், புதனும் கன்னி ராசி-ல் இருக்கிறது. ஒரு yogam-மாவது இருக்கிறதே.......!///////////

    இருந்தால் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  25. ///////////Blogger RAJA said...
    lessons are good/////////

    நன்றி ராஜா!

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா

    ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் ஜாதகம் சொல்லபட்டிருக்கிறது ,
    ஆஞ்சநேயர் ஜாதகமும் சொல்லபட்டிருக்கிறது .ஒரு கோவிலில்
    இவர்கள் ஜாதகங்கள் கிடைத்தது .வீட்டில் வைத்திருக்கிறேன் .
    இந்த்ரஜித் பிறந்த போது அணைத்து கிரகங்களையும் நல்ல இடங்களில்
    அமர சோனான் எல்லா கிரகங்களும் ராவணனுக்கு பயந்து நல்ல இடங்களில் அமர்ந்தது அனால் சனீஸ்வரன் மட்டும் குழந்தை
    பிறந்த விஷயத்தை ராவணனிடம் கூறுவதுபோல் பார்வையை
    திருப்பிவிட்டார் இதனால் இன்ற்ஜிதிற்கு ஆயுள் குறைந்தது .
    இதெல்லாம் சுவாரஸ்யத்தை கூடுவதர்கக சொல்லபடுகிற
    கதைதான்.அனால் இதெலாம் ராமாயணத்தில் கூறப்படுகிறது .
    ராவணன் அணைத்து கிரகங்களையும் அடிமை படுத்தி
    படிக்கல் ஆகினான் என்று ராமயணன் சொல்கிறது .
    அணைத்து பாவ கிரகங்களும் பயந்து சென்று11 அமர்ந்தது ,
    இது போன்றவை எல்லாம் அவர்கள் கிரக அமைப்பை சொல்வதற்காக
    சொள்ளபடுகிறதோ என்னவோ !மஹா பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ஜாதகம் சொல்லப்படுகிறது .ஜோதிடர் b.v .ராமன்
    அவர்கள் கிர்ஷ்ணருடைய ஜாதகத்திற்கு (19.JUL.3102 BC aroundmidnight)தேதி வரும் என கூறுகிறார்.ரொம்ப நீளமாக எழுதிவிட்டேன் மன்னிக்கவும்

    ReplyDelete
  27. Thank you sir
    your each and every lessons very useful for all students,now only i start my study.
    thanks a lot

    ReplyDelete
  28. /////////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் ஜாதகம் சொல்லபட்டிருக்கிறது ,
    ஆஞ்சநேயர் ஜாதகமும் சொல்லபட்டிருக்கிறது .ஒரு கோவிலில்
    இவர்கள் ஜாதகங்கள் கிடைத்தது .வீட்டில் வைத்திருக்கிறேன் .
    இந்த்ரஜித் பிறந்த போது அணைத்து கிரகங்களையும் நல்ல இடங்களில்
    அமர சோனான் எல்லா கிரகங்களும் ராவணனுக்கு பயந்து நல்ல இடங்களில் அமர்ந்தது அனால் சனீஸ்வரன் மட்டும் குழந்தை
    பிறந்த விஷயத்தை ராவணனிடம் கூறுவதுபோல் பார்வையை
    திருப்பிவிட்டார் இதனால் இன்ற்ஜிதிற்கு ஆயுள் குறைந்தது .
    இதெல்லாம் சுவாரஸ்யத்தை கூடுவதர்கக சொல்லபடுகிற
    கதைதான்.அனால் இதெலாம் ராமாயணத்தில் கூறப்படுகிறது .
    ராவணன் அணைத்து கிரகங்களையும் அடிமை படுத்தி
    படிக்கல் ஆகினான் என்று ராமயணன் சொல்கிறது .
    அணைத்து பாவ கிரகங்களும் பயந்து சென்று11 அமர்ந்தது ,
    இது போன்றவை எல்லாம் அவர்கள் கிரக அமைப்பை சொல்வதற்காக
    சொள்ளபடுகிறதோ என்னவோ !மஹா பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ஜாதகம் சொல்லப்படுகிறது .ஜோதிடர் b.v .ராமன்
    அவர்கள் கிர்ஷ்ணருடைய ஜாதகத்திற்கு (19.JUL.3102 BC aroundmidnight)தேதி வரும் என கூறுகிறார்.ரொம்ப நீளமாக எழுதிவிட்டேன் மன்னிக்கவும்//////////

    ஸ்ரீராமர், மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோருடைய பிறப்பு விவரங்கள் மற்றும் ஜாதகங்கள் என்னிடமும் உள்ளன. நான் கேட்டது ராவணனைப் பற்றித்தான். அது இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்!

    ReplyDelete
  29. ////Blogger veera said...
    Thank you sir
    your each and every lessons very useful for all students, now only i start my study.
    thanks a lot!//////

    உங்கள் வருகைக்கு நன்றி ஒவ்வொரு பாடமாக அனைத்தையும் படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  30. வணக்கம் ஐயா
    http://www.ojhabooks.com/hr21_preface.தடம் தொந்தரவுக்கு மன்னிக்கவும் ,
    இந்த வலையில் ராவணனுடைய ஜாதகம் பற்றிய விவரம் இருக்கிறது .

    ReplyDelete
  31. http://www.ojhabooks.com/hr21_preface.htm

    ReplyDelete
  32. காரகன் பாவத்தில் இருந்தால் நாசம் என்பது ஆதித்யனுக்கும் சரியாக உள்ளது.
    தங்களின் வேலைப் பளுவுக்கு நடுவில் விருந்து வைப்பது அருமை ஐயா.
    -அன்புடன் சீனு

    ReplyDelete
  33. இருட்டுப் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் திடீர் பிரகாசம் ... ஆசிரியரின் 'சூரியன்' பாடமும் மாணவர்களின் அளவிட முடியாத மகிழ்ச்சியும்தான் பிரகாசம் என்றேன் ...
    -நன்றியுடன் சீனு

    ReplyDelete
  34. காரகன் பாவத்தில் இருந்தால் நாசம் என்பது ஆதித்யனுக்கும் சரியாக உள்ளது.
    தங்களின் வேலைப் பளுவுக்கு நடுவில் விருந்து வைப்பது அருமை ஐயா.
    -அன்புடன் சீனு

    ReplyDelete
  35. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    http://www.ojhabooks.com/hr21_preface.தடம் தொந்தரவுக்கு மன்னிக்கவும் ,
    இந்த வலையில் ராவணனுடைய ஜாதகம் பற்றிய விவரம் இருக்கிறது .////

    பார்த்துவிட்டு, அதுபற்றி எழுதுகிறேன்! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  36. /////Blogger Cheenu said...
    காரகன் பாவத்தில் இருந்தால் நாசம் என்பது ஆதித்யனுக்கும் சரியாக உள்ளது.
    தங்களின் வேலைப் பளுவுக்கு நடுவில் விருந்து வைப்பது அருமை ஐயா.
    -அன்புடன் சீனு/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சீனு!

    ReplyDelete
  37. ///////Blogger Cheenu said...
    இருட்டுப் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் திடீர் பிரகாசம் ... ஆசிரியரின் 'சூரியன்' பாடமும் மாணவர்களின் அளவிட முடியாத மகிழ்ச்சியும்தான் பிரகாசம் என்றேன் ...
    -நன்றியுடன் சீனு/////

    விடுபட்டவைகளைத்தான் எழுதினேன். உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  38. நானும் லேகியம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    கருணைக்கிழங்கு லேகியம், தீபாவளி லேகியம் இன்ன பிற லேகியம் எல்லாம் தெரியும்.

    அது சரி.. இந்த சிட்டுக்குருவி லேகியம் எப்படி இருக்கும்?)

    ReplyDelete
  39. அய்யா,

    வேலை பளு காரணமாக, என்னால் சரியாக நேரத்தில் வர இயலவில்லை. பாடங்களை சற்று தாமதமாக படிக்கிறேன்.

    பாடம் புரிகிறது. எனக்கு மூன்றில் சூரியன் (சிம்ம ராசி),

    மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
    அல்லது Don't care type.
    பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

    "பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்"

    இதை தைரியம் (பயம் இல்லாதவர்) என குறிப்பிடுகீர்களா?

    நன்றி,

    Sridhar

    ReplyDelete
  40. vanakkam
    if sun and mercury are in 8th house , does it show full yogam (even though 8 is a hidden place.)

    ReplyDelete
  41. வணக்கம் ஐயா,தங்கள் அனைத்து பாடங்களூம் அருமயாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம்,பாவகச்சக்கரத்தில் உள்ளபடிதான் பலன் நடக்கும் என கூறப்படுவது உன்மையா?ஏனெனில் சில கிரக நிலை மாற்றம் உள்ளது,அதனால்தான் சந்தேகம்?

    ReplyDelete
  42. நான் படித்த ராமாயண கதையில் (எந்த புத்தகம், யாருடைய பதிப்பு என்று ஞாபகமில்லை) ராவணன் 9 கிரகங்களையும் இந்திரஜித் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் அவன்(ர்) நீண்ட ஆயுளுடனும் அதி பராக்கிரமசாலியாகவும் சுருக்கமாக Mr. Perfect ஆக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் படி பணித்ததாகவும், அவர்களும் அப்படியே செய்ததாகவும் பிறகு சனி தனது வியர்வையால் குளிகனையும், மாந்தியையும் உருவாக்கி அவனுக்கு அற்ப ஆயுளாக போகும்படி அவர்களை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன். இப்படி பல கதைகள். இந்த கதைகளில்என்ன இடிக்கிறது என்றால் 9 கிரகங்களை ராவணன் அடிமைப் படுத்தினான் என்றால் அவர்களில் ஒருவரான தன் குல குரு சுக்கிராச்சாரியாரையுமா அடிமைப் படுத்தினான்.

    ReplyDelete
  43. 300 பதிவுகள் தாண்டிவிட்டது !

    விரைவில் 3 லட்சம் பார்வையாளர்கள்!

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

    ReplyDelete
  44. வணக்கம் ஜயா , நன்றி லீவுக்கு :)))) ஆனாலும் மனம் கேட்காமல் refresh button அழுத்துபடும் :). நாளைக்கு சந்திப்போம் ,நன்றி வணக்கம்

    ReplyDelete
  45. /////Blogger மெனக்கெட்டு said...
    நானும் லேகியம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன்.
    கருணைக்கிழங்கு லேகியம், தீபாவளி லேகியம் இன்ன பிற லேகியம் எல்லாம் தெரியும்.
    அது சரி.. இந்த சிட்டுக்குருவி லேகியம் எப்படி இருக்கும்?)//////

    நல்லபிள்ளையாக இருங்கள்! அதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?

    ReplyDelete
  46. /////Blogger Sridhar said...
    அய்யா,
    வேலை பளு காரணமாக, என்னால் சரியாக நேரத்தில் வர இயலவில்லை. பாடங்களை சற்று தாமதமாக படிக்கிறேன்.
    பாடம் புரிகிறது. எனக்கு மூன்றில் சூரியன் (சிம்ம ராசி),
    மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
    அல்லது Don't care type. பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்
    "பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்"
    இதை தைரியம் (பயம் இல்லாதவர்) என குறிப்பிடுகீறீர்களா?
    நன்றி,
    Sridhar////

    ஆமாம் சாமி, அதேதான்!

    ReplyDelete
  47. //////Blogger KS said...
    vanakkam
    if sun and mercury are in 8th house , does it show full yogam (even though 8 is a hidden place.)/////

    மறைவிடங்கள் தீய ஸ்தானங்கள். யோகங்கள் அங்கே பாதியாகக் குறைந்துவிடும்.

    ReplyDelete
  48. /////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,தங்கள் அனைத்து பாடங்களூம் அருமையாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம்,பாவகச்சக்கரத்தில் உள்ளபடிதான் பலன் நடக்கும் என கூறப்படுவது உன்மையா?ஏனெனில் சில கிரக நிலை மாற்றம் உள்ளது,அதனால்தான் சந்தேகம்?/////

    பாவச் சக்கரங்கள் only for fine tuning of planets for border births between 2 rasis.

    ReplyDelete
  49. /////Blogger ananth said...
    நான் படித்த ராமாயண கதையில் (எந்த புத்தகம், யாருடைய பதிப்பு என்று ஞாபகமில்லை) ராவணன் 9 கிரகங்களையும் இந்திரஜித் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் அவன்(ர்) நீண்ட ஆயுளுடனும் அதி பராக்கிரமசாலியாகவும் சுருக்கமாக Mr. Perfect ஆக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் படி பணித்ததாகவும், அவர்களும் அப்படியே செய்ததாகவும் பிறகு சனி தனது வியர்வையால் குளிகனையும், மாந்தியையும் உருவாக்கி அவனுக்கு அற்ப ஆயுளாக போகும்படி அவர்களை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன். இப்படி பல கதைகள். இந்த கதைகளில்என்ன இடிக்கிறது என்றால் 9 கிரகங்களை ராவணன் அடிமைப் படுத்தினான் என்றால் அவர்களில் ஒருவரான தன் குல குரு சுக்கிராச்சாரியாரையுமா அடிமைப் படுத்தினான்.///////

    புராணக்கதைகளில் சில கதைகள் நம்ப முடியாதபடி இருக்கும். அவற்றில் இவைகளும் சேரும்!

    ReplyDelete
  50. //////Blogger மெனக்கெட்டு said...
    300 பதிவுகள் தாண்டிவிட்டது
    விரைவில் 3 லட்சம் பார்வையாளர்கள்!
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.//////

    ஆகா, வணக்கமும் முக்கியம்தான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. ///////////Blogger Emmanuel Arul Gobinath said...
    வணக்கம் ஜயா , நன்றி லீவுக்கு :)))) ஆனாலும் மனம் கேட்காமல் refresh button அழுத்துபடும் :). நாளைக்கு சந்திப்போம் ,நன்றி வணக்கம்////////

    உங்களிடம் (மாணவர்களிடம்) பெர்மிசன் வாங்காமல் நான் விடுப்பில் செல்வதில்லை. அதைக் கவனித்தீர்களா?

    ReplyDelete
  52. gud afternoon sir, in my horo'pe sun is in 7th house (friendly house)meena. thanx for the lesson. my lagna lord is budhha which is in 6th place makara. but sani+mars in lagana. im going to have a life of struggle..?

    ReplyDelete
  53. உங்களிடம் (மாணவர்களிடம்) பெர்மிசன் வாங்காமல் நான் விடுப்பில் செல்வதில்லை. அதைக் கவனித்தீர்களா?


    pullarrikuthu sir, nadathunga...lol

    ReplyDelete
  54. ////////Blogger mike said...
    gud afternoon sir, in my horo'pe sun is in 7th house (friendly house)meena. thanx for the lesson. my lagna lord is budhha which is in 6th place makara. but sani+mars in lagana. im going to have a life of struggle..?/////

    சுற்றும்வரை பூமி
    எரியும் வரை நெருப்பு
    போராடும்வரை மனிதன்!

    ReplyDelete
  55. /////////////Blogger mike said...
    உங்களிடம் (மாணவர்களிடம்) பெர்மிசன் வாங்காமல் நான் விடுப்பில் செல்வதில்லை. அதைக் கவனித்தீர்களா?
    pullarrikuthu sir, nadathunga...lol/////

    What is mean by lol?

    ReplyDelete
  56. ///Blogger வெட்டிப்பயல் said...
    lol - Laughing Out Loud :-)/////

    இளைஞர்களின் சங்கேத மொழிகளெல்லாம் சொன்னால்தான் தெரியும். நன்றி பாலாஜி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com