மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.4.09

சிதம்பரமும் பழநிமலையும்!

சிதம்பரமும் பழநிமலையும்!

தலைப்பைப் பார்த்து, சிதம்பரம் என்றவுடன், நமது மதிப்பிற்குரிய
உள்துறை அமைச்சரைப் பற்றி எழுதியதாக இருக்குமோ என்று
நினைத்து உள்ளே நுழைபவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இது உலகநாயகன் குடிகொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பற்றியது
====================================================

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" என்று சொன்னான் கவிஞன்.
பாடலை எழுதிய கவிஞரின் பெயர் நினைவில் இல்லை. அதனால்
குறிப்பிடவில்லை. கவியரசர் கண்ணதாசன் எழுதியதா அல்லது கவிஞர்
வாலி அவர்கள் எழுதியதா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.

நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

பாடலைப் பாருங்கள்!

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க" என்று பல்லவியில்
எழுதிய கவிஞர் சரணத்தில் இப்படிச் சொல்கிறார்.

படத்தில் நாயகி துவங்கிப் பாடுவதாக வரும் பாடல்:

"எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்"

நாயகன் விட்டானா? அவனும் தொடர்ந்து பாடுகிறான்:

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கோண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்

நாயகன்:
மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப் பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்தப் பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே தட்டில் வைத்த தீபமாம்

நாயகன்:
பாசம் என்று எதைச் சொல்வது
பக்தி என்று எதைச் சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பாடல்: நல்லதொரு குடும்பம்
திரைப் படம்: தங்கப் பதக்கம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
நடிப்பு: சிவாஜி, கே.ஆர்.விஜயா

"கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்"
என்பது படலின் முத்தாய்ப்பான வரி!
=====================================================
அன்பு, பாசம், பக்தி, நன்றியுணர்வு, நன்மைகள் என்று எல்லாவற்றையும்
கொண்டதுதான் குடும்ப வாழ்க்கை.

பிறப்பில் இருந்து இறப்புவரை வருவது குடும்ப வாழ்க்கை!

குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் என்று பருவங்கள்
நான்கு இருப்பதைப் போல குடும்பவாழ்க்கையும் பல பருவங்களை உடையது.

பிறந்தது முதல் 12 வயது வரை அன்னையின் அரவணைப்புத்தேவை.
12 வயது முதல் 24 வயது வரை தந்தையின் கவனிப்புத் தேவை
அதற்குப் பிறகு வளர்ந்துவிட்ட நிலையில் அவனுக்கே மனைவி, மக்கள்
என்று பொறுப்புடன் பராமரிக்கும் நிலையில் ஒரு குடும்பம் அமையும்.
அது ஒரு 30 ஆண்டு காலம் என்று கொள்ளலாம்.
அதற்குப் பிறகு அவனுடைய பிள்ளைகளின் அரவணைப்பில் அவன்
வாழ வேண்டும். அது ஒரு 20 ஆண்டுகாலம் என்று கொள்ளலாம்.

அதற்குப் பிறகு முதுமையான காலம். அது எப்படி இருக்கும் என்று யாராலும்
சொல்ல முடியாது. உடம்பும் மனதும் ஒத்துழைத்தால், அந்தக் காலம் நன்றாக
இருக்கும். இல்லையென்றால் நன்றாக இருக்காது..

அதோடு பிள்ளைகளும் அவனை வைத்துக் கொள்ள வேண்டும்
இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாய், தந்தையின் அரவணைப்பில் வாழும் காலத்தில் பிரச்சினைகள்
அதிகமாக இருக்க வாய்பில்லை.

திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் குடும்ப வாழ்க்கையில்தான்
பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.

அதைப் பற்றிச் செட்டிநாட்டுக் கவிஞர் திரு.அரு நாகப்பன் அவர்கள்
ஒரு முறை, சொல்லரங்கம் ஒன்றில் வேடிக்கையாக இப்படிக் குறிப்பிட்டார்:

திருமணமாகி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிதம்பரத்தின் ஆட்சி
அதாவது சிதம்பரத்தில் நடராஜர் ஆட்சி செய்வதைப் போல கணவனின்
ஆட்சி

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திருச்செங்கோடு ஆட்சி. அதாவது
திருச்செங்கோட்டில் உமா மகேஷ்வரர் உமைக்கு சரிபங்கு கொடுத்து
அர்த்தனாரீஷ்வரராக ஆட்சி செய்வதைப்போல, கணவன் மனைவி இருவரும்
கலந்து யோசித்து ஆட்சி செய்வது. அதாவது குடும்பம் நடத்துவது.

அடுத்து இருபதாண்டுகளுக்கு மீனாட்சியின் ஆட்சி. அதாவது மனைவியின்
ஆட்சி. அவள் சொல்படி கணவனும் கேட்பான். குழந்தைகளும் கேட்கும்

அதற்குப் பிறகு சுவாமிமலை.

சுமார் பத்தாண்டுகளுக்கு சுவாமிமலை. அதாவது பிள்ளைகளின் ஆட்சி.
குழந்தைகளின் சொற்படி கேட்டு இருக்கும் நிலைமைக்கு இருவரும்
தள்ளப்படுவார்கள்.

அதற்குப் பிறகு என்ன ஆகும்?

குடும்பம் பெரியதாகி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று வந்தவுடன்,
பெண்ணானவள் அவர்களை அனுசரித்து இருந்து விடுவாள்.
ஆணால் அப்படி இருக்க முடியாது.

அதனால் ஆணிற்கு மட்டும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கவிஞர்
இப்படிச் சொன்னார்,

சுவாமிமலைக்குப் பிறகு, செட்டியார் பழநிமலைக்குப் போகவேண்டியதுதான்
அதாவது ஆண்டியாகி நிற்க வேண்டியதுதான்!
=====================================================
மலையையெல்லாம் மறந்து விட்டு, குடும்ப வாழ்க்கையை மட்டும் பாருங்கள்
அதில்தான் எத்தனை திருப்பங்கள்?

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நல்ல குடும்பத்தில் பிறக்க முடியும். சிறு வயது வாழ்க்கை
நன்றாக இருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா சிறுவயது வாழ்க்கை நன்றாக அமைகிறது?

இறைவன் கருணை மிக்கவன். அதனால்தான் தாய், தந்தை, குடும்பம்
ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் கொடுத்தனுப்பாமல் தனித்தனியாக
பிரித்துக் கொடுத்திருக்கிறான்.

இரண்டாம் வீடு குடும்பம் என்றால், நான்காம் வீடு தாய்க்கு உரியது
ஒன்பதாம் வீடு தந்தைக்கு உரியது. நிச்சயம் ஒவ்வொரு ஜாதகத்திலும்
இந்த மூன்றில் ஒன்று நன்றாக இருக்கும்.

ஜாதகனின் இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்து, பிறக்கும்போது
வறுமையான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவனைக் கட்டியணைத்து
வளர்க்க ஒரு நல்ல தாய் அமைந்திருப்பாள். அல்லது தந்தை
அமைந்திருப்பார்

4காம் வீட்டிற்கு, அதிலிருந்து பதினொன்றாம் வீடு, குடும்ப ஸ்தானம்.
அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நல்ல தாய் கிடைப்பதுதான் ஒரு
மனிதனின் முதல் பாக்கியம். நல்ல தாய் கிடைத்துவிட்டால் சிறு வயது
வாழ்க்கை எந்தவிதமான பொருளாதாரச் சூழ்நிலையிலும் நன்றாக
இருக்கும். 4ஆம் வீட்டிற்கும் இரண்டாம் வீட்டிற்கும் ஒரு சிறப்பான
தொடர்பு உண்டு. நான்கிற்கு 11 என்பது அதன் லாபஸ்தானம்.

2ற்கு ஒன்பதாம் வீடு, அந்த வீட்டிலிருந்து எட்டாம் வீடு. அதுபோல
9ற்கு 2ஆம் வீடு அந்த வீட்டிலிருந்து ஆறாம் வீடு. ஆகவேதான்
தந்தையைவிட ஒரு குழந்தைக்குத் தாயின் வீடு (4th house) முக்கியமாகிறது
======================================================
சரி ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன?
அதாவது மனைவியின் ஸ்தானமான 7ஆம் வீட்டிற்கும்
குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்,
ஜாதகத்தில் உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை அடுத்து அலசுவோம்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்,
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

31 comments:

Arulkumar Rajaraman said...

Dear Sir

2,4,9,11 mm veedu eppadi thodarbudayadhu enbadhu arumayana vilakkam. Thanks Sir... Adutha padam ..7 th place very very important .. iam(we) are waiting for that lesson also..

Asiriyarukku Nandri

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

ananth said...

வீடுகளைப் பற்றிய தங்களது ஒப்பீடு அருமை. மனைவி அமைவத்தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவிஞர். அது எனக்கு எற்கனவே அமைந்து விட்டது. இருந்தாலும் தாங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளது.

SP.VR. SUBBIAH said...

////Blogger Arulkumar Rajaraman said..
Dear Sir
2,4,9,11 mm veedu eppadi thodarbudayadhu enbadhu arumayana vilakkam. Thanks Sir... Adutha padam ..7 th place very very important .. iam(we) are waiting for that lesson also..
Asiriyarukku Nandri
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

2,4,9 ஆகிய வீடுகளைப் பற்றி மட்டுமே இன்றையப் பதிவு.
4ஆம் வீட்டிற்கு 2ஆம் வீடு அதன் பதினொன்றாம் இடம் என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!

dhanan said...

வணக்கம் ஐயா,நல்ல தாய் கிடைப்பதே முதல் பாக்கியம் என தாங்கள் கூறியுள்ளது மிகவும் உண்மையான சொல்.இந்த பகுதி மிகவும் நன்று.

அன்புடன்,
மதுரை தனா.

krish said...

Aha. You are great. There are several books on astrology and several writers on this mysterious and much debated subject. I wonder is there anyone who could write this subject interestingly and simply for everyone to understand. Thanks and best wishes.

Emmanuel Arul Gobinath said...

ஜயா இது நேற்றைய பாடத்தில் நீங்கள் கேட்ட பதிவுகள்..
மனசே ரிலாக்ஸ் MP3 பதிவுகள்.
http://www.isaitamil.net/forums/f50-isaitamil-spritual-section/2990-2985-2970-3015-2992-3007-2994-3006-2965-3021-3000-3021-2986-3021-2995-3007-3000-3021-mp3-7032.html

பாகம் ஒன்று
http://bkvijayaraghavan.googlepages.com/ManaseRelaxPleasePart1.pdf

பாகம் இரண்டு
http://bkvijayaraghavan.googlepages.com/ManaseRelaxPleasePart2.pdf

SP.VR. SUBBIAH said...

////////Blogger ananth said...
வீடுகளைப் பற்றிய தங்களது ஒப்பீடு அருமை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவிஞர். அது எனக்கு எற்கனவே அமைந்து விட்டது. இருந்தாலும் தாங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளது./////////

ஒரு நாள் பொறுங்கள். நாளை பதிவிடுகிறேன். சுவாரசியமாக இருக்கும்!

SP.VR. SUBBIAH said...

//////////Blogger dhanan said...
வணக்கம் ஐயா,நல்ல தாய் கிடைப்பதே முதல் பாக்கியம் என தாங்கள் கூறியுள்ளது மிகவும் உண்மையான சொல்.இந்த பகுதி மிகவும் நன்று.
அன்புடன்,
மதுரை தனா./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////////////Blogger krish said...
Aha. You are great. There are several books on astrology and several writers on this mysterious and much debated subject. I wonder is there anyone who could write this subject interestingly and simply for everyone to understand. Thanks and best wishes./////////

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////////Blogger Emmanuel Arul Gobinath said..
ஜயா இது நேற்றைய பாடத்தில் நீங்கள் கேட்ட பதிவுகள்..
மனசே ரிலாக்ஸ் MP3 பதிவுகள்.
http://www.isaitamil.net/forums/f50-isaitamil-spritual-section/2990-2985-2970-3015-2992-3007-2994-3006-2965-3021-3000-3021-2986-3021-2995-3007-3000-3021-mp3-7032.html
பாகம் ஒன்று
http://bkvijayaraghavan.googlepages.com/ManaseRelaxPleasePart1.pdf
பாகம் இரண்டு
http://bkvijayaraghavan.googlepages.com/ManaseRelaxPleasePart2.pdf///////////

தகவலுக்கு நன்றி இமானுவேல்!

choli ganesan said...

ஐயா வணக்கம்
ஒவ்வொரு விஷயமும் சொல்லும் போதும் தங்களின் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது ,ஒரு தாய் தன் குழந்தைக்கு அவன் விரும்பும் வண்ணம் அவனை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையைபோல.உண்மையில் சொல்லவேண்டுமானால் என் போன்றவருக்கு தங்களை போன்றவரின் நட்பு ,ஆசி ,அறிவுரை ஆகியவை எல்லாம் கிடைப்பதற்கு நன் பெரும் பேறுபெற்றிருக்கிறேன் . என் ஐந்தாம் இடத்தில் குரு ,அவர் லக்னதியும் பார்க்கிறார் .
நன்றி கணேசன்

Vinodh said...

Hello sir,

nice blog.... expecting for next article...:-)))

Regards
vinodh

nellai ram said...

the song was written by KANNADASAN.

ananth said...

ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன? 7ம் இடம் 9ற்கு 11ம் இடம். 11ற்கு 9ம் இடம். மனைவியால் தந்தைக்கு லாபம், மனைவி லாபத்தின் (தாய்) தந்தை என்று இருக்குமோ. கொண்டு வரும் வரதட்சினை, சீர் மூலமாக. மனைவியால் பலர் லாபமடைகிறார்கள் என்றாகி விட்டது. கவனிக்க, எல்லோரும் என்று சொல்லவில்லை. நான் எனது திருமணத்தின் போது இது போல் எதுவும் வாங்கவில்லை என்று இப்போதே சொல்லிவிடுகிறேன்.

RAJA said...

Very nice example sir

பிரகாஷ் துரைசாமி said...

my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur, sir could u tell me my forecsat , i m planning to do stock trading business. could i suceed in big level in share business. thank u for your wonderfull service sir. and my mail id- pracash1982@gmail.com

பிரகாஷ் துரைசாமி said...

ungaludya gavanathirku- last 1 1/2 year i got more financial and personal losses (still now), job or business which one is best for me? etavadu nalla kalam porakuma sir enaku?
my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur,

பிரகாஷ் துரைசாமி said...

உச்சம் என்றல் என்ன ?

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா.

SP.VR. SUBBIAH said...

/////Blogger choli ganesan said...
ஐயா வணக்கம்
ஒவ்வொரு விஷயமும் சொல்லும் போதும் தங்களின் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது ,ஒரு தாய் தன் குழந்தைக்கு அவன் விரும்பும் வண்ணம் அவனை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையைபோல.உண்மையில் சொல்லவேண்டுமானால் என் போன்றவருக்கு தங்களை போன்றவரின் நட்பு ,ஆசி ,அறிவுரை ஆகியவை எல்லாம் கிடைப்பதற்கு நன் பெரும் பேறுபெற்றிருக்கிறேன் . என் ஐந்தாம் இடத்தில் குரு ,அவர் லக்னத்தையும் பார்க்கிறார்.
நன்றி கணேசன்//////

பாராட்டிற்கு நன்றி கணேசன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Vinodh said...
Hello sir,
nice blog.... expecting for next article...:-)))
Regards
vinodh////

அடுத்தடுத்த பாடங்கள் தானாகத் தவறாமல் வரும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger nellai ram said...
the song was written by KANNADASAN.////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன? 7ம் இடம் 9ற்கு 11ம் இடம். 11ற்கு 9ம் இடம். மனைவியால் தந்தைக்கு லாபம், மனைவி லாபத்தின் (தாய்) தந்தை என்று இருக்குமோ. கொண்டு வரும் வரதட்சினை, சீர் மூலமாக. மனைவியால் பலர் லாபமடைகிறார்கள் என்றாகி விட்டது. கவனிக்க, எல்லோரும் என்று சொல்லவில்லை. நான் எனது திருமணத்தின் போது இது போல் எதுவும் வாங்கவில்லை என்று இப்போதே சொல்லிவிடுகிறேன்.//////

மனைவியும் ஒரு பாக்கியம்தானே. அதனால்தான் ஒன்பதாம் இடத்திற்கு அது 11ல் அமைந்துள்ளது!

SP.VR. SUBBIAH said...

////Blogger RAJA said...
Very nice example sir/////

நன்றி ராஜா!

SP.VR. SUBBIAH said...

/////Blogger பிரகாஷ் துரைசாமி said...
my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur, sir could u tell me my forecsat , i m planning to do stock trading business. could i suceed in big level in share business. thank u for your wonderfull service sir. and my mail id- pracash1982@gmail.com/////

இடி மழை மின்னல் என்று தற்சமயம் பங்கு வணிகம் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தச் சமயத்தில் எதற்காக அதில் நுழைய ஆசைப்படுகிறீர்கள்?

SP.VR. SUBBIAH said...

/////Blogger பிரகாஷ் துரைசாமி said...
ungaludya gavanathirku- last 1 1/2 year i got more financial and personal losses (still now), job or business which one is best for me? etavadu nalla kalam porakuma sir enaku?
my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur,

இரவுப் பிறப்புக்களுக்கெல்லாம் தேதி சரியாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதி சரிதானா?

SP.VR. SUBBIAH said...

/////Blogger பிரகாஷ் துரைசாமி said...
உச்சம் என்றல் என்ன ?////

முதலில் பழைய பாடங்களையெல்லாம் படியுங்கள்!
உச்சம், நீசம் என்பதெல்லாம் அடிப்படைப்பாடம். இப்போது நடத்துவது எல்லாம் மேல் நிலைப் பாடங்கள்.
நீங்கள் துவக்கத்தில் இருந்து ஒவ்வொரு பாடமாகப் பொறுமையாகப் படியுங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger அமர பாரதி said...
உள்ளேன் அய்யா./////

நன்றி பாரதி!

பிரகாஷ் துரைசாமி said...

hello sir enaku mattum padiley illaya?

பிரகாஷ் துரைசாமி said...

nan kuripitulla neram saritan iyya

பிரகாஷ் துரைசாமி said...

nan piranda nerathi miga sariyagave kuripitulen. thiru kanita murai padi 17 feb 2009 il irundu puthan thisai aarambam, vakiya padi 2007 july irundu puthan thisai aarambam,