மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.4.09

இருட்டான இடங்கள் - பகுதி 2

இருட்டான இடங்கள் - பகுதி 2

முன் பகுதியைப் படித்திராத கண்மணிகளை, அதைப் படித்துவிட்டு வந்து
இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி!

=====================================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் பெண் பித்தனாக இருப்பான்.
யாருக்குத்தான் பெண் பித்து இல்லையென்கிறீர்களா?
சரி, வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அமைப்பு உள்ளவன் அதிகமான அளவு பெண் பித்து உள்ளவனாக
இருப்பான். தேவையான சுகங்களைத் தேடிப்பிடித்து அனுபவிப்பவனாக
இருப்பான். அதற்கான துணிச்சல் இருக்கும்.

சிலருக்கு ஜொள்ளுப் பார்ட்டி எனும் விருது கிடைக்கும்.
பெண்களிடமிருந்து சொத்துக்களும் கிடைக்கும்.
இலை விருந்து, பெண் விருந்து என்று ஆசாமி எப்போதும் சாப்பாட்டு
ராமனாக இருப்பான்.

சிலர் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

சிலர் எந்தவிதமான வேலையும் இன்றி சுகஜீவனத்துடன் இருப்பார்கள்.

If the 3rd lord is in the 7th, the native will be an employee than a businessman.
He will excel as subordinate than as a commanding officer.
He will forget a duty or debt when it falls due.
===========================================================
மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:

சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது. தேக ஆரோக்கியம் முழுமையாக
இருக்காது. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். வாக்கு
வன்மை இருக்காது. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.

சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.

இந்த அமைப்பு சுப பலத்துடன் இருந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டாலும்
கஷ்ட நிவாரணமும் கிடைக்கும்

சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. அதுபோல சிலருக்குச்
செய்யும் தொழிலும் சிலாக்கியமாக இருக்காது. அதாவது பிடிதமாக இருக்காது

துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின் தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.

If the 3rd lord is in the 8th, the native will be driven by the desire
to take possession of things and take charge of situations without any
authority whatsoever.
The native will have the tendency to die for his/her love.
He will miss the company of his brother or sister.
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். வசதி
படைத்தவனாக இருப்பான். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.

இந்த அமைப்பு தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றால் மேற்சொன்ன
பலன்கள் இருக்காது

பெற்றோர்வழிச் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
போராடிப் பெறவேண்டியதிருக்கும். உணர்ச்சி மிகுந்தவர்கள்.
அந்த உணர்ச்சியால் அடிக்கடி சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
சிலருக்குப் புரிதல் இன்மையால் தந்தையுடன் கூடிய உறவு பாதிக்கப்படும்

சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:

இந்த அமைப்பு சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால்,
உடன்பிறப்புக்களால் ஜாதகனுக்குப் பயன் இருக்காது.
அவர்களும் அந்தஸ்து இல்லாமல் இருப்பார்கள்.
ஆதரவான சூழ்நிலை இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு
எதிர்மாறான பலன்கள் இருக்கும். அதாவது நன்மையான பலன்கள் இருக்கும்

ஜாதகன் நற்பெயரோடும், ஓரளவு செல்வாக்கோடும் இருப்பான்.
பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
உத்தியோக வளர்ச்சியினல் மட்டுமே அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்

If the 3rd lord is in the 10th, the native will be selfsufficient!
He will have pleasing personality and sincere approach
His profession may be connected by travelling
He will attain to a professional reputation
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:

நன்மைதரும் அமைப்பு அல்ல! ஜாதகன் தன் முயற்சியால் மட்டுமே
வளர்ச்சியைக் காண முடியும்.

இங்கே வந்தமரும் மூன்றாம் வீட்டதிபன் சுபக்கிரகமாக இருந்தால்
உடன் பிறப்புக்களால் ஜாதகனுக்கு நன்மைகள், லாபங்கள் கிடைக்கும்.
உடன்பிறப்புக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வுடன்
இருப்பான்

The native will get help from their sisters and brothers
He will have gains of a high order.
His desires will be fulfilled in time by his own efforts
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.
சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும். சொத்துக்கள்
கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.
கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.
சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்
===================================================
1
மூன்றாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் மன உறுதி படைத்தவன். பிடிவாதக்காரன்.
தன் வழியில் துணிச்சலாகச் செல்லக்கூடியவன்
கோபக்காரன்.

2
மூன்றாம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் தைரியம் மிக்கவன்.
மனதில் எந்தவிதமான பயமும் இல்லாதவன்
வாங்கடா ஒருகை பார்க்கிறேன் என்று துடிப்போடு இருப்பவன்

3.
மூன்றாம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் வலிமை மிக்கவன்.
துணிச்சலானவன்

4.
மூன்றாம் அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்:
எச்சரிக்கை உணர்வு மிக்கவன்
தைரிய உணர்வு மிக்கவன்
விவேகம் உள்ளவன்.
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்

5
மூன்றாம் அதிபதி குருவுடன் சேர்ந்திருந்தால்:
Characterized by keen awareness, sharp intelligence,
and often a sense of the practical.
துணிவு விவேகம் மிக்கதாக இருக்கும்
சமமான நபர்களிடம் மட்டுமே தன்னுடைய துணிவைக் காட்டுவான்.

6.
மூன்றாம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் உணர்ச்சிவசப்பட்டவன்.
அந்த உணர்ச்சி அவனுக்குப் பெண்கள் மேல் அதிகமாக இருக்கும்
பெண்களிடம் தன்னுடைய உணர்வை இழக்கக்கூடியவன்

7
மூன்றாம் அதிபதி சனியுடன் சேர்ந்திருந்தால்:
மந்தமானவன். முட்டாள்தனம் நிறைந்தவன்

8
மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால்:

ஜாதகன் பார்ப்பதற்குத் தைரியசாலி போல தோற்றமளிப்பான்.
ஆனால் உண்மையில் பயந்தவன். கோழை.
தன்னம்பிக்கையில்லாதவன். மனதைரியம் இல்லாதவன்
timid heart & weak mind
Lacking self-confidence; shy. Fearful and hesitant:
நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் வீராப்பாகப் பேசிவிட்டுக்
கடைசியில் அடி வாங்குவாரே, அதுபோல இந்த அமைப்புள்ள
ஜாதகனும் நடந்து கொள்வான்
===============================================
(தொடரும்)வாழ்க வளமுடன்!

48 comments:

மதி said...
This comment has been removed by the author.
மதி said...

வணக்கம் வத்தியார் ஐயா...

>>ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.

சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.>>>

>> அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்:
எச்சரிக்கை உணர்வு மிக்கவன்
தைரிய உணர்வு மிக்கவன்
விவேகம் உள்ளவன்.
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்<<


காலையிலெயே என்னை பற்றி நல்ல செய்தி...நல்லது....

நன்றி.

krish said...

Thanks for the lesson.

வேலன். said...

தேவலோகத்தில் ஒரு நாள் என்பது 12 மாதங்களை குறிக்கும் என்று சொல்வார்கள். வாத்தியார் ஒருநாள் பொறுத்துஇருங்கள் என்பதற்கு( 48 மணிநேரம்) இரண்டு நாள் என்று கணக்கு பொலும்.//

பலன்கள் அருமை. எனது பத்தாம் இடத்தில் தனுசு வீட்டில் 25 பரல்களுடன் புதன் உடன் செவ்வாய்-சுக்ரன்-கேது என நான்கு பேர் உடன்
உள்ளார்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

VIKNESHWARAN said...
This comment has been removed by the author.
VIKNESHWARAN said...

ஐயா, எனது மூன்றாம் அதிபதி புதன். 12-ஆம் வீட்டான மீனத்தில் நீசமடைந்துள்ளார். சூரியனோடு இருக்கிறார். சூரியன் 332.02பாகை. புதன் 339.08பாகை. இதற்கான பலன் என்ன?

ananth said...

எனக்கு 3ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். பொது பலன் என்று தாங்கள் சொல்லி விட்டதால் மேற்கொண்டு கருத்துரைக்க விரும்பவில்லை. சில கேள்விகள் இருக்கின்றன. பாடம் முடியட்டும். விடை கிடைக்காவிட்டால் கேட்கிறென்.

SP Sanjay said...

பாடம் அருமை!

எல்லா பலன்களும் கிட்டத்தட்ட (Maximum) ஒத்து வருகிறது.

நன்றி ஐயா.

SP.VR. SUBBIAH said...

//////Blogger மதி said...
வணக்கம் வத்தியார் ஐயா...
>>ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.
சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.>>>
>> அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்:
எச்சரிக்கை உணர்வு மிக்கவன்
தைரிய உணர்வு மிக்கவன்
விவேகம் உள்ளவன்.
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்<<
காலையிலேயே என்னை பற்றி நல்ல செய்தி...நல்லது....
நன்றி.//////

பொதுப்பலன்கள் ஒத்துவந்துள்ளது. அதனால் குஷியாகிவிட்டீர்கள்.இல்லையா?
சந்தோஷமாக இருந்தால் சரிதான்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Thanks for the lesson./////

நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger வேலன். said...
தேவலோகத்தில் ஒரு நாள் என்பது 12 மாதங்களை குறிக்கும் என்று சொல்வார்கள். வாத்தியார் ஒருநாள் பொறுத்துஇருங்கள் என்பதற்கு( 48 மணிநேரம்) இரண்டு நாள் என்று கணக்கு பொலும்.//
பலன்கள் அருமை. எனது பத்தாம் இடத்தில் தனுசு வீட்டில் 25 பரல்களுடன் புதன் உடன் செவ்வாய்-சுக்ரன்-கேது என நான்கு பேர் உடன் உள்ளார்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

இரண்டு பதிவுகளுக்கு நடுவில் சராசரியாக 25 பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுகிறேன். அதற்கு நாள் கணக்குக் கிடையாதா?

SP.VR. SUBBIAH said...

//////Blogger VIKNESHWARAN said...
ஐயா, எனது மூன்றாம் அதிபதி புதன். 12-ஆம் வீட்டான மீனத்தில் நீசமடைந்துள்ளார். சூரியனோடு இருக்கிறார். சூரியன் 332.02பாகை. புதன் 339.08பாகை. இதற்கான பலன் என்ன?/////

புதன் நீசமடைந்தாலும், சூரியனோடு சேர்ந்து யோகத்தைத் தரும் நிலையில் உள்ளார். 12ல் இருப்பதால் தாமதமாகத்தருவார்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
எனக்கு 3ம் அதிபதி ராகுவுடன் இருக்கிறார். பொது பலன் என்று தாங்கள் சொல்லி விட்டதால் மேற்கொண்டு கருத்துரைக்க விரும்பவில்லை. சில கேள்விகள் இருக்கின்றன. பாடம் முடியட்டும். விடை கிடைக்காவிட்டால் கேட்கிறேன் /////.

3ஆம் வீட்டின் பரல்கள், அதிபதியின் சுயவர்க்கப்பரல் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger SP Sanjay said...
பாடம் அருமை!
எல்லா பலன்களும் கிட்டத்தட்ட (Maximum) ஒத்து வருகிறது.
நன்றி ஐயா.////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சஞ்சய்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nice Lesson Sir.Palankal Arumai....

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Emmanuel Arul Gobinath said...

நன்றி ஜயா , உங்கள் அருமையான நேரத்திற்கு. 12ல் 3,4ம் இட அதிபன் போய் இருப்பதால் பெரிதாக எதிர் பார்க்கவில்லை (பொது பலன் :) ). எல்லாம் அவன் செயல் (குரு கேது லக்கினத்தில் )

dubai saravanan said...

மூன்றாம் அதிபதி செவ்வாய் ஆட்சி ,உடன் புதன் மற்றும் சுக்கிரன் :-)))

kandhiah said...

Iyya,

3m adhipadhi suriyan 8il.
sani 2il.
3m,8m veetu paralgal 23,22.
suryan suya varga paralgal 5.

Suya vargathai vaithu mattum paarthal
nanragha ulladhu.

Matravatrai eppadi aaivu seivadhu?

anbu manavan.

உங்கள் மாணவி said...

வணக்கம் வாத்தியார் ஐயா...

எனக்கு 3ம் அதிபதி குரு (6 ) கேதுவுடன் 4-இல் மேஷத்தில் இருக்கிறார். மூன்றாம் வீட்டின் பரல் 34.நான்காம் வீட்டின் பரல் 36.
எனக்கு பலன்கள் எவ்வாறு இருக்கும்..

vijayan said...

Dear sir,

Lesson was good. For me the Third lord is Sukran is placed in lagna (Simbha Lagna) with 6 other stars Sun,Raghu,Guru,Mercury and Saturn.

I guess all mixed things for wht you mentioned. Sometimes Shyness, sometimes over confident, sometimes no conditent,
sometimes intelligent,
sometimes stupid ....anyway to know what time which one will have influence which one not ..atleast can be careful.

sekhar said...

Mithuna Lagnam. Lord of 3rd house, Sun placed in 8th house Makaram in combination with Lagnathipathi Budhan and Ketu. Pls advise will there be any problems., Sekhar

ananth said...

விளங்குகிறது ஆசிரியரே. தங்கள் பாடத்தில் சொல்வது மட்டும் அல்ல. எங்கு, எப்படி ஜோதிடம் கற்றாலும் 3ம் இடமோ வேறு எந்த இடமோ முழுமையான பலன் அறிய வேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம், அந்த ஸ்தானதிபதியோடு சேர்ந்த கிரகம் அந்த ஸ்தானாதிபதி இருக்கும் ராசி, லக்னத்தில் இருந்து எத்தனையாவது இடம், அவர், ஆட்சி, உச்சம், அல்லது வேறு எந்த நிலையில் இருக்கிறார், அந்த இடத்தின் மொத்த பரல்கலள், அந்த இடத்தின் அதிபதிக்கு சுய அஷ்ட வர்கத்தில் எத்தனை பரல்கள் இவை எல்லாவற்றயும் பார்க்க வேண்டும். சரியா. (வேறு எதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.) ஒன்றை மட்டும் வைத்துகொண்டு முடிவுக்கு வரக்கூடாது.

sundar said...

வணக்கம் ஐயா

இன்று கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது,இபோதுதான் வந்தேன்
முன்றாம் அதிபதி மறைந்தால் (கெட்டவன் கெட்டால் ) எதாவது
நன்மை இருக்கிறதா?

SP.VR. SUBBIAH said...

////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Nice Lesson Sir.Palankal Arumai...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

//////////////Blogger Emmanuel Arul Gobinath said...
நன்றி ஜயா , உங்கள் அருமையான நேரத்திற்கு. 12ல் 3,4ம் இட அதிபன் போய் இருப்பதால் பெரிதாக எதிர்

பார்க்கவில்லை (பொது பலன் :) ). எல்லாம் அவன் செயல் (குரு கேது லக்கினத்தில்)///////

எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிட்டால், ஒரு பிரச்சினையும் இல்லை!

SP.VR. SUBBIAH said...

///////////Blogger dubai saravanan said...
மூன்றாம் அதிபதி செவ்வாய் ஆட்சி ,உடன் புதன் மற்றும் சுக்கிரன் :-)))/////////

தகவலுக்கு நன்றி சரவணன்!

SP.VR. SUBBIAH said...

////////////Blogger kandhiah said...
Iyya,
3m adhipadhi suriyan 8il.
sani 2il.
3m,8m veetu paralgal 23,22.
suryan suya varga paralgal 5.
Suya vargathai vaithu mattum paarthal
nanragha ulladhu.
Matravatrai eppadi aaivu seivadhu?
anbu manavan.//////////////

மூன்றாம் அதிபதி எட்டில் இருந்தால் நன்மையல்ல என்று பதிவில் எழுதியிருக்கிறேனே சுவாமி. அங்கே

சென்றமரும் சூரியன் நல்ல பரல்களுடன் இருப்பதால், ஏற்படும் தீமைகளைத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக்

கொடுப்பார். அதாவது சகோதரன் சகோதரி உறவுகள் ஜாதகனுக்கு சிலாக்கியமாக இல்லையென்றாலும்,
அதனால் பாதிப்பு வராமல் அவர் பார்த்துக்கொள்வார்.

SP.VR. SUBBIAH said...

///////////Blogger உங்கள் மாணவி said...
வணக்கம் வாத்தியார் ஐயா...
எனக்கு 3ம் அதிபதி குரு (6 ) கேதுவுடன் 4-இல் மேஷத்தில் இருக்கிறார். மூன்றாம் வீட்டின் பரல்

34.நான்காம் வீட்டின் பரல் 36.
எனக்கு பலன்கள் எவ்வாறு இருக்கும்..////////

மூன்றாம் வீட்டு அதிபதி நான்கில் இருந்தால் நல்லது என்று பதிவில் எழுதியிருக்கிறேனே சகோதரி. பரல்கள் அதிகமாக இருப்பதால் அந்த நன்மைகள் கூடுதலாகக் கிடைக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////////Blogger vijayan said...
Dear sir,
Lesson was good. For me the Third lord is Sukran is placed in lagna (Simbha Lagna) with 6 other stars

Sun,Raghu,Guru,Mercury and Saturn.
I guess all mixed things for wht you mentioned. Sometimes Shyness, sometimes over confident, sometimes

no conditent,
sometimes intelligent,
sometimes stupid ....anyway to know what time which one will have influence which one not ..atleast can be

careful.////////

உங்கள் புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////////Blogger sekhar said...
Mithuna Lagnam. Lord of 3rd house, Sun placed in 8th house Makaram in combination with Lagnathipathi

Budhan and Ketu. Pls advise will there be any problems., Sekhar//////////

லக்கினாதிபதி எட்டில் இருந்தால் வாழ்க்கை எதிர்நீச்சல். எதையும் அதிகமாக முயன்று அடைய வேண்டியதிருக்கும். எதிர் நீசல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

SP.VR. SUBBIAH said...

////////////Blogger ananth said...
விளங்குகிறது ஆசிரியரே. தங்கள் பாடத்தில் சொல்வது மட்டும் அல்ல. எங்கு, எப்படி ஜோதிடம் கற்றாலும்

3ம் இடமோ வேறு எந்த இடமோ முழுமையான பலன் அறிய வேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும்

கிரகம், பார்க்கும் கிரகம், அந்த ஸ்தானதிபதியோடு சேர்ந்த கிரகம் அந்த ஸ்தானாதிபதி இருக்கும் ராசி,

லக்னத்தில் இருந்து எத்தனையாவது இடம், அவர், ஆட்சி, உச்சம், அல்லது வேறு எந்த நிலையில் இருக்கிறார்,

அந்த இடத்தின் மொத்த பரல்கள், அந்த இடத்தின் அதிபதிக்கு சுய அஷ்ட வர்கத்தில் எத்தனை பரல்கள்

இவை எல்லாவற்றயும் பார்க்க வேண்டும். சரியா?. (வேறு எதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.) ஒன்றை

மட்டும் வைத்துகொண்டு முடிவுக்கு வரக்கூடாது.//////

சரிதான். இதை இங்கு வந்து அடிக்கடி எழுதுங்கள். புதிதாக வருகிறவர்கள் தெரிந்து கொள்ளட்டும்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger sundar said...
வணக்கம் ஐயா
இன்று கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது,இபோதுதான் வந்தேன்
முன்றாம் அதிபதி மறைந்தால் (கெட்டவன் கெட்டால் ) எதாவது
நன்மை இருக்கிறதா?//////

மகரம் & கும்பத்திற்கு சனி அதிபதி
எல்லா லக்கினக்காரர்களுக்கும் சனி கர்மகாரகன் (authority for work)
சனி மறைந்தால் - அதாவது லக்கினாதிபதி மறைந்தால் எப்படி நன்மை இருக்கும் சொல்லுங்கள்?
கர்மகாரகன் மறைந்தால் எப்படி நன்மை இருக்கும் சொல்லுங்கள்?
எந்த கிரகமும் மறைவதால் நன்மை பயக்காது!

Cheenu said...

//இவை எல்லாவற்றயும் பார்க்க வேண்டும். சரியா?. (வேறு எதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.) ஒன்றை

மட்டும் வைத்துகொண்டு முடிவுக்கு வரக்கூடாது.//

ராசி ஒவ்வொன்றையும் 2-ஆக (ஹோரை), 3-ஆக (திரேக்காணம்) ... 9-ஆக (நவாம்சம்) என்று பிரித்துப் பார்ப்பதும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் அணுகும் முறை. முக்கியமாக , நவாம்சம் கிரகங்களின் உண்மையான பலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று வாத்தியார் சொன்னதாக நினைவு ...
3-ஆம் வீடு பற்றிய ஒரு நல்ல பாடம் கற்பித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி ...
அன்புடன் சீனு

sumathi said...

ஹலோ சார்,

பாடம் சரி, நன்றாக உள்ளது. ஆனால் எனக்கு சொல்லுங்கள்,3 மிட குரு 5ல்
அதுவும் தனியாக ஏதும் ப்ரச்சனை இல்லையே?

VA P RAJAGOPAL said...

விலக்கமான பாடத்திற்கு நன்றி அய்யா

thirunarayanan said...

velan unga patham idathu adipathi guru yennaiya aanar?
aathai sollave illiye?

thirunarayanan said...

ananth neengal mulu joshiyar aagi vittergal.good
nalla reshearch.
ippadi than yosikkanum
arumai aanandh

thirunarayanan said...

yennamma sumathi piratchinai
moondrammida guru
athu thula lagnama allathu makara laganama
sollave illiye
vathiyar yenna pannuvar?

SP.VR. SUBBIAH said...

////Blogger Cheenu said...
//இவை எல்லாவற்றயும் பார்க்க வேண்டும். சரியா?. (வேறு எதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.) ஒன்றை மட்டும் வைத்துகொண்டு முடிவுக்கு வரக்கூடாது.//
ராசி ஒவ்வொன்றையும் 2-ஆக (ஹோரை), 3-ஆக (திரேக்காணம்)9-ஆக (நவாம்சம்) என்று பிரித்துப் பார்ப்பதும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் அணுகும் முறை. முக்கியமாக , நவாம்சம் கிரகங்களின் உண்மையான பலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று வாத்தியார் சொன்னதாக நினைவு ...
3-ஆம் வீடு பற்றிய ஒரு நல்ல பாடம் கற்பித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி ...
அன்புடன் சீனு////

உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி சீனு!

SP.VR. SUBBIAH said...

/////Blogger sumathi said..
ஹலோ சார்,
பாடம் சரி, நன்றாக உள்ளது. ஆனால் எனக்கு சொல்லுங்கள்,3 மிட குரு 5ல்
அதுவும் தனியாக ஏதும் பிரச்சனை இல்லையே?/////

பிரச்சினை ஒன்றும் இருக்காது சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////Blogger VA P RAJAGOPAL said...
விளக்கமான பாடத்திற்கு நன்றி அய்யா//////

நன்றி கோபால்

SP.VR. SUBBIAH said...

//////Blogger thirunarayanan said...
velan unga paththam idathu adipathi guru yennaiya aanar?
aathai sollave illiye?///////

பாடம் மூன்றாம் வீட்டைப் பற்றியது. அதனால் சொல்லாமல் விட்டிருப்பார்

SP.VR. SUBBIAH said...

///////Blogger thirunarayanan said...
ananth neengal mulu joshiyar aagi vittergal.good
nalla reshearch.
ippadi than yosikkanum
arumai aanandh////

அவர் ஆகிவிட்டார். நீங்கள் எப்போது?

SP.VR. SUBBIAH said...

///////Blogger thirunarayanan said...
yennamma sumathi piratchinai
moondrammida guru
athu thula lagnama allathu makara laganama
sollave illiye
vathiyar yenna pannuvar?//////////

அது மட்டுமில்லை. மூன்றாம் வீட்டின் பரல்கள், குருவின் சுயவர்க்கப்பரல்கள், விழும் பார்வைகள் என்று இன்னும் பல விஷயங்கள் உள்ளனவே சுவாமி!

ananth said...

நண்பர் சீனு சுட்டிக்காட்டியதுபோல் நவாம்சத்தையும் பார்க்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பராசரரின் பிருஹத் பராசர ஹோரை சாஸ்திரத்தின் படி ராசி சக்கரத்திற்கு அடுத்து நவாம்சம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வர்கங்களின் பலம் என்பதை விம்ஷோபக பலம் என்பார்கள். எங்கோ எப்போதோ படித்தது. Divisional chart cannot give what what rasi chart cannot promise. நான் அரை ஜோதிடன் கூட இல்லை. முழு ஜோதிடன் என்று புகழ்ந்து விட்டீர்கள். நன்றி. புகழனைத்தும் எல்லா வல்ல இறைவன் ஒருவனுக்கே உரியது.

sekhar said...

How to count houses in Navamsam chart. Whether to count from Lagnam of Rasi chart, or to count from the Lagnam of Navamsa chart.
Regards, Sekhar

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
நண்பர் சீனு சுட்டிக்காட்டியதுபோல் நவாம்சத்தையும் பார்க்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பராசரரின் பிருஹத் பராசர ஹோரை சாஸ்திரத்தின் படி ராசி சக்கரத்திற்கு அடுத்து நவாம்சம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வர்கங்களின் பலம் என்பதை விம்ஷோபக பலம் என்பார்கள். எங்கோ எப்போதோ படித்தது. Divisional chart cannot give what what rasi chart cannot promise. நான் அரை ஜோதிடன் கூட இல்லை. முழு ஜோதிடன் என்று புகழ்ந்து விட்டீர்கள். நன்றி. புகழனைத்தும் எல்லா வல்ல இறைவன் ஒருவனுக்கே உரியது.////

இறைவன் ஒருவருக்கே உரியது எனும் நிலைக்கு நமது சிந்தனை வந்துவிட்டால், அதைவிட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை ஆனந்த்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger sekhar said...
How to count houses in Navamsam chart. Whether to count from Lagnam of Rasi chart, or to count from the Lagnam of Navamsa chart.
Regards, Sekhar/////

லக்கினம்தான் பிரதானமானது. அதைவைத்தே பாருங்கள் சேகர்!