மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

25.4.09

நயன்தாராவும் மல்லிகைப்பூவும்!

நயன்தாராவும் மல்லிகைப்பூவும்!

சார், தலைப்பு சூப்பராக இருக்கிறது என்று சொல்ல நினைப்பவர்கள்
பதிவை முழுதாகப் படித்த பிறகு சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்
படுகிறார்கள்
====================================================
மனம் ஒரு குரங்கு. அதைக் கட்டுப்படுத்தி வேலை செய்யும் சாமர்த்தியம்
சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.

அதை மன ஒருமுனைப்பாடு எனலாம்.

ஆங்கிலத்தில் அதை Concentration என்பார்கள்
Concentration is the act or process of concentrating, especially
the fixing of close, undivided attention.

அதாவது சிதறாத கவனத்துடன் வேலை செய்தல்.

குடும்பத்துடன் பேருந்து நிலையத்திற்குச் சென்று பஸ் ஏறும் சமயத்தில்
வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற சந்தேகம் சிலருக்கு
வரும். அல்லது கேஸ் சிலிண்டரை அணைத்துவிட்டு வந்தோமா என்ற
சந்தேகம் வரும்.

பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
வாங்கிவிட்டு, அதற்குப் பணம் கொடுக்கும்போது, ஐநூறு ரூபாய் நோட்டை
எடுத்து நீட்டியிருப்பான். கடைக்காரனும் கவனக்குறைவாக அதை நூறு
ரூபாய் நோட்டாக எண்ணி, சிகரெட் பெட்டியின் விலை ரூபாய் 34:00
போக மீதிச் சில்லரையாக ரூபாய் 66:00ஐக் கொடுத்திருப்பான். நம்ம
ஆளும் அதை வாங்கிக் கொண்டு வந்திருப்பான். இரவு செலவு கணக்கு
எழுதும்போதுதான் அது உறைக்கும்.

அலுவலகத்தில் வேலை செய்யும்போது மேலதிகாரி, பத்து வருடத்திற்கான
Purchase & sales விவரங்களைக் குறித்த பட்டியலைக் கேட்டிருப்பார்.
இவன் கவனச் சிதறலில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே குறித்துக்
கொண்டு போய்க் கொடுத்து, அவரிடம் மாத்து வாங்கிக்கொண்டிருப்பான்.

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.

இது எதனால் ஏற்படுகிறது?

எதிலும் ஒருமுனைப்பாடு இல்லாததால்தான்.
=============================================
ஒரு ஆசாமி இருந்தான்.

பெயர்?

பெயரெல்லாம் முக்கியமில்லை!

வயது மட்டும் முக்கியம். அவனுடைய வயது ஐம்பது. பல பிரச்சினைகள்
மனதில் வந்து ஏறிக்கொண்டு படுத்தும் வயது.

அதோடு அவனுடைய செயல்பாடுகளிலும் பல கோளாறுகள். பல
சங்கடங்கள்.எல்லாம் மனதைக் கட்டுப்படுத்தித் தன்முனைப்புடன்
வேலை செய்ய முடியாததால் ஏற்படுவது.

ஞானி ஒருவரைச் சந்தித்துத் தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி
வருந்தினான். மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுனைப்புடன் வேலை
செய்யும் வழியைக் கேட்டான்.

அவர் சொல்லிக் கொடுத்தார். மனதை அடக்க வேண்டும். அதன் மூலம்
ஐம்புன்களையும் அடக்க வேண்டும். தியானம் செய் என்றார். அதோடு
மனம் வசப்படும்வரை தொடர்ந்து தியானத்தில் ஈடுபடு என்றார்.

ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்

ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்

நம்ம ஆளும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிப் பயிற்சி
செய்து ஐம்புலன்களையும் அடக்கியே தீருவது என்று முடிவு செய்தான்.

நடந்ததா?

வாருங்கள் பார்ப்போம்
===========================================
அடுத்த நாள் அதிகாலையே பயிற்சியை ஆரம்பித்தான். அதற்கு அவன்
தேர்ந்தெடுத்த இடம் ஆற்றங்கரையருகே இருந்த அரசமர மேடை.

அதன் மீது அமர்ந்து முதலில் பார்வையைத் தன் வசப்படுத்தும் பயிற்சியை
மேற்கொண்டான்.

சுற்றுமுற்றும் எதையும் பார்க்காமல் எதிரில் இருந்த சுமைதாங்கிக்
கல்லையே பார்த்தவாறு, இறைவனின் திருநாமத்தைச் சொல்ல
ஆரம்பித்தான்.

'நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..
நமச்சிவாய.. நமச்சிவாய........'

மின்னல் வெட்டியது. அவனிருந்த மேடைக்கும், பார்த்துக்கொண்டிருந்த
சுமைதாங்கிக் கல்லிற்கும் இடையிலிருந்த பாதையில் 'நயன்தாரா
போன்ற அல்லது அன்ஷ்கா சர்மா போன்ற தோற்றத்தில் இருந்த இளம்
மங்கை ஒருத்தி கையில் குடத்துடன் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
வேறு ஒன்றுமில்லை ஆற்றில் தண்ணீர் முகர்ந்துவரப் போய்க் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்த அந்தக் கணமே 'நமச்சிவாய' நின்று விட்டது.

ஆசாமி யோசிக்க ஆரம்பித்தான்.

"இவள் நமது பக்கத்து வீட்டுப் பெண்ணாயிற்றே! இவ்வளவு அதிகாலையில்
இவள் எதற்காக இங்கே வருகிறாள்? அதுவும் துணைக்கு ஒருவரும் இன்றி
வருகிறாளே. காலம் கெட்டுக் கிடக்கிறது. எவனாவது காமுகன் இவளை
மடக்கினால் என்ன ஆவது? வீட்டில் சொல்லி அவளை எச்சரிக்க வேண்டும்"

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது,ஞானி சொன்னது நினைவிற்கு
வந்தது. பயிற்சியில் தன்முனைப்போடு நமச்சிவாய சொல்வது தடைப்பட்டால்,
எழுந்து விட வேண்டும். அன்றைய பயிற்சி தோல்வி என்று கொள்ள வேண்டும்

அவனும் எழுந்து விட்டான். இன்றையப் பயிற்சி இந்தப் பெண்ணைப்
பார்த்ததால் கெட்டுவிட்டது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வீட்டிற்குத்
திரும்பிவிட்டான்
====================================================
அடுத்த நாள் காலை. அதே மேடை.

வந்து அமர்ந்த நம்ம ஆள், இன்று எச்சரிக்கையோடு வந்திருந்தான்.
முதல் நாள் பயிற்சியைக் கண்கள் கெடுத்ததால், கண்களை ஒரு சிறு
துணியால் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.

நமச்சிவாய சொல்ல ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

மனதை மயக்கும் விதமாகக் கொலுசின் ஓசை கேட்டது. சீராக இருந்தது.

அவன் மனம் பரபரப்படைந்து நினைக்க ஆரம்பித்தது. நேற்று வந்த
அதே பெண்தான். அதே கொலுசின் ஓசைதான். "நேற்று மாலை என்
மனைவி மூலமாக எச்சரிக்கச் சொன்னேனே. சொல்லியும் வந்திருக்கிறாளே
ஒருவேளை என் மனைவி அவர்கள் வீட்டில் சொல்லவில்லையோ என்னவோ..?"

நமச்சிவாய நின்று விட்டது.

சற்று நேரம் கழித்துத்தான் தன் தவறை உணர்ந்தான்.

எழுந்து விட்டான்.

இரண்டாம் நாள் பயிற்சியைக் காது கெடுத்தது
============================================
மூன்றாம் நாள் அதிகாலை. அதே மேடை.

வந்து அமர்ந்த நம்ம ஆள், இன்று இரண்டு மடங்கு எச்சரிக்கையோடு
வந்திருந்தான். முதல் இரண்டு நாள் பயிற்சிகளைக் கண்ணும், காதும்
கெடுத்ததால், கண்களை ஒரு சிறு துணியால் கட்டிக் கொண்டும்
காதில் பஞ்சை வைத்து நன்றாக அடைத்துக் கொண்டும் அமர்ந்தான்.

நமச்சிவாய சொல்ல ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

கும்மென்ற மல்லிகைப்பூ வாசம், ஆளைப் புரட்டிப்போட்டது.

இவன் நிணைக்க ஆரம்பித்தான். இவ்வளவு வாசத்துடன் மல்லிகைப்பூ
என்றால், யாரோ இளம் பெண்தான் சென்று கொண்டிருக்கிறாள். அவளாகவும்
இருக்கலாம் அல்லது வேறு ஒருத்தியாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும்
இவ்வளவு அதிகாலையில் தனியாக வரலாமா?

அன்றையப் பயிற்சியும் கெட்டது. எழுந்துவிட்டான்.
============================================
அடுத்த நாள் கோபத்துடன் வந்தான்.

முதல் மூன்று நாள் பயிற்சிகளை முறையே கண், காது, மூக்கு ஆகிய
மூன்றும் கெடுத்துவிட்டன. ஆகவே அந்த மூன்றின் உபத்திரவமும்
இன்று இருக்கக்கூடாது என்று தலை முதல் காலவரை போர்த்திக்
கொண்டு அமரும்படியான அங்கி ஒன்றுடன் இன்று வந்திருந்தான்.

பயிற்சியை ஆரம்பித்தான்.

'நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..
நமச்சிவாய.. நமச்சிவாய........'

பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும். மனம் நினைத்தது. இன்று அங்கியை
அணிந்திருப்பதால், நமக்கு ஒன்றும் தெரியவில்லை. இருந்தாலும் ஆற்றுக்கு
தனியாகப் பெண்கள் வந்து போவது நிறுத்தப்பட வேண்டும். பஞ்சாயத்து
ஒன்றியத்தில் சொல்லி, ஊருக்குள்ளேயே தண்ணீர் படித்துக் கொள்வதற்கான
ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

நமச்சிவாய நின்று விட்டது. பதைபதைத்து எழுந்துவிட்டான்.

பாடம் சொல்லிக் கொடுத்த ஞானியைத் தேடி ஓடினான். நடந்ததைச் சொல்லி
அழுதான். ஒருமுனைப் படுத்துவது சிரமமாக இருக்கிறது என்றான்.

ஞானி சொன்னார். "முதலில் மனதைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
அதன் மூலம்தான் ஐம்புன்களையும் அடக்க வேண்டும். கட்டுப்பட்ட
மனதிற்குத்தான் அவைகள் கட்டுப்படும். ஐம்புலன்களையும் அடக்கினால்
மட்டுமே மனம் தொடர்ந்து கட்டுப்படும். அவைகள் ஒன்றிற்கொன்று
தொடர்புடையவை. all are inter linked. வேட்டைக்குச் செல்கிறவன்
வேட்டைக்கான மிருகத்தையும் தேட வேண்டும். அதோடு தன்னை
எந்த மிருகமும் வேட்டையாடிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளவும்
வேண்டும். அந்த நிலைப்பாடுதான் இதற்கும். அங்கே முழு உணர்வு
எப்படித்தேவையோ, அப்படியொரு உணர்வு இருந்தால் மட்டுமே
மனம் உனக்குக் கட்டுப்படும். ஆகவே ஒரு வேலை செய்யும்போது
அதில் முழு ஈடுபாட்டுடன் இறங்கு. தன்முனைப்பு தானாக வரும்!"

+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

43 comments:

senthil said...

அற்புதம் ஆசானே,

சிந்திக்க தூண்டும் சிந்தைனைகள்.

இன்று நான் தான் வகுப்பிற்கு முதல் ஆளாக வந்துள்ளேன்.

அன்புடன்,

செந்தில் முருகன். வே.

ananth said...

நல்ல உதாரணத்துடன் கூடிய கதை. நன்று. எதிலும்/எந்த காரியத்தையும் மனம் ஒன்றி செய்தால்தான் அதில் வெற்றி பெற முடியும். முற்றிலும் உண்மை.

krish said...

Good story and moral.

saravana karthikeyan said...

ஐயா,

அருமையான கதை. நன்றி.

அன்புடன்

சரவண கார்த்திகேயன்

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nice Story (Moral).. Manadhai Kattupadhivittal Ellam Vasapadum...
Ella Seyalkalum Vetri Perum...Idhuve vetriyin Mandhiram)..

Arumayana Kadhai...Asathalana Eluthu nadai...Thanks Sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

dhanan said...

வணக்கம் ஐயா,கதை அருமை. இது மன ஒருமைப்பாட்டிற்க்கான கதையாதலால், இது ஐந்தாம் இடத்திற்க்கான முன்னோட்டமா?
அசத்துங்கள்.

அன்புடன்,
மதுரை தனா

Emmanuel Arul Gobinath said...

ஆகா இந்த காலத்தில் மனதை ஒருமுக படுத்துதல் கஷ்டமான வேலை ஜயா. இன்றைய காலத்தில் ஒரு நல்ல குருவை கண்டு பிடிப்பது கடினம் :(. இணையத்தில் தான் என் வாழ்க்கையின் அதி கூடிய நேரம் பங்கிடப் படுகின்றது.

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

RAJA said...

Sir,
Very good.Please explain the way and means to control mind

thirunarayanan said...

சிந்திக்க வைக்கும் கதை அல்லது பாடம்.

நன்றி அய்யா

Prabhu said...

Good Moral ayya

sundar said...

வணக்கம் ஐயா

நாம் எப்போதும் செய்கின்ற செயலை முழு கவனத்தோடு செய்யவேண்டும்
என்று புரிகிறது,நன்றி

sundar said...

"ARISE AWAKE,NEVER STOP TILL YOUR GOAL IS REACHED"

என்று விவேகானந்தர் கூறுகிறார்.நம் வாழ்கயில் ஆசைகள் பல இருக்கும்
ஆனால் லட்சியம் என்பது ஒன்றுதான் இருக்கும் அதைத்தான் அவர் கூறுகிறார்.
நாம் லட்சியம் என்று ஒன்றை வைத்து அது நிறைவேறும் வரை அதற்காக
போராட வேண்டும்.

ஒரு சிறிய கதை கூற விரும்பிக்கிறேன்

திரோணாச்சாரியரிடம் பாண்டவர்களும் , கௌரவர்களும் குருகுல கல்வி
பயின்ற போது அனைவருக்கும் பரிசை வைக்கிறார் திறொனர்.ஒரு மரத்திலே
பறவையை காட்டி அதை வில்லால் குறிவைக்குமாறு அனைத்து மாணவர்களையும்
கேட்கிறார்.யூதிஷ்டாரிடம் அருகில் வந்து உன் கண்களுக்கு இப்போது எனவெலாம்
தெரிகிறது என கேட்கிறார் .அதற்கு அவர் பறவை , இழை , மரம் என்கிறார்
அனைவரும் இதே பதிலை கூறுகிறார்கள் .அர்ஜுநர்மட்டும் எனக்கு அந்த பறவையின்
கண் மட்டும்தான் தெரிகிறது என்கிறார். அதனால் தான் அர்ஜுனர் வில் வித்தையில்
சிறந்தவறாக வர முடிந்தது.திறமை என்பது கவனத்தோடு செய்யும் போது வளர்வது.

Emmanuel Arul Gobinath said...

உங்களுடைய இந்த கதையால் மீண்டும் மனசே ரிலக் கஷ் பதிவுகளை தேடினேன் mp3 கிடைத்தது ஞாபக படுத்தியதற்கு நன்றிகள் ஐயா :)

VA P RAJAGOPAL said...

Good story...Thanks sir.
With your permission, I share the details of vakkiya panchanga software available in net.I think its useful to others...
Address: www.itbix.com

Sridhar said...
This comment has been removed by the author.
Sridhar said...

அய்யா,

சுய கட்டுப்பாடு பற்றிய சிறிய கதை அருமை. எனக்கு ஒன்று தோன்றுகிறது.

உலகை ஆள வேண்டும் என்றால் முதலில் உன்னை ஆள வேண்டும் - உலகை அடக்க வேண்டும் என்றால் முதலில் உன்னை அடக்க வேண்டும். யாரோ ஒரே ஞானி சொன்னதை நினைவு கூறுகிறேன். எங்கோ எப்போதோ படித்தது.

நன்றி

ஸ்ரீதர்

BAlu said...

sir, i have a doubt visaka star 3 pathams) belong to thula rashi but it is guru star who is the arch enemy of sukra ,thulas owner sukran ? it is confusing .

SP.VR. SUBBIAH said...

////Blogger senthil said...
அற்புதம் ஆசானே,
சிந்திக்க தூண்டும் சிந்தைனைகள்.
இன்று நான் தான் வகுப்பிற்கு முதல் ஆளாக வந்துள்ளேன்.
அன்புடன்,
செந்தில் முருகன். வே./////

நன்றி செந்தில் முருகன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger ananth said...
நல்ல உதாரணத்துடன் கூடிய கதை. நன்று. எதிலும்/எந்த காரியத்தையும் மனம் ஒன்றி செய்தால்தான் அதில் வெற்றி பெற முடியும். முற்றிலும் உண்மை./////

நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

////Blogger krish said...
Good story and moral.////

நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

////Blogger saravana karthikeyan said...
ஐயா,
அருமையான கதை. நன்றி.
அன்புடன்
சரவண கார்த்திகேயன்//////

பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Nice Story (Moral).. Manadhai Kattupadhivittal Ellam Vasapadum...
Ella Seyalkalum Vetri Perum...Idhuve vetriyin Mandhiram)..
Arumayana Kadhai...Asathalana Eluthu nadai...Thanks Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

வழக்கம்போல மனம்திறந்து பாராட்டியுள்ளீர்கள். நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger dhanan said...
வணக்கம் ஐயா,கதை அருமை. இது மன ஒருமைப்பாட்டிற்கான கதையாதலால், இது ஐந்தாம் இடத்திற்க்கான முன்னோட்டமா?
அசத்துங்கள்.
அன்புடன்,
மதுரை தனா/////

எத்ற்கான முன்னோட்டமும் இல்லை. ஒரு நீதிக்கதை. அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Emmanuel Arul Gobinath said...
ஆகா இந்த காலத்தில் மனதை ஒருமுக படுத்துதல் கஷ்டமான வேலை ஜயா. இன்றைய காலத்தில் ஒரு நல்ல குருவை கண்டு பிடிப்பது கடினம் :(. இணையத்தில் தான் என் வாழ்க்கையின் அதி கூடிய நேரம் பங்கிடப் படுகின்றது.////

நன்றி இமானுவேல்!

SP.VR. SUBBIAH said...

Blogger தமிழினி said...
உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்
பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit//////

தகவலுக்கு நன்றி. பதிவிடுகிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger RAJA said...
Sir,
Very good.Please explain the way and means to control mind/////

முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையைச் செய்யும்போது, மனம் அதில் ஒன்றிவிடும்.

SP.VR. SUBBIAH said...

Blogger thirunarayanan said...
சிந்திக்க வைக்கும் கதை அல்லது பாடம்.
நன்றி அய்யா//////

கதையின் வழியாகப் பாடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////////Blogger Prabhu said...
Good Moral ayya///////

நன்றி பிரபு!

SP.VR. SUBBIAH said...

///////Blogger sundar said...
வணக்கம் ஐயா
நாம் எப்போதும் செய்கின்ற செயலை முழு கவனத்தோடு செய்யவேண்டும்
என்று புரிகிறது,நன்றி/////

நன்றி சுந்தர்!

SP.VR. SUBBIAH said...

Blogger sundar said...
"ARISE AWAKE,NEVER STOP TILL YOUR GOAL IS REACHED"
என்று விவேகானந்தர் கூறுகிறார்.நம் வாழ்கயில் ஆசைகள் பல இருக்கும்
ஆனால் லட்சியம் என்பது ஒன்றுதான் இருக்கும் அதைத்தான் அவர் கூறுகிறார்.
நாம் லட்சியம் என்று ஒன்றை வைத்து அது நிறைவேறும் வரை அதற்காக
போராட வேண்டும்.
ஒரு சிறிய கதை கூற விரும்பிக்கிறேன்
திரோணாச்சாரியரிடம் பாண்டவர்களும் , கௌரவர்களும் குருகுல கல்வி
பயின்ற போது அனைவருக்கும் பரிட்சை வைக்கிறார் திரோனர்.ஒரு மரத்திலே
பறவையை காட்டி அதை வில்லால் குறிவைக்குமாறு அனைத்து மாணவர்களையும்
கேட்கிறார்.யூதிஷ்டரிடம் அருகில் வந்து உன் கண்களுக்கு இப்போது என்னவெலாம்
தெரிகிறது என கேட்கிறார் .அதற்கு அவர் பறவை , இலை , மரம் என்கிறார்
அனைவரும் இதே பதிலை கூறுகிறார்கள் .அர்ஜுனர்மட்டும் எனக்கு அந்த பறவையின்
கண் மட்டும்தான் தெரிகிறது என்கிறார். அதனால் தான் அர்ஜுனர் வில் வித்தையில்
சிறந்தவராக வர முடிந்தது.திறமை என்பது கவனத்தோடு செய்யும் போது வளர்வது.//////

தகவலுக்கு நன்றி. இந்தக் கதை நான் படித்ததுதான்!

SP.VR. SUBBIAH said...

Blogger Emmanuel Arul Gobinath said...
உங்களுடைய இந்த கதையால் மீண்டும் மனசே ரிலாக்ஷ் பதிவுகளைத் தேடினேன் mp3 கிடைத்தது ஞாபக படுத்தியதற்கு நன்றிகள் ஐயா :)/////

அதன் சுட்டியைக் கொடுங்கள். அனைவரும் படித்து/கேட்டுப் பயன் பெறட்டும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger VA P RAJAGOPAL said...
Good story...Thanks sir. With your permission, I share the details of vakkiya panchanga software available in net.I think its useful to others...
Address: www.itbix.com////////

நமது வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்துள்ள மென்பொருளிலும் அந்த வசதி உள்ளது.
அதாவது திருக்கணிதம், வாக்கியம் இரண்டும் உள்ளது.

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
அய்யா,
சுய கட்டுப்பாடு பற்றிய சிறிய கதை அருமை. எனக்கு ஒன்று தோன்றுகிறது.
உலகை ஆள வேண்டும் என்றால் முதலில் உன்னை ஆள வேண்டும் - உலகை அடக்க வேண்டும் என்றால் முதலில் உன்னை அடக்க வேண்டும். யாரோ ஒரே ஞானி சொன்னதை நினைவு கூறுகிறேன். எங்கோ எப்போதோ படித்தது.
நன்றி
ஸ்ரீதர்/////

நன்றி ஸ்ரீதர்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger BAlu said...
sir, i have a doubt visaka star 3 pathams) belong to thula rashi but it is guru star who is the arch enemy of sukra ,thulas owner sukran ? it is confusing//////

வானத்தின் அந்தப் பகுதிக்கு உரியவர் சுக்கிரன். அதனால் வேறு கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கக்கூடாதா என்ன?
மக நட்சத்திரத்தின் அதிபதி கேது. அந்த நட்சத்திரம் சூரியனின் ராசியான சிம்மத்தில் உள்ளது.
அப்படி எவ்வளவோ வேறுபாடுகளைக் கொண்டதுதான் ஜோதிடம் குழப்பம் வேண்டாம்!

Slakshmanan said...

அருமையான கதை இன்றய காலத்திற்கேற்ப நம்மை நாமே சோதிக்க வைக்கும் ஒரு கதை. ஒரு எண்ணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சீனதேசத்து கதை,

முன்பு ஒரு காலத்தில் சீன தேசத்தில் ஒரு குரு இருந்தார் அவருக்கு ஒரு சிஷ்யன் மற்றும் ஒரு சிஷயை இருந்தனர், ஒரு சமயம் அவர்கள் மூவரும் ஒரு ஆற்றங்கரயை கடக்க வேண்டியிருநதது, அப்போது சிஷயை தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறினாள், அதனால் குரு அவளை தோளில் சுமந்து நீந்திச் சென்றார், கரையை அடைந்தவுடன் குருவிற்கு ஒரே கலைப்பு,

உடனே சிஷயையிடம் உனவிற்க்கு ஏற்பாடு செய்யச்சொலலிவிட்டு சிஷ்யனிடம் கால் அமுக்க சொன்னாராம், சிஷ்யன் ஏதோ எண்னத்தில் கால் அமுக்க குரு அவனை பார்த்து கேட்டாரம் என்ன யோசனை செய்கிறாய் என்று அதற்க்கு அந்த சிஷ்யன் அவரிடம் கேட்டான் , குருவே சன்யாசிகள் பெண்களை தொடக்கூடாதே , ஆனால் நீங்கள் அந்த பெண்னை தொட்டு தூக்கி நீந்தி வந்தீர்களே, இது தவறல்லவா?

அதற்கு குரு அவனிடம் கூற்யது , அட மடையா நான் தான் அவளை கரையிலேய இறக்கி விட்டேனே , நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருகிறாய் என்று. மேலும் அவர் சொன்னாரம், இனி மேல் தேவை இல்லாதனவற்றை மனதில் சுமக்காதே என்று.

இதில் இருந்து ஒனறு அறிய வேண்டும் தேவையிலாதனவற்றை மனதில் சுமந்தால் எண்ணத்தை ஒருமுனை படுதத முடியாது.

எண்ணத்தை ஒருமுனை படுதத சிறந்த பயிற்சி மெள்ன விரதம்
ஏன் என்றால் மெளனம் மனோவலிமையை அதிகப்படுத்தும் மனோவலிமை அதிகமானால் மனம் நமக்கு கட்டுப்படும்

mike said...

good evening master! somewhere i read that there will widespread occurances of strange diseases in virothi tamil year. is it true ?

also, are u hearing about the year 2012 and ending of the major cycle in mayan calender ?

பிரகாஷ் துரைசாமி said...

my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur, sir could u tell me my forecsat , i m planning to do stock trading business. could i suceed in big level in share business. thank u for your wonderfull service sir. and my mail id- pracash1982@gmail.com

Sameer N said...

ரொம்ப அருமை.
Moral of the story was too good.
-சமீர்

SP.VR. SUBBIAH said...

/////////Blogger Slakshmanan said...
அருமையான கதை இன்றய காலத்திற்கேற்ப நம்மை நாமே சோதிக்க வைக்கும் ஒரு கதை. ஒரு எண்ணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு சீனதேசத்து கதை,
முன்பு ஒரு காலத்தில் சீன தேசத்தில் ஒரு குரு இருந்தார் அவருக்கு ஒரு சிஷ்யன் மற்றும் ஒரு சிஷயை இருந்தனர், ஒரு சமயம் அவர்கள் மூவரும் ஒரு ஆற்றங்கரயை கடக்க வேண்டியிருநதது, அப்போது சிஷயை தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறினாள், அதனால் குரு அவளை தோளில் சுமந்து நீந்திச் சென்றார், கரையை அடைந்தவுடன் குருவிற்கு ஒரே கலைப்பு
உடனே சிஷயையிடம் உனவிற்க்கு ஏற்பாடு செய்யச்சொலலிவிட்டு சிஷ்யனிடம் கால் அமுக்க சொன்னாராம், சிஷ்யன் ஏதோ எண்னத்தில் கால் அமுக்க குரு அவனை பார்த்து கேட்டாரம் என்ன யோசனை செய்கிறாய் என்று அதற்க்கு அந்த சிஷ்யன் அவரிடம் கேட்டான் , குருவே சன்யாசிகள் பெண்களை தொடக்கூடாதே , ஆனால் நீங்கள் அந்த பெண்னை தொட்டு தூக்கி நீந்தி வந்தீர்களே, இது தவறல்லவா?
அதற்கு குரு அவனிடம் கூற்யது , அட மடையா நான் தான் அவளை கரையிலேய இறக்கி விட்டேனே , நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருகிறாய் என்று. மேலும் அவர் சொன்னாரம், இனி மேல் தேவை இல்லாதனவற்றை மனதில் சுமக்காதே என்று.
இதில் இருந்து ஒனறு அறிய வேண்டும் தேவையிலாதனவற்றை மனதில் சுமந்தால் எண்ணத்தை ஒருமுனை படுதத முடியாது.
எண்ணத்தை ஒருமுனை படுதத சிறந்த பயிற்சி மெள்ன விரதம்
ஏன் என்றால் மெளனம் மனோவலிமையை அதிகப்படுத்தும் மனோவலிமை அதிகமானால் மனம் நமக்கு கட்டுப்படும்////////////////

நன்றி. இந்தக் கதையை நானும் அறிவேன்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger mike said...
good evening master! somewhere i read that there will widespread occurances of strange diseases in virothi tamil year. is it true ?
also, are u hearing about the year 2012 and ending of the major cycle in mayan calender ?//////

கேள்விப்பட்டிருக்கிறேன்.12.12.2012ல் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்கிறது. பார்ப்போம்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger பிரகாஷ் துரைசாமி said..
my name is prakaash, my date of birth is 12/07/1982 my birth time is 00.45am (12.45am) birth place karur, sir could u tell me my forecsat , i m planning to do stock trading business. could i suceed in big level in share business. thank u for your wonderfull service sir. and my mail id- pracash1982@gmail.com//////

பங்கு வணிகம் இப்போது வேண்டாம். யாராக இருந்தாலும் அடி விழுகும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sameer N said...
ரொம்ப அருமை.
Moral of the story was too good.
-சமீர்//////

நன்றி சமீர்!