மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.11.08

கால்தடங்கள் அற்ற பூமியில் காற்றாக நுழைவது எப்படி?


"சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி பேரின்பம் நாம் அடைவோம்"
என்று நாயகன் உருகிப் பாடுகிறான்:

உடனே நாயகி மனம் கிறங்கிப் பாடுகிறாள்

"கால்தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்"

விட்டானா நாயகன்? தொடர்கிறான்:

"சித்திரை மாதத்தை நான்நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்"

'மாதத்தை எப்படி நனைக்க முடியும்?' என்று கிறுக்குத்தனமாகக்
கேட்காமல் - அதாவது லாஜிக் எல்லாம் பார்க்காமல், பாடலை
மட்டும் கேட்போம்.

அவன் சொற்களில் மயங்கி விட்ட நாயகி தேனாகக் குழைகிறாள்

"மார்கழி மாதத்தை நான்எரித்து முடுபனி காலத்தில் அனல்கொடுப்பேன்"

இவளுக்கு அவனே பரவாயில்லை. அவன் மாதத்தை நனைத்துத்
தருவதாக மட்டுமே பிதற்றினான். இவளோ மாதத்தை எரித்துத்
தருவேன் என்கிறாள். விட்டால் ஒன்பது கிரகங்களையும் இட்லிச்
சட்டியில் வைத்து அவித்துத் தருவேன் என்பாள் போலிருக்கிறது.

அவன் க்ளீன் போல்டாகி விட்டான். தொடர்ந்து சொல்கிறான்

"அடியே, சகியே சுகியே...............!"

சகியே, சுகியே என்று தரையில் விழுந்து புரள ஆரம்பித்து
விட்டான் அவன்.

நாம் ஏன் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்?
வாருங்கள் போவோம்; பாடத்தைப் புரட்டுவோம்!
------------------------------------------------------------------------------------------
இந்தப்பாடல், நூறுக்கும் மேற்பட்ட பின்னணிக் கலைஞர்கள்
இசையமைத்து ஒலிக்கும்போது அற்புதமாக இருக்கும். கேட்டுப்
பாருங்கள்.

இந்தக் கணம் அதை மறந்து விட்டுப் பாடத்தைப் பாருங்கள்.

ஒலிநாடா அல்லது குறுந்தகடு எதுவும் இல்லாமல், அதைவிடப் பத்து
மடங்கு இசையுடன் அந்தப் பாடல் ஒரு இளம் பெண்ணின் மனதிலோ
அல்லது இளைஞனின் மனதிலோ ஒலித்துக் கொண்டிருந்தால், அதை
அவர்கள் உணவு, உறக்கம் ஆகியவைகளின்றி, தொடர்ந்து கண்களை
மூடிக் கேட்டுக் கொண்டிருந்தால் - தலையசைத்துக் கொண்டிருந்தால்,
அவர்கள் சுக்கிரனின் பிடியில் அதாவது காதலின் பிடியில்
சிக்கியிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

சுக்கிரனின் ஆசியின்றி காதல் எவரையும் கட்டித் தழுவாது.
அதேபோல சுக்கிரனின் ஆசியின்றி எவருடைய மண வாழ்வும்
மகிழ்ச்சியுடையதாக இருக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"ச்சே என்ன அற்புதமாக எழுதியிருக்கான்டா. பின்னிட்டான்டா!
என்று ஒரு கவிதையையோ அல்லது கதையையோ நீங்கள் சிலாகித்துப்
பேசுவது, அதை எழுதியவனுக்குத் தெரியாது.

அதே போல "Fantastic!" என்று ஒரு சிற்பத்தையோ அல்லது ஒரு
ஓவியத்தையோ அல்லது ஒரு நல்ல திரைப்படத்தையோ பார்த்துவிட்டு
நீங்கள் முகம் மலர்ந்து சொல்வது, அதைப் படைத்தவனுக்குத் தெரியாது

ஆனால் ஒன்றை மட்டும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுக்கிரன் ஒருவனுடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அன்றி
ஒருவன் இலக்கியம், மற்றும் கலைத்துறைகளில் பிரகாசிக்க முடியாது.

சுக்கிரன் மெல்லிய உணர்வுகளுக்கு அதிபதி. மெல்லிய உணர்வுகள்
இன்றி ஒருவன் கவிஞனாகவோ அல்லது எழுத்தாளனாகவோ ஆவது
எப்படி சாத்தியம்?

அதுபோல அசத்தலான கற்பனை வளம், உணர்ச்சிகளின் தாக்கம்
இன்றி ஒருவன் எப்படிக் கலைஞனாக முடியும்?

நடிப்பு, பாட்டு, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கவிதை, கதை
என்று உள்ள அத்தனை கலைகளுக்கும் அதிபதி சுக்கிரன்தான்

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் அவைகள் வரும்
இல்லையென்றால் வராது!

ஆனால் அந்தக் கலைகளை வைத்துக் காசு பண்ணுவதற்கு மற்ற
கிரகங்களின் உதவி தேவை. அங்கேதான் மற்ற கிரகங்கள் சுக்கிரனுடன்
கைகோர்த்து ஜாதகனுக்குப், பணம், புகழ் எல்லாவற்றையும் தேடிக்கொடுக்கும்
இல்லை என்றால் ஜாதகன் அவனளவிற்குள் குடத்தில் வைத்த விளக்குப்
போல கலைஞனாக இருப்பான். அவன் கலைஞன் என்று தெரியாமலேயே
போய்விடும்!

அதுதான் சில கலைஞர்களுடைய வாழ்வில் சோகமானது.

சினிமாத்துறைக்குச் சென்று பலர் பிரகாசிக்காமல் போய்விடுவதற்கு
அதுதான் காரணம். சினிமா என்றல்ல பலதுறைகளிலும் சிலர்
பிரகாசிக்காமல் போய் விடுவதற்கும் அதுதான் காரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரனுக்கான பொதுப் பலன்கள்:

1. ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் (அதாவது சனி, ராகு, மற்றும்
கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்தால் போதும்
ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

2. அதே போல செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அல்லது பார்வை
இல்லாமல் இருந்தாலும் ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி
நிறைந்ததாக இருக்கும்.

3. In short, if Venus (Sukkiran) is free from any affliction by association
or aspect, the native of the horoscope will be blessed with a happy
and comfortable married life!

4. சுக்கிரன், செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வையின்றியிருந்தால்
அதுவும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் ஜாதகனுக்கு
இளம் வயதில் அல்லது உரிய வயதில் திருமணமாகிவிடும்.
பெண்களுக்கும் அதுவேதான் விதி

5. அதேபோல ஜாதகத்தில் சுக்கிரன் எவ்வளவு வலுவாக இருந்தாலும்
இரண்டாம் வீடு நன்றாக அமையவில்லை என்றால் - அதாவது குடும்ப
ஸ்தானம் நன்றாக அமையவில்லை என்றால் பல தடைகளைத் தாண்டித்தான்
அந்த ஜாதகன் அல்லது ஜாதகி திருமணம் செய்துகொள்ள நேரிடும்

6. எனக்குத் தெரிந்து ஒரு பெரிய அரசியல்வாதிக்கு இரண்டாம் வீட்டில்
மாந்தி. அவருக்கு இன்றுவரை திருமணமாகவில்லை. குடும்ப வாழ்க்கை
அமையவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது அல்லது கெடுத்துவிட்டது.

வேண்டுமென்றே பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக்
கொள்ளுங்கள். அவருடைய ஜாதகம் என்னுடைய முன் பதிவில் உள்ளது.
கண்டுபிடித்தால், உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பின்னூட்டத்தில்
வெளிப்படுத்த வேண்டாம். மீறி வெளிப்படுத்தினால் அதை Delete செய்து
விடுவேன் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறேன். முடிந்தவரை உயிரோடு
இருக்கும் தலைவர்களைப் பற்றி எழுதுவதை நான் விரும்புவதில்லை.
அவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே வந்து தொல்லை கொடுப்பார்கள்

7. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் வீட்டுக்காரன் (அதாவது அந்த இடத்தின்
அதிபதி) 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன், கேந்திர அல்லது
திரிகோண இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகனுக்கு, சொத்து,
சுகம், மகிழ்ச்சி எல்லாம் தேடி வரும்.

8. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் அதிபதி, அந்த இடத்தில் இருந்து
அதாவது அவனுடைய வீட்டில் இருந்து ஆறாம் இடம் அல்லது
எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கும் அவனுடைய
மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் உண்டு

9. சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால். அது அவருக்கு மிகவும்
உகந்த இடம். ஜாதகனுக்கு, மகிழ்ச்சியையும், சுகங்களையும் அள்ளிக்
கொடுப்பார் அல்லது வாரி வழங்குவார். ஜாதகனுக்கு அழகிய
பெண்களுடன் நட்புக் கிடைக்கும். சிலருக்கு அழகிய பெண்களின்
சேர்க்கை கிடைக்கும் (நட்பிற்கும் சேர்க்கைக்கும் வித்தியாசம்
தெரியுமல்லவா?) ஆசைகள் பெருமளவில் நிறைவேறும்.
வீடு, வாகனம், பணியாள் என்று எல்லாம் கிடைக்கும்.
அதோடு சிலருக்குப் பெண் சம்பந்தப்பட்ட நோய்களும்
கிடைக்கும்:-)))))

10. துலாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், அரசாங்க ஆதரவு,
கீர்த்தி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சிலர் காம வேட்கை
மிகுந்தவர்களாக இருப்பார்கள் (சுக்கிரனின் சொந்த வீடல்லவா?
'அது' இல்லாமல் இருக்குமா?)

11. மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அவன் அங்கே உச்சம்.
பணம் வரும். சிலருக்கு வந்த பணம் களியாட்டங்களில்
கரைந்து போகவும் செய்யும். அல்லது வேறு விதத்தில் நஷ்ட
மடைவார்கள்.

12. கன்னியில் சுக்கிரன் நீசம். இங்கே சுக்கிரன் இருந்தால் ஜாதகனின்
வாழ்க்கையில் ஏமாற்றங்களை அதிக அள்வில் சந்திக்க நேரிடும்
குடும்பத்தில் துயரம் உண்டாகும். சிலர் ஒழுக்கமில்லாத வாழ்க்கை
வாழ்வார்கள்.

இதே அமைப்பை சுப கிரகங்கள் பார்த்தால் மேற்கூறிய தீய பலன்கள்
இல்லாமல் போய்விடும். அல்லது வெகுவாகக் குறைந்துவிடும்.

===================================================
நான் ஜோதிடம் படித்தது எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களின்
மூலம். அதனால்தான் என்னால் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடிந்தது.
அதற்காக நான் தமிழைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்வதாக யாரும்
நினைக்க வேண்டாம். தமிழ் செம்மொழி! செம்மையான மொழி!

அப்போது கிடைத்த தமிழ் ஜோதிட நூல்கள் எல்லாம் பாடல் வடிவில்
இருந்ததால்தான் நான் தமிழில் படிக்க இயலாமல் போய்விட்டது.

அவற்றிற்கான பொழிப்புரை அல்லது பதவுரையைத் தேடிப்படித்தால்
தாவு தீர்ந்துவிடும். அப்படியே நான் படித்துக் கொண்டிருந்திருந்தால்
எப்போது அதை முடித்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
பதிவு எழுதாமல் இன்னும் படித்துக் கொண்டிருக்க நேர்ந்திருக்கலாம்
அல்லது பாதியிலேயே ஜோதிடத்தைக் கை கழுவியிருக்கலாம்.

சந்தேகம் இருந்தால் "குமாரசுவாமியம்" என்னும் ஜோதிட நூலை
வாங்கி ஒரு பக்கத்தையாவது முழுமையாகப் படித்துப் பாருங்கள்
அப்போது உண்மை தெரியும்
__________________________________________________________
சுக்கிரன் ஜாதகத்தில் பன்னிரெண்டு வீடுகளில் இருக்கும் பலன்கள்

இதை ஆங்கிலத்தில் கொடுப்பதற்குக் காரணம். எளிய ஆங்கிலம்
அனைவருக்கும் புரியும். இரண்டாவதாக சில சொற்களைத் தமிழில்
எழுதக் கூச்சமாக இருக்கும். ஆங்கிலத்தில் தடாலடியாக எழுதி
விடலாம். பொருளும் சிதையாது.

1. Venus in the Ascendant

Venus in the Ascendant makes one handsome,blessed with good eyes,
happy, with good longevity, attractive to the opposite sex and with
good children.

2. Venus in the Second House

In the second Venus makes one a poet , with good education and
wealth, with knowledge of music & with gift of the gab.In the
horoscopes of Tennyson, Byron, Omar Khayam, Tagore & Aurobindo
Venus in the second was responsible for their fame as poets.

3. Venus in the Third House

Venus in the 3rd makes one devoid of happiness from spouse and
subject to the influence of the opposite sex. Will have difficulty in
controlling anger. Will be miserly

4. Venus in the Fourth House

Venus tenancy of the fourth makes one wealthy, with a lovely well
sculptured house and conveyances. Will be famous and will have
a lot of admirers.

5. Venus in the Fifth House

Will be a lord, very intelligent with a lot of wealth and relatives.
Will be clever and will be equal to a minister. Will be revered by
many. Intelligence of a higher order will be exhibited.

6. Venus in the Sixth House

Venus in the sixth makes you suffer disgrace at the hands of
women & you become the destroyer of your enemies. Will be
subject to diseases. Will be afflicted by defeats and scandals.

7. Venus in the Seventh House

Will be a lover of the opposite sex. Will have beauty, brains and
fortune. If male, there will be problems in marital life .

8. Venus in the Eighth House

This benign position of Venus makes one wealthy with good
longevity. Will be regal in bearing and respected by many.
Benefics in the house of longevity increases longevity.

9. Venus in the Ninth House

Venusian of the Ninth makes one interested in the psychic arts,
wealthy, fortune via father and with good partner and children.
Will have favour from the Government.

10. Venus in the Tenth House

This benign position of Venus makes one very intelligent, famous
and will be a doer of altruistic deeds. Will excel in textile technology.
Will have wealth from textile trade. This dominance of Venus on
the Meridien is good for business dealing with clothes.

11. Venus in the Eleventh House

Will love the opposite sex , will have subordinates and will have
wealth of no mean order. This is a powerful regal yoga, as Venus
in the house of gains can confer gains of a high standard.

12.Venus in the Twelfth House

Will be wealthy and will be a traveler. Will enjoy all the pleasures
of life. Will be bereft of relatives. This powerful position of Venus
favours wealth & enjoyments of a high order.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுக்கிரனின் சொந்த வீடுகள்: ரிஷபம், துலாம்
சுக்கிரனின் உச்ச வீடு: மீனம்.
சுக்கிரனின் நீச வீடு: கன்னி
சுக்கிரனின் நட்பு வீடுகள்:மிதுனம், மகரம், கும்பம்
சுக்கிரனின் சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு
சுக்கிரனின் பகை வீடுகள்: கடகம், சிம்மம்

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரனுக்கு 100%
வலிமை இருக்கும்.

சுக்கிரனுடன் பதன் சேர்ந்திருந்தால் நிபுனா யோகம்
ஜாதகன் எதையும் எளிதில் கற்றுத் தேர்ந்துவிடுவான். செய்யும்
வேலையில் நிபுனனாக இருப்பான்.

சம வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த சுக்கிரனுக்குப் பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சுக்கிரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச்
சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
===================================================
சுக்கிரனின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் சுக்கிரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1 பரல் : துன்பங்களும், பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை

2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள்
நிறைந்த பயணங்கள்.

3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத
மனப்பான்மை கொண்ட வாழ்க்கை

4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை

5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும்
வாழ்க்கை

6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள்
கூடிய வாழ்க்கை

7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று
எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை

8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும்
நிறைந்த வாழ்க்கை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரனின் கோச்சாரப் பலன்கள்:
குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன் இருக்கும் ராசியை வைத்து:

1ல் இருக்கும் போது - சுகம்

2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம்

3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி

4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு

5ல் இருக்கும் போது - தனலாபம்

6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள்

7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண்
ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க!

8ல் இருக்கும் போது - வசதி, சுகம்

9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம்

10ல் இருக்கும் போது - கலகம், அவமானம்

11ல் இருக்கும் போது - தன லாபம்

12ல் இருக்கும் போது - தனலாபம்

சுக்கிரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

In short, Venus is significator of love and all the pleasures of worldly life.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரன் எப்போதும் நன்மைகளையே கொடுப்பார். சுக்கிரதிசை வந்தால்
வாழ்க்கையின் எல்லா உச்சிகளையும் தொட்டுவிடலாம் என்று சிலர்
நினைப்பதுண்டு. அதே போல சனீஷ்வரன் எப்போதும் கஷ்டங்களையே
கொடுப்பார். வாழ்க்கை சோதனையாக இருக்கும். சனி திசை வந்தால்
அவதிப்பட வேண்டும் என்றும் சிலர் நினத்துக் கொண்டிருப்பார்கள்
அதெல்லாம் உண்மையல்ல!

எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும்
தீமைகளையோ அளிக்காது.

ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள
மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும்
தீமையையும் வழங்கும்

There is no fixed rules for awarding benefits by planets. That is the
main hurdle for the leaner to learn astrology.

சுக்கிரனைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த பதிவில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்

அதுவரை பொறுத்திருங்கள்

இந்தப் பதிவில் உங்களுக்கான பகுதிகளை மட்டும் அல்லது வரிகளை
மட்டும் படித்து விட்டு வந்து, "சார், அடுத்தபாடம் எப்போது?" என்று
யாரும் கேட்க வேண்டாம். 'செய்வன திருந்தச் செய்' என்பது முதுமொழி.
ஆகவே அனைவரும் பாடத்தை முழுமையாகப் படியுங்கள்.

அதுதான் நீங்கள் எனக்குத் தரும் 'முதல் மரியாதை'

(கவனிக்கவும். இது படத்தின் பெயரல்ல! என் மனதில் இருந்து வரும்
சத்தியமான வார்த்தை.)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

53 comments:

  1. This Lesson about Venus is so elaborative (in a positive way) and absolutely awesome.

    My Query is if Venus (5 parals) in 9th house in Thulaam with Mercury, Mars and Sun. Where as Jupiter(R) is in Lagna with maandhi.

    will it be totally positive or mixed results?

    ReplyDelete
  2. ஐயா கவிஞ்ஞரே கலக்கிவிட்டீர்கள் , உங்களுக்கும் சுக்கிரன் 2ம் வீட்டிலா?

    இந்த 10 இல் சுக்கிரன் சுயநலமின்மை சரியாகவிருக்கின்றது.(எனக்கு ஹி ஹி)

    சுக்கிரன் வக்கிரம் பற்றியும் என்போன்ற வக்கிரப்பிரியர்களுக்காக எதாவது சொல்ல மாட்டீர்களா (இதுபற்றிப் பல வதந்திகள் உலாவுகின்றன).

    ReplyDelete
  3. ////sanjai said...
    This Lesson about Venus is so elaborative (in a positive way) and absolutely awesome.
    My Query is if Venus (5 parals) in 9th house in Thulaam with Mercury, Mars and Sun. Where as Jupiter(R) is in Lagna with maandhi.
    will it be totally positive or mixed results?/////

    துலாம் ஒன்பதாம் வீடு என்றால் உங்கள் லக்கினம் கும்பம். லக்கினத்தில் குரு இருப்பது (அது நட்பு வீடு) சிறப்பு. மாந்தி இருப்பது சிறப்பல்ல!

    ஒன்பதில் சுக்கிரனுடன் மற்றும் மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு உள்ளே நின்று பேட் செய்கிறார்கள் என்று பார்க்கவும். இங்கே கிரீஸென்று நான் சொல்வது கிரக இடைவெளிகளை? யார் யார் அஸ்தமனம் பெற்றுள்ளார்கள் என்று அதில் தெரியும்.

    "எப்படிப் பார்ப்பது அதை?" என்று உடனே கேட்காதீர்கள்

    உங்களைப் போன்று புதிதாக வருபவர்களுக்கு நான் சொல்வது இதுதான்:

    என்னுடைய முன் பாடங்களைப் படித்திராதவர்களுக்கு, இப்போது எழுதுவது பிடிபடாது. ஆகவே புதிதாக வருபவர்கள் அனைவரும் முன் பாடங்களை (அவைகள் மொத்தம் 141) முதலில் படித்துவிட்டு இப்போது எழுதும் பகுதிகளுக்கு வாருங்கள். இல்லையென்றால் அது ஒரு திரைப்படத்தை எட்டாவது ரீலில் இருந்து பார்ப்பதற்குச் சமம்.

    ReplyDelete
  4. /////தமிழன் said...
    ஐயா கவிஞரே கலக்கிவிட்டீர்கள் , உங்களுக்கும் சுக்கிரன் 2ம் வீட்டிலா?
    இந்த 10 இல் சுக்கிரன் சுயநலமின்மை சரியாகவிருக்கின்றது.(எனக்கு ஹி ஹி)
    சுக்கிரன் வக்கிரம் பற்றியும் என்போன்ற வக்கிரப்பிரியர்களுக்காக எதாவது
    சொல்ல மாட்டீர்களா (இதுபற்றிப் பல வதந்திகள் உலாவுகின்றன).//////

    பதிவின் துவக்கத்தில் வரும் கவிதை வரிகள் ஒரு திரைப்படப் பாடலில் வரும் வரிகள்
    படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.

    என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம்!
    அதோடு இரண்டாம் வீட்டின்மேல் நேரான
    பார்வையோடு!

    வக்கிரத்தின் பலனைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே சுவாமி!
    allotted benefits divide by two அதுதான் பலன்

    ReplyDelete
  5. //ஒன்பதில் சுக்கிரனுடன் மற்றும் மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு உள்ளே நின்று பேட் செய்கிறார்கள் என்று பார்க்கவும். இங்கே கிரீஸென்று நான் சொல்வது கிரக இடைவெளிகளை? யார் யார் அஸ்தமனம் பெற்றுள்ளார்கள் என்று அதில் தெரியும்.//

    Please find the below info,

    Planet Degrees

    Venus 203 Asthangam
    Mars 205 Asthangam
    Sun 207 Neecha Bangam
    Merc (R)216 Asthangam

    If i made any mistake pls forgive me.

    ReplyDelete
  6. தான் கற்றதை பிறர்க்கு சொல்லித் தருவது அனைவராலும் முடியாது !
    நீங்கள் சொல்லியும் தருகின்றீர்கள், சுவையாகவும் தருகின்றீர்கள். நன்றி.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  7. Dear Sir,

    Thanks for posting the next lesson so earlier....The explanation which you give is really amazing...Keep your good work sir.

    I salute your hard work as always!

    -Shankar

    ReplyDelete
  8. ஐயா,

    சுகம் தருவது சுக்ரனா...எனக்கு தனுசு வீட்டில் 25 பரல்களுடன் செவ்வாய்,புதன்,கேது உடன் சுக்ரன் உள்ளார். சுக்ரனால் எனக்கு சுகம் உண்டா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. ////sanjai said...
    //ஒன்பதில் சுக்கிரனுடன் மற்றும் மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு உள்ளே நின்று பேட் செய்கிறார்கள் என்று பார்க்கவும். இங்கே கிரீஸென்று நான் சொல்வது கிரக இடைவெளிகளை? யார் யார் அஸ்தமனம் பெற்றுள்ளார்கள் என்று அதில் தெரியும்.//
    Please find the below info,
    Planet Degrees
    Venus 203 Asthangam
    Mars 205 Asthangam
    Sun 207 Neecha Bangam
    Merc (R)216 Asthangam
    If i made any mistake pls forgive me./////

    சூரியன் இருக்கும் பாகைக்குப் பத்துப் பாகைகள் (சூரியனுக்கு மட்டும் 10 பாகைகள்) தள்ளித்தான் கிரகங்கள்
    ஜாதகத்தில் இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவைகள் அஸ்தமனமாகிவிட்டன என்று பொருள்

    சரி, அதற்குப் பலன்?
    பழைய பதிவுகளில் உள்ளன! படிக்கவும்!

    ReplyDelete
  10. ////Rajagopal said...
    தான் கற்றதை பிறர்க்கு சொல்லித் தருவது அனைவராலும் முடியாது !
    நீங்கள் சொல்லியும் தருகின்றீர்கள், சுவையாகவும் தருகின்றீர்கள். நன்றி.
    அன்புடன்
    இராசகோபால்/////

    சுவையாக இல்லாவிட்டால் நானே படிக்க மாட்டேன்!:-))))

    நான் படிக்கும்போது ஜோதிடத்தை சுவையாகச் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை. படித்த புத்தகங்களும் சுவையாக எழுதப்பட்டிருக்கவில்லை! கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் படித்தேன்

    ReplyDelete
  11. ////hotcat said...
    Dear Sir,
    Thanks for posting the next lesson so earlier....The explanation which you give is really amazing...Keep your good work sir.
    I salute your hard work as always!
    -Shankar////

    This is salute number 140! :-))))
    Thanks Shankar

    ReplyDelete
  12. //Blogger வேலன். said...
    ஐயா,
    சுகம் தருவது சுக்ரனா...எனக்கு தனுசு வீட்டில் 25 பரல்களுடன் செவ்வாய்,புதன்,கேது உடன் சுக்ரன் உள்ளார். சுக்ரனால் எனக்கு சுகம் உண்டா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    Details insufficient to say any answer to your question!

    ReplyDelete
  13. வணக்கம் ஆசானே!

    Venus in the Eighth house:
    Will be regal in bearing and respected by many.
    உண்மை உண்மை.... நீங்கள் எப்போழுதும் எங்கள் மரியாதைக்கு உரியவர்...(many என்பதற்கு பதிலாக everyone என்று போட்டு விடலாம்... ஏனெனில் நீங்கள் எல்லோராலும் மதிக்கப்படுபவர்!!!!)

    எனக்கு 10 ல் சுக்கிரன் குருவுடன் இணைந்து.... (பேசாம textile company ஆரம்பிச்சுடவா?.....)

    ReplyDelete
  14. Recently i became father. on 16th Nov @ 553AM , at chennai boy baby was born . the confusion started afterwards. all the computer horoscope say the star is thiruvadhirai - 1st padam, but the astrologer we refer says the star is mrigasirisham - 4th padam. i thought i will ask you and hope u will clear the confusion

    thanks
    Dhamodharan

    ReplyDelete
  15. ஐயா...பாடம் அருமை, நன்றி.

    இந்த பதிவுல சுக்கரனுக்கு யார் யார் பகை கிரகம்,யார் யார் நட்பு கிரகம்னு சொல்லவே இல்ல...குரு முளு சுபர் சுக்கிரன் முக்கால் சுபர்னு தகவல் சொல்லவே இல்ல...ஜாதகம் பலன் தெரிய இந்த தகவல் உதவியா இருக்கும் அதான் கேட்டேன்...

    பிழை இருந்தால் மன்னிக்கவும்.

    >>>7. Venus in the Seventh House

    Will be a lover of the opposite sex. Will have beauty, brains and
    fortune. If male, there will be problems in marital life .>>>

    கொஞ்சம் கொஞ்சம் ஏன்னா...பகையாளி குருடன்...

    ReplyDelete
  16. //////அணுயோகி said...
    வணக்கம் ஆசானே!
    Venus in the Eighth house:
    Will be regal in bearing and respected by many.
    உண்மை உண்மை.... நீங்கள் எப்போழுதும் எங்கள் மரியாதைக்கு உரியவர்...(many என்பதற்கு பதிலாக everyone என்று போட்டு விடலாம்... ஏனெனில் நீங்கள் எல்லோராலும் மதிக்கப்படுபவர்!!!!)//////

    உங்கள் மரியாதைக்கு உரியவர் என்பது வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம்.
    everyone என்பதெல்லாம் தவறானது!
    ******************************
    எனக்கு 10 ல் சுக்கிரன் குருவுடன் இணைந்து.... (பேசாம textile company ஆரம்பிச்சுடவா?.....)
    textile துறை இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறது. இப்போது வேண்டாம்!

    ReplyDelete
  17. /////மிஸ்டர் அரட்டை said...
    Recently i became father. on 16th Nov @ 553AM , at chennai boy baby was born . the confusion started afterwards. all the computer horoscope say the star is thiruvadhirai - 1st padam, but the astrologer we refer says the star is mrigasirisham - 4th padam. i thought i will ask you and hope u will clear the confusion
    thanks
    Dhamodharan///

    திருவாதிரை முதல் பாதம் சரியானது.
    திருக்கணிதப்படி அதுதான் நட்சத்திரம்

    ReplyDelete
  18. /////மதி said...
    ஐயா...பாடம் அருமை, நன்றி.
    இந்த பதிவுல சுக்கரனுக்கு யார் யார் பகை கிரகம்,யார் யார் நட்பு கிரகம்னு சொல்லவே இல்ல...குரு முளு சுபர் சுக்கிரன் முக்கால் சுபர்னு தகவல் சொல்லவே இல்ல...ஜாதகம் பலன் தெரிய இந்த தகவல் உதவியா இருக்கும் அதான் கேட்டேன்...
    பிழை இருந்தால் மன்னிக்கவும்.//////

    பதிவில் இப்படிக் கொடுத்திருக்கிறேனே பார்க்கவில்லையா?

    சுக்கிரனின் சொந்த வீடுகள்: ரிஷபம், துலாம்
    சுக்கிரனின் உச்ச வீடு: மீனம்.
    சுக்கிரனின் நீச வீடு: கன்னி
    சுக்கிரனின் நட்பு வீடுகள்:மிதுனம், மகரம், கும்பம்
    சுக்கிரனின் சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு
    சுக்கிரனின் பகை வீடுகள்: கடகம், சிம்மம்

    சுக்கிரனின் நட்புக் கிரகம் சனி, ராகு, கேது மற்றும் புதன்
    மற்றவர்களெல்லாம் பகைக்கிரகங்கள்
    இதைச் சொன்னவுடன். அடுத்த கேல்வி கேட்பீர்கள் - பகைவன் குருவின் வீட்டில் சுக்கிரன் எப்படி உச்சம் பெறுகிறார்?

    அதெல்லாம் முனிவர்கள் கணித்து வைத்துவிட்டுப்போனது - சிலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதுதான் மனதிற்கு நல்லது!:-))))

    ReplyDelete
  19. ///textile துறை இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறது.///


    same feeling.

    ReplyDelete
  20. //////தியாகராஜன் said...
    ///textile துறை இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறது.///
    same feeling./////

    அடியேனும் அத்துறையில்தான் உள்ளேன். கஷ்டமாகத்தான் இருக்கிறது
    என்ன செய்வது. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டவன் உதைக்குப் பயந்தால் முடியுமா?

    ReplyDelete
  21. முன்பு கொடுக்கப்பட்ட தமிழ் ஜாதகம் கணிக்கும் மென்பொருளை நிறுவுவதில் சிரமம் இருந்தது.ஆனால் தற்போது சுட்டி தரப்பட்டுள்ள மென்பொருள் நன்றாக உள்ளது.

    திரு சுப்பையா வாத்தியாருக்கும், கரூர் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி....

    ReplyDelete
  22. //////PKV said...
    முன்பு கொடுக்கப்பட்ட தமிழ் ஜாதகம் கணிக்கும் மென்பொருளை நிறுவுவதில் சிரமம் இருந்தது.ஆனால் தற்போது சுட்டி தரப்பட்டுள்ள மென்பொருள் நன்றாக உள்ளது.
    திரு சுப்பையா வாத்தியாருக்கும், கரூர் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி....////

    உங்களின் தகவலுக்கு நன்றி (வாத்தியார்) PKV அவர்களே!

    ReplyDelete
  23. //////PKV said...
    முன்பு கொடுக்கப்பட்ட தமிழ் ஜாதகம் கணிக்கும் மென்பொருளை நிறுவுவதில் சிரமம் இருந்தது.ஆனால் தற்போது சுட்டி தரப்பட்டுள்ள மென்பொருள் நன்றாக உள்ளது.
    திரு சுப்பையா வாத்தியாருக்கும், கரூர் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி....////

    ////உங்களின் தகவலுக்கு நன்றி (வாத்தியார்) PKV அவர்களே!////


    வயதும், அனுபவமும் இல்லாத தொடக்க கால பள்ளி ஆசிரியர் நான்.
    எனவே அனுபவம் மிக்க தாங்கள் என்னை (வாத்தியார்)PKV என அழைக்க வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    அவ்வப்போது மட்டுமே இணையத்தில் உலவுவதால் தங்கள் வகுப்பறைக்கு வர முடியவில்லை.

    ஆனால் உங்கள் பதிவுகளைப் படித்தபின் எனது ஜாதகத்தை அலசி, துவைத்து காயப் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

    நன்றி..

    --வகுப்பறை மாணவன் PKV

    ReplyDelete
  24. /////PKV said...
    //////PKV said...
    முன்பு கொடுக்கப்பட்ட தமிழ் ஜாதகம் கணிக்கும் மென்பொருளை நிறுவுவதில் சிரமம் இருந்தது.ஆனால் தற்போது சுட்டி தரப்பட்டுள்ள மென்பொருள் நன்றாக உள்ளது.
    திரு சுப்பையா வாத்தியாருக்கும், கரூர் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி....////
    ////உங்களின் தகவலுக்கு நன்றி (வாத்தியார்) PKV அவர்களே!////
    வயதும், அனுபவமும் இல்லாத தொடக்க கால பள்ளி ஆசிரியர் நான்.
    எனவே அனுபவம் மிக்க தாங்கள் என்னை (வாத்தியார்)PKV என அழைக்க வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    அவ்வப்போது மட்டுமே இணையத்தில் உலவுவதால் தங்கள் வகுப்பறைக்கு வர முடியவில்லை.
    ஆனால் உங்கள் பதிவுகளைப் படித்தபின் எனது ஜாதகத்தை அலசி, துவைத்து காயப் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி..
    --வகுப்பறை மாணவன் PKV///////

    உங்கள் பின்னூட்டம் /////பதிவுகளைப் படித்தபின் எனது ஜாதகத்தை அலசி, துவைத்து காயப் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.////// சக மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. உங்கள் துவைக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள் பி.கே.வி!

    ReplyDelete
  25. //அதுதான் நீங்கள் எனக்குத் தரும் 'முதல் மரியாதை'//

    Present Sir.

    Superb lession.

    Thanks ,

    GK, BLR

    ReplyDelete
  26. //////Geekay said...
    //அதுதான் நீங்கள் எனக்குத் தரும் 'முதல் மரியாதை'//
    Present Sir.
    Superb lession.
    Thanks , GK, BLR/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  27. ஹலோ சார்,

    அருமையா சொல்லிட்டீங்க...சரி இப்போ என்னோட கேள்வி நேரம் ....

    //சுக்கிரனின் நட்புக் கிரகம் சனி, ராகு, கேது மற்றும் புதன் மற்றவர்களெல்லாம் பகைக்கிரகங்கள்..//
    எனக்கும் 10ல் சுக்கிரனுடன் ராகு. (கவனிக்கவும் நட்பு கிரகமான ராகு)ஆனாக்கா இது வரைக்கும் எனக்கு எந்த விதமான நீங்க சொன்ன "சுக்கிரனுடைய சமாச்சாரங்களும் கிடைக்கவில்லை, மேலும் எந்தவிதமான சுக்கிர லாபமும் இல்லை. என்னவோ போங்கள் நான் என்ன செய்ய, எல்லாம் சுக்கிரனுடைய நேரம் தான். ஹும்ம்ம்ம்....

    ReplyDelete
  28. ஐயா,
    தற்போது கொடுத்த ஜாதக சாப்ட்வேர் நன்றாக இருந்தது.கொடுத்துதவிய கரூர் தியாகராஜனுக்கும் வெளியிட்டு உதவிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் வகுப்பறை மாணவர்கள் சார்பாக நன்றி.நன்றி..நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  29. Thank you, Sir. Very good explanations and insights.

    ReplyDelete
  30. //திருவாதிரை முதல் பாதம் சரியானது.
    திருக்கணிதப்படி அதுதான் நட்சத்திரம்

    // அய்யா எனக்கு இது ஒரு மிக பெரிய சந்தேகம். பஞ்சாங்க முறையில் எதை பின்பற்ற வேண்டும். திரு கணித முறை யா அல்லது வாக்கிய பஞ்சாங்க முறையா

    ஏனென்றால் தசா புத்தி தொடங்கும் போது இது ஒரு மிக பெரிய குழப்பமாக உள்ளது. ஒரு ஜோதிடர் உங்களுக்கு சனி தசையில் சுக்ர புக்தி இந்த மாதமே தொடங்கி விட்டது என்கிறார். ஒரு நண்பர் பார்த்து விட்டு இன்னும் தொடங்க ஐந்து மாதங்கள் உள்ளன என்கிறார். இது இந்த பஞ்சாங்க குழப்பத்தில் வருகிறது என்று நான் நினைக்கிறேன் .சரியான விளக்கம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் .

    ReplyDelete
  31. ஆசிரியர் ஐயா ,
    உங்களின் அன்பு வேண்டுகோளின்படி
    ஸ்வாமி ஓம்கார் அவர்கள் வரும் ஜனவரித் திங்கள் 1 முதல்
    ஜோதிட சாஸ்திரம் என்பது வேதம் தோன்றிய காலத்தில் உருவானதாக இருந்தாலும் சுலோகங்கள் மற்றும் கடினமான விதிகள் நிறைந்தது. ஆனால் அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் நோக்கில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறையை கற்றுக்கொடுக்க இருக்கிறார்கள்.


    இணைய வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?


    http://vediceye.blogspot.com/2008/11/blog-post_29.html

    ReplyDelete
  32. ஐயா வணக்கம்
    சுக்கிரனைக்கண்டு பின்னூட்ட மன்னர்கள் பயந்துவிட்டார்களா,
    அல்லது அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறார்களா

    ReplyDelete
  33. //////Sumathi. said...
    ஹலோ சார்,
    அருமையா சொல்லிட்டீங்க...சரி இப்போ என்னோட கேள்வி நேரம் ....
    //சுக்கிரனின் நட்புக் கிரகம் சனி, ராகு, கேது மற்றும் புதன் மற்றவர்களெல்லாம் பகைக்கிரகங்கள்..//
    எனக்கும் 10ல் சுக்கிரனுடன் ராகு. (கவனிக்கவும் நட்பு கிரகமான ராகு)ஆனாக்கா இது வரைக்கும் எனக்கு எந்த விதமான நீங்க சொன்ன "சுக்கிரனுடைய சமாச்சாரங்களும் கிடைக்கவில்லை, மேலும் எந்தவிதமான சுக்கிர லாபமும் இல்லை. என்னவோ போங்கள் நான் என்ன செய்ய, எல்லாம் சுக்கிரனுடைய நேரம் தான். ஹும்ம்ம்ம்....//////

    நட்புக்கிரகம்தான். ஆனால் 10ல் இருக்கும் ராகு தன்னுடைய அமர்வினால் 10ஆம் இடத்றிகும், பார்வையினால் 4ஆம் இடத்திற்கும் வழக்கம்போல கெடுதல்கள் செய்துகொண்டிருப்பாரே - என்ன செய்வது சகோதரி?
    பாகற்காய் என்ன இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் தன் சுவையைக் காட்டாமல் விடுமா?
    இறைவன் கருணை மிக்கவன். அவன் தாளை வணங்குங்கள். உங்கள் சுககேடுகளை அவர் நீக்குவார்

    ReplyDelete
  34. /////வேலன். said...
    ஐயா,
    தற்போது கொடுத்த ஜாதக சாப்ட்வேர் நன்றாக இருந்தது.கொடுத்துதவிய கரூர் தியாகராஜனுக்கும் வெளியிட்டு உதவிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் வகுப்பறை மாணவர்கள் சார்பாக நன்றி.நன்றி..நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    பாராட்டுக்கள் தியாகராஜனுக்கு மட்டுமே. சமைத்துக் கொடுத்தது அவர்தான். பறிமாறியது மட்டும்தான் என்னுடைய வேலை!

    ReplyDelete
  35. ////krish said...
    Thank you, Sir. Very good explanations and insights.////

    நன்றி கிரிஷ்!

    ReplyDelete
  36. /////Ragu Sivanmalai said...
    //திருவாதிரை முதல் பாதம் சரியானது.
    திருக்கணிதப்படி அதுதான் நட்சத்திரம்
    // அய்யா எனக்கு இது ஒரு மிக பெரிய சந்தேகம். பஞ்சாங்க முறையில் எதை பின்பற்ற வேண்டும். திரு கணித முறை யா அல்லது வாக்கிய பஞ்சாங்க முறையா?
    ஏனென்றால் தசா புத்தி தொடங்கும் போது இது ஒரு மிக பெரிய குழப்பமாக உள்ளது. ஒரு ஜோதிடர் உங்களுக்கு சனி தசையில் சுக்ர புக்தி இந்த மாதமே தொடங்கி விட்டது என்கிறார். ஒரு நண்பர் பார்த்து விட்டு இன்னும் தொடங்க ஐந்து மாதங்கள் உள்ளன என்கிறார். இது இந்த பஞ்சாங்க குழப்பத்தில் வருகிறது என்று நான் நினைக்கிறேன் .சரியான விளக்கம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் //////

    திருக்கணிதம் தான் சிறந்தது. அது கணித அடைப்படையில் உள்ளது. மென்பொருட்கள் திருக்கணிதத்தில் அடிப்படையில் இருக்கும்.

    திருக்கணிதம் வருடத்திற்கு 365.25 நாட்கள் என்ற அடிப்படையில் இருக்கும்
    வாக்கியப் பஞ்சாங்கள் 360 நாட்கள் என்கின்ற அடைப்படையில் இருக்கும். அதனால்தான் இந்த தசா புத்திக் கால வித்தியாசங்கள்.

    இதை நான் முன் பதிவுகளிலும் முன் பின்னூட்டங்களிலும் பலமுறை சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
  37. ////ரமணா said...
    ஆசிரியர் ஐயா ,
    உங்களின் அன்பு வேண்டுகோளின்படி
    ஸ்வாமி ஓம்கார் அவர்கள் வரும் ஜனவரித் திங்கள் 1 முதல்
    ஜோதிட சாஸ்திரம் என்பது வேதம் தோன்றிய காலத்தில் உருவானதாக இருந்தாலும் சுலோகங்கள் மற்றும் கடினமான விதிகள் நிறைந்தது. ஆனால் அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் நோக்கில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறையை கற்றுக்கொடுக்க இருக்கிறார்கள்.
    இணைய வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?
    http://vediceye.blogspot.com/2008/11/blog-post_29.html/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. /////KS said...
    ஐயா வணக்கம்
    சுக்கிரனைக்கண்டு பின்னூட்ட மன்னர்கள் பயந்துவிட்டார்களா?
    அல்லது அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறார்களா?/////

    வருபவர்களில் பாதிக்கும் மேல் கணினித் துறையில் இருப்பவர்கள். சனி ஞாயிறு விடுமுறை தினங்கள்.
    ஆகவே கூட்டம் குறைவு.

    ReplyDelete
  39. அருமையான பதிவு
    தனுசு ராசி
    கும்ப லக்னம்
    ஐயா எனக்கு சுக்ரன் மூன்றில்,புதன் மற்றும் செவ்வாயுடன் உள்ளது (செவ்வாய் ஆட்சி)
    சுக்ரன் மறைந்து விட்டதா ?அல்லது வசுமதி யோகம் உண்டு என்கிறார்களே உண்மையா ?

    ReplyDelete
  40. அய்யா,

    சுக்கிரனை பற்றின விளக்கம் அருமை! நன்றாக புரிந்தது.

    ஒரு சந்தேகம் - அஸ்தமனம் அந்த அடிப்படையில் பார்ப்பது? அதாவது ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் உள்ளது அன்று வைப்போம்.

    புதன்:206.45Degree
    செவ்வாய்: 210.30Degree
    சூரியன்: 211.30Degree

    அஸ்தமனம் ஆகும் கிரகாங்கள் செவ்வாய் மற்றும் சூரியன் தானே?

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  41. /////saravanan said...
    அருமையான பதிவு
    தனுசு ராசி
    கும்ப லக்னம்
    ஐயா எனக்கு சுக்ரன் மூன்றில்,புதன் மற்றும் செவ்வாயுடன் உள்ளது (செவ்வாய் ஆட்சி)
    சுக்ரன் மறைந்து விட்டதா ?அல்லது வசுமதி யோகம் உண்டு என்கிறார்களே உண்மையா?/////

    3, 6, 8, 12 ஆகிய இடங்கள் மறைவிடங்கள்.
    யோகங்கள் என்கின்ற தலைப்பில் ஒரு பெரிய பாடம் உள்ளது.
    அப்போது வசுமதியோகம் பற்றிச் சொல்கிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  42. ////Sridhar said...
    அய்யா,
    சுக்கிரனை பற்றின விளக்கம் அருமை! நன்றாக புரிந்தது
    ஒரு சந்தேகம் - அஸ்தமனம் அந்த அடிப்படையில் பார்ப்பது? அதாவது ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் உள்ளது அன்று வைப்போம்.
    புதன்:206.45Degree
    செவ்வாய்: 210.30Degree
    சூரியன்: 211.30Degree
    அஸ்தமனம் ஆகும் கிரகாங்கள் செவ்வாய் மற்றும் சூரியன் தானே?
    நன்றி,
    ஸ்ரீதர் S/////

    சூரியனுக்கு அஸ்தமனம் கிடையாது. சூரியனுக்கு அருகில் 10 டிகிரிகளுக்குள் முன் அல்லது பின் வரும் கிரகங்கள் அஸ்தனமாகிவிடும்.

    மற்ற கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று 5 டிகிரிகள் இடைவெளியில் இருக்க வேண்டும். இல்லை யென்றால் first cum first என்கின்ற அடிப்படையில் முதலில் நிற்கும் கிரகம் தப்பி விடும் அடுத்து அதனுடன் உரசும் கிரகம் அஸ்தமனமாகி விடும். விளக்கம் போதுமா நண்பரே!

    ReplyDelete
  43. அய்யா,

    அஸ்தமனம் பற்றிய விளக்கத்தை மிக குறுகிய நேரத்தில் அளித்து என் சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள்.

    மிக்க நன்றி!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  44. அனுபவி ராஜாவெனவே
    அகிலத்து இன்பங்களை

    அள்ளித்தந்து மயக்கும்
    அசுரகுரு சுக்கிரனையும்

    அழுக்குபோக துவைத்து
    அலசிவிட்ட ஆசானுக்கு

    அளிக்கின்றோம் சுக்ரான்
    (அரபி மொழியில்,நன்றி!)

    ReplyDelete
  45. /////தமாம் பாலா (dammam bala) said...
    அனுபவி ராஜாவெனவே
    அகிலத்து இன்பங்களை
    அள்ளித்தந்து மயக்கும்
    அசுரகுரு சுக்கிரனையும்
    அழுக்குபோக துவைத்து
    அலசிவிட்ட ஆசானுக்கு
    அளிக்கின்றோம் சுக்ரான்
    (அரபி மொழியில்,நன்றி!)////

    பதிலுக்கு அடியவனின் 'சுக்ரான்' பாலா!

    ReplyDelete
  46. நல்லதுங்க ஐயா.

    என்னா பிரச்சனைனா?

    சுக்கிரன் 4-ல் சூரியனுடன் பகை வீட்டில் 5 பரல்களுடன் பலமா உட்கார்ந்து இருக்கிறார்.

    அவர நான் என்னானு சொல்ல???

    தெளிவான குழப்பத்துடன்...
    ஜே. கே.

    ReplyDelete
  47. //////ஜே கே | J K said...
    நல்லதுங்க ஐயா.
    என்னா பிரச்சனைனா?
    சுக்கிரன் 4-ல் சூரியனுடன் பகை வீட்டில் 5 பரல்களுடன் பலமா உட்கார்ந்து இருக்கிறார்.
    அவர நான் என்னானு சொல்ல???
    தெளிவான குழப்பத்துடன்...
    ஜே. கே./////

    குழப்பத்தில் தெளிவான குழப்பம் என்று எங்கேயும் கிடையாது.எதிலும் கிடையாது
    பகை வீட்டில் இருந்தால் என்ன? 5 பரல்களுக்குரிய நன்மைகளில் பாதியைத் தருவார்.
    வந்தவரைக்கும் லாபம் என்று வாங்கிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  48. ஐயா
    நான் தனுசு ராசி கும்பலக்னம்
    எனக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் புதனுடன் செவ்வாய் ஆட்சி
    சுக்கிரன் செவ்வாயுடன் இருப்பதால் தீமையா ?
    சுக்கிரன் இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சியாக இருப்பதால் நன்மையா ?

    ReplyDelete
  49. /////saravanan said...
    ஐயா
    நான் தனுசு ராசி கும்பலக்னம்
    எனக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் புதனுடன் செவ்வாய் ஆட்சி
    சுக்கிரன் செவ்வாயுடன் இருப்பதால் தீமையா ?
    சுக்கிரன் இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சியாக இருப்பதால் நன்மையா?////

    Details in sufficient for giving correct answer!

    ReplyDelete
  50. எனக்கு ஐந்தில் புதனும் சுக்கிரனும்!என்ன குடும்பசதானம் ரொம்ப வீக்கு(ரெண்டில் மாந்தி வேறு)ஆனாலும் நான் கவலைபடமாட்டேன்ள

    ReplyDelete
  51. ////Blogger sri said...
    எனக்கு ஐந்தில் புதனும் சுக்கிரனும்!என்ன குடும்பஸ்தானம் ரொம்ப வீக்(ரெண்டில் மாந்தி வேறு)ஆனாலும் நான் கவலைப்படமாட்டேன்//////

    அதுசரிதான்! கவலைப் பட்டு என்ன ஆகப்போகிறது?
    நடக்க இருப்பதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? இரண்டு பெக் அடித்துவிட்டு படுத்துக் கொள்கிறவர்கள் யாரும் எதற்கும் கவலைப் படுவதில்லை. நாமும் அப்படி இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை. இந்தக் கருமம் பிடித்த ஜோதிடமும் வேண்டாம்!

    ReplyDelete
  52. ////Blogger sri said...
    எனக்கு ஐந்தில் புதனும் சுக்கிரனும்!என்ன குடும்பஸ்தானம் ரொம்ப வீக்(ரெண்டில் மாந்தி வேறு)ஆனாலும் நான் கவலைப்படமாட்டேன்//////

    அதுசரிதான்! கவலைப் பட்டு என்ன ஆகப்போகிறது?
    நடக்க இருப்பதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? இரண்டு பெக் அடித்துவிட்டு படுத்துக் கொள்கிறவர்கள் யாரும் எதற்கும் கவலைப் படுவதில்லை. நாமும் அப்படி இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை. இந்தக் கருமம் பிடித்த ஜோதிடமும் வேண்டாம்!//


    அய்யா! நான் மங்கை அய்யா மதுவெல்லாம் கிடையாது!என் கிருஷ்ணன் இருக்க கவலையேன் என்று சொல்லவந்தேன்
    :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com