மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.11.08

துவைத்துக் காயப்போடுவது எப்படி? பகுதி 1

உறவுப் பெண்மணி ஒருவர் தன்னுடைய மூன்று வயதுக் குழந்தையை
அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு, வந்திருந்தார், அந்தக் குழந்தை
துறுதுறுவென்று தன்னுடைய விழிகளை உருட்டியவாறு, அனைத்தையும்
பார்த்தவாறு தன் அன்னையின் அருகில் அமர்ந்திருந்தது. அமெரிக்காவில்
இருந்து விடுப்பில் வந்திருந்தார்கள் அவர்கள் .

அப்போது எங்கள் வீட்டுப் பணிப்பெண், வெளியில் இருக்கும் கல்லில்
துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார். 'டப், டப்' என்ற சத்தம்
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

எங்களுடைய உரையாடலில் குறுக்கிட்ட அக்குழந்தை கேட்டது.

"மம்மி என்ன சத்த்த்தம்?"

உடனே அதன் அன்னை, அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய்
அந்தத் துவைக்கும் காட்சியைக் காட்டி, அந்தக் குழந்தைக்கு விளக்கம்
சொல்லிவிட்டுத் திரும்பி வந்து அமர்ந்து கொண்டு பேசத்துவங்கினார்.

"அங்கே இதை அவள் பார்த்ததில்லை, ஆதாலால் வியப்புடன்
பார்க்கின்றாள்" என்றும் சொன்னார்.

ஆமாம், அமெரிக்காவில் குடியிருப்புக்களில் எல்லாம் பொது வாஷிங்
மெஷின் அல்லவா இருக்கிறது. கல்லில் அடித்துத் துவைக்கும் காட்சி
எல்லாம் அங்கே எப்படிக் காணக் கிடைக்கும்?

உள்ளே வந்த குழந்தை அம்மாவின் சூரிதார், மேல் துணியொன்றைத்
தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு, டப், டப் என்ற சப்தமிட்டவாறு,
தரையில் அடித்து விளையாட ஆரம்பித்துவிட்டது.

இது அமெரிக்கா என்று இல்லை, இப்போது நம் நாட்டிலும், பெரிய
நகரங்களில், பல வீடுகளில் இப்போது காணக் கிடைக்காத காட்சி.
காரணம் மனிதனோடு சாதனங்களும் இயந்திரமயமாகி விட்டன!.

கொடி அடுப்பு (விறகு அடுப்பு), அம்மி, ஆட்டுக்கல், உலக்கை, குந்தாணி,
(உரல்) திருகை (மாவு திரிக்கும் திருகை) வேம்பா (தண்ணீர் கொதிக்க
வைப்பதற்கு உரிய சாதனம்)) அண்டா, துவைக்கும் கல் என்று பல
சுவையான விஷயங்களை நாம் இழந்துவிட்டோம். அதோடு அவற்றில்
வேலை செய்த அந்தக்காலத்துப் பெண்களுக்கு இருந்த உடல்
ஆரோக்கியமும் இன்றையப் பெண்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு
போய்விட்டது!

நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னுடைய பாட்டி வீட்டில் ஒரு
ஐந்தாண்டு காலம் தங்கிப் படித்தேன். அப்போது வீட்டுக் கிணற்றில்
தண்ணீர் இறைத்துத்தான் குளிக்க வேண்டும். துவைக்க வேண்டும்.
எங்களுடைய சின்ன மாமா அதற்குப் பயிற்சி கொடுப்பார்.

40 அல்லது 50 வாளிகள் தண்ணீரை எல்லாம் சர்வ சாதரணமாக
இறைப்போம். சமயத்தில் கயிற்றுடன் வாளி நழுவி கிணற்றுக்குள் விழுந்து
விட்டால், அதை பாதாள கரண்டி என்னும் உபகரணம் கொண்டு
எடுப்பதற்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

சவுக்காரத்தை (soap) அதிகமாகக் கரைக்காமல், துணியிலுள்ள அழுக்கை
எடுப்பதில் இருந்து, கல்லில் அடித்துத் துணியைத் துவைத்து மூன்று நான்கு
முறை தண்ணீரில் அத்துணியை அலசி எடுப்பது வரை முறையான பயிற்சி
கொடுத்தார்கள்.

துவைத்துக் காயப்போட்டு எடுத்தால் துணி தும்பைப் பூவைப் போல
பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.

அந்த வாய்ப்பெல்லாம் நகரவாசிகள் யாருக்கும் இப்போது இல்லை.

சில கிராமங்களில் வேண்டுமென்றால் இருக்கலாம்
--------------------------------------------------------------------------------------------------------
எதற்காக இந்தத் துவைக்கும் புராணம்? அலசல் புராணம்?

கிரகங்களை எப்படித் துவைப்பது,அலசுவது, காயப்போடுவது என்பதை
இன்று சொல்லித் தரவுள்ளேன். அதற்கான முன்னுரைதான் அது!

ஜாதகத்தை வைத்துத்தான் -))))))))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதலில் புதனை எடுத்துக் கொள்வோம்

அவன்தான் புத்திநாதன். வித்தைகளுக்குரிய நாதன். அவன் ஜாதகத்தில்
நன்றாக இருந்தால்தான், படிப்பது மண்டையில் ஏறும். படிப்பது புரியும்
அல்லது விளங்கும். கல்விக்கு அதிபதி அவன்தான்.

வாக்கு சாதுர்யம்(பேச்சு வன்மை), சங்கீதம், ஜோதிடம், பிரசங்கம்
(மேடைப்பேச்சு), யுக்தியான செயல்கள், ஓவியம், சிற்பக்கலை, வணிகம்
போன்ற பல புத்தி சம்பந்தப்பட்ட செயல்களுக்கு அவனே காரகன்.

இல்லாவிட்டால், மக்குப் பிளாஸ்த்திரி என்று வாத்தியாரிடம் (என்னிடம்
அல்ல) பெயரை வாங்கிக் கொண்டு, தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டு
வரை செல்ல நேரிடும்

இரவு படித்ததெல்லாம் காலையில் மறந்துவிடும். பகலில் படித்ததெல்லாம்
மாலையில் மறந்துவிடும்.

நினைவாற்றல் இருக்காது. மறதி அதிகமாக இருக்கும்.

வெளியில் செல்லும் போது மனைவி வாங்கிக் கொண்டு வரும்படி
சொல்லியனுப்பிய சாமானை வாங்கி வராமல் வீட்டிற்கு வந்தபிறகு
மனைவியிடம் இடிபட நேரிடும்.

"உங்களுக்கு சமர்த்துப் பத்தவில்லை" (சாமர்த்தியம் இல்லை) என்ற
கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

எனக்குத்தெரிந்த உறவினர் ஒருவர், தன்னுடைய ஆடிட்டர் வீட்டிற்குச்
சென்றார். ஆடிட்டர் வீட்டருகே பார்க் செய்ய இடமில்லாததால்,
தன்னுடைய காரை 100அடி தூரம் தள்ளி நிறுத்தனார். ஆடிட்டரிடம்
ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பியவர், காரில்
வந்ததை மறந்து விட்டு, ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்தவுடன், அவருடைய மனைவி, "காரில் அல்லவா
சென்றீர்கள், ஆட்டோவில் வருகிறீர்களே?" என்று கேட்ட பிறகுதான்
தன்னுடைய தவறும், மறதியும் அவருக்குப் பிடிபட்டது.

அதேபோல் ஒருமுறை தன் மனைவியோடு ஜவுளிக்கடைக்குச் சென்றவர்,
அந்த அம்மணி கடையைக் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில், பொறுமை
இழந்து தம்மடிக்க பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை வரை சென்றார்.
அதற்கு முன் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டுத் தம்மடித்தால் சுகமாக
இருக்கும் என்று கொஞ்சம் தள்ளியிருந்த ஹோட்டல் வரைக்கும் சென்றார்

சென்றவர் காப்பி, தம் எல்லாம் முடிந்த பிறகு, மனைவி ஜவுளிக்கடையில்
இருப்பதை மறந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

இதெல்லாம் எதனால் ஏற்பட்டது அவருக்கு?

புதனின் திருவிளையாடல்தான் அது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுடன் சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன்
சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும்.

அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை
செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு
எதிர்மாறான விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான்.

ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde) இருந்தாலும் புத்தி
வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும்.

வக்கிர சிந்தனை என்றால் என்ன? ஒரு சின்ன உதாரணம். மாற்றான்
தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான்
முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான்
பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான்.

அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன்
கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது
பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான்.

தகாத வேலை என்றால் என்ன? பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில்
இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது
வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல்
இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன?

ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச்
செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான். ஒசாமா
பின்லேடனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது என்று
படித்திருக்கிறேன்.

வக்கிரம் என்றால் என்ன? ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில்
பின்புறமாகச் சுற்றும் (reverse). உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன்
ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக்
குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். தன்னுடைய சுற்றும்
வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை
ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும்
இடை வெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும். பிறகு
தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு
மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான்
வக்கிரம் எனப்படும். அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின்
ஜாதகத்தைக் குறிக்கும் ஜோதிடர் கிரகத்தின் அருகில் (வ) என்று
குறிப்பிட்டிருப்பார்.

அப்படிக் குறிக்கத்தவறிய ஜாதகத்தைப் பார்த்து, அதைக் கொண்டு
வந்த ஜாதகனுக்குப் பலன் சொல்லும்போது. அது தவறான பலனாகப்
போய்விடும். அவன் ஜோதிடரைத் திட்டிக் கொண்டே தன்னுடைய
வீட்டிற்குப் போய்ச் சேருவான்.
------------------------------------------------------------------------------------------------
புதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி
உச்ச வீடு: கன்னி
நீச வீடு: மீனம்
நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,
சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு: கடகம் மட்டுமே!

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் கிரகத்திற்கு 100% வலிமை
உண்டு.

சம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை!

உச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை
அனுபவத்தில் சொல்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
அஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்

புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல்
களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்
பலன்கள்.

புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும்
மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும்
ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.

புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம்
வெற்றி கிடைக்கும்.

புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து
சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்

புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது
ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான்
Either he will be a ruler or associated with rulers
========================================================
இருக்கும் இடத்தை வைத்துப் பலன் பார்ப்பது

உதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம்
அதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான்
அதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.
சூரியனின் வீடு அல்லவா அது!

1. சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு (House of Finance,
Family affairs & speech) மற்றும் பதினொன்றாம் (House of Profits -
லாபஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர்
களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4 & 9ஆம் வீடுகளுக்கு அதிபதி
அவன்) எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமானவன்.
அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர, திரிகோணங்களில்
இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது.
இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில்
எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும்
வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.

2. 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்
=========================================================
கன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் இடத்து
அதிபதி. ஆகவே கன்னி லக்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கிய
மானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம்
இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)

அப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு உரிய வேலை
கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய
இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில்
கொள்ளவும்.

அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப்
பிடித்துக் கொடுப்பான்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து
அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான்.

இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து
முக்கியமானவன்
=======================================================
தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி அல்லது அரசன்)
10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன்
இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்துப்
புதன் முக்கியமானவன்
=======================================================
மகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன்
பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த
லக்கின வேலைகளைச் செய்வான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பம்: 5th Lord & 8th Lord
மீனம்: 4th lord and 7th lord
மேஷம்: 3rd lord and 6th lord
ரிஷபம்: 2nd lord and 5th lord
மிதுனம்: Lagna lord and 4th lord
கடகம்: 12th lord & 3rd lord

மேற் பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து
கொள்ளுங்கள்

பாடத்தின் நீளம் கருதியும், உங்களுடைய பொறுமை கருதியும்,
என்னுடைய நேரம் கருதியும் இன்றையப் பாடத்தை இத்துடன் நிறைவு
செய்கிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன்
நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்?
ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!

வாழ்க வளமுடன்!

73 comments:

  1. பழைய காலத்தோடு கதை சொல்லி அப்படியே புதனில் கொண்டுவந்து விட்டதை நன்கு ரசித்துப்படிச்சேன்.

    அதுவும் முன்பாதி சூப்பர்!

    ReplyDelete
  2. ///துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய
    இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில்
    கொள்ளவும்.

    அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப்
    பிடித்துக் கொடுப்பான்)

    ///பாக்கியாதிபதி என்பது நல்ல விஷயம் தான். ஆனால் பாக்கியாதிபதியே விரயாதிபதியாக இருக்கும்போது என்ன செய்வார். ஏற்படும் விரயங்கள் எல்லாம் பாக்கியத்தை ஏற்படுத்துவதற்கான சுப விரயங்களாக அமையும் என்று கருதலாமா ?

    ReplyDelete
  3. கதையோடு துவங்கி ரொம்ப அழகா பாடத்தை கொண்டு போயிருக்கீங்க சார். :)

    ரொம்ப எளிமையா புரிந்துகொள்ளூம்படி இருக்கு இந்த பாடம்.

    கதையை இன்னிக்கு தான் படிக்க போறேன்.

    ReplyDelete
  4. ////Ragu Sivanmalai said...
    Me the first....Very good Post....////

    Yes, you are first to the classroom ,not to the lessons!:-)))

    ReplyDelete
  5. //////துளசி கோபால் said...
    பழைய காலத்தோடு கதை சொல்லி அப்படியே புதனில்
    கொண்டுவந்து விட்டதை நன்கு ரசித்துப்படிச்சேன்.
    அதுவும் முன்பாதி சூப்பர்!////

    வாருங்கள் டீச்சர். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்
    மிக்க நன்றி!
    பழைய காலக் கதைகளை ரசிப்பதற்கு உங்களைப் போன்று
    சிலரே உள்ளார்கள்.

    ReplyDelete
  6. //////Ragu Sivanmalai said...
    ///துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய
    இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில்
    கொள்ளவும்.
    அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப்
    பிடித்துக் கொடுப்பான்) ///பாக்கியாதிபதி என்பது நல்ல விஷயம் தான்.
    ஆனால் பாக்கியாதிபதியே விரயாதிபதியாக இருக்கும்போது என்ன செய்வார்.
    ஏற்படும் விரயங்கள் எல்லாம் பாக்கியத்தை ஏற்படுத்துவதற்கான சுப விரயங்களாக
    அமையும் என்று கருதலாமா ?/////

    ஓரளவிற்குக் கருதலாம். ஆனால் பாக்கியத்திற்கு ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை
    வைத்து பாக்கியத்தைத் தருவார். அதேபோல விரையத்திற்கு அந்த வீட்டின் அமைப்பு,
    குறிப்பாக பார்வை மற்றும் அஷ்டகவர்கப்பரல்களை வைத்துத் தனியாக விரையங்
    களைத் தருவார்.இரண்டு வீடுகளையும் இணைத்துப் பலன் சொல்ல முடியாது.

    ReplyDelete
  7. /////ambi said...
    கதையோடு துவங்கி ரொம்ப அழகா பாடத்தை கொண்டு போயிருக்கீங்க சார். :)
    ரொம்ப எளிமையா புரிந்துகொள்ளூம்படி இருக்கு இந்த பாடம்.
    கதையை இன்னிக்கு தான் படிக்க போறேன்./////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி அம்பி!

    ReplyDelete
  8. Dear Guru,

    Story blended with the lesson was awesome!

    I liked the explanation of Budhan.

    Can you please let me know know as why you took Budhan as the first one. I thought Astrology respects Sun as the first planet.

    Can you please let us know as what is Suya Vargam? How to calculate that?

    Thanks and regards

    Sridhar

    ReplyDelete
  9. குருவே ,

    ஒரு கிரகம் ஏன் வக்கிரமாகிறது - எப்படி வக்கிரமாகிறது - என்ற விளக்கங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    புதன் மூலம் -நமது ஞாபகசக்தி -கல்வி-நடத்தை-போன்றவை அமையும் என தந்த உங்கள் விளக்கங்கள் சூப்பர்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. பழைய கால வீட்டு உபகரணங்களோடு கதை சொல்லிய விதம் அருமை! கதை சொன்னால்தான் மாணவர்கள் கவனம் திரும்பும் என்று வாத்தியாருக்கு நன்கு புரிந்திருக்கிறது. புதனின் அட்டகாசங்களை விவரமாக சொல்லிய விதம் நன்று. கொஞ்சம் கொஞ்மாக புரிந்து கொள்கிறேன்.
    க்ளாஸுக்கு ரொம்ப நாளாக கட் அடித்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. புதனை துவைத்து காய வைத்து விட்டீர்கள்.புதனின் கதையை எழுதுங்கள்.புதனின் தன்மை அன்பர்களுக்கு விளங்கும்.

    ReplyDelete
  12. //////Sridhar said...
    Dear Guru,
    Story blended with the lesson was awesome!
    I liked the explanation of Budhan.
    Can you please let me know know as why you took Budhan as the first one. I thought Astrology respects Sun as the first planet.
    Can you please let us know as what is Suya Vargam? How to calculate that?
    Thanks and regards
    Sridhar/////

    சைடுபாரில் உள்ள ஜகந்நாதஹோரா மென்பொருளில் உங்கள் ஜாதகத்தைக் கணித்தால், அதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிதனியான கட்டங்களில் சுயவர்க்கம் கிடைக்கும்!

    எனக்கு சிம்ம லக்கினம் - 7ல் புதன். பிடித்த கிரகமும் அதுதான்...ஹி..ஹி!
    அதோடு, ரஜினி, கமல் இருவரும் சிம்ம லக்கினம். இருவருமே எனக்குப் பிடித்த நடிகர்கள்
    அதுதான் இன்று சிம்ம லக்கினத்தில் இருந்து பாடத்தைத் துவங்கினேன்.

    ReplyDelete
  13. //////Sridhar said...

  14. /////வேலன். said...
    குருவே ,
    ஒரு கிரகம் ஏன் வக்கிரமாகிறது - எப்படி வக்கிரமாகிறது - என்ற விளக்கங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.
    புதன் மூலம் -நமது ஞாபகசக்தி -கல்வி-நடத்தை-போன்றவை அமையும் என தந்த உங்கள் விளக்கங்கள் சூப்பர். வாழ்க வளமுடன்,
    வேலன்.///

    உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. /////நானானி said...
    பழைய கால வீட்டு உபகரணங்களோடு கதை சொல்லிய விதம் அருமை! கதை சொன்னால்தான் மாணவர்கள் கவனம் திரும்பும் என்று வாத்தியாருக்கு நன்கு புரிந்திருக்கிறது. புதனின் அட்டகாசங்களை விவரமாக சொல்லிய விதம் நன்று. கொஞ்சம் கொஞ்மாக புரிந்து கொள்கிறேன்.
    க்ளாஸுக்கு ரொம்ப நாளாக கட் அடித்திருக்கிறேன்./////

    வாருங்கள் சகோதரி. ஆமாம், நீங்கள் வெகு நாட்களாக வகுப்பறைப் பக்கமே வருவதில்லை!
    நேரம் கிடைக்கும் போது தவறாமல் வருகை தாருங்கள்!

    ReplyDelete
  16. /////krish said...
    புதனை துவைத்து காய வைத்து விட்டீர்கள்.புதனின் கதையை
    எழுதுங்கள்.புதனின் தன்மை அன்பர்களுக்கு விளங்கும்./////

    நன்றி கிரிஷ்!

    ReplyDelete
  17. படித்துக்கொண்டேன்.

    இராசியில் புதன் கன்னியில் உச்சமாகவும் பரல் எண்ணிக்கையில் 3-ம் உள்ளதே?.

    ReplyDelete
  18. அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

    எனக்கு மிதுன லக்னம், 4ல் (கண்ணி ராசி) புதன். நான் சாதரண எஜ்ஜினியராக தான் முடிந்தது (ஆனால் என் பணியில் நல்ல பெயர் ‍தான்). எதொ ஒரு ஜொசியர் என் சிறிய பிராயத்தில் சொன்னார் எனக்கு கேந்திராதிபதி தோஷம் உள்ளது என்று. எனக்கு சுய வர்க்கதில் புதனுக்கு 7 பரல்கள் உள்ளன. தயவு செய்து விளக்கம் தரவும்.

    மிக்க நன்றி.

    Sridhar

    ReplyDelete
  19. ////ஜே கே | J K said...
    படித்துக்கொண்டேன்.
    இராசியில் புதன் கன்னியில் உச்சமாகவும் பரல் எண்ணிக்கையில் 3-ம் உள்ளதே?.////

    ஆசாமி அரவிந்தசாமி மாதிரி அழகாக (handsome)இருக்கலாம். ஆனால் உடலுக்குள்
    நோய் இருந்தால் எப்படித் தெரியும்.

    அதுபோலத்தான் ஒரு கிரகம் உச்சமாக இருந்தாலும், அது இருக்கும் இடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றை வைத்து வாங்கும் பரல்கள் 3 ஆக ஏன் அதற்குக் குறைவாகவும் இருக்கலாம்

    அப்படியிருந்தால் என்ன பலன் (அடுத்த கேள்வி இதைத்தானே கேட்ப்பீர்கள்)?
    உச்சத்திற்கு உரிய பலன் கிடைக்காது. வாங்கிய மார்க்கிற்குத் தகுந்த மாதிரிதான் சீட் கிடைக்கும்.
    கவலையை விடுங்கள் capitation fee கொடுத்துப் படித்துக்கொள்ளலாம்
    capitation fee என்னவா?
    அதுதான் இறைவழிபாடு!

    ReplyDelete
  20. ////Sridhar said...
    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
    எனக்கு மிதுன லக்னம், 4ல் (கண்ணி ராசி) புதன். நான் சாதரண எஜ்ஜினியராக தான் முடிந்தது (ஆனால் என் பணியில் நல்ல பெயர் ‍தான்). எதொ ஒரு ஜோசியர் என் சிறிய பிராயத்தில் சொன்னார் எனக்கு கேந்திராதிபதி தோஷம் உள்ளது என்று. எனக்கு சுய வர்க்கதில்புதனுக்கு 7 பரல்கள் உள்ளன. தயவு செய்து விளக்கம் தரவும்.
    மிக்க நன்றி.//////

    கண்ணியல்ல - கன்னி சுவாமி!
    7 பரல்களுக்கு உரிய பலனைத்தான் பதிவில் எழுதியிருக்கிறேனே!
    உடனே அடுத்த கேள்வி: அது எப்போது கிடைக்கும்?
    புதனின் தசாபுத்தியில் கிடைக்கும்!
    சரிதானா?

    ReplyDelete
  21. My lagna is Kadagam.
    Budhan (Lord for 3,12) is in 9th house (Meenam--Neecham) along with Sun & Mars.
    Guru is in the 5th house.
    However, 9th house gets Guru's 5th Paarvai.
    could you explain the effects?

    ReplyDelete
  22. ////Sridhar said...
    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
    எனக்கு மிதுன லக்னம், 4ல் (கண்ணி ராசி) புதன். நான் சாதரண எஜ்ஜினியராக தான் முடிந்தது (ஆனால் என் பணியில் நல்ல பெயர் ‍தான்). எதொ ஒரு ஜோசியர் என் சிறிய பிராயத்தில் சொன்னார் எனக்கு கேந்திராதிபதி தோஷம் உள்ளது என்று. எனக்கு சுய வர்க்கதில்புதனுக்கு 7 பரல்கள் உள்ளன. தயவு செய்து விளக்கம் தரவும்.
    மிக்க நன்றி.//////

    கண்ணியல்ல - கன்னி சுவாமி!
    7 பரல்களுக்கு உரிய பலனைத்தான் பதிவில் எழுதியிருக்கிறேனே!
    உடனே அடுத்த கேள்வி: அது எப்போது கிடைக்கும்?
    புதனின் தசாபுத்தியில் கிடைக்கும்!
    சரிதானா?

    ////

    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

    1. கண்ணியல்ல - கன்னி சுவாமி! (This is the first attempt for me in tamil font and request you to pardon me).

    2. கேந்திராதிபதி தோஷம் - is there anything link that that affect the effect of Budhan?

    Best Regards

    Sridhar

    ReplyDelete
  23. ////Sridhar said...
    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
    எனக்கு மிதுன லக்னம், 4ல் (கண்ணி ராசி) புதன். நான் சாதரண எஜ்ஜினியராக தான் முடிந்தது (ஆனால் என் பணியில் நல்ல பெயர் ‍தான்). எதொ ஒரு ஜோசியர் என் சிறிய பிராயத்தில் சொன்னார் எனக்கு கேந்திராதிபதி தோஷம் உள்ளது என்று. எனக்கு சுய வர்க்கதில்புதனுக்கு 7 பரல்கள் உள்ளன. தயவு செய்து விளக்கம் தரவும்.
    மிக்க நன்றி.//////

    கண்ணியல்ல - கன்னி சுவாமி!
    7 பரல்களுக்கு உரிய பலனைத்தான் பதிவில் எழுதியிருக்கிறேனே!
    உடனே அடுத்த கேள்வி: அது எப்போது கிடைக்கும்?
    புதனின் தசாபுத்தியில் கிடைக்கும்!
    சரிதானா?

    ////

    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

    1. கண்ணியல்ல - கன்னி சுவாமி! (This is the first attempt for me in tamil font and request you to pardon me).

    2. கேந்திராதிபதி தோஷம் - is there anything like that that affect the effect of Budhan?

    Best Regards

    Sridhar

    ReplyDelete
  24. //பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன்
    நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
    படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்?
    ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!
    //

    அதானே! இன்னும் படிக்கவில்லைன்னாச்சும் சொல்லிட்டு வந்துடுங்கப்பா!

    ReplyDelete
  25. அந்தச் சிறுகதையை நான் படித்தேன்! அருமையாக இருந்தது!

    (என்ன ஒன்று! உங்கள் பதிவா? அல்லது சட்டாம்பிள்ளையின் பதிவா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டது!)

    ReplyDelete
  26. ////Srinath said...
    My lagna is Kadagam.
    Budhan (Lord for 3,12) is in 9th house (Meenam--Neecham) along with Sun & Mars.
    Guru is in the 5th house.
    However, 9th house gets Guru's 5th Paarvai.
    could you explain the effects?///

    3 & 12ற் குரியவன் நீசமாகிவிட்டான் அல்லவா? பிறகு எதற்குக் கவலைபடுகிறீர்கள்?
    5ஆம் இடத்து குரு லக்கினத்தை 9ஆம் பார்வையாகப் பார்க்கிறார் அல்லவா? அவர்
    உங்களுக்கு அவ்வப்போது கைகொடுப்பார். கவலையின்றி இருங்கள்!

    ReplyDelete
  27. //////Sridhar said...
    ////Sridhar said...
    அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
    எனக்கு மிதுன லக்னம், 4ல் (கண்ணி ராசி) புதன். நான் சாதரண எஜ்ஜினியராக தான் முடிந்தது (ஆனால் என் பணியில் நல்ல பெயர் ‍தான்). எதொ ஒரு ஜோசியர் என் சிறிய பிராயத்தில் சொன்னார் எனக்கு கேந்திராதிபதி தோஷம் உள்ளது என்று. எனக்கு சுய வர்க்கதில்புதனுக்கு 7 பரல்கள் உள்ளன. தயவு செய்து விளக்கம் தரவும்.
    மிக்க நன்றி.//////
    கண்ணியல்ல - கன்னி சுவாமி!
    7 பரல்களுக்கு உரிய பலனைத்தான் பதிவில் எழுதியிருக்கிறேனே!
    உடனே அடுத்த கேள்வி: அது எப்போது கிடைக்கும்?
    புதனின் தசாபுத்தியில் கிடைக்கும்!
    சரிதானா?
    //// அய்யா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

    1. கண்ணியல்ல - கன்னி சுவாமி! (This is the first attempt for me in tamil font and request you to pardon me). 2. கேந்திராதிபதி தோஷம் - is there anything link that that affect the effect of Budhan?
    Best Regards
    Sridhar///////

    கேந்திராதிபத்ய தோஷம் பொதுவாகத் தான் சார்ந்துள்ள வீடுகளுக்குரிய செயல்பாடுகளைத் தாமதப்படுத்தும்
    அவ்வளவுதான் கவலைப்பட ஒன்றுமில்லை!

    ReplyDelete
  28. /////நாமக்கல் சிபி said...
    //பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன்
    நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
    படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்?
    ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!
    // அதானே! இன்னும் படிக்கவில்லைன்னாச்சும் சொல்லிட்டு வந்துடுங்கப்பா!////

    அதானே! உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியவில்லை!

    ReplyDelete
  29. ////நாமக்கல் சிபி said...
    அந்தச் சிறுகதையை நான் படித்தேன்! அருமையாக இருந்தது!
    (என்ன ஒன்று! உங்கள் பதிவா? அல்லது சட்டாம்பிள்ளையின்
    பதிவா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டது!)/////

    அவர் 40 பக்கங்கள் அல்லவா பதிவிடுவார். நான் பதிவிட்டது (A4 size) 7 பக்கப் பதிவுதான்!

    ReplyDelete
  30. வணக்கம் அய்யா.
    இன்றைய பாடம் அருமை.
    கதை நன்கு ரசித்துப்படித்தேன் .

    எனக்கு கன்னி லக்னம் , புதன் 11 ஆம் வீட்டில் சுய வர்கத்தில் 6 பரல்கள் ஆனால் பகை வீட்டில் . புதன் பகை வீட்டில் உள்ளதால் பலன் மாறுமா ?

    அன்புடன்,
    GK, BLR.

    ReplyDelete
  31. ஐயா,

    ஒரு ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் ஆனால் என்ன ஆகும்? அதனால் கெடு பலன்கள் உண்டா? புதன் சூரியனிடமிருந்து 7 பாகைகள் தாண்டி உள்ளது. ஆனால் சுயவர்க்கத்தில் புதனுக்கு 7 பரல்கள்.

    ReplyDelete
  32. ///நாமக்கல் சிபி said...
    //பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன். நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
    படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்? ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!//
    அதானே! இன்னும் படிக்கவில்லைன்னாச்சும் சொல்லிட்டு வந்துடுங்கப்பா!///

    பெஞ்சு மேல ஏத்துனாத்தான் நீ சரிப்படுவ.. கிளாஸ்ரூம்ல வந்து கிண்டலா பண்ற..?

    ReplyDelete
  33. //பெஞ்சு மேல ஏத்துனாத்தான் நீ சரிப்படுவ.. கிளாஸ்ரூம்ல வந்து கிண்டலா பண்ற..?//

    ஐயே! வாத்தியாரே ஒத்துக்கிட்டாரு!
    இடையில் நீர் என்ன?

    பேசாமல் இரும்!

    ReplyDelete
  34. Ayya.. padhivu miga arumai... Enakum Ezhil Bhudan.. Thulam lagnam.. Lagnathil sani Ucham,,, Ucham petra Sani baghavan ezhil irukum Bhudhanai parpathal enna palan ayya ??

    ReplyDelete
  35. Dear Sir

    Good Intro....with good punch and notes....

    I am too Simha lagna with lagna lord in lagna with budhan and sani.

    Budhan is retrograde and vargotamma.

    Ashtavarka points for budhan is 5.

    My palan will be:
    Since budhan is retrograde (its not combust) and it is vargotamma with 5 points, the benefits will reach me little latter,but kinda sure that it wont be rejected because the points is 5.

    Is my prediction is good enough...

    Since sani is with budhan - will the thinking you mentioned is little scary to me:-)))

    Can you explain me?

    Thanks
    Shankar

    ReplyDelete
  36. Ayya.. padhivu miga arumai... Enakum Ezhil Bhudan.. Thulam lagnam.. Lagnathil sani Ucham,,, Ucham petra Sani baghavan ezhil irukum Bhudhanai parpathal enna palan ayya ??

    Budhan has 6 Ashtavargam points

    ReplyDelete
  37. //////Anandhi said...
    ஐயா,
    ஒரு ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் ஆனால் என்ன ஆகும்? அதனால் கெடு பலன்கள் உண்டா? புதன் சூரியனிடமிருந்து 7 பாகைகள் தாண்டி உள்ளது. ஆனால் சுயவர்க்கத்தில் புதனுக்கு 7 பரல்கள்./////

    அஸ்தமனம் பெற்றால் நல்லதல்ல! ஆனால் வேறு அம்சங்களால் புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடன் இருக்கிறார். அது மிகவும் சிறப்பு. எல்லாம் நல்லவிதமாக நடக்கும்!
    எதற்குக் கவலை?

    ReplyDelete
  38. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ///நாமக்கல் சிபி said...
    //பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன். நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
    படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்? ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!//
    அதானே! இன்னும் படிக்கவில்லைன்னாச்சும் சொல்லிட்டு வந்துடுங்கப்பா!///
    பெஞ்சு மேல ஏத்துனாத்தான் நீ சரிப்படுவ.. கிளாஸ்ரூம்ல வந்து கிண்டலா பண்ற..?////

    விடுங்கள் தமிழரே! அவர் சுபாவம் கலாய்த்தல். சுபாவத்தை மாற்ற முடியுமா?
    டேக் இட் ஈஸி!:-))))))

    ReplyDelete
  39. //////நாமக்கல் சிபி said...
    //பெஞ்சு மேல ஏத்துனாத்தான் நீ சரிப்படுவ.. கிளாஸ்ரூம்ல வந்து கிண்டலா பண்ற..?//
    ஐயே! வாத்தியாரே ஒத்துக்கிட்டாரு!
    இடையில் நீர் என்ன?
    பேசாமல் இரும்!/////

    வகுப்பின் சட்டாம்பிள்ளையிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது!அவர் பணியை அவர் செய்கிறார்
    அதில் தவறொன்றுமில்லை!:-)))

    ReplyDelete
  40. //////Prabhu said...
    Ayya.. padhivu miga arumai... Enakum Ezhil Bhudan.. Thulam lagnam.. Lagnathil sani Ucham,,, Ucham petra Sani baghavan ezhil irukum Bhudhanai parpathal enna palan ayya ??/////

    துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். (4 & 5ஆம் வீடுகளுக்கு உரியவன் - ஒரு கேந்திரம் மற்றும் ஒரு திரிகோண வீடுகள்). புதன் துலா லக்கினத்திற்குப் பாக்கியாதிபதி. (விரைய அதிபதியும் கூட)
    சனிக்கு, புதன் நண்பன். யோககாரகனும், பாக்கியாதிபதியும் mutual understandingல் இருப்ப்தால் அவர்களுடைய தசாபுத்திகள் சிறப்பாக இருக்கும். உயர்வாக இருக்கும்!

    ReplyDelete
  41. //////அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா./////

    நன்றி பாரதி!

    ReplyDelete
  42. //////hotcat said...
    Dear Sir
    Good Intro....with good punch and notes....
    I am too Simha lagna with lagna lord in lagna with budhan and sani.
    Budhan is retrograde and vargotamma.
    Ashtavarka points for budhan is 5.
    My palan will be:
    Since budhan is retrograde (its not combust) and it is vargotamma with 5 points, the benefits will reach me little latter,but kinda sure that it wont be rejected because the points is 5.
    Is my prediction is good enough..///

    தேறிவிட்டீர்கள்!

    //////Since sani is with budhan - will the thinking you mentioned is little scary to me:-)))
    Can you explain me?
    Thanks
    Shankar//////

    அது பொதுப்பலன்தான் கவலை எதற்கு?

    ReplyDelete
  43. Prabhu said...
    Ayya.. padhivu miga arumai... Enakum Ezhil Bhudan.. Thulam lagnam.. Lagnathil sani Ucham,,, Ucham petra Sani baghavan ezhil irukum Bhudhanai parpathal enna palan ayya ??
    Budhan has 6 Ashtavargam points/////
    (எனக்கும்..........)
    அதே பலன்கள்தான்!

    ReplyDelete
  44. Sir,

    In one's horo if it's meena lagna and budan in 11th place along with sevvai what would be the effect because it is said that buda and chevvai are enemies.and who will be the powerful one in the particular place

    ReplyDelete
  45. ஐயா...

    நல்ல பதிவு நன்றி,ஒரு சிறிய சந்தேகம் மீனம் மற்றும் தனசு லக்கினத்துக்கு புதன் பாதகாதிபதி, ஆட்சி மற்றும் திரிகோணத்தில் இருந்தால் எப்படி நன்மை செய்வான்(ர்)?

    ReplyDelete
  46. ஹலோ சார்,

    //செவ்வாய், புதன், சுக்கிரன்
    ஆகிய மூன்று கிரகங்களும்
    அந்தப் பின்சுற்றல்தான்
    வக்கிரம் எனப்படும். //

    சரி நீங்க இந்த 3 கிரகம் மட்டும் தான் வக்கிரமாக இருக்குமா? அல்லது மற்ற கிரகங்களுக்கும் உண்டா?

    இல்லைன்னா எனக்கு சனி வ ன்னு குறிக்கப் பட்டுள்ளதே, அப்ப அதுக்கும் இந்த அர்த்தம் தானா?
    அப்படின்னா நீங்க சொன்னது அந்த 3 கிரகத்துக்கு மட்டும் தானா பொருந்தும்?

    ReplyDelete
  47. ஹலோ சார்,

    புதனுக்கு நீங்க குடுத்த விளக்கங்களும் சரி, அழகான கதயோடு ஆரம்பித்த விதமும் சரி ரொம்ப அழகாக உள்ளது.
    கூடவே கதையும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  48. ////Srinath said...
    My lagna is Kadagam.
    Budhan (Lord for 3,12) is in 9th house (Meenam--Neecham) along with Sun & Mars.
    Guru is in the 5th house.
    However, 9th house gets Guru's 5th Paarvai.
    could you explain the effects?///

    3 & 12ற் குரியவன் நீசமாகிவிட்டான் அல்லவா? பிறகு எதற்குக் கவலைபடுகிறீர்கள்?
    5ஆம் இடத்து குரு லக்கினத்தை 9ஆம் பார்வையாகப் பார்க்கிறார் அல்லவா? அவர்
    உங்களுக்கு அவ்வப்போது கைகொடுப்பார். கவலையின்றி இருங்கள்

    Thanks for the explanation.
    3rd house represents brothers... Will it cause any effect to my brother? My current dasa is Sevvai & Butthi is Budhan...Thats why am a bit curious....

    Looking forward for your explanation.

    ReplyDelete
  49. வணக்கம் அய்யா.
    இன்றைய பாடம் அருமை.
    //கதை நன்கு ரசித்துப்படித்தேன் .

    எனக்கு கன்னி லக்னம் , புதன் 11 ஆம் வீட்டில் சுய வர்கத்தில் 6 பரல்கள் ஆனால் பகை வீட்டில் . புதன் பகை வீட்டில் உள்ளதால் பலன் மாறுமா ?

    அன்புடன்,
    GK, BLR.//

    Please clarify.

    ReplyDelete
  50. //////mannar said...
    Sir,
    In one's horo if it's meena lagna and budan in 11th place along with sevvai what would be the effect because it is said that buda and chevvai are enemies.and who will be the powerful one in the particular place////

    லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தால் - அது லாப ஸ்தானம் (பலன்: minimum efforts; Maximum benefits)
    புதனுக்கு மேஷம் பகை வீடல்ல. சம வீடு. அதுவும் இல்லாமல் புதன் யாருடனும் ஒட்டிக்கொள்ளக்கூடியவன் neutral planet. ஆகவே அங்கே புதனுக்கும் வலிமை உண்டு - அவன் செவ்வாயுடன் அஸ்தமணம் பெறாமல் இருக்க வேண்டும்! (செவ்வாய்க்கும், புதனுக்கும் இடைவெளி குறைந்தது 5 பாகைகள் இருக்க வேண்டும்)

    ReplyDelete
  51. //////மதி said...
    ஐயா...
    நல்ல பதிவு நன்றி,ஒரு சிறிய சந்தேகம் மீனம் மற்றும் தனசு லக்கினத்துக்கு புதன் பாதகாதிபதி, ஆட்சி மற்றும் திரிகோணத்தில் இருந்தால் எப்படி நன்மை செய்வான்(ர்)?/////

    அஷ்டவர்க்கத்தைப் பாருங்கள். புதன் 5 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருந்தால் நிச்சயம் செய்வார்!

    ReplyDelete
  52. //////Sumathi. said...
    ஹலோ சார்,
    //செவ்வாய், புதன், சுக்கிரன்
    ஆகிய மூன்று கிரகங்களும்
    அந்தப் பின்சுற்றல்தான்
    வக்கிரம் எனப்படும். //
    சரி நீங்க இந்த 3 கிரகம் மட்டும் தான் வக்கிரமாக இருக்குமா? அல்லது மற்ற கிரகங்களுக்கும் உண்டா?/////

    செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவற்றுடன் குரு, சனி ஆகியவற்றிற்கும் வக்கிர சுழற்சி உண்டு
    ராகுவும் கேதுவும் மொத்தமாக சுற்றுவதே வக்கிரகதியில்தான்:-))))

    ReplyDelete
  53. //////Sumathi. said...
    ஹலோ சார்,
    புதனுக்கு நீங்க குடுத்த விளக்கங்களும் சரி, அழகான கதையோடு ஆரம்பித்த விதமும் சரி ரொம்ப அழகாக உள்ளது. கூடவே கதையும் நன்றாக உள்ளது./////

    தாய்க்குலம் மகிழ்ந்து சொன்னால் போதும். அதைவிடப் பெரிய பாராட்டு என்ன இருக்கிறது சகோதரி?

    ReplyDelete
  54. //////Srinath said...
    ////Srinath said...
    My lagna is Kadagam.
    Budhan (Lord for 3,12) is in 9th house (Meenam--Neecham) along with Sun & Mars.
    Guru is in the 5th house.
    However, 9th house gets Guru's 5th Paarvai.
    could you explain the effects?///
    3 & 12ற் குரியவன் நீசமாகிவிட்டான் அல்லவா? பிறகு எதற்குக் கவலைபடுகிறீர்கள்?
    5ஆம் இடத்து குரு லக்கினத்தை 9ஆம் பார்வையாகப் பார்க்கிறார் அல்லவா? அவர்
    உங்களுக்கு அவ்வப்போது கைகொடுப்பார். கவலையின்றி இருங்கள்
    Thanks for the explanation.
    3rd house represents brothers... Will it cause any effect to my brother? My current dasa is Sevvai & Butthi is Budhan...Thats why am a bit curious....
    Looking forward for your explanation./////

    அதையெல்லாம் மிகவும் நுணுக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டாம். சில சமயங்களில் கணிப்புத் தவறாகி விடும் (உங்கள் சகோதரரின் ஜாதகம் உங்களுடையதைவிட சூப்பாராக இருந்தால், அவருடைய மூன்றாம் இடத்தை வைத்துத்தான் உங்களின் உறவு என்றாகிவிடும்)

    ReplyDelete
  55. ///////Geekay said...
    வணக்கம் அய்யா.
    இன்றைய பாடம் அருமை.
    //கதை நன்கு ரசித்துப்படித்தேன் .
    எனக்கு கன்னி லக்னம் , புதன் 11 ஆம் வீட்டில் சுய வர்கத்தில் 6 பரல்கள் ஆனால் பகை வீட்டில்.புதன் பகை வீட்டில் உள்ளதால் பலன் மாறுமா?
    அன்புடன்,
    GK, BLR.//////

    பலன் மாறாது. புதனின் தசாபுத்திகளில் பலன்கள் நடைபெறும்!
    6 பரல்களே அதைச் சொல்கிறதே. ஏன் வீனான சந்தேகம்?

    ReplyDelete
  56. ////Srinath said...
    My lagna is Kadagam.
    Budhan (Lord for 3,12) is in 9th house (Meenam--Neecham) along with Sun & Mars.
    Guru is in the 5th house.
    However, 9th house gets Guru's 5th Paarvai.
    could you explain the effects?///
    3 & 12ற் குரியவன் நீசமாகிவிட்டான் அல்லவா? பிறகு எதற்குக் கவலைபடுகிறீர்கள்?
    5ஆம் இடத்து குரு லக்கினத்தை 9ஆம் பார்வையாகப் பார்க்கிறார் அல்லவா? அவர்
    உங்களுக்கு அவ்வப்போது கைகொடுப்பார். கவலையின்றி இருங்கள்
    Thanks for the explanation.
    3rd house represents brothers... Will it cause any effect to my brother? My current dasa is Sevvai & Butthi is Budhan...Thats why am a bit curious....
    Looking forward for your explanation./////

    அதையெல்லாம் மிகவும் நுணுக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டாம். சில சமயங்களில் கணிப்புத் தவறாகி விடும் (உங்கள் சகோதரரின் ஜாதகம் உங்களுடையதைவிட சூப்பாராக இருந்தால், அவருடைய மூன்றாம் இடத்தை வைத்துத்தான் உங்களின் உறவு என்றாகிவிடும்)

    Thank you very much Sir

    ReplyDelete
  57. ///////Geekay said...
    வணக்கம் அய்யா.
    இன்றைய பாடம் அருமை.
    //கதை நன்கு ரசித்துப்படித்தேன் .
    எனக்கு கன்னி லக்னம் , புதன் 11 ஆம் வீட்டில் சுய வர்கத்தில் 6 பரல்கள் ஆனால் பகை வீட்டில்.புதன் பகை வீட்டில் உள்ளதால் பலன் மாறுமா?
    அன்புடன்,
    GK, BLR.//////

    பலன் மாறாது. புதனின் தசாபுத்திகளில் பலன்கள் நடைபெறும்!
    6 பரல்களே அதைச் சொல்கிறதே. ஏன் வீனான சந்தேகம்?//

    நன்றி அய்யா, மிக்க நன்றி.

    ReplyDelete
  58. நல்லா துவைச்சுக் காய போட்டுருக்கீங்க!!

    //வக்கிரம் என்றால் என்ன?// ஜகன்னாத ஹோராவில் (Ju) (Sa) அப்படின்னு இருந்தால், வக்கிரமா? (என் தோழியின் பிள்ளைக்கு லக்னத்திலிருந்து ஐந்தாமிடத்தில் குருவும் சனியும் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது...) லக்னாதிபதி சனி; சுயவர்க்கப் பரல்கள்: சனிக்கு 3, குருவுக்கு 4. நன்றி!

    ReplyDelete
  59. //ஜகன்னாத ஹோராவில் (Ju) (Sa) அப்படின்னு இருந்தால், வக்கிரமா? //

    கெக்கேபிக்குணி அக்கா!

    அடைப்புக் குறிக்குள் போட்டிருந்தால் வக்கிர கதி என்றுதான் அர்த்தம்!

    ஆக குருவும், சனியும் வக்கிர கதியில் என்றுதான் பொருள்!

    ReplyDelete
  60. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நல்லா துவைச்சுக் காய போட்டுருக்கீங்க!!
    //வக்கிரம் என்றால் என்ன?// ஜகன்னாத ஹோராவில் (Ju) (Sa) அப்படின்னு இருந்தால், வக்கிரமா? (என் தோழியின் பிள்ளைக்கு லக்னத்திலிருந்து ஐந்தாமிடத்தில் குருவும் சனியும் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது...) லக்னாதிபதி சனி; சுயவர்க்கப் பரல்கள்: சனிக்கு 3, குருவுக்கு 4. நன்றி!/////

    வக்கிரம் என்றால் என்னவென்று பதிவில் சொல்லியிருக்கிறேன் சகோதரி!
    ஜெ.ஹோ. வில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் கிரகம் வக்கிரகதியில் இருப்பதைக் குறிக்கும்

    ReplyDelete
  61. ////நாமக்கல் சிபி said...
    //ஜகன்னாத ஹோராவில் (Ju) (Sa) அப்படின்னு இருந்தால், வக்கிரமா? //
    கெக்கேபிக்குணி அக்கா!
    அடைப்புக் குறிக்குள் போட்டிருந்தால் வக்கிர கதி என்றுதான் அர்த்தம்!
    ஆக குருவும், சனியும் வக்கிர கதியில் என்றுதான் பொருள்!/////

    புரிதலுக்கும் அதை முன் மொழிய வந்ததற்கும் நன்றி சிபியாரே!

    ReplyDelete
  62. // ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச்
    செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான். ஒசாமா
    பின்லேடனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது என்று
    படித்திருக்கிறேன். //

    - 2 கிர‌க‌ம் வ‌க்கிர‌மாகி இருந்தால் பாதி தீவிர‌வாதியா?

    - ஜாத‌க‌த்தில‌ 3 கிர‌க‌ம் வ‌ர்க்கோத்த‌ம‌ம் பெற்றால் எவ‌ள‌வு வீத‌ம் ப‌ல‌ன் கிடைக்கும்?

    ReplyDelete
  63. ஆச்சி, சரியாக் கேட்டீங்க:-))) அய்யா, நீங்க ஆச்சி கேள்விக்கு //- 2 கிர‌க‌ம் வ‌க்கிர‌மாகி இருந்தால் பாதி தீவிர‌வாதியா?// பதில் சொல்லிடுங்க, நான் தோழிகிட்ட கோழி சொல்லிடுறேன்.

    ReplyDelete
  64. /////Aachi said...
    // ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச்
    செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான். ஒசாமா
    பின்லேடனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது என்று
    படித்திருக்கிறேன். //
    - 2 கிர‌க‌ம் வ‌க்கிர‌மாகி இருந்தால் பாதி தீவிர‌வாதியா?
    - ஜாத‌க‌த்தில‌ 3 கிர‌க‌ம் வ‌ர்க்கோத்த‌ம‌ம் பெற்றால் எவ‌ள‌வு வீத‌ம் ப‌ல‌ன் கிடைக்கும்?//////

    பத்தடி தாண்டினால் முழுக்கிணறையும் தாண்டிவிடலாம் என்று சொல்லும்போது. ஐந்தடி அல்லது ஏழடி தூரம்தான் தாண்டமுடியும் என்றால் பாதிக் கிணறைதாண்டி விட முடியுமா என்று கேட்பதுபோல் இருக்கிறது ஆச்சி உங்கள் கேள்வி!

    பத்தடிக்குக் குறைவாகத் தாண்டினால், அது எவ்வளவு அடியாக இருந்தாலும் கிணற்றுக்குள்தான் விழ நேரிடும்.

    அதானால், மூண்று கிரகங்கள் வக்கிரம் என்பதற்கான விதிமுறை குறையும் போது, அதற்கான பலன்கள் வேறு. ஆச்சி இப்போது புரியும் என்று நினைக்கிறேன். புரியவில்லை என்று சொன்னால், கெக்கேபிக்குணி அக்காவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது அது வலிமையுள்ளதாகிவிடும். பலன்களும் இரட்டிப்பாகிவிடும். நல்ல கிரகங்கள் என்றால் நல்ல பலன்கள். தீய கிரகங்கள் என்றால் தீயபலன்கள்.

    ReplyDelete
  65. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஆச்சி, சரியாக் கேட்டீங்க:-))) அய்யா, நீங்க ஆச்சி கேள்விக்கு //- 2 கிர‌க‌ம் வ‌க்கிர‌மாகி இருந்தால் பாதி தீவிர‌வாதியா?// பதில் சொல்லிடுங்க, நான் தோழிகிட்ட கோழி சொல்லிடுறேன்./////

    அக்கா, உங்கள் தோழிக்குப் பதில் சொல்லிவிட்டேன், படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  66. புரியுது ஐயா...இருந்தாலும் சில கேள்விகள்..

    //கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது அது வலிமையுள்ளதாகிவிடும். பலன்களும் இரட்டிப்பாகிவிடும். நல்ல கிரகங்கள் என்றால் நல்ல பலன்கள். தீய கிரகங்கள் என்றால் தீயபலன்கள்.//

    சரி, அப்போ ஒரு கெட்ட கிரகம் பகை பெற்று, வக்கிரம் பெற்று, நவாம்சத்தில் வர்க்கோத்தமமும் பெற்றால்..
    கெட்ட பலன்கள் இரட்டிப்பு ஆகிவிடுமா?
    இதே கிரகத்தை சந்திரன் பார்த்தால் கெட்ட பலன்கள் விலகிவிடுமா?
    (நீசம் பெற்ற கிரகத்தை சந்திரன் பார்த்தால் நீசபங்கம் அல்லவா..அதே போல‌)

    ReplyDelete
  67. Aachi said...
    புரியுது ஐயா...இருந்தாலும் சில கேள்விகள்.
    //கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது அது வலிமையுள்ளதாகிவிடும். பலன்களும் இரட்டிப்பாகிவிடும். நல்ல கிரகங்கள் என்றால் நல்ல பலன்கள். தீய கிரகங்கள் என்றால் தீயபலன்கள்.//
    சரி, அப்போ ஒரு கெட்ட கிரகம் பகை பெற்று, வக்கிரம் பெற்று, நவாம்சத்தில் வர்க்கோத்தமமும் பெற்றால்..
    கெட்ட பலன்கள் இரட்டிப்பு ஆகிவிடுமா?
    இதே கிரகத்தை சந்திரன் பார்த்தால் கெட்ட பலன்கள் விலகிவிடுமா?
    (நீசம் பெற்ற கிரகத்தை சந்திரன் பார்த்தால் நீசபங்கம் அல்லவா..அதே போல‌)//////

    ஆச்சி குழப்பம் வேண்டாம். ஜாதகத்தையும் மீறி இறையருளால் பல நல்லவைகள் நடக்கும்
    ஆகவே இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நம்பிக்கையோடு இருங்கள்!

    நீங்கள் சொல்வது உண்மைதான். சுபக்கிரகங்கள் பார்த்தால் தீமைகள் குறைந்துவிடும்!
    நீசமான கிரகத்துடன் ஒரு உச்சமான கிரகம் கூட்டணி போட்டு அமர்ந்திருந்தால்
    தான் நீசபங்க ராஜயோகம் ஏற்படும்!

    ReplyDelete
  68. சார்
    கதை அருமை,
    உடனே என் மனதுக்கு தோன்றியது

    உடலுக்கு சுகம் கொடுக்க இயந்திரங்கள் வாங்கி விட்டோம்
    மனதுக்கு சுகம் கொடுக்கும் மனிதத்தை தொலைத்து விட்டோம்

    ReplyDelete
  69. /////MarmaYogi said...
    சார்
    கதை அருமை,
    உடனே என் மனதுக்கு தோன்றியது

    உடலுக்கு சுகம் கொடுக்க இயந்திரங்கள் வாங்கி விட்டோம்
    மனதுக்கு சுகம் கொடுக்கும் மனிதத்தை தொலைத்து விட்டோம்/////

    உண்மைதான் நண்பரே!
    நன்றி!

    ReplyDelete
  70. தங்கள் நெடுனாள் வாசகன். ஒரு சந்தேகம். சுயவர்க்கம் என்று சொல்கிறீர்கள் சரி, இதை என் ஜாதகத்தில் எப்படி பார்ப்பது. சர்வார்ஷக வர்கம் 337 பரல்களுடன் உள்ளது, இது தெரியும்.
    உதாரணமாக புதன் சுயவர்க்க பரல் பார்க்க புதனின் அட்டவணையில் பார்க்க வேண்டுமா? அப்படி என்றால் சுயவர்க்க பரல் என்பது, என் ஜாதகத்தில் புதன் இருக்கும் இடத்தில் இருக்கும் இடத்திலுள்ள பரல்களா அல்லது மிதுனம் கன்னி வீடுகளி பார்க்க வேண்டுமா? நன்றி.

    ReplyDelete
  71. சுயவர்க்க பரல் பார்ப்பதை பழைய அஷ்டவர்க்க பாடத்தில் பார்த்து தெரிந்து கொண்டென் . னன் றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com