மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.08

தங்கத் திருவோடு தந்த மனமாற்றம்!

துறவி ஒருவர் இருந்தார். முற்றும் துறந்தவர். நகருக்கு ஒதுக்குப்புரத்தில்
ஒரு தோட்டம். தோட்டத்தின் நடுவில் தென்னங்கீற்றுக்களால் வேயப்பெற்ற
ஒரு பெரிய கூரைக் கொட்டகை. அதுதான் அவருடைய வசிப்பிடம்.

இரண்டு ஜோடி வேட்டி துண்டுகள். ஒரு திருவோடு. இவைதான் அவருடைய
சொத்து.

காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் காலைக்கடன்களை முடித்து
விட்டு வந்து தோட்டத்தின் முன்புறத்தில் உள்ள அரசமரத்தடியில் வந்து
அமர்ந்து விடுவார். பிறகு ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபடுவார்.

அந்தப் பகுதி மக்கள் அவருக்கு அவ்வப்போது உணவைக் கொண்டு வந்து
கொடுத்து விடுவார்கள். திருவோட்டில் வாங்கி வைத்துக் கொள்வார். பசிக்கும்
போது மட்டும் சாப்பிடுவார்.

தினந்தோறும் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் வந்து காத்திருக்கும்
பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளுக்குத்
தீர்வு சொல்லுவார் அல்லது ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லுவார்.

அவருக்கு உயிர்களிடத்தில் அலாதியான அன்பு. நாளடைவில் அவர் மிகவும்
பிரபலமாகி மக்கள் கூட்டம் அதிகமாக வரத்துவங்கியது. அவரைப் பற்றிய
செய்தி அந்நாட்டு மன்னனின் காதில் விழ, மன்னனே ஒரு நாள் அங்கு வந்து
அவரைப் பார்த்துவிட்டுப் போனான்.

நாட்டின் பிரச்சினைகள் சிலவற்றை மன்னன் அவரிடம் சொல்ல, அவர்
அவற்றிற்கும் தீர்வு சொன்னார். மன்னன் மனம் மகிழ்ந்து விட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து, மன்னன் தன் பல்லக்கை அங்கே அனுப்பி அவரை
அரண்மணைக்கு அழைத்துவரச் செய்து உபசரித்தான். அவருடனேயே
அரண்மணையில் தங்கிவிடும்படி கேட்டுக் கொண்டான். துறவி மறுத்துவிட்டார்.

அவர் மறுத்து விடுவார் என்று ஊகம் செய்து வைத்திருந்த மன்னன், அவர்
விருப்பப்படி அவரைத் திரும்பிப் போகச்சொன்னதோடு, அவருக்குப் பரிசாக
இரண்டு கிலோ அளவு தங்கத்தில் செய்த திருவோடு ஒன்றையும் கொடுத்தனுப்பினான்.

தங்கத் திருவோட்டைப் புன்னகையுடன் முதலில் பெற்றுக்கொள்ள மறுத்த
துறவியார், மன்னைன் வற்புறுத்தலுக்காகக் கையில் எடுத்துக் கொண்டு,
தன் குடிலுக்குத் திரும்பினார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்று இரவு, நடு நிசி. துறவியார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மன்னன்
கொடுத்த தங்கத் திருவோடு வசதியாக இருந்ததால், அதைக் குப்புறக் கவிழ்த்து,
அதன் மேல் தலைவைத்துப் படுத்திருந்தார்.

சுற்றுப்புறச்சுவர்களில் தப்பைகளால் அடிக்கப்பட்டிருந்த மூங்கில் ஜன்னல் வழியாக
நிலவொளி வெளிச்சம் கீற்றாக உள்ளே விழுந்து கொண்டிருந்தது.

மன்னர் துறவிக்குத் தங்கத்திருவோட்டைப் பரிசாகக் கொடுத்ததைப் பார்த்த
சிப்பந்தி ஒருவன் அதைத் திருடிக்கொண்டுபோய்விடும் நோக்கத்துடன், அன்று
இரவு துறவியின் குடிலுக்குள் நுழைந்து, இருட்டில் அதைத் தேட ஆரம்பித்தான்.

ஒரு ஆளின் நடமாட்டம் குடிலுக்குள் இருப்பதை அறிந்த துறவி, விழித்துக்
கொண்டு விட்டார்.

"யாரப்பா அது?" என்று வினவினார்.

வந்தவன் பேசாமல் நின்றான்.

துறவி மீண்டும் கேட்டார்,"என்ன தங்கத் திருவோட்டைத் தேடுகிறாயா?"

அவன் மெல்லிய குரலில், "ஆமாம்!" என்றான்.

"இந்தா எடுத்துக்கொள்" என்று சொல்லித் தன் தலைக்கு அணைவாக வைத்து
படுத்திருந்த திருவோட்டைத் தூக்கி அவன் கையில் கொடுத்த துறவியார்,
அடுத்த நொடியில் மீண்டும் படுத்துக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்து விட்டார்

திகைத்துப்போன திருடன், சற்று நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான்

அதோடு, துறவியார் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாரோ என்று
பயந்தான். மேலும் ஒரு நாழிகை அளவு குடிசைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்து
விட்டு, துறவியார் உண்மையிலேயே நித்திரையில் ஆழந்துவிட்டார், கூச்சலிட்டு
யாரையும் வரவழைக்கமாட்டார் என்று தெரிந்தவுடன், நடையைக் கட்டினான்.

++++++++++++++++++++++++++++++++++

அடுத்த நாள் மாலை, துறவியாரின் குடிலுக்கு வந்த சிப்பாய், தங்கத் திருவோட்டைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழுந்து கதறி அழுதவன், சொன்னான்.

"சாமி, இந்தத் திருவோட்டைத்தூக்கிக் கொண்டு போனதில் இருந்து என் நிம்மதியும்
போய்விட்டது. தூக்கமும் போய்விட்டது. அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்
இதை என்னிடம் எடுத்துக் கொடுத்த மறு நொடியிலேயே நீங்கள் மீண்டும்
நித்திரையில் ஆழ்ந்துவிட்டீர்கள். எதன் மீதும் பற்றற்ற உங்கள் மனம்தான்
அதற்குக் காரணம். நான் ஆசா பாசங்களை ஒழிப்பது என்று முடிவிற்கு வந்து
விட்டேன். உங்கள் திருவோடு இதோ இருக்கிறது. என்னை மன்னித்து அதை ஏற்றுக்
கொள்ளுங்கள். என்னையும் உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். பற்று அற்ற
நிலையை எப்படி அடைவது என்ற பாடத்தை எனக்குப் போதித்து அருளுங்கள்!"

(முற்றும்)
-----------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?"

"உண்டு! அடுத்துவரும் பதிவுகளில் அது தெரியும். அடுத்துவரும் பாடம்
பன்னிரெண்டாம் வீட்டைப் பற்றியது. அது விரைய வீடு மட்டுமல்ல -
ஞான வீடும் அதுதான். இறைவனின் திருவடியை அடையும் மோட்சவீடும்
அதுதான்!"
-----------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

25 comments:

 1. நல்ல கதை. இது போன்ற (எக்ஸ்ட்ரா எக்ஸ்டரா சுற்றல் இல்லாத) கதைகள் மிகவும் பிடித்தவை.

  ReplyDelete
 2. /////கோவி.கண்ணன் said...
  நல்ல கதை. இது போன்ற (எக்ஸ்ட்ரா எக்ஸ்டரா சுற்றல் இல்லாத) கதைகள் மிகவும் பிடித்தவை.///

  வாங்க! வாங்க! இன்றைக்கு opening bowler நீங்கள்தான்!
  முதல் பந்தை அடிக்க முடியாதபடி வீசியுள்ளீர்கள்! - No run:-))))

  ReplyDelete
 3. I somewhere read about this story. Thanks for sharing.

  ReplyDelete
 4. Thanks for this story and I will eagerly wait for the post about 12 th house.

  ReplyDelete
 5. அருமையான கதை.
  அடுத்த பாடத்துக்கு காத்திருக்கிறேம்.

  மாணவர்கள்

  ReplyDelete
 6. வாத்தியாரே.

  கதை அருமை.. நல்ல உபதேசம்.. ஏற்றுக் கொள்கிறேன்..

  என்னிடம் அழுக்குப் பிடித்த எனக்குப் பிடிக்காத கெட்ட மனது இருந்து கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது..

  இதை திருடவோ, வாங்கவோ யாராவது வருவார்களா..

  அது என்னை விட்டுத் தொலைந்து போனால் முருகன் அழைக்கும்வரையில் நிம்மதியாக இருப்பேன்..

  ReplyDelete
 7. Wow! Wonderful story!

  Keep posting such meaningful stories.

  Best Wishes

  Sridhar

  ReplyDelete
 8. /////hotcat said...
  I somewhere read about this story. Thanks for sharing.////

  நானும் முன்பு கேட்ட கதைதான்!

  ReplyDelete
 9. /////Ragu Sivanmalai said...
  Thanks for this story and I will eagerly wait for the post about 12 th house./////

  இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்.

  ReplyDelete
 10. //////திருநெல்வேலி கார்த்திக் said...
  அருமையான கதை.
  அடுத்த பாடத்துக்கு காத்திருக்கிறேம்.
  மாணவர்கள்/////

  ஆகா, மாணவர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

  ReplyDelete
 11. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே.
  கதை அருமை.. நல்ல உபதேசம்.. ஏற்றுக் கொள்கிறேன்..
  என்னிடம் அழுக்குப் பிடித்த எனக்குப் பிடிக்காத கெட்ட மனது இருந்து கொண்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது..
  இதை திருடவோ, வாங்கவோ யாராவது வருவார்களா..
  அது என்னை விட்டுத் தொலைந்து போனால் முருகன் அழைக்கும்வரையில் நிம்மதியாக இருப்பேன்../////

  மனதில் கெட்ட மனது நல்ல மனது என்று ஒன்றும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் அழுக்குப் படிந்துவிடும் அல்லது சரியான கவனிப்பு இல்லையென்றால் தூசு படிந்துவிடும்.

  குமரேசனின் தண்டையும், சிலம்பும், சதங்கையும், சண்முகமும் கண்முன் தோன்றிடில் கோள் என்ன செய்யும்? நாடி வந்த கொடுங்கூற்று என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?

  அவ்வப்போது பழநி அப்பனைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் உனா தானா. அழுக்கை அவன் பார்த்துக்கொள்வான்!

  ReplyDelete
 12. //////Sridhar said...
  Wow! Wonderful story!
  Keep posting such meaningful stories.
  Best Wishes
  Sridhar//////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. /////T.V.Radhakrishnan said...
  அருமையான கதை.////

  வாங்க ராதாகிருஷ்ணன் சார். கதை உங்களுக்குப் பிடித்தமைக்கு பதிவிட்ட எனக்கும் மகிழ்ச்சிதான்!

  ReplyDelete
 14. Present Sir,

  அருமையான கதை!

  ReplyDelete
 15. 12ம் பாடத்துக்கான டிரெயிலர் மிகவும் அருமை!

  ReplyDelete
 16. மெயின் பிக்ஸர்க்காக காத்திருக்கிறோம்..

  ReplyDelete
 17. ////Geekay said...
  Present Sir,
  அருமையான கதை!/////

  நன்றி ஜீக்கே!

  ReplyDelete
 18. /////நாமக்கல் சிபி said...
  12ம் பாடத்துக்கான டிரெயிலர் மிகவும் அருமை!////

  அருமை என்று நாமக்கல்லார் சொன்னதில் அடியேனுக்கு மகிழ்ச்சியே!

  ReplyDelete
 19. //////ஜே கே | J K said...
  மெயின் பிக்ஸர்க்காக காத்திருக்கிறோம்../////

  ஆகா, விரைவில் பதிவிடுகிறேன்!

  ReplyDelete
 20. //மனதில் கெட்ட மனது நல்ல மனது என்று ஒன்றும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் அழுக்குப் படிந்துவிடும் அல்லது சரியான கவனிப்பு இல்லையென்றால் தூசு படிந்துவிடும்.//

  நூத்திலே ஒரு வாக்கியம்.

  உண்மை தமிழரே தன்னலம் இல்லாத வேலையால மனசை துடைங்க. எல்லாம் சரியாப்போயிடும்!

  ReplyDelete
 21. //////திவா said...
  //மனதில் கெட்ட மனது நல்ல மனது என்று ஒன்றும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் அழுக்குப் படிந்துவிடும் அல்லது சரியான கவனிப்பு இல்லையென்றால் தூசு படிந்துவிடும்.//
  நூத்திலே ஒரு வாக்கியம்.
  உண்மை தமிழரே தன்னலம் இல்லாத வேலையால மனசை துடைங்க. எல்லாம் சரியாப்போயிடும்!/////

  அதை அறிந்தவர்தான் அவர். 40 பக்கங்களுக்குக் குறையாமல் ஒவ்வொருமுறையும் பதிவுகளை இடுகிறார்.
  வாசகர்களின் மேல் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். எங்கே கலாய்ப்பு எல்லை மீறினாலும், உள்ளே நுழைந்து ஒரு தட்டு தட்டுகிறார். இதெல்லாம் அவர் தன்னலமின்றிச் செய்யும் வேலைகள்தான்!

  ReplyDelete
 22. திருவோடு வந்து சேரும் குறைவிலா
  வருமானமும்,ஆஸ்தியும் மட்டுமல்ல
  பருவான பிரச்சினைகளும் தானென
  குருவான ஐயாவின் கதை அற்புதம்!

  ReplyDelete
 23. /////தமாம் பாலா (dammam bala) said...
  திருவோடு வந்து சேரும் குறைவிலா
  வருமானமும்,ஆஸ்தியும் மட்டுமல்ல
  பருவான பிரச்சினைகளும் தானென
  குருவான ஐயாவின் கதை அற்புதம்!////

  நன்றி பாலா!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com