மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.11.08

கோட்டையில்லை, கொடியுமில்லை, எப்பவும் ராஜா!

கோட்டையில்லை, கொடியுமில்லை, எப்பவும் ராஜா!

அடடா, யாரவர்? இசைஞானியா?

இல்லை அவர் இசைக்கு மட்டும்தான் ராஜா!
நான் சொல்ல வருகிறவர் சுகங்களுக்கு ராஜா!

உங்களுக்குத் தெரிந்திக்க வாய்ப்பில்லை. நோ சான்ஸ்!

ஆனால் அவரைப்பற்றி சொன்னால், உடனே அதுபோன்ற அம்சங்கள்
உடைய ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

அவர்தான் மிஸ்டர்.சுகவாசி. (பெயரை மாற்றியிருக்கிறேன்)
அவர் எனக்குப் பரீட்சையமானவர். அதனால்தான் மாற்றம் அவசியமாகி
விட்டது. அவருக்கென்று ஒரு வேலையுமில்லை; ஒரு தொழிலுமில்லை!
அதனால் ஒரு தொல்லையுமில்லை. சுங்கவரி, சேவை வரி, விற்பனை வரி,
வருமான வரி என்று எந்த வரித்தொல்லைகளும் இல்லாதவர்.

கதைநடந்த காலம் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய காலம்

சுறுசுறுப்பானவர். நல்ல தோற்றமுடையவர். யாரையும் தன்னுடைய
பேச்சுத் திறமையால் வளைத்துப் போடக்கூடியவர். இறங்கினால்,எடுத்த
காரியத்தைச் சாதிக்ககூடியவர்.

படிப்பெல்லாம் பள்ளி இறுதியாண்டுவரைதான். ஆனால் தமிழிலும்
ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர். துணிச்சலாக, அதிரடியாகப்
பேசக்கூடியவர். இவைகள்தான் அவருடைய தகுதிகள்.

அப்போது அவருக்கு வயது நாற்பது.எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்.
இந்த எல்லாம் என்கின்ற பதத்தை மூன்று முறைகள் அழுத்திச் சொல்லிப்
படியுங்கள். அப்போதுதான் அதன் அர்த்தம் உங்களுக்கு முழுதாகப் பிடிபடும்.

அவருக்குக் கட்டிக்கொண்ட - கட்டுப்படுகின்ற (அதுதான் முக்கியம்)
மனைவியும், ஒரு மகனும் உண்டு. வீட்டைப் பற்றிக் கவலைப் படாதவர்.
சிறிய வீடு. ஆனாலும் சொந்தவீடு. வீட்டு வாடகை உபத்திரவம் இல்லாதது
அவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். ஒன்றாம் தேதியன்று, கையில் இருக்கும்
பணத்தில் ஐயாயிரம் ரூபாயையோ அல்லது ஆறாயிரம் ரூபாயையோ,
மனைவியின் கையில் கொடுத்துவிடுவார். அது வீட்டுச் செலவுகளுக்கு.
அந்தக் காலகட்டத்தில் அது போதுமான தொகை.

மற்றதை வீட்டு அம்மையார் பார்த்துக் கொள்வார்கள்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்தார் என்றால், காலைக்கடன்களை
முடித்துக் குளித்து எட்டு மணிக்குள், நெற்றியில் விபூதியும், சந்தனமும்,
சட்டையில் Jovan' செண்ட்டும் மணக்கத் தயாராகிவிடுவார். காலைச்
சிற்றுண்டியும் முடிந்திருக்கும்.

மல்லிகைப்பூப் போன்ற இட்டிலியும், நெய்யும், தேங்காய் சட்டினியும்
உடன் ஃபில்டர் காப்பியும் உள்ளே இறங்கி, உற்சாகத்தையும் கொடுத்து
விடும்

He is ready for that day jobs!

அவருக்குத்தான் வேலை இல்லை என்றீர்களே?

முதலாளி இருக்கும் வேலை அவருக்கு இல்லை என்றும், வாடிக்கையாளர்
இருக்கின்ற தொழிலும் அவருக்கு இல்லை என்று சொன்னேனே தவிர, வேலை
வெட்டி இல்லாத ஆசாமி என்றா சொன்னேன்?

கதையைப் படியுங்கள். அவருடைய மொத்த வாழ்க்கையும் சுவாரசியமானது

எட்டு மணிக்குள் அவரைத் தேடி ஆசாமிகள் வந்து விடுவார்கள்.

முதலில் வருகிறவனுக்குத்தான் முன் இடம்!

"என்ன கந்தசாமி?" வந்திருக்கும் கார் டிரைவரிடம் கேட்பார்.

"சின்னய்யா, உங்களைக்கூட்டிக் கொண்டு வரச்சொன்னார்"

"என்ன விஷயம் என்று சொன்னாரா? அவசரமாமா?"

"ஆமாம் அண்ணே! குனியமுத்தூரில் ஃபாக்டரி கட்டுவதற்காக ஒரு இடம்
பார்த்திருக்கிறார். அதை முடித்துக் கிரயம் செய்ய வேண்டுமாம். நீங்கள்
வந்தால்தான் முடியுமாம். அழைத்து வரச்சொன்னார்"

வேறு ஒருவன் வந்தால் அழைப்பு வேறுவிதமாக இருக்கும்.

"அண்ணே, பெரிய செட்டியார் உங்களை அழைத்துக் கொண்டு வரச்
சொன்னார்."

"என்னடா விஷயம்?"

"அவருடைய மகன் நேற்றுக் கிளப்பிற்குப் போய்விட்டுக் காரில் திரும்பி
வரும்போது, அவனாசி ரோட்டில் ஆக்சிடெண்ட். ஒரு ஆளை அடித்துப்
படுக்க வைத்து விட்டான். போலீஸ் கேசாகி விட்டது. நீங்கள் வந்தால்
தான் பிரச்சினை தீரும்"

உடனே கிளம்பிவிடுவார். போனால் எப்போது திரும்பி வருவார் என்று
தெரியாது. மதியம், மாலை, இரவு உணவெல்லாம் தடபுடலாய் போகின்ற
இடங்களில்! பத்து மணிக்குத் திரும்பிவந்தால் நல்லது. சில சமயம்
இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்.

அவருடைய தலை முடிகளை எண்ணினாலும் எண்ணலாம். அவருக்கு
இருக்கின்ற நட்பு வட்டத்தை என்ன முடியாது!

ஒரு தடவை, ஒரு நாள் பழகியவன், அவரை விட மாட்டான். அவருடைய
அருமை தெரிந்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு விடுவான்.

அதேபோல நமது நாயகனும் ஒரு நாள் பழக்க மென்றாலும் மறக்க
மாட்டார். கணினி மூளையில் பழகியவனின் பயோ டேட்டா பதிவாகிவிடும்

சிலசமயம், எவனுடவனாவது அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இருக்கும் போதே அல்லது ஒரு வங்கியில் பகுதி மேலாளருடன் பேசிவிட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கும்போது, அவரைத் தேடி, மோப்பம் பிடித்து அவருடைய
நெருங்கிய நண்பர்களில், மூவரோ அல்லது நால்வரோ, அங்கே வந்துவிடுவார்கள்.

"ஏய் அப்பனே, வண்டியில் ஏறு!" இது அவர்கள்.

"எங்கே போக வேண்டும் சொல்லுங்கள்" இது இவர்

"நீ முதலில் ஏறு, சொல்கிறோம்"

ஏறிக்கொள்வார். கார் காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டு, பன்னிரெண்டு கிலோ
மீட்டர்கள் தூரம் பயணித்து, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைக் கடந்த
பிறகுதான் இவர் கேட்பார்"

"எங்கேடா போகிறோம்? திருப்பூருக்கா?"

"இல்லை, பெங்களூருக்கு!"

"அடப்பாவிகளா? நான் வீட்டில் சொல்ல வேண்டாமா?"

"என்னைக்கு உன்னை வீட்டில் தேடியிருக்கிறார்கள் - சொல்வதற்கு?"

"இல்லையில்லை, வெளியூர் செல்வதானால் நான் சொல்லிவிட்டுத்தான் வருவேன்"

"அதெல்லாம் நாங்கள் சொல்லிவிட்டோம். உன் ஒய்ப்தான் நீ வங்கிக்குச்
சென்றிருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். இல்லையென்றால் நீ வங்கியில்
உட்கார்ந்து பிளேடு போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு எப்படித்
தெரியும்? உன்னை எப்படிக் கொத்திக் கொண்டு வந்திருக்க முடியும்?"

"சரி, சரி, எத்தனை நாள் பயணம்?"

"அதை இன்னும் முடிவுசெய்யவில்லை! உத்தேசமாகச் சொன்னால் நான்கு
நாட்கள் என்று வைத்துக்கொள்"

"நான்கு நாட்களா? மாற்று உடைகள் எதுவும் இல்லையே பாவிகளா?"

"எங்களுக்கு இருக்கிறது"

"உங்களை எவன் கேட்டான்? எனக்கு என்ன செய்வது?"

"போகிற இடத்தில் வழக்கம்போல ரெடிமேடாக வாங்கிக் கொள்வோம்!"

"சரி பெங்களூரில் ரூம் எல்லாம் போட்டுவிட்டீர்களா?"

"நீ இருக்கையில் அதெல்லாம் எதற்கு? உன்னைப் பார்த்தபிறகு எந்த
ஹோட்டல்காரனாவது அறை இல்லை என்று சொல்வானா?"

"பெங்களூரில் என்னடா வேலை?"

"நிஜலிங்கப்பாவைப் பார்த்துப் பேசி, லால் பார்க்கை விலைக்கு
வாங்க வேண்டும்?"

"ஏன் அல்சூர் ஏரியை வாங்குங்கள். அதில் உள்ள தண்ணீரை
வெளியேற்றிவிட்டு, மல்லய்யாவிடம் சொல்லி அதைப் பியரால்
நிரப்பி ஆட்டம் காட்டலாமே?"

"அதில் ஒரு ஆபத்து இருக்கிறது?"

"என்ன?"

"இங்கேயிருந்து போகிற தமிழன் எவனும் திரும்பி வரமாட்டான்"

"டேய் கருமம் பிடித்தவங்களா, என்ன வேலை என்று சொல்லித்
தொலைங்கடா"

அவருடைய பொறுமைச் சோதிக்காமல், அவசரமாகப் போகின்ற
வேலையைச் சொல்வார்கள். போகின்ற அந்த செயலுக்கு அவருடைய
உதவி தேவைப் பட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும், அவரைக்
கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாதுகாப்புக்காக, ஒரு கம்பெனிக்காக,
ஒரு பேச்சுத் துணைக்காக, அதைவிட ஒரு ஜாலிக்காக அவரைக்
கூட்டிக் கொண்டு போவார்கள்.

நம் நாயகருடைய பல தகுதிகளில் ஒன்று அற்புதமாகக் கார் ஓட்டுவார்
சொந்தமாக அவருக்குக் கார் கிடையாது என்றாலும், அவருடைய
நணபர்களின் கார் அத்தனையும் அவருடையதுதான். மாருதி ஜென்னில்
இருந்து, பென்ஸ் வரை அவர் ஓட்டியிருக்காத கார்களே கிடையாது.

அடுத்துவரும் நிறுத்ததில் அல்லது மோட்டலில் காரின் ஸ்டீரிங் வீல்
அவர் கைக்குப் போய்விடும்.

செல்லும் ஊரில் அவருக்கு, சோப்பிலிருந்து வான் ஹுஸேன் சட்டை
வரை அத்தனையையும் வேண்டிய அளவிற்கு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்
அதோடு, அவருக்கு காப்பி சிகரெட்டிலிருந்து, பீட்டர் ஸ்காட் வரை ஒரு
செலவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அதோடு திரும்பி வந்துவுடன்
அவர் சொல்லிக் கொண்டு வீட்டில் இறங்கும்போது, பெரிய நோட்டுக்
கட்டில் ஒன்றையோ அல்லது இரண்டையோ அவர் பெட்டிக்குள் வைத்துக்
கொடுத்து விடுவார்கள்.

சிலர், தங்கள் வேலைகளுக்கு அவரை மட்டும் அனுப்பும்போது கையில்
வேண்டிய பணத்தையும், காரையும் கொடுத்துவிடுவார்கள்

வேலையை நேர்த்தியாக முடித்துக் கொடுப்பதில் அவருக்கு இணை அவரேதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே சொல்ல வந்தது. அந்த மனிதருக்கு வாழ்க்கையில் எல்லா
செளகரியங்களும், சுகங்களும் தேடி வந்து அனைத்துக் கொண்டன!

என்ன காரணம்?

அவர் ரிஷப லக்கினக்காரர். ரிஷப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே
ஜாலியானவர்கள். காரணம் அதன் அதிபதி. அதோடு நம் நாயகருக்கு
ரிஷப லக்கின நாயகன் பதினொன்றில். சுயவர்க்கத்தில் எட்டுப்பரல்களுடன்

அவருக்கு சொந்தத்தில் பெரிய அளவில் பணம் இல்லாவிட்டாலும்,
முறையான சம்பாத்தியம் துளிக்கூட இல்லாவிட்டாலும், அவரால் எப்படி
வாழ்க்கையின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்க முடிந்தது?

அதற்குக் காரணம் வலுவான சுக்கிரன்தான்.

அவரைப்போன்ற சுகவாசிகள் சின்ன லெவலிலோ அல்லது பெரிய லெவலிலோ
பலர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தியார் அவரைப் பற்றிய கதை எதற்கு?"

"அவரை மறந்து விடுங்கள். சுக்கிரனைப் பற்றி நினையுங்கள்"
======================================================
சுக்கிரனைப் பற்றிய தனிப் பதிவிற்கான முன்னோட்டம்தான் இது!

மற்ற விவரங்கள் அடுத்த பதிவில்!

(தொடரும்)
===================================================
இது இடைச் சேர்க்கை!

பின்னூட்டத்தில் பலர் எனக்கு 90 வயதில் சுக்கிரதிசை வரும்
என்றும் அல்லது வயதான காலத்தில் வரும் என்றும் குழப்பத்தில்
உள்ளார்கள்.

அதற்காக அவசரமாக இந்த தசா புத்தி அட்டவனையை இடைச்
சேர்க்கையாகக் கொடுத்திருக்கிறேன்

இதை முன்பே என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்

அது எந்தப் பதிவு என்று தேட நேரமில்லை.
கூடுதுறையாரும் தன் வகைப் படுத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறாரா
என்று தெரியவில்லை.

ஆகவே மீண்டும் ஒருமுறை அதைப் பதிவில் கொடுக்கின்றேன்

அதைப்பாருங்கள். 9 கிரகங்களின் திசைகளிலும், தசா நாதனுடன்
சேர்ந்து புத்தி நாதர்களும் அந்த தசை காலத்தைப் பங்கு போட்டுக்
கொண்டிருப்பார்கள்.

ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக வைத்திருங்கள்.

ஒரு கிரகத்தின் தசை உங்களுக்கு வர சந்தர்ப்பம் இல்லை என்று
நினைக்காதீர்கள்.

புத்திநாதன் என்கின்ற போர்வையில் அவர் வருவார்.
நல்லவராக இருந்தால் கட்டித் தழுவி விட்டுப்போவார்.
தீயவராக இருந்தால் அடித்துக் கீழே தள்ளிவிட்டுப்போவார்.
மீண்டும் வேறு ஒரு நல்லவர் வந்து உங்களை எழுப்பி உட்கார
வைத்து ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொல்வார்.

இது ஒவ்வொரு தசையிலும் நடக்கும்

சுக்கிரதிசையிலும் நடக்கும்
சனி திசையிலும் நடக்கும்
ராகு திசையிலும் நடக்கும்
மொத்தம் எல்லா தசைகளிலும் நடக்கும்
தழுவதுவதும், அடிவாங்குவதும் மாறி மாறி நடக்கும்
இரவு பகலைப்போல!

புரிந்ததா கண்மணிகளே?
========================================================================
ஒவ்வொரு கிரகமும் தசா புத்திகளைப் பங்கிட்டுக் கொள்ளும் நாட்களின் விவரம்:
எண்கள் அனைத்தும் நாட்களைக் குறிக்கின்றது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

76 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

அய்யா உங்கள் சுறுசுறுப்பை கண்டு வியக்கிறேன்! தொடரட்டும் உங்கள் சேவை.

hotcat said...

yes, you are so quick and ready for other blog in short time...I pray God to Bless you for good health and wealth.

-Shankar

Ragu Sivanmalai said...

Great trailer about Venus...Waiting for the main picture..

SP.VR. SUBBIAH said...

///////ஸ்ரீதர்கண்ணன் said...
அய்யா உங்கள் சுறுசுறுப்பை கண்டு வியக்கிறேன்! தொடரட்டும் உங்கள் சேவை./////

உங்களுடைய (வாசகர்களுடைய) அன்பும், பதிவிற்குக் கொடுக்கும் ஆதரவும் (support) தான் என்னுடைய சுறுசுறுப்பிற்குக் காரணம்!

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
yes, you are so quick and ready for another posting in the blog in a short time...I pray God to Bless you for good health and wealth.
-Shankar////

உங்கள் அன்பிற்கு நன்றி சங்கர்!

SP.VR. SUBBIAH said...

/////Ragu Sivanmalai said...
Great trailer about Venus...Waiting for the main picture../////

சனி & ஞாயிறு வெளியூர் பயணம் உள்ளது. ஆகவே அடுத்த பதிவு திங்கட் கிழமை மாலையில்!
எழுதித் தட்டச்ச வேண்டும் சிவன் மலையாரே! நடுவில் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதும் வேலையும் இருக்கிறது.

Sridhar said...

அன்புள்ள அய்யா,
நீங்கள் விவரித்த சுக்கிரனின் முன்னோட்டத்தில் ஒரு த்ரில்லரை படிப்பது போல் இருந்தது.
உங்கள் வேகம் கண்டு வியக்கிறேன், விவேகம் கண்டு தினமும் ஆச்சிரியபடுகிறேன்!

இப்பொழுதெல்லாம் ஆபீஸ் வேலை தவிர முதலில் வகுப்பறை தான் என் முதல் மற்ற வேலை - அடுத்த பாடம் எப்போ படிக்கலாம் என்று.

இந்த பாடம் எனக்கு முக்கியமான ஒன்று - ஹிஹி எனக்கு சுக்கிர தசை நடக்கிறது!

மிக்க நன்றி!

ஸ்ரீதர் S

தியாகராஜன் said...

ஐயா,
வணக்கம்.
கதை நாயகனின் அன்றாட அலுவல்களை,நாங்கள் நேரிலிருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை வரவழைத்துவிட்டீர்கள்.
அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள்.

"தனது சுய வர்க்கத்தில் 5 பரல்களுடனும், மீனத்தில் உச்சம்பெற்றும்" உள்ள ஜாதகன் ஆர்வத்துடன் காத்திருக்கிறான்

நாமக்கல் சிபி said...

அறிமுகமே அசத்தலாக இருக்கிறது!

பார்ப்போம்! சுக்கிரனின் சாகசங்களை!

(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்)

Ragu Sivanmalai said...

///(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்)

////

விடுங்க சிபி அண்ணா சுக்ரன் நம்ம நண்பர்தான் . நான் recommend பண்றேன் கொஞ்சம் முன்னாடி வர சொல்லி .....

Geekay said...

அருமை அய்யா !! உங்கள் முன்னுரை !! பின்னி பெடலெடுத்து விட்டீர்கள் !!!
ரிசப ராசி , கன்னி லக்னம் , லக்னத்தில் சுக்ரன் ஆறு பரல்களுடன் .
ஆர்வத்துடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் .
நன்றி,
GK, BLR.

வேலன். said...

கோட்டையில்லை,கொடியுமில்லை,எப்பவும் நீங்கள் ராஜாதான்.அடுத்த பதிவு வர எப்படியும் இன்னும் இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என காத்திருந்தால் அதற்குள் அடுத்த பதிவா...வாவ்.சூப்பர்.தொடரட்டும் உங்கள் சுறுசுறுப்பு...
வாழ்க வளமுடன்,
வேலன்.

//பார்ப்போம்! சுக்கிரனின் சாகசங்களை!

(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்)//

சிபி சார், எனக்கும் சுக்ர தசை எண்பது வயதிருக்கு மேல் தான் , ஆனால் சுக்ரன் அந்தர தசைகளில் அவருடைய பலன்களை கொடுப்பார்.

DevikaArul said...

ஐயா , ஒரு உதாரணதிற்கு , சுக்கிரன் கன்னியில் நீசம். but , புதனும் (langna lord )கன்னியில் இருந்தால் நீசம் பங்கம் பெற்று விடுகிறது.
அப்போ சுக்கிரனுக்கு என்ன பலம் ?
கொஞ்சம் சொல்லுங்க please..

DevikaArul said...

ஐயா , புதனுக்கான பதிவில் கேட்டிருக்க வேண்டும். but , மண்னிக்கவும்.
மறைந்த புதன் , நிறைந்த செல்வம் என்று சொல்வார்களே.. அது சரியா ?
இது எல்லா ஜாதகதிற்கும் பொருந்துமா ? அல்லது ஜாதகத்தில் புதன் மறைவு இடத்தின் அதிபதி ஆகி , பின் மறைவில் போனால் தானா ?
please clarify

நாமக்கல் சிபி said...

//மறைந்த புதன் , நிறைந்த செல்வம் //

புதிதாக இருக்கிறதே! வாத்தியார் விளக்குவார்!

ஆனால் புதன் மறைந்தால் புத்தி என்னாவது?

புதன் புத்தி(கல்வி) காரகன் ஆயிற்றே!

நாமக்கல் சிபி said...

//விடுங்க சிபி அண்ணா சுக்ரன் நம்ம நண்பர்தான் . நான் recommend பண்றேன் கொஞ்சம் முன்னாடி வர சொல்லி .....
//

சிபாரிசுக்கு மிக்க நன்றி சிவன்மலையாரே!

சிவன்மலையார் சொன்னால் நிச்சயம் செவி சாய்ப்பார்!

(சிவமயம் தொடரில் படித்திருக்கிறேன் சிவன்மலை சித்தர்களின் சக்தி என்னவென்று)

DevikaArul said...

சுக்கிரனும் குருவும் அசுர மற்றும் தேவ குரு , ஆகையால், ஐயா , குருவுக்கு சுக்கிரன் பகை. ஆனால் இரண்டு கிரகங்களும் ஒரே இடத்தில் இருந்தால் இரட்டிப்பு நன்மை பயக்குவர் என்பது உண்மையா , sir ?

SP.VR. SUBBIAH said...

/////Sridhar said...
அன்புள்ள அய்யா,
நீங்கள் விவரித்த சுக்கிரனின் முன்னோட்டத்தில் ஒரு த்ரில்லரை படிப்பது போல் இருந்தது.
உங்கள் வேகம் கண்டு வியக்கிறேன், விவேகம் கண்டு தினமும் ஆச்சிரியபடுகிறேன்!
இப்பொழுதெல்லாம் ஆபீஸ் வேலை தவிர முதலில் வகுப்பறை தான் என் முதல் மற்ற வேலை - அடுத்த பாடம் எப்போ படிக்கலாம் என்று.
இந்த பாடம் எனக்கு முக்கியமான ஒன்று - ஹிஹி எனக்கு சுக்கிர தசை நடக்கிறது!
மிக்க நன்றி!
ஸ்ரீதர் S//////

திரில்லர்களைத் திரும்பத்திருமப படிக்க முடியாதே! மனதைத் தொடும்படி உள்ளதா? அதுதான் முக்கியம்
நான் எதிபார்த்து எழுதுவதும் அதுதான்!

SP.VR. SUBBIAH said...

////தியாகராஜன் said...
ஐயா,
வணக்கம்.
கதை நாயகனின் அன்றாட அலுவல்களை,நாங்கள் நேரிலிருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை வரவழைத்துவிட்டீர்கள்.
அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள்.
"தனது சுய வர்க்கத்தில் 5 பரல்களுடனும், மீனத்தில் உச்சம்பெற்றும்" உள்ள ஜாதகன் ஆர்வத்துடன் காத்திருக்கிறான்/////

நன்றி தியாகராஜன்

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
அறிமுகமே அசத்தலாக இருக்கிறது!
பார்ப்போம்! சுக்கிரனின் சாகசங்களை!/////

பாராட்டிற்கு நன்றி சிபி!

////(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்)////

கவுத்துவிட்டீர்களே. முன் பாடத்தை நீங்கள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.
பதிவில் அவசரம் அவசரமாக இடைச் சேர்க்கை ஒன்றைச் சேற்த்துள்ளேன்.
அது உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு சேர்த்தது.
அதை படித்து விட்டு மீண்டும் வாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Ragu Sivanmalai said...
///(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்) ////
விடுங்க சிபி அண்ணா சுக்ரன் நம்ம நண்பர்தான் . நான் recommend பண்றேன் கொஞ்சம் முன்னாடி வர சொல்லி .....////

பதிவில் இடைச்சேர்க்கை உள்ளது. அதைபடிக்க வேண்டுகிறேன்
படித்துவிட்டு மீண்டும் வாருங்கள்

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
அருமை அய்யா !! உங்கள் முன்னுரை !! பின்னி பெடலெடுத்து விட்டீர்கள் !!!
ரிசப ராசி , கன்னி லக்னம் , லக்னத்தில் சுக்ரன் ஆறு பரல்களுடன் .
ஆர்வத்துடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் .
நன்றி,
GK, BLR.//////

உங்கள் மனம் உவந்த பாராட்டுக்களுக்கு நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

//////வேலன். said...
கோட்டையில்லை,கொடியுமில்லை,எப்பவும் நீங்கள் ராஜாதான்.அடுத்த பதிவு வர எப்படியும் இன்னும் இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என காத்திருந்தால் அதற்குள் அடுத்த பதிவா...வாவ்.சூப்பர்.தொடரட்டும் உங்கள் சுறுசுறுப்பு...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

நன்றி வேலன் உங்கள் (வாசகர்களின்) அன்பைவிட கோட்டை, கொடியெல்லாம் ஒன்றும் பெரிதில்லை!

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
//பார்ப்போம்! சுக்கிரனின் சாகசங்களை!
(ம்ஹூம்! இப்படிப் படிச்சி சந்தோஷப் பட்டுகிட்டாத்தான் உண்டு! நமக்குத்தான் சுக்கிர தசை வரதே 90 வயசுலதான்! அதை அனுபவிக்க ஆயுள் காரகனின் தயவு தேவை! ஆனாலும் 90 வயசெல்லாம் கொஞ்சம் பேராசைதான்)//
சிபி சார், எனக்கும் சுக்ர தசை எண்பது வயதிருக்கு மேல் தான் , ஆனால் சுக்ரன் அந்தர தசைகளில் அவருடைய பலன்களை கொடுப்பார்./////

கரெக்ட், நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////DevikaArul said...
ஐயா , ஒரு உதாரணதிற்கு , சுக்கிரன் கன்னியில் நீசம். but , புதனும் (langna lord )கன்னியில் இருந்தால் நீசம் பங்கம் பெற்று விடுகிறது.
அப்போ சுக்கிரனுக்கு என்ன பலம் ?
கொஞ்சம் சொல்லுங்க please..////

இருவரும் ராஜ யோகத்தைக் கொடுப்பார்கள்.
அவரவர்கள் தசாபுத்திகளில் கொடுப்பார்கள்
அதற்குப் பெயர்: நீசபங்க ராஜயோகம்!

SP.VR. SUBBIAH said...

/////DevikaArul said...
ஐயா , புதனுக்கான பதிவில் கேட்டிருக்க வேண்டும். but , மண்னிக்கவும்.
மறைந்த புதன் , நிறைந்த செல்வம் என்று சொல்வார்களே.. அது சரியா ?
இது எல்லா ஜாதகதிற்கும் பொருந்துமா ? அல்லது ஜாதகத்தில் புதன் மறைவு இடத்தின் அதிபதி ஆகி , பின் மறைவில் போனால் தானா ?
please clarify//////

புதன் மறைந்தால் ஜாதகனுக்கு வித்தைகள் வராது. வித்தைகள் இல்லாமல் செல்வம் எப்படி வரும்
யாராவது கொடுத்தால்தான் உண்டு. அப்படி வரும் செல்வம் சுவைக்காது
அது வெறும் சொல்லடை அவ்வளவுதான்

பூராடம் நூலாடாது என்று ஒரு மோசமான சொல்லடை இருக்கிறது.
அதாவது பூரடத்தில் பிறந்த பெண்ணிற்கு கழுத்தில் மாங்கல்யம் நிலைக்காது என்னும் பொருள் தரக்கூடிய சொல்லடை.
அது உண்மையல்ல. பூராடத்தில் பிறந்த பெண்களில் பலர் சுமங்கலியாக இருப்பதை என்னால்
அடையாளம் காட்டமுடியும்!

SP.VR. SUBBIAH said...

/////DevikaArul said...
சுக்கிரனும் குருவும் அசுர மற்றும் தேவ குரு , ஆகையால், ஐயா , குருவுக்கு சுக்கிரன் பகை. ஆனால் இரண்டு கிரகங்களும் ஒரே இடத்தில் இருந்தால் இரட்டிப்பு நன்மை பயக்குவர் என்பது உண்மையா , sir ?////

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குள் மனப் புகைச்சல் இருக்கும். அது Dressing Room வரை மட்டுமே
மைதானத்தில் இறங்கிவிட்டால் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி அடித்து ஆடுவார்கள், ஒருவருக்கு ஒருவர் standing கொடுப்பார்கள் - அது போலத்தான் இதுவும்!

Sumathi. said...

ஹலோ சார்,

//கதை நாயகனின் அன்றாட அலுவல்களை,நாங்கள் நேரிலிருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை வரவழைத்துவிட்டீர்கள்.
அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள்.//

ரிப்பீட்டேய்.

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், எனக்கும் கூட சுக்கிரன் வருவாரா? சிபி மாதிரி நானும் காத்துகிட்டு இருக்கேன்.

சிபி உங்களுக்கு சிபாரிசு பண்ணி சீக்கிரமா 89வது வயசுலேயே வரத்துக்கு ஆர்டர் போயிருக்காம். போதுமா?

நாமக்கல் சிபி said...

//கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குள் மனப் புகைச்சல் இருக்கும். அது Dressing Room வரை மட்டுமே
மைதானத்தில் இறங்கிவிட்டால் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி அடித்து ஆடுவார்கள், ஒருவருக்கு ஒருவர் standing கொடுப்பார்கள் - அது போலத்தான் இதுவும்!
//

இதே குரு, சுக்கிரன் சேர்க்கையில் கேதுவும் உடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

ஆக குருவும், சுக்கிரனும் ராகுவை ஏழாமிடப் பார்வையுமிடுவார்கள்!

Ragu Sivanmalai said...

இடைசெருகல் படித்தேன். நல்லதும் கெட்டதும் கலந்து வரும் நாடகமே வாழ்க்கை என்பதை புரிய வைப்பதாக இருந்தது .

(அதற்குள் சிபி அண்ணா எனக்கு சிவன்மலை சித்தர் பட்டம் கொடுத்து விட்டார். பின்குறிப்பு : சிவன்மலை என்பது என் பெயரல்ல. அது தாத்தாவின் பெயர்.... என் பெயர் ரகுபதி என்பது மட்டுமே. வெளிநாட்டில் இருந்த்போது அவர்கள் முழு பெயரையும் கூப்பிட்டு ரகு என்பதை ரகு சிவன்மலை என்று ஆக்கி விட்டார்கள்.)

நாமக்கல் சிபி said...

//கவுத்துவிட்டீர்களே. முன் பாடத்தை நீங்கள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.
பதிவில் அவசரம் அவசரமாக இடைச் சேர்க்கை ஒன்றைச் சேற்த்துள்ளேன்.
அது உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு சேர்த்தது.
அதை படித்து விட்டு மீண்டும் வாருங்கள்!
//

நினைவில் இருக்கிறது ஐயா! ஆனாலும் தசாவில் கொடுக்கும் பலன்கள் போல் புத்தியில் கொடுக்கும் பலன்கள் வருமா?

என்னதான் இருந்தாலும் அடுத்தவர் கண்காணிப்பில் அல்லவா புத்தியின் பலன்கள் கொடுக்கப் படுகின்றன! அந்த ஆதங்கம்தான்!

வேலன். said...

ஐயா,
தாங்கள் ஏற்கனவே தசாபுத்தி பலன்கள் பற்றி ஜோதிடம் ஒரு பார்வை பகுதி 21 முதல் பகுதி 27 வரை (ஏப்ரல் 2007) வெளியிட்டுள்ளீர்கள் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

நாமக்கல் சிபி said...

//ஐயா,
தாங்கள் ஏற்கனவே தசாபுத்தி பலன்கள் பற்றி ஜோதிடம் ஒரு பார்வை பகுதி 21 முதல் பகுதி 27 வரை (ஏப்ரல் 2007) வெளியிட்டுள்ளீர்கள் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

//

இதை நான் வழிமொழிகிறேன்!

ஜே கே | J K said...

சாகசங்களை காண காத்திருக்கிறோம்...

SP.VR. SUBBIAH said...

Sumathi. said...
ஹலோ சார்,
//கதை நாயகனின் அன்றாட அலுவல்களை,நாங்கள் நேரிலிருந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை வரவழைத்துவிட்டீர்கள்.
அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள்.//
ரிப்பீட்டேய்.///

நன்றி சகோதரி!
...................................................
//////ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், எனக்கும் கூட சுக்கிரன் வருவாரா? சிபி மாதிரி நானும் காத்துகிட்டு இருக்கேன்./////

இடைச்செருகலைப் படியுங்கள்
------------------------------------------
////////சிபி உங்களுக்கு சிபாரிசு பண்ணி சீக்கிரமா 89வது வயசுலேயே வரத்துக்கு ஆர்டர் போயிருக்காம். போதுமா?//////

இதற்கு சிபாரிசெல்லாம் எடுபடாது:-))))

SP.VR. SUBBIAH said...

நாமக்கல் சிபி said...
//கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குள் மனப் புகைச்சல் இருக்கும். அது Dressing Room வரை மட்டுமே
மைதானத்தில் இறங்கிவிட்டால் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி அடித்து ஆடுவார்கள், ஒருவருக்கு ஒருவர் standing கொடுப்பார்கள் - அது போலத்தான் இதுவும்!
// இதே குரு, சுக்கிரன் சேர்க்கையில் கேதுவும் உடன் சேர்ந்தால் என்ன ஆகும்?
ஆக குருவும், சுக்கிரனும் ராகுவை ஏழாமிடப் பார்வையுமிடுவார்கள்!//////

இது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு வெளியே நின்று பேட் செய்கிறார்கள் என்று பாருங்கள்
ஐந்து பாகைகள் இடைவெளி என்பது கிரீஸின் அளவு:-)))

SP.VR. SUBBIAH said...

/////Ragu Sivanmalai said...
இடைசெருகல் படித்தேன். நல்லதும் கெட்டதும் கலந்து வரும் நாடகமே வாழ்க்கை என்பதை புரிய வைப்பதாக இருந்தது //////

அதுதானே வாழ்க்கை!
-------------------------------------
(அதற்குள் சிபி அண்ணா எனக்கு சிவன்மலை சித்தர் பட்டம் கொடுத்து விட்டார். பின்குறிப்பு : சிவன்மலை என்பது என் பெயரல்ல. அது தாத்தாவின் பெயர்.... என் பெயர் ரகுபதி என்பது மட்டுமே. வெளிநாட்டில் இருந்த்போது அவர்கள் முழு பெயரையும் கூப்பிட்டு ரகு என்பதை ரகு சிவன்மலை என்று ஆக்கி விட்டார்கள்.)/////

சிபி நோட் திஸ் பாயிண்ட்!

SP.VR. SUBBIAH said...

///////நாமக்கல் சிபி said...
//கவுத்துவிட்டீர்களே. முன் பாடத்தை நீங்கள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.
பதிவில் அவசரம் அவசரமாக இடைச் சேர்க்கை ஒன்றைச் சேற்த்துள்ளேன்.
அது உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு சேர்த்தது.
அதை படித்து விட்டு மீண்டும் வாருங்கள்!
//
நினைவில் இருக்கிறது ஐயா! ஆனாலும் தசாவில் கொடுக்கும் பலன்கள் போல் புத்தியில் கொடுக்கும் பலன்கள் வருமா?///

ஏன் வராது? அதெல்லம் துல்லியமாக வரும். எத்தனை படங்களில் சிவாஜி கணேசனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே எம்.ஆர்.ராதா அசத்தியதில்லையா?
_______________________________________
/////என்னதான் இருந்தாலும் அடுத்தவர் கண்காணிப்பில் அல்லவா புத்தியின் பலன்கள் கொடுக்கப் படுகின்றன! அந்த ஆதங்கம்தான்!//////

எக்ஸாமினரின் கண்காணிப்பில் தானே பரிட்சை எழுதுகிறோம். அது போல கிரகங்களும் எக்ஸாமினரின் கண்கணிப்பில் நம்மைவிடப் ஃபெர்பக்டாக வேலைகளைச் செய்துவிடும்

SP.VR. SUBBIAH said...

/////வேலன். said...
ஐயா,
தாங்கள் ஏற்கனவே தசாபுத்தி பலன்கள் பற்றி ஜோதிடம் ஒரு பார்வை பகுதி 21 முதல் பகுதி 27 வரை (ஏப்ரல் 2007) வெளியிட்டுள்ளீர்கள் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////

இல்லை, இந்த அட்டவணையை முன்பு ஒரு பதிவில் வெளியிட்டு உள்ளேன். அதை தேடிப்பிடித்துக் கொடுங்கள்.அந்தப் பதிவின் தேதி என்ன?

SP.VR. SUBBIAH said...

///////நாமக்கல் சிபி said...
//ஐயா,
தாங்கள் ஏற்கனவே தசாபுத்தி பலன்கள் பற்றி ஜோதிடம் ஒரு பார்வை பகுதி 21 முதல் பகுதி 27 வரை (ஏப்ரல் 2007) வெளியிட்டுள்ளீர்கள் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//
இதை நான் வழிமொழிகிறேன்!///

வேலனுடைய பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லியிருக்கிறேன். அதே பதில் உங்களுக்கும்.

SP.VR. SUBBIAH said...

//////ஜே கே | J K said...
சாகசங்களை காண காத்திருக்கிறோம்...//////

சாகசங்களைக் காணும்படி எழுத இறையருள் வேண்டும். முயற்சிக்கிறேன்.
எழுதிய பிறகு அது நிறைவாக உள்ளதா? அல்லது இல்லையா? என்பது படிக்கும் உங்களைப் பொறுத்தல்லவா உள்ளது!

Geekay said...

அய்யா ஒரு சந்தேகம் !!
சுக்கிர தசை அனைவருக்கும் நன்மை பயக்குமா..?
எனக்கு தெரிந்து என் நண்பர்கள் இரண்டு பேருக்கு சுக்கர தசை நடக்கிறது ( சிம்ம லக்னம், மிதுன லக்னம்)ஆனால் , ஒன்றும் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை . உங்களின் அடுத்த பதிவில் யார் யாருக்கு சுக்கற தசை சிறப்பாக இருக்கும் என்பதை விவரித்து எழுதுமாறு வேண்டுகிறேன்.

SP.VR. SUBBIAH said...

///////Geekay said...
அய்யா ஒரு சந்தேகம் !!
சுக்கிர தசை அனைவருக்கும் நன்மை பயக்குமா..?
எனக்கு தெரிந்து என் நண்பர்கள் இரண்டு பேருக்கு சுக்கர தசை நடக்கிறது ( சிம்ம லக்னம், மிதுன லக்னம்)ஆனால் , ஒன்றும் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை . உங்களின் அடுத்த பதிவில் யார் யாருக்கு சுக்கற தசை சிறப்பாக இருக்கும் என்பதை விவரித்து எழுதுமாறு வேண்டுகிறேன்./////

அனைவருக்கும் நன்மை பயக்கூடிய திசை என்று எந்தத் திசையும் கிடையாது.
அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்!

Geekay said...

\\அனைவருக்கும் நன்மை பயக்கூடிய திசை என்று எந்தத் திசையும் கிடையாது.
அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்!\\
ஆர்வத்துடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் .
நன்றி,
GK, BLR.

Sumathi. said...

ஹலோ சார்,

//19.5.08 ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?//
நீங்க சொன்ன இந்த அட்டவனை இந்த தேதியில் உள்ளதே.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

முன்னோட்டமே சுகமாக உள்ளது .
விரிவான பாடத்திற்கு காத்து இருக்கிறோம் !

நக்கீரன் பாண்டியன் said...

மகர லக்ண ஜாதகருக்கு லக்னத்தில் செவ்வாய்.(பிறந்த தெய்தி-17.10.1986)
ராசி:மீனம்
நட்சத்திரம் ரேவதி
நடப்பு திசை :சுக்கிரன், திசை ஆரம்பித்தது24-02-2001-
நடப்பு புத்தி-ராகு

11ம் வீட்டில்(விருச்சிகம்) சனியோடு சுக்கிரன்+மந்தி

இவருக்கு கோட்டை கொடி வரும்(இவரது 35 வயதுக்குள்-24-02-2021 க்குள்) என ஒரு சோதிடர் சொல்லியுள்ளார்.

இவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது.

சுக்கிரன் கொடுப்பார் என்பதை எப்படி சொல்லுகிறார் அவர்.

தங்களின் கணிப்பு எப்படி.

சனி+ சுக்கிரன்+மாந்தி சேர்க்கை எப்படி?
10ம் வீட்டில் புதன்.

நாமக்கல் சிபி said...

//இது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு வெளியே நின்று பேட் செய்கிறார்கள் என்று பாருங்கள்
ஐந்து பாகைகள் இடைவெளி என்பது கிரீஸின் அளவு:-)))//

யுத்தமாவது! இங்கே ரத்தக் களறி நடக்கிறது!

கேது - 18.54 பாகைகள்
குரு - 19.11 பாகைகள்

சுக்கிரன் மட்டும் கிரீஸிற்கு வெளியே
26.42 பாகைகள்!

Sridhar said...

/////Sridhar said...
அன்புள்ள அய்யா,
நீங்கள் விவரித்த சுக்கிரனின் முன்னோட்டத்தில் ஒரு த்ரில்லரை படிப்பது போல் இருந்தது.
உங்கள் வேகம் கண்டு வியக்கிறேன், விவேகம் கண்டு தினமும் ஆச்சிரியபடுகிறேன்!
இப்பொழுதெல்லாம் ஆபீஸ் வேலை தவிர முதலில் வகுப்பறை தான் என் முதல் மற்ற வேலை - அடுத்த பாடம் எப்போ படிக்கலாம் என்று.
இந்த பாடம் எனக்கு முக்கியமான ஒன்று - ஹிஹி எனக்கு சுக்கிர தசை நடக்கிறது!
மிக்க நன்றி!
ஸ்ரீதர் S//////

திரில்லர்களைத் திரும்பத்திருமப படிக்க முடியாதே! மனதைத் தொடும்படி உள்ளதா? அதுதான் முக்கியம்
நான் எதிபார்த்து எழுதுவதும் அதுதான்!

////
அய்யா,
உங்கள் பாடம் மனதில் நல்லா பதிகிறது, உற்சாகமாக படிக்க தோன்றுகிறது. அது தான் போன பதிவின் பின்னோட்டத்தில் எழுதி இருந்தேனே

இதோ உங்கள் ready reference -

"அருமையான பாடம். ஜோசியம் என்னும் பெருங்கடலில் எங்களை நனையவிட்டு அதன் உப்பை (குரு பற்றிய விரிவான குறிப்பை எங்கள் உள்ளங்களில்) ஊற வைத்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றி."

ஸ்ரீதர் S

hotcat said...

////கேது - 18.54 பாகைகள்
குரு - 19.11 பாகைகள்

சுக்கிரன் மட்டும் கிரீஸிற்கு வெளியே
26.42 பாகைகள்!///

Sibi Sir, Ketu is always retrograde, is guru or sukran is retrograde?

-Shankar

SP.VR. SUBBIAH said...

////Geekay said...
\\அனைவருக்கும் நன்மை பயக்கூடிய திசை என்று எந்தத் திசையும் கிடையாது.
அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்!\\
ஆர்வத்துடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் .
நன்றி,
GK, BLR./////

மீண்டும் நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

/////Sumathi. said...
ஹலோ சார்,
//19.5.08 ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?//
நீங்க சொன்ன இந்த அட்டவனை இந்த தேதியில் உள்ளதே.//////

தகவலுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
முன்னோட்டமே சுகமாக உள்ளது .
விரிவான பாடத்திற்கு காத்து இருக்கிறோம் !/////

சுக்கிரனைப் பற்றிய பாடம். ஆகவே பாடமும் சுகமாக இருக்கும்!:-)))

SP.VR. SUBBIAH said...

/////நக்கீரன் பாண்டியன் said...
மகர லக்ண ஜாதகருக்கு லக்னத்தில் செவ்வாய்.(பிறந்த தெய்தி-17.10.1986)
ராசி:மீனம்
நட்சத்திரம் ரேவதி
நடப்பு திசை :சுக்கிரன், திசை ஆரம்பித்தது24-02-2001-
நடப்பு புத்தி-ராகு
11ம் வீட்டில்(விருச்சிகம்) சனியோடு சுக்கிரன்+மந்தி
இவருக்கு கோட்டை கொடி வரும்(இவரது 35 வயதுக்குள்-24-02-2021 க்குள்) என ஒரு சோதிடர் சொல்லியுள்ளார்.
இவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது.
சுக்கிரன் கொடுப்பார் என்பதை எப்படி சொல்லுகிறார் அவர்.
தங்களின் கணிப்பு எப்படி.
சனி+ சுக்கிரன்+மாந்தி சேர்க்கை எப்படி?
10ம் வீட்டில் புதன்.//////

ஜோதிடர்தான் சொல்லியிருக்கிறார் இல்லையா? நம்பிக்கையோடு இருங்கள்!

பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அன்புடன் பதில் சொல்கிறேன்.

ஜாதகங்களைக் கொடுத்து துவைத்து, அலசிப் பிழிந்து, காயப்போட்டு, இஸ்திரிபோட்டு, மடித்துத் தரச் சொல்லாதீர்கள். அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!

என் மின்னஞ்சல் பெட்டியில் ஏராளமான ஜாதகங்கள் வேண்டுகோளுடன் குவிந்து கிடக்கின்றன.
அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பதிவே எழுத முடியாது. பின்னூட்டங்களுக்கும்
பதில் சொல்ல முடியாது.

நான் கற்று உணர்ந்த ஜோதிடக் கலையைப் பலரும் அறியச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில்
எனது அரிய நேரத்தைச் செலவிட்டுப் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். பதிவுகளை மூறையாகப்
படித்துக் கொண்டே வந்தால் இறுதியில் அலசிப்பார்க்கும் தன்மை படிப்பவர்களுக்கு வந்து விடும்.

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!எனக்குத் தொழில் வேறு!
படிப்பதும், எழுதுவதும் என்னுடைய பொழுதுபோக்கு! (Hobby).நான் தீவிர வாசகன். பத்திரிக்கைகளில் எழுத வந்தது ஒரு விபத்து. வலைப்பதிவில் எழுத வந்தது இரண்டாவது விபத்து.

ஆகவே இந்தப் பின்னூட்டம் மூலம் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். பாடங்களை முறையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். இறுதியில் உங்களுக்கே அனைத்தும் வசப்படும்!

SP.VR. SUBBIAH said...

////நாமக்கல் சிபி said...
//இது கிரக யுத்தம். யார் யார் கிரீஸிற்கு வெளியே நின்று பேட் செய்கிறார்கள் என்று பாருங்கள்
ஐந்து பாகைகள் இடைவெளி என்பது கிரீஸின் அளவு:-)))//
யுத்தமாவது! இங்கே ரத்தக் களறி நடக்கிறது!
கேது - 18.54 பாகைகள்
குரு - 19.11 பாகைகள்
சுக்கிரன் மட்டும் கிரீஸிற்கு வெளியே
26.42 பாகைகள்!

ஆமாம் குரு அஸ்தனமாகிவிட்டார். சுக்கிரன் மட்டும் தப்பிவிட்டார்!

SP.VR. SUBBIAH said...

Blogger Sridhar said...
அய்யா,
உங்கள் பாடம் மனதில் நல்லா பதிகிறது, உற்சாகமாக படிக்க தோன்றுகிறது. அது தான் போன பதிவின் பின்னோட்டத்தில் எழுதி இருந்தேனே
இதோ உங்கள் ready reference -
"அருமையான பாடம். ஜோசியம் என்னும் பெருங்கடலில் எங்களை நனையவிட்டு அதன் உப்பை (குரு பற்றிய விரிவான குறிப்பை எங்கள் உள்ளங்களில்) ஊற வைத்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றி."
ஸ்ரீதர் S/////

நன்றி நண்பரே!

வேலன். said...

ஐயா,

தாங்கள் நேரம் நல்ல நேரம் என்கிற தலைப்பில் ஜோதிடம் ஒரு பார்வை-பகுதி 20 -30.03.2007 குட்டி சுக்கிரன் பற்றியும், தசா புத்திகள் என்கிற தலைப்பில் ஜோதிடம் ஒரு பாரவை-பகுதி 21 -31.03.2007 தசா புத்திகள் பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள். ஆனால் விரிவான அட்டவணையை கொடுத்துள்ளீர்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..

வழமைபோல உங்கட பதிவு கண்ணுல ஒத்திக்கணும் போல இருக்கு..

நான் கொஞ்சம் பயபக்தியோடு உங்க காலைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிறேன்..

அப்படியே எனக்கு உடனுக்குடன் வகுப்பறைக்குள் வர முடியாத நிலைமையை முருகன் உண்டாக்குவதால், எனது அன்புத் தம்பி, ஆரூயிர் இளவல், அட்டகாச மாணவனான நாமக்கல் சிபியை கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.. நல்லவிதமாகப் பார்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்..

SP.VR. SUBBIAH said...

/////வேலன். said...
ஐயா,
தாங்கள் நேரம் நல்ல நேரம் என்கிற தலைப்பில் ஜோதிடம் ஒரு பார்வை-பகுதி 20 -30.03.2007 குட்டி சுக்கிரன் பற்றியும், தசா புத்திகள் என்கிற தலைப்பில் ஜோதிடம் ஒரு பாரவை-பகுதி 21 -31.03.2007 தசா புத்திகள் பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள். ஆனால் விரிவான அட்டவணையை கொடுத்துள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்./////

தகவலுக்கு நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..
வழமைபோல உங்கட பதிவு கண்ணுல ஒத்திக்கணும் போல இருக்கு../////

நன்றி உண்மைத் தமிழரே
-----------------------------------------
////நான் கொஞ்சம் பயபக்தியோடு உங்க காலைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிறேன்./////.

யார் கால்களையும் யாரும் வணங்கக்கூடாது. இறைவன் ஒருவனின் திருவடி மட்டுமே வணங்குதற்கு உரியது.
வழக்கம்போல நீங்கள் பழநி அப்பன் திருவடிகளை மட்டுமே வணங்குங்கள்
----------------------------------------
////அப்படியே எனக்கு உடனுக்குடன் வகுப்பறைக்குள் வர முடியாத நிலைமையை முருகன் உண்டாக்குவதால், எனது அன்புத் தம்பி, ஆரூயிர் இளவல், அட்டகாச மாணவனான நாமக்கல் சிபியை கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.. நல்லவிதமாகப் பார்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்..///////

உங்கள் அலுவல் காரணமாக வர முடியாத நிலை தெரியும். கவலை எதற்கு?
நேரம் கிடைக்கும்போது வந்து படித்துப் பின்னூட்டமிடுங்கள்!

இளைய பல்லவன் said...

குருப் பெயர்ச்சி சமயத்தில் சுக்கிரனைப் பற்றி பதிவா? பேஷ் பேஷ்.

எனக்கும் தற்போது சுக்கிர தசைதான். ஜாதகத்தில் வித்தியாசமான அமைப்பு. தனுர் லக்கினம். எட்டில் சந்திரனுடன் சுக்கிரன் மறைவு. ஆனால் 6ல் உள்ள சனி பார்க்கிறார். ஆகவே நீச பங்க ராஜ யோகம் என்று ஜோசியர் சொல்லியிருக்கிறார். இதுவரை சுக்கிரர் நல்ல பலன்களையே கொடுத்து வந்துள்ளார்.

அய்யா. ஒரு சந்தேகம். கோச்சார பலன்களில் இராசி முக்கியமா? லக்கினம் முக்கியமா? ஏன் என்பதை சற்று விரிவாக விளக்க முடியுமா?

மிக்க நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////இளைய பல்லவன் said...

மிக்க நன்றி.//////

கோச்சார பலன்கள் இராசியை வைத்துத்தான் சொல்லப்படும்!
நீங்கள் புது வரவு என்று நினைக்கிறேன்
என்னுடைய பழைய பதிவுகளை (மொத்தம் 140) முதலில் படியுங்கள்!

தியாகராஜன் said...
This comment has been removed by the author.
தியாகராஜன் said...

ஆசானின் ஆசியுடன்,
தமிழில் ஜாதகம் கணிக்கும் மேலும் ஒரு மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிற்க்கிப் பயன்பெறவேண்டுகிறேன்.
அன்பன்
தியாகராஜன்

SP.VR. SUBBIAH said...

/////தியாகராஜன் said...
ஆசானின் ஆசியுடன்,
தமிழில் ஜாதகம் கணிக்கும் மேலும் ஒரு மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிற்க்கிப் பயன்பெறவேண்டுகிறேன்.
அன்பன்
தியாகராஜன்/////

நன்றி தியாகராஜன். முன்பு கொடுத்த ஆஸ்ட்ரோ விஸன்தானே இது?

தியாகராஜன் said...

///முன்பு கொடுத்த ஆஸ்ட்ரோ விஸன்தானே இது?///

ஆம் ஐயா.
இதில் எந்தவித வெட்டும் வேலையோ,ஒட்டும் வேலையோ இல்லை.
உள்ளீடு செய்வது சுலபம்.
அவ்வளவே.

SP.VR. SUBBIAH said...

//////தியாகராஜன் said...
///முன்பு கொடுத்த ஆஸ்ட்ரோ விஸன்தானே இது?///
ஆம் ஐயா.
இதில் எந்தவித வெட்டும் வேலையோ,ஒட்டும் வேலையோ இல்லை.
உள்ளீடு செய்வது சுலபம்.
அவ்வளவே.////

உங்கள் உதவிக்கும் உடனடிப் பதிலிற்கும் நன்றி தியாகராஜன்
சைடு பாரில் இதன் சுட்டியைக் கொடுத்துவிடுகிறேன்

திவா said...

//கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குள் மனப் புகைச்சல் இருக்கும். அது Dressing Room வரை மட்டுமே
மைதானத்தில் இறங்கிவிட்டால் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி அடித்து ஆடுவார்கள், ஒருவருக்கு ஒருவர் standing கொடுப்பார்கள் - அது போலத்தான் இதுவும்! //
அடடா! என்ன ஒரு உதாரணம்! அருமை!

//இதை முன்பே என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்

அது எந்தப் பதிவு என்று தேட நேரமில்லை.//

அது சுலபம்தானே ஐயா? ஒரு key word நினைவில் இருந்தால் போதும். உங்கள் ப்ளாகில் இடது பக்கம் மேஏஏலே பாருங்கள். search blog இருக்கிறதல்லவா? வேண்டிய வார்த்தைகளை உள்ளீட்டு தேடச்சொல்லுங்கள். அவ்ளோதான்.

SP.VR. SUBBIAH said...

/////திவா said...
//கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குள் மனப் புகைச்சல் இருக்கும். அது Dressing Room வரை மட்டுமே
மைதானத்தில் இறங்கிவிட்டால் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பி அடித்து ஆடுவார்கள், ஒருவருக்கு ஒருவர் standing கொடுப்பார்கள் - அது போலத்தான் இதுவும்! //
அடடா! என்ன ஒரு உதாரணம்! அருமை!/////

நீங்கள் ரசித்துச் சிலாகித்த விதமும் அருமை நண்பரே! நன்றி!
------------------------------------------------------------------

//இதை முன்பே என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்
அது எந்தப் பதிவு என்று தேட நேரமில்லை.//
அது சுலபம்தானே ஐயா? ஒரு key word நினைவில் இருந்தால் போதும். உங்கள் ப்ளாகில் இடது பக்கம் மேஏஏலே பாருங்கள். search blog இருக்கிறதல்லவா? வேண்டிய வார்த்தைகளை உள்ளீட்டு தேடச்சொல்லுங்கள். அவ்ளோதான்.///////

உங்களை இழுப்பதற்காக தலைப்புக்களை விதம் விதமாகக் கொடுக்கிறேன். அதனால் தலைப்புக்களை நினைவில் வைத்துக்கொள்வது கடினம்!:-((((((

திவா said...

ஐயா, தலைப்புதான் நினைவு இருக்க வேண்டும் என்று இல்லை. அந்த பதிவில் ஒரு "பகுதி வாக்கியம்" இருந்தாலும் போதும். தசாபுத்தி என்று எழுதி இருந்தால் அதை உள்ளிட்டே தேடலாம்.

SP.VR. SUBBIAH said...

/////திவா said...
ஐயா, தலைப்புதான் நினைவு இருக்க வேண்டும் என்று இல்லை. அந்த பதிவில் ஒரு "பகுதி வாக்கியம்" இருந்தாலும் போதும். தசாபுத்தி என்று எழுதி இருந்தால் அதை உள்ளிட்டே தேடலாம்.////

தகவலுக்கு நன்றி நண்பரே. அடுத்து முயற்சிக்கிறேன்

MAHI said...

ஐயா

எனக்கு மகர லக்னம், குரு லக்கினத்தில் நீசம் அடைந்து உள்ளது. அம்சத்தில் குரு பதினொன்றாம் கடக வீட்டில் உச்சம் அடைந்து உள்ளது. இதனால் நன்மையா தீமையா.

நன்றி

SP.VR. SUBBAIYA said...

///MAHI said...
ஐயா
எனக்கு மகர லக்னம், குரு லக்கினத்தில் நீசம் அடைந்து உள்ளது. அம்சத்தில் குரு பதினொன்றாம் கடக வீட்டில் உச்சம் அடைந்து உள்ளது. இதனால் நன்மையா தீமையா.
நன்றி////

அம்சம் எதற்காக? அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார் அல்லவா? அதுவே போதும். நன்மைதான்!

MAHI said...

மிக்க நன்றி ஐயா....