மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.10.08

ஜோதிடம்: பதினொன்றாம் வீடு!


பதினொன்றாம் வீட்டு அதிபதியை லாபாதிபதி என்பார்கள். அதாவது லாபத்தைக்
கொடுக்கக்கூடியவன். இன்றைய சூழ்நிலையில் லாபத்தை விரும்பாதவர்கள் யார்
இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

பெரிய அரசியல் தலைவரில் இருந்து, தலையிலும், தோள்களிலும் சுமைகளைத்
தூக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் சாமான்யத் தொழிலாளிவரை
அனைவருமே லாபத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

அதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை!
மீட்டர் போட்டு ஓட்டினால் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப்போகிறது?
அரசியல்வாதிகளும் தங்கள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பதில்லை!
பிடிப்பாக இருப்பதனால் என்ன லாபம் வந்து விடப்போகிறது?
கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஆட்சியை பிடித்து, தொடர்ந்து
அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
அதிகாரத்தைப் பயன்படுத்தினால்தானே நான்கு காசு (கோடிக்கணக்கில்)
பார்க்க முடியும்?

இப்போது பெண்களுக்கும், லாபத்தை வைத்துத்தான் காதல் வருகிறது. நல்ல
குணம் உடையவன் என்று எந்தப் பெண்ணாவது தேடிப்போய்க் காதலிக்கிறாளா?
ஒருவனுடைய வருமானம் என்ன? செலவழிக்கும் சக்தி என்ன என்பதைப்
பார்த்துத்தான் காதல் வருகிறது.

நல்ல வேளை, வங்கிகளில் ஸ்திர சொத்துக்களை (Collateral security) அடமானமாக
வாங்கிக் கொண்டு தொழில் முனைவோருக்குக் கடன் உதவி செய்கிறார்களே,
அதுபோல பெண்களும் ஸ்திர சொத்துக்களைக் (Collateral security) கையில் வாங்கிக்
கொண்டு காதலிக்கும் நிலைமை வரவில்லை. எதிகாலத்தில் அதுவும் வரலாம்.

அம்பிகாபதி, அமராவதி போன்ற தெய்வீகக் காதல் எல்லாம் இப்போது கிடையாது
இப்போதையைக் காதல் எல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எல் அண்ட் டி என்று
காதலின் வட்டம் சுருங்கிவிட்டது.

வட்டம் சுருங்காத காதல் சினிமாவில் மட்டுமே!

ஒரு தந்தை தன் மகளுக்கு வரன் பார்த்தார். பையன் டெக்ஸ்டைல் டிப்ளமோ
ஹோல்டர். ஒரு நூற்பாலையில் வேலை பார்க்கிறான். மாதம் ஐயாயிரம் ரூபாய்
சம்பளம். பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

ஏன் என்று கேட்டால் "ஐயாயிரம் ரூபாயில் எப்படிக் குடும்பம் நடத்துவது?'
என்கிறாள்

ஊருக்கு வெளியே புறநகர் காலனிகளில் 1,500 ரூபாய்க்கு வாடகை வீடுகள்
கிடைக்கும். இருவருக்கு உணவிற்காகும் செலவு 2,500 ரூபாய் ஆகும் மேல்
செலவிற்கு மீதத்தை வைத்துக் கொள்ளுங்கள், என்றால் - ஒண்டிக்குடித்தனம்
பண்னுவதற்கெல்லாம் நான் தயாரில்லை. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால்
என்ன செய்வது? இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய
அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக
இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்.

திருமணம் ஆகின்ற நாள் அன்றே, கணவனிடம் எல்லா வசதிகளும் இருக்க
வேண்டும் என்று பெண் எதிர்பார்க்கிறாள். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம்
ரூபாய் வாடகையில் ஒரு அபார்ட்மெண்ட், ஆறாயிரம் ரூபாய்க்கு டிபார்ட்மென்ட்
ஸ்டோரில் அரிசி, மளிகைச்சாமான்களை அனாசயமாக வாங்கிப்போடக்கூடிய
திறன், பல்சர் அல்லது ஹோண்டா மோட்டார்சைக்கிள், வீட்டில் கேஸ் ஸ்டவ்,
குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்பிளிட் ஏர்கண்டி
ஷனர் பொருத்தப் பட்ட படுக்கை அறை, மாலை வேளைகளில் மூன்று முழம்
மல்லிகைப்பூ, பானிப்பூரி, பேல்பேரி இத்யாதிகளுக்கு தினமும் நூறு ரூபாயை
முகம் சுழிக்காமல் செலவழிக்கும் திறன் ஆகிய உள்ள ஆடவனையே
இன்றைய பெண்கள்(பெரும்பாலோனோர்) விரும்புகிறார்கள்

இதற்கெல்லாம் அடிப்படை பணம். நார்மல் சானலில் வருகிற பணம் இல்லை.
அதீதமாக வருகிற பணம். அதாவது பொத்துக் கொண்டு வருகிற பணம்.

அதற்கு எங்கே போகிறது?

எங்கே போகலாம் என்பதைப் பதினொன்றாம் பாடத்தின் முடிவில் சொல்கிறேன்.

இப்போது பாடம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Eleventh house is called as house of profit! House for elder brother,
friend, acquisitions freedom from misery and total happiness!

பதினொன்றாம் வீடு நன்றாக இருந்தால் இவைகளும் நன்றாக இருக்கும்.
இல்லை என்றால் இல்லை.

நன்றாக இல்லை என்றால், மூத்த சகோதரரை இழக்க நேரிடும். நல்ல
நண்பர்களை இழக்க நேரிடும்.செல்வங்களை இழக்க நேரிடும். வாழ்க்கை
துன்பம் என்ற மேகங்களால் சூழப்பட்டதாகிவிடும். மகிழ்ச்சியின்மை என்ற
இருள் சூழ்ந்து நிற்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு
அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்
முதல் விதி.

அதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;
Maximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்
வருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்
குரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.
வியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து
லட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
டனும் இருப்பான்.

3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
வாழ்வான்.

4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்
மூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்
அவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.

5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு
இடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்
வாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்
செல்பவர்களாகவும் இருப்பார்கள்.

6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்
புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்
விளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்.

7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்
லாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க
நேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்
உண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்!

8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு
அவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
திருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்
சிறப்புப் பெற்று விளங்குவான்.

9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்.

10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.

11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,
ஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
வயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.

13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,
ஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,
வியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்
இருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.

(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் படம் இன்னும் இரண்டு வகுப்புக்கள் உள்ளன
அவற்றையும் படித்துவிட்டு, பிறகு உங்கள் ஜாதகத்தை வைத்து
ஒத்துப் பாருங்கள்.

Do not jump to any conclusion, before reading the next two lessons in this topic!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

108 comments:

  1. நானும் வந்துட்டேன் ஐயா.

    ReplyDelete
  2. //Do not jump to any conclusion, before reading the next two lessons in this topic//

    ஐயா வார்த்தைக்கு அப்பீல் உண்டா?

    ReplyDelete
  3. அடுத்த பதிவுகளுக்கு ஆவலாக உள்ளேன்.

    உங்களை சினிமா தொடர் பதிவிற்கு அழைத்திருந்தேன். பதிவிட வில்லையே.

    (இதற்கும் மின்வெட்டு தான் காரணமா? ;-)))

    ReplyDelete
  4. ஹலோ சார்,

    //பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
    ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
    செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
    அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//

    இதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.
    //வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//
    அப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும் அடுத்த பாடத்திற்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  5. Sir,

    Normally you also write about various planets residing at the eleventh place. For example, the eleventh place is with Jupiter.

    I presume you will provide explanation in the coming days.

    Best wishes

    Sridhar S

    ReplyDelete
  6. Present Sir இன்னொரு முக்கியமான கடமை மறந்துட்டேன்.

    வணக்கம் நாமக்கல் சிபி அண்ணா

    (பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)

    ReplyDelete
  7. //Present Sir இன்னொரு முக்கியமான கடமை மறந்துட்டேன்.

    வணக்கம் நாமக்கல் சிபி அண்ணா

    (பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)
    //

    வன்பகடி, மென்பகடியெல்லாம் முதல் முறை பார்த்துப் பழகும் வரைதான்!

    அதன்பிறகு இதையெல்லாம் சாதா ரணமாக (சதா ரணமாக அல்ல) எடுத்துக் கொல்லும் அளவுக்கு உங்களுக்குப் பழகி விடும்!

    :)

    ReplyDelete
  8. //வணக்கம் நாமக்கல் சிபி அண்ணா//

    வணக்கம் ரகு சிவன்மலை தம்பி!

    :))

    வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்வதுதான் பண்பு!

    ReplyDelete
  9. //இதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.

    //அப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும் அடுத்த பாடத்திற்கு வெயிட்டிங்.
    //

    சுமதி அக்கா!
    இதுக்காகத்தான் ஆங்கிலத்தில் டிஸ்கி போட்டிருக்காரு! பொறுமையா இன்னும் ரெண்டு பகுதிகளையும் படிச்சி பார்த்துட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம்!

    ReplyDelete
  10. //(பின் குறிப்பு: சீனியர் கண்டுக்காம போக முடியுமா .பிறகு வன்பகடி , மென்பகடி எல்லாம் வரும் பின்னூட்டத்தில்.)
    //

    ஹிஹி.. கண்டுகிட்டாலும் வரும்!

    ReplyDelete
  11. Sir,

    Could you explain the effects when
    1) 11th house(Rishabam) is not occupied by any planet, but 11th lord occupying the 10th house?
    2) Guru seeing the 11th house with the 7th paarvai?

    Thanks,
    Srinath

    ReplyDelete
  12. //11th house(Rishabam) is not occupied by any planet, but 11th lord occupying the 10th house?
    //

    காலியாக இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை!

    //பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
    கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
    ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.//

    //Guru seeing the 11th house with the 7th paarvai?
    //

    குருவின் பார்வை கோடி நன்மை என்பார்கள்! எனினும் குரு பார்ப்பது தனக்கு பகை வீடான ரிஷபத்தை!

    ஒரு கிரகம் தான் பார்க்கும் இடத்தில் தான் இருந்தால் என்ன பலனைத் தருமோ அப்பலனையே அவ்விடத்தைப் பார்க்கும்போதும் தரும் என்பது விதி!

    ஆக பகை வீடான ரிஷபத்தில் இருக்கும்போதும், ரிஷபத்தைப் பார்க்கும்போதும் குருவால் சுதந்திரமாக நல்ல பலன்களை முழுமையாகக் கொடுக்க முடியாது!

    (ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக, இது எனது முயற்சி மட்டுமே)

    இன்னும் முழுமையாக் இரண்டு பாடங்கள் உள்ளன! அவற்றையும் படித்துத் தெளிவாக கணக்கிட முடியும் என்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா!

    ReplyDelete
  13. Thanks a lot, Mr Sibi for your quick response.

    ReplyDelete
  14. உள்ளேன் ஐயா...

    //3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
    வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
    வாழ்வான்.//

    இது உண்மை...

    ReplyDelete
  15. What is the effect of 11th lord(Sukran) seeing the 4th house(Thulam), with Saturn in 4th house?

    Thanks,
    Srinath

    ReplyDelete
  16. //What is the effect of 11th lord(Sukran) seeing the 4th house(Thulam), with Saturn in 4th house?
    //

    11m இடத்தில் இருக்கும் சுக்கிரன் 4 வது இடமான துலாம் ராசியைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்! இங்கே 4ம் இடம் என்று நீங்கள் கூறுவது லக்கினத்திலிருந்து 4வது இடம் எனில்,

    அது சுக்கிரன் இருக்கும் 11 வது வீட்டில் இருந்து 6ம் வீடாகும்!

    சுக்கிரனிற்கு தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைத்தவிர வேறு பார்வைகள் கிடையாது.


    காண்க:
    -------
    போன பதிவில் பின்னூட்டம் ஒன்றில் நான் கேட்ட வினாவிற்கான வாத்தியாரின் பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்

    ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும். அதோடு அந்த வீட்டில் இருக்கும் கிரகத்தையும் பார்க்கும்

    செவ்வாய் 4, 7, 8 ஆகிய இடங்களையும்
    குருவிற்கு 5, 7, 9 ஆகிய இடங்களையும்
    சனிக்கு 3, 7, 10 ஆகிய இடங்களையும் பார்க்கும்
    சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் எழாம் இடத்தை மட்டுமே பார்க்கும்!

    ReplyDelete
  17. ஸ்ரீகாந்த்,

    11ம் வீட்டு அதிபன் சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்று சொன்னால் தங்கள் சந்தேகத்திற்கு தெளிவாக விடையளிக்க ஏதுவாக இருக்கும்!

    ReplyDelete
  18. 11ம் வீட்டு அதிபன் சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்று சொன்னால் தங்கள் சந்தேகத்திற்கு தெளிவாக விடையளிக்க ஏதுவாக இருக்கும்!

    Hi Sibi,

    Sukran is in the 10th house (Aries)

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. ஸ்ரீநாத்,

    உங்களது லக்கினம் கடகம்.
    11 வது இடமான ரிஷபத்திற்கு உரியவன் சுக்கிரன் 10ம் இடமான மேஷத்தில் அமர்ந்து, 4 வது இடமான துலாம் ராசியில் இடம்பெற்றிருக்கும் சனி யைப் பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள்!

    ஒவ்வொரு கிரகமும் தந்து இடத்திலிருந்து 7ம் இடத்தை பார்வை இடும்! அதன்படி சுக்கிரனும், சனியும் ஒருவரையொருவர் பரஸ்பர பார்வை இடுகிறார்கள்!

    இவ்விருவரில் எவர் அதிக பலம் வாய்ந்தவரோ அவரது பார்வையையே நாம் ஸ்ட்ராங்க் கன்சிடரேஷனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  21. சுக்கிரன், சனி இருவரில் சுக்கிரன் சனியைக் காட்டிலும் பலம் வாய்ந்தவராகிறார்! ஆக சுக்கிரனின் (சுபர்) பார்வை பெறும் சனி தனது தீய பலன்களைக் குறைத்தே கொடுப்பார்!

    பார்க்க:

    //SP.VR. SUBBIAH said...
    /////நாமக்கல் சிபி said...
    மேலே சொன்னது போலவே
    சந்திரனும், சனியும் ஒருவருக்கொருவர் ஏழாமிடங்களில்
    அமர்ந்துகொண்டு லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
    சந்திரன்(சுபர்) -> சனி (பாபி)
    சனி (பாபி) -> சந்திரன்(சுபர்)
    இது போன்ற நேரங்களில் இரண்டில் எது பலம் வாய்ந்த கிரகம்
    என்று பார்த்து பலவான் எவனோ அவனது பார்வையை மட்டும்
    ஸ்ட்ராங்க் கன்சிடரேசன் செய்ய வேண்டுமா?///

    ஆமாம், ஆமாம்! அதே, அதே!
    //


    அது சரி! உங்கள் ராசி என்ன?

    ReplyDelete
  22. வணக்கம் குருவே!

    அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்

    அன்புடன்,
    செந்தில்

    ReplyDelete
  23. /////ஜே கே | J K said...
    நானும் வந்துட்டேன் ஐயா.////

    இரண்டு பேரும் ஒரே இடத்தில் குப்பை கொட்டுகிறீர்களா? (வேலை பார்க்கிறீர்களா?):-))))

    ReplyDelete
  24. /////ஜே கே | J K said...
    நானும் வந்துட்டேன் ஐயா.////

    இரண்டு பேரும் ஒரே இடத்தில் குப்பை கொட்டுகிறீர்களா? (வேலை பார்க்கிறீர்களா?):-))))

    ReplyDelete
  25. /////நாமக்கல் சிபி said...
    //Do not jump to any conclusion, before reading the next two lessons in this topic//
    ஐயா வார்த்தைக்கு அப்பீல் உண்டா?/////

    புல்லரிக்கிறது!

    ReplyDelete
  26. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    waiting to read the next 2 lessons////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. ////கோவி.கண்ணன் said...
    :) உள்ளேன் ஐயா !/////

    வகுப்பிற்கு வந்து எட்டிப்பார்த்ததற்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  28. //////இளைய பல்லவன் said...
    அடுத்த பதிவுகளுக்கு ஆவலாக உள்ளேன்.
    உங்களை சினிமா தொடர் பதிவிற்கு அழைத்திருந்தேன். பதிவிட வில்லையே.
    (இதற்கும் மின்வெட்டு தான் காரணமா? ;-)))///////

    இல்லை. அலுவல்கள் அதிகம். என்னை அடுத்த சுற்றுக்கு அழையுங்கள்.
    இப்போது நேரமின்மையும் படுத்துகிறது!

    ReplyDelete
  29. Sumathi. said...
    ஹலோ சார்,
    //பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
    ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
    செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
    அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//
    இதிலுமெனக்கு சரியா அமையலையே.....எந்த லாபமும் இல்லை.
    //வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.//
    அப்படி ஒன்னும் பெருசா சிறப்பா அமையலை.ஏதோ போயிட்டு இருக்கு. அவ்ளோ தான்.இருந்தாலும்

    அடுத்த பாடத்திற்கு வெயிட்டிங்./////

    லாபம் என்பது ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் அளவிற்குக் கிடைக்கது. ஜாதகத்தில் உள்ள அளவு நிச்சயமாகக் கிடைக்கும். அதை 11ஆவது வீட்டதிபர் தன் தசாபுத்தியில் நிச்சயம் கொடுப்பார்!

    ReplyDelete
  30. ////Ragu Sivanmalai said...
    Present Sir/////

    நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  31. /////Sridhar said..
    Sir,
    Normally you also write about various planets residing at the eleventh place. For example, the eleventh place

    is with Jupiter.
    I presume you will provide explanation in the coming days.
    Best wishes
    Sridhar S//////

    ஆமாம். அடுத்த பதிவுகளில் அவைகள் உண்டு!

    ReplyDelete
  32. /////புருனோ Bruno said...
    உள்ளேன் ஐயா////

    வாருங்கள் டாக்டர். உங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    நட்சத்திரவார வேலைகளைப் பாருங்கள். அடுத்த வாரம் முதல் வகுப்பிற்கு வந்தால் போதும்!

    ReplyDelete
  33. Srinath said...
    Sir,
    Could you explain the effects when
    1) 11th house(Rishabam) is not occupied by any planet, but 11th lord occupying the 10th house?
    2) Guru seeing the 11th house with the 7th paarvai?
    Thanks,
    Srinath////

    பத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பதிவில் எழுதியுள்ளேனே!
    குருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும்!

    ReplyDelete
  34. ////நாமக்கல் சிபி said...
    //11th house(Rishabam) is not occupied by any planet, but 11th lord occupying the 10th house?
    // காலியாக இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை!
    //பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
    கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
    ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.//
    //Guru seeing the 11th house with the 7th paarvai? //
    குருவின் பார்வை கோடி நன்மை என்பார்கள்! எனினும் குரு பார்ப்பது தனக்கு பகை வீடான ரிஷபத்தை!
    ஒரு கிரகம் தான் பார்க்கும் இடத்தில் தான் இருந்தால் என்ன பலனைத் தருமோ அப்பலனையே

    அவ்விடத்தைப் பார்க்கும்போதும் தரும் என்பது விதி!
    ஆக பகை வீடான ரிஷபத்தில் இருக்கும்போதும், ரிஷபத்தைப் பார்க்கும்போதும் குருவால் சுதந்திரமாக

    நல்ல பலன்களை முழுமையாகக் கொடுக்க முடியாது!
    (ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக, இது எனது முயற்சி மட்டுமே)
    இன்னும் முழுமையாக் இரண்டு பாடங்கள் உள்ளன! அவற்றையும் படித்துத் தெளிவாக கணக்கிட முடியும்

    என்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா!
    கணக்கிட முடியும் என்று வாத்தியார் சொல்லி இருக்கிறார் அல்லவா!////

    குருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும்! அவர் நீசம் பெற்றாலும் அல்லது பகை வீட்டில் இருந்தாலும், அதிக அளவு நன்மையைச் செய்ய முடியாவிட்டாலும், கெடுதல்களைச் செய்யமாட்டார்.
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

    ReplyDelete
  35. //////கூடுதுறை said...
    உள்ளேன் ஐயா...
    //3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
    வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
    வாழ்வான்.//
    இது உண்மை...///

    நன்றி கூடுதுறையாரே!

    ReplyDelete
  36. /////கூடுதுறை said...
    ஒன்றைத்தவிர////

    எது ஒன்றைத்தவிர?

    ReplyDelete
  37. //////Srinath said...
    What is the effect of 11th lord(Sukran) seeing the 4th house(Thulam), with Saturn in 4th house?
    Thanks,
    Srinath//////
    நீங்கள் கடக லக்கினம். சனி உச்சம் பெற்று 4ல். சனி 7 & 8 ஆகிய வீடுகளுக்கு உரியவன், அவனை சுக்கிரன் பார்ப்பது நல்லது. நல்ல மனைவியைப் பெற்றுத் தருவான். நீண்ட ஆயுளையும் தருவான்.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. நாமக்கல் சிபி said...
    //What is the effect of 11th lord(Sukran) seeing the 4th house(Thulam), with Saturn in 4th house?
    // 11m இடத்தில் இருக்கும் சுக்கிரன் 4 வது இடமான துலாம் ராசியைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்! இங்கே 4ம் இடம் என்று நீங்கள் கூறுவது லக்கினத்திலிருந்து 4வது இடம் எனில்,
    அது சுக்கிரன் இருக்கும் 11 வது வீட்டில் இருந்து 6ம் வீடாகும்!/////

    இல்லை அவர் சொல்வது மேஷத்தில் சுக்கிரன்!

    ReplyDelete
  40. //////நாமக்கல் சிபி said...
    ஸ்ரீநாத்,
    உங்களது லக்கினம் கடகம்.
    11 வது இடமான ரிஷபத்திற்கு உரியவன் சுக்கிரன் 10ம் இடமான மேஷத்தில் அமர்ந்து, 4 வது இடமான

    துலாம் ராசியில் இடம்பெற்றிருக்கும் சனி யைப் பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள்!
    ஒவ்வொரு கிரகமும் தந்து இடத்திலிருந்து 7ம் இடத்தை பார்வை இடும்! அதன்படி சுக்கிரனும், சனியும்

    ஒருவரையொருவர் பரஸ்பர பார்வை இடுகிறார்கள்!
    இவ்விருவரில் எவர் அதிக பலம் வாய்ந்தவரோ அவரது பார்வையையே நாம் ஸ்ட்ராங்க் கன்சிடரேஷனுக்கு

    எடுத்துக் கொள்ள வேண்டும்!/////

    இங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.
    சுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்
    ஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்

    ReplyDelete
  41. //////hotcat said...
    Good lesson. Thank you sir.
    -Shankar///

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  42. ///////senthil said...
    வணக்கம் குருவே!
    அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்
    அன்புடன்,
    செந்தில்////

    அடுத்த படம் விரைவில் வரும்!

    ReplyDelete
  43. வணக்கம்!!! படிச்சிட்டே இருக்கேன், வந்து "உள்ளேன் ஐயா" சொல்லிட்டுப் போகலாம்னு வந்தால்... சட்டாம்பிள்ளை இருக்காரு போலிருக்கே!!!

    ஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா?

    //ஆனாலும் மன அமைதி இருக்காது// அதனால வெயிட்டீஸ் ஃபார் அடுத்த போஸ்டு.

    ReplyDelete
  44. இன் ஃபியர் ஆஃப் சட்டாம்பிள்ளை, ஐ மறந்துஃபை இமெயில் ஃபால்லோஅப்பு. ஐ எஸ்கேப்பு.

    ReplyDelete
  45. //இங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.
    சுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்
    ஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்//


    இதுக்குத்தான் வாத்தியார் வேணுங்குறது!

    :))

    ReplyDelete
  46. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    வணக்கம்!!! படிச்சிட்டே இருக்கேன், வந்து "உள்ளேன் ஐயா" சொல்லிட்டுப் போகலாம்னு வந்தால்... சட்டாம்பிள்ளை இருக்காரு போலிருக்கே!!!////

    சட்டாம்பிள்ளை மிகவும் நல்லவர். முருகபக்தர். நீங்கள் பயம்கொள்ளத் தேவையில்லை!

    ////ஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா?/////

    அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். தவறில்லை! குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.

    ReplyDelete
  47. //////நாமக்கல் சிபி said...
    //இங்கே உச்ச சனி கர்மகாரகன் அவனது பார்வை 10ஆம் வீட்டில்.
    சுக்கிரன் சுகங்களுக்கான அதிபதி - அவருடைய பார்வை 4ல்
    ஆகவே ஜாதகருக்கு 2 வீடுகளுக்குமே நல்ல பலன்களை அவர்கள் இருவரும் தங்கள் பார்வையால் பெற்றுத்தருவார்கள்//
    இதுக்குத்தான் வாத்தியார் வேணுங்குறது! :))///

    ஜாதகங்களை இந்தக் கோணத்திலும் பார்த்து அலச வேண்டும் என்பதற்கான உதாரணம் இது!

    ReplyDelete
  48. //குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.
    //

    ஆமாம்! 18 நாளைக்கு தமிழ்மணம் ஸ்தம்பித்து விடும்!

    அதுசரி! அப்படி நடந்தா பதிவுலக பரந்தாமன் எந்த பக்கம் இருப்பாரு?

    நாராயண!

    ReplyDelete
  49. //ஜாதகங்களை இந்தக் கோணத்திலும் பார்த்து அலச வேண்டும் என்பதற்கான உதாரணம் இது!
    //

    உண்மைதான்! நான் மறந்துவிட்ட ஒரு கோணத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  50. //சட்டாம்பிள்ளை மிகவும் நல்லவர். முருகபக்தர். நீங்கள் பயம்கொள்ளத் தேவையில்லை!
    //

    ஆமாம்! நம்மைப் பார்த்து அவர் பயப்படாம இருந்தா சரி!

    ReplyDelete
  51. ////ஆமா, கௌரவ மாணவர்கள்னாக்க, நாங்க என்ன பாண்டவ மாணவர்களா?/////


    ஹிஹி! இப்பத்தான் புரிஞ்சது எனக்கு!

    கௌரவ மாணவர்கள் 2 பேரு! பாண்டவர்கள் மீதிப் பேரா?

    கிருஷ்ணா! இந்த தபா ஒரு சேஞ்சுக்காக எங்க பக்கம் வந்துடேன்!

    ReplyDelete
  52. எங்க பக்கம் கிருஷ்ணர் இருக்காரோ இல்லையோ!

    குரு பகவான் இருக்கிறார்! அவர் போதும் எங்களுக்கு!

    ReplyDelete
  53. //உள்ளேன் ஐயா!//

    இப்பவெல்லாம் ரொம்ப லேட்டா வரீங்கன்னு கிளாஸ் சட்டாம்பிள்ளை சொல்றார் விமல்!

    சரி சரி வாங்க! இன்னும் 38 அடிக்கணும்!

    ReplyDelete
  54. //குருவின் பார்வை எப்போதுமே நன்மையான பலன்களையே கொடுக்கும்! அவர் நீசம் பெற்றாலும் அல்லது பகை வீட்டில் இருந்தாலும், அதிக அளவு நன்மையைச் செய்ய முடியாவிட்டாலும், கெடுதல்களைச் செய்யமாட்டார்.
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!//

    இது எனக்கு புதிய தகவல்! மனதில் வைத்துக் கொள்கிறேன் ஐயா!

    (மைண்ட்லே வெச்சிக்கிறேன் என்ற தொனியில் சொல்லவில்லை)

    ReplyDelete
  55. Thank you Mr Subbiah and Mr Sibi

    The explanations have been very clear and crisp to the point

    Thanks
    Srinath

    ReplyDelete
  56. ஐயா

    என் நண்பரின் ஜாதகக் குறிப்பு

    பலன் சொல்லவும்

    11 ம் வீட்டு பாடத்தொடு தொடர்பு படுத்தி

    லக்ண்ம்:மகரம்
    ராசி-மீனம்
    நட்சத்திரம்- ரேவதி
    நடப்பு திசை: சுக்கிரன்


    சுக்கிரதிசை ஆரம்பம் : 23-04-2001
    சுக்கிரபுத்தி 0-04-0003
    சூரிய புத்தி 0-00-0001
    சந்திரன் புத்தி 0-08-0001
    செவ்வாய் புத்தி 0-02-0001
    ----------
    23-06-2008

    நடப்பு புத்தி சுக்கிர திசையில்
    ராகு புத்தி ( கடந்த 4 மாதமாக)
    ---------


    10 வீட்டில் புத்ன்
    11ம் வீட்டில்-சுக்கிரன்
    ல்க்ணத்தில் செவ்வாய்.
    இப்போது வயது -22 வருடம் 5 நாள்

    இந்த ஜாதகத்தை பார்த்த் ஒரு நண்பர் ( தொழில் முறை ஜோதிடர் அல்ல)

    ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)

    அவ்ர் சொலவது மிகை போலுள்ளதா?
    உண்மையென்றால்

    அதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.

    ReplyDelete
  57. //ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)

    அவ்ர் சொலவது மிகை போலுள்ளதா?
    உண்மையென்றால்

    அதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.
    //

    மகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்!

    //. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
    ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
    எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
    டனும் இருப்பான்.
    //

    ReplyDelete
  58. //10 வீட்டில் புத்ன்
    11ம் வீட்டில்-சுக்கிரன்
    ல்க்ணத்தில் செவ்வாய்.
    இப்போது வயது -22 வருடம் 5 நாள்//


    திடீர் மின்தடை ஒரு தகவல் "மிஸ்ஸிங்க்"

    11ம் வீட்டில் சுக்கிரனுட்ன் சனியும் மாந்தியும் உள்ளனர்.

    ReplyDelete
  59. //11ம் வீட்டில் சுக்கிரனுட்ன் சனியும் மாந்தியும் உள்ளனர்//

    இதையெல்லாம் பார்த்துச் சொல்ல நான் எதுக்குங்க!

    வாத்தியார் பார்த்துச் சொல்வாரு! அதுவே போதும்ணு நினைக்கிறேன்!
    :)

    ReplyDelete
  60. /////நாமக்கல் சிபி said...
    //குருஷேத்திர யுத்தம் மட்டும் நடத்திவிடாதீர்கள்.
    // ஆமாம்! 18 நாளைக்கு தமிழ்மணம் ஸ்தம்பித்து விடும்!
    அதுசரி! அப்படி நடந்தா பதிவுலக பரந்தாமன் எந்த பக்கம் இருப்பாரு?
    நாராயண!/////

    அதையும் நீங்களே விசாரித்துச் சொல்லி விடுங்கள்!

    ReplyDelete
  61. //////நாமக்கல் சிபி said...
    எங்க பக்கம் கிருஷ்ணர் இருக்காரோ இல்லையோ!
    குரு பகவான் இருக்கிறார்! அவர் போதும் எங்களுக்கு!//////

    யுத்தத்திற்கு செவ்வாயும், சனியும் வேண்டும்!

    ReplyDelete
  62. /////கோவை விமல்(vimal) said...
    உள்ளேன் ஐயா!////

    நன்றி விமல்!

    ReplyDelete
  63. //நாமக்கல் சிபி said...
    //ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)

    அவ்ர் சொலவது மிகை போலுள்ளதா?
    உண்மையென்றால்

    அதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.
    //

    மகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்!

    //. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
    ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
    எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
    டனும் இருப்பான்.//


    ஆசிரியரின் சிறப்பு விருது பெற்ற
    நாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி.


    11ம் வீட்டில் உள்ள சுக்கிரன் சனி மாந்தி ( நடப்பு சுக்கிர திசை,ராகு புத்தி) தொடர்பு இதற்கு துணையா?
    இல்லையா?( இப்போது ஜாதகருக்கு பூர்வீக சொத்து மூலம் பெரும் செல்வம் வரும் போலுள்ளது).

    இதில் இன்னொரு விசேடம்.ஜாதகர் ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் உள்ளதாம்.( அனத்து கிரகங்களும் ராகு கேதுக்குள் அடக்கம்)
    கால சர்ப்பம் இருந்தால் 35 வயது வரை கடின வாழ்க்கை என்பார்களே!
    இது எப்படி சாத்தியமாகுகிறது?

    ReplyDelete
  64. //நன்றி விமல்!//

    ஒன்லி விமல் விளம்பரம் மாதிரியே நன்றி விமல்!

    ReplyDelete
  65. நாமக்கல் சிபி said...
    //ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)
    அவ்ர் சொலவது மிகை போலுள்ளதா?
    உண்மையென்றால்
    அதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.
    // மகர லக்கினத்திற்கு 11ம் வீடு விருச்சிகம். விருச்சிகத்திற்குரியவன் செவ்வாய். செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்!

    //. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
    ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
    எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
    டனும் இருப்பான்.
    //

    அதோடு 11ஆம் வீட்டதிபதி உச்சமாகி லக்கினத்தில் அமர்ந்துள்ளான். அவன் இந்த ஜாதகருக்கு 4ஆம் வீட்டு அதிபதியும் ஆவான். தசா நாதனும் 11ல் உள்ளான் அது முடிவதற்குள் ஜாதகனை ஒரு உன்னத நிலக்குக் கொண்டுவருவான்.

    அது அரசியலிலா என்று பார்ப்பதற்கு முழு ஜாதகமும், அஷ்டவர்க்கமும் வேண்டும்!

    ReplyDelete
  66. /////Blogger புரட்சித் தமிழன் said...
    //நாமக்கல் சிபி said...
    //ஜாதகர் 35 வயதுக்குள் பொருளதாரத்திலும், அரசியல் செல்வாக்கிலும் மிக உன்னத் நிலையை அடைவார் என எழுதிக் கொடுத்துள்ளராம்.( அவ்ர் சொன்னது சரியாக நடந்தற்கு சான்று உள்ளது)
    அவ்ர் சொலவது மிகை போலுள்ளதா?
    உண்மையென்றால்
    அதை 11ம் வீட்டு பாடத்துடன் விளக்கவும்.
    //

    சிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  67. நான் சொல்லலை! வாத்தியார் வந்து கிளீனா சொல்லிடுவார்னு!

    ReplyDelete
  68. //சிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்!//

    ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்.

    உங்களது ஜோதிடப் புத்தகத்தின் பதிப்பினை எதிர்பார்க்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  69. //ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்//

    பால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ?

    ReplyDelete
  70. //நாமக்கல் சிபி said...
    //ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்//

    பால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ?//

    அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...

    ReplyDelete
  71. //அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...
    //

    அட! அட! அட!
    நல்ல சமாளிபிகேஷன்!

    புரட்சித் தமிழா! நீ என் இனமடா!

    ReplyDelete
  72. //நாமக்கல் சிபி said...
    //அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...
    //

    அட! அட! அட!
    நல்ல சமாளிபிகேஷன்!

    புரட்சித் தமிழா! நீ என் இனமடா!


    நெஞ்சு நிறை நன்றிகள் சிபி அண்ணா

    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)


    என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
    என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே

    இனம் மாறலாம் குணம் உண்டு தான்
    இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
    மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
    கலி மாறலாம் கொடி ஒன்று தான்
    திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
    இசை மாறலாம் மொழி ஒன்று தான்
    நம் இந்தியா அதும் ஒன்று தான்


    தமிழா தமிழா கண்கள் கலங்காதே
    விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)


    உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
    ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

    தமிழா தமிழா நாளை நம்நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே


    நவபாரதம் பொதுவானது
    இது வியர்வையால் உருவானது

    ஜெய்ஹிந்த்!!!
    வந்தே மாதரம்!!!

    http://www.musicindiaonline.com/p/x/QAfgVpJVqd.As1NMvHdW/

    ReplyDelete
  73. அப்படி போடுங்க அருவாளை!

    இந்தப் பாட்டை நானும் நினைச்சேன் அந்த பின்னூட்டம் போடும்போதே!

    கிரேட் மென் திங்க் அலைக்!

    ReplyDelete
  74. 1. what if the 11th house lord is retrograde?
    2. What if the 11th house lord (retrograde) is in vargotamma?
    3. When will retrograde mercury gets combust if it is close to sun? is it 10 degree or 12 degree?

    -Shankar

    ReplyDelete
  75. ஒரு ஜாதகம்:

    மகரலக்கணம்,ரிஷபராசி,
    10 ம் இடத்தில் சனி யுடன் செவ்வாய், 11ம் இடத்தில் புதனுடன் சுக்கிரன் -

    தசாபுத்தி-சனி திசை சனி புத்தி.


    11ம் பாடம் படி 10ல் செவ்வாய்+ சனி

    சனி கொட்டுமா?(the best period)
    சனி கொடுக்குமா?(the average period)
    சனி கெடுக்குமா?( the worst period)

    ReplyDelete
  76. //////நாமக்கல் சிபி said...
    நான் சொல்லலை! வாத்தியார் வந்து கிளீனா சொல்லிடுவார்னு!/////

    வாத்தியார் மேல் அவ்வளவு நம்பிக்கையா? நன்றி சிபியாரே!

    ReplyDelete
  77. ////புரட்சித் தமிழன் said...
    //சிபியின் பின்னூட்ட விளக்கத்தில் குறிப்பு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்க வேண்டுகிறேன்!//
    ஆசிரியர் ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்.
    உங்களது ஜோதிடப் பாடத்தின் பதிவினை எதிர்பார்க்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.//////

    நன்றி தமிழரே! புரட்சியை வகுப்பிற்குள்ளே நடத்தி விடாதீர்கள்:-)))

    ReplyDelete
  78. //////நாமக்கல் சிபி said...
    //ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்//
    பால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ?/////

    தூக்க கலக்கத்தில் தட்டச்சி இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  79. //////புரட்சித் தமிழன் said...
    //நாமக்கல் சிபி said...
    //ஆசிரியை ஐயாவின் அன்பு விளக்கத்திற்கு நன்றி.
    பெரியவர்கள் வாக்கும் பொய்க்குமோ!
    நல்லது நடக்கும் நம்புவோம்//
    பால் மாத்தி பேசுவது என்று இதைத்தான் சொல்வார்களோ?//
    அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் .../////

    அன்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது நண்பரே!
    ஏன் உங்களுக்கு இல்லையா?

    ReplyDelete
  80. ////////நாமக்கல் சிபி said...
    //அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...
    // அட! அட! அட!
    நல்ல சமாளிபிகேஷன்!
    புரட்சித் தமிழா! நீ என் இனமடா!//////

    இருவரும் சேர்ந்து இனப்புரட்சி நடத்திவிடாதீர்கள்:-)))

    ReplyDelete
  81. //////புரட்சித் தமிழன் said...
    //நாமக்கல் சிபி said...
    //அன்பு என்றதும் தட்டச்சு தானாக தாய்க்குலம் பக்கம் ...
    // அட! அட! அட!
    நல்ல சமாளிபிகேஷன்!
    புரட்சித் தமிழா! நீ என் இனமடா!
    நெஞ்சு நிறை நன்றிகள் சிபி அண்ணா
    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)
    என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
    என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே
    இனம் மாறலாம் குணம் உண்டு தான்
    இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
    மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
    கலி மாறலாம் கொடி ஒன்று தான்
    திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
    இசை மாறலாம் மொழி ஒன்று தான்
    நம் இந்தியா அதும் ஒன்று தான்
    தமிழா தமிழா கண்கள் கலங்காதே
    விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)
    உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லை
    ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
    தமிழா தமிழா நாளை நம்நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே
    நவபாரதம் பொதுவானது
    இது வியர்வையால் உருவானது
    ஜெய்ஹிந்த்!!!
    வந்தே மாதரம்!!!////

    பாடலின் கருத்து நன்றாக உள்ளது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  82. /////நாமக்கல் சிபி said...
    அப்படி போடுங்க அருவாளை!
    இந்தப் பாட்டை நானும் நினைச்சேன் அந்த பின்னூட்டம் போடும்போதே!
    கிரேட் மென் திங்க் அலைக்!

    அலைக்கான திங்கிங் என்றால் மகிழ்ச்சிதான். எல்லோரும் இப்படி இருந்துவிட்டால் பிரச்சினை ஏது?

    ReplyDelete
  83. /////hotcat said...
    1. what if the 11th house lord is retrograde?
    2. What if the 11th house lord (retrograde) is in vargotamma?
    3. When will retrograde mercury gets combust if it is close to sun? is it 10 degree or 12 degree?
    -Shankar////

    வக்கிர சுழற்சியில் உள்ள கிரகத்தின் வலிமை பாதியாகக் குறைந்து விடும். நல்ல கிரகங்களின் நல்ல பலன்களும்
    குறைந்துவிடும். தீய கிரகங்களின் தீய பலன்களும் குறைந்துவிடும்.

    சூரியனுக்கு அருகில் என்றால் 10 பாகைகள் தள்ளி இருக்க வேண்டும்

    ReplyDelete
  84. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஒரு ஜாதகம்:
    மகரலக்கணம்,ரிஷபராசி,
    10 ம் இடத்தில் சனி யுடன் செவ்வாய், 11ம் இடத்தில் புதனுடன் சுக்கிரன் -
    தசாபுத்தி-சனி திசை சனி புத்தி.
    11ம் பாடம் படி 10ல் செவ்வாய்+ சனி
    சனி கொட்டுமா?(the best period)
    சனி கொடுக்குமா?(the average period)
    சனி கெடுக்குமா?( the worst period)///////

    +++பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
    கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
    ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.+++

    இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி உச்சம் பெற்றுள்ளான்.
    ஆறாம் இடத்து அதிபன் பதினொன்றில் அமர்ந்துள்ளான்.
    உச்சனின் திசை நடைபெறுகிறது.
    கொட்டும். ஆனால் விட்டு விட்டுக் கொட்டும்!
    கொட்டும்போது பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்:-))))

    ReplyDelete
  85. //இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி உச்சம் பெற்றுள்ளான்.
    ஆறாம் இடத்து அதிபன் பதினொன்றில் அமர்ந்துள்ளான்.
    உச்சனின் திசை நடைபெறுகிறது.
    கொட்டும். ஆனால் விட்டு விட்டுக் கொட்டும்!
    கொட்டும்போது பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்:-))))

    நன்றி.ஐயா.

    ReplyDelete
  86. குருவே பாடம் அருமை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  87. வாத்தியாரையா!
    //நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது? இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்//

    ரொம்ப சரியா பல்ஸ் பார்த்து வைத்துள்ளீர்கள்.

    பெரும்பாலோர் என்ற இடத்தில் "எல்லோரும்" என்று இருக்க வேண்டும் :-).

    எல்ல பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருகிறேன். ரொம்ப தெளிவா புரியுது.

    கற்றது கைமண் அளவு. சில சமயங்களில் சிலவற்றை பிடிக்க முடிவதில்லை. எல்லாம் பிடிக்க முடிந்து விட்டால் தெய்வம் எதற்க்கு? ஜாதகம் ஜோதிடம் எதற்க்கு என்று சொல்வர். "இதை நினைத்துக் கொண்டால் எல்லாம் பிடிபடும்-புடிபடும்" :-).

    ReplyDelete
  88. /////Rajagopal said...
    குருவே பாடம் அருமை.
    அன்புடன்
    இராசகோபால்//////

    நன்றி ராஜகோபால்

    ReplyDelete
  89. //////சிவமுருகன் said...
    வாத்தியாரையா!
    //நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது? இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்//
    ரொம்ப சரியா பல்ஸ் பார்த்து வைத்துள்ளீர்கள்.
    பெரும்பாலோர் என்ற இடத்தில் "எல்லோரும்" என்று இருக்க வேண்டும் :-).
    எல்ல பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருகிறேன். ரொம்ப தெளிவா புரியுது.
    கற்றது கைமண் அளவு. சில சமயங்களில் சிலவற்றை பிடிக்க முடிவதில்லை. எல்லாம் பிடிக்க முடிந்து விட்டால் தெய்வம் எதற்க்கு? ஜாதகம் ஜோதிடம் எதற்க்கு என்று சொல்வர். "இதை நினைத்துக் கொண்டால் எல்லாம் பிடிபடும்-புடிபடும்" :-)./////

    சரியாகச் சொன்னீர்கள். நன்றி சிவமுருகன்!

    ReplyDelete
  90. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  91. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  92. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  93. அய்யா/சிவமுருகன்,
    இந்திய ஆண்கள் எல்லாரும் ஏழை; விதவை; புற அழகில்லாத; எண்ணிக்கையில் பெரிய மற்றும் பிறந்த குடும்பத்தில் பொறுப்பு உள்ள; பெண்களை மட்டுமே மணக்க விரும்புகிறார்கள் / மணந்திருக்கிறார்கள். எப்படி தம் வீட்டில் பெண் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அப்படியே தம் மனைவியின் உறவினரிடமும் பாசத்தைக் காட்டுவார்கள், உதவி செய்வார்கள். இந்திய சமுதாயம் பெண்களை சொல்லாலும் செயலாலும் மிகவும் மதிக்கும் சமுதாயம்:-(

    என் கணவருக்கு எத்தனை சம்பளம், என்ன பரம்பரை சொத்து (இது இன்றக்கும் தெரியாது/தேவையில்லாத விஷயம்) எதுவும் எனக்குத் தெரியாது திருமணத்துக்கு முன்னால்.

    :-((((((((((((((((((((((((

    ReplyDelete
  94. வாத்தியார் அய்யா,
    பாடம் நல்லா புரிஞ்சிருச்சி.

    ReplyDelete
  95. பதினொன்றாம் வீடு அருமை சுப்பையா அவர்களே

    ReplyDelete
  96. ///thenammailakshmanan said...
    பதினொன்றாம் வீடு அருமை சுப்பையா அவர்களே///

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  97. ///பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
    சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
    செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
    காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்///

    11 am VEETIN ADHIBADHI 8 il AMARNDHU UCHCHAM PETRALUM MAERKOORIYA PALAN DHAN KIDAIKUMA ILLAI MARUMA AYYA..

    ReplyDelete
  98. ////KARTHIK said...
    ///பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
    சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
    செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
    காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்///
    11 am VEETIN ADHIBADHI 8 il AMARNDHU UCHCHAM PETRALUM MAERKOORIYA PALAN DHAN KIDAIKUMA ILLAI MARUMA AYYA../////

    எட்டாம் வீட்டில் அமர்ந்ததற்கான பலன்தான் மேலோங்கி இருக்கும். உச்சமானதால் தீமைகளின் அளவு குறையும்!

    ReplyDelete
  99. ayya naan dhulam rasi swathi natchathiram. pirandhe varudam may 1996. enaku aduthu eppo sukkira dhisai varum?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com