மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.10.08

கண்ணனின் உறைவிடம் எது?


யமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.

அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்
கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்
அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.

அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக
உபவாசம் இருக்கின்ற தினம்.. கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.

அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.

அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றைக் கடந்து
செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்.

"சரி," என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த
பானைகளைப் பார்த்தார்.

உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.
வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது - வேண்டுமா?" என்று கேட்டார்கள்.

" கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு
பெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள்.

அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்
வயிறு முட்ட, ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்

முடித்தவர், கரையைக் கடக்கும் முகமாக ஆற்றை நோக்கி நின்றவாறு
கணீரென்று குரல் கொடுத்துச் சத்தமாக இப்படிச் சொன்னார்

"யேய் மாயக் கண்ணா!, நான் உன் பக்தனென்பது உண்மையானால்,
நீ என் நெஞ்சிற்குள் குடியிருப்பது உண்மையானால், நான் இன்று
உபவாசம் இருப்பது உண்மையானால், இந்த வெள்ளத்தை நிறுத்தி
எனக்கு ஆற்றைக் கடக்க வழிவிடு" என்றார்.

என்ன ஆச்சரியம்!

மின்னல் வேகத்தில் ஆற்றின் வெள்ளம் தனிந்தது. அதோடு மட்டுமா -
ஆற்றின் நடுவே பத்தடிக்குப் பிளவு ஏற்பட்டு இருபக்க கரைகளையும்
இணைக்கும் பாதை ஏற்பட்டது. பாதையில், மண் , சேறு எதுவுமின்றி
நடந்து செல்லும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது.

வசிஷ்டரின் கையசைவிற்குக் கட்டுப்பட்ட கோபிகைகள் பின்தொடர,
வசிஷ்டர் உட்பட அனைவரும் மறுகரையை அடைந்தார்கள்.

அனைவரின் பிரமிப்பும் அகலுமுன்பே, பிளவு ஒன்று சேர யமுனை
ஆறு மீண்டும் பழைய பிரவாகத்தோடு ஓடத்துவங்கியது.

அததனை பெண்களும் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டுப்
புறப்பட எத்தனித்தார்கள்.

அவர்களில் ஒருத்தி மட்டும், குறுகுறுப்போடு வசிஷ்டரைப்
பார்த்தவள், "ஸ்வாமீஜி, ஒரு சிறு சந்தேகம் உள்ளது -
கேட்கலாமா?" என்றாள்.

அவரும், "கேள் பெண்ணே!" என்றார்.

"எவ்வளவு பெரிய முனிவர் நீங்கள் - ஏன் பொய் சொன்னீர்கள்?"

"என்னம்மா, பொய் சொன்னேன்?"

"கண்ணா, நான் உபவாசம் இருப்பது உண்மையானால் என்று
சொன்னீர்களல்லவா - அது பொய்தானே?"

" அது பொய்யல்ல, உண்மைதான்!"

"அப்படியென்றால் நாங்கள் கொடுத்த வெண்ணெய் உருண்டைகள்
எல்லாம் எங்கே போயிற்று?"

"என்னம்மா, என் வயசென்ன? அவ்வளவு வெண்ணையையும்
நான் எப்படிச் சாப்பிட்டிருக்க முடியும்? என் நெஞ்சிற்குள் குடியிருக்கும்
அந்த மாயக் கண்ணன்தான் உங்கள் பானைகளை எட்டிப் பார்த்து,
உங்களிடமிருந்து வெண்ணையை வாங்க வைத்தான்.
உண்டதும் அவன்தான், வழிவிட்டதும் அவன்தான் - இப்போது
புரிகிறதா?" என்றார்.

அந்தப் பெண் இந்தப் பதிலால், திகைத்து ஒன்றும் சொல்ல
முடியாமல் அவரை மீண்டுமொருமுறை விழுந்து வணங்கி
விட்டு, எழுந்து சென்று விட்டாள்.

ஆமாம் வசிஷ்டரின் நெஞ்சில் கண்ணபிரான் குடிருந்தது உண்மை!

அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின்
நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!

வாழ்க வளமுடன்!

53 comments:

கூடுதுறை said...

//அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின்
நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!//

கண்ணனின் பெருமை கேட்க கேட்க தெவிட்டாதது...

புரட்டாசி மாத ஸ்பெசல் ஆ?

நாமக்கல் சிபி said...

//எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை//

ஹிஹி! அவருதான் பிளாக் எழுத வந்துட்டாரே!

அட்சயா said...

Present Sir

Sumathi. said...

ஹலோ சார்,

அது சரி என்ன இன்று கண்ணனைப் பற்றி? வேலவனிடமிருந்து தப்பித்து வந்துவிட்டீர்களா? அல்லஹு கண்ணன்
உங்களை உள்ளம் கவர்ந்து விட்டானா?
எதுவா இருந்தாலும் நல்லாயிருக்கு.

கோவி.கண்ணன் said...

//உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.//

அவன் பேரும் கிருஷ்ண குமார் தான் !
திருப்பூரில் இருக்கிறான்
:)

நாமக்கல் சிபி said...

//அல்லஹு கண்ணன்
உங்களை உள்ளம் கவர்ந்து விட்டானா?
//

அவர் எப்போதுமே வாத்தியாரின் உள்ளம் கவர் மாணவர்தானே!

என்னங்க கோவி.கண்ணன் நான் சொல்றது சரிதானே!

Expatguru said...

//ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்//

ஏப்பம் வேறு விட்டாரா? செய்யறதையும் செய்து விட்டு கண்ணன் மேல் பழி போட்டுவிட்டார் என்று சொல்லுங்கள்!

கண்ணன் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் இன்பமே!

hotcat said...

It is good story...why Kannan special today?

-shankar

கோவி.கண்ணன் said...

உபவாசத்தில் சாப்பிட இப்படியும் வழி இருக்கா ? ஆனால் சாப்பிட்டுவிட்டு ஆற்றைப் பிரியச் சொன்னால் பிரியாது, நன்றாக தண்ணீர் குடித்திருந்தால் என்ன பிரியுமோ அது தான் பிரியும்.

:))))

நாமக்கல் சிபி said...

//செய்யறதையும் செய்து விட்டு கண்ணன் மேல் பழி போட்டுவிட்டார் என்று சொல்லுங்கள்!
//

ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுதல் என்பது இதுதான் போல!

ஸ்வாமி ஓம்கார் said...
This comment has been removed by the author.
ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா அவர்களுக்கு,

சிறப்பன ஒரு பாகவத கதை.
க்ருஷ்ணனை பற்றி கேட்க கேட்க மனதை பக்தியால் கரைக்கும் தன்மை இக்கதைகளுக்கு உண்டு.
படித்ததும் எனது நிலையும் அதுவே.
என்னை க்ருஷ்ணாமிர்தத்தில் அமிழ்த்தியதற்கு நன்றி.

அனைத்தும் இறை செயல் என செய்வதால் நம்மீது சமஸ்கார பதிவு ஏற்படாது என சொல்ல பயன்படும் பாகவத குறுங்கதை இது.( அந்த முனிவர் - துர்வாசர், வசிஷ்டர் ராமாயண காலத்தை சேர்ந்தவர்)

ஆனால் கதையின் ஒரு பகுதியை மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள். மறு பகுதியை சுருக்கமாக இதோ..

அனைத்தையும் க்ருஷ்ணன் பார்த்துகொண்டிருக்கிறான். அவனை கண்ட கோபிகள் சந்தோஷத்தில் மகிழ்ந்து குலாவிய பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் மறுகரையை அடைய க்ருஷ்ணனை உதவ சொல்லுகிறார்கள்.

யமுனையை பார்த்து க்ருஷ்ணன் உறக்க கூறினார்...

“க்ருஷ்ணன் நித்திய பிரம்மச்சாரி என்பது உண்மையானால் , யமுனையே வழிவிடு”

யமுனை வழிவிட்டது.

SP.VR. SUBBIAH said...

/////கூடுதுறை said...
//அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின்
நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!//
கண்ணனின் பெருமை கேட்க கேட்க தெவிட்டாதது...
புரட்டாசி மாத ஸ்பெசல் ஆ?//

"கண்ணனை நினைக்காத நாளில்லையே" என்று எழுதிய
எனது ஆசானின் (கவியரசரின்) உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்.
ஆகவே கண்ணனை நினைக்கும் நேரம் எல்லாம் விசேஷமான நேரம்தான் கூடுதுறையாரே!

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை//
ஹிஹி! அவருதான் பிளாக் எழுத வந்துட்டாரே!/////

நம்மைப் பிறவிக்கடலில் இருந்து கரை சேர்க்கும் பரிசல்காரன் ஒருவன் இருக்கிறான்.
அவன் யாரென்று தெரியுமா சிபியாரே?

SP.VR. SUBBIAH said...

/////அட்சயா said...
Present Sir///

படித்துவிட்டு வாருங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Sumathi. said...
ஹலோ சார்,
அது சரி என்ன இன்று கண்ணனைப் பற்றி? வேலவனிடமிருந்து தப்பித்து வந்துவிட்டீர்களா? அல்லஹு கண்ணன்
உங்களை உள்ளம் கவர்ந்து விட்டானா?
எதுவா இருந்தாலும் நல்லாயிருக்கு./////

வேலன் எனக்கு உற்ற நண்பன் அல்லவா? அவன் எப்போதும் என்னுடன் இருப்பவன் சகோதரி!
இன்று அவனுடைய தாய் மாமனின் நினைவு வந்து ஒரு பதிவு எழுதினேன்.

SP.VR. SUBBIAH said...

//////கோவி.கண்ணன் said...
//உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.//
அவன் பேரும் கிருஷ்ண குமார் தான் !
திருப்பூரில் இருக்கிறான்
:)/////

நாட்டில் எத்தனை கண்ணன்கள், கிருஷ்ணன்கள் பார்த்தீர்களா கோவியாரே?

SP.VR. SUBBIAH said...

///////நாமக்கல் சிபி said...
//அல்லது கண்ணன்
உங்களை உள்ளம் கவர்ந்து விட்டானா?
// அவர் எப்போதுமே வாத்தியாரின் உள்ளம் கவர் மாணவர்தானே!
என்னங்க கோவி.கண்ணன் நான் சொல்றது சரிதானே!/////

இதுதான் கொக்கிப் பின்னூட்டம் என்பதா?

SP.VR. SUBBIAH said...

/////Expatguru said...
//ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்//
ஏப்பம் வேறு விட்டாரா? செய்யறதையும் செய்து விட்டு கண்ணன் மேல் பழி போட்டுவிட்டார் என்று சொல்லுங்கள்!
கண்ணன் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் இன்பமே!/////

தன் பக்தர்கள் சொல்வதைப் பழியாக அவன் எடுத்துக் கொள்ள மாட்டான் நண்பரே!
கண்ணன் கருனை மிக்கவன் அல்லவா?

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
It is good story...why Kannan special today?
-shankar////

அடுத்து சங்கரன் ஸ்பெசல் (உங்களுக்காக) போட்டுவிடுகிறேன் சங்கர்!

SP.VR. SUBBIAH said...

//////கோவி.கண்ணன் said...
உபவாசத்தில் சாப்பிட இப்படியும் வழி இருக்கா ? ஆனால் சாப்பிட்டுவிட்டு ஆற்றைப் பிரியச் சொன்னால் பிரியாது, நன்றாக தண்ணீர் குடித்திருந்தால் என்ன பிரியுமோ அது தான் பிரியும். :))))//////

நாற்பது வயது வரை அவர்கள் சாப்பிட உணவு;
நாற்பதற்குமேல் அவர்களையே சாப்பிடும் அந்த உணவு
-வைரமுத்து (இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கங்களைப் பற்றியது)

நீங்கள் சொல்லும் பிரிவைப் பற்றியும் வைரமுத்து எழுதியுள்ளார். அதை நான் பதிவில் எழுத முடியாது!

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//செய்யறதையும் செய்து விட்டு கண்ணன் மேல் பழி போட்டுவிட்டார் என்று சொல்லுங்கள்!
// ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுதல் என்பது இதுதான் போல!/////

அப்படியாவது ஆண்டவனை நினையுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////ஸ்வாமி ஓம்கார் said...
திரு சுப்பையா அவர்களுக்கு,
சிறப்பான ஒரு பாகவதக் கதை.
கிருஷ்ணனைப் பற்றி கேட்க கேட்க, மனதை பக்தியால் கரைக்கும் தன்மை இக்கதைகளுக்கு உண்டு.
படித்ததும் எனது நிலையும் அதுவே.
என்னை கிருஷ்ணாமிர்தத்தில் அமிழ்த்தியதற்கு நன்றி.////

எனது பதிவு உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சி சுவாமிஜி!
++++++++++++++++++++++++++++++++++++

அனைத்தும் இறை செயல் என செய்வதால் நம்மீது சமஸ்கார பதிவு ஏற்படாது என சொல்ல பயன்படும் பாகவத குறுங்கதை இது.( அந்த முனிவர் - துர்வாசர், வசிஷ்டர் ராமாயண காலத்தை சேர்ந்தவர்)
ஆனால் கதையின் ஒரு பகுதியை மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள். மறு பகுதியை சுருக்கமாக இதோ..
அனைத்தையும் க்ருஷ்ணன் பார்த்துகொண்டிருக்கிறான். அவனை கண்ட கோபிகள் சந்தோஷத்தில் மகிழ்ந்து குலாவிய பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் மறுகரையை அடைய க்ருஷ்ணனை உதவ சொல்லுகிறார்கள்.
யமுனையை பார்த்து க்ருஷ்ணன் உறக்க கூறினார்...
“க்ருஷ்ணன் நித்திய பிரம்மச்சாரி என்பது உண்மையானால் , யமுனையே வழிவிடு”
யமுனை வழிவிட்டது./////

உண்மையைச் சொன்னால், எனக்கு நான் எழுதியவரை உள்ள கதை மட்டுமே தெரியும். மீதியையும் சொல்லிப் பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி சுவாமிஜி! உங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்!

தியாகராஜன் said...

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
என்பதற்கேற்ப நிகழ்வுகள் நடந்துள்ளன ஐயா.
ஆண்டவனே ஆட்டுவிப்பவன்.
ஐயா கிருஷ்ணாவதாரத்தில் வசிஷ்டரை காண்கிலேன்.

நாமக்கல் சிபி said...

//அப்படியாவது ஆண்டவனை நினையுங்கள்!//

ஹிஹி! உங்களை நினைக்கும்போதெல்லாம் அவனையும்தானே நினைக்கிறோம்! இயற்கையாகவே!

குருப்ரம்மா குருவிஷ்ணு குருதேவோ மஹேஸ்வரஹ!
குரு சாட்ஷாத் பரப்ரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!

என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறதே!

நாமக்கல் சிபி said...

//இதுதான் கொக்கிப் பின்னூட்டம் என்பதா?//

ஆம்!

நாமக்கல் சிபி said...

//இதுதான் கொக்கிப் பின்னூட்டம் என்பதா?//

ஆம்! இதுவும் கொக்கிப் பின்னுட்டமே என்பதில் தங்களுக்கு ஏதும் ஐயம் இருக்காது என்பதில் ஐயம் எனக்கேதுமில்லை!

நாமக்கல் சிபி said...

//நம்மைப் பிறவிக்கடலில் இருந்து கரை சேர்க்கும் பரிசல்காரன் ஒருவன் இருக்கிறான்.
அவன் யாரென்று தெரியுமா சிபியாரே//

திருப்பூரில் இருக்கும் கிருஷ்ணகுமார் அல்ல என்பது வரை தெரியும்!

நாமக்கல் சிபி said...

//நம்மைப் பிறவிக்கடலில் இருந்து கரை சேர்க்கும் பரிசல்காரன் ஒருவன் இருக்கிறான்.
அவன் யாரென்று தெரியுமா சிபியாரே//


ஆயுள் காரகன் சனி !?

நாமக்கல் சிபி said...

//வேலன் எனக்கு உற்ற நண்பன் அல்லவா? //

வடகரை வேலனா? அவரும் கோவைதான்! அருகருகில் வசிப்பவர்கள் போலும்!

hotcat said...

/////திரு சுப்பையா அவர்களுக்கு,

சிறப்பன ஒரு பாகவத கதை.
க்ருஷ்ணனை பற்றி கேட்க கேட்க மனதை பக்தியால் கரைக்கும் தன்மை இக்கதைகளுக்கு உண்டு.
படித்ததும் எனது நிலையும் அதுவே.
என்னை க்ருஷ்ணாமிர்தத்தில் அமிழ்த்தியதற்கு நன்றி.

அனைத்தும் இறை செயல் என செய்வதால் நம்மீது சமஸ்கார பதிவு ஏற்படாது என சொல்ல பயன்படும் பாகவத குறுங்கதை இது.( அந்த முனிவர் - துர்வாசர், வசிஷ்டர் ராமாயண காலத்தை சேர்ந்தவர்)

ஆனால் கதையின் ஒரு பகுதியை மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள். மறு பகுதியை சுருக்கமாக இதோ..

அனைத்தையும் க்ருஷ்ணன் பார்த்துகொண்டிருக்கிறான். அவனை கண்ட கோபிகள் சந்தோஷத்தில் மகிழ்ந்து குலாவிய பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் மறுகரையை அடைய க்ருஷ்ணனை உதவ சொல்லுகிறார்கள்.

யமுனையை பார்த்து க்ருஷ்ணன் உறக்க கூறினார்...

“க்ருஷ்ணன் நித்திய பிரம்மச்சாரி என்பது உண்மையானால் , யமுனையே வழிவிடு”

யமுனை வழிவிட்டது.
/////


Yes, I also read the way you presented Mr. Omkar...

-Shankar

அணுயோகி said...

ஆசானே! இனிய சரசுவதி பூசை நல் வாழ்த்துக்கள்.....

thenkasi said...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா

SP.VR. SUBBIAH said...

//////தியாகராஜன் said...
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
என்பதற்கேற்ப நிகழ்வுகள் நடந்துள்ளன ஐயா.
ஆண்டவனே ஆட்டுவிப்பவன்.
ஐயா கிருஷ்ணாவதாரத்தில் வசிஷ்டரை காண்கிலேன்.//////

அப்போது வராவிட்டால் என்ன? இப்போது வந்துவிட்டாரே!:-))))
நான் முன்பு ஒருமுறை படித்ததில் அவர் இருந்தார். அதனால் அப்படியே நினைவைப் பதிவாக்கினேன்.

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//அப்படியாவது ஆண்டவனை நினையுங்கள்!//
ஹிஹி! உங்களை நினைக்கும்போதெல்லாம் அவனையும்தானே நினைக்கிறோம்! இயற்கையாகவே!
குருப்ரம்மா குருவிஷ்ணு குருதேவோ மஹேஸ்வரஹ!
குரு சாட்ஷாத் பரப்ரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!
என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறதே!//////

ஸ்லோகம் எல்லாம் சொல்லும் அளவிற்கு என்னுடைய வகுப்பறைக் கண்மணிகள் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!

SP.VR. SUBBIAH said...

////////நாமக்கல் சிபி said...
//இதுதான் கொக்கிப் பின்னூட்டம் என்பதா?//
ஆம்!//////

கொக்கிப் பின்னூட்டங்கள் எல்லாம் கும்மிப் பதிவுகளுக்கு மட்டுமதானே? வகுப்பறைக்கு எதற்கு?

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//இதுதான் கொக்கிப் பின்னூட்டம் என்பதா?//
ஆம்! இதுவும் கொக்கிப் பின்னுட்டமே என்பதில் தங்களுக்கு ஏதும் ஐயம் இருக்காது என்பதில் ஐயம் எனக்கேதுமில்லை!/////

வ.வா.ச விற்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது ஐயம் தீர்ந்துவிட்டது!

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//நம்மைப் பிறவிக்கடலில் இருந்து கரை சேர்க்கும் பரிசல்காரன் ஒருவன் இருக்கிறான்.
அவன் யாரென்று தெரியுமா சிபியாரே//
திருப்பூரில் இருக்கும் கிருஷ்ணகுமார் அல்ல என்பது வரை தெரியும்!

ஐயன் வள்ளுவரின் குறட்பாவில் முதல் அத்தியாயத்தில் உள்ள
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்"
என்ற குறளைப் படிக்கவும். யாரெனத் தெரியும்!

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//நம்மைப் பிறவிக்கடலில் இருந்து கரை சேர்க்கும் பரிசல்காரன் ஒருவன் இருக்கிறான்.
அவன் யாரென்று தெரியுமா சிபியாரே//
ஆயுள் காரகன் சனி !?////

மேலே உள்ள பின்னூட்டப் பதிலைப் படிக்கவும்!

Rajagopal said...

அருமையான கதை குருவே. கதையின் முழுப் பகுதியையும் கொடுத்த ஓம்காருக்கு நன்றி.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//வேலன் எனக்கு உற்ற நண்பன் அல்லவா? //
வடகரை வேலனா? அவரும் கோவைதான்! அருகருகில் வசிப்பவர்கள் போலும்!////

வடவள்ளியில் வசிப்பவர் அவர்!
நான் சொல்லும் வேலன் மலைமேல் இருப்பவன்; மயில்மேல் வருபவன்!

SP.VR. SUBBIAH said...

//////அணுயோகி said...
ஆசானே! இனிய சரசுவதி பூசை நல் வாழ்த்துக்கள்.....////

நன்றி யோகியாரே!

SP.VR. SUBBIAH said...

/////thenkasi said...
எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா//////

என்ன வரிகளய்யா சாமி!
கவியரசர், கவியரசர் தான்!
பாடலைக் கொடுத்து மனதை மயக்கியதற்கு நன்றி நண்பரே!

நாமக்கல் சிபி said...

//பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்"
//

இறைவனடி சேருவோரே பிறவடிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும் என்று சொல்கிறீர்! நானும் அதைத்தானே சொல்கிறேன் சுவாமி!

இறைவனடியை எப்போது அடைவோம் என்பதைத் தீர்மானிப்பது ஆயுள் காரகனான சனி பகவான்தானே!

நாமக்கல் சிபி said...

//வ.வா.ச விற்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது ஐயம் தீர்ந்துவிட்டது!//

புரியவில்லையே!

நாமக்கல் சிபி said...

//கொக்கிப் பின்னூட்டங்கள் எல்லாம் கும்மிப் பதிவுகளுக்கு மட்டுமதானே? வகுப்பறைக்கு எதற்கு?
//

:))
நமக்கு எல்லா இடமும் ஒரே இடம்தான்!

வீரன்(Veeran) said...

நல்ல பதிவு நன்றி!!!

வாழ்த்துக்கள்!!

மணிகண்டன் said...

நான் கேட்ட கதை இதே மாதிரி தான் :- ராதையும் அவளது நண்பிகளும் கண்ணனை பார்ப்பதற்காக யமுனையை கடக்க முயலுவார்கள். அப்ப வந்த துர்வாச முனிவர் ராதை கிட்ட இருந்த அனைத்து உணவையும் உண்டுவிட்டு " பசியோடு உள்ள முனிவர் சொல்கிறேன். யமுனையே வழிவிடுன்னு சொல்லுவார் " உடனே யமுனை வழிவிடும். அதே போல், கிருஷ்ணரை பார்த்து திரும்பி வரும் பொழுது, யமுனையை கடப்பது எப்படி என்று தெரியாமல் மறுபடியும் தவிப்பார்கள். அப்பொழுது கிருஷ்ணர் "நித்ய பிரமச்சாரி சொல்கிறேன் : யமுனையே வழிவிடு " என்பார். யமுனை வழிவிடும். இந்த கதையை பகவத் கீதையின் சாராம்சமாக கூற கேட்டு இருக்கிறேன். இதற்கான விளக்கம் உங்களுக்கு புரியாதது அல்ல.

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்" //
இறைவனடி சேருவோரே பிறவடிப் பெருங்கடலை நீந்திக் கடக்க
முடியும் என்று சொல்கிறீர்! நானும் அதைத்தானே சொல்கிறேன் சுவாமி!
இறைவனடியை எப்போது அடைவோம் என்பதைத் தீர்மானிப்பது
ஆயுள் காரகனான சனி பகவான்தானே!///

சரிதான் சிபியாரே!

SP.VR. SUBBIAH said...

////நாமக்கல் சிபி said...
//வ.வா.ச விற்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது ஐயம் தீர்ந்துவிட்டது!//
புரியவில்லையே!/////

வ.வா. சங்கத்திற்கு நீங்கள்தானே 'தளை'(லை) ?

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//கொக்கிப் பின்னூட்டங்கள் எல்லாம் கும்மிப் பதிவுகளுக்கு மட்டுமதானே? வகுப்பறைக்கு எதற்கு?
// :))
நமக்கு எல்லா இடமும் ஒரே இடம்தான்!/////

எல்லா இடமும் ஒன்று என்றால் சரிதான்!

SP.VR. SUBBIAH said...

////வீரன்(Veeran) said...
நல்ல பதிவு நன்றி!!!
வாழ்த்துக்கள்!!////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////மணிகண்டன் said...
நான் கேட்ட கதை இதே மாதிரி தான் :- ராதையும் அவளது
நண்பிகளும் கண்ணனை பார்ப்பதற்காக யமுனையை கடக்க முயலுவார்கள்.
அப்ப வந்த துர்வாச முனிவர் ராதை கிட்ட இருந்த அனைத்து உணவையும்
உண்டுவிட்டு " பசியோடு உள்ள முனிவர் சொல்கிறேன். யமுனையே
வழிவிடுன்னு சொல்லுவார் " உடனே யமுனை வழிவிடும்.
அதே போல், கிருஷ்ணரை பார்த்து திரும்பி வரும் பொழுது,
யமுனையை கடப்பது எப்படி என்று தெரியாமல் மறுபடியும் தவிப்பார்கள்.
அப்பொழுது கிருஷ்ணர் "நித்ய பிரமச்சாரி சொல்கிறேன் : யமுனையே வழிவிடு "
என்பார். யமுனை வழிவிடும். இந்த கதையை பகவத் கீதையின் சாராம்சமாக
கூற கேட்டு இருக்கிறேன். இதற்கான விளக்கம் உங்களுக்கு புரியாதது அல்ல.////

ஆமாம் அது துர்வாச முனிவர்தான். ஓம்கார் சுவாமிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார் பாருங்கள்!