மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.10.08

ஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2

இதன் முன் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
பதினொன்றாம் அதிபதி உச்சமாகவும், லக்கினத்திற்குத் திரிகோணத்திலும்
இருந்து, புதன் இரண்டாம் இடத்து அதிபதி என்றால், ஜாதகன் வணிகம்
செய்து பெரும் பொருள் ஈட்டுவான்.

2
குரு 11ல் இருந்து புதனின் பார்வை பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளன்.
பிறரால் போற்றப்படுவான்.

3.
11ஆம் அதிபதியும், அதில் அமரும் கிரகமும் வலுவாக இருந்தால்,
ஜாதகன் சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உள்ளவனாகத் திகழ்வான்.

4.
பதினொன்றாம் வீட்டில் ராகு, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய நான்கு
கிரகங்களும் அமர்ந்திருந்தால், வேறு நல்ல பார்வை இல்லாமல் இருந்தால்
ஜாதகன் மன நோயாளியாகிவிடுவான்.

5.
சுபக் கிரகங்கள் பதினொன்றில் வந்து அமர்ந்தால், ஜாதகன் நல்ல
வழியில் பெரும் பொருள் ஈட்டுவான்.

6
தீய கிரகம் பதினொன்றில் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் தவறான
வழிகளில் பொருள் ஈட்டுவான்.

7.
பதினொன்றாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன்
வீடு, வாகனம், என்று செளகரியமாக வாழ்வான்.

8.
பதினொன்றாம் வீட்டில் உள்ள கிரகங்கள் அஸ்தமனம் பெற்று இருந்தாலும்
அல்லது நீசமாகிப் பலமின்றி இருந்தாலும், ஜாதகன் குடும்பச் சொத்துக்களை
ஒவ்வொன்றாக இழப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதினொன்றில் வந்து அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:
(எல்லாம் பொதுப்பலன்களே!)

11ல் சூரியன் இருந்தால்
ஜாதகனுக்கு அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.
நீண்டு நாட்கள் வாழ்வான்
செல்வந்தனாக மாறுவான்.
மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்
கொள்கைக் குன்றாக இருப்பான்.
அரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்
================================
11ல் சந்திரன்.
புனிதனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
மனைவி மக்கள் என்று குடும்பக் குறைபாடுகள் இல்லாதவனாக இருப்பான்.
அமைதியைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்.
செய்யும் வேலையில் மேன்மை அடைவான்.
வணிகனாக இருந்தால் பெரும்பொருள் ஈட்டுவான்
இடங்கள், சொத்துக்கள் என்று அதீத செல்வம் சேரும்
=================================
11ல் செவ்வாய்
ஜாதகன் அதிரடியாகப் பேசக்கூடியவன்
புத்திசாலியாக இருப்பான்.
சபலமுடையவன்
எராளமான இடங்கள் சேரும்
அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்புடையவனாக இருப்பான்.
==================================
11ல் புதன்
அதிகம் படித்தவன்
கூர்மையான புத்தி உள்ளவன்
செல்வந்தனாகவும், மகிழ்ச்சி உள்ளவனாகவும் இருப்பான்.
விசுவாசமான வேலைக்கரர்கள் கிடைப்பார்கள்
பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் போனால் சாதனை படைப்பார்கள்
========================================
11ல் குரு
ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்
துணிச்சலானவன்.செல்வந்தன்
புத்திசாலி. பலராலும் அறியப்பட்டவன்
இசையில் ஆர்வமுள்ளவன்
ஏராளமான நண்பர்களை உடையவன்
=========================================
11ல் சுக்கிரன்
ஊர் சுற்றி.
காசில், லாபத்தில் குறியாக இருப்பான்.
ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும்
சபலமுள்ளவன். பெண்களின் மேல் மிகுந்த ஏக்கமுடையவன்
நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமானவன்
==========================================
11ல் சனி
ஜாதகன் பலரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பொருள் ஈட்டுவான்.
குறைந்த எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள்
வாழ்க்கையை அனுபவிக்கும் முனைப்பில் இருப்பான்
சிலர் அரசாங்க கான்ட்ராக்டுகள் அல்ல்து பணிகள் மூலம் பொருள்
ஈட்டுவார்கள்
நீண்ட நாள் வாழ்வான். ஆரோக்கியத்துடன் வாழ்வான்
சிலர் அரசியலில் நுழைந்து பிரபலம் அடைவார்கள்
==========================================
11ல் ராகு
ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவான். அதில் புகழ் பெறுவான்
சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும்
பொருள் ஈட்டுவார்கள்
ஜாதகன் கற்றவனாகவும், செல்வந்தனாகவும், புகழுடையவனகவும்
இருப்பான்.
=========================================
12ல் கேது
ஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு
அல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.
அதில் நாட்டமுடையவனாக இருப்பான்,
நல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
தர்மங்கள் செய்வான்.
=========================================
இந்த விதிகளை எல்லாம் ஒத்துப் பார்த்துப் பலன்களை அறிவதைவிட
சுலபமான முறை உள்ளது. அதுதான் அஷ்டகவர்க்கம் & சர்வாஷ்டகவர்க்கம்

11ஆம் வீட்டில் 30ம் அதற்கு மேலும் பரல்கள் இருப்பது நல்லது
28 பரல்கள் இருந்தால் சராசரி.
25ற்குக்கீழே இருந்தால் சுமார்.
20ம் 20ற்குக் கீழே யும் இருந்தால் பலனில்லை!

பதினொன்றாம் அதிபதி, அதில் அமர்ந்திருக்கும் கிரகம், அதைப் பார்க்கும்
கிரகம், மேலும் லக்கினாதிபதி ஆகியோர் தங்களது சுயவர்க்கத்தில் 5 அல்லது
அதற்கு மேல் பெற்றிருத்தல் நல்லது. நல்ல பலன்கள் அவர்களது தசா புத்தியில்
கிடைக்கும்

4 என்பது சராசரி
3 என்பது சுமார்
2ம் 2ற்குக் கீழேயுமான பரல்கள் என்றால் பலனில்லை!
அவற்றிற்கான தசாபுத்திகள் பலனைத் தராது.
=======================================================
(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவு பெறுகிறது

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

72 comments:

Ragu Sivanmalai said...

Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good?

Prabhu said...

// Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good?

//

Then mixed results for you...

Am I correct ayya ?

Geekay said...

11ஆம் வீடு ஜோதிட பாடம் அருமை.
நன்றி அய்யா .

GK, BLR

hotcat said...

////// Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good?

//

Then mixed results for you...

Am I correct ayya ?
/////

This is hilarious! funny....

hotcat said...

If Guru with mars in 11th house (guru mangala yoga) in Gemini (because mars and jupiter is not friendly in gemini)...will this guru mangal yog works.

-Shankar

தங்ஸ் said...

உள்ளேன் ஐயா..வளர்பிறை சந்திரன்,தேய்பிறை சந்திரன் - பலன்கள் மாறுபடுமா?

hotcat said...

How come all the planets do most of good things in 11th house even ragu and ketu....

-Shankar

SP.VR. SUBBIAH said...

//////Ragu Sivanmalai said...
Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good?////

பலன்கள் முழுமையாகப் பறிபோகாது. குறையும். அவ்வளவுதான்.
இந்திரா காந்தி அம்மையாருக்கு கடக லக்கினம். சனி பாதகன். ஆனாலும் தனக்கு உரிய ஏழாம் வீட்டின் பலனைக் கொடுத்தான். அம்மையாருக்கு உரிய காலத்தில் திருமணமாகியது. ஆனாலும் பாதகன் என்பதால்
அவருடைய (காதல்) மணம் சிறக்கவில்லை. அதோடு அவர் இளம் வயதிலேயே விதவையானார்.

SP.VR. SUBBIAH said...

/////Prabhu said...
// Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good? //
Then mixed results for you...
Am I correct ayya ?//////

சரிதான். 11ஆம் வீட்டிற்கு உரிய பலனையும் கொடுப்பான். பாதகன் என்பதால் கிடைத்த பலனை முழுமையாக அனுபவிக்கவும் விட மாட்டான்.

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
11ஆம் வீடு ஜோதிட பாடம் அருமை.
நன்றி அய்யா .
GK, BLR////

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
////// Thanks for the detailed post. if the 11 th lord is a padakathipathi to the lagna, what will happen? All the gains will be lost? or will it do good? //
Then mixed results for you...
Am I correct ayya ?
///// This is hilarious! funny./////

11ஆம் வீட்டிற்கு உரிய பலனையும் கொடுப்பான். பாதகன் என்பதால் கிடைத்த பலனை முழுமையாக அனுபவிக்கவும் விட மாட்டான்.

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
If Guru with mars in 11th house (guru mangala yoga) in Gemini (because mars and jupiter is not friendly in gemini)...will this guru mangal yoga works.
-Shankar/////

குரு மங்கள யோகம் உண்டு. வேலை செய்யும். ஜாதகனுக்குப் பலன் குறைந்த அளவே கிடைக்கும்
பகை வீட்டில் இருக்கும் கிரகங்களின் பலன்கள் பாதியாகக் குறைந்து விடும்!

SP.VR. SUBBIAH said...

//////தங்ஸ் said...
உள்ளேன் ஐயா..வளர்பிறை சந்திரன்,தேய்பிறை சந்திரன் - பலன்கள் மாறுபடுமா?/////

அமாவாசைச் சந்திரன் என்றால் மட்டும் மாறுபடும்!

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
How come all the planets do most of good things in 11th house even ragu and ketu....
-Shankar//////

11ஆம் வீடு லாப ஸ்தானம். அதுதான் காரணம்! Naturally it is a good & benefic house!

நவநீத்(அ)கிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
திருநெல்வேலி கார்த்திக் said...

//12ல் கேது
ஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு
அல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.
அதில் நாட்டமுடையவனாக இருப்பான்,
நல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
தர்மங்கள் செய்வான்//

11ல் கேது தானே சரி.

hotcat said...

////குரு மங்கள யோகம் உண்டு. வேலை செய்யும். ஜாதகனுக்குப் பலன் குறைந்த அளவே கிடைக்கும்
பகை வீட்டில் இருக்கும் கிரகங்களின் பலன்கள் பாதியாகக் குறைந்து விடும்////

Ayya,

If mars happens to be yogakaraka(for simha lagna - rasi chart). And if mars is exalted in navamsa conjuction with venus and ketu. Jupiter is own house dhanus in navamasa...will it considered raja yoga?

Jupiter is in 3rd house navamasa, mars is in 5th house navamsa.

Anbudan
Shankar

கூடுதுறை said...

உள்ளேன் ஐயா...

SP.VR. SUBBIAH said...

//////திருநெல்வேலி கார்த்திக் said...
//12ல் கேது
ஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு
அல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.
அதில் நாட்டமுடையவனாக இருப்பான்,
நல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
தர்மங்கள் செய்வான்//
11ல் கேது தானே சரி.////

பதினொன்றாம் இடத்திற்கு 12ஆம் இடம் என்பது (அதற்கு) இரண்டாம் வீடு
ஆகவே குறிப்பிட்டுள்ள செய்திகள் சரியானதுதான்!
குழம்பி விடாதீர்கள். சில இடங்களை அந்த வீடுகளில் இருந்தும் பார்க்க வேண்டும்!

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
////குரு மங்கள யோகம் உண்டு. வேலை செய்யும். ஜாதகனுக்குப் பலன் குறைந்த அளவே கிடைக்கும்
பகை வீட்டில் இருக்கும் கிரகங்களின் பலன்கள் பாதியாகக் குறைந்து விடும்////
Ayya,
If mars happens to be yogakaraka(for simha lagna - rasi chart). And if mars is exalted in navamsa conjuction with venus and ketu. Jupiter is own house dhanus in navamasa...will it considered raja yoga?
Jupiter is in 3rd house navamasa, mars is in 5th house navamsa.
Anbudan
Shankar////

யோககாரகன் உச்சமானதே ராஜ யோகம்தான். ஆனாலும் உச்சமான இடம் சிம்ம லக்கினத்திற்கு ஆறாம் இடம் அதையும் கவனியுங்கள். கவனித்துவிட்டு நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!:-)))

SP.VR. SUBBIAH said...

/////கூடுதுறை said...
உள்ளேன் ஐயா...////

நன்றி கூடுதுறையாரே!

அணுயோகி said...

நானும் வந்துட்டேன்.....

cooljosh said...

dear sir,

what will be the prediction? if the astavarga of the 10th house is greater than 11th house for example if 10th house has 35 parals whereas in 11th house has 32

SP.VR. SUBBIAH said...

/////அணுயோகி said...
நானும் வந்துட்டேன்...../////

சட்டாம்பிள்ளை வரும் முன்பாக உட்கார்ந்து பாடத்தைப் படியுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////cooljosh said...
dear sir,
what will be the prediction? if the astavarga of the 10th house is greater than 11th house for example if 10th house has 35 parals whereas in 11th house has 32////

35 > 32 என்றால் செய்யும் வேலைக்கு சற்றுக் குறைவான பலன் கிடைக்கும்!

cooljosh said...

Dear sir,

for every thithi, there is two or more thithi sooniya rasi,(except for amavasai & powrnami). In our birth chart, if the planet standing on the thithi sooniya rasi will have no power, did you agree with this comment?

cooljosh said...

Thanks for your reply sir...

SP.VR. SUBBIAH said...

//////cooljosh said...
Dear sir,
for every thithi, there is two or more thithi sooniya rasi,(except for amavasai & powrnami). In our birth chart, if the planet standing on the thithi sooniya rasi will have no power, did you agree with this comment?////

திதிக்கு ஜாதகத்தில் வேலை இல்லை!
திதியை இறப்பிற்கு மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒருவர் ஐப்பசி மாதம் பெளர்ணமிக்கு அடுத்து வரும் சஷ்டி திதியில் இறந்து போனால் அதைக் குறித்து வைத்திருந்து, ஒவ்வொரு ஆண்டும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் சஷ்டி திதியில் அவருக்கு நினைவு அஞ்சலியையும், வருஷ திதியையும் செய்வது வழக்கம். திதியின் பயன்பாடு அவ்வளவுதான்!

cooljosh said...

now it clear sir...:-)

ஜே கே | J K said...

உள்ளேன் ஐயா.

ஜே கே | J K said...

ஒரு சந்தேகம்.

11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?

Ragu Sivanmalai said...

Blogger ஜே கே | J K said...

//ஒரு சந்தேகம்.

11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?

////////

என்ன குருவுடன் கேது சேர்ந்து உள்ளதா. பிறகென்ன உங்களுக்கு கோடீஸ்வர யோகம் அமைந்து உள்ளது ..சரியா அய்யா ?

Dhamodharan said...

Present Sir !!!

hotcat said...

////யோககாரகன் உச்சமானதே ராஜ யோகம்தான். ஆனாலும் உச்சமான இடம் சிம்ம லக்கினத்திற்கு ஆறாம் இடம் அதையும் கவனியுங்கள். கவனித்துவிட்டு நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!:-)))/////

In rasi chart simha lagna with moon and mars in gemini (11th house)

In navamsa, mars is exalted and virgo is ascendent.

-Shankar

SP.VR. SUBBIAH said...

/////ஜே கே | J K said...
ஒரு சந்தேகம்.
11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?/////

உங்களுக்கு ரிஷப லக்கினம். குரு 8 & 11ற்கு உரியவன்.
குருவுடன் கேது இருந்தால் என்ன? உச்சமான கேதுதான்.
குரு 7ல் இருந்து லக்கினத்தைப் பார்ப்பது நல்லதுதான்!

SP.VR. SUBBIAH said...

/////Ragu Sivanmalai said...
Blogger ஜே கே | J K said...
//ஒரு சந்தேகம்.
11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?
////////
என்ன குருவுடன் கேது சேர்ந்து உள்ளதா. பிறகென்ன உங்களுக்கு கோடீஸ்வர யோகம் அமைந்து உள்ளது ..சரியா அய்யா ?/////

சேர்க்கை ஒன்றை மட்டும் வைத்து எப்படி முடிவு செய்ய முடியும்?
லக்கினாதிபதி சுக்கிரன், 2ஆம் அதிபதி புதன், சூரியன், சந்திரன் ஆகியோரைப்பற்றி நினைத்துப் பார்த்தீர்களா?

SP.VR. SUBBIAH said...

/////Dhamodharan said...
Present Sir !!!/////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

hotcat said...
////யோககாரகன் உச்சமானதே ராஜ யோகம்தான். ஆனாலும் உச்சமான இடம் சிம்ம லக்கினத்திற்கு ஆறாம் இடம் அதையும் கவனியுங்கள். கவனித்துவிட்டு நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!:-)))/////
In rasi chart simha lagna with moon and mars in gemini (11th house)
In navamsa, mars is exalted and virgo is ascendent.
-Shankar/////

சிம்ம லக்கினத்திற்குச் சந்திரன் விரைய அதிபதி (Lord of the 12th) அவர் வந்து லக்கினத்தில் அமர்ந்து
வரும் பலன்களை அனுபவிக்க விடாமல் செய்வாரே! செய்கிறாரா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அய்யா ,
பதிநோராம் வீடு காலியாக இருந்தால் என்ன பலன் ?

hotcat said...

Dear Sir

I think I confused you. Sorry about that.

Rasi Chart: simha lagna, 11th has guru and mars.

Navamsa: virgo lagna, jupiter in dhanus. Mars in makara with venus and ketu.

How to conclude about this? Since mars is a yogakaraka and exalted in navamsa, and jupiter also in its own house at navamsa...how the guru mangal yoga in rasi chart works?

-Shankar

senthil said...

வணக்கம் ஆசிரிய‌ரே,

11ஆம் வீடு ஜோதிட பாடம் அருமை. மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ உள்ளது.

மிதுன‌ ல‌க்க‌ன‌ம். 11‍இல் குரு,செவ்வாய், புத‌ன். ஆனால், எந்த‌ வித‌மான‌ ப‌ய‌னும் இல்லை. புத‌ன் திசையும் ப்ய‌னும் கொடுக்க‌வில்லை.
விள‌க்க‌ம‌ளிக்க‌ வேண்டுகிறேன்.

அன்புட‌ன்,

செந்தில் முருக‌ன்.

sumathi said...

ஹலோ வாத்தியாரய்யா,

எனக்கு 11ம் வீடும் 12ம் வீடும் காலியாயிடுச்சு. அதிபதி (சூரியன்) 9ல்
முன்னாடி சுக்கிரனும் ராகுவும். காலியாயிருந்தா என்ன ஒன்னுமே கிடைக்காதோ? இல்ல யாரும் எதுவும் தர மாட்டாங்களோ? (அப்படித்தன் தோனுது)

SP.VR. SUBBIAH said...

/////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அய்யா ,
பதினோராம் வீடு காலியாக இருந்தால் என்ன பலன் ?/////

காலியாக இருந்தாலும் அந்த வீட்டு அதிபர் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
Dear Sir
I think I confused you. Sorry about that.
Rasi Chart: simha lagna, 11th has guru and mars.
Navamsa: virgo lagna, jupiter in dhanus. Mars in makara with venus and ketu.
How to conclude about this? Since mars is a yogakaraka and exalted in navamsa, and jupiter also in its own house at navamsa...how the guru mangal yoga in rasi chart works?
-Shankar/////

குருவும், செவ்வாயும் தங்கள் தசா புத்திகளில் உரிய பலனைத் தருவார்கள்.

SP.VR. SUBBIAH said...

/////senthil said...
வணக்கம் ஆசிரிய‌ரே,
11ஆம் வீடு ஜோதிட பாடம் அருமை. மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ உள்ளது.
மிதுன‌ ல‌க்க‌ன‌ம். 11‍இல் குரு,செவ்வாய், புத‌ன். ஆனால், எந்த‌ வித‌மான‌ ப‌ய‌னும் இல்லை. புத‌ன் திசையும் பய‌னும் கொடுக்க‌வில்லை.
விள‌க்க‌ம‌ளிக்க‌ வேண்டுகிறேன்.
அன்புட‌ன்,
செந்தில் முருக‌ன்./////

அஷ்டவர்க்கத்தில் அந்த கிரகங்கள் (சுயவர்க்கத்தில்) எத்தனை பரல்களுடன் இருக்கிறது என்று பாருங்கள்
குரு செவ்வாய், புதன் ஆகிய மூன்றும் எவ்வளவு இடைவெளியுடன் இருக்கிறார்கள் என்று பாருங்கள்

SP.VR. SUBBIAH said...

/////sumathi said... ஹலோ வாத்தியாரய்யா,
எனக்கு 11ம் வீடும் 12ம் வீடும் காலியாயிடுச்சு. அதிபதி (சூரியன்) 9ல்
முன்னாடி சுக்கிரனும் ராகுவும். காலியாயிருந்தா என்ன ஒன்னுமே கிடைக்காதோ? இல்ல யாரும் எதுவும் தர மாட்டாங்களோ? (அப்படித்தான் தோனுது)

சுக்கிரனும், ராகுவும் எப்படி இல்லாமல் இருப்பார்கள்? உங்கள் பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் ஆகிய மூன்றையும் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். பார்த்துச் சொல்கிறேன்!

cooljosh said...

Dear sir,

If the planet is exalted and retrograde then the planet will have neecha power, when it combines with owner of the house.... will the retrograde planet do the good things....else bad one

Regards
Vinodh.K,
Coimbatore

hotcat said...

Thank you very much for your patience in answering my questions.

-Shankar

ஜே கே | J K said...

//SP.VR. SUBBIAH said...
/////ஜே கே | J K said...
ஒரு சந்தேகம்.
11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?/////

உங்களுக்கு ரிஷப லக்கினம். குரு 8 & 11ற்கு உரியவன்.
குருவுடன் கேது இருந்தால் என்ன? உச்சமான கேதுதான்.
குரு 7ல் இருந்து லக்கினத்தைப் பார்ப்பது நல்லதுதான்!//

லக்கினத்தில் ராகு உள்ளதே??

தமாம் பாலா (dammam bala) said...

பதினோராம் வீட்டின் 2ம் பகுதி நல்ல விளக்கங்களுடன் சிறப்பாக இருக்கிறது ஐயா,

என் பதினோராம் சூரியன் தான் உங்களைப்போன்ற நல்லவர்கள் தொடர்பை அமைத்து கொடுத்திருக்கிறான் போலிருக்கிறது!

நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!

நிதானமாகப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

Rajagopal said...

நன்றி குருவே !

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

/////cooljosh said...
Dear sir,
If the planet is exalted and retrograde then the planet will have neecha power, when it combines with owner of the house.... will the retrograde planet do the good things....else bad one
Regards
Vinodh.K,
Coimbatore/////

வக்கிரகதியில் சுற்றுவதால் எப்படி நீசம் ஆகும்? நீசமாகாது. உச்சத்தின் பலன் குறையும் அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

////hotcat said...
Thank you very much for your patience in answering my questions.
-Shankar////

வாத்தியாருக்குரிய குணங்களில் பொறுமைதானே முக்கியமானது சங்கர்!

SP.VR. SUBBIAH said...

/////ஜே கே | J K said...
//SP.VR. SUBBIAH said...
/////ஜே கே | J K said...
ஒரு சந்தேகம்.
11-ம் வீடு மீனம். அது காலியாக உள்ளது. அதிபதி குரு. அது 7-ல்(விருச்சகம்) கேந்திரத்தில் உள்ளது. ஆனால் அதனுடன் கேதுவும் உள்ளதே?/////
உங்களுக்கு ரிஷப லக்கினம். குரு 8 & 11ற்கு உரியவன்.
குருவுடன் கேது இருந்தால் என்ன? உச்சமான கேதுதான்.
குரு 7ல் இருந்து லக்கினத்தைப் பார்ப்பது நல்லதுதான்!//
லக்கினத்தில் ராகு உள்ளதே??/////

லக்கினத்தை குரு பார்ப்பதாலும், அங்கே ராகு நீசமாகி இருப்பதாலும் பயப்பட வேண்டாம்.

SP.VR. SUBBIAH said...

//////தமாம் பாலா (dammam bala) said...
பதினோராம் வீட்டின் 2ம் பகுதி நல்ல விளக்கங்களுடன் சிறப்பாக இருக்கிறது ஐயா,
என் பதினோராம் சூரியன் தான் உங்களைப்போன்ற நல்லவர்கள் தொடர்பை அமைத்து கொடுத்திருக்கிறான் போலிருக்கிறது!////

நன்றி தமாம் பாலா! நல்லவர்களுக்குத்தான் காலமில்லையே:-)))

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
உள்ளேன் ஐயா!
நிதானமாகப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!////

ஆகா, அப்படியே செய்யுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Rajagopal said...
நன்றி குருவே !
அன்புடன்
இராசகோபால்/////

எதற்கு நன்றி? நீங்கள் படித்தால் போதும்!

Vinothavel said...

Thanks for giving us lot of useful & inspiring articles. After reading some of them, I am putting only one humble request.

Sir, will you please suggest me (& all those who are seeking) one or two reliable astrologers in Coimbatore or anywhere in Tamilnadu.

My experiences made me think that many astrologers make the people (those who are in trouble) worried, more and not less, after meeting them. I think most astrologers are not genuine.
They are not giving to-the-point predictions.

I am very upset because of my inability to meet even one expert astrologer in my life till now.

What is the use of reading and talking about astrology, without meeting a great astrologer and knowing the outline & purpose of life?
It is like reading and talking about meditation without practicing it.

Teacher, please guide us.

Sorry for writing such a lengthy comment.

Regards,
Vinothavel,
Coimbatore

krish said...

I accidentally came to this blog, when I was searching for some lesssons on Astawarga. What a surprise. Your blog is live and with all good teaching on astrology. I also have Bhutha in 7th house with Surya and Ragu in the Sani's house. Thanks for the blog and wonderful effort.
K.R.T.KRISHNAMOORTHI

Aachi said...

வ‌ணக்கம் ஐயா
‍‍சிம்ம லக்கினம். 11ம் அதிபதி புதன் அதே இடத்தில் ஆட்சி + வக்கிரம். புதனோடு சூரியன், செவ்வாய்.
புதன் வக்கிரம் என்பதால் பலன் செய்ய மாட்டரா?

Sridhar said...

Very useful and informative session.

Read the lession only today. Had severe viral fever.

Thanks a ton for wonderful explanations!

Regards

Sridhar

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா

Vasanthan said...

எல்லோருக்கும் வணக்கம், எனது பெயர் வசந்தன். ஒரு புது வாசகர்.

லக்னம் மகரம்
ராசி சிம்ம்ம்
நட்சத்திரம் பூரம் 2ம் பாதம்

தற்போது செவ்வாய் தசை சுக்ரன் புக்தி 24 செப் 2008 - 24 கார்த்திகை 2009

நான் படும் கஸ்டங்களினால் ஜோதிட்த்தைப்பயில வேண்டும் என வேட்கை கொண்டுள்ளேன். எனது 11ம் வீட்டில் எவரும் இல்லை. பதினோராம் அதிபதி ஜந்தாம் வீட்டில் இருக்கிறார். பரல்கள் 27 மற்றும் குருவின் 9ம் பார்வை 11ம் வீட்டில், 11ம் வீட்டிலிருந்து 4ம் பார்வையாக 2ம் வீடு (சனி), 8ம் பார்வை 6ம் வீடு (புதன் (அங்கில்லை)) இதற்கு எப்படிப்பலன் அய்யா.
ஜந்தாம் வீட்டிலிலிருந்து 4ம் பார்வையாக சிம்ம வீடு சந்திரன் இருக்கின்றது பரல்கள் 29, 8ம் பார்வையாக 12ம் வீடு சூரியன், புதன் உள்ளன பரல்கள் 23

SP.VR. SUBBIAH said...

////Vinothavel said...
Thanks for giving us lot of useful & inspiring articles. After reading some of them, I am putting only one humble request.
Sir, will you please suggest me (& all those who are seeking) one or two reliable astrologers in Coimbatore or anywhere in Tamilnadu.
My experiences made me think that many astrologers make the people (those who are in trouble) worried, more and not less, after meeting them. I think most astrologers are not genuine.
They are not giving to-the-point predictions.
I am very upset because of my inability to meet even one expert astrologer in my life till now.
What is the use of reading and talking about astrology, without meeting a great astrologer and knowing the outline & purpose of life?
It is like reading and talking about meditation without practicing it.
Teacher, please guide us.
Sorry for writing such a lengthy comment.
Regards,
Vinothavel,
Coimbatore/////

பக்கப் பட்டையில் பாருங்கள். உங்களுக்கான் சுட்டிகள் உள்ளன
(Links are given in the side bar)

SP.VR. SUBBIAH said...

//////krish said...
I accidentally came to this blog, when I was searching for some lesssons on Astawarga. What a surprise. Your blog is live and with all good teaching on astrology. I also have Bhutha in 7th house with Surya and Ragu in the Sani's house. Thanks for the blog and wonderful effort.
K.R.T.KRISHNAMOORTHI////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Aachi said...
வ‌ணக்கம் ஐயா
‍‍சிம்ம லக்கினம். 11ம் அதிபதி புதன் அதே இடத்தில் ஆட்சி + வக்கிரம். புதனோடு சூரியன், செவ்வாய்.
புதன் வக்கிரம் என்பதால் பலன் செய்ய மாட்டரா?////

லக்கினாதிபதி பதினொன்றில் இருக்கிறாரே! சந்தோஷப்படுங்கள்!
இதற்குப் பலன் minimum efforts; maximum benefits!
புதன், செவ்வாய் இரண்டும் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் அவற்றிற்குப் பலன் உண்டு!

SP.VR. SUBBIAH said...

////Sridhar said...
Very useful and informative session.
Read the lession only today. Had severe viral fever.
Thanks a ton for wonderful explanations!
Regards
Sridhar/////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா!////

நன்றி அமர பாரதி!

SP.VR. SUBBIAH said...

////Vasanthan said...
எல்லோருக்கும் வணக்கம், எனது பெயர் வசந்தன். ஒரு புது வாசகர்.
லக்னம் மகரம்
ராசி சிம்மம்
நட்சத்திரம் பூரம் 2ம் பாதம்
தற்போது செவ்வாய் தசை சுக்ரன் புக்தி 24 செப் 2008 - 24 கார்த்திகை 2009
நான் படும் கஷ்டங்களினால் ஜோதிடத்தைப் பயிலவேண்டும் என வேட்கை கொண்டுள்ளேன். எனது 11ம் வீட்டில் எவரும் இல்லை. பதினோராம் அதிபதி ஜந்தாம் வீட்டில் இருக்கிறார். பரல்கள் 27 மற்றும் குருவின் 9ம் பார்வை 11ம் வீட்டில், 11ம் வீட்டிலிருந்து 4ம் பார்வையாக 2ம் வீடு (சனி), 8ம் பார்வை 6ம் வீடு (புதன் (அங்கில்லை)) இதற்கு எப்படிப்பலன் அய்யா.
ஜந்தாம் வீட்டிலிலிருந்து 4ம் பார்வையாக சிம்ம வீடு சந்திரன் இருக்கின்றது பரல்கள் 29, 8ம் பார்வையாக 12ம் வீடு சூரியன், புதன் உள்ளன பரல்கள் 23////

பார்வைகளை வைத்துக் குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. முதலில் பாடங்களை (128 பாடங்கள்)ப்
பொறுமையாகப் படியுங்கள். இரண்டு மாதங்கள் கழித்து உங்கள் கேள்வி கேட்கும் தன்மையே மாறியிருக்கும்
அப்போது கேளுங்கள்.

லக்கினாதிபதியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரவில்லையே?
அதற்குக் காரணம் பாடங்களைப் படிக்காததுதான்!

Mahalakshmi said...
This comment has been removed by the author.
Mahalakshmi said...

வணக்கம். நான் கடக லக்னம் சிம்ம ராசியில் பிறந்தவள், எனக்கு 11 ஆம் இடத்தில் சுக்ரன் அமர்ந்து ஆட்சி பெற்றுள்ளார் ஆனால் அவர் கடக லக்னத்திற்கு பாதகாதிபதி ஆயிற்றே, பலன்கள் எப்படி ?