மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.10.08

ஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)

அடைப்படைப் பாடத்தைச் சுருக்கி வாசகர்களின் வசதிக்காக ஒரே பக்கத்தில்
வருமாறு கீழே கொடுத்துள்ளேன். இதைப் பிரதி எடுத்துக் கையில் வைத்துக்
கொண்டு, கிடைக்கும் நேரத்தில் படித்து, மனதில் உருவேற்றவும். இந்தப் பாடம்
வசப்பாட்டால் மட்டுமே, இங்கே நடத்தும் பாடங்கள் புரியும்.
இல்லை என்றால் புரியாது.

1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.

2. ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு

3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
அட்டவனை உள்ளது பார்க்கவும்++++++++++++++++++++++++++++++++++++++++++++
4. லக்கினம் என்பது என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.
ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம்
சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த
லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,
தசாபுத்தி என்பது ரோடு,
கோள்சாரம் என்பது டிரைவர்.
லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து
ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன்
பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள்
கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு
ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய
தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக்
கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும்
மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர்
(Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான்
தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.

11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள்
சனி தசை - 19 ஆண்டுகள்
புதன் தசை - 17 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

மொத்தம் 120 ஆண்டுகள்

ஒரு பார்முலா உள்ளது:
Major Period x Sub Period = Number of months & Days of the Sub- Period
(In the three digit answer, first 2 digits are months and the last digit
multiplied by three is the days

12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?

சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை

13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?

ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு
உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!

கோள்கள் "உச்சம்" அடையும் இராசி
சூரியன் - மேஷத்தில்,
சந்திரன் - ரிஷபத்தில்,
குரு - கடகத்தில்
புதன் - கன்னியில்
சனி - துலாமில்
ராகு, கேது - விருச்சிகத்தில்
செவ்வாய் - மகரத்தில்
சுக்கிரன் - மீனத்தில்
=======
நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.

கோள்கள் "நீசம்" அடையும் இராசி
சூரியன் - துலாமில்,
சந்திரன் - விருச்சிகத்தில்,
செவ்வாய் - கடகத்தில்,
புதன் - மீனத்தில்
குரு - மகரத்தில்
சுக்கிரன் - கன்னியில்
சனி - மேஷத்தில்
ராகு, கேது - ரிஷபத்தில்

14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?

Chart கொடுக்கப்பட்டுள்ளது
கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்
திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள்
கேந்திரம் சிறப்பானது
அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.
இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை பெற்றுவிடும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்
இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்
கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்
10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின்
தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.
ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8
ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை
தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப்
பயன்படுத்தவும்.

17. நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?
காரகன் என்பவன் authority
ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)
காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு
நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)

(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.
ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக்
கொடுப்பான். ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து
அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
தாய்க்குக் காரகன் சந்திரன்
மன காரகன் சந்திரன்
ஆயுள் காரகன் சனி
தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தன (பணம்) காரகன் குரு
புத்திரகாரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!

++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

46 comments:

கூடுதுறை said...

நான் தான் முதல் வருகை

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நான்தான் இரண்டாவது வருகை. வாத்தியாரே இதனை நான் பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துள்ளேன். பொறுமையாக மறுபடியும் படித்துப் பார்க்கிறேன்..

நன்றிகள் கோடி..

KaveriGanesh said...

vanakkam iya,
i read ur astro postings regularly, i am verymuch intrested in astrology. i strongly beleives astro is more important for a maariage proposal.
i have lot of good experincing examples towards astro. i will share all in coming classes of urs.

pl explain about sevvai thosam in coming classes, only one doubt in sevvai thosam , in a box if sevvai is along with ragu, pudan, sani, kethu in anyone of the grahas in 2,4,7,8,12 is it sevvai thosam?
pl expalin about that

wishes
ganesh

SP.VR. SUBBIAH said...

//////கூடுதுறை said...
நான் தான் முதல் வருகை////

எனக்கும் அதில் மகிழ்ச்சியே! கூடிவரும் துறைக்காரர் அல்லவா?

SP.VR. SUBBIAH said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நான்தான் இரண்டாவது வருகை. வாத்தியாரே இதனை நான் பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துள்ளேன். பொறுமையாக மறுபடியும் படித்துப் பார்க்கிறேன்..
நன்றிகள் கோடி..////

உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு. பயன் படுத்திக்கொள்ளுங்கள்

SP.VR. SUBBIAH said...

/////KaveriGanesh said...
vanakkam iya,
i read ur astro postings regularly, i am verymuch intrested in astrology. i strongly beleives astro is more important for a maariage proposal.
i have lot of good experincing examples towards astro. i will share all in coming classes of urs.
pl explain about sevvai thosam in coming classes, only one doubt in sevvai thosam , in a box if sevvai is along with ragu, pudan, sani, kethu in anyone of the grahas in 2,4,7,8,12 is it sevvai thosam?
pl expalin about that
wishes
ganesh//////

I will write it Mr.Ganesh. Please wait for a week!

Sumathi. said...

ஹலோ சார்,

என்னை தயவு செய்து மன்னிச்சுக்கோங்க. 2 நாளா வீட்டுல ரொம்ம்ப வேலை. போதா குறைய்ய்கு கரண்ட் கட் வேற திரும்பவும் ஆரம்பிச்சுடுச்சு. என்னால இந்த வகுப்பறைய்கு வர தாமதமாகிடுச்சு.
அதுக்குள்ள பாத்தா வகுப்பில் டெஸ்டும் அதற்கு மதிப்பெண்ணும் குடுத்து அதற்கு அடுத்த பாடமும் துவங்கிடுச்சு. நானும் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். சரி அடுத்த முறையாவது பாக்கலாம்.
எல்லாம் இந்த நேரக் கொடுமை தான்.மன்னிக்கவும் வாத்தியாரய்யா.

Sumathi. said...

ஹலோ சர்,

ஆமாம், இந்த பரல்கல் கணக்கில் தான் நான் ஏதோ கோளாறு செய்து விட்டேன் போல அதில் தான் நான் வீக் என்று நினைகிறேன்.மீண்டும் பார்க்கிறேன்.

அணுயோகி said...

திரு.ராஜகோபால் ஐயா வுக்கு வாழ்த்துக்கள்...

அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்க முயற்சிக்கனும்(வடிவேல் style ல் இன்னும் சிறிது பயிற்சி வேண்டுமோ?..... )

Indian said...

Thanks for the recap.

SP.VR. SUBBIAH said...

/////Sumathi. said...
ஹலோ சார்,
என்னை தயவு செய்து மன்னிச்சுக்கோங்க. 2 நாளா வீட்டுல ரொம்ம்ப வேலை. போதா குறைக்கு கரண்ட் கட் வேற திரும்பவும் ஆரம்பிச்சுடுச்சு. என்னால இந்த வகுப்பறைய்கு வர தாமதமாகிடுச்சு.
அதுக்குள்ள பாத்தா வகுப்பில் டெஸ்டும் அதற்கு மதிப்பெண்ணும் குடுத்து அதற்கு அடுத்த பாடமும் துவங்கிடுச்சு. நானும் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். சரி அடுத்த முறையாவது பாக்கலாம்.
எல்லாம் இந்த நேரக் கொடுமை தான்.மன்னிக்கவும் வாத்தியாரய்யா.////

எதற்கு மன்னிப்பு? நேரம் கிடைக்கும்போது மெதுவாகப் படியுங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////Sumathi. said...
ஹலோ சர்,
ஆமாம், இந்த பரல்கள் கணக்கில்தான் நான் ஏதோ கோளாறு செய்து விட்டேன் போல அதில் தான் நான் வீக் என்று நினைகிறேன்.மீண்டும் பார்க்கிறேன்.////

அந்தப் அப்குதியை மீண்டும் இரண்டுமுறைகள் நன்றாகப் படியுங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////அணுயோகி said...
திரு.ராஜகோபால் ஐயா வுக்கு வாழ்த்துக்கள்...
அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்க முயற்சிக்கனும்(வடிவேல் style ல் இன்னும் சிறிது பயிற்சி வேண்டுமோ?..... )//////

வடிவேல் ஸ்டைலில் வேண்டாம். உங்கள் ஸ்டைலிலேயே முயற்சி செய்யுங்கள்

SP.VR. SUBBIAH said...

//////Indian said...
Thanks for the recap.////

எல்லாம் உங்களுக்காகத்தான் நண்பரே!

கோவை விமல்(vimal) said...

நல்ல பயனுள்ள குறு நாவல் போல, நாம் வகுப்பறையின் குறுந்தொகுப்பை தந்தமைக்கு நன்றி வாத்தியரே, மேலும் என்னுதய மடி கணினியில் கோளாறு ஏற்பட்டதால், தொடர்ந்து வகுப்பறைக்கும், தேர்வுக்கும், சரியான சமயத்தில் வர இயலவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.

மதி said...

ஐயா,

10 கேள்விக்கு நான் பதில் எழுதினேன், முழுமையாக எழுதி அனுப்புவதர்க்குள், பதில் வெளியாக்கிவிட்டிர்கள்,அதனால் என் பங்களிப்பு இல்லாமல் போய்விட்டாது, நான் என்ன செய்வது வேலை பளு ஆதலால் தாமதம்.

SP.VR. SUBBIAH said...

//////கோவை விமல்(vimal) said...
நல்ல பயனுள்ள குறு நாவல் போல, நாம் வகுப்பறையின் குறுந்தொகுப்பை தந்தமைக்கு நன்றி வாத்தியரே, மேலும் என்னுதய மடி கணினியில் கோளாறு ஏற்பட்டதால், தொடர்ந்து வகுப்பறைக்கும், தேர்வுக்கும், சரியான சமயத்தில் வர இயலவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.////

ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. எனக்கு மின் வெட்டுப் பிரச்சினை. நாளொன்றுக்கு 7 மணி நேரம் மின் வெட்டு. அது அவஸ்தையாக இருக்கிறது!

SP.VR. SUBBIAH said...

/////மதி said...
ஐயா,
10 கேள்விக்கு நான் பதில் எழுதினேன், முழுமையாக எழுதி அனுப்புவதர்க்குள், பதில் வெளியாக்கிவிட்டிர்கள்,அதனால் என் பங்களிப்பு இல்லாமல் போய்விட்டாது, நான் என்ன செய்வது வேலை பளு ஆதலால் தாமதம்./////

அதனால் பரவாயில்லை. அடுத்தமுறை ஒரு கை பார்த்துவிடுங்கள்

திருநெல்வேலி கார்த்திக் said...

புதியவர்களுக்கும்,பழைய மாணவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் குறிப்புகள் தந்தற்கு ஆசிரியர் ஐயாவுக்கு மாணவர்கள் சார்பில் நன்றி.

raamajeyam said...

வணக்கம் ஐயா!

பயனுள்ள உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
தசா புத்தி அந்தரங்களை காண என்னிடம் excel file ஒன்று உள்ளது.
எந்த mail id க்கு அதை அனுப்பினால் அதை சரி பார்த்து சொல்லுவீர்கள்.

நாமக்கல் சிபி said...

பயனுள்ள பதிவு அனைவருக்கும்!

SP.VR. SUBBIAH said...

//////திருநெல்வேலி கார்த்திக் said...
புதியவர்களுக்கும்,பழைய மாணவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் குறிப்புகள் தந்தற்கு ஆசிரியர் ஐயாவுக்கு மாணவர்கள் சார்பில் நன்றி./////

நமக்குள் நன்றி எதற்கு?

SP.VR. SUBBIAH said...

/////raamajeyam said...
வணக்கம் ஐயா!
பயனுள்ள உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
தசா புத்தி அந்தரங்களை காண என்னிடம் excel file ஒன்று உள்ளது.
எந்த mail id க்கு அதை அனுப்பினால் அதை சரி பார்த்து சொல்லுவீர்கள்.////

வகுப்பறைக்குரிய மின்னஞ்சல் முகவர்: classroom2007@gmail.com
அதில் அனுப்புங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
பயனுள்ள பதிவு அனைவருக்கும்!////

நீங்கள் சொன்னால் சரிதான்!

ஜீவன் said...

அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்! உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்,
என்னையும் சேர்த்துகோங்க!!உங்க மாணவனா!

SP.VR. SUBBIAH said...

/////ஜீவன் said...
அய்யா! ஒரு பெரிய்ய்ய வணக்கம்! உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்,
என்னையும் சேர்த்துகோங்க!!உங்க மாணவனா!////

இது இணைய வகுப்பு. இங்கே பாதம் தொடும் வேலையெல்லாம் கிடையாது! அனைவரும் சமம்.
வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது. இங்கே வந்து படிக்கிறவர்கள் அனைவரும் வகுப்பு மாணவர்கள்
வருகைப்பதிவேடு, பெயருக்கு மட்டுமே.மாணவர்களைக் கெளரவிப்பதற்கு மட்டுமே. புதிதாக வருகிறவர்கள் பழைய பாடங்களை
படிப்பது நல்லது. ஆழ்ந்து படிப்பது மிக நல்லது.

நாமக்கல் சிபி said...

//வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது//

ஆமாம்! எந்த விதிமுறையும் கிடையாது! ரெகுலராக வருகைப்பதிவேட்டில் கையொப்பம் மட்டும் இட்டுவிட வேண்டும்!

முதல் வருகைப் பதிவே தங்களை வகுப்பு மாணவர் என்ற அந்தஸ்தை வழங்கி விடும்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!

நாமக்கல் சிபி said...

பிறகு பாடங்களை ஆழ்ந்துபடித்து, புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்! அவ்வப்போது வரும் சந்தேகங்களை பின்னூட்டங்கள் வாயிலாகக் கேட்கலாம்!

அவ்வப்போது கொடுக்கப் படும் வீட்டுப் பாடங்களையும், வைக்கப் படும் தேர்வுகளையும் (நேரம் கிடைக்கும்போது) தவறாமல் செய்ய வேண்டும்!

படித்துப் புரிந்து கொள்ளுதலைவிட நிறைய ஜாதங்கங்களை அனலைஸ் செய்து, வாத்தியாரின் பாடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டோம் எனில் பாடங்கள் எளிதில் புரிபடுவதோடு மனதிலும் நிற்கும்!

கூடுதுறை said...

//்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//

ஒஹோ இப்படியேல்லாம் இருக்கா? சொல்லவே இல்லை...

பழைய மாணக்கர்கள் எல்லாம் சொன்னாத்தானே தெரியும்...

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//வகுப்பறையில் சேர்வதற்கு எந்த விதிமுறையும் கிடையாது//
ஆமாம்! எந்த விதிமுறையும் கிடையாது! ரெகுலராக வருகைப்பதிவேட்டில் கையொப்பம் மட்டும் இட்டுவிட வேண்டும்!
முதல் வருகைப் பதிவே தங்களை வகுப்பு மாணவர் என்ற அந்தஸ்தை வழங்கி விடும்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//////

:-))))))

(வேறென்ன சொல்ல முடியும்?)

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
பிறகு பாடங்களை ஆழ்ந்துபடித்து, புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்! அவ்வப்போது வரும் சந்தேகங்களை பின்னூட்டங்கள் வாயிலாகக் கேட்கலாம்!
அவ்வப்போது கொடுக்கப் படும் வீட்டுப் பாடங்களையும், வைக்கப் படும் தேர்வுகளையும் (நேரம் கிடைக்கும்போது) தவறாமல் செய்ய வேண்டும்!
படித்துப் புரிந்து கொள்ளுதலைவிட நிறைய ஜாதங்கங்களை அனலைஸ் செய்து, வாத்தியாரின் பாடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டோம் எனில் பாடங்கள் எளிதில் புரிபடுவதோடு மனதிலும் நிற்கும்!/////

:-)))))

SP.VR. SUBBIAH said...

///////கூடுதுறை said...
//்! அதன் பிறகு மாதம் ரூ500 சந்தாத் தொகையை வாத்தியார் தவறாமல் அனுப்பி விடுவார்!//
ஒஹோ இப்படியேல்லாம் இருக்கா? சொல்லவே இல்லை...
பழைய மாணக்கர்கள் எல்லாம் சொன்னாத்தானே தெரியும்...//////


உங்களை முதல் பெஞ்ச்சில் உட்காரச் சொல்லியிருந்தேனே? எதற்காக மாப்பிள்ளை பெஞ்ச்சிற்கு போனீர்கள்?
அங்கே இருவர் மட்டுமே - எப்போதும்! நீங்கள் மறுபடியும் முதல் பெஞ்ச்சிற்கே வந்துவிடுங்கள்!

கூடுதுறை said...

//உங்களை முதல் பெஞ்ச்சில் உட்காரச் சொல்லியிருந்தேனே? எதற்காக மாப்பிள்ளை பெஞ்ச்சிற்கு போனீர்கள்?
அங்கே இருவர் மட்டுமே - எப்போதும்! நீங்கள் மறுபடியும் முதல் பெஞ்ச்சிற்கே வந்துவிடுங்கள்!//

உண்மை தான் ஐயா என்னைப்போல மரமண்டைகள் முதல் பெஞ்சில் உட்கார்ந்தால் தான் கொஞ்சமாவது புரியும்...

Senthil said...

Is there any software to match two horoscopes. like marriage matching software?

SP.VR. SUBBIAH said...

/////Senthil said...
Is there any software to match two horoscopes. like marriage matching software?////

உள்ளது. அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முயன்று பாருங்கள்!
http://www.planetarypositions.com/chartmatch.html

santhiganesh said...

Dear Sir, In the first point where u have listed the 12 Rasis,it is listed as MULAM instead of DHANUSH rasi.
Is that OK?

மு௫கனடிமை said...

சூப்பர்

புத்தகமா வெளியிட போகிரீங்களா. வாழ்த்துக்கள் சார்.

வெளியிடும் பொழுது எங்களுக்கும் தெரியப்படுத்துங்களேன் சார்.

மு௫கனடிமை said...

என் பெயர் சரவணன். வயது இருபத்தி ஏழு. எனது பத்தொன்பது வயதிலிருந்தே எனக்குள் ஆன்மீகத்தில் பயங்கர ஈடுபாடு உண்டாகி விட்டது. அதன் விளைவாக ஜோதிடம் தவிர அனைத்துவிதமான மந்திரங்கள் யந்திரங்கள் மலையாள மாந்திரீகம், எட்சனி, தியானம், பிராணயாமம், யோகாசனம், ஹிப்னாடிசம், மெஸ்மெரிஸம், வர்மக்கலை, பதிகங்கள், ........................இப்படி புத்தகங்களாக படித்து படித்து ஒரு கிறுக்கன் போல் ஆகி விட்டேன். எனது வீட்டிலும் என்னை ஒரு மந்திரவாதி போல் நினைக்கின்றனர். சிறு வயதில் எனது உடன் பிறந்தோர் இதற்காக என்னை திட்டினார்கள். நானும் அலட்சியபடுத்தினேன். இப்பொழுது எனக்கு ஜோதிடத்தில் பசி வந்து விட்டது. அது சம்பந்தமாக பசியைத் தணிக்க தீவிரமாக பசியாறி வரும் வேளையில் இந்த இணைய தளம் கிடைத்தது. எளிய முறையில் என்னை போன்ற பாமரங்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கி இருப்பது அருமையயும் அருமை. அதற்காக மரியாதைக்குரிய சுப்பையா ஐயாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றியுடன்,
முருகன் அடிமை

SP.VR. SUBBIAH said...

/////////Blogger santhiganesh said...
Dear Sir, In the first point where u have listed the 12 Rasis,it is listed as MULAM instead of DHANUSH rasi.
Is that OK?////

பிழையைத் திருத்திவிட்டேன் சகோதரி. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

nappayya007 said...

வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,
இப்பொழுதுதான் நான் வகுப்பில் இணைகிறேன்.
ஜகன்நாதஹோரா மென்பொருள் சைடுபாரில் எங்கு உள்ளது.

Guru pala mathesu said...

sir, good post

yishun270 said...

I am not a regular student but on and off I study your lessons, now I would like to ask you some doubts can I log in by this user name and post questions or should I have to get permission from you to do so.Your are blessed for this knowledge and doing this service.

SP.VR. SUBBAIYA said...

////yishun270 blogger
I am not a regular student but on and off I study your lessons, now I would like to ask you some doubts can I log in by this user name and post questions or should I have to get permission from you to do so.Your are blessed for this knowledge and doing this service./////

பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்காக Doubts என்னும் தலைப்பில் (தற்போது மீள் பதிவு என்னும் தலைப்பில் உள்ளது - சைடு பாரைப் பாருங்கள்) என்னுடைய பதில்களை எல்லாம் எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் தீர்ந்துவிடும்

Jothilingam Mathivanan said...

வணக்கம் அய்யா,
இங்கே சமம் என்பதின் பொருள் எனக்கு அகப்படவில்லை, சமம் என்றால் அந்த வீட்டின் அதிபதிக்கு சமமான்வர் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? சட்று விளக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு முன் எங்கேனும் விளக்கியிருந்தால் சுட்டி கொடுங்கள் அய்யா.

nivas said...

அருமை....

Radha Rajan said...

i could nt take printout. right click disabled. how to take printouts> pls help.