மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.10.08

பட்டுக்கிடப்பான் என்றால் என்ன?




எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு;
ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்
பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு
குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும்
அந்தச் சொல்தான்.

பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச்
சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை
லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள்
படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும்
போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான்தான்" என்று பல்லைக் கடித்துக்
கொண்டு கோபமாகக் கூறுவார்.

பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது
கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க
வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்

அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக்
கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக்
காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும்
அந்தச் சொல்லைத்தான் பயன் படுத்துவார்கள்,"அட பட்டுக் கெடப்பா(ய்)
- இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்

இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத்
துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன்
என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப்
பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!

உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம்
வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப்போட்டால்தான்
பாத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம்
வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
"பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!

1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம்
ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன்
இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான்.
இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள்
சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச்
செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான
வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய
தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.

நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம்
கிடைக்கும். சொந்த வீடு,வாகனம்,வேலையாட்கள் என்று ஜாதகன்
செளகரியமாக வாழ்வான்.

அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்
கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.

மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார்.
(இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)

பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப்
பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!

பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக
ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில்
பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.

பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும்
செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும்
சொத்துக்கள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.
ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை
வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும்
நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார்.
செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்
மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில்
தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.

இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர்
வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.

பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள்
ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை
தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும்.
பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன்
கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக
ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார்.
எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்

பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள்
குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில்
பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல
ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில்
செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று
வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான்.
எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில்
ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில்
வெற்றி காண்பவனாக இருப்பான்.
கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில்
புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும்,
செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு
சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு
உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது
ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான்.
செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக,
மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக,
மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள்
அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும்
சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத்
தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லை
யாக இருப்பான்.
பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும்
ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்
ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள்
வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும்
அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.

இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி
செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப்
பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய
சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான்

சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்
படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும்
இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக
இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.

பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்

சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து
கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக்
காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு
வைத்திருப்பார்கள்.

(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு
உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும்
சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)

ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்திய
டைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!

இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த
கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்
கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக
இருப்பார்கள்.

அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ்
பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம்
உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்

சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.
பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?

1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்

ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டை வைத்து, தொழில் முனைவோர், வேலையில் இருப்போர்,
பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், நிதி நிறுவனங்கள்
வங்கிகளில் வேலை பார்ப்போர் போன்றவர்களுக்கான அமைப்புக்களைப்
பற்றிய பாடத்தை விடுபட்டவை என்ற பெயரில் தனித்தனியாகத் தரவுள்ளேன்
அது பின்னால் வரும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்

இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

114 comments:

  1. me the first...Good explanation.

    -Shankar

    ReplyDelete
  2. மீ த செகண்ட் வாத்தியரே, நான் ஆஜர்...
    10'ம் வீடு சூப்பர், ஆனா எனக்கு இடம் காலி...:-(

    ReplyDelete
  3. படித்துக்கொண்டேன் ஐயா.

    ஆனால் எனக்கு 10-ம் வீடு காலி.

    ReplyDelete
  4. என் பெயர் இன்னும் பதிவேட்டில் வரவில்லையே.

    ஏன் ஐயா?.

    ReplyDelete
  5. I have sun, mars, mercury and ragu in 10th house and does it means that my 10 house is good?

    ReplyDelete
  6. ஐயா...

    தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி.

    இன்னும் தெளிவு பெற விரும்புகிறேன், உங்ளுக்கு தெரிந்த புத்தகத்தின் பெயரை சொல்ல வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. 10 வீடுக்காலியாக இருந்தால் அந்த வீட்டு சொந்தகாரன் அந்த வேலையை எடுத்துகொள்வான் இல்லையா ஐயா?

    ReplyDelete
  8. hotcat said...
    me the first...Good explanation.
    -Shankar/////

    எது பட்டுக்கிடப்பான் என்ற சொல்லிற்குக் கொடுத்த விளக்கமா?

    ReplyDelete
  9. /////கோவை விமல்(vimal) said...
    மீ த செகண்ட் வாத்தியரே, நான் ஆஜர்...
    10'ம் வீடு சூப்பர், ஆனா எனக்கு இடம் காலி...:-(/////

    காலியாக இருந்தால் என்ன கவலை?
    அதில் கூட்டமாக பல கிரகங்கள் இருந்தால்தான் கவலைப்பட வேண்டும்!

    ReplyDelete
  10. ////ஜே கே | J K said...
    உள்ளேன் ஐயா.////

    எங்கே உங்கள் தோஸ்த்?

    ReplyDelete
  11. Pathil Sani Uchikkum Kondu pogum.Pallathil thalli vittu paridthavikkavum vaikkum.Idhu en valkaiyil pala thadavai nadanthu ullathu ayya.Unmaiyaana vaarthai.

    ReplyDelete
  12. /////ஜே கே | J K said...
    படித்துக்கொண்டேன் ஐயா.
    ஆனால் எனக்கு 10-ம் வீடு காலி.////

    பத்தாம் வீட்டுக்காரன் எங்கே இருக்க்கிறான் என்று பாருங்கள்!

    ReplyDelete
  13. http://govikannan.blogspot.com/2008/10/blog-post_16.html

    இந்தபதிவைப் படித்தீர்களா ஐயா?

    ReplyDelete
  14. /எங்கே உங்கள் தோஸ்த்?//

    தோ வந்துட்டேன்!

    ReplyDelete
  15. /////ஜே கே | J K said...
    என் பெயர் இன்னும் பதிவேட்டில் வரவில்லையே.
    ஏன் ஐயா?.////

    வந்துவிட்டது. ஒருமுறை பார்த்துவிடுங்கள் ஜே.கே!

    ReplyDelete
  16. //ஜே கே | J K said...
    படித்துக்கொண்டேன் ஐயா.
    ஆனால் எனக்கு 10-ம் வீடு காலி//

    எனி ஹெல்ப் நீடெட்?
    - ஹவுஸ் புரோக்கர் கந்தசாமி

    ReplyDelete
  17. ////Monickam said...
    I have sun, mars, mercury and ragu in 10th house and does it means that my 10 house is good?////

    More than two planets in a house is not desirable. Before saying anything,
    the horoscope should be verified for combust of planets associated in that house
    Better consult an astrologer. I don't have time to check personal horoscopes
    I am sorry to say this my dear friend!

    ReplyDelete
  18. //குருவுடன் சுக்கிரனும்
    சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்//

    ஆஹா! இது மேட்டரு!

    ReplyDelete
  19. //More than two planets in a house is not desirable//

    ஆமாம்! நம்ம காம்பவுண்ட்லே 10 நம்பர் வீட்டுலே 3 ஆளுக!

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா.

    பத்தாம் வீட்டை பற்றிய பதிவு , அருமை .

    எனது 10ஆம் வீட்டில் சனி மற்றும் கேது .
    சனி 5& 6ஆம் வீட்டுக்கு உரியவன் .

    //10ஆம் வீட்டில் சனி :
    ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
    சமமான பதவியிலோ சென்று அமர்வான்.//
    I am a software professional.

    //சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
    அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
    சிறந்து விளங்குவார்கள்.//
    This is not matching.

    //துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
    இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக இருப்பான்.//

    This is also not matching.

    // கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
    ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.//
    This is 100% true.

    //பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
    இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்//

    200 % true.

    Can you please clarify when it will be up trend and when it will be down trend?

    // கேது
    ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்.//

    This is 200 % true, I had struggled a lot in my career .

    //ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.//

    :-)) Really.

    Thanks ,

    GK, BLR.

    ReplyDelete
  21. மதி said...
    ஐயா...
    தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி.
    இன்னும் தெளிவு பெற விரும்புகிறேன், உங்ளுக்கு தெரிந்த புத்தகத்தின் பெயரை சொல்ல வேண்டுகிறேன்./////

    முன் பதிவுகளில் நிறைய புத்தகங்களின் பெயர்களைப் பதிவில் கொடுத்துள்ளேன். பழைய பதிவுகளைப் பாருங்கள்
    வகைப்படுத்தப்பட்ட லிஸ்ட் வேண்டுமென்றால் சைடு பாரில் கூடுதுறையாரின் (இன்டெக்ஸ்) பதிவிற்கான சுட்டி உள்ளது
    அங்கே சென்று கிளிக்கிப் பாருங்கள்!

    ReplyDelete
  22. ////கூடுதுறை said...
    10 வீடுக்காலியாக இருந்தால் அந்த வீட்டு சொந்தகாரன் அந்த வேலையை எடுத்துகொள்வான் இல்லையா ஐயா?////

    காலியாக இல்லாவிட்டாலும் அந்த வீட்டு சொந்தக்காரனுக்குத்தான் முதல் உரிமை.
    அவன் தலையிட்டு அனைத்தையும் செய்வான்!

    ReplyDelete
  23. /////Ragu Sivanmalai said..
    Pathil Sani Uchikkum Kondu pogum.Pallathil thalli vittu paridthavikkavum vaikkum.
    Idhu en valkaiyil pala thadavai nadanthu ullathu ayya.Unmaiyaana vaarthai.////

    உங்கள் கருத்திற்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  24. ////கூடுதுறை said...
    http://govikannan.blogspot.com/2008/10/blog-post_16.html
    இந்தபதிவைப் படித்தீர்களா ஐயா?/////

    படித்தேன்.பிறப்பை மட்டுமல்ல இறப்பையும் தள்ளிவைத்தவன் கதையெல்லாம் நிறைய இருக்கிறது.
    தனிப் பதிவாக அதை எழுதுகிறேன். இப்போது பதிவு எழுத நேரம் இல்லை. வெளியூர்ப் பயணம்
    வந்தவுடன் திங்கட்கிழமையன்று கச்சேரியை வைத்துக் கொள்வோம். சரிதானே?

    ReplyDelete
  25. ////நாமக்கல் சிபி said...
    /எங்கே உங்கள் தோஸ்த்?//
    தோ வந்துட்டேன்!////

    உங்களைக் காணாவிட்டால் கண்ணும், மனதும் தேடுகிறது!:-)))

    ReplyDelete
  26. /////நாமக்கல் சிபி said...
    //குருவுடன் சுக்கிரனும்
    சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்//
    ஆஹா! இது மேட்டரு!///

    மேட்டர் சரி. உடன் மீட்டரும் உள்ளதா?
    அதாவது வருமானமும் உள்ளதா?

    ReplyDelete
  27. /////நாமக்கல் சிபி said...
    //More than two planets in a house is not desirable//
    ஆமாம்! நம்ம காம்பவுண்ட்லே 10 நம்பர் வீட்டுலே 3 ஆளுக!////

    ஆளாளுக்கு 5 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    தலைவர் (சூரியன்) இருந்தால் 10 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்

    ReplyDelete
  28. ////Geekay said...
    வணக்கம் அய்யா.
    பத்தாம் வீட்டை பற்றிய பதிவு , அருமை .
    எனது 10ஆம் வீட்டில் சனி மற்றும் கேது .
    சனி 5& 6ஆம் வீட்டுக்கு உரியவன் .
    //10ஆம் வீட்டில் சனி :
    ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
    சமமான பதவியிலோ சென்று அமர்வான்.//
    I am a software professional.
    //சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
    அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
    சிறந்து விளங்குவார்கள்.//
    This is not matching.
    //துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
    இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக இருப்பான்.//
    This is also not matching.
    // கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
    ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.//
    This is 100% true.
    //பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
    இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்//
    200 % true.
    Can you please clarify when it will be up trend and when it will be down trend?
    // கேது
    ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்.//
    This is 200 % true, I had struggled a lot in my career .
    //ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.//
    :-)) Really.
    Thanks ,
    GK, BLR
    ++++++++++++++++++++++
    ரெடிமேட் துணிக்கடையில் இருக்கும் எல்லாமுமே உங்களுக்கு மேட்ச் ஆகுமா?
    அதுபோல பொதுவிதிகளில் எல்லாமுமே பொருந்தி வருவது கடினம்
    பொருந்தி வருவதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  29. /////நாமக்கல் சிபி said...
    //More than two planets in a house is not desirable//
    ஆமாம்! நம்ம காம்பவுண்ட்லே 10 நம்பர் வீட்டுலே 3 ஆளுக!////

    ஆளாளுக்கு 5 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    தலைவர் (சூரியன்) இருந்தால் 10 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்

    Request from Ragu

    I want to make a request. Can you please make a blog post about this Asthanga Dosham?Will it be applicable for the Mercury Planet Also? It should not be within 5 degrees or 10 degrees? Having asthanga dosam is equal to Neecham or what? Like these I have many doubts.

    ReplyDelete
  30. //SP.VR. SUBBIAH said...
    /////ஜே கே | J K said...
    என் பெயர் இன்னும் பதிவேட்டில் வரவில்லையே.
    ஏன் ஐயா?.////

    வந்துவிட்டது. ஒருமுறை பார்த்துவிடுங்கள் ஜே.கே!//

    பாத்தாச்சு.
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  31. //SP.VR. SUBBIAH said...
    /////ஜே கே | J K said...
    படித்துக்கொண்டேன் ஐயா.
    ஆனால் எனக்கு 10-ம் வீடு காலி.////

    பத்தாம் வீட்டுக்காரன் எங்கே இருக்க்கிறான் என்று பாருங்கள்!//

    என் லக்கனத்திற்கு 10-ம் இடம் காலி. அது கும்பத்துக்கு உரியது. அதன் அதிபதி சனி. சனி 6-ல் அதாவது துலாமில் உள்ளது. எப்படி ஐயா பார்ப்பது?

    ReplyDelete
  32. //பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
    இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்//
    200 % true.
    Can you please clarify when it will be up trend and when it will be down trend?

    ReplyDelete
  33. ஆகவே பத்தாம்
    வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
    "பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்//
    அருமையான பதிவு அய்யா

    ReplyDelete
  34. ஹலோ சார்,

    ஆமாம் படிச்சேன். ஆனா எனக்கு தான் என்னமோ சரியா வரலை. ஏன்னா அங்க எனக்கு சுக்ரனும் ராகுவும் சேர்ந்து என்னன்னமோ பண்ணிட்டு இருக்காங்க. ம்ம்ம் பண்ணட்டும்.
    ஆனா இந்த 10ம் இடம் கொஞ்சம் படிக்க படிக்க தான் புரியுது.

    ReplyDelete
  35. ////hotcat said...
    me the first...Good explanation.
    -Shankar/////

    எது பட்டுக்கிடப்பான் என்ற சொல்லிற்குக் கொடுத்த விளக்கமா?////

    Yes, I thought "pattu" in the term which usually get referred to the plant or tree which is dying...

    Your explantion is different though...

    -Shankar

    ReplyDelete
  36. //ஆளாளுக்கு 5 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    தலைவர் (சூரியன்) இருந்தால் 10 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்//

    நாம சொல்லியா கேக்கப் போறாங்க!

    10 வது இடத்துலே

    கேது - 18"54'
    குரு - 19"11'

    சுக்கிரன் - 26"42' (இவரு மட்டும் தப்பிச்சாரு)

    11 வது இடத்துலே சூரியன் - 34"47'
    புதன் - 36"49

    லக்கினத்துல(கடகம்)

    ராசி நாதன்(சனி) - 94"38'
    செவ்வாய் - 98"0' (செவ்வாய் ஆல்ரெடி நீசம்)

    ReplyDelete
  37. //Request from Ragu// !?
    ஆஹா! வாத்தியார்கிட்டே பாடம் கேக்க ராகு வெல்லாம் வராரே!



    அப்போ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, கேது எல்லாம் அடுத்து ரிக்வெச்ட் பண்ணுவாங்களா?

    (ரகு! டென்சன் ஆகாதீங்க! சும்மா லுலூங்காட்டி! இந்த கிளாஸ்லே அப்படித்தான் ஜாலியா கலாய்ப்போம்)

    ReplyDelete
  38. //கும்பத்துக்கு உரியது. அதன் அதிபதி சனி. சனி 6-ல் அதாவது துலாமில் உள்ளது//

    ஜே.கே!

    6ம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்வார்கள்! மேலும் 8 மற்றும் 12 ஆகியவையும் மறைவு ஸ்தானங்களே!

    சுபர்கள் இவ்விடத்தில் அமர்வது சுப பலன்களைக் குறைத்தும், அசுபர்கள் இவ்விடங்களில் அமர்வது அசுப பலன்களைக் குறைத்தும் கொடுப்பதி இயல்பு!

    ReplyDelete
  39. //6ம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்வார்கள்! மேலும் 8 மற்றும் 12 ஆகியவையும் மறைவு ஸ்தானங்களே!//

    ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக! பயணத்தை முடித்து விட்டு திங்களன்று!

    ReplyDelete
  40. // கேது
    ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்.//
    This is 200 % true, I had struggled a lot in my career .


    உண்மைதான்! நானும் அப்படித்தான் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  41. ஐயா! ஒரு மிகப் பெரிய சந்தேகம்!

    பத்தாமிடத்தில் கேது, குரு, சுக்கிரன்!
    இந்த பத்தாமிடத்தைப் பார்க்கும் கிரகம் பாபியான ராகு!

    இதனால்
    பாபியான ராகுவின் பார்வை பெற்றதால் சுபர்களான குரு, சுக்கிரன் ஆகியவை பலமிழந்துவிடும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
    (இன்னும் கூட உக்காந்திருக்குறது இன்னொரு பாபியான கேது)

    குரு, சுக்கிரன் போன்ற சுபர்களின் பார்வை பெறும் ராகு பாபத்தன்மை நீங்கி சுப பலன்களை கொடுக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா!

    (குரு பார்வை கோடி நன்மை என்றபடி குருபார்வை பெறும் கிரகம் தனது தோஷங்களை எல்லாம் இழந்து பூரண நற்பலன் தரும் என்று படித்திருக்கிறேன்)

    ReplyDelete
  42. மேலே சொன்னது போலவே

    சந்திரனும், சனியும் ஒருவருக்கொருவர் ஏழாமிடங்களில் அமர்ந்துகொண்டு லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

    சந்திரன்(சுபர்) -> சனி (பாபி)
    சனி (பாபி) -> சந்திரன்(சுபர்)

    இது போன்ற நேரங்களில் இரண்டில் எது பலம் வாய்ந்த கிரகம் என்று பார்த்து பலவான் எவனோ அவனது பார்வையை மட்டும் ஸ்ட்ராங்க் கன்சிடரேசன் செய்ய வேண்டுமா?

    தகவலுக்கு:
    சுபர்கள் : குரு, சுக்கிரன், புதன்
    பாபர்கள் : சூரியன், அங்காரகன்(செவ்வாய்), சனி, ராகு, கேது

    மத்தியஸ்தர்(நடுநிலைவாதி) : சந்திரன்

    பலத்தைப் பொறுத்து கிரகங்களின் வரிசை (ஏறு வரிசையில்)

    1.புதன் (குறைந்த பலம்) <
    2.அங்காரகன் <
    3.சனி <
    4.குரு <
    5.சுக்கிரன் <
    6.சந்திரன் <
    7.சூரியன் <
    8.ராகு <
    9.கேது

    புதன்< அங்காரகன் < சனி < குரு <
    சுக்கிரன் < சந்திரன் < சூரியன் <
    ராகு < கேது

    ReplyDelete
  43. //சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
    பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
    //

    நல்ல வேளை! ஜஸ்ட்ல மிஸ் ஆச்சு!

    குரு ஒரு ஸ்தானம் தள்ளி(தன் இடத்திலேர்ந்து 5ம் இடம்) பார்த்ததாலே தப்பிச்சேன்!

    ReplyDelete
  44. //சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
    பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
    //

    இதுல பாதிய மட்டும் பார்த்துட்டு யாரோ அரைகுறை ஜோதிடர் எங்க தங்கமணிகிட்டே வத்தி வெச்சிருக்கார் போல!

    விளைவு: எங்கே ஜாதகம் பார்க்க போனாலும் எங்க அம்மணி தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி : எங்க வீட்டுக்காரருக்கு ரெண்டு தார அமைப்பு இருக்கான்னு!

    நான் அங்கயே தலையாலே அடிச்சிப்பேன்! அதை என்கிட்டே கேட்டா நானே சொல்லிடுவேனேன்னு!

    ReplyDelete
  45. ஐயா,
    என் ஜாதகத்தைக் கணிக்க வேண்டும். நீங்கள் எந்த ஜோதிடரை சிபாரிசு செய்கிறீர்க்கள். நீங்கள் கணிக்க இயலாது என்று சொல்லியிருப்பதால் கேட்கிறேன். நன்றி.

    ReplyDelete
  46. //ராபின் ஹூட் said... //

    !????????????????

    மறுபடியுமா!

    ஐயா ராபின் ஹூட்! நீ யாரோ எவரோ? ன்னெல்லாம் தெரியாது!

    நல்லது செய்யுறேன் பேர்வழின்னு பலபேரை வம்புல இழுத்து விடுற ஆளு நீயி!

    இம்புட்டு நாளா இல்லாம திடீர்னு வாத்தியாரோட கிளாஸ்ல எட்டிப் பார்த்திருக்கீக!

    பாவம் வாத்தியார்! தான் உண்டு தன் வகுப்பு உண்டுன்னு பாடம் சொல்லிகிட்டிருக்காரு!

    உட்டுடுய்யா! பாவம் அந்த மனுஷன்!

    ReplyDelete
  47. உள்ளேன் ஐயா..

    ராகு, பத்தாமிடத்தில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான் எனது தலைவிதியான கட்டத்தில்..

    கொடுமை.. கொடுமையாக உள்ளது.

    ReplyDelete
  48. //ராகு, பத்தாமிடத்தில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான் எனது தலைவிதியான கட்டத்தில்..
    //

    பத்தாமிடத்தை யாரு பாக்கிறாருன்னும் பாருங்க!

    சுபர்கள் பார்த்தார்களேயானால் காலை மட்டுமில்லாமல் வாலையும் சுருட்டிக்கொண்டு உக்காருவார் ராகு!

    ReplyDelete
  49. பாடங்களுக்கு நன்றி அய்யா,

    ஒன்றுக்கு மேபட்ட கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்களையும் கூறுங்கள். ஏனென்றால் 10ம் வீடு முக்கியமான வீடு, ஆதலால் அனைவரும் அறிந்து கொள்ள விரும்புவது இயற்கையே.

    ReplyDelete
  50. ///தகவலுக்கு:
    சுபர்கள் : குரு, சுக்கிரன், புதன்
    பாபர்கள் : சூரியன், அங்காரகன்(செவ்வாய்), சனி, ராகு, கேது

    மத்தியஸ்தர்(நடுநிலைவாதி) : சந்திரன்

    பலத்தைப் பொறுத்து கிரகங்களின் வரிசை (ஏறு வரிசையில்)

    1.புதன் (குறைந்த பலம்) <
    2.அங்காரகன் <
    3.சனி <
    4.குரு <
    5.சுக்கிரன் <
    6.சந்திரன் <
    7.சூரியன் <
    8.ராகு <
    9.கேது

    புதன்< அங்காரகன் < சனி < குரு <
    சுக்கிரன் < சந்திரன் < சூரியன் <
    ராகு < கேது////

    Mr. Namakal Sibi...vunga kalaapipu thaanga mudilaya!!! Honors student category vera!!!

    Ok, the information which you gave is new.Thanks for sharing.But....I have read Mercury is Neutral planet, not Moon. I dont know exactly....sir can correct this.

    How the strength of the planet is determined? I thought Saturn has more than Jupiter. I know guru aspect is good. Your explanations are good! Keep the good work.

    -Shankar

    ReplyDelete
  51. Blogger நாமக்கல் சிபி said...

    //Request from Ragu// !?
    ஆஹா! வாத்தியார்கிட்டே பாடம் கேக்க ராகு வெல்லாம் வராரே!



    அப்போ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, கேது எல்லாம் அடுத்து ரிக்வெச்ட் பண்ணுவாங்களா?

    (ரகு! டென்சன் ஆகாதீங்க! சும்மா லுலூங்காட்டி! இந்த கிளாஸ்லே அப்படித்தான் ஜாலியா கலாய்ப்போம்)

    //ரகு

    வன்பகடி சட்டத்தில் புகார் கொடுக்கலாம் என்று பார்க்கிறேன் சீனியர் அண்ணா நாமக்கல் சிபி மீது ....(வன்பகடி = ராகிங் உபயம் : மக்கள் தொலைக்காட்சி

    ReplyDelete
  52. //வன்பகடி = ராகிங் //

    ஆஹா! உங்க உபயத்துலே நான் ஒரு தமிழ் வார்த்தை கத்துகிட்டேன்!

    மத்தபடி நம்ம பகடியெல்லாம் மென் பகடியாத்தான் இருக்கும்!

    வன்பகடியெல்லாம் இல்லீங்கோ!

    :)))))))))))))))

    ReplyDelete
  53. வணக்கம் ஆசிரியரே,

    10 ஆம் வீடு செய்திகள் அருமை. ப‌ல‌ன் க‌ருதாது செய்யும் த‌ங்க‌ள் ப‌ணி நாங்க‌ள் செய்த‌ புண்ணியம். வ‌ண‌ங்குகிறேன்.

    சற்று பாகை சுத்த‌மாக‌ கொடுக்க முயல‌ வேண்டுகிறேன்.

    அன்புட‌ன்,

    செந்தில்முருகன் V

    ReplyDelete
  54. பாடம் அருமை. அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  55. பத்தாம் இடம் பாடம் நன்றாக இருந்தது.

    ஒரு சின்ன சஜஷன் : தலைப்பு பாடத்தை பிரதிபலிக்கும் முகமாக வைத்தால் நன்றாக இருக்கும். ஆறு மாதம் கழித்து உங்களின் வெப் சைட்டில் பத்தாம் இடம் பாடத்தைத் தேடினால் இது போன்ற தலைப்புகள் கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. ஐயா வணக்கம். 10ம் இடம் பற்றிய பாடங்கள் அற்புதமாக உள்ளது. தெளிவாகப் புரிகிறது.

    சூரியனுடைய பார்வை மட்டும் 10ல் உள்ள சந்திரன் பெற்றுள்ளார்.

    ///பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
    பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
    இருப்பார்///

    இதில்
    ///ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
    இருப்பார்///

    இதற்கான விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  58. /////Ragu Sivanmalai said...
    /////நாமக்கல் சிபி said...
    //More than two planets in a house is not desirable//
    ஆமாம்! நம்ம காம்பவுண்ட்லே 10 நம்பர் வீட்டுலே 3 ஆளுக!////
    ஆளாளுக்கு 5 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    தலைவர் (சூரியன்) இருந்தால் 10 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    Request from Ragu
    I want to make a request. Can you please make a blog post about this
    Asthanga Dosham?Will it be applicable for the Mercury Planet Also?
    It should not be within 5 degrees or 10 degrees? Having asthanga dosam
    is equal to Neecham or what? Like these I have many doubts./////

    சூரியனைத் தவிர மற்ற கிரங்களுக்கு 5 பாகைகள் மட்டுமே. அஸ்தமனத்தில் சிக்கிக்
    கொள்ளும் கிரகத்திற்கு வலிமை இருக்காது. கிட்டத்தட்ட நீசனாகிவிட்டால் என்ன
    பலனோ அந்தப் பலன்தான். தீய கிரகங்களும் அஸ்தமனத்தில் மாட்டி, வலிமையை
    இழந்து தீய பலன்களைத் தராமல் போய்விடுவதும் உண்டு. ஆகவே அஸ்தமனத்தில்
    நன்மையும் உண்டு.தீமையும் உண்டு!

    ReplyDelete
  59. /////ஜே கே | J K said...
    //SP.VR. SUBBIAH said...
    /////ஜே கே | J K said...
    என் பெயர் இன்னும் பதிவேட்டில் வரவில்லையே.
    ஏன் ஐயா?.////
    வந்துவிட்டது. ஒருமுறை பார்த்துவிடுங்கள் ஜே.கே!//
    பாத்தாச்சு.
    நன்றிங்க ஐயா./////

    உங்களுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்தவர் பார்த்து விட்டாரா?

    ReplyDelete
  60. /////ஜே கே | J K said...
    //SP.VR. SUBBIAH said...
    /////ஜே கே | J K said...
    படித்துக்கொண்டேன் ஐயா.
    ஆனால் எனக்கு 10-ம் வீடு காலி.////
    பத்தாம் வீட்டுக்காரன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள்!//
    என் லக்கனத்திற்கு 10-ம் இடம் காலி. அது கும்பத்துக்கு உரியது.
    அதன் அதிபதி சனி. சனி 6-ல் அதாவது துலாமில் உள்ளது. எப்படி ஐயா பார்ப்பது?/////

    உங்கள் லக்கினம் ரிஷபம். அதன் அதிபதி சனி துலாம் வீட்டில் உள்ளார்.
    உச்சம் பெற்று உள்ளார். அந்த வீடு 10 வீட்டிற்கு ஒன்பதாம் வீடு.
    அதுவும் நல்லது. உங்களுக்கு அவர் நல்ல வேலை போட்டுத்தருவார்.
    அவர் ரிஷபலக்கினத்திற்கு யோக காரனும் ஆவார். ஆகவே சனி திசை
    மற்றும் அடுத்த கிரகங்களின் திசைகளில் வரும் சனி புத்திகளில் நல்ல
    பலன்கள் நடைபெறும்

    ReplyDelete
  61. /////Geekay said...
    //பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
    இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்//
    200 % true.
    Can you please clarify when it will be up trend and when it will be down trend?//////

    பத்தாம் இடத்திற்கு சாதகமாக உள்ள கிரகங்களின் தசா/புக்திகளில் உச்சிக்குப்போவதும்
    பாதகமாக உள்ள கிரகங்களின் தசா/புக்திகளில் அதற்கு எதிரான பலன்களும் நடைபெறும்!

    ReplyDelete
  62. /////Geekay said...
    //பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
    இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்//
    200 % true.
    Can you please clarify when it will be up trend and when it will be down trend?//////

    பத்தாம் இடத்திற்கு சாதகமாக உள்ள கிரகங்களின் தசா/புக்திகளில் உச்சிக்குப்போவதும்
    பாதகமாக உள்ள கிரகங்களின் தசா/புக்திகளில் அதற்கு எதிரான பலன்களும் நடைபெறும்!

    ReplyDelete
  63. //////ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஆகவே பத்தாம்
    வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
    "பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்//
    அருமையான பதிவு அய்யா//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  64. //////Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆமாம் படிச்சேன். ஆனா எனக்கு தான் என்னமோ சரியா வரலை.
    ஏன்னா அங்க எனக்கு சுக்ரனும் ராகுவும் சேர்ந்து என்னன்னமோ
    பண்ணிட்டு இருக்காங்க. ம்ம்ம் பண்ணட்டும்.
    ஆனா இந்த 10ம் இடம் கொஞ்சம் படிக்க படிக்க தான் புரியுது.//////

    ஆகா படியுங்கள் - புரியும் வரை படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  65. //////hotcat said...
    ////hotcat said...
    me the first...Good explanation.
    -Shankar/////
    எது பட்டுக்கிடப்பான் என்ற சொல்லிற்குக் கொடுத்த விளக்கமா?////
    Yes, I thought "pattu" in the term which usually get referred to the plant or tree which is dying...
    Your explantion is different though...
    -Shankar//////

    பட்டு = Silk cloth இந்த அர்த்தமும் உண்டு சங்கர்!

    ReplyDelete
  66. //////நாமக்கல் சிபி said...
    //ஆளாளுக்கு 5 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்
    தலைவர் (சூரியன்) இருந்தால் 10 டிகிரி தள்ளி உட்காரச்சொல்லுங்கள்//
    நாம சொல்லியா கேக்கப் போறாங்க!
    10 வது இடத்துலே
    கேது - 18"54'
    குரு - 19"11'
    சுக்கிரன் - 26"42' (இவரு மட்டும் தப்பிச்சாரு)
    11 வது இடத்துலே சூரியன் - 34"47'
    புதன் - 36"49
    லக்கினத்துல(கடகம்)
    ராசி நாதன்(சனி) - 94"38'
    செவ்வாய் - 98"0' (செவ்வாய் ஆல்ரெடி நீசம்)/////

    கிரகங்கள் எல்லாம் ஒன்றையொன்று கலாய்த்துக்கொண்டு உள்ளன:-))))

    ReplyDelete
  67. //////நாமக்கல் சிபி said...
    //Request from Ragu// !?
    ஆஹா! வாத்தியார்கிட்டே பாடம் கேக்க ராகு வெல்லாம் வராரே!
    அப்போ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி,
    கேது எல்லாம் அடுத்து ரிக்வெச்ட் பண்ணுவாங்களா?
    (ரகு! டென்சன் ஆகாதீங்க! சும்மா லுலூங்காட்டி! இந்த கிளாஸ்லே
    அப்படித்தான் ஜாலியா கலாய்ப்போம்)/////

    அடுத்து "குரு"சாமி என்று யாராவது வருவார்கள் பாருங்கள்!

    ReplyDelete
  68. /////நாமக்கல் சிபி said...
    //கும்பத்துக்கு உரியது. அதன் அதிபதி சனி. சனி 6-ல் அதாவது துலாமில் உள்ளது//
    ஜே.கே!
    6ம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்வார்கள்!
    மேலும் 8 மற்றும் 12 ஆகியவையும் மறைவு ஸ்தானங்களே!
    சுபர்கள் இவ்விடத்தில் அமர்வது சுப பலன்களைக் குறைத்தும்,
    அசுபர்கள் இவ்விடங்களில் அமர்வது அசுப பலன்களைக் குறைத்தும்
    கொடுப்பதி இயல்பு!/////

    அடடா, என்னே என் பாக்கியம். பாடம் சொல்லிக்கொடுத்ததில் சிபி' சிறப்பாகத் தேறியிருக்கிறார்

    ReplyDelete
  69. //////நாமக்கல் சிபி said...
    //6ம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்வார்கள்!
    மேலும் 8 மற்றும் 12 ஆகியவையும் மறைவு ஸ்தானங்களே!//
    ஏதேனும் தவறு இருப்பின் வாத்தியார் திருத்துவாராக!
    பயணத்தை முடித்து விட்டு திங்களன்று!/////

    முன் பின்னூட்டப் பதிலே இதற்கும் பதில்!

    ReplyDelete
  70. ////நாமக்கல் சிபி said...
    // கேது
    ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
    வேண்டியதாக இருக்கும்.//
    This is 200 % true, I had struggled a lot in my career .
    உண்மைதான்! நானும் அப்படித்தான் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்!//////

    அவதியிலும் இந்த அளவிற்குக் கலாய்ப்புக்கள் என்றால், அவதி இல்லாமல்
    இருந்தால் எங்கள் நிலைமை என்ன ஆகும் சொல்லுங்கள்?:-)))))

    ReplyDelete
  71. //////நாமக்கல் சிபி said...
    ஐயா! ஒரு மிகப் பெரிய சந்தேகம்!
    பத்தாமிடத்தில் கேது, குரு, சுக்கிரன்!
    இந்த பத்தாமிடத்தைப் பார்க்கும் கிரகம் பாபியான ராகு!
    இதனால்
    பாபியான ராகுவின் பார்வை பெற்றதால் சுபர்களான குரு,
    சுக்கிரன் ஆகியவை பலமிழந்துவிடும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
    (இன்னும் கூட உக்காந்திருக்குறது இன்னொரு பாபியான கேது)
    குரு, சுக்கிரன் போன்ற சுபர்களின் பார்வை பெறும் ராகு பாபத்தன்மை
    நீங்கி சுப பலன்களை கொடுக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா!
    (குரு பார்வை கோடி நன்மை என்றபடி குருபார்வை பெறும் கிரகம்
    தனது தோஷங்களை எல்லாம் இழந்து பூரண நற்பலன் தரும் என்று
    படித்திருக்கிறேன்)/////

    கடைசி வரிகள் உண்மை!

    ReplyDelete
  72. /////நாமக்கல் சிபி said...
    மேலே சொன்னது போலவே
    சந்திரனும், சனியும் ஒருவருக்கொருவர் ஏழாமிடங்களில்
    அமர்ந்துகொண்டு லுக் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
    சந்திரன்(சுபர்) -> சனி (பாபி)
    சனி (பாபி) -> சந்திரன்(சுபர்)
    இது போன்ற நேரங்களில் இரண்டில் எது பலம் வாய்ந்த கிரகம்
    என்று பார்த்து பலவான் எவனோ அவனது பார்வையை மட்டும்
    ஸ்ட்ராங்க் கன்சிடரேசன் செய்ய வேண்டுமா?///

    ஆமாம், ஆமாம்! அதே, அதே!

    ReplyDelete
  73. //////நாமக்கல் சிபி said...
    //சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
    பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
    // நல்ல வேளை! ஜஸ்ட்ல மிஸ் ஆச்சு!
    குரு ஒரு ஸ்தானம் தள்ளி(தன் இடத்திலேர்ந்து 5ம் இடம்) பார்த்ததாலே தப்பிச்சேன்!/////

    ஆமாம், இன்னைக்கிருக்கின்ற விலைவாசியில் இரண்டு குடும்பங்கள் என்றால் என்ன ஆவது?

    ReplyDelete
  74. //////நாமக்கல் சிபி said...
    //சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
    பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
    // இதுல பாதிய மட்டும் பார்த்துட்டு யாரோ அரைகுறை ஜோதிடர் எங்க
    தங்கமணிகிட்டே வத்தி வெச்சிருக்கார் போல!
    விளைவு: எங்கே ஜாதகம் பார்க்க போனாலும் எங்க அம்மணி தவறாமல்
    கேட்கும் ஒரு கேள்வி : எங்க வீட்டுக்காரருக்கு ரெண்டு தார அமைப்பு இருக்கான்னு!
    நான் அங்கயே தலையாலே அடிச்சிப்பேன்! அதை என்கிட்டே கேட்டா
    நானே சொல்லிடுவேனேன்னு!/////

    அந்த ஜோதிடரைக் கவனித்து விடுங்கள்:-)))

    ReplyDelete
  75. /////ராபின் ஹூட் said...
    ஐயா,
    என் ஜாதகத்தைக் கணிக்க வேண்டும். நீங்கள் எந்த ஜோதிடரை சிபாரிசு செய்கிறீர்க்கள்.
    நீங்கள் கணிக்க இயலாது என்று சொல்லியிருப்பதால் கேட்கிறேன். நன்றி./////

    ஜாதகத்தைக் கணிப்பதற்கு ஜோதிடர் எதற்கு? சைடு பாரில் எத்தனை சுட்டிகள் உள்ளன!
    நீங்களே கணித்துவிடுங்கள்!

    ReplyDelete
  76. /////நாமக்கல் சிபி said...
    //ராபின் ஹூட் said... //
    !????????????????
    மறுபடியுமா!
    ஐயா ராபின் ஹூட்! நீ யாரோ எவரோ? ன்னெல்லாம் தெரியாது!
    நல்லது செய்யுறேன் பேர்வழின்னு பலபேரை வம்புல இழுத்து விடுற ஆளு நீயி!
    இம்புட்டு நாளா இல்லாம திடீர்னு வாத்தியாரோட கிளாஸ்ல எட்டிப் பார்த்திருக்கீக!
    பாவம் வாத்தியார்! தான் உண்டு தன் வகுப்பு உண்டுன்னு பாடம் சொல்லிகிட்டிருக்காரு!
    உட்டுடுய்யா! பாவம் அந்த மனுஷன்!/////

    அந்த ராபின் ஹூட்டாக இவர் இருக்க வாய்ப்பில்லை!

    ReplyDelete
  77. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    உள்ளேன் ஐயா.
    ராகு, பத்தாமிடத்தில் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான்
    எனது தலைவிதியான கட்டத்தில்..
    கொடுமை.. கொடுமையாக உள்ளது./////

    உங்களுக்குதான் பழநி அப்பன் கூட இருக்கிறாரே!
    காலாட்டிக் கொண்டிருக்கிறவனைப் பற்றிக் கவலை எதற்கு?
    அப்பன் பார்த்துக்கொள்வார்! தைரியமாக இருங்கள்

    ReplyDelete
  78. /////நாமக்கல் சிபி said...
    நாந்தான் 50///

    பாதிப் பின்னூட்டமும் உங்களுடையதாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  79. //////அமர பாரதி said...
    பாடங்களுக்கு நன்றி அய்யா,
    ஒன்றுக்கு மேபட்ட கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்களையும் கூறுங்கள்.
    ஏனென்றால் 10ம் வீடு முக்கியமான வீடு, ஆதலால் அனைவரும் அறிந்து
    கொள்ள விரும்புவது இயற்கையே.////

    அதை விரைவில் எழுதுகிறேன். அது சற்றுப் பெரிய பாடம். 10 ஆம் வீட்டிற்கு மட்டுமல்ல
    எல்லா வீட்டுப் பலன்களுக்கும் அது பயன்படுவதாகும்

    ReplyDelete
  80. /////hotcat said...
    ///தகவலுக்கு:
    சுபர்கள் : குரு, சுக்கிரன், புதன்
    பாபர்கள் : சூரியன், அங்காரகன்(செவ்வாய்), சனி, ராகு, கேது
    மத்தியஸ்தர்(நடுநிலைவாதி) : சந்திரன்
    பலத்தைப் பொறுத்து கிரகங்களின் வரிசை (ஏறு வரிசையில்)
    1.புதன் (குறைந்த பலம்) <
    2.அங்காரகன் <
    3.சனி <
    4.குரு <
    5.சுக்கிரன் <
    6.சந்திரன் <
    7.சூரியன் <
    8.ராகு <
    9.கேது
    புதன்< அங்காரகன் < சனி < குரு <
    சுக்கிரன் < சந்திரன் < சூரியன் <
    ராகு < கேது////
    Mr. Namakal Sibi...vunga kalaapipu thaanga mudilaya!!! Honors student category vera!!!
    Ok, the information which you gave is new.Thanks for sharing.But....
    I have read Mercury is Neutral planet, not Moon. I dont know exactly....
    sir can correct this.////

    புதன் மட்டுமே நியூட்ரல் ப்ளானெட்! சங்கர் நீங்கள் சொல்வதுதான் சரி!

    ReplyDelete
  81. /////senthil said...
    வணக்கம் ஆசிரியரே,
    10 ஆம் வீடு செய்திகள் அருமை. ப‌ல‌ன் க‌ருதாது செய்யும் த‌ங்க‌ள்
    ப‌ணி நாங்க‌ள் செய்த‌ புண்ணியம். வ‌ண‌ங்குகிறேன்.
    சற்று பாகை சுத்த‌மாக‌ கொடுக்க முயல‌ வேண்டுகிறேன்.
    அன்புட‌ன்,
    செந்தில்முருகன் V//////

    நன்றி நண்பரே! எதைப் பாகை சுத்தமாக வேண்டும் என்கிறீர்கள்?

    ReplyDelete
  82. ////Rajagopal said...
    பாடம் அருமை. அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
    அன்புடன்
    இராசகோபால்////

    அடுத்த பாடம் விரைவில்!

    ReplyDelete
  83. //////அமர பாரதி said...
    பத்தாம் இடம் பாடம் நன்றாக இருந்தது.
    ஒரு சின்ன சஜஷன் : தலைப்பு பாடத்தை பிரதிபலிக்கும் முகமாக
    வைத்தால் நன்றாக இருக்கும். ஆறு மாதம் கழித்து உங்களின் வெப்
    சைட்டில் பத்தாம் இடம் பாடத்தைத் தேடினால் இது போன்ற தலைப்புகள்
    கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.///

    நேரம் கிடைக்கும் போது வகைப் படுத்தித் தருகிறேன்.

    ReplyDelete
  84. ///////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம். 10ம் இடம் பற்றிய பாடங்கள் அற்புதமாக உள்ளது. தெளிவாகப் புரிகிறது.
    சூரியனுடைய பார்வை மட்டும் 10ல் உள்ள சந்திரன் பெற்றுள்ளார்.
    ///பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
    பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
    இருப்பார்/// இதில் ///ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
    இருப்பார்/// இதற்கான விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

    மாறுபட்ட சிந்தனை என்பது both positive and negative thinking! என்று பொருள் கொள்ளவும் அன்பரே!

    ReplyDelete
  85. Request from Ragu
    I want to make a request. Can you please make a blog post about this
    Asthanga Dosham?Will it be applicable for the Mercury Planet Also?
    It should not be within 5 degrees or 10 degrees? Having asthanga dosam
    is equal to Neecham or what? Like these I have many doubts./////

    சூரியனைத் தவிர மற்ற கிரங்களுக்கு 5 பாகைகள் மட்டுமே. அஸ்தமனத்தில் சிக்கிக்
    கொள்ளும் கிரகத்திற்கு வலிமை இருக்காது. கிட்டத்தட்ட நீசனாகிவிட்டால் என்ன
    பலனோ அந்தப் பலன்தான். தீய கிரகங்களும் அஸ்தமனத்தில் மாட்டி, வலிமையை
    இழந்து தீய பலன்களைத் தராமல் போய்விடுவதும் உண்டு. ஆகவே அஸ்தமனத்தில்
    நன்மையும் உண்டு.தீமையும் உண்டு!

    ////////// Ragu

    மிக்க நன்றி அய்யா உங்கள் விளக்கத்திற்கு . இன்னும் ஒரு சந்தேகம் .. புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்து அச்தங்க தோஷம் அடைந்து உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள் .அதே சமயம் இந்த கூட்டணி அமைப்பு புதனுடைய ஆட்சி வீடாகிய மிதுனத்திலோ அல்லது கன்னி யிலோ ஏற்பட்டால் புதன் அங்கே ஆட்சி உச்ச வீடு என்பதால் வலிமையுடன் உள்ளது என்று எடுப்பதா அல்லது சூரியனுடன் சேர்ந்து அச்தங்கம் அடைந்து வலிமை இழந்து விட்டது என்று எடுப்பதா . இதுதான் என்னுடைய சந்தேகம் .

    ReplyDelete
  86. பத்துல சூரியனும், குருவும் ஒண்ணா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் சார்?

    ReplyDelete
  87. //உங்களுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்தவர் பார்த்து விட்டாரா?
    //
    அன்னிக்கே பார்த்தாச்சே!

    வாத்தியார் வகுப்புக்கு சிபாரிசு கடிதம் எல்லாம் வேண்டுமா என்ன? ஆர்வமும் அக்கறையும் இருந்தாலே போதுமானது!

    எப்பேர்ப்பட்ட மாணவரையும் இந்த வாத்தியார் தேத்தி விடுவார்!

    ReplyDelete
  88. //பத்துல சூரியனும், குருவும் ஒண்ணா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் சார்?
    //

    பொதுவாக சூரியனும், புதனும் இணைவது புத ஆதித்ய யோகம் என்று சொல்வார்கள்! இதனால் (ஏதேனும் ஒரு துறையில்)நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.

    இந்த ஜோடி 10ம் இடத்தில் இணைவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 10 வது இடம் தொழில் ஸ்தானம் ஆகும்.

    செய்யும்/மேற்கண்டுள்ள தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவராக சிறப்பாக செயல்படுவர். பெரும்பால்ம் அரசு/அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அதிகம்!

    ReplyDelete
  89. //புதன் மட்டுமே நியூட்ரல் ப்ளானெட்! சங்கர் நீங்கள் சொல்வதுதான் சரி!
    //

    திருத்தியமைக்கு நன்றி!

    நான் படித்த நூலில் அவ்வாறு இருந்தது. இன்னும் பல்வேறு நூலகளைபயும் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்கிறேன்!

    ReplyDelete
  90. கிரகங்களின் பலம் வாரியான வரிசை பற்றிய உங்கள் விளக்கத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்!

    இன்னும் பலருக்கும் கிரகங்களின் பார்வை பற்றிய விளக்கமும் தேவைப் படுகிறது என்று நினைக்கிறேன்!

    ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்திலிருந்து இடும் பார்வைகள் பற்றிய விவரங்களை கொடுத்து உதவுங்கள்! (ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள் எனில் அந்த பதிவிற்கான சுட்டியை அவ்வபோது தேவைப் படும் இடங்களில் கொடுக்கலாம்)

    ReplyDelete
  91. //அடடா, என்னே என் பாக்கியம். பாடம் சொல்லிக்கொடுத்ததில் சிபி' சிறப்பாகத் தேறியிருக்கிறார்
    //

    தன்யனானேன்!

    ReplyDelete
  92. //அந்த ராபின் ஹூட்டாக இவர் இருக்க வாய்ப்பில்லை!//

    இவர் அவரேதான் என்று எலிக்குட்டி சோதனை சொல்கிறது!

    உஷார் படுத்துவது என் கடமை!
    பட்டவனுக்குத்தானே தெரியும்! :)

    ராபின் ஹூட்டின் நோக்கம் நல்லதுதான்! ஆனான் வம்பில் மாட்டியவர்கள் கதி?

    ReplyDelete
  93. /////Ragu Sivanmalai said...
    Request from Ragu
    I want to make a request. Can you please make a blog post about this
    Asthanga Dosham?Will it be applicable for the Mercury Planet Also?
    It should not be within 5 degrees or 10 degrees? Having asthanga dosam
    is equal to Neecham or what? Like these I have many doubts./////

    சூரியனைத் தவிர மற்ற கிரங்களுக்கு 5 பாகைகள் மட்டுமே. அஸ்தமனத்தில் சிக்கிக்
    கொள்ளும் கிரகத்திற்கு வலிமை இருக்காது. கிட்டத்தட்ட நீசனாகிவிட்டால் என்ன
    பலனோ அந்தப் பலன்தான். தீய கிரகங்களும் அஸ்தமனத்தில் மாட்டி, வலிமையை
    இழந்து தீய பலன்களைத் தராமல் போய்விடுவதும் உண்டு. ஆகவே அஸ்தமனத்தில்
    நன்மையும் உண்டு.தீமையும் உண்டு!
    ////////// Ragu
    மிக்க நன்றி அய்யா உங்கள் விளக்கத்திற்கு . இன்னும் ஒரு சந்தேகம் .. புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்து அச்தங்க தோஷம் அடைந்து உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள் .அதே சமயம் இந்த கூட்டணி அமைப்பு புதனுடைய ஆட்சி வீடாகிய மிதுனத்திலோ அல்லது கன்னி யிலோ ஏற்பட்டால் புதன் அங்கே ஆட்சி உச்ச வீடு என்பதால் வலிமையுடன் உள்ளது என்று எடுப்பதா அல்லது சூரியனுடன் சேர்ந்து அச்தங்கம் அடைந்து வலிமை இழந்து விட்டது என்று எடுப்பதா . இதுதான் என்னுடைய சந்தேகம் .////

    Fixed rule என்று எதுவும் கிடையாது.புதன் அஸ்தமனமானாலும், தன்னுடைய வீட்டில் ஆதிபத்தியத்துடன் இருந்தால், தன்னுடைய தசாபுத்தியில் நன்மைகளைச் செய்வான்!

    ReplyDelete
  94. ////அது சரி said...
    பத்துல சூரியனும், குருவும் ஒண்ணா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் சார்?////

    ஒன்றாக இருந்தால் நல்லதுதான். ஆனால் பலன் ஜாதகத்திற்கு ஜாதகம் வேறுபடும்
    இருவரும் ஜாதகனின் எந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப்பொறுத்துப் பலன் மாறுபடும்.

    ReplyDelete
  95. /////நாமக்கல் சிபி said...
    //உங்களுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்தவர் பார்த்து விட்டாரா? //
    அன்னிக்கே பார்த்தாச்சே!
    வாத்தியார் வகுப்புக்கு சிபாரிசு கடிதம் எல்லாம் வேண்டுமா என்ன? ஆர்வமும் அக்கறையும் இருந்தாலே போதுமானது!
    எப்பேர்ப்பட்ட மாணவரையும் இந்த வாத்தியார் தேத்தி விடுவார்!/////

    அப்படி (நம்பிக்கை) யென்றால் சரி!

    ReplyDelete
  96. நாமக்கல் சிபி said...
    //பத்துல சூரியனும், குருவும் ஒண்ணா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் சார்?
    //
    பொதுவாக சூரியனும், புதனும் இணைவது புத ஆதித்ய யோகம் என்று சொல்வார்கள்! இதனால் (ஏதேனும் ஒரு துறையில்)நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்.
    இந்த ஜோடி 10ம் இடத்தில் இணைவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 10 வது இடம் தொழில் ஸ்தானம் ஆகும்.
    செய்யும்/மேற்கண்டுள்ள தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவராக சிறப்பாக செயல்படுவர். பெரும்பால்ம் அரசு/அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அதிகம்!///

    சிபியாரே, அவர் கேட்டது வேறு. சூரியனையும், குருவையும் பற்றிக் கேட்டுள்ளார்! நீங்கள் புத ஆதித்ய
    யோகத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
  97. /////நாமக்கல் சிபி said...
    //புதன் மட்டுமே நியூட்ரல் ப்ளானெட்! சங்கர் நீங்கள் சொல்வதுதான் சரி!
    // திருத்தியமைக்கு நன்றி!
    நான் படித்த நூலில் அவ்வாறு இருந்தது. இன்னும் பல்வேறு நூலகளையும் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்கிறேன்!/////

    நன்றி! (ஆராய்கிறேன் என்றமைக்கு)

    ReplyDelete
  98. /////நாமக்கல் சிபி said...
    கிரகங்களின் பலம் வாரியான வரிசை பற்றிய உங்கள் விளக்கத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்!
    இன்னும் பலருக்கும் கிரகங்களின் பார்வை பற்றிய விளக்கமும் தேவைப் படுகிறது என்று நினைக்கிறேன்!
    ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற இடத்திலிருந்து இடும் பார்வைகள் பற்றிய விவரங்களை கொடுத்து உதவுங்கள்! (ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள் எனில் அந்த பதிவிற்கான சுட்டியை அவ்வபோது தேவைப் படும் இடங்களில் கொடுக்கலாம்)/////

    ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும். அதோடு அந்த வீட்டில் இருக்கும் கிரகத்தையும் பார்க்கும்

    செவ்வாய் 4, 7, 8 ஆகிய இடங்களையும்
    குருவிற்கு 5, 7, 9 ஆகிய இடங்களையும்
    சனிக்கு 3, 7, 10 ஆகிய இடங்களையும் பார்க்கும்
    சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் எழாம் இடத்தை மட்டுமே பார்க்கும்!

    ReplyDelete
  99. /////நாமக்கல் சிபி said...
    //அந்த ராபின் ஹூட்டாக இவர் இருக்க வாய்ப்பில்லை!//
    இவர் அவரேதான் என்று எலிக்குட்டி சோதனை சொல்கிறது!
    உஷார் படுத்துவது என் கடமை!
    பட்டவனுக்குத்தானே தெரியும்! :)
    ராபின் ஹூட்டின் நோக்கம் நல்லதுதான்! ஆனான் வம்பில் மாட்டியவர்கள் கதி?////

    எனக்கு மின்னஞ்சலில் விவரம் எழுத வேண்டுகிறேன்!

    ReplyDelete
  100. ////////// Ragu
    மிக்க நன்றி அய்யா உங்கள் விளக்கத்திற்கு . இன்னும் ஒரு சந்தேகம் .. புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்து அச்தங்க தோஷம் அடைந்து உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள் .அதே சமயம் இந்த கூட்டணி அமைப்பு புதனுடைய ஆட்சி வீடாகிய மிதுனத்திலோ அல்லது கன்னி யிலோ ஏற்பட்டால் புதன் அங்கே ஆட்சி உச்ச வீடு என்பதால் வலிமையுடன் உள்ளது என்று எடுப்பதா அல்லது சூரியனுடன் சேர்ந்து அச்தங்கம் அடைந்து வலிமை இழந்து விட்டது என்று எடுப்பதா . இதுதான் என்னுடைய சந்தேகம் .////

    Fixed rule என்று எதுவும் கிடையாது.புதன் அஸ்தமனமானாலும், தன்னுடைய வீட்டில் ஆதிபத்தியத்துடன் இருந்தால், தன்னுடைய தசாபுத்தியில் நன்மைகளைச் செய்வான்!

    //Ragu

    மிக்க நன்றி அய்யா. இந்த சந்தேகத்தை பல பேர் பெற்ற ஜோதிடர்களிடம் கேட்டு உள்ளேன். யாரும் இப்படி பளிச்சென்று ஒரு மிக தெளிவான நறுக்கென்று உள்ள ஓர் பதிலை சொல்லி கேட்டதில்லை. தலை வணங்கி பாராட்டுகிறேன் உங்கள் ஜோதிட புலமை கண்டு. இது ஒரு நடைமுறையில் நடந்து கொண்டுள்ள உண்மை. சரியாக போட்டு தாக்கி விட்டிர்கள்.

    ReplyDelete
  101. //சிபியாரே, அவர் கேட்டது வேறு. சூரியனையும், குருவையும் பற்றிக் கேட்டுள்ளார்! நீங்கள் புத ஆதித்ய
    யோகத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்!//

    அட! ஆமாம்! சரியாகக் கவனிக்கத் தவறி விட்டேன்!

    மன்னிக்கவும் அது சரி!

    ReplyDelete
  102. //
    SP.VR. SUBBIAH said...
    ////அது சரி said...
    பத்துல சூரியனும், குருவும் ஒண்ணா உக்காந்திருந்தா என்ன அர்த்தம் சார்?////

    ஒன்றாக இருந்தால் நல்லதுதான். ஆனால் பலன் ஜாதகத்திற்கு ஜாதகம் வேறுபடும்
    இருவரும் ஜாதகனின் எந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப்பொறுத்துப் பலன் மாறுபடும்.

    //

    பதிலுரைக்கு நன்றி ஐயா..

    இது வரை நான் யாரிடமும் ஜாதகம் பார்த்ததில்லை என்பதால் சூரியனும், குருவும் என் ஜாதகத்தில் எந்த வீட்டை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை..

    இப்பொழுது தான் உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறேன்..ஆர்வ‌த்தை தூண்டுவ‌தாக‌ உள்ள‌து.

    மிக்க‌ ந‌ன்றி!

    ReplyDelete
  103. //
    நாமக்கல் சிபி said...
    //சிபியாரே, அவர் கேட்டது வேறு. சூரியனையும், குருவையும் பற்றிக் கேட்டுள்ளார்! நீங்கள் புத ஆதித்ய
    யோகத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்!//

    அட! ஆமாம்! சரியாகக் கவனிக்கத் தவறி விட்டேன்!

    மன்னிக்கவும் அது சரி!

    //

    அடடா, உங்கள் ஆர்வத்துடன் உதவும் உள்ளத்திற்கு நன்றி சிபி அவர்களே...இதுக்கு போயி எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு!

    ReplyDelete
  104. //இது வரை நான் யாரிடமும் ஜாதகம் பார்த்ததில்லை என்பதால் சூரியனும், குருவும் என் ஜாதகத்தில் எந்த வீட்டை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை..
    //

    அது சரி! உங்கள் ஜாதகத்தை அல்லது பிறந்த தேதி, துல்லியமான நேரம், ஊர் போன்றவற்றை எனக்கு அனுப்புங்கள். எப்படி பார்ப்பது என்று சேர்ந்து கற்றுக் கொள்ளலாம்! நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்!

    namakkalshibi@gmail.com

    ReplyDelete
  105. ஐயா,

    How to determine jathakar will do Business or Emplyoee.

    ReplyDelete
  106. /////singaiSuri said...
    ஐயா,
    How to determine jathakar will do Business or Emplyoee.////

    பழைய பாடங்களைப் படியுங்கள். அதில் விவரம் உள்ளது!

    ReplyDelete
  107. Vanakam sir,
    I was just reading the lesson about 10th house. In ur writings, it says if guru and budhan in the 10th house, the person will not have child and happiness? For me, meena lagna, I have guru in my tenth house with budhan and sun, and parals is 31 and even individuals parals is 7 and 5 so will there be exception sir? Also, In navamsa the guru is with sukran in dhanusu rasi?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  108. /////Thanuja said...
    Vanakam sir,
    I was just reading the lesson about 10th house. In ur writings, it says if guru and budhan in the 10th house, the person will not have child and happiness? For me, meena lagna, I have guru in my tenth house with budhan and sun, and parals is 31 and even individuals parals is 7 and 5 so will there be exception sir? Also, In navamsa the guru is with sukran in dhanusu rasi?
    Thanks
    Thanuja////

    விதிகள் பல உள்ளன. விதிவிலக்குகளும் பல உள்ளன. ஒன்றை வைத்துக் குழம்பிக்கொள்ளாதீர்கள். மற்ற வழிமுறைகளையும் பாருங்கள்!

    ReplyDelete
  109. Respected Sir,
    i read the lesson about 10th house.i have doubt sir. i read 4 points to get benefit about 10th house.

    1.The 10 house owner(lord)
    2.The planet placed in the 10th house.
    3.Which planet is seeing the 10th house.
    4.Which planet is seeing the 10th house owner(lord).

    Mostly all persons doing job.But all persons do not have the 10th house lord dasha or sub period. Then how sir,they are working?
    (Note:sir please don't laugh)

    Thanking you,

    With Regards,
    Vanathi.

    ReplyDelete
  110. //////Vanathi said...
    Respected Sir,
    i read the lesson about 10th house.i have doubt sir. i read 4 points to get benefit about 10th house.
    1.The 10 house owner(lord)
    2.The planet placed in the 10th house.
    3.Which planet is seeing the 10th house.
    4.Which planet is seeing the 10th house owner(lord).
    Mostly all persons doing job.But all persons do not have the 10th house lord dasha or sub period. Then how sir,they are working?
    (Note:sir please don't laugh)
    Thanking you,
    With Regards,
    Vanathi.//////
    கர்மகாரகன் சனி அனைவருக்கும் அவர்களுடைய ஜீவனத்திற்காக ஒரு வேலையை உண்டாக்கிக் கொடுப்பான்.

    தினமும் 12 மணி நேரம் கூலிக்காக மண் வெட்டுபவனும் இருக்கிறான். பங்குச்சந்தையில் ஒரு மணி நேரத்தில் லட்சக் கணக்கில் சம்பாதிப்பவனும் இருக்கிறான். ஜாதகம் அங்கேதான் வேறுபடும்!
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  111. ஐயா வணக்கம்
    பட்டுக்கிடப்பான் என்றால் கர்மகாரன் சனீஸ்வரபகவான் தான் என்பதை மனதில் பதிய வைத்ததற்கு நன்றி ஐயா !

    ReplyDelete
  112. ஐயா என் ஜாதகத்தில் பத்தில் சனி பகவான் உள்ளார். என் நிலை என்ன?
    எனக்கு சொல்லுங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com