மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.10.08

வகுப்பறையின் இருநூறாவது பதிவு இது!

14.01.2007 பொங்கல் நன்நாளன்று இந்த வகுப்பறை துவங்கப்பெற்றது. இன்றுடன்
சுமார் 21 மாத காலங்களில் 200 பதிவுகளை இதில் எழுதியிருக்கிறேன்.
பெரும்பாலான பதிவுகள் நீளமான பதிவுகள்.

இந்த வகுப்பறையின் வெற்றிகரமான போக்கிற்கு வாசகர்களாகிய உங்களுடைய
அன்பும், ஆதரவும்தான் முக்கிய காரணம்.

உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
====================================================================
இன்றைய பதிவில் 33 பிரபலங்களின் பிறப்பு விவரங்களைக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய சேகரிப்புக்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவைகள் அவைகள்.
ஒவ்வொரு பிரபலத்தின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய மூன்றும்
உள்ளன.

இம்மூன்றையும், அதுவும் இத்தனை பேர்களுக்குக் கிடைக்கப்பேறுவது அரிதான
விஷயம். அதை உணரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த விவரங்களை வைத்து, அவர்களுடைய ஜாதகத்தை நீங்கள் நொடியில்
பெறலாம். சைடுபரில் உள்ள planetarypositions.com இணைய தளத்தின் சுட்டி
உங்களுக்கு உதவும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடம் படிப்பவர்களுக்கு, இதுவரை எழுதிய பதிவுகளில் உள்ள ஜோதிட
விதிகளுக்கும், இனி எழுதப்போகும் பதிவுகளில் உள்ள ஜோதிட விதிகளையும்
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த ஜாதகங்கள் பேருதவியாக இருக்கும்.

உதாரணத்திற்கு, திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஜாதகத்தைப் பார்த்தீர்கள்
என்றால் அதில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது தெரியும்.
அதுதான் அவருடைய உயர்விற்குக் காரணம்.

அதுபோல என்.டி. ராமராவ் அவர்களின் ஜாதகத்ததப் பார்த்தீர்கள் என்றால், துலா
லக்கினக்காரரான அவருடைய ஜாதகத்தில் லக்கினகாரகன் சுக்கிரன் ஏழாம் வீட்டில்
இருந்து லக்கினத்தைப்பார்ப்பது தெரியும், அந்த நிலைப்பாடும், பார்வையும்தான்,
அவருக்கு ஒரு அழகான தோற்றத்தையும், புகழையும் கொடுத்து, அவரை மக்கள்
மனதிலே ராமனாகவும், கிருஷ்ணனாகவும் நடிக்கவும் வைத்து, இருக்கவும்
வைத்தது. அவர் போடாத புராண வேடங்களா?

இப்படி ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

ஆகவே இந்த ஜாதகக் குறிப்புக்களின் மேன்மையை உணர்ந்து பத்திரப்படுத்தி
வையுங்கள். உங்களுக்குப் பின்னால் உதவும்.

அவர்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வரும் (அடிப்படைப் பாடங்கள் முடிந்தபிறகு!)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்
பிறந்த தேதி: 26 September 1932
பிறந்த நேரம்: 21.06 Hours
பிறந்த இடம்: 32 N 35 73 E 47
2
இசைக் கலைஞர் எம்.எஸ்.திருமதி சுப்புலெட்சுமி.
பிறந்த தேதி: 16 September 1916
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
3
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
பிறந்த தேதி: 7th May 1861
பிறந்த நேரம்: 02.45 Hours
பிறந்த இடம்: 22 N 82 88 E 20
4
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி
பிறந்த தேதி: 25 December 1924
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 24 N 54 74 E 55
5
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
பிறந்த தேதி: 19 November 1917
பிறந்த நேரம்: 23.13 Hours
பிறந்த இடம்: 25 N 27 81 E 51
6
அரசியல் தலைவி திருமதி சோனியா காந்தி
பிறந்த தேதி: 09 December 1946
பிறந்த நேரம்: 21.30 Hours
பிறந்த இடம்: 45 N 30 11 E 33
7
விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த தேதி: 24 April 1973
பிறந்த நேரம்: 18.20 Hours
பிறந்த இடம்: 18 N 58 72 E 50
8
தேசத் தந்தை மகாத்மா காந்தி
பிறந்த தேதி: 2 october 1869
பிறந்த நேரம்: 07.45 Hours
பிறந்த இடம்: 21 N 37 69 E 49
9
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு
பிறந்த தேதி: 14 November 1889
பிறந்த நேரம்: 23.03 Hours
பிறந்த இடம்: 25 N 25 82 E 00
10
அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி
பிறந்த தேதி: 08 November 1927
பிறந்த நேரம்: 09.15 Hours
பிறந்த இடம்: 25 N 24 68 E 22
11
சுவாமி விவேகானந்தா
பிறந்த தேதி: 12 January 1863
பிறந்த நேரம்: 06.33 Hours
பிறந்த இடம்: 22 N 40 88 E 30
12
விளையாட்டு வீரர் ராகுல் டிராவிட்
பிறந்த தேதி: 11 January 1973
பிறந்த நேரம்: 11.00 Hours
பிறந்த இடம்: 22 N 42 75 E 54
13
விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்
பிறந்த தேதி: 10 July 1949
பிறந்த நேரம்: 20.42 Hours
பிறந்த இடம்: 18 N 56 72 E 51
14
விளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக்
பிறந்த தேதி: 20 October 1978
பிறந்த நேரம்: 08.00 Hours
பிறந்த இடம்: 28 N 39 77 E 13
15
திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்
பிறந்த தேதி: 11 October 1942
பிறந்த நேரம்: 15.00 Hours
பிறந்த இடம்: 25 N 28 81 E 52
16
தொழிலதிபர் திருபாய் அம்பானி
பிறந்த தேதி: 28 December 1932
பிறந்த நேரம்: 06.37 Hours
பிறந்த இடம்: 28 N 42 77 E 11
17
திரைப்பட நடிகர் ராஜ் கபூர்
பிறந்த தேதி: 14 December 1924
பிறந்த நேரம்: 10.00 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
18
திரைப்பட நடிகர் திலீப் குமார்
பிறந்த தேதி: 11 December 1922
பிறந்த நேரம்: 11.15 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
19
திரைப்பட நடிகர் தேவானந்த்
பிறந்த தேதி: 26 September 1923
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 30 N 23 76 E 26
20
திரைப்பட நடிகர் தர்மேந்திரா
பிறந்த தேதி: 08 December 1935
பிறந்த நேரம்: 06.00 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 21
21
திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா
பிறந்த தேதி: 29 December 1942
பிறந்த நேரம்: 17.45 Hours
பிறந்த இடம்: 31 N 35 74 E 57
22
திரைப்பட நடிகர் சாரூக்கான்
பிறந்த தேதி: 02 November 1965
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 28 N 38 77 E 17
23
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த தேதி: 12 December 1950
பிறந்த நேரம்: 11.50 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 30
24
திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ்
பிறந்த தேதி: 20 September 1924
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
25
திரைப்பட நடிகர்.என்.டி.ராமராவ்
பிறந்த தேதி: 28 May 1923
பிறந்த நேரம்: 16.43 Hours
பிறந்த இடம்: 10 N 25 81 E 00
26
அரசியல் தலைவி செல்வி.ஜெயலலிதா
பிறந்த தேதி: 24 February 1948
பிறந்த நேரம்: 14.34 Hours
பிறந்த இடம்: 10 N 46 76 E 42
27
திரைப்பட நடிகை அஷ்வர்யா ராய்
பிறந்த தேதி: 01 November 1973
பிறந்த நேரம்: 04.30 Hours
பிறந்த இடம்: 12 N 55 74 E 07
28
திரைப்பட நடிகை சுஷ்மிதா சென்
பிறந்த தேதி: 19 November 1975
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
29
முன்னாள் ஜனாதிபதி (Dr) ராதாகிருஷ்ணன்
பிறந்த தேதி: 6 September 1888
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
30
Great Astrologer நீலகண்டசர்மா (கேரளா)
பிறந்த தேதி: 18 June 1858
பிறந்த நேரம்: 08.30 Hours
பிறந்த இடம்: 10 N 31 76 E 13
31
விளையாட்டு வீரர் சவ்ரவ்கங்குலி
பிறந்த தேதி: 08 July 1972
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 23
32
விளையாட்டு வீரர் அனில்கும்ப்ளே
பிறந்த தேதி: 17 October 1970
பிறந்த நேரம்: 09.40 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 35
33
கலைஞர்.மு.கருணாநிதி
பிறந்த தேதி: 03 June 1924
பிறந்த நேரம்: 12.00 Hours
பிறந்த இடம்: 10 N 40 79 E 25

+++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

69 comments:

  1. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இன்னொரு பிரபலத்தை விட்டு விட்டீர்கள்!

    நாமக்கல் சிபி
    தேதி: 19/05/1976
    நேரம்: காலை 10.05 AM
    இடம் : 11.23 N / 77.56 E

    :))

    ReplyDelete
  3. அனைத்து பிரபலங்களின் குறிப்புகளும் எங்களுடைய பயிற்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா!

    ஒரு நூறு, இரு நூறு ஆனதுவே!
    இரு நூறு, பெரு நூறு ஆகிடவே!

    முன் ஊறு களைய ஒரு முன்னூறும்
    நான் ஊறிப் படிக்க ஒரு நானூறும்
    ஐயம் அகற்றிட ஓர் ஐந்நூறும்
    கோள் அறுத்திட ஓர் அறுநூறும்
    எழு நூறாய் எழுகவே!
    பல நூறாய் பெருகவே!

    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  5. //முன் ஊறு களைய ஒரு முன்னூறும்
    நான் ஊறிப் படிக்க ஒரு நானூறும்
    ஐயம் அகற்றிட ஓர் ஐந்நூறும்
    கோள் அறுத்திட ஓர் அறுநூறும்
    எழு நூறாய் எழுகவே!
    பல நூறாய் பெருகவே!//

    கே.ஆர்.எஸ்னா சும்மாவா!

    வார்த்தைகளாலேயே சும்மா சிலம்பு சுத்துவார்!

    ReplyDelete
  6. Great work
    Vathiyarayya !!!
    Valthukiromaiyya !!!
    Valarattumaiyaa menmelum !!!

    ReplyDelete
  7. இரு100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ! அது பதிவுக்கு !

    அடுத்து வருகைக்கு,

    "உள்ளேன் ஐயா"

    ReplyDelete
  8. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    GK BLR.

    ReplyDelete
  9. My Hearty Congratulations for your 200th post. Thanks for all your writing and I pray God for all his blessings to keep you active and strong.

    -Shankar

    ReplyDelete
  10. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    20000வது பதிவய் நோக்கி...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஆசானே வாழ்த்துக்கள்!
    இணையம் உள்ள மட்டும் உங்கள் வகுப்பறை தொடர்ந்து நடக்க வாழ்த்துகிறோம்.
    அடடா ! இவ்வளவு தரவுகளை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  12. உள்ளேன் ஐயா.

    200க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான புகைப்படம்! நீங்கள் சோதிடத்தில் பரந்த இனிய நீர் நிறைந்த‌ சாகரம். நாங்கள் அதில் கையளவு நீரை கூட பருக முடியாமல் திணறுபவர்கள்...... புகைப்படமே பாடம் சொல்கிறது!

    ReplyDelete
  14. /////நாமக்கல் சிபி said...
    200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!////

    நன்றி சிபியாரே!

    ReplyDelete
  15. நாமக்கல் சிபி said...
    இன்னொரு பிரபலத்தை விட்டு விட்டீர்கள்!
    நாமக்கல் சிபி
    தேதி: 19/05/1976
    நேரம்: காலை 10.05 AM
    இடம் : 11.23 N / 77.56 E :))//////

    நீங்களும், கோவியாரும் வலை உலகப் பிரபலங்கள்; மறுப்பதற்கில்லை!

    ReplyDelete
  16. /////நாமக்கல் சிபி said...
    அனைத்து பிரபலங்களின் குறிப்புகளும் எங்களுடைய பயிற்சிக்கு பேருதவியாக
    இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!/////

    அதற்காகத்தான் கொடுத்துள்ளேன்!

    ReplyDelete
  17. /////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா!

    ஒரு நூறு, இரு நூறு ஆனதுவே!
    இரு நூறு, பெரு நூறு ஆகிடவே!

    முன் ஊறு களைய ஒரு முன்னூறும்
    நான் ஊறிப் படிக்க ஒரு நானூறும்
    ஐயம் அகற்றிட ஓர் ஐந்நூறும்
    கோள் அறுத்திட ஓர் அறுநூறும்
    எழு நூறாய் எழுகவே!
    பல நூறாய் பெருகவே!
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!////

    உறுதுணையாய் நீர் வந்தால் - பல
    நூறு பதிந்திடுவேன் மகிழ்ந்து!

    ReplyDelete
  18. /////நாமக்கல் சிபி said...
    //முன் ஊறு களைய ஒரு முன்னூறும்
    நான் ஊறிப் படிக்க ஒரு நானூறும்
    ஐயம் அகற்றிட ஓர் ஐந்நூறும்
    கோள் அறுத்திட ஓர் அறுநூறும்
    எழு நூறாய் எழுகவே!
    பல நூறாய் பெருகவே!//
    கே.ஆர்.எஸ்னா சும்மாவா!
    வார்த்தைகளாலேயே சும்மா சிலம்பு சுத்துவார்!////

    மாதவிப்பந்தல் போடுகின்ற மகராசன்
    மனதுவைத்தால் நடக்காதது எதுராசா?

    ReplyDelete
  19. /////Ragu Sivanmalai said...
    Great work
    Vathiyarayya !!!
    Valthukiromaiyya !!!
    Valarattumaiyaa menmelum !!!////

    நன்றி சிவன்மலையாரே1

    ReplyDelete
  20. /////கோவி.கண்ணன் said...
    இரு100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ! அது பதிவுக்கு !
    அடுத்து வருகைக்கு,
    "உள்ளேன் ஐயா"////

    சிறப்பு மாணவரில் ஒருவர் தன் வயதைச் சொல்லிவிட்டார்
    அவருக்கு நீங்கள் இளவலா மூத்தவரா?

    ReplyDelete
  21. /////Geekay said...
    200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
    GK BLR./////

    நன்றி ஜீகே!

    ReplyDelete
  22. /////hotcat said...
    My Hearty Congratulations for your 200th post.
    Thanks for all your writing and I pray God for all his blessings
    to keep you active and strong.
    -Shankar/////

    உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி சங்கர்!

    ReplyDelete
  23. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
    20000வது பதிவை நோக்கி...//////

    அம்மாடி..அவ்வளவு பதிவுகளா? 2,000 வரைக்கும் என்றால் சரியாக இருக்கும்.
    நீங்கள் சொல்லும் எண்ணிக்கை சாத்தியமில்லை.
    அந்த 2,000மும் மலைமேல் இருப்பவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும்!:-)))

    ReplyDelete
  24. /////அணுயோகி said...
    வாழ்த்துக்கள் ஆசானே வாழ்த்துக்கள்!
    இணையம் உள்ள மட்டும் உங்கள் வகுப்பறை தொடர்ந்து நடக்க வாழ்த்துகிறோம்.
    அடடா ! இவ்வளவு தரவுகளை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி../////

    எல்லாம் உங்களைப்போன்ற இளைஞர்கள் பயன்பெறத்தான்!

    ReplyDelete
  25. /////ஜே கே | J K said...
    உள்ளேன் ஐயா.
    200க்கு வாழ்த்துக்கள்////

    நன்றி ஜேக்கே!

    ReplyDelete
  26. ////அணுயோகி said...
    அருமையான புகைப்படம்! நீங்கள் சோதிடத்தில் பரந்த இனிய நீர்
    நிறைந்த‌ சாகரம். நாங்கள் அதில் கையளவு நீரை கூட பருக முடியாமல்
    திணறுபவர்கள்...... புகைப்படமே பாடம் சொல்கிறது!/////

    நானும் மாணவன்தான். நான் கற்றதும் கை மண் அளவுதான்!

    ReplyDelete
  27. வாழ்த்த வயதில்லை. அதனால் மீண்டும் வணங்கி செல்கின்றேன் :)

    ReplyDelete
  28. //சிறப்பு மாணவரில் ஒருவர் தன் வயதைச் சொல்லிவிட்டார்
    அவருக்கு நீங்கள் இளவலா மூத்தவரா?//

    அவரை விட நான் 15 வருடம் இளையவன்!

    ReplyDelete
  29. சென்ஷி said...
    வாழ்த்த வயதில்லை. அதனால் மீண்டும் வணங்கி செல்கின்றேன் :)////

    நன்றி சென்ஷி!

    ReplyDelete
  30. /////நாமக்கல் சிபி said...
    //சிறப்பு மாணவரில் ஒருவர் தன் வயதைச் சொல்லிவிட்டார்
    அவருக்கு நீங்கள் இளவலா மூத்தவரா?//
    அவரை விட நான் 15 வருடம் இளையவன்!/////

    நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவரின் தோற்றத்தைவைத்துப்பார்த்தால் 16 வயதினிலே கமல் போலவும்
    நடவடிக்கைகளை (பதிவுகளை) வைத்துப்பார்த்தால் எம்.ஆர் ராதா போலவும் தோற்றமளிக்கிறார்.
    ஆனால் எனக்கும் தளபதி விஜய்க்கும் ஒரே வயது என்கிறார். இதில் எதை நம்புவது?
    சற்றுப் பொருங்கள் அவர் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    ReplyDelete
  31. //சற்றுப் பொருங்கள்//

    அவர் வருவதற்காக நான் ஏன் பொரும வேண்டும்?

    ReplyDelete
  32. வாத்தியாரே..

    200-வது பதிவா.. அதற்குள்ளாகவா..

    வாழ்த்துகள்.. வாழ்த்துக்கள். வாழ்த்துக்ககள்..

    அப்பன் முருகன் அருளால் நீண்ட ஆயுளையும், பெரும் புகழையும் பெற விழைகிறேன்..

    ReplyDelete
  33. //நாமக்கல் சிபி said...
    இன்னொரு பிரபலத்தை விட்டு விட்டீர்கள்!
    நாமக்கல் சிபி
    தேதி: 19/05/1976
    நேரம்: காலை 10.05 AM
    இடம் : 11.23 N / 77.56 E:))//

    தம்பீபீபீ..

    இது ரொம்ப ஓவரு.. சொல்லிப்புட்டேன்..

    'மார்னிங் ஷோ' போடும் போதுதான் பொறந்தியா.. அப்ப சரி..

    ReplyDelete
  34. ///நாமக்கல் சிபி said...
    //சிறப்பு மாணவரில் ஒருவர் தன் வயதைச் சொல்லிவிட்டார். அவருக்கு நீங்கள் இளவலா மூத்தவரா?//
    அவரை விட நான் 15 வருடம் இளையவன்!///

    இதுதான் சாக்குன்னு வாத்தியார் வயசைக் குறைச்சுத் தாக்குறியா.. மவனே..

    உன்னைவிட 30 வயசு கூடவாக்கும் எங்க வாத்தியாருக்கு..

    வாத்தியாரே கரெக்ட்தானே..

    ReplyDelete
  35. ///நாமக்கல் சிபி said...
    //சற்றுப் பொருங்கள்//
    அவர் வருவதற்காக நான் ஏன் பொரும வேண்டும்?///

    கொழுப்பு கூடிப் போச்சுன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  36. //
    இது ரொம்ப ஓவரு.. சொல்லிப்புட்டேன்..//

    ஒரே பந்திலேயே ஓவரா? என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  37. //கொழுப்பு கூடிப் போச்சுன்னு நினைக்கிறேன்..//

    பச்சைக் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    அரிசி, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனி ஆகியவறைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

    கோதுமை மற்றும் கேது பகவானுக்குரிய தானியம் முதலானவற்றை சேர்த்துக் கொள்ளலாம்!

    தினமும் காலை அல்லது மாலை 20 நிமிடம் உடற்பயிற்சிக்கென்று ஒதுக்கிக் கொள்ளுங்கள்!

    பிறகென்ன! கூடிய கொழுப்பெல்லாம் கோவிந்தாதான்! உடம்பு ட்ரிம்மாகிவிடும்!

    ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் இருக்கிற "கொள்ளு" கொழுத்தவனுக்கென்றே மூதாதையார்களால் சுட்டிக் காட்டப் பட்டது!

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

    தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்....

    இதுல உங்பேரு இடம்பெருளியே...??

    ReplyDelete
  39. ///////நாமக்கல் சிபி said...
    //சற்றுப் பொருங்கள்//
    அவர் வருவதற்காக நான் ஏன் பொரும வேண்டும்?////

    நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டாம்! மற்றபடி எப்படி இருந்தாலும் சரி!:-)))

    ReplyDelete
  40. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    200-வது பதிவா.. அதற்குள்ளாகவா..
    வாழ்த்துகள்.. வாழ்த்துக்கள். வாழ்த்துக்ககள்..
    அப்பன் முருகன் அருளால் நீண்ட ஆயுளையும், பெரும் புகழையும் பெற விழைகிறேன்..//////

    எல்லாம் பழநி அப்பன் அருள்; அதோடு உங்களைப்போன்ற உண்மை நண்பர்களின் அன்பு!

    ReplyDelete
  41. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நாமக்கல் சிபி said...
    இன்னொரு பிரபலத்தை விட்டு விட்டீர்கள்!
    நாமக்கல் சிபி
    தேதி: 19/05/1976
    நேரம்: காலை 10.05 AM
    இடம் : 11.23 N / 77.56 E:))//
    தம்பீபீபீ..
    இது ரொம்ப ஓவரு.. சொல்லிப்புட்டேன்..
    'மார்னிங் ஷோ' போடும் போதுதான் பொறந்தியா.. அப்ப சரி../////

    நாமக்கல்லில் பிறந்தவர். அவர் பிறந்த காலத்தில் நாமக்கல்லில் மார்னிங் ஷோவெல்லாம் கிடையாது:-)))

    ReplyDelete
  42. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ///நாமக்கல் சிபி said...
    //சிறப்பு மாணவரில் ஒருவர் தன் வயதைச் சொல்லிவிட்டார். அவருக்கு நீங்கள் இளவலா மூத்தவரா?//
    அவரை விட நான் 15 வருடம் இளையவன்!///
    இதுதான் சாக்குன்னு வாத்தியார் வயசைக் குறைச்சுத் தாக்குறியா.. மவனே..
    உன்னைவிட 30 வயசு கூடவாக்கும் எங்க வாத்தியாருக்கு..
    வாத்தியாரே கரெக்ட்தானே..//////

    அவர் சொல்வது அந்த சிங்கைக்காரரை!

    ReplyDelete
  43. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ///நாமக்கல் சிபி said...
    //சற்றுப் பொருங்கள்//
    அவர் வருவதற்காக நான் ஏன் பொரும வேண்டும்?///
    கொழுப்பு கூடிப் போச்சுன்னு நினைக்கிறேன்../////

    கூடினால் கூடிவிட்டுப்போகிறது. நம் வகுப்பு மாணவர்.நன்றாக இருக்கட்டும் தமிழரே!

    ReplyDelete
  44. //////நாமக்கல் சிபி said...
    // இது ரொம்ப ஓவரு.. சொல்லிப்புட்டேன்..//
    ஒரே பந்திலேயே ஓவரா? என்ன கொடுமை சார் இது?/////

    இது அந்த ஓவர் இல்லை! அதிகம் என்று பொருள் கொள்ளவும்!

    ReplyDelete
  45. /////நாமக்கல் சிபி said...
    //கொழுப்பு கூடிப் போச்சுன்னு நினைக்கிறேன்..//
    பச்சைக் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்!
    அரிசி, எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனி ஆகியவறைக் குறைத்துக் கொள்ளுங்கள்!
    கோதுமை மற்றும் கேது பகவானுக்குரிய தானியம் முதலானவற்றை சேர்த்துக் கொள்ளலாம்!
    தினமும் காலை அல்லது மாலை 20 நிமிடம் உடற்பயிற்சிக்கென்று ஒதுக்கிக் கொள்ளுங்கள்!
    பிறகென்ன! கூடிய கொழுப்பெல்லாம் கோவிந்தாதான்! உடம்பு ட்ரிம்மாகிவிடும்!///////

    என்ன டிரிம்மாக இருந்தாலும், போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிட்டால் உடம்பு கூட வராது!

    ReplyDelete
  46. /////மதி said...
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....
    தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்....
    இதுல உங்பேரு இடம் பெறவில்லையே...??////

    நான் எளியவன். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாம் பிரபலங்கள்!

    ReplyDelete
  47. இனிய வாழ்த்து(க்)கள் வாத்தியார் ஐயா.

    200 இல் பாதிக்கும் மேல் தவறவிட்டிருப்பேன்(-:
    இனிமேலாவது வகுப்புக்கு ஒழுங்காவரணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஐயா.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!(200)

    ReplyDelete
  49. /////துளசி கோபால் said...
    இனிய வாழ்த்து(க்)கள் வாத்தியார் ஐயா.
    200 இல் பாதிக்கும் மேல் தவறவிட்டிருப்பேன்(-:
    இனிமேலாவது வகுப்புக்கு ஒழுங்காவரணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஐயா.////

    வாங்க டீச்சர்! நீங்க உங்க வகுப்பையும் பார்த்துக்கிட்டு அடுத்த வகுப்பிலேயும் வந்து படிக்கிறதுன்னா சிரமம்தான்.
    டைம் கிடைக்கிறச்சே படிங்க!

    ReplyDelete
  50. புரட்சித் தமிழன் said...
    வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!////

    இரண்டு முறை சொன்னாலே 200 முறை சொன்னமாதிரிதான்
    நன்றி தமிழரே!

    ReplyDelete
  51. ////சிவமுருகன் said...
    ஐயா,
    வாழ்த்துக்கள்!////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் thamilbest இணைத்துள்ளேன்.

    ReplyDelete
  53. உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!
    உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!

    (அப்பாடா 200 கிளாஸுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டாச்சு)

    நன்றி : ஐடியா உபயம் - புரட்சித் தமிழன்!

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. >>நான் எளியவன். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாம் பிரபலங்கள்!<<

    என்ன ஒரு தன்னடக்கம்...மெய் சிலிர்க்குது போங்க....

    இந்தியாவின் time tone +5.30 and WEST OF GMT என்பது சரியா...?

    நன்றி.

    ReplyDelete
  57. /////Prabhu said...
    Vazthukal ayya..////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  58. /////Prabhu said...
    Vazthukal ayya..////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  59. ////astro said...
    வாழ்த்துக்கள் thamilbest இணைத்துள்ளேன்.///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  60. //////நாமக்கல் சிபி said...
    உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!
    (அப்பாடா 200 கிளாஸுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டாச்சு)
    நன்றி : ஐடியா உபயம் - புரட்சித் தமிழன்!////

    அவருக்குப் பதிலைப் பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன் - அதைப் படிக்கவில்லையா நீங்கள்?
    உங்களுக்கும், சிங்கைக்காரருக்கும் வருகைப்பதிவேடு கிடையாது.
    நீங்கள் இருவரும் சிறப்பு மாணவர்கள் லிஸ்ட்டில். மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete
  61. /////மதி said...
    >>நான் எளியவன். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாம் பிரபலங்கள்!<<
    என்ன ஒரு தன்னடக்கம்...மெய் சிலிர்க்குது போங்க....///
    இதில் சிலிப்படைவதற்கு ஒன்றும் இல்லை. உண்மை அது!

    இந்தியாவின் time tone +5.30 and WEST OF GMT என்பது சரியா...?///

    இல்லை க்ரீவிச்சின் கிழக்குப் பகுதியில் நம் நாடு உள்ளது
    ஆகவே +5.30 Hours East

    ReplyDelete
  62. Ayya, Radhakrishnan was born on Sep 5th right... It says Sep 6th in th list. Please clarify us Ayya,,

    May GOD Bless you

    ReplyDelete
  63. வாத்யாரே வணக்கும். அவ்வளவா உங்க கிளாஸ§க்கு வராத புது, மக்கு ஸ்டூடண்ட் நான். 200 பதிவுக்கு வாழ்த்துகள். உங்க ஜாதகம் நல்லா இருககு. 2000 பதிவுக்கும் வாழ்த்துச் சொல்ல வர்றேன்.

    ReplyDelete
  64. 200-வது பதிவிற்கு மனமார்ந்த (நன்றி கலந்த) வாழ்த்துக்கள்

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com