மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.7.08

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்? காவல்துறை ஒரு தீயவனைப் பிடித்து
உள்ளே போட்டால் என்ன ஆகுமோ அல்லது என்கவுன்டரில் போட்டுத் தள்ளினால்
என்ன ஆகுமோ அது ஆகும்!

நல்லவன் மேன்மை பெற்றால் என்ன ஆகும்? மேலும் பல நன்மைகளைச் செய்வான்!

அது இரண்டையும் பற்றியதுதான் இன்றைய பாடம்!
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு லக்கினத்திற்கும் அதிமுக்கியமான கிரகம் எது?

லக்கினத்திற்கு யோகங்களைக் கொடுக்கக்கூடியவர் எவரோ, அவரே அதி முக்கியமான கிரகம்!

அவர் என்ன செய்வார்?

1. அவர்தான் உங்களுடைய God Father.
2. உங்களுக்கு யோகத்தைத்தருவதில் முதல் இடத்தில் இருப்பவர்.
3. ராஜயோகங்களைத்தருபவர் அவர்தான்.
4. அவருடைய திசைகளிலும் அல்லது புத்திகளிலும் உங்களுக்கு அவற்றை
(நன்மைகளை) நிறைவேற்றி வைப்பார்.
5. அவர் இருக்கும் இடமும் நன்றாக இருக்கும்,
6. அவருடைய பார்வை பெறும் அவருடைய நட்புக் கிரகங்கள் மேலும் வலுப்பெறும்
7. அவருடைய பார்வையைப் பெறும் தீயகிரகங்கள் வலிமை இழக்கும்
8. மொத்தத்தில் - in short - அவரைக் key planet to your lagna என்று சொல்லலாம்

இந்த கீ பிளானெட்டைக் கவனிக்காமல், மற்றபடி வீட்டு அதிபதி, அவர் இருக்கும்
இடம், அந்த வீட்டிலிருக்கும் பரல்கள் இவற்றை மட்டும் வைத்துப் பலன்
சொல்லும்போது, அது தவறாகிப் போய்விடும். ஆகவே ஒரு ஜாதகத்திற்கான
நல்லது கெட்டதுகளை நிர்ணயம் செய்யும் போது முதலில் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டியவர் இவரே!

சரி, அவர் முழு யோகங்களையும் தருவாரா?

அவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களில் அல்லது திரிகோண ஸ்தானங்களில்
அமர்ந்திருந்தால் தருவார். உச்சம், நட்பு நிலைகளில் இருந்தால் தருவார்.
பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய இடங்களில்
அவர் இருந்தால் தரமாட்டார். கைக்கு எட்டியது. வாய்க்கு எட்டவில்லை என்ற
கதையாகிவிடும்.

இப்போது எந்தெந்த லக்கினத்திற்கு யார் யார் யோககாரகன் என்று பார்ப்போம்!

Key planets for each lagna is appended!

விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------------------------
1. மேஷம் = குரு, சூரியன்
2. ரிஷபம் = சனி
3. மிதுனம் = சுக்கிரன்
4. கடகம் = குரு, செவ்வாய்
5. சிம்மம் = செவ்வாய்
6. கன்னி = சுக்கிரன்
7. துலாம் = சனி
8. விருச்சிகம் = குரு
9. தனுசு = செவ்வாய், சூரியன், குரு
10. மகரம் = சுக்கிரன்
11. கும்பம் = சுக்கிரன்
12. மீனம் = செவ்வாய், சந்திரன், குரு

என்ன சார் என் லக்கினத்திற்கு ஒரு கிரகம் மட்டுமே உள்ளது
இன்னொன்றிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் உள்ளதே என்று
கேட்காதீர்கள். யோசித்துப் பாருங்கள் காரணம் புரியும்!

Special Tips:
1.For Mithuna lagna natives, if Venus joins with Saturn will give
career of much fame!
2. For Cancer lagna natives, if Jupiter joins with mars, will confer
name & fame!
3. For Virgo lagna natives, if Mercury associated with Venus will
give good yogas
4. For Virucchika Lagna natives, Sun & Moon association will
give good yogas
5. For Thanusu lagna natives, the association of Sun & Mars
will give good yogas
6. For Makara lagna natives, the association of Venus & Mercury
will give good yogas
7. For Kumba lagna natives, the association of Venus & Mars
will give good yogas
8. For Meena lagna natives, the association of Moon, Mars, jupiter
will give good yogas
---------------------------------------------------------------------------------
Evil planets for each lagna is appaended!

கட்டுரையின் முதல் பகுதியில் கூறியுள்ள அனைத்திற்கும்
நேர் எதிரரன பலன்களை இவைகள் செய்யும்.
ஆனால் பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு
ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை என்றாகிவிடும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி
அடையலாம்!

1. மேஷம் = சனி, புதன், சுக்கிரன்
2. ரிஷபம் = குரு, சந்திரன்,
3. மிதுனம் = செவ்வாய், குரு, சூரியன்
4. கடகம் = சுக்கிரன், புதன்
5. சிம்மம் = சனி, சுக்கிரன், புதன்
6. கன்னி = செவ்வாய், சந்திரன்
7. துலாம் = குரு, சூரியன், செவ்வாய்
8. விருச்சிகம் = புதன், சுக்கிரன்
9. தனுசு = சுக்கிரன்
10. மகரம் = செவ்வாய், சந்திரன், குரு
11. கும்பம் = சந்திரன், குரு
12. மீனம் = சூரியன், சனி, சுக்கிரன், புதன்

--------------------------------------------------------------------
என்ன, இன்றைய பாடம் நன்றாக இருந்ததா?
பயனுள்ளதாக இருந்ததா?
அதைவிட முக்கியமாக புரியும்படி இருந்ததா?
பின்னூட்டத்தில் ஒருவரி சொல்லுங்கள்!

மேலே உள்ள படத்தில் சனீஸ்வரனும், சூரியபகவானும் சேர்ந்து
இறைவனுக்குக் காலை வணக்கம் செய்கிறார்களே - பார்த்தீர்களா?

அன்புடன்,
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

52 comments:

  1. ரொம்ப நாள் மட்டம்போட்டதால, எல்லா பாடங்களையும் ஒரே நாள்ல படிக்கவேண்டி இருந்துச்சு...பாதுகாக்க வேண்டிய ப்யனுள்ள பதிவுகள்..நன்றி!

    ReplyDelete
  2. மீண்டும் ஆசிரியர் வகுப்பு களைகட்ட தொடங்கிவிட்டது.நன்றி.பின்னுட்டங்கள் அதிகமாகிக் கொண்டே போவதால் பின்னூட்டப் பெட்டி திறந்து படிக்க மிக சிரமப் படிகிறது.
    வல்லுனர்களின் உதவி பெற்று இன்னும் சிறப்பாக்கலாமே.
    மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
    எனது அலுவலகநண்பர்கள் தகவல் தெரிய அவர் அவ்ரது உறவினர்களூக்கு சொல்ல இப்படி விரிகிறது.

    கற்றோருக்கு சென்றவிடமெல்லம் சிறப்பு .வாழ்த்துக்கள்.

    தங்கள் ஏற்பாடு செய்யும். மாணவர் சந்திப்ப்புக்கு பெரிய கல்யாண மண்டபம் தேவை ஆகும் போலுள்ளது.

    ReplyDelete
  3. கெட்டவன் கெட்டுப் போனால் நல்லவன் !
    :)

    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

    மனிதன் நல்லவனாக இருப்பதற்கும் தீயவனாக இருப்பதற்கும் அவன் எண்ணங்கள் காரணமல்ல. கிரக நிலைகளே காரணம் ! கூற்று உண்மையா ?

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    பாடங்கள் அருமை ஐயா.
    சில கேள்விகள்...
    01. யோகக்கார கிரகங்கள் நீச்சத்தில் பலத்தை இழப்பதைவிட பகை ராசியில் குறைவாகத்தானே பலமிழக்கும்.

    02. இயற்கையாகவே நன்மை தரும் கிரகங்கள் evil planets ஆகும்போது அது பொதுவாக தரும் நன்மையை தராதா?

    03. இயற்கையாகவே நன்மை தரும் கிரகங்கள் evil planets ஆகும்போது கோச்சார ரீதியாக அல்லது தாசா புத்தியிலோ நன்மையை தராதா ?

    04. பொதுவாக குரு கோச்சாரத்தில் 2,5,7,9,11 ல் வரும்போது நன்மை தரும் என்று சொல்லுவார்கள். ரிசபம், மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கு இந்த பலன் மாறுபடுமா?

    (பி.கு. பாடத்தின் முகவுரை எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. May be I am a tubelight)

    ReplyDelete
  5. 1. what if a yoga planet is in good position but deposited in evil constallation ?

    2. what if a good planet is deposited in bad house but with more number of bharals ?
    (lets say 40)

    how to decide their effects in above charts ? could you please explain it sir.

    ReplyDelete
  6. வாய் பொத்தி கை கட்டி வகுப்பை மட்டுமே கவனிக்கிறேன்,

    மாணவர் சந்திப்பு எப்போ வாத்தியரே? நீங்களாவது முன் கூட்டியே தெரிவிக்கவும்.

    ReplyDelete
  7. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இதுதானா?

    ஐயா! ஆங்கிலம் அதிகம் உள்ளது...டிக்ச்னரி வைத்துக்கொண்டுதான் படிக்க வேண்டியுள்ளது...

    மகர லக்கினத்திற்கு 3 தீய கிரங்கங்கள் என்றால் 3மே கெட்டுபோனால் தான் நல்லதா?

    ReplyDelete
  8. Well,இந்த செய்திகள் பயனுள்ளன.
    ஏற்கனவே சில புத்தகங்களில் படித்திருந்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் தெரியவேண்டிய செய்தி என எண்ணியதால் இதைப் பற்றி தொடரந்து தொணத்திக் கொண்டிருந்தேன்;பொருட்படித்தியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
    இப்போது சில கேள்விகள்(எனக்கு கேட்கத்தான் தெரியும்!)
    1.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகன் என்பதன் சரியான அர்த்தம் என்ன?

    ஒரு லக்னத்துக்குப் பாவியானவன் கெட்டால்(கெட்ட இடத்தில் இருந்தால் 6,8,12) அது அதி மேன்மையான பலன்களைத் தரும் என்பது எந்த அளவில் சரி?

    இப்படி நல்ல பலன்களைத் தருவார்கள் என்றால் அவர்களின்(கெட்ட கிரகங்களின்) தசாபுத்திக் காலங்களிலும் மிக நல்ல பலன்கள்தானே நடைபெற வேண்டும்?

    2. அவ்வித கெட்டவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்தால் என்ன நடக்கும்?

    காட்டாக 10 ஆம் இடம் நல்ல இடம்,தொழில் ஸ்தானம்.அங்கு (லக்னத்திற்கு) கெட்டவன் சென்று அமரும் போது,தசாபுத்தி காலத்தில் நல்லன நடக்குமா,அல்லன நடக்குமா?

    3.10 ஆம் இடம் தொழில் ஸ்தானம்,முக்கியமான இடம் என அறிவோம்.அதுவே கேந்திர ஸ்தானமும் ஆகிறது.

    10'ல் நல்ல கிரகம் இருப்பதை விட பாவி இருப்பதே மேன்மை எனப் படித்தேன்,அது சரியா?
    ஆம் எனில்,10'ல் பாவி இருப்பதால் நற்பலன் நடக்குமா? அல்லது கேந்திரத்தில் கெட்டவன்(பாவி) இருப்பதால் கெட்ட பலன்கள் நடக்குமா?

    4.லக்ன யோக காரகன் நல்ல இடத்தில் அமரும் போது,(காட்டாக 5'ம் இடம்) அமரும் இடத்திற்கான நற்கிரகம்,அதாவது 5'ம் இடத்தின் சொந்தக்காரன் ஓரு கெட்ட இடத்தில்(6,8,12) கெட்ட இன்னொருவனுடன் கூடினால்(காட்டாக ராகு அல்லது கேது) என்ன வித பலன் கூற வேண்டும்?

    (இதனால்தான் கண்ட புத்தகங்களை எல்லாம் படிக்ககூடாது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது !!! கண்டதைப் படித்தாலாவது பண்டிதனாகலாமா என்ற எண்ணம்தான்....)

    ReplyDelete
  9. உள்ளேன் ஐயா. படித்து, இருக்கும் ஜாதகங்களையும் கொண்டு அறிந்து கொள்கிறேன்.

    ஒரு சம்பந்தமில்லாத சந்தேகம். என் இரு குழந்தைகளில் ஒருவருக்கு பிறக்கும்போதே தந்தை போலவே (சனி) தசா (இவர் அப்பா குணம்); இன்னொருவருக்கு பிறக்கும்போதே என்போலவே (குரு) தசா (இவர் அம்மா குணம்) நடந்து கொண்டிருக்கின்றன. இப்போ தான் இதை தெளிவாக கவனித்தேன். இது நடைமுறையில் இருப்பதுவா?

    ReplyDelete
  10. //////தங்ஸ் said...
    ரொம்ப நாள் மட்டம்போட்டதால, எல்லா பாடங்களையும் ஒரே நாள்ல
    படிக்கவேண்டி இருந்துச்சு...பாதுகாக்க வேண்டிய ப்யனுள்ள பதிவுகள்..நன்றி!//////

    இனிமேல் மட்டம் போடாதீர்கள் தங்ஸ்!

    ReplyDelete
  11. //////திருநெல்வேலி கார்த்திக் said...
    மீண்டும் ஆசிரியர் வகுப்பு களைகட்ட தொடங்கிவிட்டது.நன்றி.
    பின்னுட்டங்கள் அதிகமாகிக் கொண்டே போவதால் பின்னூட்டப்
    பெட்டி திறந்து படிக்க மிக சிரமப் படிகிறது.
    வல்லுனர்களின் உதவி பெற்று இன்னும் சிறப்பாக்கலாமே.
    மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
    எனது அலுவலகநண்பர்கள் தகவல் தெரிய அவர் அவ்ரது
    உறவினர்களூக்கு சொல்ல இப்படி விரிகிறது.
    கற்றோருக்கு சென்றவிடமெல்லம் சிறப்பு .வாழ்த்துக்கள்.
    தங்கள் ஏற்பாடு செய்யும். மாணவர் சந்திப்ப்புக்கு பெரிய
    கல்யாண மண்டபம் தேவை ஆகும் போலுள்ளது.///////

    மீண்டும் களைகட்ட ஆரம்பித்து விட்டதா?
    என்ன சாமி சொல்கிறீர்?
    நடுவில் களையில்லாமல் இருந்ததா?
    எப்போது? எந்தப் பதிவில்?

    ReplyDelete
  12. ///கோவி.கண்ணன் said...
    கெட்டவன் கெட்டுப் போனால் நல்லவன் ! :)
    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.
    மனிதன் நல்லவனாக இருப்பதற்கும் தீயவனாக இருப்பதற்கும் அவன் எண்ணங்கள் காரணமல்ல.
    கிரக நிலைகளே காரணம் ! கூற்று உண்மையா ?/////

    அப்படி யார் கூறுவது? கூறுபவர்கள் யாரென்று சொல்ல முடியுமா நண்பரே?

    ReplyDelete
  13. ////////கல்கிதாசன் said...
    வணக்கம் ஐயா,
    பாடங்கள் அருமை ஐயா.
    சில கேள்விகள்...
    01. யோகக்கார கிரகங்கள் நீச்சத்தில் பலத்தை இழப்பதைவிட பகை ராசியில்
    குறைவாகத்தானே பலமிழக்கும்.//// ஆமாம்! நீசமானால் சுத்தமாக பலன் இருக்காது!

    //////02. இயற்கையாகவே நன்மை தரும் கிரகங்கள் evil planets
    ஆகும்போது அது பொதுவாக தரும் நன்மையை தராதா?////

    இயற்கையாவே நன்மை தரும் கிரகங்கள்(உதாரணம் குரு) நன்மையைத் தராவிட்டாலும்
    கெடுதலைச் செய்யாது!

    //////03. இயற்கையாகவே நன்மை தரும் கிரகங்கள் evil planets
    ஆகும்போது கோச்சார ரீதியாக அல்லது தாசா புத்தியிலோ நன்மையை தராதா ?/////

    evil planet என்றாகிவிட்ட பிறகு அவரிடம் இருந்து ஏன் நன்மையை எதிர் பார்க்கிறீர்கள்?
    அதே நேரத்தில் இயற்கையாகவே தீய கிரகங்கள் யோககாரகனாகி (உதாரணம் சனி)
    நன்மையைச் செய்வார் என்று உள்ளதே! அதோடு திருப்திப் பட்டுக்கொள்ளுங்கள்
    எல்லாப் பக்கங்களில் இருந்தும் நன்மையை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

    /////04. பொதுவாக குரு கோச்சாரத்தில் 2,5,7,9,11 ல் வரும்போது நன்மை
    தரும் என்று சொல்லுவார்கள். ரிசபம், மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கு
    இந்த பலன் மாறுபடுமா?/////

    7 ஆம் வீடு & 11ஆம் வீடுகளில் கோசாரத்தில் வரும் குரு, எல்லா நிலைகளையும்
    தாண்டி நன்மைகளைச் செய்வார்!

    ReplyDelete
  14. /////s arul said...
    1. what if a yoga planet is in good position but deposited in evil constallation?////

    The result will be mixed!

    /////2. what if a good planet is deposited in bad house but with more number of bharals ?
    (lets say 40)////

    It is concered only with the house which is having 40 parals! That house is to be considered
    and the result of that house will come only in the dasa or bukthi of the lord of that house

    ////how to decide their effects in above charts ? could you please explain it sir.////

    It is a big question. We will discuss it when we conduct classes in the title about judging
    a horoscope in later stage

    ReplyDelete
  15. //////கோவை விமல்(vimal) said...
    வாய் பொத்தி கை கட்டி வகுப்பை மட்டுமே கவனிக்கிறேன்,
    மாணவர் சந்திப்பு எப்போ வாத்தியரே?
    நீங்களாவது முன் கூட்டியே தெரிவிக்கவும்.//////

    ஆகா தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  16. //////கூடுதுறை said...
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இதுதானா?////

    ஆமாம் இதுதான்!

    /////ஐயா! ஆங்கிலம் அதிகம் உள்ளது...டிக்ச்னரி வைத்துக்கொண்டுதான்
    படிக்க வேண்டியுள்ளது...////// பழகிவிட்டது. குரைத்துக் கொள்கிறேன்
    சிலவற்ரை ஆணித்தரமாகச் சொல்ல ஆங்கிலம் கைகொடுக்கிறது:-))))

    ///////மகர லக்கினத்திற்கு 3 தீய கிரங்கங்கள் என்றால்
    3மே கெட்டுபோனால் தான் நல்லதா?//////

    ஏன் ஒன்று கெட்டுப்போனால் கூட 1/3 குரையுமே! போதாதா?

    ReplyDelete
  17. // பழகிவிட்டது. குரைத்துக் கொள்கிறேன்
    சிலவற்ரை ஆணித்தரமாகச் சொல்ல ஆங்கிலம் கைகொடுக்கிறது:-))))
    ஏன் ஒன்று கெட்டுப்போனால் கூட 1/3 குரையுமே! போதாதா? ///

    ஐயா, தாங்கள் குரைத்தால் நன்றாக இருக்காது...

    குறைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. //////அறிவன்#11802717200764379909 said..
    Well,இந்த செய்திகள் பயனுள்ளன.
    ஏற்கனவே சில புத்தகங்களில் படித்திருந்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் தெரியவேண்டிய
    செய்தி என எண்ணியதால் இதைப் பற்றி தொடரந்து தொணத்திக் கொண்டிருந்தேன்;
    பொருட்படித்தியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
    இப்போது சில கேள்விகள்(எனக்கு கேட்கத்தான் தெரியும்!)
    1.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகன் என்பதன் சரியான அர்த்தம் என்ன?///////

    உங்கள் எதிரி தீர்க்கமுடியாத நோயில் படுத்து விட்டால் என்ன ஆகும்? அதோடு உங்களுக்கு
    வரவேண்டிய நன்மைகளை Block செய்துகொண்டிருந்தவன் செயல் இழந்துவிட்டால் என்ன
    ஆகும்? அப்புறம் உங்களுக்கு எல்லாமே நல்லதுதானே? அதைத்தான் அந்த சொல்லடை சொல்கிறது!

    ஒரு லக்னத்துக்குப் பாவியானவன் கெட்டால்
    (கெட்ட இடத்தில் இருந்தால் 6,8,12) அது அதி மேன்மையான
    பலன்களைத் தரும் என்பது எந்த அளவில் சரி?/////

    அது நல்லபலன்களைத் தரும் என்பது பொருளல்ல! பாவி கெட்டால் துன்பங்கள் குறையும்
    வில்லன் ஒழிந்தால் சினிமாவில் நாயகி பெருமூச்சுவிடுவாளே அது மாதிரி!:-))))

    ////////இப்படி நல்ல பலன்களைத் தருவார்கள் என்றால் அவர்களின்(கெட்ட கிரகங்களின்)
    தசாபுத்திக் காலங்களிலும் மிக நல்ல பலன்கள்தானே நடைபெற வேண்டும்?///////

    ஆமாம்! ஆனால் அது பொத்துக்கொண்டு கொட்டாது. ஒரளவிற்குக் கிடைக்கும்!
    உண்மையான நல்ல பலன்கள் ராஜயோகத்தைத்தரும் கிரகங்களின் தசா அல்லது புத்திகளில் மட்டுமே!

    ஒரே போர்வையை இருபது விதமாக மடித்து மடித்து வெவ்வேறு விதமாகக் கேட்டு இருக்கிறீர்கள்?
    எல்லாவற்றிற்கும் இதுதான் பதில்:

    நன்மை செய்யும் கிரகங்களின் தாசா புத்திகளில் நன்மையும், தீமையைச் செய்யும் கிரகங்களின்
    தசாபுத்திகளிலும் தீமையும் நடைபெறும்.

    ReplyDelete
  19. ///////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    உள்ளேன் ஐயா. படித்து, இருக்கும் ஜாதகங்களையும் கொண்டு அறிந்து கொள்கிறேன்.
    ஒரு சம்பந்தமில்லாத சந்தேகம். என் இரு குழந்தைகளில் ஒருவருக்கு பிறக்கும்போதே
    தந்தை போலவே (சனி) தசா (இவர் அப்பா குணம்); இன்னொருவருக்கு பிறக்கும்போதே
    என்போலவே (குரு) தசா (இவர் அம்மா குணம்) நடந்து கொண்டிருக்கின்றன.
    இப்போ தான் இதை தெளிவாக கவனித்தேன். இது நடைமுறையில் இருப்பதுவா?

    குணம் பொதுவாக லக்கினத்தைவைத்துத்தான் ஒன்றாக இருக்கும்! அம்மாவும்,
    பிள்ளையும் கும்ப லக்கினம் என்றால் குணம் ஒரே மாதிரியாக இருக்கும்!
    தசாபுத்திக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இருக்காது!

    ReplyDelete
  20. ///////கூடுதுறை said...
    // பழகிவிட்டது. குரைத்துக் கொள்கிறேன்
    சிலவற்ரை ஆணித்தரமாகச் சொல்ல ஆங்கிலம் கைகொடுக்கிறது:-))))
    ஏன் ஒன்று கெட்டுப்போனால் கூட 1/3 குரையுமே! போதாதா? ///
    ஐயா, தாங்கள் குரைத்தால் நன்றாக இருக்காது...
    குறைத்துக்கொள்ளுங்கள்./////

    அது தட்டச்சுப்பிழை! நாள் ஒன்றிற்கு சராசரியாக
    40 பின்னூட்டங்களுக்கு பதில் எழுதும்போது, தட்டச்சுப்பிழை
    ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை; நேரமின்மை ஒரு காரணம்!

    நான் குரைத்தால் நன்றாக இருக்காதா? யார் சொன்னது?
    வாருங்கள் ஒரு நாள் - குரைக்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்;-))))

    ReplyDelete
  21. //ஒரே போர்வையை இருபது விதமாக மடித்து மடித்து வெவ்வேறு விதமாகக் கேட்டு இருக்கிறீர்கள்?
    எல்லாவற்றிற்கும் இதுதான் பதில்:

    நன்மை செய்யும் கிரகங்களின் தாசா புத்திகளில் நன்மையும், தீமையைச் செய்யும் கிரகங்களின்
    தசாபுத்திகளிலும் தீமையும் நடைபெறும்.
    //
    மன்னிக்கவும்,3 மற்றும் 4 ‘ம் கேள்விகள் வேறுபாடானவை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  22. /////அறிவன்#11802717200764379909 said...
    3. 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், முக்கியமான இடம் என அறிவோம்.
    அதுவே கேந்திர ஸ்தானமும் ஆகிறது.
    10'ல் நல்ல கிரகம் இருப்பதை விட பாவி இருப்பதே மேன்மை எனப் படித்தேன்,அது சரியா?
    ஆம் எனில்,10'ல் பாவி இருப்பதால் நற்பலன் நடக்குமா? அல்லது கேந்திரத்தில்
    கெட்டவன்(பாவி) இருப்பதால் கெட்ட பலன்கள் நடக்குமா?/////

    பத்தாம் வீட்டை வைத்துப் பாடம் நடத்தும்போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் நண்பரே!
    அது 8 பக்கப் பதிவாகும். அதை எப்படி பின்னூட்டத்தில் தருவது?

    /////////4.லக்ன யோக காரகன் நல்ல இடத்தில் அமரும் போது,
    (காட்டாக 5'ம் இடம்) அமரும் இடத்திற்கான நற்கிரகம்,அதாவது
    5'ம் இடத்தின் சொந்தக்காரன் ஓரு கெட்ட இடத்தில்(6,8,12) கெட்ட
    இன்னொருவனுடன் கூடினால்(காட்டாக ராகு அல்லது கேது)
    என்ன வித பலன் கூற வேண்டும்?////////

    யோககாரகன் 5ஆம் வீட்டில் அமர்வதனால், 5ஆம் வீட்டுப் பலனில் தலையிடுவான் என்று யார் சொன்னது?
    He got a better sitting place for doing all his good works!
    5ஆம் வீட்டிற்கான பலனை ஐந்தாம் வீட்டு அதிபதியும், காரகனும் மட்டுமே செய்யக்கடமைப்பட்டவர்கள்
    அவன் கெட்டிருந்தால் கெட்ட பலன்களே!

    ReplyDelete
  23. //SP.VR. SUBBIAH said...
    ///கோவி.கண்ணன் said...
    கெட்டவன் கெட்டுப் போனால் நல்லவன் ! :)
    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.
    மனிதன் நல்லவனாக இருப்பதற்கும் தீயவனாக இருப்பதற்கும் அவன் எண்ணங்கள் காரணமல்ல.
    கிரக நிலைகளே காரணம் ! கூற்று உண்மையா ?/////

    அப்படி யார் கூறுவது? கூறுபவர்கள் யாரென்று சொல்ல முடியுமா நண்பரே?
    //

    ஒரோ ஜோதிடரே இப்படி கேட்கலாமா ?

    கிரஹ நிலைதானே மனிதனின் பண்புகளை தீர்மாணிக்கிறது.

    ஜாதகத்தைப் பார்த்தவுடனே சொல்லிடமாட்டிங்களா ? இவன் பண்பானவன், அன்பானவன், முரடன், மூடன் என்று ?

    ReplyDelete
  24. மைனஸ் இண்டு மைனஸ் ப்ளஸ் என்று சொல்வார்கள் கணிதத்தில்.

    எவ்வளவு பெரிய நம்பர் ஆனாலும் நியூமரேட்டரில் தான் மதிப்பு. டினாமினேட்டரில் போய் சேர்ந்து விட்டால் மதிப்பு தலைகீழ் விகிதம் தான்.

    கெட்டவன் கெட்டிடில் பாடத்துக்கும் என்றும் கெடாத கெட்டியான விளக்கங்களுக்கும் நன்றி ஐயா..

    கொடியில் காகம், கடலில் கதிரவன் படம் சூப்பரோ சூப்பர்!! :-))

    ReplyDelete
  25. //////கோவி.கண்ணன் said...
    //SP.VR. SUBBIAH said...
    ///கோவி.கண்ணன் said...
    கெட்டவன் கெட்டுப் போனால் நல்லவன் ! :)
    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.
    மனிதன் நல்லவனாக இருப்பதற்கும் தீயவனாக இருப்பதற்கும் அவன் எண்ணங்கள் காரணமல்ல.
    கிரக நிலைகளே காரணம் ! கூற்று உண்மையா ?/////
    அப்படி யார் கூறுவது? கூறுபவர்கள் யாரென்று சொல்ல முடியுமா நண்பரே?
    //
    ஒரோ ஜோதிடரே இப்படி கேட்கலாமா ?
    கிரஹ நிலைதானே மனிதனின் பண்புகளை தீர்மாணிக்கிறது.
    ஜாதகத்தைப் பார்த்தவுடனே சொல்லிடமாட்டிங்களா ?
    இவன் பண்பானவன், அன்பானவன், முரடன், மூடன் என்று ?///////

    நான் ஜோதிடரா? யார் சொன்னார்கள் அண்ணா?
    ஜோதிடத்தைப் படித்தவன். படித்ததை எழுதிக்கொண்டிருக்கிறேன்
    பார்ப்பவன் அல்ல!

    பதிவில் முகமூடி போட்டுக்கொண்டு புனைப் பெயர்களில் எழுதுகிறார்களே!
    அதுபோல மனிதர்களிலும் நல்லவர்கள் போல முகமூடி போட்டுக்கொண்டு திரிபவர்கள்
    அதிகம் உண்டு அண்ணா?

    இன்று எல்லாமே பணம்தான் அண்ணா!
    பணத்தைவைத்து மூடனைப் புத்திசாலி ஆக்கிக் காட்டலாம்.
    புத்திசாலியை மூடன் என்று சொல்லிவிடலாம்.
    ஜோதிடம் எல்லாம் அதற்கு அடுத்தபடிதான்!
    ஆகவே பணத்தை வைத்து அல்லது பணத்தைக் கொடுத்து யாரையும் எடைபோட முயலுங்கள்!நிச்சயம் கண்டுபிடிக்கலாம். ஜோதிடத்தைவிட அது சுலபமானது!

    ReplyDelete
  26. ///////Blogger தமாம் பாலா (dammam bala) said..
    மைனஸ் இண்டு மைனஸ் ப்ளஸ் என்று சொல்வார்கள் கணிதத்தில்.
    எவ்வளவு பெரிய நம்பர் ஆனாலும் நியூமரேட்டரில் தான் மதிப்பு. ினாமினேட்டரில் போய் சேர்ந்து விட்டால் மதிப்பு தலைகீழ் விகிதம் தான்.
    கெட்டவன் கெட்டிடில் பாடத்துக்கும் என்றும் கெடாத கெட்டியான விளக்கங்களுக்கும் நன்றி ஐயா..
    கொடியில் காகம், கடலில் கதிரவன் படம் சூப்பரோ சூப்பர்!! :‍))/////

    நன்று தாமம் பாலா!

    ReplyDelete
  27. //மீண்டும் களைகட்ட ஆரம்பித்து விட்டதா?
    என்ன சாமி சொல்கிறீர்?
    நடுவில் களையில்லாமல் இருந்ததா?
    எப்போது? எந்தப் பதிவில்?//

    சக் பதிவாளரின் கேள்விகள் அதற்கு தங்கள் பதில்கலள்,பரபரப்பு பின்னுட்டங்கள் அவையெல்லம் முடிந்து ,சோதிடா வகுப்பு களை கடட் ஆரம்பித்துவிட்டது ஏன்ற அர்த்தத்தில் சொன்னேன்.

    வகுப்பின் கல கலப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஏறுமுகதான்.
    அருமையும் அழ்கும் மெருகேறிக் கொன்டே இருக்கிரது ஐயா

    ReplyDelete
  28. நன்றி..
    எனக்குத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.
    ஏதேனும் வருத்தமிருப்பின் வருந்துகிறேன்..

    ReplyDelete
  29. /////////திருநெல்வேலி கார்த்திக் said...
    //மீண்டும் களைகட்ட ஆரம்பித்து விட்டதா?
    என்ன சாமி சொல்கிறீர்?
    நடுவில் களையில்லாமல் இருந்ததா?
    எப்போது? எந்தப் பதிவில்?//
    சக் பதிவாளரின் கேள்விகள் அதற்கு தங்கள் பதில்கள்,
    பரபரப்பு பின்னுட்டங்கள் அவையெல்லம் முடிந்து ,சோதிட
    வகுப்பு களை கட்ட ஆரம்பித்துவிட்டது ஏன்ற அர்த்தத்தில் சொன்னேன்.
    வகுப்பின் கல கலப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஏறுமுகதான்.
    அருமையும் அழகும் மெருகேறிக் கொன்டே இருக்கிறது ஐயா//////

    நீங்கள் சொன்னது சரிதான்! நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  30. ///////அறிவன்#11802717200764379909 said...
    நன்றி..
    எனக்குத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.
    ஏதேனும் வருத்தமிருப்பின் வருந்துகிறேன்../////

    வருத்தம் கொள்ளும் குணமெல்லாம் இல்லை!
    அதெல்லாம் இருந்தால் பதிவுகள் எழுத முடியாது!
    பதிவு எழுதி வரும் பின்னூட்டங்களை எதிர்கொள்ள
    முக்கியமாக வேண்டியது பொறுமை!
    அது என் வயதிற்குத் தாராளமாக உண்டு நண்பரே!

    ReplyDelete
  31. எனக்கு மகரலக்கனம், சனி சிம்மத்தில் ராகுவுடன் உள்ளார். மகரதின் அதிபதி பகைவிட்டில் ஒரு அசுபகிரக்தினுடன் இருப்பதால் கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்று கூறினார். இது சரியா, விளக்கம் தேவை.

    ReplyDelete
  32. Present sir...(out of town)

    -Shankar

    ReplyDelete
  33. அய்யா,

    என்னோடது துலா லக்னம். லக்னத்துக்கு கெட்டவர்கள் குருவும் சூரியனும் லக்னத்துலேயே புதனுடன் உள்ளார்கள். சனி ஏழில் வக்கிரமாக உள்ளார். எனக்கு என்ன பலன். அட்லீஸ்ட் தந்தையாருடன் உறவைப்பற்றி மட்டுமாவது சொல்லுங்களேன்.

    ReplyDelete
  34. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    எனக்கு மகரலக்கனம், சனி சிம்மத்தில் ராகுவுடன் உள்ளார்.
    மகரத்தின் அதிபதி பகைவிட்டில் ஒரு அசுபகிரக்தினுடன் இருப்பதால்
    கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம் என்று கூறினார். இது சரியா,
    விளக்கம் தேவை.
    இராஜயோகம் என்று கூறினார். இது சரியா, விளக்கம் தேவை.//////

    உங்களுடைய லக்கினநாதர் சனீஸ்வரன். அவரை எப்படிக் கெட்டவன் என்கிறீர்கள்
    ஸ்வாமி?

    ReplyDelete
  35. /////hotcat said...
    Present sir...(out of town)
    -Shankar////

    வருகைப்பதிவேட்டில் குறிக்கப்பட்டது!

    ReplyDelete
  36. /////Blogger அமர பாரதி said...
    அய்யா,
    என்னோடது துலா லக்னம். லக்னத்துக்கு கெட்டவர்கள் குருவும் சூரியனும்
    லக்னத்துலேயே புதனுடன் உள்ளார்கள். சனி ஏழில் வக்கிரமாக உள்ளார்.
    எனக்கு என்ன பலன். அட்லீஸ்ட் தந்தையாருடன் உறவைப்பற்றி மட்டுமாவது
    சொல்லுங்களேன்.///

    சூரியன் நீசம்! ஏழில் சனி அவரும் நீசம். இருவருமே நீசமாகி விட்டதால்
    ஒருவருக்கொருவர் பெரிய பாதிப்பு இருக்காது. இருந்தாலும் சனியும் சூரியனும்
    ஒருவர் பார்வையில் அடுத்தவர் இருப்பது தந்தை, மகனுக்கு உள்ள உறவு
    சுமூகமாக இருக்காது!

    ReplyDelete
  37. நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனையும் உச்ச கிரகம் வக்கிரகதி அடைந்தால் நிச்ச பலனை தரும்...

    தயவு செய்து தெளிவு படுத்தவும், தவறு இருப்பின் மன்னிக்கவும், நானும் மாணவன்தான்./

    ReplyDelete
  38. உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார்த்தால் நீசபங்க ராஜயோகம்(சூரியன் உச்சபலனை தரும்.)

    தெளிவு படுதவும்...

    ReplyDelete
  39. Dear sir
    I have mars in 11th house with jupiter (but in gemini)....So only mars will give good effects.

    The mars is exalated in navamsa with venus and ketu and aspecting debilated saturn (8th house)...what does that mean? mars and satrurn are evil planets, but mars is yogakaraka for simha lagna so saturn debiliation is cancelled....Please clarify...

    -Shankar

    ReplyDelete
  40. //////Geekay said...
    Good one../////

    Thanks Mr.Geekay!

    ReplyDelete
  41. /////மதி said...
    நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனையும் உச்ச கிரகம் வக்கிரகதி அடைந்தால் நிச்ச பலனை தரும்...
    தயவு செய்து தெளிவு படுத்தவும், தவறு இருப்பின் மன்னிக்கவும், நானும் மாணவன்தான்./////

    எனக்குத் தெரிந்தவரையில் அப்படி இல்லை!
    A weak planet is always weak either by rotation or rotrogation

    ReplyDelete
  42. //////மதி said...
    உச்சன்(சனி)நீசனை(சூரியன்) பார்த்தால் நீசபங்க ராஜயோகம்(சூரியன் உச்சபலனை தரும்.)
    தெளிவு படுதவும்.../////

    உச்சமான கிரகமும், நீசமான கிரகமும் சேர்க்கையில் மட்டுமே (by association)
    நீசபங்க ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். பார்வையில் கிடையாது

    ReplyDelete
  43. //////hotcat said...
    Dear sir
    I have mars in 11th house with jupiter (but in gemini)....So only mars will give good effects.
    The mars is exalated in navamsa with venus and ketu and aspecting
    debilated saturn (8th house)...what does that mean? mars and satrurn are evil
    planets, but mars is yogakaraka for simha lagna so saturn debiliation is cancelled....Please clarify.
    -Shankar//////

    Sorry, the particulars are incomplete!

    ReplyDelete
  44. இது தான் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். உங்கள் அனுபவங்களை நல்ல முறையில் எழுதிவருகிறீர்கள். அனைத்து பதிவுகளையும் படித்ததில்லை. அப்பப்போ தமிழ்மண முகப்பில் இருக்கும் பதிவுகளை படிப்பதுண்டு. இந்த கேள்வியை எங்கு கேட்பது என தெரியவில்லை. ஆகவே இங்கு கேட்கிறேன். இவை எனக்குள் இருக்கும் கேள்விகள். ஆனால் இவற்றை தொழில் முறையில் சோதிடம் பார்க்கும் அனைவரிடமும் கேட்க முடியாது. அத்துடன் நான் இருக்கும் இடத்தில் சோதிடர்கள் யாரும் இல்லை.
    அட்டமத்து சனி, ஏழரை சனி போன்றன நடக்கும் காலத்தில் அதன் பாதிப்பை குறைக்க என சொல்லப்படும் பரிகாரங்களால் சாதகமான பலன் ஏற்படுமா?
    அதிஸ்ட கல் வைத்த மோதிரம் அணிவதால் இப்பதிப்பை குறைக்க முடியுமா? அதிஸ்ட கல்லால் நற்பலன்கள் உண்டா?

    ReplyDelete
  45. /////வி. ஜெ. சந்திரன் said...
    இது தான் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். உங்கள்
    அனுபவங்களை நல்ல முறையில் எழுதிவருகிறீர்கள். அனைத்து பதிவுகளையும்
    படித்ததில்லை. அப்பப்போ தமிழ்மண முகப்பில் இருக்கும் பதிவுகளை படிப்பதுண்டு.
    இந்த கேள்வியை எங்கு கேட்பது என தெரியவில்லை. ஆகவே இங்கு கேட்கிறேன்.
    இவை எனக்குள் இருக்கும் கேள்விகள். ஆனால் இவற்றை தொழில் முறையில்
    சோதிடம் பார்க்கும் அனைவரிடமும் கேட்க முடியாது. அத்துடன் நான் இருக்கும்
    இடத்தில் சோதிடர்கள் யாரும் இல்லை.
    அட்டமத்து சனி, ஏழரை சனி போன்றன நடக்கும் காலத்தில் அதன்
    பாதிப்பை குறைக்க என சொல்லப்படும் பரிகாரங்களால் சாதகமான பலன்
    ஏற்படுமா?
    அதிஸ்ட கல் வைத்த மோதிரம் அணிவதால் இப்பதிப்பை குறைக்க
    முடியுமா? அதிஸ்ட கல்லால் நற்பலன்கள் உண்டா?//////

    பரிகாரங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்பது என் தனிப்பட்ட கருத்து.
    அதில் எனக்கு நம்பிக்கை இல்லை!
    விதித்தது விதித்ததுதான். நடப்பது நடந்தே தீரும்.
    பிரார்த்தனை பலன் தரும்.
    எப்படிப்பட்ட பலன்?
    வருவதை எதிர்கொள்ளும் சக்தி, அதைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி
    பிரார்த்தனை மூலம் கிடைக்கும்

    ReplyDelete
  46. ஆசானே,

    எனக்கு மிதுன லக்ன பாவியான குரு 8ல்(மகரத்தில்) நீச்சமாக இருக்கிறார். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்(தற்போது ராகு தசையில், சுக்ர புக்தி)? யோக கார‌க‌னாகிய‌ சுக்ர‌ன் வேறு 8ல் குருவுட‌ன் ம‌றைந்து விட்டார் :(

    மற்ற இரு பாவிகளாகிய சூரியனும்(7 தனுசில்), செவ்வாயும் (11ல் மேசத்தில் ஆட்சி) மேலும் படுத்துவார்களா? எப்படியோ அந்த இரு தசைகளையும் இறைவன் அருளால் தாண்டி வந்து விட்டேன் :)

    ந‌ன்றியுட‌ன்,

    வெற்றி

    ReplyDelete
  47. ////vetri said...
    ஆசானே,
    எனக்கு மிதுன லக்ன பாவியான குரு 8ல்(மகரத்தில்) நீச்சமாக இருக்கிறார். அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்(தற்போது ராகு தசையில், சுக்ர புக்தி)? யோக கார‌க‌னாகிய‌ சுக்ர‌ன் வேறு 8ல் குருவுட‌ன் ம‌றைந்து விட்டார் :(
    மற்ற இரு பாவிகளாகிய சூரியனும்(7 தனுசில்), செவ்வாயும் (11ல் மேசத்தில் ஆட்சி) மேலும் படுத்துவார்களா? எப்படியோ அந்த இரு தசைகளையும் இறைவன் அருளால் தாண்டி வந்து விட்டேன் :)
    ந‌ன்றியுட‌ன்,
    வெற்றி//////

    ராகு திசை முடிந்‍தால் எல்லாம் சரியாகிவிடும்!
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
    அதுபோல குரு நீசமாக இருந்‍தாலும், மற்ற புத்திநாதன்களுடன் சேர்ந்து அவர் நல்லதைச் செய்வார்
    கவலை வேண்டாம். ஒரு பெரிய திசை மோசமாக இருந்தால் அடுத்த திசை நன்மையுடையதாக இருக்கும்!

    ReplyDelete
  48. So will dhanusu lagna people not have Maalavya Yogam if Sukrar is in 4th house (ucha veedu - meenam)?
    Thanks!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com