மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

10.7.08

ஜோதிடமும் மருத்துவர்களும்!

Astrology and Doctors interested in Astrology!

நம்மைச் சுற்றி எத்தனையோ ஒளி, ஒலிக் கதிர்கள் இங்கும் அங்கும் வட்டமடித்துக்
கொண்டிருக்கின்றன.வானொலி, பண்பலை, அலைபேசி அலைகள், காவல் துறையின்
வாக்கி டாக்கி அலைகள், தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைகள் என்று
எண்ணிக்கையற்ற ஒலி மற்றும் ஒளிக் கற்றைகள் சூழ்ந்திருக்கின்றன.

அவற்றை நம்மால் அறிய முடியாது. அததற்குத் தகுந்த கருவிகள் இருக்கும் போது
அவைகள் நமக்கு வசப்படும்.

நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அவற்றை இல்லை என்று
சொல்லி விட முடியாது.

அதேபோல வானில் உள்ள கோள்களில் இருந்தும் கதிர் அலைகள் வந்து கொண்டி
ருக்கின்றன. அவைகள் நம்மை எப்படிக் கட்டுப் படுத்துகின்றன என்பதை மட்டும்
இதுவரை யாரும் அறிய முடியவில்லை!ஆனால் கட்டுப்படுத்துகின்றன!

விஞ்ஞானிகள் அதை அறிய முயற்சி செய்யவும் இல்லை! அதுதான் சோகமானது!

ஆனால் மருத்துவர்கள் பலர் அதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

நம் சகபதிவர் டாக்டர் ப்ரூனோ அவர்களைப் போல ஜோதிடத்தில் ஆர்வமுள்ள
பல மருத்துவர்கள் தங்கள் தொழிலுக்கிடையேயும் அதற்கு நேரம் ஒதுக்கி
ஆராய்ந்து வருகிறார்கள்.

பெளர்ணமியன்று கடலிலும், ஆறுகளிலும், ஏன் எல்லா நீர் நிலைகளிலுமே நீரின்
ஓட்டம் ஆதிகமாக இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது
சந்திரன் அந்த நாட்களில் சூரியனுக்கு நேர் கோட்டில் எதிரில் இருப்பதால்
அன்று மட்டும் சந்திரனில் இருந்து வரும் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும் என்று
கண்டுபிடித்தார்கள்.

The magnetic rays from moon is more on that day and it affects all the watery bodies
என்று கண்டு பிடித்தார்கள். அதே காரணம்தான் மன நோயாளிகளுக்கு அன்றைய
தினம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் கண்டு பிடித்தார்கள்.

அதனால் அறுவை சிகிச்சையை அன்று செய்யாதே, நோயாளிக்கு ரத்தப் பெருக்கு
அதிகமாக இருக்கும் என்றும் சொல்லிவைத்தார்கள். இந்த உண்மையை இன்று
எத்தனை மருத்துவர்கள் அறிவார்களோ தெரியவில்லை!

உங்களுக்காவது தெரியட்டும் என்று அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படித்து அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்!

என்னிடம் நான் முப்பது ஆண்டுகளாகச் சேகரித்த புத்தகங்கள், கட்டுரைகள்,
பேப்பர் க்ளிப்பிங்ஸ் என்று ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தொடர்ந்து
இன்னும் பத்து வருடங்களுக்குப் பதிவுகள் எழுதலாம். அப்படியெல்லாம்
எழுதி உங்கள் பொறுமையைச் சோதிக்கப்போவதில்லை. எனக்கும்
அதற்கெல்லாம் நேரமும் இல்லை! அடிப்படைப் பாடங்களை நடத்திவிட்டு
விட்டு விடலாம் என்று உள்ளேன்

அந்த மாதிரிக்கட்டுரைகளை எழுதிவர்கள் பலத்த ஆராய்ச்சிகளுக்கிடையே
பல மாதிரி ஜாதகங்களுடன் விரிவாகவும், சுவாரசியமாகவும் எழுதியுள்ளார்கள்
அவற்றை எல்லாம் எடுத்து எழுதினால் A4 Sizeல் பத்தாயிரம் பக்கங்கள்
எழுதலாம். அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து எப்படி வலையில் ஏற்றுவது?

அத்துடன் காப்பி ரைட் பிரச்சினைகள் வந்து சேரும்.

கேன்சர் என்றால் கேன்சர் பேஷண்ட்டுகளாக நூறுபேரின் ஜாதகங்களை வாங்கி
அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். அதே போல இஞ்சினியர்கள், ஆடிட்டர்கள்
வங்கியாளர்கள் என்று ஒரு துறையைக் கூட விட்டுவைக்கவில்லை. காலசர்ப்ப
தோஷம், விதவை தோஷம், தரித்திர யோகம் என்று ஒன்றையும் விட்டு வைக்க
வில்லை!

ஒரு வரியில் சொன்னால் சூப்பராக இருக்கும்!

முடிந்தால் சிறு குறிப்புக்களை மட்டும் பின்னால் அதனதன் தலைப்பில் தருகிறேன்
------------------------------------------------------------------------------------------
இதய அறுவை சிகிச்சை நிபுனர் டாக்டர் மந்த்கே பெளர்ணமியன்று அறுவை
சிகிச்சை செய்தால் ரத்தப் பெருக்கு அதிகரிக்கும் என்று சொல்லியுள்ளதைக்
கீழே கொடுத்துள்ளேன்.

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படங்கள் பெரிதாகத் தெரியும்!

-------------------------------------------------------------
கீழே உள்ள படம் ரஷ்ய டாக்டரின் படம். அவர் அறுவை சிகிச்சை நிபுணர்.
அதோடு ஜோதிடத்தையும் முறையாகக் கல்லூரியில் கற்றவர். அறுவை
சிகிச்சையையும் ஜோதிடத்தின் தொடர்பையும் பற்றி சொல்லியிருக்கிறார்.
முழுதாகப் படித்துப் பாருங்கள்

ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அந்த மனிதர் ஜோதிடத்தைப்
படித்ததோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் வேறு செய்திருக்கிறார். ரஷ்யாவில்
உள்ள கம்யூனிஷ்ட்டுக்கள் ஜோதிடத்தை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது
தெரியவில்லை!
--------------------------------------------------------------------------------------------
The Article written by Dr.R Chandrasekaran in The Hindu in the year 1991

--------------------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு ஒன்று

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் ராஜேஷ் கோயல்M.B.BS. M.D (கவனிக்கவும் அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்கள்
எழுதியுள்ள பல கட்டுரைகளில் மாதிரிக்கு ஒன்று!-----------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு மேலும் ஒன்று

_____________________________________________________
தேவைப்பாட்டால் சொல்லுங்கள் மருத்துவர்களை வைத்தே மேலும் பல ஆதாரங்களைத் தருகிறேன்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

52 comments:

hotcat said...

Good Info...I knew full moon related with psychological behaviour but not with surgery and blood though.

-Shankar

King said...

அமாவாசையில் சிலருக்கு விஸர் கூடுவதையும் கிரக கதிர் வீச்சில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் என்ன சொல்கிறீர்கள் வாத்தியார். உங்களின் பதிவுகளை படித்து வருகிறேன் அருமை வாழ்த்துகள்

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
Good Info...I knew full moon related with psychological behaviour but not with surgery and blood though.
-Shankar/////

Thank you Shankar for your comment!
You are first to the classroom today

SP.VR. SUBBIAH said...

///King said...
அமாவாசையில் சிலருக்கு விஸர் கூடுவதையும் கிரக கதிர் வீச்சில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் என்ன சொல்கிறீர்கள் வாத்தியார். உங்களின் பதிவுகளை படித்து வருகிறேன் அருமை வாழ்த்துகள்////

வாருங்கள் இலங்கை அன்பரே!
அமாவாசையன்று சூரியன் சந்‍திரன் ஆகிய இருகோள்களும் ஒரே டிகிரியில் இருக்கும்
அன்றும் இதே பாதிப்புக்கள் இருக்கும். தமிழக கிராமங்களில் சொல்வார்கள், அமாவாசை தாண்டினால் பிழைத்துக் கொள்வான் என்று. அதுவும் இதை வைத்தே!

கல்கிதாசன் said...

எப்படி இப்படி ஆதாரத்தோட அடிக்கிறீங்க. இப்படி எல்லாம் கேள்வி கேப்பானுங்க என்று தெரிஞ்சு எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீங்க போல. அருமை.

/////ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது////

அவரும் blog வச்சு பதிவுகள் இட்டிருந்தால் அதுக்கும் ஆட்கள் இருந்திருப்பாங்க. :)))))))

நவநீத்(அ)கிருஷ்ணன் said...

no comments.
:-|

Monickam said...

I feel you are trying to waste your time and energy and you don’t need to prove anything to anybody (the unbelievers). The world has seen so may of these so called unbelievers and they are the other face of the same coin.

-Monickam

hotcat said...

///Thank you Shankar for your comment!
You are first to the classroom today///

Firsta vandha onnum illaiya?:-)))

-Shankar

பொதிகைத் தென்றல் said...

புரியாதவர்களுக்கும்,
புரிந்தும் புரியாமல் இருப்பவர்களுக்கும்,
புரிந்தும் புரியாதது மாதிரி நடிப்பவர்களுக்கும்,
புரிந்ததே தெரியாமல்
கனவுலகில் மிதப்பவர்களுக்கும்,
புரிந்த பிறகும் புரியவில்லை எனச்
சாதிப்பவர்களூக்ம்.

புரியம் வகையில் பிரியாமாய்
புகைப்பட ஆதாரத்துடன்

சூப்பர் "பன்ஞ்"

புருனோ Bruno said...

அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சாலை விபத்துக்கள் அதிகம் இருப்பதும், மனநல காப்பகங்களில் உள்ள பிணியாளர்களின் நோயின் தன்மை மாறுபடுவதும் பல காலமாகவே அறியப்படும் ஒன்றுதான்

அதே போல் கடலில் ஏற்படும் மாற்றங்களை Neap Tide / Spring Tide என்று கூறுவார்கள்

நண்டு சாப்பிடுபவர்களை கேட்டால் சொல்வார்கள் - அமாவாசை அன்று சதை எவ்வளவு இருக்கும், அஷ்டமி அன்று எவ்வளவு இருக்கும், பௌர்ணமி அன்று எவ்வளவு இருக்கும் என்று

--

பின்குறிப்பு

தற்பொழுது நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது சனி மாலை, ஞாயிறு அதிகாலை தான். காரணம் சொல்லவும் வேண்டுமா. நமது இளைய தலைமுறை செல்லும் பாதை வருத்தமளிக்கிறது. தனது பெயரை கூட ஒழுங்காக சொல்ல முடியாத நிலையில் கி.க.சாலையில் வாகனம் ஓட்டி அதை மரத்தில் இடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சனி பின்னிரவு / ஞாயிறு அதிகாலை அதிகரித்துள்ளது.

--

விஜய் said...

//தற்பொழுது நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது சனி மாலை, ஞாயிறு அதிகாலை தான். காரணம் சொல்லவும் வேண்டுமா. நமது இளைய தலைமுறை செல்லும் பாதை வருத்தமளிக்கிறது. தனது பெயரை கூட ஒழுங்காக சொல்ல முடியாத நிலையில் கி.க.சாலையில் வாகனம் ஓட்டி அதை மரத்தில் இடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சனி பின்னிரவு / ஞாயிறு அதிகாலை அதிகரித்துள்ளது.

இன்றய இளைஞர்களுக்கு எல்லாம் " just like that" தான்.

குடி என்பது அன்றாட வாடிக்கையாய் வலம் வருகிறது.
அனுபவி ராஜா அனுபவி என்பது
கொடி கட்டுப் பறக்கிறது.

இவர்களை
காப்பற்ற எப்போவருவாரோ

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

திவா said...

1. நாங்கள் பார்த்த வரை செவ்வாய் கிழமைகளில் செய்யும் ரணசிகித்சையில் அதிக ரத்தபோக்கு இருக்கிறது.

2. படங்களை எப்படி படம் பிடிக்கிறீர்கள்? சிலவற்றில் தெளிவு இல்லை. குறிப்பாக ரஷ்யர் குறித்ததில்.
இப்படி பத்திரிகையில் வருவதை படம் பிடிக்க மாக்ரோ லென்ஸ் அல்லது மாக்ரோ மோட் பயன்படுத்தவேண்டும். இதில் எனக்கு சற்று அனுபவம் இருக்கிறது. தேவையானால் மின்னஞ்சலுங்கள்.

SP.VR. SUBBIAH said...

//////கல்கிதாசன் said...
எப்படி இப்படி ஆதாரத்தோட அடிக்கிறீங்க. இப்படி எல்லாம் கேள்வி கேப்பானுங்க
என்று தெரிஞ்சு எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீங்க போல. அருமை.
/////ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது////
அவரும் blog வச்சு பதிவுகள் இட்டிருந்தால் அதுக்கும் ஆட்கள் இருந்திருப்பாங்க. :)))))))///////

இல்லை இயற்கையாகவே என்னிடம் சேகரிப்புப் பழக்கம் உண்டு! அதுவும் படிக்க ஆரம்பிக்கும்
போது அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்ததால் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அதிகமாகவே
சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஒருவன் பெட்டிக்கடை வைத்திருப்பவனையும், முகேஷ் அம்பானியையும் ஒப்பிட்டிப் பேசினால எப்படி இருக்கும்?
அதுபோல இவர்கள் கிளி ஜோதிடக்காரனையும், ஜோதிடத்தையும் ஒப்பிட்டுப் பேசியவுடன், எனக்கு ஏற்பட்ட
வருத்தம் கொஞ்ச நஞ்சமல்ல!

காலதேவன் ஒவ்வொரு மனிதனையும், அறுபது வயதிற்குள் தன்னுடைய ஜாதகத்தைத் தூக்க வைப்பான்.
இவர்கள் அதற்கு முற்பட்ட காலத்திலேயே தங்களுடைய ஜாதகத்தைக் கையில் தூக்குவார்கள். அப்போது
உணர்வார்கள்:-))))

SP.VR. SUBBIAH said...

//////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
no comments. :-|////

ஆனால் வெறுங்கையோடு போகவேண்டாம்; நன்றியைத் தருகிறேன் எடுத்துச் செல்லுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////Monickam said...
I feel you are trying to waste your time and energy and you don’t need
to prove anything to anybody (the unbelievers). The world has seen so may of these
so called unbelievers and they are the other face of the same coin.
-Monickam///////

யாரையோ கடித்தால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். என்னை வந்து
கடிக்கும்போது சும்மா இருக்கலாமா நண்பரே?

SP.VR. SUBBIAH said...

///////hotcat said...
///Thank you Shankar for your comment!
You are first to the classroom today///
Firsta vandha onnum illaiya?:-)))
-Shankar//////

நான் படிக்கும்போது முதலில் வருகிறவர்கள், வாத்தியாரின் மேஜை நாற்காலி, எழுதும்
கரும்பலகை போன்றவற்றை சுத்தம் செய்வோம். இது இணைய வகுப்பு ஆனதால்
யாருக்கும் அந்த வேலையும் கூட இல்லை பாருங்கள் சங்கர்!

SP.VR. SUBBIAH said...

//////பொதிகைத் தென்றல் said...
புரியாதவர்களுக்கும்,
புரிந்தும் புரியாமல் இருப்பவர்களுக்கும்,
புரிந்தும் புரியாதது மாதிரி நடிப்பவர்களுக்கும்,
புரிந்ததே தெரியாமல்
கனவுலகில் மிதப்பவர்களுக்கும்,
புரிந்த பிறகும் புரியவில்லை எனச்
சாதிப்பவர்களூக்ம்.
புரியம் வகையில் பிரியாமாய்
புகைப்பட ஆதாரத்துடன்
சூப்பர் "பன்ஞ்"//////

பொதிகையாரே நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////புருனோ Bruno said...
அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சாலை விபத்துக்கள் அதிகம் இருப்பதும்,
மனநல காப்பகங்களில் உள்ள பிணியாளர்களின் நோயின் தன்மை மாறுபடுவதும் பல
காலமாகவே அறியப்படும் ஒன்றுதான்//////

நன்றி டாக்டர், அது இன்று உள்ள பெரியவர்களுக்குத் தெரியும், பெரும்பாலான
இளைஞர்களுக்குத் தெரியாது! சிலர் டாஸ்மாக் கடைக்காரனை மதிக்கும் அளவிற்குக்கூட
பெரிசுகளை மதிப்பதில்லை!

/////////அதே போல் கடலில் ஏற்படும் மாற்றங்களை Neap Tide / Spring Tide என்று கூறுவார்கள்
நண்டு சாப்பிடுபவர்களை கேட்டால் சொல்வார்கள் - அமாவாசை அன்று சதை எவ்வளவு இருக்கும்,
அஷ்டமி அன்று எவ்வளவு இருக்கும், பௌர்ணமி அன்று எவ்வளவு இருக்கும் என்று////////

இது உண்மையில் புதிய செய்தி. நன்றி டக்டர்

////////பின்குறிப்பு
தற்பொழுது நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது சனி மாலை,
ஞாயிறு அதிகாலை தான். காரணம் சொல்லவும் வேண்டுமா.
நமது இளைய தலைமுறை செல்லும் பாதை வருத்தமளிக்கிறது.
தனது பெயரை கூட ஒழுங்காக சொல்ல முடியாத நிலையில் கி.க.சாலையில் வாகனம்
ஓட்டி அதை மரத்தில் இடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சனி பின்னிரவு / ஞாயிறு அதிகாலை
அதிகரித்துள்ளது.//////

அற்ப ஆயுளில் மேலே போக வேண்டும். அல்லது முடமாக வேண்டும் என்பது அவர்களின்
ஜாதகத்தில் இருக்கலாம் டாக்டர். முடமாகிக் கிடப்பதைவிட, ஒரே அடியில் மேலே போய்விடுவது
சாலச் சிறந்தது, என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?:-)))))))

SP.VR. SUBBIAH said...

/////விஜய் said...
//தற்பொழுது நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது சனி
மாலை, ஞாயிறு அதிகாலை தான். காரணம் சொல்லவும் வேண்டுமா.
நமது இளைய தலைமுறை செல்லும் பாதை வருத்தமளிக்கிறது.
தனது பெயரை கூட ஒழுங்காக சொல்ல முடியாத நிலையில்
கி.க.சாலையில் வாகனம் ஓட்டி அதை மரத்தில் இடிக்கும்
நபர்களின் எண்ணிக்கை சனி பின்னிரவு / ஞாயிறு அதிகாலை
அதிகரித்துள்ளது./////
///// இன்றய இளைஞர்களுக்கு எல்லாம் " just like that" தான்.
குடி என்பது அன்றாட வாடிக்கையாய் வலம் வருகிறது.
அனுபவி ராஜா அனுபவி என்பது கொடி கட்டுப் பறக்கிறது.
இவர்களை
காப்பற்ற எப்போவருவாரோ
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com///////

இவர்களளக் காப்பாற்ற caretaker வரமட்டார் undertakerதான் வருவார்!
undertaker என்றால் தெரியுமல்லவா?

SP.VR. SUBBIAH said...

//////திவா said...
1. நாங்கள் பார்த்த வரை செவ்வாய் கிழமைகளில் செய்யும் ரணசிகித்சையில்
அதிக ரத்தபோக்கு இருக்கிறது.///////

அதுபற்றிப் படித்ததில்லை!

///////// 2. படங்களை எப்படி படம் பிடிக்கிறீர்கள்? சிலவற்றில் தெளிவு இல்லை.
குறிப்பாக ரஷ்யர் குறித்ததில். இப்படி பத்திரிகையில் வருவதை படம் பிடிக்க
மாக்ரோ லென்ஸ் அல்லது மாக்ரோ மோட் பயன்படுத்தவேண்டும். இதில்
எனக்கு சற்று அனுபவம் இருக்கிறது. தேவையானால் மின்னஞ்சலுங்கள்.//////

வெறும் ஸ்கேனரில் வைத்து - jpeg Formatல் வலையேற்றுகிறேன். என்ன செய்தால்
சிறப்பாக இருக்கும் சொல்லுங்கள்! உங்கள் மின்னஞ்சலை, எனது மின்னஞ்சலின்
வழியாக அறியத்தாருங்கள். அதே படத்தை அனுப்பிவைக்கிறேன்

Geekay said...

அய்யா வணக்கம்,
நம் பாடம் திசை மாறி போய்க்கொண்டுள்ளது .
என்னைப்போல மாணவர்களுக்கு எமாற்றம்மாக இருக்கிறது..
தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும்.

ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலடிகொள்ள வேண்டும் .

அன்புள்ள மாணவன்.

கோவை விமல்(vimal) said...

//@ SP.VR.SUBBIAH
ஒரு வரியில் சொன்னால் சூப்பராக இருக்கும்!//

டாப் டக்கர்...

//நன்றி டாக்டர், அது இன்று உள்ள பெரியவர்களுக்குத் தெரியும், பெரும்பாலான
இளைஞர்களுக்குத் தெரியாது! சிலர் டாஸ்மாக் கடைக்காரனை மதிக்கும் அளவிற்குக்கூட
பெரிசுகளை மதிப்பதில்லை!//

வாத்தியரே அந்த சிலரில் என்னை போலவும் நல்ல மாணவர்கள் இருக்கிறார்கள், உங்களை போன்றவர்களின் ஆசியினால்..(பிண்சிலெ பழுத்தது.

டாக்டர் ப்ருனோ-வின் விளக்கம் அருமை.

Sumathi. said...

ஹலோ சார்,

//ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அந்த மனிதர் ஜோதிடத்தைப்
படித்ததோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் வேறு செய்திருக்கிறார். //
இதுக்கு நான் சொல்ல நினைத்த கருத்து ரஷ்யர்களுக்கு இதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இருக்காதே, ஆனால் அவர் விதிவிலக்கு போல.

//தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும்.
ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலட்டிகொள்ள வேண்டும்.//
ஆமாம் இதத் தான் நானும் சொல்ல விரும்புகிறேன் ஐய்யா.வாதம் செய்யறவங்க கிட்ட பேசலாம், விதண்டாவாதம் செய்யறவங்க கிட்ட பேசறதே waste of time and energy.just ignore them.

SP.VR. SUBBIAH said...

////Geekay said...
அய்யா வணக்கம்,
நம் பாடம் திசை மாறி போய்க்கொண்டுள்ளது .
என்னைப்போல மாணவர்களுக்கு எமாற்றம்மாக இருக்கிறது..
தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும்.
ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலட்டிகொள்ள வேண்டும் .
அன்புள்ள மாணவன்./////

வகுப்பறையின் மேல் கல் எறிந்‍துகொண்டிருக்கிறார்கள். டமால், டமால் என்று சத்ததுடன் கற்கள் வந்‍து விழுந்‍துகொண்டிருக்கின்றன. அவர்களை அனுப்பிவிட்டு வந்‍து நிம்மதியாகப் பாடம் நடத்துகிறேன் ஜீக்கே.

அடுத்த வாரம் முதல் வாரம் 2 வகுப்புக்கள் நிச்சயமாக‌ப் பாடம் உண்டு. இந்‍த வாரம் விடுபட்ட பாடங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸும் உண்டு:‍))))

////கோவை விமல்(vimal) said...
//@ SP.VR.SUBBIAH
ஒரு வரியில் சொன்னால் சூப்பராக இருக்கும்!//
டாப் டக்கர்...
//நன்றி டாக்டர், அது இன்று உள்ள பெரியவர்களுக்குத் தெரியும், பெரும்பாலான இளைஞர்களுக்குத் தெரியாது! சிலர் டாஸ்மாக் கடைக்காரனை மதிக்கும் அளவிற்குக்கூட பெரிசுகளை மதிப்பதில்லை!//
வாத்தியரே அந்த சிலரில் என்னை போலவும் நல்ல மாணவர்கள் இருக்கிறார்கள், உங்களை போன்றவர்களின் ஆசியினால்..(பிண்சிலெ பழுத்தது.)
டாக்டர் ப்ருனோ-வின் விளக்கம் அருமை./////

பிஞ்சிலே பழுத்தது என்றால், யாராவது பறித்துக்கொண்டு போய்விடப்போகிறார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!:‍))))

SP.VR. SUBBIAH said...

////Sumathi. said...
ஹலோ சார்,
//ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அந்த மனிதர் ஜோதிடத்தைப்
படித்ததோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் வேறு செய்திருக்கிறார். //
இதுக்கு நான் சொல்ல நினைத்த கருத்து ரஷ்யர்களுக்கு இதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இருக்காதே, ஆனால் அவர் விதிவிலக்கு போல.
//தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும்.
ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலட்டிகொள்ள வேண்டும்.//
ஆமாம் இதத் தான் நானும் சொல்ல விரும்புகிறேன் ஐய்யா.வாதம் செய்யறவங்க கிட்ட பேசலாம், விதண்டாவாதம் செய்யறவங்க கிட்ட பேசறதே waste of time and energy.just ignore tஹெம்.////

நீங்கள் சொவது உண்மைதான் சகோதரி!
அடுத்த வாரம் முதல் வாரம் 2 வகுப்புக்கள் நிச்சயமாக‌ப் பாடம் உண்டு. இந்‍த வாரம் விடுபட்ட பாடங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸும் உண்டு:‍))))

தமாம் பாலா (dammam bala) said...

அரிய பல தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் தந்துள்ளீர்கள் அன்பு வாத்தியாரே..

வழக்கமாய் படங்கள் தெளிவாக இருக்கும். இந்த முறை சில கொஞ்சம் கலங்கியது போல். ஸ்கேன் செய்யும் போது 300 ட்பிஐ வைக்கலாம். கருப்பில் வெள்ளை எழுத்துக்கு நெகடிவ் இமேஜ் ஆக மாற்றினால் வெள்ளையில் கருப்பு எழுத்தாகிவிடும். எல்லாம் செய்ய நேரம் தான் வேண்டும்.

ஹிட்லர் அமாவசையில் யுத்தம் தொடங்கியது பற்றியும் தேதிகளின் தனிப்பட்ட இன்புளுயன்ஸ் பற்றியும் காலம் சென்ற பண்டிட் சேதுராமன் புத்தகத்தில் விரிவாக படித்த நினைவு..

ஜால்ராவிலிருந்து மிருதங்கத்துக்கு மாறி விட்டேன்.. அப்பாடா :-)))

DB= Dammam Bala = Dwara Balakan :)

கோவை விமல்(vimal) said...

//பிஞ்சிலே பழுத்தது என்றால், யாராவது பறித்துக்கொண்டு போய்விடப்போகிறார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்!:‍)))) //

அதற்கு இன்னும் இரண்டு வருட காலம் இருக்கிறது என்று நீங்கள் தானே சொன்னீர்கள் வாத்தியரே.

SP.VR. SUBBIAH said...

/////தமாம் பாலா (dammam bala) said...
அரிய பல தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் தந்துள்ளீர்கள் அன்பு வாத்தியாரே..
வழக்கமாய் படங்கள் தெளிவாக இருக்கும். இந்த முறை சில கொஞ்சம் கலங்கியது போல். ஸ்கேன் செய்யும் போது 300 ட்பிஐ வைக்கலாம். கருப்பில் வெள்ளை எழுத்துக்கு நெகடிவ் இமேஜ் ஆக மாற்றினால் வெள்ளையில் கருப்பு எழுத்தாகிவிடும். எல்லாம் செய்ய நேரம் தான் வேண்டும்./////

முயன்று பார்க்கிறேன்!

/////ஹிட்லர் அமாவசையில் யுத்தம் தொடங்கியது பற்றியும் தேதிகளின் தனிப்பட்ட இன்புளுயன்ஸ் பற்றியும் காலம் சென்ற பண்டிட் சேதுராமன் புத்தகத்தில் விரிவாக படித்த நினைவு..////

என்னிடமும் அதுபோன்ற தகவல்கள் உள்ளன!

////ஜால்ராவிலிருந்து மிருதங்கத்துக்கு மாறி விட்டேன்.. அப்பாடா :‍)))
DB= Dammam Bala = Dwara Balakan :)///

எதற்கு மாறினாலும் எனக்கு சம்மதமே. அதுபோல எவ்வளவு சத்தம் வந்‍தாலும் நான் பொறுத்துக் கொள்வேன்..ஆனால் பக்கத்து வகுப்புக்களில் இருந்து புகார் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.:‍))))

ambi said...

//அரிய பல தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் தந்துள்ளீர்கள் அன்பு வாத்தியாரே..

வழக்கமாய் படங்கள் தெளிவாக இருக்கும். இந்த முறை சில கொஞ்சம் கலங்கியது போல். //

வழிமொழிகிறேன்.

என்ன குருவே, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? :))

சரவணகுமரன் said...

பிரமிக்கத்தக்கது உங்கள் தகவல் சேகரிப்பு...

அறிவன்#11802717200764379909 said...

திரு சுப்பையா ஐயா,
கடந்த பதிவில் நடந்த கும்மிகளைப் பார்த்த போது ஒருங்கே வியப்பும் வேதனையும் ஏற்பட்டது.

சோதிடம் என்பது ஒரு கலை.
அது மனித வாழ்வுக்குப் பயன் தரக்கூடியது என்பது அதன் உப்யோகிப்பாளருக்கான ஒரு விதயம்.அதை உபயோகிக்க விரும்பாதவர் விட்டு விடலாம்;ஆனால் உப்யோகிப்பவரை ,'நீ ஏன் உபயோகிக்கிறாய் எனக் கேட்க நியாயம் இல்லை'.

இன்னும் தெளிவாக,எளிதாக சொல்ல வேண்டுமானால்,பரதக் கலையையோ அல்லது கர்நாடக சங்கீதத்தையோ எடுத்துக் கொள்ளலாம்;அதைப் பற்றித் தெரியாத ஒருவனுக்கு,அதை விரும்பாத ஒருவனுக்கு ‘ஆஆஆஆஆஆஆஆ'என எந்நேரமும் கத்தும் ஒரு கூச்சலாகவும்,தையா தக்கா என விளங்காமல் ஆடும் ஒரு ஆட்டமாகவுமே தெரியும்.
ஆனால் அதில் ரசனையும் லயிப்பும் உள்ளவர்கள் அதை அனுபவிப்பார்கள்.

அதைப் போலவே சோதிடமும்;ஆனால் இதில் ஒரு கூடுதல் அனுகூலமாக அதை மனித வாழ்வுடன் இணைத்து பலன்களைப் பார்க்க முடிகிறது.

அரைகுறை சங்கீதக்காரனின் அபசுரம் போன்றதே அரைகுறை சோதிடக் காரனின் பலன்களும் !

அந்த அரைகுறையி(நபரி)ன் அறியாமையை சோதிடத்தின் மேல் திணிப்பது,அந்த அரைகுறையின் அறியாமையை விடப் பெரிய அறியாமை.

இவ்விதமான சர்ச்சைகளில் உங்கள் நேரத்தை வீணடிப்பது வேண்டாத ஒன்று.

அவர்கள் அறிய வேண்டியதை மட்டுமே அறியக் கடவர்;அறிய அரிதானது ஒரு உயிருக்கு வாய்ப்பது அந்த உயிரின் ஆன்ம நிலையைப் பொறுத்தது என்கிறது சைவ சித்தாந்தக் கொள்கை.

எனவே,பொருட்படுத்தாது உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

Geekay said...

//வகுப்பறையின் மேல் கல் எறிந்‍துகொண்டிருக்கிறார்கள். டமால், டமால் என்று சத்ததுடன் கற்கள் வந்‍து விழுந்‍துகொண்டிருக்கின்றன. அவர்களை அனுப்பிவிட்டு வந்‍து நிம்மதியாகப் பாடம் நடத்துகிறேன் ஜீக்கே.

அடுத்த வாரம் முதல் வாரம் 2 வகுப்புக்கள் நிச்சயமாக‌ப் பாடம் உண்டு. இந்‍த வாரம் விடுபட்ட பாடங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸும் உண்டு:‍))))//

Thanks Sir,
:-))

SP.VR. SUBBIAH said...

/////ambi said...
//அரிய பல தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் தந்துள்ளீர்கள் அன்பு வாத்தியாரே..
வழக்கமாய் படங்கள் தெளிவாக இருக்கும். இந்த முறை சில கொஞ்சம் கலங்கியது போல். //
வழிமொழிகிறேன்.
என்ன குருவே, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? :))/////

குழப்பம் எல்லாம் எனக்குக் கிடையாது. அப்படி வந்தாலும் கவியரசர் கொடுத்த மருந்து இருக்கிறது!:-)))

SP.VR. SUBBIAH said...

//////சரவணகுமரன் said...
பிரமிக்கத்தக்கது உங்கள் தகவல் சேகரிப்பு..//////

மற்றவர்களுக்கு உபயோகப் படுகிறது என்ற மகிழ்ச்சி
எனக்கு வேறு விதமான பிரமிப்பைக் கொடுக்கும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////அறிவன்#11802717200764379909 said...
திரு சுப்பையா ஐயா,
கடந்த பதிவில் நடந்த கும்மிகளைப் பார்த்த போது ஒருங்கே வியப்பும் வேதனையும் ஏற்பட்டது.
சோதிடம் என்பது ஒரு கலை.
அது மனித வாழ்வுக்குப் பயன் தரக்கூடியது என்பது அதன் உப்யோகிப்பாளருக்கான ஒரு விதயம்.அதை உபயோகிக்க விரும்பாதவர் விட்டு விடலாம்;ஆனால் உப்யோகிப்பவரை ,'நீ ஏன் உபயோகிக்கிறாய் எனக் கேட்க நியாயம் இல்லை'.
இன்னும் தெளிவாக,எளிதாக சொல்ல வேண்டுமானால்,பரதக் கலையையோ அல்லது கர்நாடக சங்கீதத்தையோ எடுத்துக் கொள்ளலாம்;அதைப் பற்றித் தெரியாத ஒருவனுக்கு,அதை விரும்பாத ஒருவனுக்கு ‘ஆஆஆஆஆஆஆஆ'என எந்நேரமும் கத்தும் ஒரு கூச்சலாகவும்,தையா தக்கா என விளங்காமல் ஆடும் ஒரு ஆட்டமாகவுமே தெரியும்.
ஆனால் அதில் ரசனையும் லயிப்பும் உள்ளவர்கள் அதை அனுபவிப்பார்கள்.
அதைப் போலவே சோதிடமும்;ஆனால் இதில் ஒரு கூடுதல் அனுகூலமாக அதை மனித வாழ்வுடன் இணைத்து பலன்களைப் பார்க்க முடிகிறது.
அரைகுறை சங்கீதக்காரனின் அபசுரம் போன்றதே அரைகுறை சோதிடக் காரனின் பலன்களும் !
அந்த அரைகுறையி(நபரி)ன் அறியாமையை சோதிடத்தின் மேல் திணிப்பது,அந்த அரைகுறையின் அறியாமையை விடப் பெரிய அறியாமை.
இவ்விதமான சர்ச்சைகளில் உங்கள் நேரத்தை வீணடிப்பது வேண்டாத ஒன்று.
அவர்கள் அறிய வேண்டியதை மட்டுமே அறியக் கடவர்;அறிய அரிதானது ஒரு உயிருக்கு வாய்ப்பது அந்த உயிரின் ஆன்ம நிலையைப் பொறுத்தது என்கிறது சைவ சித்தாந்தக் கொள்கை.
எனவே,பொருட்படுத்தாது உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்லுங்கள்./////

பெயருக்குத் தகுந்தமாதிரி அறிவோடு அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

வகுப்பறை மீது பத்துக்கும் மேற்பட்டவர்கள் கல் எறிந்திருக்கிறார்கள். அவர்களில்
நான் மிகவும் மதிக்கும் கோவை நண்பரும் அடக்கம். அவர் எறிந்ததுதான் எனக்கு
மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. அதற்குப் பதிலாக அவர் வகுப்பறைக்குள்ளேயே
வந்து என்னைப் பிரம்பால் அடித்திருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பேன்.

மணிவேல் said...

ஐயா, ஜோதிடத்துக்கு சிறப்பு கூட்டும்
அருமையான கட்டுரைகள். நன்றி

SP.VR. SUBBIAH said...

//////மணிவேல் said...
ஐயா, ஜோதிடத்துக்கு சிறப்பு கூட்டும்
அருமையான கட்டுரைகள். நன்றி////

தங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அய்யா, ///////Geekay said... அய்யா வணக்கம், நம் பாடம் திசை மாறி போய்க்கொண்டுள்ளது .
என்னைப்போல மாணவர்களுக்கு எமாற்றம்மாக இருக்கிறது.. தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும். ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலட்டிகொள்ள வேண்டும் .///// ரிப்பீட்டே!

//வாத்தியார் சொன்னது: வகுப்பறையின் மேல் கல் எறிந்‍துகொண்டிருக்கிறார்கள். டமால், டமால் என்று சத்ததுடன் கற்கள் வந்‍து விழுந்‍துகொண்டிருக்கின்றன. //
மிகுந்த வருத்தத்துடன் சொல்லுகிறேன். டமால் சத்தம் இணையக் காலத்தில் கேட்காமல் இருக்க வழி இருக்கின்றது. "மூட", "வக்காலத்து" என்று சொல்லி விட்டுப் போவது எங்களையும் சேர்த்துத் தான். எனக்கு வலிக்கவில்லை:-) I don't care about pointless blabber!

காய்த்த மரம் தான் கல்லடி படும். நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் செல்லக் கூடாதா?

ஆழ்ந்த சோதிடம் குறித்த கேள்விகள் தவிர்த்து பதில் சொல்லத் தேவையில்லை. ஏன் இந்த டிஸ்கி? :-(((( எனக்கு இருக்கும் தன்னம்பிக்கை கல்லெறியும் பலருக்கு இல்லை. உங்களிடம் இருக்கும் கல்வியை விரித்துக் கொடுக்கிறீர்கள், இருக்கும் இந்த அரிய வாழ்க்கை நேரத்தில் உங்கள் அரிய பணியைத் தொடருங்கள், இவர்களுக்காக வீணடிக்கும் நேரம் not worth it! We need not waste our time which could have been spent learning what we want to learn.

தூசி. தட்டியாச்சு. போய்க் கொண்டே இருப்போம்.

hotcat said...

Dear Sir,

I really dont want to deivate the normal class...but I am interested to know about the food habits related to astrology...I am Food Technologist/scientist....Do you have any correlation or data...atleast you would like pass it to me.

-Shankar

செந்தழல் ரவி said...

கேள்வி கேட்டால் கல்லெறிவதாக சொல்வதா ?

என்ன வாத்தியார் நீர் ?

டென்ஷன் வேண்டாம்.

நன்றி.

SP.VR. SUBBIAH said...

//////Blogger கெக்கேபிக்குணி (05430279483680105313!) said..
அய்யா, ///////Geekay said... அய்யா வணக்கம், நம் பாடம் திசை மாறி போய்க்கொண்டுள்ளது .
என்னைப்போல மாணவர்களுக்கு எமாற்றம்மாக இருக்கிறது.. தயவு செய்து நம் ஜோதிட பாடங்களை தொடரவும். ஜோதிடத்தை நம்பாதவர்களை பற்றி நாம் ஏன் அலட்டிகொள்ள வேண்டும் .///// ரிப்பீட்டே!
//வாத்தியார் சொன்னது: வகுப்பறையின் மேல் கல் எறிந்‍துகொண்டிருக்கிறார்கள். டமால், டமால் என்று சத்ததுடன் கற்கள் வந்‍து விழுந்‍துகொண்டிருக்கின்றன. //
மிகுந்த வருத்தத்துடன் சொல்லுகிறேன். டமால் சத்தம் இணையக் காலத்தில் கேட்காமல் இருக்க வழி இருக்கின்றது. "மூட", "வக்காலத்து" என்று சொல்லி விட்டுப் போவது எங்களையும் சேர்த்துத் தான். எனக்கு வலிக்கவில்லை:-) I don't care about pointless blabber!
காய்த்த மரம் தான் கல்லடி படும். நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் செல்லக் கூடாதா?
ஆழ்ந்த சோதிடம் குறித்த கேள்விகள் தவிர்த்து பதில் சொல்லத் தேவையில்லை. ஏன் இந்த டிஸ்கி? :-(((( எனக்கு இருக்கும் தன்னம்பிக்கை கல்லெறியும் பலருக்கு இல்லை. உங்களிடம் இருக்கும் கல்வியை விரித்துக் கொடுக்கிறீர்கள், இருக்கும் இந்த அரிய வாழ்க்கை நேரத்தில் உங்கள் அரிய பணியைத் தொடருங்கள், இவர்களுக்காக வீணடிக்கும் நேரம் not worth it! We need not waste our time which could have been spent learning what we want to learn.
தூசி. தட்டியாச்சு. போய்க் கொண்டே இருப்போம்.////

மிக்க நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger hotcat said...
Dear Sir,
I really dont want to deivate the normal class...but I am interested to know about the food habits related to astrology...I am Food Technologist/scientist....Do you have any correlation or data...atleast you would like pass it to me.
-Shankar///////

ஜோதிடத்தை எழுதிய முனிவர்கள் இருந்த காலத்திலும், பிறகு அதை
விரிவாக்கி எழுதிய அறிஞர்கள் காலத்திலும் பணிகளில் இவ்வளவு பிரிவுகள்
இருந்ததில்லை! ஆனால் சென்ற முப்பது ஆண்டுகளுக்குள் நிறைய ஜோதிட
ஆர்வலர்கள் பலதுறைச் ஜாதகங்களைவைத்து ஆராய்ந்து ஏராளமான் கட்டுரைகள்
எழுதியுள்ளார்கள். தேடினால் கிடைக்கும் தற்சமயம் எனக்கு அதற்கு நேரமில்லை.
மன்னிக்கவும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger செந்தழல் ரவி said...
கேள்வி கேட்டால் கல்லெறிவதாக சொல்வதா ?
என்ன வாத்தியார் நீர் ?
டென்ஷன் வேண்டாம்./////

என் வயதிற்கு டென்ஷனே வராது! நீங்கள்தான் டெஷனாகி
'என்ன வாத்தியார் நீர்' என்று கேட்டிருக்கிறீர்கள்:-))))))

ஜோதிடத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள் அதைப் புரட்டு
என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

அந்த வளமையான கலையை, என்னுடைய அரிய நேரத்தைச்
செலவழித்து இலவசப் பாடமாக நடத்தும்போது அப்படிப்பட்ட
சொல்லைக்கேட்கும் போது அது எப்படித்தோன்றும் நண்பரே?

கல்லாகத் தோன்றுமா? அல்லது கனியாகத் தோன்றுமா?

கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன் சென்று பாருங்கள்
http://mohankandasami.blogspot.com/2008/07/blog-post_09.html

SP.VR. SUBBIAH said...

கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன் சென்று பாருங்கள்.
பின்னூட்டங்கள் அனைத்தையும் படியுங்கள். அப்போது தெரியும்

http://mohankandasami.blogspot.com/2008/07/blog-post_09.html

கல்கிதாசன் said...

ஓட்டை குடத்தில எவ்வளவு தண்ணி ஊற்றினாலும் அது நிறைய போவதில்லை.

இப்படியான நண்பர்கள் கிடைத்ததற்கு வாத்தியார் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

SP.VR. SUBBIAH said...

////////கல்கிதாசன் said...
ஓட்டை குடத்தில எவ்வளவு தண்ணி ஊற்றினாலும் அது நிறைய போவதில்லை.
இப்படியான நண்பர்கள் கிடைத்ததற்கு வாத்தியார் ஐயா அவர்களுக்கு
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.//////

அடிப்படையாக அனைவருமே நல்லவர்கள். கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான்
செய்யும். ஒத்த கருத்து என்பது எங்கேயும் இல்லையே!

கல்கிதாசன் said...

கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் அடுத்தவர்களின் கருத்துக்களில் நம்முடைய கருத்துக்களிலிருந்து வேறுபாடு இருக்கக்கூடாது என்று எப்படி நினைக்கிறது.
இப்படி நினைப்பது அடுத்தவர்களின் "சுயமரியாதையை" பாதிப்பதாக அமையாதா?

SP.VR. SUBBIAH said...

/////கல்கிதாசன் said...
கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் அடுத்தவர்களின் கருத்துக்களில் நம்முடைய கருத்துக்களிலிருந்து வேறுபாடு இருக்கக்கூடாது என்று எப்படி நினைக்கிறது.
இப்படி நினைப்பது அடுத்தவர்களின் "சுயமரியாதையை" பாதிப்பதாக அமையாதா?///

ஒத்த கருத்து என்பது சாத்தியம் இல்லை! அதை வலியுறுத்திச் செயல்படும்போதுதான்
பிரச்சினைகள் ஏற்படுகின்றன! மனச்சங்கடங்கள் ஏற்படுகின்றன!
கருத்து சுதந்திரத்தையும், உரிமையையும் ஒவ்வொருவரும் மதித்து நடப்பதுதான் நல்லது!

கூடுதுறை said...

ஐயா,

நமது வகுப்பின் மீது விழும் கல்லடிக்காக நானும் ஒரு பதிவு இட்டுவிட்டேன்...

http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html

இதனால் சாக்கடையின் மீது கல்லடிக்கும் விளைவுதான் ஏற்படும். தாங்கிக்கொள்வேன்

SP.VR. SUBBIAH said...

/////கூடுதுறை said...
ஐயா,
நமது வகுப்பின் மீது விழும் கல்லடிக்காக நானும் ஒரு பதிவு இட்டுவிட்டேன்...
http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html/////

உங்கள் தனிப்பதிவிற்காக நன்றி கூடுதுறை!