மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.7.08

வகுப்பறை: டிஸ்கி பதிவு எண் ஒன்று!


சிகரெட் பாக்கெட்டில் எல்லாம் Injurious to Health என்று போட்டிருக்கும்!

அதுபோல என்பதிவுகளுக்கும் டிஸ்கி போட்டால் நல்லது என்று தோன்றியது
ஆகவே போட்டுள்ளேன். என் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்.
---------------------------------------------------------------------------
அத்தியாயம் 1

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர் அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ; He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம் காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு
எப்படி ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது? உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால் ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால் தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதால் ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப் புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான் அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவது
தான் நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்; உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும் அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு, ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் சிகரெட்டின்
மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும் உள்ள ஜோடிப் பொருத்தமும்
அப்போதுதான் தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்? சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த் தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு
மிகவும் ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு அனுபவித்தவனுகுத்தானே
தெரியும்? சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும் அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச் சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு இருக்கிறார்; உணராதவனுக்கு
இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து வரும்போதுதான் மனிதன் ஒப்புக்
கொள்வான். அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே நன்றாக அனுபவித்து வாழந்தவர்.
அவர் சந்திக்காத துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா? நட்பா? பகையா?
சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது, கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்போல வாழுங்கள் என்று சொல்லி
விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம், சம்பங்கி,
செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும் மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான் அப்படியிருக்கையில் அவை எப்படி
வேறுபடலாம்? விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ நிறமோ அல்லது
மணமோ கிடையாது. பயிராகிப்பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது? பூவிற்கு வாசம் எங்கிறுந்து கிடைக்கிறது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக் கேள்விகளுக் கெல்லாம் எந்தக்
கொம்பனாலும் பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப் பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கின்றோம் என்பார். We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல் ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச்
சொல்லுங்கள். எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம் இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது உணராதவன் என்ற பேதம் கிடையாது.
இருவரும் அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே அவனால் படைக்கப்பட்டவர்கள்
அல்லவா? அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும்
mighty ஆகிப்போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம் பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல இருக்கலாம். ஆனால் இறைவன்
ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய அத்தனை பேதங்களும் காணாமல்
போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா புத்தபகவான் என்று
மற்றவர்களின் பேச்சுக்கள் எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள். அது உங்கள் விருப்பம். அது உங்கள்
பழக்கப்பட்ட விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால் அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because we do not even have one god.
We have
only God and he is the ultimate authority for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர் ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய
சர்வாதிகார மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த கொடைதான்!
---------------------------------------------------
இது மீள்பதிவுதான். புதிதாக நிறையப் பேர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள்
படிக்கட்டும் என்று போட்டேன்.

வாழ்க வளமுடன்!

69 comments:

 1. உள்ளேன் ஐயா!

  பதிவு நன்றாக இருக்கிறது!

  விளக்கங்கள் அருமை!

  ReplyDelete
 2. /எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//

  :)

  அது சரி!

  ReplyDelete
 3. //ன் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
  வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்.//

  இதை நான் வழிமொழிகிறேன்!

  நீங்கள் யாரைக் கேட்க வேண்டும்? ஏன் கேட்க வேண்டும்?

  ReplyDelete
 4. /////நாமக்கல் சிபி said...
  உள்ளேன் ஐயா!
  பதிவு நன்றாக இருக்கிறது!
  விளக்கங்கள் அருமை!/////

  உள்ளம் திறந்த பாராட்டிற்கு நன்றி நாமக்கல்லாரே!

  ReplyDelete
 5. I am present here...Good job!

  -Shankar

  ReplyDelete
 6. நாமக்கல் சிபி said...
  /எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//
  :)
  அது சரி!//////

  அது சரி என்றால் சரி தானே?

  ReplyDelete
 7. //////நாமக்கல் சிபி said...
  //என் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
  வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்.//
  இதை நான் வழிமொழிகிறேன்!
  நீங்கள் யாரைக் கேட்க வேண்டும்? ஏன் கேட்க வேண்டும்?///////

  நீங்கள் வந்து வழிமொழிந்ததில் மிக்க மகிழ்ச்சி சிபியாரே!

  ReplyDelete
 8. நான் டிஸ்கி போட்டு பதிவெழுதுவது ஏன் அப்படின்னு நிறையா பேரு கேட்கறாங்க. இனிமே உங்க கிட்ட கன்ஸல்டிங்குக்கு அனுப்பறேன். :))

  ReplyDelete
 9. //
  நீங்கள் வந்து வழிமொழிந்ததில் மிக்க மகிழ்ச்சி சிபியாரே!//

  பின்னே எப்படித்தான் எனது பெயர் மறுமொழியாளர்கள் பட்டியலில் மொத்தமாக பெரிதாகத் தெரிய வைப்பதாம்!

  ReplyDelete
 10. //////hotcat said...
  I am present here...Good job!
  -Shankar////

  Thank you Mr.Shankar for your 'good' comment!

  ReplyDelete
 11. //எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//

  ஆகா அருமையாக சொன்னீர்கள் வாத்தியரே, நானும் இந்த டிஸ்கிக்கு வழிமொழிக்கிறேன்.

  அது சரி வாத்தியரே, நாம் பாடத்தை எப்போது தொடர்வோம், இன்னும் 7'ம் வீடு மற்றும் 5'ம் வீடு பாடங்களும், பிறவும் நிறைய உள்ளதே..

  மற்றவர்களை விடுங்கள், உங்கள் மணி போல மாணவர்கள் உங்கள் வகுப்பிற்க்க காததிற்கிறோம்

  ReplyDelete
 12. /////இலவசக்கொத்தனார் said...
  நான் டிஸ்கி போட்டு பதிவெழுதுவது ஏன் அப்படின்னு நிறையா பேரு கேட்கறாங்க.
  இனிமே உங்க கிட்ட கன்ஸல்டிங்குக்கு அனுப்பறேன். :))//////

  ஆகா அனுப்பிவைங்க! "இலவசமாகவே" எடுத்துச் சொல்கிறேன்!

  ReplyDelete
 13. //////நாமக்கல் சிபி said... //
  நீங்கள் வந்து வழிமொழிந்ததில் மிக்க மகிழ்ச்சி சிபியாரே!//
  பின்னே எப்படித்தான் எனது பெயர் மறுமொழியாளர்கள் பட்டியலில் மொத்தமாக
  பெரிதாகத் தெரிய வைப்பதாம்!////

  வாரத்தில ஒருநாள் வீங்குகிற மாதிரிப் பார்த்துக்குங்க. தினமும் வீங்க வச்சீங்கன்னா
  பல பேரேட கோபத்துக்கு ஆளாக நேரிடும். அவர்களுக்கும் சான்ஸ் கொடுங்க!

  ReplyDelete
 14. /////என் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
  வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்./////

  அப்படி போடு அருவாள ....

  ///////இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
  ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி காத்துக் கொண்டிருக்கிறது.////////

  என்ன மேட்டர இப்படி முடிச்சிடிங்க :) :) :) :)

  ReplyDelete
 15. /வாரத்தில ஒருநாள் வீங்குகிற மாதிரிப் பார்த்துக்குங்க. தினமும் வீங்க வச்சீங்கன்னா
  பல பேரேட கோபத்துக்கு ஆளாக நேரிடும். அவர்களுக்கும் சான்ஸ் கொடுங்க!//

  வாத்தியார் சொல்லுக்கு அப்பீல் உண்டா?
  இன்னிக்கே இளைச்சிடுறேன்!

  ReplyDelete
 16. ////கோவை விமல்(vimal) said..
  //எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//
  ஆகா அருமையாக சொன்னீர்கள் வாத்தியரே, நானும் இந்த டிஸ்கிக்கு வழிமொழிக்கிறேன்.
  அது சரி வாத்தியரே, நாம் பாடத்தை எப்போது தொடர்வோம், இன்னும் 7'ம் வீடு மற்றும்
  5'ம் வீடு பாடங்களும், பிறவும் நிறைய உள்ளதே..மற்றவர்களை விடுங்கள், உங்கள் மணி
  போல மாணவர்கள் உங்கள் வகுப்பிற்க்க காத்திற்கிறோம்//////

  அடுத்த வாரம் சேர்த்து வைத்துக் கொளுத்தி விடலாம். கொளுத்தி விடலாம் என்றால்
  நடத்திவிடலாம் என்று பொருள் கொள்க!

  அனேகமாக 7ஆம் வீட்டைப் பற்றிய பாடங்கள் நடத்துவதற்குள், உங்களுக்குத் திருமணம்
  ஆகிவிடலாம். பருத்திவீரன் பிரியா மணி போல நல்ல மனைவி கிடைப்பாள்
  பிறகு என்ன கவலை?:-)))))))

  ReplyDelete
 17. //////////கல்கிதாசன் said...
  /////என் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
  வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்./////
  அப்படி போடு அருவாள ....!
  ///////இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
  ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி காத்துக் கொண்டிருக்கிறது.////////
  என்ன மேட்டர இப்படி முடிச்சிடிங்க :) :) :) :)//////

  கொண்டாடிக் கோலம் போடும் எல்லா மனிதனுக்குமே இது பொதுவானது!:-))))))
  முடி சார்ந்த மன்னனேயானாலும் ஒரு நாள் பிடி சாம்பல் ஆகிப் போவான் என்று
  கேள்விப்பட்டதில்லையா நண்பரே?

  ReplyDelete
 18. /////நாமக்கல் சிபி said...
  /வாரத்தில ஒருநாள் வீங்குகிற மாதிரிப் பார்த்துக்குங்க. தினமும் வீங்க வச்சீங்கன்னா
  பல பேரேட கோபத்துக்கு ஆளாக நேரிடும். அவர்களுக்கும் சான்ஸ் கொடுங்க!//
  வாத்தியார் சொல்லுக்கு அப்பீல் உண்டா?
  இன்னிக்கே இளைச்சிடுறேன்!/////

  உடம்பைச் சொல்லலை ஸ்வாமி! பின்னூட்டம் வீங்குவதைச் சொன்னேன்!:-))))

  ReplyDelete
 19. ஆசிரியர் ஐயா,

  ஒரு புத்தகத்தில் படித்த சுவையான தகவல்.

  இந்த பரந்த உலகில் இறவனை வழிபட வேண்டாம், அவனது திரு நாமத்தை நினைத்தாலே போதுமாம் அவன் திருவடி சேரும் பாக்கியம் கிடத்திடுமாம்,

  இந்த வரிசையில் கடவூளை நிந்தனை செய்வோரும் அடங்குவர்.

  அதாவது நாராயண நமவோம் என்று ஆயிரம் முறை சொல்லி வருபவர் ஒருவர்.(பக்திமான்).

  இன்னோருவர் பகுத்தறிவு பிரசங்கி.

  ராமன் கதை கட்டுக்கதை.

  ராமன் இருந்ததற்கு சான்றே இல்லை.

  ராமனை நம்புவன் மூடன்

  ராமனை வணங்குபவன் காட்டு மிராண்டி

  ராம நாமம் சொல்வர் பிற்போக்கு வாதிகள்

  இப்படி ராமனை எதிர்ப்பதாக எண்ணிக் கொண்டு தனது வாழ்நாளில் பக்திமானைவிட அதிகதரம் ராம ராமத்தை சொன்னதால் அவரும் மறு உலகில் பக்திமானுக்கு பக்கத்தில் இறைவன் திருவடியைஅடைவாதாக சொல்லப்பட்டுள்ளது.

  புராண கதைகளில் கூட இறைவனின் நாம வலிமையைப் பற்றி சொல்லியுள்ளார்கள்.

  ReplyDelete
 20. //////திருநெல்வேலி கார்த்திக் said...
  ஆசிரியர் ஐயா,
  ஒரு புத்தகத்தில் படித்த சுவையான தகவல்.
  இந்த பரந்த உலகில் இறவனை வழிபட வேண்டாம்,
  அவனது திரு நாமத்தை நினைத்தாலே போதுமாம் அவன்
  திருவடி சேரும் பாக்கியம் கிடத்திடுமாம்,
  இந்த வரிசையில் கடவூளை நிந்தனை செய்வோரும் அடங்குவர்
  அதாவது நாராயண நமவோம் என்று ஆயிரம் முறை சொல்லி
  வருபவர் ஒருவர்.(பக்திமான்).
  இன்னோருவர் பகுத்தறிவு பிரசங்கி. ராமன் கதை கட்டுக்கதை
  ராமன் இருந்ததற்கு சான்றே இல்லை.
  ராமனை நம்புவன் மூடன்
  ராமனை வணங்குபவன் காட்டு மிராண்டி
  ராம நாமம் சொல்வர் பிற்போக்கு வாதிகள்
  இப்படி ராமனை எதிர்ப்பதாக எண்ணிக் கொண்டு தனது வாழ்நாளில்
  பக்திமானைவிட அதிகதரம் ராம ராமத்தை சொன்னதால் அவரும் மறு
  உலகில் பக்திமானுக்கு பக்கத்தில் இறைவன் திருவடியைஅடைவாதாக சொல்லப்பட்டுள்ளது.
  புராண கதைகளில் கூட இறைவனின் நாம வலிமையைப் பற்றி சொல்லியுள்ளார்கள்.///////

  இறைவனுக்கே ஆதாரம் கேட்பவர்கள், நாமத்தைச் சொல்லி ஒருவன் வைகுண்டம் போனான்
  என்று சொன்னால் அதாரம் கேட்காமல் இருப்பார்களா?
  ப்ளைட் டிக்கட், போர்டிங் பாஸ் இருந்தால் காட்டலாம்.
  அங்கே சென்றவன் அதையெல்லாம் பத்திரமாக வைத்திருப்பானா என்ன?
  அதைச் சொல்லவில்லையே நீங்கள்:-)))))))

  ReplyDelete
 21. சொல்லில் வருவது பாதி
  நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

  இல்லையா குருவே? :))


  @விமல், அட்வான்ஸ் வாழ்த்துக்கள், அட்வான்ஸா மொய் எழுதட்டுமா விமல்? :p

  ReplyDelete
 22. ////பருத்திவீரன் பிரியா மணி போல நல்ல மனைவி கிடைப்பாள்///

  என்ன கோபம் இருந்தாலும் வாத்தியார் விமலுக்கு இப்படி ஒரு சாபம் கொடுத்திருக்க கூடாது.:) :) :)

  ReplyDelete
 23. /////ambi said...
  சொல்லில் வருவது பாதி
  நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
  இல்லையா குருவே? :))
  @விமல், அட்வான்ஸ் வாழ்த்துக்கள், அட்வான்ஸா மொய் எழுதட்டுமா விமல்? :p//////

  மொய் எல்லாம் எதற்கு? புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால், வரும் மனைவி
  இவரைப் படிக்க விடுவாரோ மாட்டாரோ?அதனால் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்
  வாங்கிக்கொடுத்து விடுவோம். பயன்படும்!

  ReplyDelete
 24. /////கல்கிதாசன் said...
  ////பருத்திவீரன் பிரியா மணி போல நல்ல மனைவி கிடைப்பாள்///
  என்ன கோபம் இருந்தாலும் வாத்தியார் விமலுக்கு இப்படி
  ஒரு சாபம் கொடுத்திருக்க கூடாது.:) :) :)/////

  ஒரு நகைச்சுவைக்காகச் சொன்னது சாமி!அவருக்குப் போய் நான் சாபம் இடுவேனா?
  நான் இட்டால் அது பலிக்குமா என்ன?
  அதைவிட நல்ல பெண் கிடைப்பார் - சிநேகா போல என்று வைத்துக்
  கொள்ளுங்களேன்:-))))))

  ReplyDelete
 25. வாத்தியார் சார்! அப்படியே ஒரு தபா சபிக்குறது!

  (நயன்தாரான்னு நான் சொல்லமாட்டேன் சாமி)

  ReplyDelete
 26. //எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//

  ஏறக்குறைய இந்த டிஸ்கியை என் பதிவுகளிலும் போடலாம் போலிருக்கிறது ஐயா. ஒரே ஒரு மாற்றத்துடன்.

  எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்றைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம் என்று 'நம்புபவர்கள்' வெளியேறிவிடலாம். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

  :-)))

  ReplyDelete
 27. 1.ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா..
  2.ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
  3. சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
  4.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
  5.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
  6.பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய், ஒரு நாளேனும் கவலை
  இல்லாமல் சிரிக்க
  மறந்தாய் மானுடனே (பிறக்கும்)
  இரவின் கண்ணீர் பனித்துளி என்பார், முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார், இயற்கை
  அழுதால் உலகம்
  செழிக்கும், மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் - இயற்கை சிரிக்கும் (பிறக்கும்)
  அன்னையில் கையில் ஆடுதல் இன்பம், கன்னியின் மடியில் சாய்வதில் இன்பம், தன்னை
  அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்...
  பெரும்பேரின்பம் (பிறக்கும்)
  -என்ன இது தமாம் பாலாவுக்கு நட்டெல்லாம் சரியா இருக்கான்னு நினைக்கிறீங்களா? வாத்தியாரே, உங்கள் இந்த டிஸ்கி பதிவை படிச்சதும் இந்த ஒட்டக ஜாக்கியின் மனதில் வந்த மீள்பதிவுகள் இவை.. :)))

  தசாவதாரத்து சுனாமி வந்து கிருமிய அழிச்ச மாதிரி, மழை பெஞ்சு ரோடெல்லாம் கழுவி விட்டது மாதிரி மனசும் நிர்மலமாய் இருக்கு. நம்பிக்கை, நிஜம். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் நிலையே நரகம்!

  நம் வகுப்பறை மாணவர்களை சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்னும் நெருக்கமாக்குகின்றன..
  விடை தெரியாத கேள்விகள் ஒவ்வொன்றாய் சூரியனை கண்ட பனி போல விலகுகின்றன..
  அன்பு சங்கர் முடிந்தால் அல்கெமிஸ்ட் புத்தகம் படியுங்கள், அதில் உங்களுக்கு சில விடைகள் தெரியலாம்
  விமலாதித்தரே, உங்களுக்கு என்று ஒரு குந்தவை இளவரசி கிடைப்பாள்,அவள் எப்படியிருப்பாள் என்று அறிய பொன்னியின் செல்வன் படியுங்கள்..

  கலக்குறீங்க குருஜி!!!!!!! :-)))

  நம் வகுப்பு அறை எனும்.. தஞ்சை பெரிய கோயில் பல்லாண்ண்ண்டு வாழ்கவே..

  அன்பே சிவம், வாழ்வே தவம் !!! :-)))

  ReplyDelete
 28. //////நாமக்கல் சிபி said...
  வாத்தியார் சார்! அப்படியே ஒரு தபா சபிக்குறது!
  (நயன்தாரான்னு நான் சொல்லமாட்டேன் சாமி)//////

  சிபியைச் சபிப்பதா? ஆண்டவன் என்னைச் சபித்துவிடுவான் சாமீ!
  நயன்தாரா வேண்டாம்; சிம்புவோடு போட்டியிட உங்களால் முடியுமா?

  ReplyDelete
 29. ////////குமரன் (Kumaran) said...
  //எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்ரைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  ஆகவே அது இரண்டையும் பற்றிக் கவலைப் படாதவர்கள் மட்டும் படிக்கவும்
  மற்றவர்கள் வெளியேறிவிடலாம்!//
  ஏறக்குறைய இந்த டிஸ்கியை என் பதிவுகளிலும் போடலாம் போலிருக்கிறது
  ஐயா. ஒரே ஒரு மாற்றத்துடன்.
  எச்சரிக்கை: இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகிய
  வற்றைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால்
  உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்
  என்று 'நம்புபவர்கள்' வெளியேறிவிடலாம். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.//////

  இதுவும் நன்றாக உள்ளது! உங்கள் பதிவில் போட நீங்கள் யாரைக்கேட்க வேண்டும்?
  போட்டுவிடுங்கள். முடிந்தால் டெம்ப்ளேட்டிலேயே போட்டுவைக்கலாம்.

  டெம்ப்ளேட்டில் இந்த வாசகங்களை உள்ளிடுவது எப்படி என்று தெரிந்தவர்கள்
  சொன்னால், அவர்களுக்கு மட்டும் இலவசமாக ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வேன்!:-)))

  ReplyDelete
 30. //////தமாம் பாலா (dammam bala) said...
  1.ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா..
  2.ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
  3. சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
  4.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
  5.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
  6.பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய், ஒரு நாளேனும் கவலை
  இல்லாமல் சிரிக்க
  மறந்தாய் மானுடனே (பிறக்கும்)
  இரவின் கண்ணீர் பனித்துளி என்பார், முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார், இயற்கை
  அழுதால் உலகம்
  செழிக்கும், மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் - இயற்கை சிரிக்கும் (பிறக்கும்)
  அன்னையில் கையில் ஆடுதல் இன்பம், கன்னியின் மடியில் சாய்வதில் இன்பம், தன்னை
  அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்...
  பெரும்பேரின்பம் (பிறக்கும்)
  -என்ன இது தமாம் பாலாவுக்கு நட்டெல்லாம் சரியா இருக்கான்னு நினைக்கிறீங்களா?
  வாத்தியாரே, உங்கள் இந்த டிஸ்கி பதிவை படிச்சதும் இந்த ஒட்டக ஜாக்கியின் மனதில்
  வந்த மீள்பதிவுகள் இவை.. :)))
  தசாவதாரத்து சுனாமி வந்து கிருமிய அழிச்ச மாதிரி, மழை பெஞ்சு ரோடெல்லாம்
  கழுவி விட்டது மாதிரி மனசும் நிர்மலமாய் இருக்கு. நம்பிக்கை, நிஜம். நம்பிக்கைக்கும்
  அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் நிலையே நரகம்!
  நம் வகுப்பறை மாணவர்களை சந்தர்ப்ப சூழ்நிலைகள் இன்னும் நெருக்கமாக்குகின்றன..
  விடை தெரியாத கேள்விகள் ஒவ்வொன்றாய் சூரியனை கண்ட பனி போல விலகுகின்றன..
  அன்பு சங்கர் முடிந்தால் அல்கெமிஸ்ட் புத்தகம் படியுங்கள், அதில் உங்களுக்கு
  சில விடைகள் தெரியலாம். விமலாதித்தரே, உங்களுக்கு என்று ஒரு குந்தவை இளவரசி
  கிடைப்பாள்,அவள் எப்படியிருப்பாள் என்று அறிய பொன்னியின் செல்வன் படியுங்கள்.
  கலக்குறீங்க குருஜி!!!!!!! :-)))
  நம் வகுப்பு அறை எனும்.. தஞ்சை பெரிய கோயில் பல்லாண்ண்ண்டு வாழ்கவே..
  அன்பே சிவம், வாழ்வே தவம் !!! :-)))////////

  என்ன பாலா இவ்வளவு பெரிய பின்னூட்டம், இருக்கிறதிலேயே பெரிய ஜால்ரா உங்கள்
  ஜால்ராதான் என்று எதிர்வினை வந்து விடப்போகிறது.
  தமாமிலிருந்து கிழக்கில் ஹாங்காங் வரையிலும், மேற்கில் நியூயார்க் வரையிலும், ஒலிபெருக்கி
  இல்லாமல் உங்கள் ஜால்ரா சத்தம் கேட்பதாக இப்போதே பரவலான பேச்சு நிலவுகிறது!:-)))))

  ReplyDelete
 31. //இறைவனுக்கே ஆதாரம் கேட்பவர்கள், நாமத்தைச் சொல்லி ஒருவன் வைகுண்டம் போனான்
  என்று சொன்னால் அதாரம் கேட்காமல் இருப்பார்களா?
  ப்ளைட் டிக்கட், போர்டிங் பாஸ் இருந்தால் காட்டலாம்.
  அங்கே சென்றவன் அதையெல்லாம் பத்திரமாக வைத்திருப்பானா என்ன?
  அதைச் சொல்லவில்லையே நீங்கள்:-)))))))


  ஐயா,

  "கண்டவர் விண்டிலர்
  விண்டவர் கண்டிலர்"


  நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
  கடவுளை நம்பினோர்ர் கைவிடப் படார்.

  இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்.

  அவனன்றி ஒர் அணுவுமமசையாது.

  எல்லாம் ஈசன் செயல்

  எல்லாம்
  அவன் பார்த்துக்கொள்வான்

  மரம் வைத்தவன்
  தன்னீர் ஊற்றாமலா போவான்


  இவை எல்லாம் சான்றோர் வாக்கல்லவா!

  பொய்யா மொழியல்லவா!
  நம்பிக்கை என்பது தா்னே
  மனித வாழ்வின் அச்சாரம்

  நம்புவோம் நாதனை

  ReplyDelete
 32. ஐயா, மிக அற்புதமான விளக்கம்...

  இந்த பதிவு என்னைப்போன்ற ஆத்திக போரட்டவாதிகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இனி இருக்கும்

  இது மீள்பதிவா? நான் எங்கும் படிக்கவில்லையே? பல்சுவையில் வந்ததா?

  சரி ஐயா, பாடத்தை ஆரம்பியுங்கள்...

  ReplyDelete
 33. //டெம்ப்ளேட்டில் இந்த வாசகங்களை உள்ளிடுவது எப்படி என்று தெரிந்தவர்கள்
  சொன்னால், அவர்களுக்கு மட்டும் இலவசமாக ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வேன்//

  ஐயா நான் தான் first...


  draft.blogger.com log in செய்துக்கொள்ளூங்கள் அதில் லெ அவுட் தேர்வுசெய்து கொள்ளூங்கள்

  add a gadget கிளீக் செய்யுங்கள் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் இடதுபக்கம் உள்ள basic என்பதை தேர்வு செய்யுங்கள்...

  அதில் scroll செய்தால் text எனப்படும் gadget கிளிக் செய்து தங்களின் டிஷ்கி வரிகளை போட்டு save செய்யுங்கள்

  அவ்வளவே...

  ReplyDelete
 34. //@ SP.VR. SUBBIAH
  அனேகமாக 7ஆம் வீட்டைப் பற்றிய பாடங்கள் நடத்துவதற்குள், உங்களுக்குத் திருமணம்
  ஆகிவிடலாம். பருத்திவீரன் பிரியா மணி போல நல்ல மனைவி கிடைப்பாள்
  பிறகு என்ன கவலை?:-)))))))//

  அப்போ 7'ம் வீடு பாடம் இன்னும் 2 வருடம் ஆகுமா வாத்தியரே?

  பிரியாமணி போல (நல்ல) மனைவி கிடைப்பாள் என்று சபிதததர்கு நன்றி வாத்தியரே, எனக்கு பிரியாமணி போல அழகு வேண்டும் என்று பேராசை படவில்லை. ஆனால் நல்ல மனைவியாக கிடைக்க ஆசை படுகிறேன்.

  //@ கல்கிதாசன்
  என்ன கோபம் இருந்தாலும் வாத்தியார் விமலுக்கு இப்படி ஒரு சாபம் கொடுத்திருக்க கூடாது.:) :) :) //

  பாராவாயில்லை நம்ப வாத்தியார் தானே தாசரே, அவருக்கு மட்டுமே இப்படி அழகாக சபிக்க முடியும் :)))))


  // @ ambi
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள், அட்வான்ஸா மொய் எழுதட்டுமா விமல்? :p //

  அப்பா அம்பி நீங்களாவது மொய் எழுதுவேன் என்று சொன்னீர்களே...! உங்கள் மின்னன்சல் முகவரி கொடுங்கள் எனது முகவரியை தருகிறேன்.

  //SP.VR. SUBBIAH
  மொய் எல்லாம் எதற்கு? புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால், வரும் மனைவி
  இவரைப் படிக்க விடுவாரோ மாட்டாரோ?அதனால் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்
  வாங்கிக்கொடுத்து விடுவோம். பயன்படும்!

  அதைவிட நல்ல பெண் கிடைப்பார் - சிநேகா போல என்று வைத்துக்
  கொள்ளுங்களேன்:-)))))) ///

  என்ன வாத்தியரே ரைஸ் குக்கரோட நிறுத்தி விட்டீர்கள், என்னிடம் பெரிய லிஸ்ட் உள்ளது.

  சிநேகா-வோ, பிரியாமணி-யோ, நயன்தாரா-வோ... இல்லை காந்திமதியோ, வடிவுகரசி-யோ, பார்க்க எப்படி இருந்தாலும் பரவாயில்லை, குணத்தில் உயர்ந்தவளாக கிடைத்தாலே போதும் வாத்தியரே. மனது எப்போதோ பக்குவபட்டு விட்டது....

  -----------------------------
  இனி என் பின்னூடடம்...
  என் திருமணத்திற்காக முன்பே வாழ்த்து சொன்ன, தாசர், அம்பி, வாத்தியார் அவர்களுக்கு நன்றி....

  ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை...இது என்ன என் சம்பந்தப்பட்ட பதிவா இல்லை பின்னூடாமா? :))))
  நண்பர்களே, வாத்தியரே... இன்னும் கோன்ச்சம் காலம் கூட சந்தோசமா இருக்க விடுங்க. சபித்து விடாதீர்கள். இல்லறம் என்னும் சிறைக்குள் செல்வதற்கு முன் பிரமசாரியததை கோன்ச்சம் அனுபவிக்க விடுங்கள்.
  என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....:)))))

  ReplyDelete
 35. settings> formatting> post template {the last one}
  இதுல - பெட்டியில- எழுதி ஒட்டிடுங்க. ஒவ்வொரு முறை நீங்க போஸ்ட் பண்ண டெம்ப்லேட் திறந்தாலும் அதுல இது ஏற்கெனவே இருக்கும்.
  ஜாதகம் அனுப்பவா?
  :-)))))))))))

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. //////திருநெல்வேலி கார்த்திக் said...
  //இறைவனுக்கே ஆதாரம் கேட்பவர்கள், நாமத்தைச் சொல்லி ஒருவன் வைகுண்டம் போனான்
  என்று சொன்னால் அதாரம் கேட்காமல் இருப்பார்களா?
  ப்ளைட் டிக்கட், போர்டிங் பாஸ் இருந்தால் காட்டலாம்.
  அங்கே சென்றவன் அதையெல்லாம் பத்திரமாக வைத்திருப்பானா என்ன?
  அதைச் சொல்லவில்லையே நீங்கள்:-)))))))
  ஐயா,
  "கண்டவர் விண்டிலர்
  விண்டவர் கண்டிலர்"
  நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
  கடவுளை நம்பினோர்ர் கைவிடப் படார்.
  இறைவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்.
  அவனன்றி ஒர் அணுவுமமசையாது.
  எல்லாம் ஈசன் செயல்
  எல்லாம்அவன் பார்த்துக்கொள்வான்
  மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான்
  இவை எல்லாம் சான்றோர் வாக்கல்லவா!
  பொய்யா மொழியல்லவா!
  நம்பிக்கை என்பது தா்னே
  மனித வாழ்வின் அச்சாரம்
  நம்புவோம் நாதனை//////

  வாழ்க உங்கள் நம்பிக்கை!

  ReplyDelete
 39. /////கூடுதுறை said...
  ஐயா, மிக அற்புதமான விளக்கம்...
  இந்த பதிவு என்னைப்போன்ற ஆத்திக போரட்டவாதிகளுக்கு மிகப்பெரிய
  ஆயுதமாக இனி இருக்கும்
  இது மீள்பதிவா? நான் எங்கும் படிக்கவில்லையே? பல்சுவையில் வந்ததா?
  சரி ஐயா, பாடத்தை ஆரம்பியுங்கள்.../////

  இந்த வலைப்பூவிலேயே டெஸ்டினி என்ற குறிச்சொல்லுடன் ஐந்து கட்டுரைகள்
  உள்ளன. படித்துப் பாருங்கள்!

  ReplyDelete
 40. //////கூடுதுறை said...
  //டெம்ப்ளேட்டில் இந்த வாசகங்களை உள்ளிடுவது எப்படி என்று தெரிந்தவர்கள்
  சொன்னால், அவர்களுக்கு மட்டும் இலவசமாக ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வேன்//
  ஐயா நான் தான் first...
  draft.blogger.com log in செய்துக்கொள்ளூங்கள் அதில் லெ அவுட் தேர்வுசெய்து கொள்ளூங்கள்
  add a gadget கிளீக் செய்யுங்கள் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் இடதுபக்கம் உள்ள
  basic என்பதைர்வு செய்யுங்கள்.
  அதில் scroll செய்தால் text எனப்படும் gadget கிளிக் செய்து தங்களின்
  டிஷ்கி வரிகளை போட்டு save செய்யுங்கள்
  அவ்வளவே...//////

  சைடு பாரில் வருவதைச் சொல்லவில்லை! நதை நானே செய்து விடுவேன். Posi areaவில் முதலில் இப்போது
  இருப்பதுபோல இருக்கச் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 41. /////கோவை விமல்(vimal) said..
  இனி என் பின்னூடடம்...
  என் திருமணத்திற்காக முன்பே வாழ்த்து சொன்ன, தாசர், அம்பி, வாத்தியார் அவர்களுக்கு நன்றி....
  ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை...இது என்ன என் சம்பந்தப்பட்ட பதிவா இல்லை பின்னூடாமா? :))))
  நண்பர்களே, வாத்தியரே... இன்னும் கொஞ்ச காலம் கூட சந்தோசமா இருக்க விடுங்க. சபித்து விடாதீர்கள். இல்லறம் என்னும் சிறைக்குள் செல்வதற்கு முன் பிரமசாரியததை கோன்ச்சம் அனுபவிக்க விடுங்கள்.
  என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....:)))))

  அதெல்லாம் இருக்க விடுகிறோம்!

  ReplyDelete
 42. /////திவா said...
  settings> formatting> post template {the last one}
  இதுல - பெட்டியில- எழுதி ஒட்டிடுங்க. ஒவ்வொரு முறை நீங்க போஸ்ட் பண்ண
  டெம்ப்லேட் திறந்தாலும் அதுல இது ஏற்கெனவே இருக்கும்.
  ஜாதகம் அனுப்பவா?
  :-)))))))))))//////

  முயற்சி செய்து விட்டுச் சொல்கிறேன் நண்பரே! கூடுதுறையாருக்குச் சொல்லிய பதிலையும்
  படிக்க வேண்டுகிறேன். அதுபோல வருமா?

  ReplyDelete
 43. /முயற்சி செய்து விட்டுச் சொல்கிறேன் நண்பரே!/கூடுதுறையாருக்குச் சொல்லிய பதிலையும்
  படிக்க வேண்டுகிறேன். அதுபோல வருமா//

  நிச்சயமாக! உங்க பதிவு ஒவ்வொன்றிலும் அது முன்னாலேயே இடப்படும். அதற்கு அடுத்து உங்க பதிவை எழுத வேண்டியது/ ஒட்ட வேண்டியதுதான்.

  என் ஆன்மீகம் பதிவை பாருங்க.
  http://anmikam4dumbme.blogspot.com/

  அதுல முன்னாலும் பின்னாலும் வருகிற சிரிப்பான்களுக்கு அப்படிதான் செய்து இருக்கிறேன்.

  ReplyDelete
 44. //Posi areaவில் முதலில் இப்போது
  இருப்பதுபோல இருக்கச் செய்ய வேண்டும்!//

  ஐயா, அது இன்னும் simple சைடுபாரில் நீங்கள் உருவாக்கியதை post மேல் ஏரியாவில் drag செய்து இழுத்துவிடுங்கள் போதும்

  போஸ்ட் மேலேயே வரும்

  ReplyDelete
 45. ஹலோ சார்,

  //உணர்கிறவர்கள் உணரட்டும்; உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!//

  இது தான் கரெக்ட். நல்ல பதிவு.

  ReplyDelete
 46. /////திவா said...
  /முயற்சி செய்து விட்டுச் சொல்கிறேன் நண்பரே!/கூடுதுறையாருக்குச் சொல்லிய பதிலையும்
  படிக்க வேண்டுகிறேன். அதுபோல வருமா//
  நிச்சயமாக! உங்க பதிவு ஒவ்வொன்றிலும் அது முன்னாலேயே இடப்படும்.
  அதற்கு அடுத்து உங்க பதிவை எழுத வேண்டியது/ ஒட்ட வேண்டியதுதான்.
  என் ஆன்மீகம் பதிவை பாருங்க.
  http://anmikam4dumbme.blogspot.com/
  அதுல முன்னாலும் பின்னாலும் வருகிற சிரிப்பான்களுக்கு அப்படிதான் செய்து இருக்கிறேன்./////

  நன்றி திவா! உங்கள் மின்னஞ்சலை என்மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்

  ReplyDelete
 47. //////////கூடுதுறை said...
  //Posi areaவில் முதலில் இப்போது
  இருப்பதுபோல இருக்கச் செய்ய வேண்டும்!//
  ஐயா, அது இன்னும் simple சைடுபாரில் நீங்கள் உருவாக்கியதை post மேல்
  ஏரியாவில் drag செய்து இழுத்துவிடுங்கள் போதும்
  போஸ்ட் மேலேயே வரும்/////

  ஆமாம். சுலபமாக வந்துவிட்டது. உதவிக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 48. ////Sumathi. said...
  ஹலோ சார்,
  //உணர்கிறவர்கள் உணரட்டும்; உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!//
  இது தான் கரெக்ட். நல்ல பதிவு.//////

  உணராமல் போனால் பரவாயில்லை! தொல்லை பண்ணாமல் இருந்தால் சரி!

  ReplyDelete
 49. //பைசா பிரயோஜனமில்லை என்று தெரிந்தே எழுதுகிறேன்!//

  :-))))

  ReplyDelete
 50. God is now here is for theist
  God is no where is for atheist.

  both are try to prove about God.

  ReplyDelete
 51. /////Geekay said...
  //பைசா பிரயோஜனமில்லை என்று தெரிந்தே எழுதுகிறேன்!// :-))))/////

  எஸ்மைலி போட்டது சரிதான். நகைப்பிற்கு உரிய விஷயம்தான் அது!:-))))

  ReplyDelete
 52. ////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
  God is now here is for theist
  God is no where is for atheist.
  both are try to prove about God.////

  அதனால்தான் கடவுள் இருவர் கண்களுக்குமே காட்சி தராமல் ஆட்டம் காட்டுகிறார்!

  ReplyDelete
 53. இறைவனை உணர்வதற்கு ப்ராப்தம் கிடைக்க வேண்டும் .
  அதனை இறைவன் அவர்களுக்கு கொடுக்காத போது , நாம் என்ன சொன்னாலும் அவர்களால் அதனை உணர முடியாது என்பது எனது கருத்து !
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

  ReplyDelete
 54. //சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
  சொல்லி விளக்க முடியும்? சொன்னாலும் விளங்குமா?//

  முன்பே ஒரு பதிவில் இதுபற்றி சொல்லி இருக்கிறீர்கள், படித்த நினைவு. என்ஜாய் !


  //நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த் தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு
  மிகவும் ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு அனுபவித்தவனுகுத்தானே
  தெரியும்? சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?//

  இதுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஏன் தெரியுமா ? சைட் டிஸ்சை (வறுத்த முந்திரி) மட்டும் சொல்லிவிட்டு மெயின் டிஸ்சை நைசாக சொல்லாமல் மறைத்ததற்காக.
  :)))

  ReplyDelete
 55. @ SP.VR.SUBBIAH

  அட வகுப்பறாயின் முகப்பே மாற்றிவிட்டீர்களே ...வாத்தியரே..

  Pull for வெளியே செல்
  Push for உள்ளே வா

  என்று............


  கூடு துறைக்கு எங்கள் வகுப்பின் சார்பாக சட்டாம்பிள்ளை மற்றும் உதவி சட்டாம்பிள்ளை சார்பாக நன்றி.||


  அது சரி கூடுதுறையரே உங்கள் ஜாதகம் இலவச கணிப்பு தேவையில்லையா? வேண்டாம் என்றால் சொலுங்கள். நான் எனுதய ஜாதகம் அனுப்பி விடுகிறேன்...:-)))

  ReplyDelete
 56. Dear Sir,

  FYI: We left the class in 5th house purvapuniyam, and in comment section you talked about yogas too...keep waiting for that. Student request, please resume the class soon:-))

  Thanks!
  Shankar

  ReplyDelete
 57. /////ARUVAI BASKAR said...
  இறைவனை உணர்வதற்கு ப்ராப்தம் கிடைக்க வேண்டும் .
  அதனை இறைவன் அவர்களுக்கு கொடுக்காத போது ,
  நாம் என்ன சொன்னாலும் அவர்களால் அதனை உணர முடியாது
  என்பது எனது கருத்து !
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்/////

  அதெல்லாம் ஒரு நாள் உணர்வார்கள். இறைவனை உணர வைத்துத்தான் காலதேவன்
  மேலே போவதற்குப் போர்டிங்பாஸ் தருவான்!

  ReplyDelete
 58. /////கோவி.கண்ணன் said...
  //சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
  சொல்லி விளக்க முடியும்? சொன்னாலும் விளங்குமா?//
  முன்பே ஒரு பதிவில் இதுபற்றி சொல்லி இருக்கிறீர்கள், படித்த நினைவு. என்ஜாய்!////

  இது மீள் பதிவு சாமீ! கீழே போட்டிருக்கிறேன். இதற்குத்தான் கடைசிவரை படிக்க வேண்டும் என்பது:-)))))


  //நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த் தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு
  மிகவும் ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு அனுபவித்தவனுகுத்தானே
  தெரியும்? சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?//
  இதுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஏன் தெரியுமா ?

  சைட் டிஸ்சை (வறுத்த முந்திரி) மட்டும் சொல்லிவிட்டு மெயின் டிஸ்சை
  நைசாக சொல்லாமல் மறைத்ததற்காக. :)))///////

  அதை வகுப்பறையில் எப்படிச் சொல்வது? அதற்கு வேறு கண்டனம் வரும்!

  ReplyDelete
 59. /////கோவை விமல்(vimal) said...
  @ SP.VR.SUBBIAH
  அட வகுப்பறையின் முகப்பே மாற்றிவிட்டீர்களே ...வாத்தியரே..
  Pull for வெளியே செல்
  Push for உள்ளே வா
  என்று............
  கூடு துறைக்கு எங்கள் வகுப்பின் சார்பாக சட்டாம்பிள்ளை மற்றும் உதவி
  சட்டாம்பிள்ளை சார்பாக நன்றி.||
  அது சரி கூடுதுறையரே உங்கள் ஜாதகம் இலவச கணிப்பு தேவையில்லையா?
  வேண்டாம் என்றால் சொலுங்கள். நான் எனுதய ஜாதகம் அனுப்பி விடுகிறேன்...:-)))/////

  எல்லாம் உங்களைப் பாதுகாக்கத்தான்!

  ReplyDelete
 60. /////hotcat said...
  Dear Sir,
  FYI: We left the class in 5th house purvapuniyam, and in comment section you
  talked about yogas too...keep waiting for that. Student request, please resume the class soon:-))
  Thanks!
  Shankar////

  நீங்கள்தான் உண்மையான மாணவர். வெளியே இடி, மின்னல், மழையாக இருக்கிறது.
  கொஞ்சம் பொறுங்கள்!

  ReplyDelete
 61. நல்ல பதிவு. நல்ல பாடமும் கூட.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 62. ஆசானின் இந்த பதிவிற்கு எனது ஆதரவை கன்னாபின்னாவென்று தெரிவித்துக்கொள்கின்றேன்..

  நான் எப்பவும் போல கிளாஸுக்கு ரொம்ப லேட்டு :((

  ReplyDelete
 63. /////Blogger Rajagopal said...
  நல்ல பதிவு. நல்ல பாடமும் கூட.
  அன்புடன்
  இராசகோபால்///////

  நன்றி கோபால்!

  ReplyDelete
 64. /////////Blogger சென்ஷி said...
  ஆசானின் இந்த பதிவிற்கு எனது ஆதரவை கன்னாபின்னாவென்று தெரிவித்துக்கொள்கின்றேன்..
  நான் எப்பவும் போல கிளாஸுக்கு ரொம்ப லேட்டு :((///////

  பல்வேறு திசைகளில் இருந்தும் தூரங்களில் இருந்தும் மாணவக் கண்மணிகள் வருவதால்
  நான் தாமதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!

  ReplyDelete
 65. ஐயா, வணக்கம். பல்வேறு ஆதாரங்களை அடுக்கி வைத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 66. மீண்டும் தந்த பதிவுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 67. ///////Blogger தியாகராஜன் said...
  ஐயா, வணக்கம். பல்வேறு ஆதாரங்களை அடுக்கி
  வைத்துள்ளீர்கள்.//////

  நன்றி தியாகராஜன்!

  ReplyDelete
 68. ///////Blogger King said...
  மீண்டும் தந்த பதிவுக்கு நன்றி ஐயா/////
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 69. Iraivan irukkiraana endru khetta pakuththaruvi vaathikalukku Kaviyarasar sonna bathil enna theriyumaa:

  NEE VIRUMBUKINDRA ONDRU NADAKKAATHA VARAIYIL NEE VIRUMBAATHA ONDRU NADAKKINDRA VARAIYIL NEE VIRUMBHUKIRAAYO ILLAIYO KADAVUL ENDRU ORUVAN IRUNTHU KONDE IRUKKIRAAN.

  ithu eppadi irukku

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com