மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.7.08

நேரம் நல்ல நேரம்; தேர்வு எழுதும் நேரம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு இன்று நடைபெறுகிறது. விடைகளை
இப்போதே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை! வீட்டிற்குக்கொண்டு போய்
சாவகாசமாக யோசித்து எழுதலாம்.

இல்லை பழைய பாடங்களைப் புரட்டிப் பார்த்து நிதானமாகப் பதில் எழுதலாம்.

அல்லது கல்கிதாசன், அறிவன், தமாம்பாலா போன்ற மூத்த மாணவர்களைக்
கேட்டு எழுதலாம். நான் கண்டு கொள்ள மாட்டேன்.

ஆனால் காப்பி மட்டும் அடிக்க முடியாது! ஏனென்றால் பின்னூட்டப் பெட்டியைப்
பூட்டிவிட்டேன். திறந்து வைத்தால் ஒருவர் எழுதியுள்ள பதிலைப் பார்த்து அடுத்தவர்
எழுதி விடும் அபாயம் உள்ளது!

உங்களுக்கு எழுதக் கொடுத்துள்ள அவகாசம் 60 மணி நேரம். உலகத்தில் எந்த
வகுப்பறையிலும் இந்த வசதி உங்களுக்குக் கிடைக்காது!

Deadline for submitting your answer is on or before10.00 AM on 14.07.2008
அதுவரை பின்னூட்டப் பெட்டி திறக்கப்படமாட்டாது!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நம் தேசத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரின் பிறப்பைக் குறித்த விவரங்களைக்
கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் அந்தக் குறிப்பைவைத்து அவருடைய ஜாதகத்தைக்
கணித்துக் கொள்ளுங்கள்.
(சைடு பாரில் உள்ள மென்பொருள் அதற்கு உதவும் என்பது நீங்கள் அறிந்ததே!)

கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பத்தும் அந்த ஜாதகம் சம்பந்தப்பட்டதுதான். தெரிந்த
வரை, முடிந்தவரை பதில் எழுதுங்கள். தேர்வு என்று எடுத்துக் கொள்ளாமல் பயிற்சி
என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள்.

பெயர்: தேதியைப் பார்த்தாலே தெரியும்!
தேதி: அக்டோபர் 2 வருடம் 1869
நேரம்: காலை 7.20
ஊர்: போர்பந்தர் (Porbander)
அட்சரேகை Longitude 69.49.E
தீர்க்கரேகை (Longitude) 21.37 N
Time Zone: 4.39.16 East of GMT
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: துலாம்

க்ளூ வேண்டுமா? அவருடைய படம் கீழே உள்ளது:-))))))


++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்விகள்:

1. பதினைந்து வயதிலேயே தன் தந்தையைப் பறி கொடுத்தவர் அவர். அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

2. அவர் பார்-அட்-லா என்னும் உயரிய பட்டப் படிப்பை லண்டனுக்குச் சென்று
படித்தவர் அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

3. படித்த படிப்பிற்கான வேலையைப் பாதி வயதிலே விட்டு விட்டவர்.அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

4. பிறகு தான் பிறந்த தேசத்திற்காக முழுக் கவனத்தையும், உழைப்பையும்
ஈந்தார் அல்லது கொடுத்தார்.அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

5. அப்படிக் கொடுத்தாலும், தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு ஒருநாள் கூட
அவர் அரியனையில் அமரவில்லை! பதவியில் உட்காரவில்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

6. ஒரு வல்லரசையே எதிர்த்துப் போராடினார். அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

7. வாழ்க்கையில் அவர் அனுபவித்தது கஷ்டங்களை மட்டுமே! சுகமான,
ஆடம்பரமான வாழ்வு வாழ்வில்லை! அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

8. மனப்போராட்டம் இல்லாத நாளே இல்லை என்னும்படியான வாழ்க்கை
அவருடைய வாழ்க்கை அந்த நிலை ஏற்பட்டதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

9. உலகப் புகழ் பெற்றார். அதில் மாற்றுக்கருத்து இல்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

10. இறுதியில் அகால மரணம் அடைந்தார்!அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

--------------------------------
எங்கே முடிந்தவரை பதில் எழுதுங்கள்.

40 மார்க்குகள் வாங்கினால் பாஸ்!
20 மார்க்குகள் வாங்கியவர்கள் அரைக்கிணறு தாண்டியவர்கள்:-))))
10ற்குக் கீழே வாங்குபவர்கள் மீண்டும் இதுவரை நடத்தப்பட்டுள்ள
அனைத்துப் பாடங்களையும் பெஞ்ச் மேல் நின்று மறுபடியும் ஒருமுறை
படிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை!;-)))))

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!
--------------------------------

50 comments:

 1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியடிகள்!

  ReplyDelete
 2. //10. இறுதியில் அகால மரணம் அடைந்தார்!அதற்கு ஜாதகப்படியான(!?)
  காரணம் என்ன?//

  கோட்சே சுட்டு விட்டார்!

  (ஜாதக் படியான என்ற வார்த்தை மட்டும் சாய்ஸில் விடப் பட்டுள்ளது)

  ReplyDelete
 3. //9. உலகப் புகழ் பெற்றார். அதில் மாற்றுக்கருத்து இல்லை! அதற்கு
  ஜாதகப்படியான காரணம் என்ன?//

  தேசத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார்!

  ReplyDelete
 4. //2. அவர் பார்-அட்-லா என்னும் உயரிய பட்டப் படிப்பை லண்டனுக்குச் சென்று
  படித்தவர் அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?//

  அப்போது அந்தப் படிப்பு (கோர்ஸ்) இந்தியாவில் இல்லை!

  ReplyDelete
 5. ஐயா! பெஞ்ச் எங்கே இருக்கிறது?

  ReplyDelete
 6. ///////நாமக்கல் சிபி said...
  //2. அவர் பார்-அட்-லா என்னும் உயரிய பட்டப் படிப்பை லண்டனுக்குச் சென்று
  படித்தவர் அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?//
  அப்போது அந்தப் படிப்பு (கோர்ஸ்) இந்தியாவில் இல்லை!//////

  ஆகா, அருமையான பதில்! யாராலும் சொல்ல முடியாத பதில்!
  இந்த ஒரு அற்புதமான பதிலுக்காக நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் 100
  அதனால் மற்ற கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் எழுத வேண்டாம்!

  ReplyDelete
 7. //////நாமக்கல் சிபி said...
  ஐயா! பெஞ்ச் எங்கே இருக்கிறது?//////

  பெஞ்ச் எதற்கு? தாமம்பாலாவிடம் சொல்லி துபாயில் இருந்து
  ஒரு சிம்மாசனத்தை வரவழைத்துப் பரிசாகத் தருகிறேன். உடன் ஷேக்குகள்
  அணியும் ஆடை அணிகலன்களும் உண்டு. இன்று முதல் உங்களுக்கு
  சீருடை கிடையாது. ஷேக்கின் காஸ்ட்யூமிலேயே நீங்கள் வகுப்பிற்கு வரலாம்!

  ReplyDelete
 8. //அதனால் மற்ற கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் எழுத வேண்டாம்!//

  வாத்தியாரின் பேச்சை என்றாவது தட்டி இருக்கிறேனா?

  ReplyDelete
 9. போற்றுவார் போற்றட்டும்
  புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும்

  என் கடன் பணி செய்து கிடப்பதே!

  எல்லாப் புகழும் கண்ணனுக்கே!

  எனச் செயல்படும் சுப்பையா ஐயா,

  உலகின் உயிர்களுக்கு ஒளி எனும் உயிர் ஆதாரம் தந்து காக்கும் ஆதவனை சிலசமயம் மறைக்க முயன்று தோல்வி அடையும் மேகங்களைப் போல் வந்து மறைந்த "வெற்றுக் கூச்சல்களை " இனி சட்டை செய்ய வேண்டாம் ஐயா.

  அவர்களின் வார்த்தை பிரயோகமே பண்புநிலை பிறழ்ந்துகண்டு பதிவுலகமே மொத்த வருத்தற்கு இருந்த்தற்கு 100 க்குமேல் வந்த பின்னுட்டங்களெ சாட்சி.

  அவர்களின் சவாலுக்கு தேசப் பிதாவின் வாழ்க்கையும் அவரது ஜாதக விளக்க
  கேள்வி பதிலும் நெத்தி அடியாய் இருக்கப் போவதை தமிழ்மண மொத்தப் பதிவுலகமும் பார்க்கப் போவது உறுதி.

  ReplyDelete
 10. தற்பொழுது பாடம் படிக்க மட்டும் ஏதுவாய் உள்ளேன். தேர்வு எனக்கு தேவைப்படும் பொழுது எழுதுகிறேன்.

  I don't fail in the exam, I am not taken the exam.

  (அனுஷ) நட்சத்திர பொது பலனை பற்றி எழுதவும் (அட மாகாத்மாவும் நானும் ஒரே நட்சத்திரம் :-).

  ReplyDelete
 11. //////பொதிகைத் தென்றல் said...
  போற்றுவார் போற்றட்டும்
  புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும்
  என் கடன் பணி செய்து கிடப்பதே!
  எல்லாப் புகழும் கண்ணனுக்கே!
  எனச் செயல்படும் சுப்பையா ஐயா,
  உலகின் உயிர்களுக்கு ஒளி எனும் உயிர் ஆதாரம் தந்து காக்கும் ஆதவனை
  சிலசமயம் மறைக்க முயன்று தோல்வி அடையும் மேகங்களைப் போல் வந்து மறைந்த
  "வெற்றுக் கூச்சல்களை " இனி சட்டை செய்ய வேண்டாம் ஐயா.
  அவர்களின் வார்த்தை பிரயோகமே பண்புநிலை பிறழ்ந்துகண்டு
  பதிவுலகமே மொத்த வருத்தற்கு இருந்த்தற்கு 100 க்குமேல் வந்த பின்னுட்டங்களெ சாட்சி.
  அவர்களின் சவாலுக்கு தேசப் பிதாவின் வாழ்க்கையும் அவரது ஜாதக விளக்க
  கேள்வி பதிலும் நெத்தி அடியாய் இருக்கப் போவதை தமிழ்மண மொத்தப்
  பதிவுலகமும் பார்க்கப் போவது உறுதி.///////

  அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நெத்தியடியெல்லாம் எனது வேலையன்று!
  கூச்சல் போடாமல் பாடத்தை நடத்தவிட்டு விட்டு, அவர்கள் தங்கள் பதிவு
  வேலைகளைப் பார்த்துக்கொண்டாலே போதும்!

  ReplyDelete
 12. ////////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
  தற்பொழுது பாடம் படிக்க மட்டும் ஏதுவாய் உள்ளேன். தேர்வு எனக்கு
  தேவைப்படும் பொழுது எழுதுகிறேன்.
  I don't fail in the exam, I am not taken the exam.
  (அனுஷ) நட்சத்திர பொது பலனை பற்றி எழுதவும்
  (அட மாகாத்மாவும் நானும் ஒரே நட்சத்திரம் :-).////////

  இந்தியாவில் (சராசரியாக) 110 கோடி மக்கள் வகுத்தல் 27 அனுஷ நட்சத்திரங்கள்
  இருக்கலாம்......அட மாகாத்மாவும் நானும் ஒரே நட்சத்திரம்.... என்று அவர்கள்
  மகிழ அப்படியொரு மாமனிதர்!

  ReplyDelete
 13. ///////நாமக்கல் சிபி said...
  //அதனால் மற்ற கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் எழுத வேண்டாம்!//
  வாத்தியாரின் பேச்சை என்றாவது தட்டி இருக்கிறேனா?/////

  பாடத்தில் கவனமின்மை என்ற ஒன்றைத் தவிர, மற்றபடி நீங்கள் 24 கேரட் தங்கம்!:-))))

  ReplyDelete
 14. Dear Sir,

  I have read about Mahatma Gandhi's horoscope and I can copy for website...but I dont want to do...because I cannot able to do interpretions with respect to specific questions what you have asked.for eg.,ans.1 should be like since sun is in 12 house, (karaka) for father...Mercury 12house lord in ascedent...like...I dont want copy...

  P.S.But I learnt something from the interpretions and waiting for your answer to learn more easier.
  -Shankar

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. ஜகன்னாத ஹோரா நிரலியில் காந்திஜியின் ஜாதகம் ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது. ஆனால், தசாபுக்தி காலங்கள் வேறுபாடு இருக்கின்றதோ? ஜ.ஹோ. படி, சுக்கிரன் தசா/சந்திரன் புக்தி ஏப்ரல் 12, 1885இல் முடிவு; Planetarypositions உரலிலோ, நவம்பர் 2, 1885இல் முடிவு. நான் ஏதாவது தவறாக இட்டு விட்டேனா?
  எதற்குக் கேட்கிறேன் என்றால், ப்ளானடரிபொஸிஷ‌ன்ஸ் உரல் ஐ சத்திய வாக்காய்க் கருதி உறவினர்க்குக் கொடுத்திருக்கிறேன்/நானும் பயன்படுத்தியிருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்துத் தான் ஜகன்னாத ஹோர நிரலியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். சார் சொன்னா வேதவாக்குன்னு தான் கேட்கிறேன். நன்றி.

  (உரலுக்கும்/URL நிரலி/Softwareக்கும் இடையே:-)

  ReplyDelete
 17. வேண்டுகோள்:

  என் நண்பர் ஒருவர் - ஜோதிடத்தில் ஒரளவிற்கு தேர்ச்சி உள்ளவர்
  - என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர் சொன்னார்:

  நீங்கள் இன்னும் மரணத்தைப் பற்றிப் பாடம் நடத்தவில்லை.
  அதே போல 6, 8, 12 ஆம் வீடுகளாகிய பாதக ஸ்தானங்களைப்
  பற்றி இன்னும் பாடம் நடத்தவில்லை. அதேபோல 300 யோகங்களைப்
  பற்றிப் பாடங்கள் நடத்தவில்லை! அந்த நிலையில் இந்தக் கேள்விகள்
  மாணவர்களுக்குச் சிரமமானவை.

  நடத்திய பாடங்களை மனதில் வைத்து கேள்விகளை மாற்றுங்கள்
  என்றார்

  எனக்கும் அது சரி எனவே படுகின்றது!

  உங்கள் கருத்து என்ன?
  உடனே பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

  ReplyDelete
 18. அப்பா யாரு வாத்தியரே உங்கள் நண்பர்? அவருக்கு ஒரு கோடி கும்பிடு, எப்பிடியோ இந்த டெஸ்ட்-ல் இருந்து தப்பிததேன்..

  ஹையா இந்த வாரம் தேர்வு இல்லை..... உய் உய்

  ReplyDelete
 19. /////////////நீங்கள் இன்னும் மரணத்தைப் பற்றிப் பாடம் நடத்தவில்லை.
  அதே போல 6, 8, 12 ஆம் வீடுகளாகிய பாதக ஸ்தானங்களைப்
  பற்றி இன்னும் பாடம் நடத்தவில்லை. அதேபோல 300 யோகங்களைப்
  பற்றிப் பாடங்கள் நடத்தவில்லை! அந்த நிலையில் இந்தக் கேள்விகள்
  மாணவர்களுக்குச் சிரமமானவை./////////////

  ஆமா ஆமா இப்போ இந்த கேள்விகள் சிரமமானவை . பரீட்சையை தள்ளி போடுங்க.
  (பரீட்சை என்றாலே லேசா ஜுரம் அடிக்கிறமாதிரி இருக்குது, எங்க.. சிபிக்கு பக்கத்தில பெஞ்சில நிற்க வேணுமோ என்று பயந்திட்டன்)

  ReplyDelete
 20. ///கோவை விமல்(vimal) said...
  அப்பா யாரு வாத்தியரே உங்கள் நண்பர்? அவருக்கு ஒரு கோடி கும்பிடு, எப்பிடியோ இந்த டெஸ்ட்-ல் இருந்து தப்பிததேன்..

  ஹையா இந்த வாரம் தேர்வு இல்லை..... உய் உய்

  சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா!

  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com

  (கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்)

  ReplyDelete
 21. //@ தி.விஜய்

  சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா! //

  மெலடி-யோ , குத்தாட்ட-மொ தேர்வு இல்லை நண்பா, அதுதான் இத்தனை குஸி,.

  //(கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்) //

  எப்போது எங்கே என்ற தகவல்கள் இல்லை நண்பரே, அதே போல வாத்தியார் வருவாரா மாட்டாரா?

  ReplyDelete
 22. ///////////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said..
  ஜகன்னாத ஹோரா நிரலியில் காந்திஜியின் ஜாதகம் ஏற்கனவே
  இடப்பட்டிருக்கிறது. ஆனால், தசாபுக்தி காலங்கள் வேறுபாடு இருக்கின்றதோ?
  ஜ.ஹோ. படி, சுக்கிரன் தசா/சந்திரன் புக்தி ஏப்ரல் 12, 1885இல் முடிவு;
  Planetarypositions உரலிலோ, நவம்பர் 2, 1885இல் முடிவு.
  நான் ஏதாவது தவறாக இட்டு விட்டேனா?
  எதற்குக் கேட்கிறேன் என்றால், ப்ளானடரிபொஸிஷ‌ன்ஸ் உரல்
  ஐ சத்திய வாக்காய்க் கருதி உறவினர்க்குக் கொடுத்திருக்கிறேன்/நானும்
  பயன்படுத்தியிருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்துத் தான் ஜகன்னாத
  ஹோர நிரலியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். சார் சொன்னா
  வேதவாக்குன்னு தான் கேட்கிறேன். நன்றி.
  (உரலுக்கும்/URL நிரலி/Softwareக்கும் இடையே:-)

  இரண்டுமே திருக்கணித்ததை அடிப்படையாகக் கொண்டதுதான்.
  ஜ்.ஹோ.வில் ஊரை அடித்தால் அதுவே GMT இருந்து இந்திய நகரங்களுக்கான
  நேரங்களைத் தானே கணக்கிட்டுக் கொண்டுவிடும்.

  பிளானட்டரி பொஸிசன் வலைத்தளத்தில் நாம் கொடுக்கவேண்டும்
  உதாரணம் இந்திய ஸ்டாண்டர்டு நேரம் என்பது GMT + 5.30 மணி East
  அது கான்பூரை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு minus 13 minutes
  என்று கணக்கிட்டு உள்ளிட வேண்டும்

  அதில் தவறு ஏற்பட்டால் இரண்டிற்கும் தசா புத்தியில் வித்தியாசம் உண்டாகும்
  காலசந்திப்பு ஜாதகம் என்றால் லக்கினம் வேறுபடும்

  பேசாமல் நீங்கள் ஜ.ஹோவைப் பயன்படுத்துதல் நல்லது!

  ReplyDelete
 23. /////hotcat said...
  Dear Sir,
  I have read about Mahatma Gandhi's horoscope and I can copy for website...but I dont want to do...because I cannot able to do interpretions with respect to specific questions what you have asked.for eg.,ans.1 should be like since sun is in 12 house, (karaka) for father...Mercury 12house lord in ascedent...like...I dont want copy...
  P.S.But I learn t something from the interpretations and waiting for your answer to learn more easier.
  -Shankar////

  What you are saying is correct Shankar.
  I will write it either on Monday or Tuesday!

  ReplyDelete
 24. ///// விமல்(vimal) said...
  யாரு வாத்தியரே உங்கள் நண்பர்? அவருக்கு ஒரு கோடி கும்பிடு,
  எப்பிடியோ இந்த டெஸ்ட்-ல் இருந்து தப்பிததேன்..
  ஹையா இந்த வாரம் தேர்வு இல்லை..... உய் உய்//////

  உய் உய்யா...?:-(((((((((

  ReplyDelete
 25. ////கல்கிதாசன் said...
  /////////////நீங்கள் இன்னும் மரணத்தைப் பற்றிப் பாடம் நடத்தவில்லை.
  அதே போல 6, 8, 12 ஆம் வீடுகளாகிய பாதக ஸ்தானங்களைப்
  பற்றி இன்னும் பாடம் நடத்தவில்லை. அதேபோல 300 யோகங்களைப்
  பற்றிப் பாடங்கள் நடத்தவில்லை! அந்த நிலையில் இந்தக் கேள்விகள்
  மாணவர்களுக்குச் சிரமமானவை./////////////
  ஆமா ஆமா இப்போ இந்த கேள்விகள் சிரமமானவை . பரீட்சையை தள்ளி போடுங்க.
  (பரீட்சை என்றாலே லேசா ஜுரம் அடிக்கிறமாதிரி இருக்குது, எங்க..
  சிபிக்கு பக்கத்தில பெஞ்சில நிற்க வேணுமோ என்று பயந்திட்டேன்)//////

  காலவரையின்றி தள்ளி வைத்துள்ளேன்:-)))))

  ReplyDelete
 26. /////விஜய் said...
  ///கோவை விமல்(vimal) said...
  அப்பா யாரு வாத்தியரே உங்கள் நண்பர்? அவருக்கு ஒரு கோடி கும்பிடு,
  எப்பிடியோ இந்த டெஸ்ட்-ல் இருந்து தப்பிததேன்..
  ஹையா இந்த வாரம் தேர்வு இல்லை..... உய் உய்
  சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே
  குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா!//////
  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com
  (கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்)///////

  சந்திப்போம். அங்கே ஜாதகம், கதை, மற்றும் மொக்கைப்பேச்செல்லாம் கிடையாது
  அறிமுகம், புன்னகை, கைகுலுக்கல் இம்மூன்று மட்டுமே!
  10.30 to 11.00 வரை மட்டுமே இருப்பேன்.
  அதற்குப்பிறகு எனக்கு வேறு பல முக்கியமான வேலைகள் இருப்பதால்
  கிளம்பி விடுவேன்.உங்கள் மொழியில் சொன்னால் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்!:-)))))

  ReplyDelete
 27. அன்பு வாத்தியாரே,

  இந்த முறை தேர்வு சற்று கடினமாக தெரிகிறது. தேர்வு அல்லது சிம்மாசனம் வாங்க அனுசரணை(ஸ்பான்ஸர்) எது சாய்ஸ் என்றால் சிம்மாசனமே மேல் என்று தோன்றுகிறது :-))

  சங்கர் சொன்னது போல் கூகுள் ஆண்டவர் கூட கைவிட்டு விட்டார் :(

  வாத்தியாருக்கு சரிக்கு சரியாக உரிமையுடன் வாயடித்தாலும் வாத்தியார் வாத்தியார் தான், மாணவன் மாணவன் தான் என்றே உணர்ந்தேன் நான் !!!

  (விமல்,விஜய் தம்பிகளா, கொஞ்சம் அடக்கி வாசிங்க, வாத்தியார் க்ளாஸ் விட்டு வீட்டுக்கு போன பின்னாடி நம்ப ஆட்டத்த வெச்சுக்கலாம் :-)))

  ReplyDelete
 28. ////கோவை விமல்(vimal) said...
  //@ தி.விஜய்
  சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா! //
  மெலடி-யோ , குத்தாட்ட-மொ தேர்வு இல்லை நண்பா, அதுதான் இத்தனை குஸி,.
  //(கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்) //
  எப்போது எங்கே என்ற தகவல்கள் இல்லை நண்பரே, அதே போல வாத்தியார் வருவாரா மாட்டாரா?/////

  கோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்
  ஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:

  திரு. மஞ்சூர் ராசா இல்லம்
  42, சீனிவாசா நகர்,
  கவுண்டம்பாளையம்.
  கோயம்புத்தூர்.

  நேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

  .... மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் நோக்கி செலும்போது கவுண்டம்பாளையம் சிக்னலில் ஒரு "U" வளைவு எடுத்துக் கொண்ட உடன் இடது புறம் பார்த்தால் திமுக இளைஞர் அணி என்ற அறிவிப்புடன் ஒரு பழைய கட்டிடம் இருக்கும். அதை ஒட்டி கொஞ்சம் கீழிறங்கியவாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றதும் வலது புறம் "மஞ்சூர் இல்லம்" என்ற பெயரில் இரண்டு மாடி வீடு இருக்கும். அதன் மேல் தளத்தில் சந்திப்பு நடைபெறும்....
  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

  மஞ்சூர் ராசா : 9442461246

  தமிழ் பயணி சிவா: 9894790836

  சஞ்சய் : 9842877208
  --------------------
  message taken from the following blog:
  http://podian.blogspot.com/

  ReplyDelete
 29. கோவை விமல்(vimal) said...
  //@ தி.விஜய்

  சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா! //

  மெலடி-யோ , குத்தாட்ட-மொ தேர்வு இல்லை நண்பா, அதுதான் இத்தனை குஸி,.

  //(கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்) //

  எப்போது எங்கே என்ற தகவல்கள் இல்லை நண்பரே, அதே போல வாத்தியார் வருவாரா மாட்டாரா?  தியாகு said...
  கோவை சந்திப்பிற்கான இடம் :

  42, சீனிவாசா நகர்,
  கவுண்டம்பாளையம்
  கோயம்புத்தூர்.


  தொலைபேசி :


  மஞ்சூர் ராசா : 9442461246

  தமிழ் பயணி சிவா: 9894790836


  சஞ்சய் : 9842877208


  அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

  ReplyDelete
 30. வலைபதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நீங்க சொல்ற லொகெஷன் பாத்தா FCI கோடவுன், பயர் சர்வீஸ்,தண்ணி டேங்கு, கோயில் பக்கம் போல இருக்கு.. நமக்கும் கொஞ்சம் கவுண்டம்பாளயம் தெரியுமுங்கோ..

  ReplyDelete
 31. ////தமாம் பாலா (dammam bala) said...
  அன்பு வாத்தியாரே,
  இந்த முறை தேர்வு சற்று கடினமாக தெரிகிறது.//////

  அதனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

  ///////////தேர்வு அல்லது சிம்மாசனம் வாங்க அனுசரணை(ஸ்பான்ஸர்) எது சாய்ஸ் என்றால் சிம்மாசனமே மேல் என்று தோன்றுகிறது :-))
  சங்கர் சொன்னது போல் கூகுள் ஆண்டவர் கூட கைவிட்டு விட்டார் :(///////

  கூகுள் ஆண்டவர் எதெதெற்கு என்ற கணக்கில்லையா?

  வாத்தியாருக்கு சரிக்கு சரியாக உரிமையுடன் வாயடித்தாலும் வாத்தியார் வாத்தியார் தான், மாணவன் மாணவன் தான் என்றே உணர்ந்தேன் நான் !!!
  ///////////(விமல்,விஜய் தம்பிகளா, கொஞ்சம் அடக்கி வாசிங்க, வாத்தியார் க்ளாஸ் விட்டு வீட்டுக்கு போன பின்னாடி நம்ப ஆட்டத்த வெச்சுக்கலாம் :-)))//////

  ரெம்ப நல்லாயிருக்கு!:-((((((((((

  ReplyDelete
 32. /////Blogger தமாம் பாலா (dammam bala) said...
  வலைபதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நீங்க சொல்ற லொகெஷன் பாத்தா
  FCI கோடவுன், பயர் சர்வீஸ்,தண்ணி டேங்கு, கோயில் பக்கம் போல இருக்கு..
  நமக்கும் கொஞ்சம் கவுண்டம்பாளயம் தெரியுமுங்கோ../////

  காசியாத்திரை தே.சீனிவாசன் பாணியில் சொன்னால்: அதே! அதே!

  ReplyDelete
 33. வலைபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

  பிரச்சினை ஏதும் இல்லாமல் சமர்த்தா போயிற்று வரணும் என்ன....

  அடுத்த கிளாஸ் எப்ப வாத்தியாரே, அடிக்கடி கிளாஸ் க்கு வந்திற்றுபோக கால் வலிக்குது.
  (அடுத்த பரிட்சைக்கு எதுவாக 100 famous horoscopes புத்தகம் வாங்கி வச்சிருக்கேன் )

  ReplyDelete
 34. Dear Sir,

  We are asked some advanced level of questions, still we are in very basic level, Hope we should do this in later stage.

  Can you please clarify what is the use of Navamsa Table and what is the difference between Rasi Chart.

  Thanks and Regards,

  GK,

  ReplyDelete
 35. //பேசாமல் நீங்கள் ஜ.ஹோவைப் பயன்படுத்துதல் நல்லது!// நன்றி. ஜ.ஹோ. ஒரே சமயத்தில் நான்கைந்து ஜாதகங்களை வைத்து ஒத்துநோக்க பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  தேர்வு கடினம் தான். ஆனால், இந்த தேர்வுக்காக ஓபன் புத்தக முறையில் (ஹிஹி) படித்தால் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.

  ஜீகே சொன்னாற் போல் //Can you please clarify what is the use of Navamsa Table and what is the difference between Rasi Chart.// பற்றியும் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 36. ஐயா! நான் பதிவர் மீட்டிங்கிற்கு வர இயலாது...

  ஆகா, பரிட்சைக்காகவாது 6,8,12ம் பற்றிய பாடங்கள் விரைவில் சொல்லிக்கொடுக்கபடும் என நினைக்கிறேன்...

  ReplyDelete
 37. //We are asked some advanced level of questions, still we are in very basic level, Hope we should do this in later stage.//

  வழிமொழிகிறேன் :) :)

  ReplyDelete
 38. ஐயா,
  போர்பந்தருக்கான லாஞ்சிட்யூட்,லாட்டிட்யூட் விபரங்கள் சரியானவையா?
  ஜ.ஹோ,உபயோகித்ததில் விபரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
  இரண்டாவது நேரத் தொகுப்பு 4.39 என்று கொடுத்திருக்கிறீர்கள்,ஆனால் இந்திய நேரம் 5.30 மணி கிழக்கு இல்லையா?

  ReplyDelete
 39. குருவே,

  தேர்வு மிகவும் கடினமே. நிறைய படிக்க வேண்டி இருந்தது. விடைகளில் பிழை இருப்பின் பொறுக்கவும்.

  1. 10-க்கு உரிய சந்திரன் சுயவர்க்கத்தில் 3 பரல்கள் பெற்று இருப்பது.
  4-ல் கேது

  2.5-m வீடு 30 பரல்கள் பெற்று இருப்பது.
  9 வீட்டு அதிபதி (புதன்) லக்னத்தில் இருப்பதால் நெடிய பயணம். நல்ல கல்வி.

  3. தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் சுயவர்கத்தில் 3 பரல்கள் பெற்று இருப்பது.
  தொழில் காரகன் சனி சுய வர்க்கத்தில் 0 பரல்கள் பெற்று இருப்பது.
  4-ல் கேது

  5. ஒரு கிரகம் கூட உச்சம் பெறவில்லை. அப்பொழுது குரு தசை நடந்தாலும் கேது புக்தி.

  7. 9-ல் 25 பரல்கள் பெற்று இருப்பது.
  9-க்கு உரிய புதன் சுய வர்க்கத்தில் 3 பரல்கள் பெற்று இருப்பது.

  8. மன காரகன் சந்திரன் சுய வர்க்கத்தில் 3 பரல்கள் பெற்று இருப்பது

  9. 5-க்கு உரியவன் 2-ல் இருப்பதால்.

  10. அஷ்ட வர்க்கத்தில் ஆயுள் காரகன் 24 பரல்கள்; சுய வர்க்கத்தில் 0 பரல்கள்
  லக்னத்தில் செவ்வாய், புதன் (பொது வாழ்வில் எதிரிகள்; எதிரிகள் மூலம் நஷ்டம்).

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 40. //////கல்கிதாசன் said...
  வலைபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
  பிரச்சினை ஏதும் இல்லாமல் சமர்த்தா போயிற்று வரணும் என்ன....
  அடுத்த கிளாஸ் எப்ப வாத்தியாரே, அடிக்கடி கிளாஸ் க்கு வந்திற்றுபோக கால் வலிக்குது.
  (அடுத்த பரிட்சைக்கு எதுவாக 100 famous horoscopes புத்தகம் வாங்கி வச்சிருக்கேன் )////////

  தேர்வுகள் famous horoscopesகளை வைத்து வராமல் பார்த்துக்கொள்கிறேன்:-))))

  ReplyDelete
 41. ///Geekay said...
  Dear Sir,
  We are asked some advanced level of questions, still we are in very basic level,
  Hope we should do this in later stage.
  Can you please clarify what is the use of Navamsa
  Table and what is the difference between Rasi Chart.
  Thanks and Regards,
  GK,//////

  Navamsa is the zoomed version of rasi chart and
  it will help to assess the strength of the horoscope
  in a better way!

  ReplyDelete
 42. கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  //பேசாமல் நீங்கள் ஜ.ஹோவைப் பயன்படுத்துதல் நல்லது!// நன்றி.
  ஜ.ஹோ. ஒரே சமயத்தில் நான்கைந்து ஜாதகங்களை வைத்து ஒத்து
  நோக்க பயனுள்ளதாகவும் இருக்கிறது.
  தேர்வு கடினம் தான். ஆனால், இந்த தேர்வுக்காக ஓபன்
  புத்தக முறையில் (ஹிஹி) படித்தால் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.
  ஜீகே சொன்னாற் போல் //Can you please clarify what is the use of
  Navamsa Table and what is the difference between Rasi Chart.// பற்றியும்
  சொல்லுங்களேன்!

  Navamsa is the zoomed version of rasi chart and
  it will help to assess the strength of the horoscope
  in a better way!

  ReplyDelete
 43. /////கூடுதுறை said...
  ஐயா! நான் பதிவர் மீட்டிங்கிற்கு வர இயலாது.
  ஆகா, பரிட்சைக்காகவாது 6,8,12ம் பற்றிய பாடங்கள்
  விரைவில் சொல்லிக்கொடுக்கபடும் என நினைக்கிறேன்.../////

  ஒவ்வொன்றாக வரும் நண்பரே!

  ReplyDelete
 44. //////புருனோ Bruno said...
  //We are asked some advanced level of questions,
  still we are in very basic level, Hope we should do this in later stage.//
  வழிமொழிகிறேன் :) :)////

  ஆகா, செய்கிறேன் டாக்டர்!

  ReplyDelete
 45. ////////அறிவன்#11802717200764379909 said...
  ஐயா,
  போர்பந்தருக்கான லாஞ்சிட்யூட்,லாட்டிட்யூட் விபரங்கள் சரியானவையா?
  ஜ.ஹோ,உபயோகித்ததில் விபரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
  இரண்டாவது நேரத் தொகுப்பு 4.39 என்று கொடுத்திருக்கிறீர்கள்,ஆனால்
  இந்திய நேரம் 5.30 மணி கிழக்கு இல்லையா?/////

  இந்திய ஸ்டாண்டார்டு டைம் என்பது +5.30 GMT
  உள்ளூர் நேரம் என்பது தனி!
  உதாரணம் கோவைக்கு 5.30 - 013 நிமிடங்கள் = 5.17 மணி
  அதை கணினி மென்பொருட்கள் தாங்களே செய்துகொள்ளும்படியாக
  வடிவமைக்கப்பெற்றுள்ளது.
  4.39 என்பது போர்பந்தரின் உள்ளூர் நேரம். அதை நான் கொடுக்கவில்லை
  ஜ.ஹோ கொடுத்துள்ளது!

  ReplyDelete
 46. 5. அப்படிக் கொடுத்தாலும், தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு ஒருநாள் கூட அவர் அரியனையில் அமரவில்லை! பதவியில் உட்காரவில்லை! அதற்கு
  ஜாதகப்படியான காரணம்,

  சூரியன் லக்னத்திற்கு 12லும் சந்திரனுக்கு 3லும் இருந்ததாலும் அரசாங்கத்தால் பதவி பெறும் நிலையை அவர்களாகவே நிராகரித்தார்கள்.

  7. வாழ்க்கையில் அவர் அனுபவித்தது கஷ்டங்களை மட்டுமே! சுகமான,
  ஆடம்பரமான வாழ்வு வாழ்வில்லை! அதற்கு ஜாதகப்படியான காரணம்

  சுக்கிரன் வசதிகளை தரும் கிரகம்.அவர் 6.8.12 ஆகிய மறைவு ஸ்தானாதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றுள்ளதால் எளிமையாக வாழ நேர்ந்தது.

  9. உலகப் புகழ் பெற்றார். அதில் மாற்றுக்கருத்து இல்லை! அதற்கு
  ஜாதகப்படியான காரணம்

  லக்னத்திற்கு 1-8-2-7,3-6-9-12 ம் அதிபதிகள் சந்திரனுக்கு கேந்திரம் பெற்றதால் உலகலாவிய புகழ் பெற்றார்.
  ஐயா கேட்கப் பட்டுள்ள கேள்விகளனைத்தும் மேற்படிப்புக்கானவைகளாக உள்ளனவோ எனத் தோன்றுகிறது.

  ReplyDelete
 47. 1. lost father in age 15--due to the sun's position in 12 , and wenus dasa mars bukthi.( mars suya varkham 2 , will do evil in its sub period -- my own experience)(mercury 9th lord by association malefic and getting aspect of retrograde 6th lord)

  2. saturn the yogathipathi (own kendra and trikona ) in 2 , (eduction which related to mouth) (law) and it is in own house in navamsa, and for the foreign travel indicators 9th and 12th getting aspect of jupiter .
  kethu in 4th with the aspect of 10th lord also promises job related education.(kethu gnakarakan and creates unsatisfied thirst of the house it is positioned)

  3. 10th house and owner aspected by mars , and moon association with rahu also doesn't give good results.

  4. lagna and owner aspected by 6th lord - scarifies his work to others
  11th lord in 12th -- gave his earnings to others,nation

  5. mars aspects 10th lord and house
  -denying mars.

  6. 6th lord retrograde -create enemy and fight.
  it is also 3rd lord - gave him lots of courage,(it is in own navamsa)

  7. papa in 12th (sun), 12th lord associates with 8th lord.
  12th lord getting aspect of 6th lord.
  same to lagna and lord ,association of 12th and 8th ,and aspect of 6th

  8. moon association with rahu give mental uneasy ,( and with mars aspect)
  and maandi in 5th always mental tesion and uneasy.
  mind owner -5th lord saturn - has 0 paral in suyavargam

  9 . fame by 39 parals in 11th house.lagna in own house ,aspected by jupiter ,lagna lord associates with 9th -fame.

  10.mars has 2 parals in suyavargam ,8,12 connection and 6 aspect to lagna
  (6th lord retrograde noticable also in Indira gandhi's chart- lost to subordinate enemy)

  please forgive me for my inexperience in tamil typing

  ReplyDelete
 48. //இரண்டுமே திருக்கணித்ததை அடிப்படையாகக் கொண்டதுதான்.
  ஜ்.ஹோ.வில் ஊரை அடித்தால் அதுவே GMT இருந்து இந்திய நகரங்களுக்கான
  நேரங்களைத் தானே கணக்கிட்டுக் கொண்டுவிடும்.
  //

  //இந்திய ஸ்டாண்டார்டு டைம் என்பது +5.30 GMT
  உள்ளூர் நேரம் என்பது தனி!
  உதாரணம் கோவைக்கு 5.30 - 013 நிமிடங்கள் = 5.17 மணி
  அதை கணினி மென்பொருட்கள் தாங்களே செய்துகொள்ளும்படியாக
  வடிவமைக்கப்பெற்றுள்ளது.
  4.39 என்பது போர்பந்தரின் உள்ளூர் நேரம். அதை நான் கொடுக்கவில்லை
  ஜ.ஹோ கொடுத்துள்ளது!
  //

  இது நடைமுறையில் இல்லை எனத் தோன்றுகிறது.சற்று விளக்க முடியுமா?
  புதிதாக ஒரு ஜாதகத்தை ஜ.ஹோ.வில் போடும் போது இந்திய நகரங்களுக்கு ஒரே மாதிரி 5.30 மணி கிழக்கு'தான் வருகிறது.

  ReplyDelete
 49. தேர்வை தள்ளி வைத்ததற்கு நன்றி ஆசானே..

  வெற்றி

  ReplyDelete
 50. நான் கற்ற வரையில் அனுமானித்த பதில்கள்..
  1)9,12 கிற்கு உரியவன் புதன்.அவருடைய தசையில் அப்பா இறந்தார்.
  2)5-ம் அதிபதி இரண்டில் இருப்பது, லக்னத்தில் 9-ம் அதிபதி புதன் இருப்பது.
  3)10-ம் அதிபதியுடன் ராகு சேர்ந்திருப்பது மற்றும் கேது பார்ப்பதினால்.
  4) பாஸ்.
  5) 11-ம் அதிபதி 12-ல் இருப்பது
  6) லக்னத்தில் லக்னாதிபதியுடன் செவ்வாய் இருப்பது மற்றும் குருவின் பார்வை பெற்றிருப்பது.
  7) 9-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் புதன்.சுக்கிரனுடன் செவ்வாய் இருப்பது.
  8)5-ம் அதிபதி சனி இரண்டில் இருப்பது.
  9) 2-ம், 5-ம் அதிபதிகள் லக்னத்தில் இருப்பது.
  10)8-ம் அதிபதி சுக்கிரனின் தசாவில்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com