மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.7.08

இனிய நண்பர் செந்தழலலாரின் கேள்விக்கு எனது பதில்!

கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி! சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..
கேட்டவர் எனது அன்பிற்கு உரிய நண்பர் செந்தழல் ரவி: சுட்டி இங்கே!

இப்போது எனது பதில். நீல நீறத்தில் உள்ள எழுத்துக்கள் அவருடையது.
சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் எனது பதில்
-----------------------------------------------------------------------
///////சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...
ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா,
பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி
ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...
(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால்
அவரை கேட்டுக்கொள்ளலாம்...)/////

நீங்கள் சொல்கின்ற கோள்களையெல்லாம் L & T மாதிரிக் கம்பெனிக்காரர்கள்
செய்து
கொண்டு போய் வானத்தில் வைத்ததல்ல - இப்போது கண்டுபிடிப்பதற்கு!
வானத்தில்
உள்ள அத்தனை கோள்களுமே காலம் காலமாக இருப்பதுதான்.
புதிய விஷயமில்லை!

அவற்றில் எதை எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றை மட்டுமே கணிக்கிட்டு
நமது
ரிஷிகள் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துவிட்டுப் போனதுதான்
ஜோதிடக்
கலை! (ரிஷிகள் என்றால் தெரியுமல்லவா?)

/////இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை
நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே?
யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே?////

சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அல்லவா உப்பிருக்கிறதா, உரைப்பிருக்கிறதா?
அல்லது
இனிப்பிருக்கிறதா? என்று தெரியும்? ஜோதிடத்தில் இதுவரை 93 பதிவுகள்
எழுதியிருக்கிறேன்!
விக்கிபீடியாவில் இருந்து பல விஞ்ஞான சான்றுகளைக்
கொடுத்துள்ளேன். நீங்கள்
எத்தனை பதிவுகளைப் படித்திருக்கிறீர்கள்?

வகுப்பறை மட்டும் நடத்தவில்லை. பல்சுவை அரங்கமும் நடத்துகிறேன். அதில்
இதுவரை
293 பதிவுகளை எழுதியிருக்கிறேன். நட்சத்திர வாரத்தில் 33 பதிவுகள்
எழுதியிருக்கிறேன்
அது தெரியுமல்லவா உங்களுக்கு?

////////பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு
கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும்
வேண்டுமா?///////

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? அதுபோல இருக்கும் முதிர்
கன்னிகளின்
லிஸ்ட்டைக் கொடுங்கள். பெண்கள் நல வாரியத்திற்கு அனுப்பி
நடவடிக்கை எடுக்கச்
சொல்வோம்!

//////வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க
மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து
மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு
செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா,/////

நான் ஆலோசனை சொன்னால் யார் கேட்பார்கள்? நீங்களே கேட்க மாட்டீர்கள்.
பிறகு
நூற்றுக் கணக்கான தந்தைமார்கள் அல்லது நீங்கள் சொல்வதுபோல
ஆயிரக்கணக்கான
நடுத்தரவர்க்கத்துக்காரர்கள் எப்படிக்கேட்பார்கள்?

//////////கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன்
ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க?////

கிளி ஜோதிடம் பார்த்தால், வாழ்க்கை மாறிவிடும் என்று யார் சொன்னது? உங்க
கிராமத்துக்
கிளி ஜோதிடன் சொன்னானா? ஐந்து ரூபாய்க்கு ஏனடா அலைகிறாய்
என்று நீங்கள்
அவனை அல்லவா கேட்டிருக்க வேண்டும்? நாய் கடித்தவனுக்கு ஊசி
போடாமல், கூட
வந்தவனுக்கு ஊசி போட்டால் எப்படி? அதாவது சொன்னவனை
அல்லவா நீங்கள்
கேட்டிருக்க வேண்டும்? என்னைக் கேட்பது என்ன நியாயம்?

////////ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட்
திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா?///////

கிளி ஜோதிடத்திற்கு சொன்ன பதில்தான் இதற்கும்!

//////சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது
கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே
இருக்கிறது ? சாமியிலா, பேயிலா?/////

சாமி,, பேய்,, பிஸ்சடிக்கும்போது வரும் நினைவுகள் என்பது பற்றி எனக்கெப்படித்
தெரியும்?
இந்தக் கேள்வியை நீங்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கேட்டால்
சரியான பதில் கிடைக்கும்.


///////பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...
அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ? /////

பெரியார் பற்றிச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் ஆசான் கவியரசர்
கண்ணதாசன்
பெரியாரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். தேவைப்பட்டால்
அவருடைய புத்தகங்களைப்
படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

Now it is my turn!

உங்களுக்கான ஒரே கேள்வி!

இது நீங்களே எழுதிய பதிவா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததைப்
பதிவிட்டிருக்கிறீர்களா? (உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான்
இந்தக் கேள்வி)

மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது என்றால் இத்தோடு விட்டு விடுகிறேன்!

இல்லையென்றால் சொல்லுங்கள். பகுத்து அறியும் அறிவை வைத்து என் மனதில்
நிறையச் சந்தேகங்கள் உள்ளன. அவற்றைப் பத்துப் பத்தாகப் பிரித்து, பதிவுகளில்
எழுதி உங்களிடம் கேட்டு , அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் சந்தேகங்களைப்
போக்கிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கட்டும்!

அன்புடன்
சுப்பையா வாத்தி (யார்)

வாழ்க வளமுடன்!

104 comments:

  1. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம்! என பாரதியாரால் சொல்ல முடிந்தது என்றால் அவருக்கு 14 மொழிகள் தெரியுமாம். :)


    ஜோதிடம் ஒரு அறிவியல் கலை எல்லாமே டிகிரி சுத்தமாக கணக்கியலை அடிப்படையாக கொண்டது.

    முதலில் கற்று கொண்டு பின் கேள்வி கேக்கலாமே.

    ப்ரீயா விடுங்க குருவே!

    பி.கு: டிகிரி என்பது டிகிரி காப்பியை குறிக்க வில்லை. :p

    ReplyDelete
  2. ஒரு வகுப்பு வேஸ்ட்டா போச்சு. :(

    இந்த நேரத்துல பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தொடர்ந்து இருக்கலாம். :p

    ReplyDelete
  3. வாத்தியாரே, இதுக்கெல்லாம் பதில் பதிவு எழுதணுமா என்ன?

    ReplyDelete
  4. please just ignore these people. they just want to show that they can ask questions. it is always very easy to say there is nothing but it is not that easy to prove. let them be honest first.

    than nenjarivadhu poyyarka!

    continue your service!

    ReplyDelete
  5. ஐயா,

    கிழி கிழி கிழியென கிழித்துவிட்டீர்கள்...

    ரவி அவர்கள் கேட்டிருக்கமாட்டார்... கண்டிப்பாக மண்டபத்தில் தான் யாரோ எழுதிகொடுத்து இருப்பார்கள்...

    இன்னும் சிலருக்கு இந்தபதிவின் லிங்கை நான் அனுப்பிவைக்கிறேன்

    ReplyDelete
  6. சபாஷ் சரியான போட்டி ..

    ReplyDelete
  7. //உங்களுக்கான ஒரே கேள்வி!

    இது நீங்களே எழுதிய பதிவா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததைப்
    பதிவிட்டிருக்கிறீர்களா? (உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான்
    இந்தக் கேள்வி)

    மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது என்றால் இத்தோடு விட்டு விடுகிறேன்!//
    :-))

    ReplyDelete
  8. வாத்தியார் அவர்களே...

    உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்...

    இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க விரும்பித்தான் அந்த பதிவிட்டேன்...

    அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே...

    உங்கள் சுயத்தையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் எண்ணமில்லை...

    உங்கள் பதில்கள் கண்டு - நீங்கள் காயப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது...

    மன்னிக்கவும்..

    அதனால் இந்த விவாதத்தை - இப்போதைக்கு - தொடர விரும்பவில்லை...

    நீங்கள் விரும்பினால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தொடரலாம்...

    ReplyDelete
  9. வணக்கம் வாத்தியாரே,
    ஒழுங்காக நடந்துகொண்டிருந்த வகுப்பறையில் யாரோ ஏதோ தெரியாத்தனமாக கேள்வி கேட்டதற்காக வகுப்பறையை நிறுத்திவிடாதீர்கள்.

    இந்த ஜோதிடத்தில் நம்பிக்கைவைத்து நீங்கள் பாடம் நடத்துகின்றீர்கள். வகுப்பறை மாணவர்களும் அதில் நம்பிக்கை வைத்து தெரியாத விஷயம் ஒன்றை தெரிந்துகொள்வதற்காக படித்து வருகின்றார்கள். இதில் மற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

    ராசி, ஜோதிடம் எல்லாம் பொய் என்று சொல்லுவதை பேஷனாகவும், மற்றவர்கள் தங்களை புத்திஜீவிகளாகவும் கருதவேண்டும் என்பதற்காகவும் சொல்பவர்கள் பலரை என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கின்றேன். யாரும் அற்ற நேரத்தில் தெருவோர ஜோசியகாரரிடம் கையைநீட்டுபவர் அவர்களாகத்தான் இருப்பார்கள்.(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை)

    ஜோதிடத்தப்பற்றி முழுமையான அறிவு இல்லாமையால், அதுபற்றிய சாத்தியங்கள் பற்றி எனக்கு பல சந்தேகங்கள் இப்போது கூட இருந்தாலும், எனது முன்னோர்கள் அவர்களது ஆத்ம வலிமையின் உதவிகொண்டு எமக்கு அளித்து விட்டுப்போன மாபெரும் கலையை தெருவோர ஜோசியக்காரனை உதாரணம் காட்டி ஒதுக்கிவிடுதல் முட்டாள்தனம் என்று நினைக்கின்றேன்.

    ஜோதிடத்தை விமர்சிப்பவர்கள் முதலில் அதன் "அரிச்சுவடியையாவது படித்துவிட்டு, தெளிந்துகொண்டு" விமர்சிக்கட்டும்.

    ReplyDelete
  10. வாத்தியாரே, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல :-)))))

    இங்கே பின்னூட்டம் போட்டதாலே ரவிக்கு மண்டபத்துலே எழுதி கொடுத்தது நான் தான்னு சொல்லிடப் போறீங்க.

    சும்மா யதேச்சையா தான் எட்டிப் பார்த்தேன் :-)))))

    ReplyDelete
  11. ஆசிரியர் ஐயா ,

    நேற்று சன் டீவி இரவு 9 மணி சீரியல் கோலங்களில் ஒரு கதாபாதிரத்தின் வாயிலாக ஒரு வாழ்க்கைத்தத்துவத்தை அதன் இயக்குனர் " திரு தொல்காப்பியன்" சொல்லியுள்ளார்.

    கதையின் படி தொல்காப்பியன் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பபட்டு வாழ்வில் விரக்தி அடைந்து கடற்கரையில் சோர்ந்து இருப்பார்.

    வழிப்போக்கன் சொல்லும்
    வாழ்க்கைத்தத்துவம்.

    "இந்த பரந்த உலகில் கோடானகோடி நட்சத்திரங்களில் சூரியன் ஒரு நட்சத்திரம்.
    அந்த சூரியனை சுற்றும் பல கிரகங்களில் நமது பூமியும் ஒன்று.
    அதில் உள்ள கோடான கோடி ஜீவ ராசிகளில் மனிதனும் ஒன்று.

    மிருகங்களில் உனவுக்காக பிற மிருகங்களை கொன்று சாப்பிடுவது சிங்கம்,புலி ஆகியவற்றின் குணம்.

    தந்திரம் செய்து ஏமாற்றுவது நரியின் குணம்.

    பயந்து ஓடுவது மானின் குணம்.

    அதே போல் மனிதர்கள் அவரவர் சுபாவ குணத்தோடு வாழ்கின்றனர்.

    அன்பும்,நற்பண்புகளும் நிறைந்தவர்கள் பிரால் வஞ்சிக்கப் படும் போதோ, தூற்றப் படும் போதோ அதை பெரிது படுத்தாது மேலே நம் பணிகளை தொடர்வதே சாலச் சிறந்தது"


    கதையின் படி நற்குணவானாக,தர்மசிந்தனையாளனாக,பரோபகாரியாக உருவகப் படுத்தப் படும் தொல்காப்பியன் மனம் தெளிந்து தன் கடமைகளை தொடர ......

    --தொடரும் போடப்படுகிறது.

    ReplyDelete
  12. அன்புள்ள ஐயா அவர்களூக்கு

    இப்பவும் எனது கூடுதுறை பதிவின் டெம்ப்லேட் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தங்களுக்கு கொடுத்த லிங்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது

    தயவு செய்து உடனே கீழேக்கண்ட லிங்கை தங்களது பதிவில் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்


    http://scssundar.blogspot.com/2008/06/blog-post.html

    சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.


    வணக்கம்


    scssundar

    ReplyDelete
  13. மதம்,ஜோதிடம் போன்ற தனி மனித நம்பிக்கைகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருத்தருக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக மற்றவர்களையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவசியம் இல்லை.

    நம் வாத்தியாரும் எல்லோரும் வகுப்பு அறை பதிவை படித்து தான் ஆகவேண்டும் என வற்புறுத்தவில்லை.
    எனவே இதில் நம்பிக்கை உள்ளவர்கள், தம் சொந்த அனுபவத்தில் நிஜம் என்று நம்புபவர்கள், படிக்கலாம்.

    இணையத்தில் ஜட்டி கதை பக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன, அவரவர் இஷ்டப்படி படிக்க. ஜோதிடத்தை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் கூட நம் முன்னோர்கள் நாஸா போன்ற தொலைநோக்கி/கருவிகள் இல்லாமல் கோள்கள் இடமாற்ற காலத்தை துல்லியமாக கணித்துள்ளதை மறுக்க முடியாதல்லவா?

    ReplyDelete
  14. ஹலோ சார்,

    வாவ்.... நான் நிஜமவே நிங்க இந்த அளவுக்கு சும்மா நச்சு நச்சுனு பதில் தருவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்லை.
    ஒவ்வொரு பதிலும் சும்மா சூப்பர். பின்னிட்டீங்க போங்க. ஆமா இதுல பகுத்தறிவிக்கும் ஜோசியத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியல?

    அனுபவிக்கும் போதுதான் இதற்கான புரிதல் ஆரம்பமாகும். கஷ்டம் வரும் போது தான் நாமளே நம்ம அறியாம இந்த ஜோசியத்த தேட ஆரம்பிப்போம். இவருக்கும் இப்படி ஒரு அனுபவம் கிட்டும். அப்ப இவரும் இத தேட ஆரம்பிப்பாரு.

    நல்ல பதில்கள் வாத்தியாரய்யா.

    ReplyDelete
  15. ஐயா,

    சரியான, அருமையான நெத்தியடியான பதில்கள்...
    ஜோதிடத்தை நம்பாதவர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களை
    கேலி செய்யக்கூடாது என்பது என் கருத்து. இது கடவுள் நம்பிக்கை போன்ற விஷயம்தான்.

    ReplyDelete
  16. மஞ்சள் துண்டுப் போட்ட பகுத்தறிவளரையும், வீட்டில் பெருமாள் படம் பூசித்தவரையும் நாடறியும். ஏன் இந்து மதம் சார்ந்த விஷயம் தவிர்த்து மற்ற மததின் கோட்பாடுகளை சாடுங்களேன் பார்ப்போம்.

    இதற்காக நான் மதம் சார்ந்தவன் என்று என்னவேண்டாம். என் நண்பர்களின் வீட்டில் கிருஸ்மஸ்ம், பக்கிரித்தும் கொண்டடும் ஓர் இந்தியன் நான்.

    GOD is No Where ஏன்று பரப்பியவரின், கடைசிகாலத்தில் GOD is Now here

    என்று உணர்ந்தது உலகறியும். நமக்கு பிடிக்காத ஒன்று இல்லை என்று ஆகாது.

    If you are an Astrologist and practicing for more than 10 years I am agree that, provided you are did some research.

    ReplyDelete
  17. ////ambi said...
    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம்! என பாரதியாரால் சொல்ல முடிந்தது என்றால் அவருக்கு 14 மொழிகள் தெரியுமாம். :)
    ஜோதிடம் ஒரு அறிவியல் கலை எல்லாமே டிகிரி சுத்தமாக கணக்கியலை அடிப்படையாக கொண்டது.
    முதலில் கற்று கொண்டு பின் கேள்வி கேக்கலாமே.
    ப்ரீயா விடுங்க குருவே!
    பி.கு: டிகிரி என்பது டிகிரி காப்பியை குறிக்க வில்லை. :p//////

    அவர் என் நண்பர்தான் - அவர் மின்னஞ்சலில் இவற்றைக்கேட்டிருக்கலாம்
    பதிவு ஒன்றபோட்டு தமிழ்மணச் சுவற்றில் போஸ்டராக ஒட்டிவிட்டார்.
    அதனால் நானும் பதில் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியதாகிவிட்டது.
    இருவருக்குமே தேவையில்லாத வேலைதான் - என்ன செய்வது?

    ReplyDelete
  18. ///// ambi said...
    ஒரு வகுப்பு வேஸ்ட்டா போச்சு. :(////

    ஏன் இந்தக் கேள்வி - பதில் பதிவையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்களேன்!

    ReplyDelete
  19. /////திவா said...
    வாத்தியாரே, இதுக்கெல்லாம் பதில் பதிவு எழுதணுமா என்ன?//////

    பதிவு போட்டு எழுதியதைப் படித்த பிறகு - பதில் சொல்லாமல் விடுவது உசிதமல்ல!

    ReplyDelete
  20. Dear Sir

    I think its really waste of time to discuss this kinda issues anymore...If somebody wants to learn let them come and learn...there is no way to compul anybody to believe it or not...

    Please ignore this kind and be cool as always. I am waiting for lessons to come:-)))

    -Shankar

    ReplyDelete
  21. //சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அல்லவா உப்பிருக்கிறதா, உரைப்பிருக்கிறதா?
    அல்லது இனிப்பிருக்கிறதா? என்று தெரியும்? //
    சரியாக சொன்னீர்கள் !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  22. எதுக்கு வாத்தியார் நேரத்தை வீணாக்குகிறார்னு தான் சொல்லலாம்னு வந்தேன்:-) எல்லா பதில்களும் நச் தான்: இதுவும் கூட: //பதிவு ஒன்றபோட்டு தமிழ்மணச் சுவற்றில் போஸ்டராக ஒட்டிவிட்டார். அதனால் நானும் பதில் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியதாகிவிட்டது.
    இருவருக்குமே தேவையில்லாத வேலைதான்// நல்லா சொன்னீங்க.

    எனக்குத் தெரிந்த அத்தனை பேரின் வாழ்க்கையிலும் (சரியாகக்) கணித்த சோதிடம் உண்மையாகியிருக்கிறது. நம் ஜோதிட மொழியில் கிரகம்னு சொல்லுவது அநேகமா "ஸ்பேஸ் என்டிடி" தான் சரியாக வரும், ப்ளானட் இல்லைன்னு சொல்லலாமா? மற்றபடி எனக்கு சோதிடத்தின் நுட்பங்கள் அதிகம் தெரியாது.

    இன்னொருவரின் மத நம்பிக்கை (குங்குமம், ஆஷ்) இடுவதை குறை சொல்லக் கூடாது என்று சொல்லும் நண்பர்கள் இந்த நம்பிக்கைகளையும் நட்போடு அறியலாம். அப்ப கேள்விகள் கேட்கும் விதம் வேறுபடும்னு தோணுது.

    ReplyDelete
  23. ////kulo said...
    please just ignore these people. they just want to show that they can ask
    questions. it is always very easy to say there is nothing but it is not that easy
    to prove. let them be honest first.
    than nenjarivadhu poyyarka!
    continue your service!////

    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  24. ////கூடுதுறை said...
    ஐயா,
    கிழி கிழி கிழியென கிழித்துவிட்டீர்கள்...
    ரவி அவர்கள் கேட்டிருக்கமாட்டார்... கண்டிப்பாக மண்டபத்தில் தான்
    யாரோ எழுதிகொடுத்து இருப்பார்கள்...
    இன்னும் சிலருக்கு இந்தபதிவின் லிங்கை நான் அனுப்பிவைக்கிறேன்//////

    நான் அப்படி நினைக்கவில்லை. உரிய பதிலை மட்டுமே சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
  25. ////Geekay said...
    சபாஷ் சரியான போட்டி ..//////

    சரியான போட்டி என்பதை நாம் எப்படிச் சொல்ல முடியும்?
    அதைத் தீர்மானிப்பவன் மேலே இருக்கிறான்!

    ReplyDelete
  26. //////Geekay said...
    //உங்களுக்கான ஒரே கேள்வி!
    இது நீங்களே எழுதிய பதிவா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததைப்
    பதிவிட்டிருக்கிறீர்களா? (உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான்
    இந்தக் கேள்வி)
    மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது என்றால் இத்தோடு விட்டு விடுகிறேன்!// :-))/////

    ஸ்மைலி போடும் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. மனதில் தோன்றியதைத்தான் சொன்னேன்!

    ReplyDelete
  27. ////செந்தழல் ரவி said...
    வாத்தியார் அவர்களே...
    உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்...
    இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க விரும்பித்தான் அந்த பதிவிட்டேன்..
    அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே..
    உங்கள் சுயத்தையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் எண்ணமில்லை...
    உங்கள் பதில்கள் கண்டு - நீங்கள் காயப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது...
    மன்னிக்கவும்..///////

    காயப்படவில்லை!
    வருத்தம் உண்டு!
    நீங்கள் பதிவில் போடாமல் மின்னஞ்சலில் கேட்டிருக்கலாம்.
    விஷயம் மேடைக்கு வந்திருக்காது!
    உங்கள் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  28. //////கல்கிதாசன் said...
    வணக்கம் வாத்தியாரே,
    ஒழுங்காக நடந்துகொண்டிருந்த வகுப்பறையில் யாரோ ஏதோ தெரியாத்தனமாக கேள்வி
    கேட்டதற்காக வகுப்பறையை நிறுத்திவிடாதீர்கள்.
    இந்த ஜோதிடத்தில் நம்பிக்கைவைத்து நீங்கள் பாடம் நடத்துகின்றீர்கள்.
    வகுப்பறை மாணவர்களும் அதில் நம்பிக்கை வைத்து தெரியாத விஷயம் ஒன்றை
    தெரிந்துகொள்வதற்காக படித்து வருகின்றார்கள். இதில் மற்றவர்களைப்பற்றி நாம்
    கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
    ராசி, ஜோதிடம் எல்லாம் பொய் என்று சொல்லுவதை பேஷனாகவும்,
    மற்றவர்கள் தங்களை புத்திஜீவிகளாகவும் கருதவேண்டும் என்பதற்காகவும்
    சொல்பவர்கள் பலரை என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கின்றேன். யாரும்
    அற்ற நேரத்தில் தெருவோர ஜோசியகாரரிடம் கையைநீட்டுபவர்
    அவர்களாகத்தான் இருப்பார்கள்.(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை)
    ஜோதிடத்தப்பற்றி முழுமையான அறிவு இல்லாமையால், அதுபற்றிய
    சாத்தியங்கள் பற்றி எனக்கு பல சந்தேகங்கள் இப்போது கூட இருந்தாலும்,
    எனது முன்னோர்கள் அவர்களது ஆத்ம வலிமையின் உதவிகொண்டு எமக்கு
    அளித்து விட்டுப்போன மாபெரும் கலையை தெருவோர ஜோசியக்காரனை
    உதாரணம் காட்டி ஒதுக்கிவிடுதல் முட்டாள்தனம் என்று நினைக்கின்றேன்.
    ஜோதிடத்தை விமர்சிப்பவர்கள் முதலில் அதன் "அரிச்சுவடியையாவது
    படித்துவிட்டு, தெளிந்துகொண்டு" விமர்சிக்கட்டும்.//////

    உங்கள் கருத்திற்கு நன்றி கல்கிதாசன்!

    ReplyDelete
  29. //////லக்கிலுக் said...
    வாத்தியாரே, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல :-)))))
    இங்கே பின்னூட்டம் போட்டதாலே ரவிக்கு மண்டபத்துலே எழுதி கொடுத்தது
    நான் தான்னு சொல்லிடப் போறீங்க.
    சும்மா யதேச்சையா தான் எட்டிப் பார்த்தேன் :-)))))//////

    டென்சன் ஆகவில்லை லக்கியாரே!
    ஆனால் வருத்தம் ஏற்பட்டது!

    நீங்கள் எழுதிக்கொடுத்ததாக ஒருபோதும் நான் நினைக்க மாட்டேன்.
    உங்களுக்குத் தேவையென்றால் நீங்களே பதிவிட்டிருக்க மாட்டீர்களா?
    ஆனால் இன்னும் நன்றாக எழுதியிருப்பீர்கள்:-))))))))

    ReplyDelete
  30. //////பொதிகைத் தென்றல் said...
    ஆசிரியர் ஐயா ,
    நேற்று சன் டீவி இரவு 9 மணி சீரியல் கோலங்களில் ஒரு கதாபாதிரத்தின் வாயிலாக
    ஒரு வாழ்க்கைத்தத்துவத்தை அதன் இயக்குனர் " திரு தொல்காப்பியன்" சொல்லியுள்ளார்.
    கதையின் படி தொல்காப்பியன் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பபட்டு வாழ்வில் விரக்தி
    அடைந்து கடற்கரையில் சோர்ந்து இருப்பார்.
    வழிப்போக்கன் சொல்லும்
    வாழ்க்கைத்தத்துவம்.
    "இந்த பரந்த உலகில் கோடானகோடி நட்சத்திரங்களில் சூரியன் ஒரு நட்சத்திரம்.
    அந்த சூரியனை சுற்றும் பல கிரகங்களில் நமது பூமியும் ஒன்று.
    அதில் உள்ள கோடான கோடி ஜீவ ராசிகளில் மனிதனும் ஒன்று.
    மிருகங்களில் உனவுக்காக பிற மிருகங்களை கொன்று சாப்பிடுவது
    சிங்கம்,புலி ஆகியவற்றின் குணம்.
    தந்திரம் செய்து ஏமாற்றுவது நரியின் குணம்.
    பயந்து ஓடுவது மானின் குணம்.
    அதே போல் மனிதர்கள் அவரவர் சுபாவ குணத்தோடு வாழ்கின்றனர்.
    அன்பும்,நற்பண்புகளும் நிறைந்தவர்கள் பிரரால் வஞ்சிக்கப் படும் போதோ,
    தூற்றப் படும் போதோ அதை பெரிது படுத்தாது மேலே நம் பணிகளை தொடர்வதே
    சாலச் சிறந்தது"
    கதையின் படி நற்குணவானாக,தர்மசிந்தனையாளனாக,பரோபகாரியாக
    உருவகப் படுத்தப் படும் தொல்காப்பியன் மனம் தெளிந்து தன் கடமைகளை தொடர ......
    --தொடரும் போடப்படுகிறது.//////

    இதற்கெல்லாம் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது பொதிகையாரே?
    தொடர் பார்த்ததைப் பற்றிச் சொல்லவில்லை!
    பின்னூட்டத்தில் அதை நினைவுபடுத்தி எழுதியதைச் சொல்கிறேன்

    ReplyDelete
  31. /////தமாம் பாலா said...
    மதம்,ஜோதிடம் போன்ற தனி மனித நம்பிக்கைகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருத்தருக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக மற்றவர்களையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவசியம் இல்லை.
    நம் வாத்தியாரும் எல்லோரும் வகுப்பு அறை பதிவை படித்து தான் ஆகவேண்டும் என வற்புறுத்தவில்லை.
    எனவே இதில் நம்பிக்கை உள்ளவர்கள், தம் சொந்த அனுபவத்தில் நிஜம் என்று நம்புபவர்கள், படிக்கலாம்.
    இணையத்தில் ஜட்டி கதை பக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன, அவரவர் இஷ்டப்படி படிக்க. ஜோதிடத்தை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் கூட
    நம் முன்னோர்கள் நாஸா போன்ற தொலைநோக்கி/கருவிகள் இல்லாமல் கோள்கள் இடமாற்ற காலத்தை துல்லியமாக கணித்துள்ளதை மறுக்க முடியாதல்லவா?/////

    விவரமாகச் சொல்லியுள்ளீர்கள் பாலா! நன்றி!

    ReplyDelete
  32. ///////Sumathi. said...
    ஹலோ சார்,
    வாவ்.... நான் நிஜமாகவே நீங்க இந்த அளவுக்கு சும்மா நச்சு நச்சுனு பதில் தருவீங்கன்னு
    எதிர்பார்க்கவேயில்லை. ஒவ்வொரு பதிலும் சும்மா சூப்பர். பின்னிட்டீங்க போங்க. ஆமா இதுல
    பகுத்தறிவிக்கும் ஜோசியத்துக்கும் என்ன சம்பந்தம்னே புரியல?
    அனுபவிக்கும் போதுதான் இதற்கான புரிதல் ஆரம்பமாகும். கஷ்டம் வரும் போது தான்
    நாமளே நம்ம அறியாம இந்த ஜோசியத்த தேட ஆரம்பிப்போம். இவருக்கும் இப்படி ஒரு
    அனுபவம் கிட்டும். அப்ப இவரும் இத தேட ஆரம்பிப்பாரு.
    நல்ல பதில்கள் வாத்தியாரய்யா.////

    பாவம், ஜோதிடத்தை தேடும்படியான சூழ்நிலை அவருக்கு வரவேண்டாம். அதற்குப் பதிலாக
    ஆர்வம் வரட்டும். ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  33. /////மணிவேல் said...
    ஐயா,
    சரியான, அருமையான நெத்தியடியான பதில்கள்...
    ஜோதிடத்தை நம்பாதவர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களை
    கேலி செய்யக்கூடாது என்பது என் கருத்து.
    இது கடவுள் நம்பிக்கை போன்ற விஷயம்தான்./////

    அவற்றை நீங்கள் சொல்லியுள்ளபடியான பதில்களாக நான் நினைக்கவில்லை!
    உரிய பதில்கள் அவ்வளவுதான். அவர் சமூகத்தொண்டுகள் ஆற்றிவருபவர்
    அவர்மேல் எனக்கு என்றும் ஒரு மரியாதை உண்டு!

    ReplyDelete
  34. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    மஞ்சள் துண்டுப் போட்ட பகுத்தறிவளரையும், வீட்டில் பெருமாள் படம் பூசித்தவரையும்
    நாடறியும். ஏன் இந்து மதம் சார்ந்த விஷயம் தவிர்த்து மற்ற மததின் கோட்பாடுகளை
    சாடுங்களேன் பார்ப்போம்.
    இதற்காக நான் மதம் சார்ந்தவன் என்று என்னவேண்டாம். என் நண்பர்களின்
    வீட்டில் கிருஸ்மஸ்ம், பக்கிரித்தும் கொண்டடும் ஓர் இந்தியன் நான்.
    GOD is No Where ஏன்று பரப்பியவரின், கடைசிகாலத்தில் GOD is Now here
    என்று உணர்ந்தது உலகறியும். நமக்கு பிடிக்காத ஒன்று இல்லை என்று ஆகாது.
    If you are an Astrologist and practicing for more than 10 years I am agree that,
    provided you are did some research.////

    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ///// Anonymous said...
    Dear Sir
    I think its really waste of time to discuss this kinda issues anymore...
    If somebody wants to learn let them come and learn...there is no way to
    compul anybody to believe it or not...
    Please ignore this kind and be cool as always.
    I am waiting for lessons to come:-)))
    -Shankar//////

    நல்லது நண்பரே! அடுத்த பாடம் நாளைக் காலையில்!

    ReplyDelete
  36. //////ARUVAI BASKAR said...
    //சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அல்லவா உப்பிருக்கிறதா, உரைப்பிருக்கிறதா?
    அல்லது இனிப்பிருக்கிறதா? என்று தெரியும்? //
    சரியாக சொன்னீர்கள் !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்/////

    நன்றி பாஸ்கர்

    ReplyDelete
  37. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    எதுக்கு வாத்தியார் நேரத்தை வீணாக்குகிறார்னு தான் சொல்லலாம்னு வந்தேன்:-) எல்லா
    பதில்களும் நச் தான்: இதுவும் கூட: //பதிவு ஒன்றபோட்டு தமிழ்மணச் சுவற்றில் போஸ்டராக
    ஒட்டிவிட்டார். அதனால் நானும் பதில் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியதாகிவிட்டது.
    இருவருக்குமே தேவையில்லாத வேலைதான்// நல்லா சொன்னீங்க.
    எனக்குத் தெரிந்த அத்தனை பேரின் வாழ்க்கையிலும் (சரியாகக்) கணித்த சோதிடம்
    உண்மையாகியிருக்கிறது. நம் ஜோதிட மொழியில் கிரகம்னு சொல்லுவது அநேகமா
    "ஸ்பேஸ் என்டிடி" தான் சரியாக வரும், ப்ளானட் இல்லைன்னு சொல்லலாமா?
    மற்றபடி எனக்கு சோதிடத்தின் நுட்பங்கள் அதிகம் தெரியாது.
    இன்னொருவரின் மத நம்பிக்கை (குங்குமம், ஆஷ்) இடுவதை குறை சொல்லக்
    கூடாது என்று சொல்லும் நண்பர்கள் இந்த நம்பிக்கைகளையும் நட்போடு அறியலாம்.
    அப்ப கேள்விகள் கேட்கும் விதம் வேறுபடும்னு தோணுது./////

    கேள்விகள் கேட்கும் விதம் வேறுபடும்; அதோடு பதில் சொல்லும் தன்மையும் வேறுபடும்!
    நன்றி சகோதரி!

    ReplyDelete
  38. ///அன்புடன்
    சுப்பையா வாத்தி (யார்)///

    vaathi ---yaar?:-))) absolutely you!!

    -Shankar

    ReplyDelete
  39. ////////பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு
    கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும்
    வேண்டுமா?///////


    இந்த ஒரு கேள்வியிலேயே அவரு என்ன நினைச்சு கேக்க வந்தாருங்கிற அடங்கிருச்சு. இப்ப நம்ம குடும்பத்தில அப்படிப் பட்ட ஒரு பொண்ணு வாழப் போயி 30அ கடந்தும் நொந்து வாழ்ந்துட்டு இருந்தா உங்க மனசெல்லாம் எப்படிய்யா இருக்கும் கொஞ்சம் நினைச்சிப் பாருங்கய்யா.

    இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு பொண்ணு இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து அதுவும் 25யும் தாண்டி வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு பொறந்த லக்கனம் அப்படின்னு ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி, அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க(அப்படி உங்க வீட்டில யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா, இருந்து இன்னமும் நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?

    ரவி கேட்டது ஏனய்யா இப்படி யோசிக்கமா அடுத்தவன் தலையில மண்ணள்ளி போடுறீங்கன்னு ஒரு கரிசனமான கேள்வி அதுக்கு பதில்ல என்ன கருணை கலந்த முதிர்ச்சியான பதில் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதெல்லாம் என்னான்னு சொல்றது, புளிச்ச ஏப்பத்தில் இருக்கிற ஆட்களுக்கு பசியின் அருமை தெரியுமாங்கிற மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  40. ////இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு பொண்ணு இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து அதுவும் 25யும் தாண்டி வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு பொறந்த லக்கனம் அப்படின்னு ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி, அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க(அப்படி உங்க வீட்டில யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா, இருந்து இன்னமும் நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?////

    I am going through similar experience in my family, and I really want to explore and find out what really horoscope is...u would not believe there is not one...three in my family circle, one guy met with accident and he cannot function below is hip(he is juz 28) and other she became widow after completing her 3 years of marriage life plus she was expecting a baby that time...we are helpless and hopeless after spending lots of time and money...no body is helping out...I need someone who I can trust and help me to get rid of this problems...painful and more pain now, because they are seeking matches for me...and I am kinda confused what will happen....so everybody is having problems and facing it and here to learn....(if you want to really know what exactly means...mail me at shankar11@gmail.com)

    -Shankar

    ReplyDelete
  41. ////இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு பொண்ணு இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து அதுவும் 25யும் தாண்டி வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு பொறந்த லக்கனம் அப்படின்னு ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி, அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க(அப்படி உங்க வீட்டில யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா, இருந்து இன்னமும் நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?////

    உங்கள் ஆதங்கத்தை விளங்கிக்கொள்ள முடிகின்றது. (எனது சொந்த வாழ்க்கையில் மறைமுகமாக நானும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்). ஆனால் driver (ஜோதிடர்) சரியில்லை என்பதற்காக வாகனத்தை (ஜோதிடம்) குறைசொல்வது சரியில்லை.

    ///இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன///
    எங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்போது யாரும் யாருக்கும் ஜால்ரா தட்டவேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  42. ஷங்கர், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் என் பிரார்த்தனைகள். வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    அனானி, //அவரு என்ன நினைச்சு கேக்க வந்தாருங்கிற அடங்கிருச்சு. // நீங்க யாருங்க இவ்வளவு தெளிவா விளக்கறது:-)?

    ReplyDelete
  43. /////Anonymous said...
    ////////பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு
    கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும்
    வேண்டுமா?///////
    இந்த ஒரு கேள்வியிலேயே அவரு என்ன நினைச்சு கேக்க வந்தாருங்கிற அடங்கிருச்சு.
    இப்ப நம்ம குடும்பத்தில அப்படிப் பட்ட ஒரு பொண்ணு வாழப் போயி 30அ கடந்தும்
    நொந்து வாழ்ந்துட்டு இருந்தா உங்க மனசெல்லாம் எப்படிய்யா இருக்கும் கொஞ்சம்
    நினைச்சிப் பாருங்கய்யா.
    இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு பொண்ணு
    இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து அதுவும் 25யும் தாண்டி
    வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு பொறந்த லக்கனம் அப்படின்னு
    ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி, அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க
    (அப்படி உங்க வீட்டில யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா,
    இருந்து இன்னமும் நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?
    ரவி கேட்டது ஏனய்யா இப்படி யோசிக்கமா அடுத்தவன் தலையில மண்ணள்ளி
    போடுறீங்கன்னு ஒரு கரிசனமான கேள்வி அதுக்கு பதில்ல என்ன கருணை கலந்த
    முதிர்ச்சியான பதில் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதெல்லாம் என்னான்னு சொல்றது,
    புளிச்ச ஏப்பத்தில் இருக்கிற ஆட்களுக்கு பசியின் அருமை தெரியுமாங்கிற மாதிரி இருக்கிறது.//////

    முதலில் அனானி முகமூடியில் வருவதை விட்டுவிட்டு நீங்கள் கருணையைப் பற்றிப்பேசுங்கள்.

    பின்னூட்டத்திற்கு ஒரு ப்ளாக்கர் கணக்குத் திறப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
    உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதற்கு என்ன தயக்கம்?

    முப்பது வயது முதிர்கன்னிகளைவிட பத்து மடங்கு கொடுமையான விஷயங்கள் எல்லாம்
    நடப்பில் இருக்கிறது. பிறந்த பச்சைக் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போகும்
    பெண்ணை என்ன செய்வது? இல்லை, அந்தக் குழந்தைக்கு யார் பரிதாபப் படுவது? இல்லை அதை யார்
    எடுத்து வளர்ப்பது? இவ்வளவு பேசும் நீங்கள் அப்படிப் பரிதாப நிலையில் உள்ள ஒரு
    குழந்தையை எடுத்து வளர்த்து, ஆளாக்கத் தயாரா - சொல்லுங்கள்?
    ஜால்ராக்களைப் பற்றி அப்புறம் பேசுவோம்!

    ReplyDelete
  44. //////Anonymous said...
    ///அன்புடன்
    சுப்பையா வாத்தி (யார்)///
    vaathi ---yaar?:-))) absolutely you!!
    -Shankar/////

    சிலர் ஏகாரத்தில் வாத்தி என்று விளிப்பார்கள்
    சிலர் வாத்தியார் என்று அன்புடன் சொல்வார்கள்
    இருவருக்குமே ஆகட்டும் என்று சமயங்களில் அப்படி எழுதுவேன்:-))))

    ReplyDelete
  45. ///////Anonymous said...
    ////இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு
    பொண்ணு இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து
    அதுவும் 25யும் தாண்டி வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு
    பொறந்த லக்கனம் அப்படின்னு ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி,
    அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க(அப்படி உங்க வீட்டில
    யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா, இருந்து இன்னமும்
    நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?////

    I am going through similar experience in my family, and I really want
    to explore and find out what really horoscope is...u would not believe there
    is not one...three in my family circle, one guy met with accident and he
    cannot function below is hip(he is juz 28) and other she became widow
    after completing her 3 years of marriage life plus she was expecting a baby
    that time...we are helpless and hopeless after spending lots of time and money...
    no body is helping out...I need someone who I can trust and help me to get
    rid of this problems...painful and more pain now, because they are seeking
    matches for me...and I am kinda confused what will happen....
    so everybody is having problems and facing it and here to learn....
    (if you want to really know what exactly means...mail me at shankar11@gmail.com)
    -Shankar//////

    அதெல்லாம் கவலைப் படாதீர்கள் மிஸ்டர் சங்கர். கடவுள் இருக்கிறார். அவர்
    கருணை மிக்கவர். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும். பிரார்த்தனை செய்யுங்கள்
    உங்கள் பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.

    உலகில் 12 பேர்களில் ஒருவருக்கு இந்த மாதிரிப் பிரச்சினைகள் இருக்கும்.
    8.33% மக்கள் மன உளைச்சலில் உள்ளவர்கள்தான். அதையும் ஜாதகம் சொல்லும்.
    இங்கே வந்து வெறும் கேள்வி கேட்பவர்களுக்கு முதலில் கடவுள் நம்பிக்கை கிடையாது.
    வேறு எதில் நம்பிக்கை வந்து விடும் அவர்களுக்கு? அவர்களுக்கு சமாதானம்
    சொல்வதில் ஒரு பயனும் இல்லை!

    ReplyDelete
  46. /////கல்கிதாசன் said...
    ////இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன ஆட்களோட வீடுகள்லே ஒரு
    பொண்ணு இடுப்புக்கு கீழே வேலை செய்யாம நக்கரிச்சிப் போற மாதிரி இருந்து
    அதுவும் 25யும் தாண்டி வாழ்ற மாதிரி சூழ்நிலை இருந்தா அந்தப் பொண்ணு
    பொறந்த லக்கனம் அப்படின்னு ஏத்துக்கிட்டு எத்தன அண்ணன், தம்பி,
    அண்ணிக வைச்சிப் பார்க்க ரெடியா இருக்கீங்க(அப்படி உங்க வீட்டில
    யாராவது இருந்து நீங்க தூக்கி சுமந்த அனுபவம் இருக்கா, இருந்து இன்னமும்
    நீங்க அந்த லக்கனத்தை நம்புறீங்களா)?////
    உங்கள் ஆதங்கத்தை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
    (எனது சொந்த வாழ்க்கையில் மறைமுகமாக நானும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்).
    ஆனால் driver (ஜோதிடர்) சரியில்லை என்பதற்காக வாகனத்தை (ஜோதிடம்)
    குறைசொல்வது சரியில்லை.
    ///இல்ல இங்க வந்து ஜால்ரா தட்டிட்டுப் போன///
    எங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்போது யாரும்
    யாருக்கும் ஜால்ரா தட்டவேண்டிய அவசியம் இல்லை.//////

    அவர்களுக்கு கடவுள் இல்லை என்ற தனிப்பட்ட கருத்து உள்ளது.
    அதனால்தான் ஒத்த கருத்துள்ளவர்களைச் சேர்த்து அவர்கள் டிரம்மடித்துக்
    கொண்டிருக்கிறார்கள். அடித்துவிட்டுப்போகட்டும்.

    காலதேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். ஒரு நிமிடமாவது அவர்கள்
    இறைவனை உணர்வார்கள். இறைவனை உணரவைத்துத்தான் காலதேவன்
    யாருக்குமே விடுதலை அளிப்பான். அதாவது இந்தப்பூமியில் படும் அல்லல்களில்
    இருந்து கரை சேர்ப்பான். பச்சையாக சொன்னால் மேலே அனுப்பிவைப்பான்

    ReplyDelete
  47. //சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...

    ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா, பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...(//

    பொறியியல் என்பது பல விஷயங்களை அடங்கியது.

    ஆனால் கல்லூரியில் நடத்தப்படும் தேர்வுகள் 15 அல்லது 20 பாடங்களுக்காக மட்டும் தானே.

    அதாவது முக்கியமான பாடம் எதுவோ அதை மட்டும் பார்க்கிறார்கள்

    அது போல் பல கிரகங்கள் இருந்தாலும், முக்கிய கிரகங்களை மட்டும் பார்த்தால் போதும்

    -
    ஒரு கணினியில் பல விஷயங்கள் (பாராமீட்டர்) உள்ளன. உதாரணமாக கேபினடில் உள்ள Screw, அதன் அளவு, அதன் thread அளவு, thread நீளம், thread எத்தனை சுற்று என்று கூறிக்கொண்டே போகலாம்.

    ஆனால் நீங்கள் கணினி வாங்கினால் கேபினட்டில் எத்தனை screw இருக்கிறது என்று பார்க்கிறீர்களா. 120 GB, 2 Ghz, 2 GB RAM, Core 2 Duo என்று ஒரு சில விஷயங்களை மட்டும் தானே பார்க்கிறீர்கள். அது போல்.

    ReplyDelete
  48. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஷங்கர், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் என் பிரார்த்தனைகள்.
    வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.
    அனானி, //அவரு என்ன நினைச்சு கேக்க வந்தாருங்கிற அடங்கிருச்சு. //
    நீங்க யாருங்க இவ்வளவு தெளிவா விளக்கறது:-)?/////

    இதற்கு முன் உள்ள என்னுடைய பதிலைப் படியுங்கள் சகோதரி. தெளிவாகும்!

    ReplyDelete
  49. //பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா ?//

    ஜாதகம் பார்க்காத சமுகங்களில் எல்லாம் 30 வயதிற்குள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டதா ????

    30 வயதிற்கு மேல் ஒரு பெண் மணமாகாமல் இருப்பதற்கு ஜாதகம் பார்ப்பது தான் காரணமா

    எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என்று வரைமுறையே கிடையாதா

    என்ன கொடுமை தழலாரே

    ReplyDelete
  50. ////Blogger புருனோ Bruno said...
    //சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...
    ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா, பால்வெளி மண்டலம்,
    ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...(//

    பொறியியல் என்பது பல விஷயங்களை அடங்கியது.
    ஆனால் கல்லூரியில் நடத்தப்படும் தேர்வுகள் 15 அல்லது 20 பாடங்களுக்காக மட்டும் தானே.
    அதாவது முக்கியமான பாடம் எதுவோ அதை மட்டும் பார்க்கிறார்கள்
    அது போல் பல கிரகங்கள் இருந்தாலும், முக்கிய கிரகங்களை மட்டும் பார்த்தால் போதும் -
    ஒரு கணினியில் பல விஷயங்கள் (பாராமீட்டர்) உள்ளன. உதாரணமாக கேபினடில் உள்ள Screw,
    அதன் அளவு, அதன் thread அளவு, thread நீளம், thread எத்தனை சுற்று என்று கூறிக்கொண்டே
    போகலாம்.ஆனால் நீங்கள் கணினி வாங்கினால் கேபினட்டில் எத்தனை screw இருக்கிறது
    என்று பார்க்கிறீர்களா. 120 GB, 2 Ghz, 2 GB RAM, Core 2 Duo என்று ஒரு சில
    விஷயங்களை மட்டும் தானே பார்க்கிறீர்கள். அது போல்.//////

    உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து,
    பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  51. //கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன் ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க ?//

    கிளி சோதிடத்திற்கும், வான் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது நான் பகுத்து பார்த்து அறிந்தது. (பகுத்தறிவு)

    ReplyDelete
  52. //ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட் திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா ?//

    வேண்டாம். விண்ணப்ப படிவத்தை நிரப்பும் பொழுது தெற்கு பார்த்து உட்கார்ந்து நிரப்பினால் போதும் :) :) :)

    ReplyDelete
  53. //////புருனோ Bruno said...
    //பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய்
    தோஷம்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும்
    கொடுமை இன்னும் வேண்டுமா ?//
    ஜாதகம் பார்க்காத சமுகங்களில் எல்லாம் 30 வயதிற்குள் அனைவருக்கும்
    திருமணம் நடந்து விட்டதா ????
    30 வயதிற்கு மேல் ஒரு பெண் மணமாகாமல் இருப்பதற்கு ஜாதகம்
    பார்ப்பது தான் காரணமா?
    எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என்று வரைமுறையே கிடையாதா
    என்ன கொடுமை தழலாரே///////

    அருமையான பதில் டாக்டர்! நன்றி!

    இன்று நிலவும் ஜாதி, மத, இனக் கொடுமைகளும், வரதட்சனைக் கொடுமைகளும்
    தான் ஒரு பெண்ணின் திருமணத்திற்குத் தடையாக நிற்பது. அது சமூகம் சார்ந்த
    பிரச்சினை. நாம் சுமார் ஆயிரம் பதிவர்கள் சேர்ந்து அதற்குத் தீர்வு காண முடியாது!

    செவ்வாய் தோஷமென்ன வேறு எல்லா தோஷமும், பழக்க வழக்கமும் (நான் எதைச்
    சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) உள்ள பெண்ணுடன் லட்சத்தில் பணம்
    இருந்தால் அவளுக்கு கரம் நீட்ட எத்தனை ஆண்கள் வருவார்கள் தெரியுமா?

    காசேதான் கடவுளடா! அதுதான் இன்றைய தாரக மந்திரம்!

    ReplyDelete
  54. //////புருனோ Bruno said...
    //கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால்,
    அந்த கிளி சோசியக்காரன் ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று
    வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க ?//
    கிளி சோதிடத்திற்கும், வான் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது
    நான் பகுத்து பார்த்து அறிந்தது. (பகுத்தறிவு)/////

    ஜோதிடம் என்றால் என்ன? அதன் depth என்ன? என்பதெல்லாம் தெரியாமல்
    இருப்பதால் ஏற்படும் அறியாமை டாக்டர்!

    குமாரசுவாமீயம் என்னும் ஜோதிட நூலைப் பற்றி அறிந்தால்
    இப்படியெல்லாம் பேசமாட்டார்கள்

    ReplyDelete
  55. //////புருனோ Bruno said...
    //ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு
    ஆப்போசிட் திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா ?//
    வேண்டாம். விண்ணப்ப படிவத்தை நிரப்பும் பொழுது தெற்கு பார்த்து
    உட்கார்ந்து நிரப்பினால் போதும் :) :) :)//////

    அடடே, அப்படிக்கூடச் செய்யலாமே:-))))))
    யோசனைக்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  56. வாத்தியாரய்யா வணக்கமுங்க!
    நீங்க ரொம்ப நல்ல மனசுக்காரர் தானுங்க!
    ஜோசியத்தை நம்பி இருக்கிற கொஞ்ச ந்ஞ்ச தன்னம்பிக்கையையும் இழந்து விட்டு தவிப்பதைப் பாருங்க.
    தனி மனிதர்கள்,திரு மணப் பெண்கள்,இல்லாதவர்கள் இவர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப் படுகிறார்கள்.ஜோசியத்தால் உண்டான சண்டை,சச்சரவு,குடும்ப விவகாரங்கள் அப்பப்பா தாங்கது தானே.

    ரெண்டு புத்தகங்கள் ஒன்று பெரியார் அந்தக் காலத்துலே எழுதிய ஜோதிடப் புரட்டு--பெரியார் எழுதியது.
    இன்னொன்று சோதிடப் புரட்டு-கானடாவிலிருந்து தாங்கவேலு என்பவர் விளக்கமாக எழுதியது.

    கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது."பிள்ளைவாழ் நீர் செய்த நன்றிக்கெல்லாம் பெரிதாக இதைச் செய்து விட்டீர்!"
    தன்னம்பிக்கை ஒழிப்பு இயக்கம் தாங்கள் நடத்துவதா?

    ReplyDelete
  57. Thanks for your prayers and for your kinds words Mr.Subbiah and கெக்கே பிக்குணி.

    -Shankar

    ReplyDelete
  58. வாத்தியரே, நான் பண்ண டெண்சன்-அ விட (போன பதிவில்), மற்றவர்கள் அதிகமா டெண்சன் செய்து விட்டாரே, வகுப்பறையை நினக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இதற்கு நானும் எனது முன்னமிது ஜாலி பிணூடடமும் காரணமாக இருந்தால் என்னை மனிதருள்மையும்.

    எனது சிறு வயதிலேயே ஜோதிடம், இறைவன் மீது நம்பிக்கை வைத்தத்துக்கு எனது முக்கியமான வழி காட்டிகள் வயது மூத்த நண்பர்கள் தான் காரணம்.

    எனக்கீருக்கும் நிறைய சந்தேகத்தை அவர்கள் தான் விளக்கினார் (நானும் ரவி போல அணாநி போல தான் இருத்ேன் எனது 15 வயது வரை), பாவம் அவர்களுக்கு சரியான வழி காட்டி, கிடைக்கவில்லை போலும் அல்லது இன்னும் சந்திக்க வில்லை போலும்.


    For Kind Annony...
    மற்றவரின் கஸ்டததை யாரும் நீக்க முடியாது... வேண்டும் என்றால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்க வில்லை, எல்லோருக்கும் துன்பம் உள்ளது என்று தயவு கூர்த்து புரிந்து கொள்ளவும் (ஜோதிடம், இறை நம்பிக்கை உள்ளவரும், இல்லாதவரும்.)


    ஒன்று மட்டும் ன்பாகம் கொள்க. வயதில் சிறியவனாக இருந்தாலும். எனது அனுபவத்தில் இரண்டு விசயங்கள் மட்டுமே சொல்கிறேன்.

    1.நீங்கள் அனுபவிக்க வேண்டியதை நீங்கள் மட்டுமே அனுபாவிப்பீர், நன்மையும், தீமையும் (வேலை ஆள் வைக்க முடியாது).

    2. வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றமல், அடுத்தவர்க்கு துன்பம் கொடுக்காமல், இருந்தால் உங்களை பொருத்தவரை யாருக்கும் (ஏன் இறைவனுக்கும் கூட பயப்பட தேவையில்லை).

    எனது OWN கருத்து ..
    நம்பினால் கை விடபடார்.....(என்னை பொருத்தவரை எனது தன்னம்பிக்கை மற்றும் இறைவன்).

    ReplyDelete
  59. ////Thamizhan said..
    வாத்தியாரய்யா வணக்கமுங்க!
    நீங்க ரொம்ப நல்ல மனசுக்காரர் தானுங்க!
    ஜோசியத்தை நம்பி இருக்கிற கொஞ்ச ந்ஞ்ச தன்னம்பிக்கையையும் இழந்து விட்டு தவிப்பதைப் பாருங்க.
    தனி மனிதர்கள்,திரு மணப் பெண்கள்,இல்லாதவர்கள் இவர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப் படுகிறார்கள்.ஜோசியத்தால் உண்டான சண்டை,சச்சரவு,குடும்ப விவகாரங்கள் அப்பப்பா தாங்கது தானே.
    ரெண்டு புத்தகங்கள் ஒன்று பெரியார் அந்தக் காலத்துலே எழுதிய ஜோதிடப் புரட்டு--பெரியார் எழுதியது.
    இன்னொன்று சோதிடப் புரட்டு-கானடாவிலிருந்து தாங்கவேலு என்பவர் விளக்கமாக எழுதியது.
    கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது."பிள்ளைவாழ் நீர் செய்த நன்றிக்கெல்லாம் பெரிதாக இதைச் செய்து விட்டீர்!"
    தன்னம்பிக்கை ஒழிப்பு இயக்கம் தாங்கள் நடத்துவதா?//////

    வலைப் பதிவில் ஒருவன் எழுதி தன்னம்பிக்கையை ஒழிப்பதா?
    அதுவும் ஏழு கோடி தமிழர்களின் தன்னம்பிக்கையை?
    எப்படிச் சாத்தியம் தமிழரே?
    வலைப் பதிவு அவ்வளவு சக்தி வாய்ந்ததா என்ன?

    ஜோதிடம் படிப்பதால் தன்னம்பிக்கை போவதாக வைத்துக் கொண்டாலும்
    இறை நம்பிக்கை ஏற்படாதா?
    அந்த இறை நம்பிக்கை மனிதனை நெறிப்படுத்தாதா? காப்பாற்றாதா?

    How the planets are influencing human affairs! என்ற புத்தகம் என்னிடம் உள்ளது
    பதிப்பக முகவரி தருகிறேன். வாங்கிப் படிக்கிறீர்களா - சொல்லுங்கள்?

    ReplyDelete
  60. /////Anonymous said...
    Thanks for your prayers and for your kinds words Mr.Subbiah and கெக்கே பிக்குணி.
    -Shankar////

    இதற்குமா நன்றி? Treat us as one of your family member!

    ReplyDelete
  61. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, நான் பண்ண டெண்சன்-அ விட (போன பதிவில்), மற்றவர்கள்
    அதிகமா டெண்சன் செய்து விட்டாரே, வகுப்பறையை நினக்கும் பொழுது வருத்தமாக
    இருக்கிறது. இதற்கு நானும் எனது முன்னமிது ஜாலி பிணூடடமும் காரணமாக இருந்தால்
    என்னை மனிதருள்மையும்.
    எனது சிறு வயதிலேயே ஜோதிடம், இறைவன் மீது நம்பிக்கை வைத்தத்துக்கு
    எனது முக்கியமான வழி காட்டிகள் வயது மூத்த நண்பர்கள் தான் காரணம்.
    எனக்கீருக்கும் நிறைய சந்தேகத்தை அவர்கள் தான் விளக்கினார்
    (நானும் ரவி போல அணாநி போல தான் இருத்ேன் எனது 15 வயது வரை),
    பாவம் அவர்களுக்கு சரியான வழி காட்டி, கிடைக்கவில்லை போலும் அல்லது
    இன்னும் சந்திக்க வில்லை போலும்.
    For Kind Annony...
    மற்றவரின் கஸ்டததை யாரும் நீக்க முடியாது...
    வேண்டும் என்றால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் ஒருவர்
    மட்டுமே வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்க வில்லை, எல்லோருக்கும்
    துன்பம் உள்ளது என்று தயவு கூர்த்து புரிந்து கொள்ளவும் (ஜோதிடம்,
    இறை நம்பிக்கை உள்ளவரும், இல்லாதவரும்.)
    ஒன்று மட்டும் ன்பாகம் கொள்க. வயதில் சிறியவனாக இருந்தாலும்.
    எனது அனுபவத்தில் இரண்டு விசயங்கள் மட்டுமே சொல்கிறேன்.
    1.நீங்கள் அனுபவிக்க வேண்டியதை நீங்கள் மட்டுமே அனுபாவிப்பீர்,
    நன்மையும், தீமையும் (வேலை ஆள் வைக்க முடியாது).
    2. வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றமல், அடுத்தவர்க்கு துன்பம்
    கொடுக்காமல், இருந்தால் உங்களை பொருத்தவரை யாருக்கும்
    (ஏன் இறைவனுக்கும் கூட பயப்பட தேவையில்லை).
    எனது OWN கருத்து ..
    நம்பினால் கை விடபடார்.....(என்னை பொருத்தவரை
    எனது தன்னம்பிக்கை மற்றும் இறைவன்).//////

    உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    என்ன எழுதினாலும் நீங்கள் இளைஞர்தான்!
    உங்களையும் சேர்த்து நான் கெடுப்பதாகத்தான் பரவலான பேச்சு!:-))))))))

    ReplyDelete
  62. //SP.VR. SUBBIAH said...
    உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    என்ன எழுதினாலும் நீங்கள் இளைஞர்தான்!
    உங்களையும் சேர்த்து நான் கெடுப்பதாகத்தான் பரவலான பேச்சு!:-)))))))) ///

    என்ன வாத்தியரே இப்படி சொல்லி விட்டீர்கள்.
    நீங்களும் ஒரு வழி காட்டி தான் நமது மாணவர்களுக்கு.

    யாரையும் யாரும் கெடுக்க முடியாது. எல்லாம் அவர் .... அவர் விதி படித்தான் நடக்கும், நான் நல்ல நேரத்தில் நல்ல இடத்தில் வந்திருக்கிறேன். எனது வேதனையான நேரத்தில் (5 yrs back) நீங்கள் கிடைத்திருந்தால் இன்னும் சந்தோசா பட்டிருப்பேன்.

    ReplyDelete
  63. //இங்கே பின்னூட்டம் போட்டதாலே ரவிக்கு மண்டபத்துலே எழுதி கொடுத்தது நான் தான்னு சொல்லிடப் போறீங்க.
    //

    யாருபா அது எங்க அப்பன் புதிருக்குள்ள இல்லைன்னு சொல்லறது??!!

    ReplyDelete
  64. என்ன ? ///யாரையும் யாரும் கெடுக்க முடியாது. எல்லாம் அவர் .... அவர் விதி படித்தான் நடக்கும்,///

    அடப்பாவி மக்கா !!!

    கும்பகோணத்தில் 81 குழந்தைகள் கருகினார்களே ? அவர்கள் அனைவரும் ஒரே லக்கினத்தில் பிறந்தவர்களா ?

    செஞ்சோலையில் அத்தனை குழந்தைகள் சிங்கள வெறியர்களின் குண்டுக்கு இரையானார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

    சுனாமி, சீனாவில் பூகம்பம், மியான்மரில் புயல் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் மடித்தார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

    அவர்களது நேரம் சரியில்லையா ?

    என்னுடைய கேள்விகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்...

    @ திவா//

    மண்டபத்தில் யாரும் எழுதிக்கொடுக்கவில்லை, நானே தான் எழுதினேன்...

    @ அம்பி //

    உங்கள் வகுப்பு வேஸ்டா போனதுக்கு மன்னிக்கவும்....இந்த தவறை எங்காவது "அய்யரை" வைத்து பரிகாரம் செய்து நிவர்த்தி செய்துகொள்கிறேன்...

    @ டாக்டர் புருனோ

    தெற்கு பக்கம் உக்கார்ந்து படிவத்தை நிரப்பிவிட்டேன் என்று அப்ளிக்கேஷன் பார்மில் எழுதவேண்டுமா என்பதையும் சொல்லிவிட்டால் நல்லது...உங்களது லாஜிக் வியக்கவைக்கிறது...

    @ இன்னொரு நன்பர்

    இங்கே வந்து கேள்விகேட்பவர்கள் கடவுள் நம்பிக்கையோடுதான் வரவேண்டுமா என்ன ? வாத்தியார் சுப்பையா அவர்கள் என் நன்பர். அவரிடம் கேள்விகேட்கும் உரிமை எனக்கு உண்டு...

    கடைசீயாக வாத்தியார் அவர்களுக்கு...

    சோதிடத்தின் அறிவியலை பற்றி சொல்கிறீர்களே ?

    சோதிடத்தின் மூலமாக மக்களிடம் எவ்வளவு மூட நம்பிக்கைகள் புகுத்தப்பட்டிருக்கு ?

    உதாரனத்து ஒரு காமெடி

    பல்லிவிழும் பலன்

    பல்லி மேல போவும்போது தெரியாம கால் ஸ்லிப் ஆகி மேல உழுந்துட்டா, அதுக்கு ஒரு பரிகாரம்...

    தெருவில் போகும்போது "முண்டச்சி" எதிரில் வந்துட்டா, வீட்டுக்கு போயி தண்ணி குடிச்சுட்டு தான் போவாராம் நம்ம ஆசாமி..

    பூனை குறுக்கால போயிட்டா வேறு பாதையில தான் போவாராம் நம்ம கோயிந்து ( அது எலிய புடிக்க ஓடுது)

    எனர்ஜி ட்ரீட்மெண்டாம்...ஒரு கம்பிய சுத்தி ட்ரீட்மெண்ட் தரார் ஒரு சேலம் டாக்டர்.

    நேமாலஜியாம்....பெயரை மாத்திக்கிட்டா எப்படி முன்னேற முடியும் ? புள்ளகுட்டிய படிக்க வைங்கப்பாம்...

    ஜெம்மாலஜியாம்...ராஜஸ்தான்ல முப்பது ரூவாய்க்கு நாப்பது கல்லு வாங்கி அதை ஒன்று நானூறு ஐநூறுன்னு விக்கிறாங்க...

    வாத்தியார் அவர்களே...ஒரு சம்பவம் சொல்கிறேன்...

    சோதிட புத்தகத்தை கரைத்து குடித்த ஒரு சோதிடர்...எங்களூரில்...உலகமெங்குமிருந்து அவரை பார்க்க வருகிறார்கள்...

    2005 இறுதியில் என்னுடைய ஜாதகத்தினை கொண்டுபோய் கொடுத்தேன்...

    வெளிநாடு செல்ல ஏங்கும், இந்த ஜாதகக்காரருக்கு விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்...என்னுடைய பாஸ்போட்டை எடுத்து நீட்டி, போனவாரம்தான்யா ஆஸ்திரேலியாவுல இருந்து வந்தேன் டோமரு என்றேன்...

    இதுபோல எந்த ஒரு சோதிடரையும் / சோதிடத்தையும் பொய் என நிரூபிக்க என்னால் முடியும்...

    சவால்...!!!!!

    என்னுடைய கடந்தகாலத்தையோ, எதிர்காலத்தையோ, நிகழ்காலத்தையோ, சரியாக கணிக்கும் சோதிடருக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்...என்னுடைய சொந்த பணத்தில் இருந்து...!!!!!

    பிறந்தபோது எழுதிய என்னுடய ஜாதக புத்தகமோ, வேறு எந்த தகவலோ, தனிப்பட்ட முறையில் தரத்தயார்...

    சவாலை ஏற்றுக்கொள்ள என்னுடைய அன்புக்கு உரிய வாத்தியார் தயாரா ?

    அப்படி நான் தோற்றால், பரிசு பணத்தை தருவதோடு, வகுப்பறைக்கும் தவறாமல் வருகிறேன், சோதிட கலை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறேன்...!!!!!

    ReplyDelete
  65. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  66. //செந்தழல் ரவி said...
    அடப்பாவி மக்கா !!!

    கும்பகோணத்தில் 81 குழந்தைகள் கருகினார்களே ? அவர்கள் அனைவரும் ஒரே லக்கினத்தில் பிறந்தவர்களா ?

    செஞ்சோலையில் அத்தனை குழந்தைகள் சிங்கள வெறியர்களின் குண்டுக்கு இரையானார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

    சுனாமி, சீனாவில் பூகம்பம், மியான்மரில் புயல் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் மடித்தார்களே ? அவர்களின் பிறந்த தேதியும் நேரமும் ஒன்றா ?

    அவர்களது நேரம் சரியில்லையா ?//

    ரவி அவர்களே, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு .... எனது பதில்..

    உங்களது கேள்வி படி இவர்கள் அனைவருக்கும் நேரம் சரியில்லையா இல்லை நல்ல நேரமா என்று கூற இயலாது.

    எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை உள்ளது இறைவன் மேல், பிறகு ஜோதிதடததின் மேல், நீங்கள் கூறுவது போல இவ்வகை சம்பவத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்க வேண்டியது. ஒன்றல்ல இரண்டு அல்ல எனக்கு தெரிந்து 3 சம்பவங்கள், வாழ்க்கையின் விளிம்பில் இருந்து வந்திருக்கிறேன். அப்ப்டி என்றால் வாழ்க்கை வெறுத்து போன ஒருவருக்கு(இப்போதல்ல) ஏன் இது போல சம்பவங்களில் இயற்கை கிடைக்கவில்லை. எது என்னை தடுத்ததோ அதை நான் இறைவன் என்று நம்பினேன், இப்போதும் நம்பி கொண்டு இருக்கிறேன்.

    அதே போல எனக்கு இறை நம்பிக்கை போலவும், தனிப்பட்ட முறையில் மனிதாபிமானம் இருக்கிறது. வலது கை கொடுப்பதை இடது கை தெரிய கூடாது என்பதற்கேற்ப, அச்சிறு செயல்களை உங்கள் முன் கூறி நான் மேலும் பெரியவனாக இருக்க வேண்டும் அல்லது போட்டி போட வேண்டும் என்று விரும்பவில்லை.

    கும்பகோணமகா இருந்தாலும் சரி, செஞ்சோலையாக இருத்தலும் சரி, சுனாமி, சீனாவில் பூகம்பம், மியான்மரில் புயல் இருந்தாலும் சரி, இல்லை உலகில் வேறு எங்கு நடத்திருந்தாலும் சரி, அவர்களுக்கு ஒரு ஆறுதலாக மனிதாபிமானமிக்க மனிதனாக இருப்பேநன்றி, அவர்களிடம் போய் ஜோதிடம் நம்புங்கள், இல்லை இறைவனை நம்புங்கள் என்று சொல்ல மாட்டேன். அது அவர்கழுடாய தனிப்பட்ட விருப்பம்.

    எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இது என்னுதய தனிப்பட்ட விருப்பம். அவ்வளவே.

    எனுதய வார்த்தைகளில் ஏதேனும் குறை இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  67. //யாருபா அது எங்க அப்பன் புதிருக்குள்ள இல்லைன்னு சொல்லறது??!!//

    அது புதிர் இல்லை (புதரும் இல்லை)

    குதிர் - நெல்லை சேமித்து வைக்கும் பாத்திரம் (கொஞ்சம் பெரிய பாத்திரம்)
    புதர் - செடி வகை
    புதிர் - முளைக்கு வேலை கொடுப்பது

    ReplyDelete
  68. //தெற்கு பக்கம் உக்கார்ந்து படிவத்தை நிரப்பிவிட்டேன் என்று அப்ளிக்கேஷன் பார்மில் எழுதவேண்டுமா என்பதையும் சொல்லிவிட்டால் நல்லது...உங்களது லாஜிக் வியக்கவைக்கிறது...//

    செந்தழல் ரவி,

    தகவல் வேறு (fact)
    கருத்து வேறு (opinion)
    நம்பிக்கை வேறு (belief)

    தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
    சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.

    உதாரணம் :
    சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
    தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்

    கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

    ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

    வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

    இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

    அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

    ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.

    அப்ப நம்பிக்கை -

    உதாரணம்

    நம்பிக்கை 1 - பெட்ரோல் விலை குறையும்
    நம்பிக்கை 2 - பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
    நம்பிக்கை 3 - பெட்ரோல் விலை கூடும்

    நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

    படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)

    அது போல்
    கைரேகை மேல் சிலருக்கு நம்பிக்கை
    வான் ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை
    கிளி ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை

    இதற்கு அவர்களால் ஆதாரம் தர முடியாது

    (நம்பிக்கை குறித்து வேறு உதாரணங்களும் தர முடியும் – ஆனால் தவிர்த்திருக்கிறேன்)

    ReplyDelete
  69. இது வரை கூறியது புரியாதவர்களுக்கு மேலும் ஒரு உதாரணம்

    தகவல் : கும்பகோணத்தில் குழந்தைகள் கருகினார்கள்

    கருத்து 1 : இதற்கு காரணம் அரசு விதிகளை கடை பிடிக்காதது
    கருத்து 2 : இதற்கு காரணம் விதி

    நம்பிக்கை 1 : எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காது
    நம்பிக்கை 2 : அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் (டி.நகரில் உள்ள) கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் 5000 பேர் வரை மரணமடைய வாய்ப்பு உள்ளது :( :( :(

    ReplyDelete
  70. ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் -> தெற்கு (அல்லது எந்த திசை என்றாலும் பரவாயில்லை) ராசி என்று நம்புகிறவர் தெற்கு பார்த்து உட்கார்ந்து கொண்டு விண்ணப்பம் நிரப்பலாம்

    ராசி குறித்து நம்பிக்கை யில்லாதவர் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் உட்கார்ந்து கொண்டு விண்ணப்பம் நிரப்பலாம்

    -
    முக்கியமான விஷயம்

    ராசி பக்கம் பார்த்து உட்காருவதாலேயே மட்டும் வேலை கிடைக்காது

    பொறியாளர் வேலைக்கு சட்டம் படித்த ஒருவர் எந்த பக்கம் பார்த்து உட்கார்ந்து எந்த லக்கினத்தில், எந்த ஓரையில் விண்ணப்பம் போட்டாலும் வேலை கிடைக்காது

    ReplyDelete
  71. உங்கள் விளக்கம் அருமை, நன்றி டாக்டர்.புருனோ

    ReplyDelete
  72. ஐயா, வணக்கம். வகுப்பிற்கு தாமதாமாக வந்தாலும் வந்தேன், ரணகளமாக அல்லவா காட்சியளிக்கிறது.
    "போற்றுவார் போற்றலும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே" என்று விடுங்கள் ஐயா.ஜோதிடப் பாடங்கள் தொடர்ந்திட வேண்டுகிறேன்.
    டாக்டர் புருனோ அவர்கள் மிக அற்புதமான கருத்துக்களை வழங்கியுள்ளார்கள்.

    ReplyDelete
  73. //ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் ->//

    சிறுதிருத்தம் டாக்டர்.

    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம்.

    மஞ்சள்துண்டு போட்டால் தான் முதல்வர் ஆவோம் என்று நினைத்து கலைஞர் மஞ்சத்துண்டு போட்டிருந்தாரேயானால் அதுவும் மூடநம்பிக்கை தான்!

    நான் தேர்வில் தேறிவிடுவேன் என்று சொல்வது நம்பிக்கை.

    எனக்கு நேரம் நல்லா இருக்கு நான் தேர்வில் தேறிவிடுவேன் என்று சொல்வது மூடநம்பிக்கை.

    ReplyDelete
  74. வணக்கம் வாத்தியாரே,
    உங்க நண்பர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகின்றார். "தூங்குகிறவர்களை எழுப்பலாம் தூங்குகிறமாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது" . எனவே உஷார். தேவையற்ற கோரிக்கைகளை ஏற்கவேண்டாம்.

    /////இங்கே வந்து கேள்விகேட்பவர்கள் கடவுள் நம்பிக்கையோடுதான் வரவேண்டுமா என்ன ? வாத்தியார் சுப்பையா அவர்கள் என் நன்பர். அவரிடம் கேள்விகேட்கும் உரிமை எனக்கு உண்டு...///////

    வாத்தியாரின் அருமை நண்பர் ரவி அவர்களுக்கு,
    இது ஜோதிடத்தின் இருப்பை விவாதிக்கும் வகுப்பு கிடையாது, ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் வகுப்பறை. உங்களுக்கு ஜோதிடத்தின் மீது சந்தேகம் இருந்திருந்தால் வாத்தியார் குறிப்பிட்டதுபோல் மின்னஞ்சலில் கேட்டிருந்திருக்கலாம். இங்கே படிப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் எல்லாவற்றையும் சொல்லிதரவேண்டும் என்பதுபோல வகுப்பறையை குழப்புவது உங்களுக்கு அதிகபிரசிங்கித்தனமாகவும், அனாகரிகமாகவும் தெரியவில்லையா?

    உங்கள் பிரச்சனை சாதியத்துக்கு எதிரானதா? இறைநம்பிக்கைக்கு எதிரானதா? சமுக ஏற்றத்தாழ்வுக்கு எதிரானதா? சமூக கட்டமைப்புக்கு எதிரானதா? ஒன்றும் புரியவில்லை. எல்லாத்தையும் போட்டு குழப்புகின்றீர்கள்.

    ஜோதிடத்துக்கெதிராக உங்க பிரசங்கத்தை பண்ண விரும்பினால் உங்க Blog ல் போய்பண்ணுங்க. இங்கே நாங்க எல்லாம் தெரிஞ்சுதான் வந்து படிக்கின்றோம்.

    டாக்டர் புருனோ அவர்களின் விளக்கம் பாராட்டுதலுக்குரியது.

    (இன்றைய class ம் போச்சு)

    ReplyDelete
  75. /////ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம். எனக்கு நேரம் நல்லா இருக்கு நான் தேர்வில் தேறிவிடுவேன் என்று சொல்வது மூடநம்பிக்கை./////

    எதுவும் படிக்காமல் நான் தேர்வில் தேறிவிடுவேன் என்று சொல்வதுதான் மூட நம்பிக்கை.

    டாக்டர் குறிப்பிட்ட "நம்பிக்கை" என்பது ஓருவர் ஒரு விஷயத்தை நம்புகின்றாரா? இல்லையா? என்பதைப்பற்றியது.

    ReplyDelete
  76. /////Blogger லக்கிலுக் said...
    //ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் ->//
    சிறுதிருத்தம் டாக்டர்.
    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம்.
    மஞ்சள்துண்டு போட்டால் தான் முதல்வர் ஆவோம் என்று நினைத்து கலைஞர் மஞ்சத்துண்டு போட்டிருந்தாரேயானால் அதுவும் மூடநம்பிக்கை தான்!///////

    நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையில் இரண்டு விதம்
    கிடையாது. அவனைப் பொறுத்தவரை அது நம்பிக்கைதான்!

    Faith in God also is a belief!

    அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?

    கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்!

    அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?

    சொல்லுங்கள் லக்கியாரே!

    ReplyDelete
  77. /////செந்தழல் ரவி Said...
    வாத்தியார் அவர்களே...
    உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்...
    இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க விரும்பித்தான் அந்த பதிவிட்டேன்...
    அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே...
    உங்கள் சுயத்தையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் எண்ணமில்லை...
    உங்கள் பதில்கள் கண்டு - நீங்கள் காயப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது...
    மன்னிக்கவும்..
    அதனால் இந்த விவாதத்தை - இப்போதைக்கு - தொடர விரும்பவில்லை...
    நீங்கள் விரும்பினால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தொடரலாம்.../////

    என்று முன் இரவு பின்னூட்டம் போட்டு விட்டு, இன்று காலை 12 மணிக்கு வேறு ஒரு பின்னூடத்தில் சவால் விட்டிருக்கிறீர்கள்!

    இடையில் நடந்தது என்ன?
    மன்னிப்பு எப்படி சவாலாக மாறியது?

    இரண்டாவது பின்னூடம் மண்டபத்தில் எழுதியவர்களின் கைங்கர்யமா?
    உங்களுக்கெல்லாம் (உங்கள் லெவலுக்கு இறங்கி) பதில் சொல்ல எனக்குத் தகுதியில்லை!
    அதேபோல என்னுடைய நம்பிக்கைகளைக் (இங்கே வந்து) கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!

    உங்கள் சந்தேகங்களையும், உங்கள் சவால்களையும் உங்கள் பதிவிலேயே வைத்துக்கொள்ளுங்கள்
    இல்லை உங்களுக்கு மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவர்களின் பதிவுகளில் வைத்துக் கொள்ளுங்கள்

    நன்றி வணக்கம்!
    என்றும் அன்புடன்
    சுப்பையா வாத்தியார்

    ReplyDelete
  78. தெளிவான, நாகரீகமான பதில் வாத்தியாரையா. உங்கள் நண்பர்களிடம் நீங்கள் சுமூகமான நல்லுறவை பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இனி பாடத்தைமட்டும் கவனிப்போமா? (we have a long way to go)

    ReplyDelete
  79. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    என்ன எழுதினாலும் நீங்கள் இளைஞர்தான்!
    உங்களையும் சேர்த்து நான் கெடுப்பதாகத்தான் பரவலான பேச்சு!:-)))))))) /// என்ன வாத்தியரே இப்படி சொல்லி விட்டீர்கள்.
    நீங்களும் ஒரு வழி காட்டி தான் நமது மாணவர்களுக்கு.
    யாரையும் யாரும் கெடுக்க முடியாது. எல்லாம் அவர் .... அவர் விதி படித்தான் நடக்கும், நான் நல்ல நேரத்தில் நல்ல இடத்தில் வந்திருக்கிறேன். எனது வேதனையான நேரத்தில் (5 yrs back) நீங்கள் கிடைத்திருந்தால் இன்னும் சந்தோசா பட்டிருப்பேன்./////

    நல்லது விமல்!உங்கள் சந்‍தோஷத்தைக் கெடுத்து யாராவது பின்னூட்டம் இடப்போகிறார்கள். நீங்கள் அடுத்த பதிவிற்கு வந்‍தால் போதும்:‍)))))

    ReplyDelete
  80. /////We The People said...
    //இங்கே பின்னூட்டம் போட்டதாலே ரவிக்கு மண்டபத்துலே எழுதி கொடுத்தது நான் தான்னு சொல்லிடப் போறீங்க. //
    யாருபா அது எங்க அப்பன் புதிருக்குள்ள இல்லைன்னு சொல்லறது??!!////

    இல்லை ஜெய்சங்கர். அது லக்கியாரின் நடையல்ல! அவருடைய நடை இன்னும் சிறப்பாக இருக்கும்!

    ReplyDelete
  81. //////புருனோ Bruno said...
    //யாருபா அது எங்க அப்பன் புதிருக்குள்ள இல்லைன்னு சொல்லறது??!!//
    அது புதிர் இல்லை (புதரும் இல்லை)
    குதிர் - நெல்லை சேமித்து வைக்கும் பாத்திரம் (கொஞ்சம் பெரிய பாத்திரம்)
    புதர் - செடி வகை
    புதிர் - முளைக்கு வேலை கொடுப்பது
    ////புருனோ Bruno said...
    //தெற்கு பக்கம் உக்கார்ந்து படிவத்தை நிரப்பிவிட்டேன் என்று அப்ளிக்கேஷன் பார்மில் எழுதவேண்டுமா என்பதையும் சொல்லிவிட்டால் நல்லது...உங்களது லாஜிக் வியக்கவைக்கிறது...//
    செந்தழல் ரவி,
    தகவல் வேறு (fact)
    கருத்து வேறு (opinion)
    நம்பிக்கை வேறு (belief)
    தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
    சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.
    உதாரணம் :
    சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
    தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்
    கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
    ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
    வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
    இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
    அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
    ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.
    அப்ப நம்பிக்கை - உதாரணம்
    நம்பிக்கை 1 - பெட்ரோல் விலை குறையும்
    நம்பிக்கை 2 - பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
    நம்பிக்கை 3 - பெட்ரோல் விலை கூடும்
    நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது
    படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)
    அது போல்
    கைரேகை மேல் சிலருக்கு நம்பிக்கை
    வான் ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை
    கிளி ஜோதிடம் மேல் சிலருக்கு நம்பிக்கை
    இதற்கு அவர்களால் ஆதாரம் தர முடியாது
    (நம்பிக்கை குறித்து வேறு உதாரணங்களும் தர முடியும் – ஆனால் தவிர்த்திருக்கிறேன்)/////

    உங்களுடைய பொறுமையான, விளக்கமான பதில்களுக்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  82. கல்கிதாசன் said...
    வணக்கம் வாத்தியாரே,
    உங்க நண்பர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகின்றார். "தூங்குகிறவர்களை எழுப்பலாம் தூங்குகிறமாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது" . எனவே உஷார். தேவையற்ற கோரிக்கைகளை ஏற்கவேண்டாம்.

    /////இங்கே வந்து கேள்விகேட்பவர்கள் கடவுள் நம்பிக்கையோடுதான் வரவேண்டுமா என்ன ? வாத்தியார் சுப்பையா அவர்கள் என் நன்பர். அவரிடம் கேள்விகேட்கும் உரிமை எனக்கு உண்டு...///////

    வாத்தியாரின் அருமை நண்பர் ரவி அவர்களுக்கு,
    இது ஜோதிடத்தின் இருப்பை விவாதிக்கும் வகுப்பு கிடையாது, ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் வகுப்பறை. உங்களுக்கு ஜோதிடத்தின் மீது சந்தேகம் இருந்திருந்தால் வாத்தியார் குறிப்பிட்டதுபோல் மின்னஞ்சலில் கேட்டிருந்திருக்கலாம். இங்கே படிப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள்தான் எல்லாவற்றையும் சொல்லிதரவேண்டும் என்பதுபோல வகுப்பறையை குழப்புவது உங்களுக்கு அதிகபிரசிங்கித்தனமாகவும், அனாகரிகமாகவும் தெரியவில்லையா?
    உங்கள் பிரச்சனை சாதியத்துக்கு எதிரானதா? இறைநம்பிக்கைக்கு எதிரானதா? சமுக ஏற்றத்தாழ்வுக்கு எதிரானதா? சமூக கட்டமைப்புக்கு எதிரானதா? ஒன்றும் புரியவில்லை. எல்லாத்தையும் போட்டு குழப்புகின்றீர்கள்.
    ஜோதிடத்துக்கெதிராக உங்க பிரசங்கத்தை பண்ண விரும்பினால் உங்க Blog ல் போய்பண்ணுங்க. இங்கே நாங்க எல்லாம் தெரிஞ்சுதான் வந்து படிக்கின்றோம்.
    டாக்டர் புருனோ அவர்களின் விளக்கம் பாராட்டுதலுக்குரியது.////
    (இன்றைய class ம் போச்சு)/////

    நன்றி கல்கிதாசன் உங்களுடைய பின்னூட்டத்திற்கு
    கிளாஸ் போனால் என்ன அடுத்தடுத்து இரண்டு நாட்கள் சேர்த்து வைத்துவிடுவோம் கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  83. //இல்லை ஜெய்சங்கர். அது லக்கியாரின் நடையல்ல! அவருடைய நடை இன்னும் சிறப்பாக இருக்கும்!//

    :) :) :) :) நெத்தியடி

    ReplyDelete
  84. /////புருனோ Bruno said...
    //இல்லை ஜெய்சங்கர். அது லக்கியாரின் நடையல்ல!
    அவருடைய நடை இன்னும் சிறப்பாக இருக்கும்!//
    :) :) :) :) நெத்தியடி//////

    ஆமாம் டாக்டர் வலைப்பதிவுகளில் முன்று வருடங்களாக மேய்ந்ததில் அது ஒன்று தான்
    மிச்சம். யாருடைய நடை எப்படியென்பது?

    ReplyDelete
  85. ////அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?///

    வாத்தியாரே!

    பூனை குறுக்கே வந்தால் போகிற காரியம் உருப்படாது, மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகள் கலந்து கொண்டால் நல்லதல்ல, ஆடுமாடு மற்றும் நரபலி - இதுமாதிரி விஷயங்கள் கூட சிலபேரின் நம்பிக்கை தான்.

    மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள், இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று உங்களுக்கு ஒருமுறை கூடவா தோன்றியதில்லை? :-)

    ஆச்சரியம்!! ஆச்சரியம்!!!

    ReplyDelete
  86. ///////Blogger லக்கிலுக் said...
    //ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் ->//
    சிறுதிருத்தம் டாக்டர்.
    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம்.
    மஞ்சள்துண்டு போட்டால் தான் முதல்வர் ஆவோம் என்று நினைத்து கலைஞர் மஞ்சத்துண்டு போட்டிருந்தாரேயானால் அதுவும் மூடநம்பிக்கை தான்!///////

    நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையில் இரண்டு விதம்
    கிடையாது. அவனைப் பொறுத்தவரை அது நம்பிக்கைதான்!

    Faith in God also is a belief!

    அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?

    கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்!

    அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?

    சொல்லுங்கள் லக்கியாரே!//



    லக்கி, சுப்பையா வாத்தியார்,

    சேலத்தில் ஹைவே ஆரம்பிக்கும் இடத்தில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் உள்ளது. அந்த பக்கத்தில் இருந்து வெகு தொலைவு செல்லும் எல்லா லாரிகளும் அங்கே நின்று கற்பூரம் காட்டியபின் செல்லும். அவர்களைப் பொறுத்தவரை அந்த நெடும் பயணத்தில் முனியப்பன் உடனிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருப்பதாலேயே, தவறான விசயங்களை அவர்கள் செய்யத் தயங்குவார்கள், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது போன்ற விசயங்களை.

    அதே போல் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சபரிமலைக்கு மாலை போடுபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.

    இது நன்மையில்தான் முடியும் என்கிற போது அந்த நம்பிக்கையில் என்ன தவறு?

    மேலே வாத்தியார் மற்றும் பலர் சொல்லியிருப்பது போல் கிளி ஜோசியம், செவ்வாய் தோசத்தால் 30 வயது வரை திருமணமில்லை என்பதெல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரீம் கேஸ் ஆகவே தெரிகிறது. அது மூட நம்பிக்கை என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.

    ReplyDelete
  87. லக்கிலுக் Said
    ////அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?///
    வாத்தியாரே!
    பூனை குறுக்கே வந்தால் போகிற காரியம் உருப்படாது, மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகள் கலந்து கொண்டால் நல்லதல்ல, ஆடுமாடு மற்றும் நரபலி - இதுமாதிரி விஷயங்கள் கூட சிலபேரின் நம்பிக்கை தான்.
    மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள், இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று உங்களுக்கு ஒருமுறை கூடவா தோன்றியதில்லை? :-)
    ஆச்சரியம்!! ஆச்சரியம்!!!/////

    இதையெல்லாம் மூட நம்பிக்கை அல்ல என்று எப்போது நான் சொன்னேன்?
    இல்லை அதெல்லாம் ஜோதிடத்தோடு சம்பந்‍தப் பட்டது என்று எப்போது நான் எழுதினேன்?

    சந்தேகமில்லாமல் அதெல்லாம் மூட நம்பிக்கைதான்.
    என் சகோதரி ஒருவரும் விதவைதான்!என் thaayum விதவைதான். மனித நேயம் இல்லாமல் அப்படி நான் எதற்காகச் சொல்லப்போகிறேன்
    --------------------
    நான் சொன்னதை திறமையாக எடிட் செய்து எனக்கு எதிராகவே திருப்ப முயற்சிக்கும் உங்கள் திறமையை என்னவென்பது? நீங்கள் சட்டசபையில் இருக்க வேண்டியவர்.

    நான் கடவுளைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும் குறிப்பிட்டு, அதை கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    தேட வேண்டாம் மீண்டும் ஒருமுறை என்னுடைய பின்னூட்டத்தைப் படித்துவிட்டு. இப்படித் திரித்தல் நியாயம்தான் என்று அதே மனசாட்சியை வைத்து நீங்களும் சொல்லுங்கள்

    ////SP.VR.Subbiah Said
    /////லக்கிலுக் Said...
    //ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் ->//
    சிறுதிருத்தம் டாக்டர்.
    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம்.
    மஞ்சள்துண்டு போட்டால் தான் முதல்வர் ஆவோம் என்று நினைத்து கலைஞர் மஞ்சத்துண்டு போட்டிருந்தாரேயானால் அதுவும் மூடநம்பிக்கை தான்!///////
    நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையில் இரண்டு விதம்
    கிடையாது. அவனைப் பொறுத்தவரை அது நம்பிக்கைதான்!
    Faith in God is also a belief!
    அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?
    கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்!
    அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?
    சொல்லுங்கள் லக்கியாரே!
    --------------------------------

    ஒரே ஒரு கேள்வி, பூனை குறுக்கே வருவதையும், கிளி ஜோதிடத்தையும் மட்டுமே தெரிந்த ஒருவன் அவ்வளவு பெரிய கடல் போன்ற ஜோதிடக் கலையை - அதை படித்திராமல் எப்படிப் பொய் அல்லது புரட்டு என்று சொல்லலாம்?

    படித்துவிட்டு வந்‍து சொல்லுங்கள். எனக்கு மூன்று வருடம் ஆனது? உங்களுக்கு எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியாது:‍)))))

    ஒரு குறுக்கு வழி இருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டு படிப்பு இருக்கிறது. அஞ்சல் வழிக்கல்வியிலும் படிக்கலாம்! ஆர்வமிருந்‍தால்
    சொல்லுங்கள் முகவரி தருகிறேன்!

    ReplyDelete
  88. /////வெண்பூ said...
    ///////Blogger லக்கிலுக் said...
    //ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் ->//
    சிறுதிருத்தம் டாக்டர்.
    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை சார்ந்த விஷயம்.
    மஞ்சள்துண்டு போட்டால் தான் முதல்வர் ஆவோம் என்று நினைத்து கலைஞர் மஞ்சத்துண்டு போட்டிருந்தாரேயானால் அதுவும் மூடநம்பிக்கை தான்!///////
    நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையில் இரண்டு விதம்
    கிடையாது. அவனைப் பொறுத்தவரை அது நம்பிக்கைதான்!
    Faith in God also is a belief!
    அதை மூட நம்பிக்கை என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது?
    அல்லது அந்த உரிமையை யார் கொடுத்தது?
    கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்!
    அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?
    சொல்லுங்கள் லக்கியாரே!//
    லக்கி, சுப்பையா வாத்தியார்,
    சேலத்தில் ஹைவே ஆரம்பிக்கும் இடத்தில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் உள்ளது. அந்த பக்கத்தில் இருந்து வெகு தொலைவு செல்லும் எல்லா லாரிகளும் அங்கே நின்று கற்பூரம் காட்டியபின் செல்லும். அவர்களைப் பொறுத்தவரை அந்த நெடும் பயணத்தில் முனியப்பன் உடனிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருப்பதாலேயே, தவறான விசயங்களை அவர்கள் செய்யத் தயங்குவார்கள், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது போன்ற விசயங்களை.
    அதே போல் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சபரிமலைக்கு மாலை போடுபவர்களை நானே பார்த்திருக்கிறேன்
    இது நன்மையில்தான் முடியும் என்கிற போது அந்த நம்பிக்கையில் என்ன தவறு?
    மேலே வாத்தியார் மற்றும் பலர் சொல்லியிருப்பது போல் கிளி ஜோசியம், செவ்வாய் தோசத்தால் 30 வயது வரை திருமணமில்லை என்பதெல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரீம் கேஸ் ஆகவே தெரிகிறது. அது மூட நம்பிக்கை என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை./////

    உங்கள் கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  89. அன்பு நண்பர் வெண்பூ!

    //அவர்களைப் பொறுத்தவரை அந்த நெடும் பயணத்தில் முனியப்பன் உடனிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை. //

    முனியப்பன் உடனிருந்து காத்தால் எங்களுக்கு அதுகுறித்து எந்தப் பிரச்சினையுமில்லை. அந்த கோயிலில் கற்பூரம் காட்டிவிட்டு சென்ற எந்த லாரியுமே இதுவரை விபத்துக்குள்ளானதில்லையா? அல்லது அங்கே கற்பூரம் ஏற்றியவர் யாரும் குடித்ததே இல்லையா?


    //அதே போல் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சபரிமலைக்கு மாலை போடுபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.
    //

    சபரிமலைக்கு மாலை போட்ட பின்னர் குடித்தவர்கள், சிகரெட் பிடித்தவர்களை சென்னையில் நிறைய பார்க்கலாம். மதுக்கடைகளில் இவர்களுக்கெல்லாம் ஸ்பெஷல் கொட்டாங்கச்சியே வைத்திருப்பார்கள். சுத்தமான குடியாம் அது.


    //செவ்வாய் தோசத்தால் 30 வயது வரை திருமணமில்லை என்பதெல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரீம் கேஸ் ஆகவே தெரிகிறது. //

    நீங்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறீர்களா? இங்கே நூற்றுக்கு 90 சதம் பேர் ஜாதகப்பொருத்தம் பார்த்தே திருமணம் செய்கிறார்கள். ஜாதகம் செட் ஆகவில்லை என்று எத்தனை பெண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள் தெரியுமா?


    வாத்தியார் அய்யா!

    //இதையெல்லாம் மூட நம்பிக்கை அல்ல என்று எப்போது நான் சொன்னேன்?//

    நீங்கள் சொன்னது என்னவென்றால்...

    //கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்! அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?
    சொல்லுங்கள் லக்கியாரே!//
    //

    அதாவது யாராவது எதையாவது நம்பினால் அதை மூடநம்பிக்கை என்று சொல்லி கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பது உங்கள் வாதம்.

    பூனை குறுக்கே வரும்போது அதை தவிர்ப்பது, கைம்பெண்களை மங்கல நிகழ்ச்சிகளில் தவிர்ப்பது போன்றவை கூட சில பேருக்கு (நீங்கள் சொல்லுவதை போல) நம்பிக்கை தான். அதை கேள்விகேட்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா என்பதே என் கேள்வி.

    திருமணத்துக்கு தகுதியுடைய ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் என்று கூறி ஜோதிடம் அவளது வாழ்க்கை அழிக்குமானால் மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அதை மூடநம்பிக்கை என்று சொல்லி ஜோதிடத்தை புறந்தள்ளுவது நியாயமானது தானே?


    //Faith in God is also a belief!//

    தகுந்த மருத்துவ சிகிச்சையின்றி ‘இயேசு வருவார், முடவர்களை குணமாக்குவார்” என்ற ரேஞ்சிலேயே கடவுள் நம்பிக்கை பரப்ப்பப்பட்டு வருகிறது. நான் இருக்கிறேன் என்று கடவுளும் நிரூபித்தபாடாக இல்லை. கேட்டால் அது உணர்வு என்கிறீர்கள்.

    கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வலி, காதல், பசி, மகிழ்ச்சி, வருத்தம் என்ற உணர்வுகள் இயல்பாகவே இருக்கிறது. கடவுள் அப்படியா? அது சமூகத்தாலும், பெற்றோராலும் வலிந்து திணிக்கப்படுவது தானே?

    உணர்வு என்பது இயல்பாக வருவதா அல்லது வலிந்து திணிக்கப்படுவதா?

    ReplyDelete
  90. ////கோயிலில் கற்பூரம் காட்டிவிட்டு சென்ற எந்த லாரியுமே இதுவரை விபத்துக்குள்ளானதில்லையா////

    ////சபரிமலைக்கு மாலை போட்ட பின்னர் குடித்தவர்கள், சிகரெட் பிடித்தவர்களை சென்னையில் நிறைய பார்க்கலாம்/////

    ////இயேசு வருவார், முடவர்களை குணமாக்குவார்” என்ற ரேஞ்சிலேயே கடவுள் நம்பிக்கை பரப்ப்பப்பட்டு வருகிறது. நான் இருக்கிறேன் என்று கடவுளும் நிரூபித்தபாடாக இல்லை///

    இப்பதான் புரியுது. இவர்களது பிரச்சினை ஜோதிடம் சம்மந்தமானது அல்ல. இவர்களுக்கு வேறு ஏதோ பிரச்சினை இருக்குது.

    ReplyDelete
  91. ///இப்பதான் புரியுது. இவர்களது பிரச்சினை ஜோதிடம் சம்மந்தமானது அல்ல. இவர்களுக்கு வேறு ஏதோ பிரச்சினை இருக்குது.///

    முதல்லே நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ட்ரை பண்ணு மாமு. அதை உட்டுட்டு வாத்தியார் மாதிரி நீயும் பர்சனல் அட்டாக் பண்ணிக்கிட்டிருந்தா எப்படி?

    ReplyDelete
  92. நண்பர் லக்கி,

    நான் உங்கள் கேள்விக்கு சற்று விரிவாகவே பதிலளிக்க ஆசைப்படுகிறேன். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபின் பின்னூட்டமிடுகிறேன்.

    தங்கள் பதில்களுக்கு நன்றி.

    ReplyDelete
  93. லக்கிலுக் said...
    அன்பு நண்பர் வெண்பூ!
    //அவர்களைப் பொறுத்தவரை அந்த நெடும் பயணத்தில் முனியப்பன் உடனிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை. //
    முனியப்பன் உடனிருந்து காத்தால் எங்களுக்கு அதுகுறித்து எந்தப் பிரச்சினையுமில்லை. அந்த கோயிலில் கற்பூரம் காட்டிவிட்டு சென்ற எந்த லாரியுமே இதுவரை விபத்துக்குள்ளானதில்லையா? அல்லது அங்கே கற்பூரம் ஏற்றியவர் யாரும் குடித்ததே இல்லையா?
    //அதே போல் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சபரிமலைக்கு மாலை போடுபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.
    / / சபரிமலைக்கு மாலை போட்ட பின்னர் குடித்தவர்கள், சிகரெட் பிடித்தவர்களை சென்னையில் நிறைய பார்க்கலாம். மதுக்கடைகளில் இவர்களுக்கெல்லாம் ஸ்பெஷல் கொட்டாங்கச்சியே வைத்திருப்பார்கள். சுத்தமான குடியாம் அது.
    //செவ்வாய் தோசத்தால் 30 வயது வரை திருமணமில்லை என்பதெல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரீம் கேஸ் ஆகவே தெரிகிறது. //
    நீங்கள் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறீர்களா? இங்கே நூற்றுக்கு 90 சதம் பேர் ஜாதகப்பொருத்தம் பார்த்தே திருமணம் செய்கிறார்கள். ஜாதகம் செட் ஆகவில்லை என்று எத்தனை பெண்கள் நிராகரிக்கப் படுகிறார்கள் தெரியுமா?


    வாத்தியார் அய்யா!
    //இதையெல்லாம் மூட நம்பிக்கை அல்ல என்று எப்போது நான் சொன்னேன்?//
    நீங்கள் சொன்னது என்னவென்றால்...
    //கலைஞர் மஞ்சள்துண்டு போட்டிருக்கிறாரென்றால் அது அவரது
    விருப்பம்! அதைக் கேள்வி கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது?
    சொல்லுங்கள் லக்கியாரே!// //

    /////அதாவது யாராவது எதையாவது நம்பினால் அதை மூடநம்பிக்கை என்று
    சொல்லி கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பது உங்கள் வாதம்.////

    எதையாவது அல்ல விருப்பமானதை என்று மாற்றிக்கொள்ளுங்கள். அதைக் கேள்வி
    கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பது என் வாதம்தான்!

    ///// பூனை குறுக்கே வரும்போது அதை தவிர்ப்பது, கைம்பெண்களை மங்கல
    நிகழ்ச்சிகளில் தவிர்ப்பது போன்றவை கூட சில பேருக்கு (நீங்கள் சொல்லுவதை போல)
    நம்பிக்கை தான். அதை கேள்விகேட்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா
    என்பதே என் கேள்வி.//////

    அதைக்கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு என்னையும் சேர்த்து!

    /////// திருமணத்துக்கு தகுதியுடைய ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் என்று
    கூறி ஜோதிடம் அவளது வாழ்க்கை அழிக்குமானால் மனிதநேயத்தில் ஆர்வம்
    கொண்டவர்கள் அதை மூடநம்பிக்கை என்று சொல்லி ஜோதிடத்தை
    புறந்தள்ளுவது நியாயமானது தானே?/////

    ஜோதிடத்தை மட்டுமல்ல அந்த ஜோதிடரையும் புறந்தள்ள வேண்டும்!


    //Faith in God is also a belief!//
    தகுந்த மருத்துவ சிகிச்சையின்றி ‘இயேசு வருவார், முடவர்களை குணமாக்குவார்”
    என்ற ரேஞ்சிலேயே கடவுள் நம்பிக்கை பரப்ப்பப்பட்டு வருகிறது. நான் இருக்கிறேன்
    என்று கடவுளும் நிரூபித்தபாடாக இல்லை. கேட்டால் அது உணர்வு என்கிறீர்கள்./////

    இது வேறு மதத்தினரைச் சார்ந்தது. அந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றதில்லை!
    பொதுவான மக்கள் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது வேறு!
    அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுகிற மாதிரிக்கேட்டால் நான்
    என்ன பதில் சொல்வது?

    மேலும் வாத்தியார் அட்டாக் செய்கிறார் என்கிறீர்கள்!
    உங்களை அட்டாக் செய்வதில் எனக்கு என்ன நன்மை!
    நான் அப்படிப்பட்ட ஆசாமி அல்ல!

    காணாமல் காதல் என்பது போல, நேரில் பார்க்காமல் நட்பு என்பது நமது உயரிய நட்பு!
    அதை மறந்து விட்டுப் பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது!

    இனி உங்கள் கேள்விகளை அன்புடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
    தெளிவுபடுத்தக் காத்திருக்கிறேன்!

    ////// கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வலி, காதல்,
    பசி, மகிழ்ச்சி, வருத்தம் என்ற உணர்வுகள் இயல்பாகவே இருக்கிறது. கடவுள்
    அப்படியா? அது சமூகத்தாலும், பெற்றோராலும் வலிந்து திணிக்கப்படுவது தானே?
    உணர்வு என்பது இயல்பாக வருவதா அல்லது வலிந்து திணிக்கப்படுவதா?/////

    உணர்வுள்ள மனிதனிடம் யாரும் எதையும் திணிக்க முடியாது என்பது என் தாழ்மையான
    கருத்து!

    ReplyDelete
  94. /////உணர்வுள்ள மனிதனிடம் யாரும் எதையும் திணிக்க முடியாது என்பது என் தாழ்மையான
    கருத்து!///

    உதாரணத்திற்கு: தன் மானமுள்ள ஒரு மனிதன் எத்தனை கொடிய பசி என்றாலும், மடிவானே தவிர!
    கையேந்த மாட்டான்! (பச்சையாகச் சொன்னால்: பிச்சை எடுத்துப் பசியைப் போக்கிக்கொள்ள முயல மாட்டான்)

    ReplyDelete
  95. லக்கி,

    உங்கள் எதிர்வாதம் உண்மையென்றாலும் நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை. ஹெல்மெட் போடுவதால் மட்டுமே விபத்தையோ, சாவையோ தடுக்க முடியாது. நீங்கள் கேட்பது "ஹெல்மெட் போட்டா விபத்தாவதில்லையா?" என்பது போன்றது. உங்கள் கேள்விகள் நியாயமென்றால் எந்த வண்டிக்கும் ப்ரேக் தேவையே இல்லையே. ஏனென்றால் ப்ரேக் இருப்பதே வண்டி நிற்பதற்குதான். அப்படியென்றால் எந்த விபத்துமே நடக்கக் கூடாதே?

    அதே போல்தான் கடவுள் நம்பிக்கையும். கற்பூரம் ஏற்றுவதால் மட்டுமே விபத்தே நடக்காது என்பதல்ல. அதனால் மனிதனுக்கு வரும் நம்பிக்கையும் அதனால் அவன் தவறு செய்யாமல் இருப்பதும்தான் முக்கியம்.

    கடவுள் நம்பிக்கையால் கெட்டுப்போன, அழிந்துபோன 10 பேரை நீங்கள் காட்டினால் அதே நம்பிக்கையால் உயிர் வாழும் 100 பேரை என்னால் காட்டமுடியும். கடன் தொல்லையால் தவிக்கும் ஒருவனை ஒரு ஜோசியனின் "இன்னும் 2 மாசத்துல உனக்கு நல்ல காலம் வரும்பா" என்ற சொல் அவனது தற்கொலையைத் தடுக்கும் எனில், அதனால் என்ன நஷ்டம்?

    நீங்கள் மடிப்பாக்கம் பீர் சாமியாரை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் ஒரு நாத்திகவாதியின் அரசாங்கத்திற்கே உதவி செய்யும் சாய்பாபாவை பார்க்கிறேன் நான்.

    நானும் (ஒரு பேச்சுக்கு) உங்கள் கொள்கைகளை விமர்சிப்பதாக வைத்துக் கொள்வோம்.

    இறை நம்பிக்கையை விட மோசமான மதுக்கடைகளை மூட ஏன் ஒரு இறைமறுப்பாளர் முன்வரவில்லை? உங்கள் எண்ணம் மக்கள் நன்றாக இருப்பதுதான் என்றால் இறை நம்பிக்கையை எதிர்ப்பது அதற்காகத்தான் என்றால், அதை விட மோசமான மதுவை ஒழிக்க முன் வராதது ஏன் என்று கேட்கிறேன்.

    ஒவ்வொரு 'குடி'மகனும் சராசரியாக மாதாமாதம் செலவழிக்கும் 2000 ரூபாயை விட 1 ரூபாய் கற்பூரம் யாரையும் துன்புறுத்திவிடாது லக்கி.

    ReplyDelete
  96. திருவாளர் லக்கி லுக்கு அவர்களே,
    இது ஜோதிடம் சம்மந்தமான வகுப்பறை. அது சம்மந்தமான் கேள்விகளுக்கு நிச்சயமாக பதிலளிக்க தயாராக இருக்கின்றேன்.

    மனித வாழ்வில் ஏற்படும் சாதி சமூக பிரச்சினைகளையும், மதத்தின் பெயரால் ஒரு சிலர் செய்யும் பிழைகளையும் ஓட்டு மொத்தமாக திரட்டி அவற்றுடன் ஜோதிடக்கலையும் இணைத்து நீங்கள் கேள்வி கேட்கும் concept அடிப்படையிலேயே பிழையாக இருக்கும் போது அதற்கு எப்படி பதில் சொல்வது.

    //////முதல்லே நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ட்ரை பண்ணு மாமு. அதை உட்டுட்டு வாத்தியார் மாதிரி நீயும் பர்சனல் அட்டாக் பண்ணிக்கிட்டிருந்தா எப்படி? //////
    உங்களை பர்சனலாக அட்டாக் பண்ணவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அதற்காக வருத்தப்படுகிறேன்.

    ஜோதிடம் எப்படி கணிக்கப்படுகின்றது, எப்படி பிரயோகிக்கப்படுகிறது, தெருவோர சோதிடருக்கும் ஜோதிடத்துக்கும் என்ன சம்பந்தம், சிலர் சொல்லும் ஜோதிடம் ஏன் பிழைக்கிறது. இதுக்கெல்லாம் ஒரே நாளில் பதில் சொல்ல முடியாது. இந்த கேள்விகளுக்கான பதிலை விளங்கிக்கொள்ள முதலில் அதை பற்றி சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.

    உங்களிடம் சீரியஸாக ஒரு கேள்வி. ஜோதிடம் எப்படி கணிக்கப்படுகின்றது என்று உங்களுக்கு சிறிதாவது தெரியுமா. உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஜோதிடம் என்பது கணிதமுறையிலான ஒரு கலை. எங்கள் ஊரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட ஜோதிடக்கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட மதம் சம்மந்தபட்ட விஷயம் அல்ல.

    ஊரில் சிலர் வயிற்று பிழைப்புக்காகவும், அரை குறை அறிவை வைத்துக்கொண்டு சிலரை ஏமாற்றி பிழைப்பதை வைத்துக்கொண்டு ஜோதிடத்தை குறை சொல்ல வேண்டாம். உலகில் எல்லா துறைகளிலும் இப்படி குல்மால் இருக்கத்தான் செய்கிறது.

    (உண்மையிலேயே நீங்கள் புரியாமல்தான் கேள்வி கேட்கிறீர்களா? அல்லது சும்மா மற்றவர்களை குழப்புகிறீர்களா என்று புரியவில்லை)

    ReplyDelete
  97. ஜோதிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி.

    காழியூர் நாராயணன் ஒரு நல்ல ஜோதிடரா? இல்லையா?

    ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்கவும் :-)

    ReplyDelete
  98. ////வெண்பூ said...

    இறை நம்பிக்கையை விட மோசமான மதுக்கடைகளை மூட ஏன் ஒரு
    இறைமறுப்பாளர் முன்வரவில்லை? உங்கள் எண்ணம் மக்கள் நன்றாக இருப்பதுதான்
    என்றால் இறை நம்பிக்கையை எதிர்ப்பது அதற்காகத்தான் என்றால்,
    அதை விட மோசமான மதுவை ஒழிக்க முன் வராதது ஏன் என்று கேட்கிறேன்

    ஒவ்வொரு 'குடி'மகனும் சராசரியாக மாதாமாதம் செலவழிக்கும்
    2000 ரூபாயை விட 1 ரூபாய் கற்பூரம் யாரையும் துன்புறுத்திவிடாது லக்கி.////

    உண்மையில், மறுப்பாளர்கள் -
    அவர்கள் இந்த மாதிரி செலவழிக்கும்
    பழக்கம் உடையவர்கள் எனில் -
    யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
    யோசித்துப் பதில் சொல்வார்களா என்பது வேறு விஷயம்!

    ReplyDelete
  99. //////கல்கிதாசன் said...
    திருவாளர் லக்கி லுக்கு அவர்களே,
    இது ஜோதிடம் சம்மந்தமான வகுப்பறை. அது சம்மந்தமான் கேள்விகளுக்கு
    நிச்சயமாக பதிலளிக்க தயாராக இருக்கின்றேன்.
    மனித வாழ்வில் ஏற்படும் சாதி சமூக பிரச்சினைகளையும்,
    மதத்தின் பெயரால் ஒரு சிலர் செய்யும் பிழைகளையும் ஓட்டு மொத்தமாக
    திரட்டி அவற்றுடன் ஜோதிடக்கலையும் இணைத்து நீங்கள் கேள்வி கேட்கும்
    concept அடிப்படையிலேயே பிழையாக இருக்கும் போது அதற்கு எப்படி பதில் சொல்வது.
    //////முதல்லே நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ட்ரை பண்ணு மாமு.
    அதை உட்டுட்டு வாத்தியார் மாதிரி நீயும் பர்சனல் அட்டாக் பண்ணிக்கிட்டிருந்தா எப்படி? //////
    உங்களை பர்சனலாக அட்டாக் பண்ணவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
    அப்படி நீங்கள் நினைத்தால் அதற்காக வருத்தப்படுகிறேன்.
    ஜோதிடம் எப்படி கணிக்கப்படுகின்றது, எப்படி பிரயோகிக்கப்படுகிறது,
    தெருவோர சோதிடருக்கும் ஜோதிடத்துக்கும் என்ன சம்பந்தம், சிலர் சொல்லும்
    ஜோதிடம் ஏன் பிழைக்கிறது. இதுக்கெல்லாம் ஒரே நாளில் பதில் சொல்ல முடியாது.
    இந்த கேள்விகளுக்கான பதிலை விளங்கிக்கொள்ள முதலில் அதை பற்றி சிறிதாவது
    தெரிந்திருக்க வேண்டும்.
    உங்களிடம் சீரியஸாக ஒரு கேள்வி. ஜோதிடம் எப்படி கணிக்கப்படுகின்றது
    என்று உங்களுக்கு சிறிதாவது தெரியுமா. உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லாமல்
    இருக்கலாம் ஆனால் ஜோதிடம் என்பது கணிதமுறையிலான ஒரு கலை. எங்கள்
    ஊரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட ஜோதிடக்கலையில் வல்லவர்களாக
    இருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட மதம் சம்மந்தபட்ட விஷயம் அல்ல.
    ஊரில் சிலர் வயிற்று பிழைப்புக்காகவும், அரை குறை அறிவை வைத்துக்கொண்டு
    சிலரை ஏமாற்றி பிழைப்பதை வைத்துக்கொண்டு ஜோதிடத்தை குறை சொல்ல வேண்டாம்.
    உலகில் எல்லா துறைகளிலும் இப்படி குல்மால் இருக்கத்தான் செய்கிறது.
    (உண்மையிலேயே நீங்கள் புரியாமல்தான் கேள்வி கேட்கிறீர்களா?
    அல்லது சும்மா மற்றவர்களை குழப்புகிறீர்களா என்று புரியவில்லை)////
    -------------------------
    உண்மைதான் நண்பரே!
    சிலர் அரை குறை அறிவை வைத்துக்கொண்டு, சிலரை ஏமாற்றி பிழைப்பதை வைத்துக்கொண்டு
    மொத்தமாக ஜோதிடத்தையே பொய் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?.

    இதற்கு லக்கியார், நியாயம் அல்லது நியாமில்லை என்று
    ஒரே வார்த்தையில் பதில் சொல்வார்
    என்று எதிபார்க்கிறேன்!

    ReplyDelete
  100. /////லக்கிலுக் said...
    ஜோதிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி.
    காழியூர் நாராயணன் ஒரு நல்ல ஜோதிடரா? இல்லையா?
    ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்கவும் :-)/////

    ஒரு சிறு திருத்தம்: வக்காலத்தல்ல! ஜோதிடத்தின்மேல் நம்பிக்கை உடையவர்கள்
    -------------------
    கலைஞர் சிறந்த பேச்சாளரா? ஆம் (பலமுறைகள் நேரில் கேட்டிருக்கிறேன்! )

    லக்கிலுக் என்னும் கிருஷ்ணகுமார் சிறந்த எழுத்தாளரா? ஆம் (பலமுறைகள் பதிவில் படித்திருக்கிறேன்!)

    காழியூர் நாராயணன் ஒரு நல்ல ஜோதிடரா? தெரியாது (இதுவரை சந்தித்ததில்லை!)

    நீங்கள் அறிந்தவரை சென்னையில் யார் நல்ல ஜோதிடர்? (திரு.ஏ.ஏம்.ராஜகோபாலன் - முன்பு தினமணியிலும்
    தற்சமயம், குமுதம் ஜோதிடத்திலும் எழுதி வருபவர்)

    ReplyDelete
  101. லக்கி லுக் நண்பரே,
    தெரியாத ஒன்றைப்பற்றி கருத்து கூறும் பழக்கம் எனக்கு கிடையாது. காழியூர் நாராயணன் அவர்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
    (சிலர் ஒரு விஷயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி சவுண்டு விடுவார்கள்)

    //////ஜோதிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கெல்லாம்///////

    வக்காலத்து வாங்குவது என்பது ஒன்றும் தெரியாமல் அடுத்தவர் பேச்சை கேட்டு விட்டு கூட சேர்ந்து ஆமாம் சாமி போடுவது. நான் ஜோதிடத்தை படித்திருக்கிறேன். அதை நடைமுறை வாழ்வில் பிரயோகப்படுத்தியும் பார்த்திருக்கின்றேன். ஜோதிடத்தை பற்றி எனக்கு தெளிந்த கருத்து இருக்கின்றது. ஆகவே யாரும் சொல்வதை கேட்டுவிட்டு (உங்களை போல தெருவோர ஜோசியக்காரன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு ) எதற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

    ReplyDelete
  102. /////Blogger கல்கிதாசன் said...
    லக்கி லுக் நண்பரே,
    தெரியாத ஒன்றைப்பற்றி கருத்து கூறும் பழக்கம் எனக்கு கிடையாது. காழியூர் நாராயணன் அவர்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
    (சிலர் ஒரு விஷயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி சவுண்டு விடுவார்கள்)
    //////ஜோதிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கெல்லாம்///////
    வக்காலத்து வாங்குவது என்பது ஒன்றும் தெரியாமல் அடுத்தவர் பேச்சை கேட்டு விட்டு கூட சேர்ந்து ஆமாம் சாமி போடுவது. நான் ஜோதிடத்தை படித்திருக்கிறேன். அதை நடைமுறை வாழ்வில் பிரயோகப்படுத்தியும் பார்த்திருக்கின்றேன். ஜோதிடத்தை பற்றி எனக்கு தெளிந்த கருத்து இருக்கின்றது. ஆகவே யாரும் சொல்வதை கேட்டுவிட்டு (உங்களை போல தெருவோர ஜோசியக்காரன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு ) எதற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
    "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"//////

    "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் தம் கருத்திற்குச்
    சாதகமாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வது இன்றைய அறிவு" :-))))))

    ReplyDelete
  103. உஸ்....அப்பப்பப்பா....இப்பவே கண்ண கட்டுதே (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

    வகுப்பு அறையில சத்தம் கொஞ்சம் அதிகமா இருந்தப்பவே நெனச்சேன்...ஏதோ வில்லங்கமான விவாதம் நடந்திட்டிருக்குன்னு...

    சரி..உலக அமைதிக்காக (மன்னிக்கவும், வகுப்பறை அமைதிக்காக) இந்த சின்னப் பையன் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேள்வி கேக்கிறவங்களும், பதில் சொல்றவங்களும் கேளுங்க சாமிகளா....

    வாத்தியார் ஐயா எந்த பாடத்திலேயும் சோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதங்கப் படும் எந்த விசயத்தையும் (பூனை, பல்லி, விதவை, செவ்வா தோசம் போன்ற) கடைபிடிக்கச் சொல்லவில்லை. வாத்தியாரே..ஏதாவது பாடத்தை படிக்காமல்(தவற விட்டுட்டு) உளறி இருந்தால், ஒரு குட்டு கொட்டி விடுங்கள்....ஏன்னா, கடைசி பெஞ்ச் கடைசி மாணவன் ஆதலால் அப்பப்ப வகுப்புக்கு கட் அடிப்பதுண்ட்டு...பரீட்சையே எழுதுறதும் கிடையாது..

    ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருது..சிறு வயதில் கையில் காசு கொடுத்து கடைக்குப் போயி நிர்மா (Nirma washing powder) வாங்கி வரச் சொல்லுவார்கள்(உபயம்: தொலைக்காட்சியில் வரும் Nirma..washing powder Nirma.. விளம்பரம்). கடைக்காரரும் கொடுத்து விட்டார். வீட்டுக்குப் போனா சரியான மாத்து... ஏன்னா, நான் வாங்கிட்டு வந்தது 'Neema Washing powder'. எவனோ ஒரு டுபாக்கூர் கம்பெனிக்காரன் நிர்மா வாஷிங் பவுடர் popularity ய பாத்துட்டு சாமானிய மக்களின் மயக்கத்தையும், கவனக்குறைவையும் வகையா பயன் படுத்திக்க Neeம நு ஆரம்பிச்சிட்டான்.

    அது போல‌, சோதிட‌ம் என்ற‌ க‌லையை, சில‌ டுபாக்கூர் பார்ட்டிக‌ள் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இப்ப‌டி exploit ப‌ண்ணிக் கொள்வ‌துண்டு (கிளி, கைரேகை, நாடி, மாந்திரீக‌ம், பில்லி சூனிய‌ம், ஜாத‌க‌ நிலைய‌ம் போன்ற‌ பொழ‌ப்புக்காக‌ வேஷ‌ம் போடும் வ‌கைய‌றாக்க‌ள்).

    கேள்வி கேட்ப‌தில் த‌வ‌றே இல்லை. அது இய‌ற்கை ந‌ம‌க்கு அளித்திருக்கும் வ‌ர‌ம்/ச‌க்தி/ஆயுத‌ம். ஆனால் மேலோட்டமாக‌ (நுனிப் புல் மேய்வ‌தைப் போல‌) அல்ல‌து ஒன்றைப் ப‌ற்றி அறிந்து கொள்ளாம‌ல் கேள்வி கேட்ப‌து த‌வ‌று.

    சாப்பிட்டு பாக்காம‌லேயே எப்ப‌டி சாம்பார்ல‌ உப்பு அதிக‌ம்னு சொல்ல‌ முடியும்? ம‌த்த‌வ‌ன் சொல்றத வச்சி எப்ப‌டி ந‌ம்ப‌ற‌து? சொல்ற‌வ‌ன் பொண்ணு வீட்டுக் கார‌னோ அல்ல‌து மாப்பிள்ளை வீட்டுக் கார‌னோ? கொஞ்ச‌ம் சாப்பிட்டுத் தான் பாருங்க‌ளேன்!!

    ந‌ம்பிக்கை வ‌ச்ச‌வ‌ன‌ ம‌ட்டும் காப்பாத்த‌ற‌துக்கும், ந‌ம்பாத‌வ‌ன‌ கைவிட‌ற‌துக்கும் க‌ட‌வுள் ஒன்னும் சாமானிய‌ன் அல்ல‌!! இறைவ‌ன் மிக‌ப் பெரிய‌வ‌ன்!!


    வெற்றி

    ReplyDelete
  104. //////Kalacharam said...
    உஸ்....அப்பப்பப்பா....இப்பவே கண்ண கட்டுதே (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
    வகுப்பு அறையில சத்தம் கொஞ்சம் அதிகமா இருந்தப்பவே நெனச்சேன்...ஏதோ வில்லங்கமான விவாதம் நடந்திட்டிருக்குன்னு...
    சரி..உலக அமைதிக்காக (மன்னிக்கவும், வகுப்பறை அமைதிக்காக) இந்த சின்னப் பையன் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேள்வி கேக்கிறவங்களும், பதில் சொல்றவங்களும் கேளுங்க சாமிகளா....
    வாத்தியார் ஐயா எந்த பாடத்திலேயும் சோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதங்கப் படும் எந்த விசயத்தையும் (பூனை, பல்லி, விதவை, செவ்வா தோசம் போன்ற) கடைபிடிக்கச் சொல்லவில்லை. வாத்தியாரே..ஏதாவது பாடத்தை படிக்காமல்(தவற விட்டுட்டு) உளறி இருந்தால், ஒரு குட்டு கொட்டி விடுங்கள்....ஏன்னா, கடைசி பெஞ்ச் கடைசி மாணவன் ஆதலால் அப்பப்ப வகுப்புக்கு கட் அடிப்பதுண்ட்டு...பரீட்சையே எழுதுறதும் கிடையாது..
    ஒரு அனுபவம் ஞாபகத்துக்கு வருது..சிறு வயதில் கையில் காசு கொடுத்து கடைக்குப் போயி நிர்மா (Nirma washing powder) வாங்கி வரச் சொல்லுவார்கள்(உபயம்: தொலைக்காட்சியில் வரும் Nirma..washing powder Nirma.. விளம்பரம்). கடைக்காரரும் கொடுத்து விட்டார். வீட்டுக்குப் போனா சரியான மாத்து... ஏன்னா, நான் வாங்கிட்டு வந்தது 'Neema Washing powder'. எவனோ ஒரு டுபாக்கூர் கம்பெனிக்காரன் நிர்மா வாஷிங் பவுடர் popularity ய பாத்துட்டு சாமானிய மக்களின் மயக்கத்தையும், கவனக்குறைவையும் வகையா பயன் படுத்திக்க Neeம நு ஆரம்பிச்சிட்டான்.
    அது போல‌, சோதிட‌ம் என்ற‌ க‌லையை, சில‌ டுபாக்கூர் பார்ட்டிக‌ள் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இப்ப‌டி exploit ப‌ண்ணிக் கொள்வ‌துண்டு (கிளி, கைரேகை, நாடி, மாந்திரீக‌ம், பில்லி சூனிய‌ம், ஜாத‌க‌ நிலைய‌ம் போன்ற‌ பொழ‌ப்புக்காக‌ வேஷ‌ம் போடும் வ‌கைய‌றாக்க‌ள்).
    கேள்வி கேட்ப‌தில் த‌வ‌றே இல்லை. அது இய‌ற்கை ந‌ம‌க்கு அளித்திருக்கும் வ‌ர‌ம்/ச‌க்தி/ஆயுத‌ம். ஆனால் மேலோட்டமாக‌ (நுனிப் புல் மேய்வ‌தைப் போல‌) அல்ல‌து ஒன்றைப் ப‌ற்றி அறிந்து கொள்ளாம‌ல் கேள்வி கேட்ப‌து த‌வ‌று.
    சாப்பிட்டு பாக்காம‌லேயே எப்ப‌டி சாம்பார்ல‌ உப்பு அதிக‌ம்னு சொல்ல‌ முடியும்? ம‌த்த‌வ‌ன் சொல்றத வச்சி எப்ப‌டி ந‌ம்ப‌ற‌து? சொல்ற‌வ‌ன் பொண்ணு வீட்டுக் கார‌னோ அல்ல‌து மாப்பிள்ளை வீட்டுக் கார‌னோ? கொஞ்ச‌ம் சாப்பிட்டுத் தான் பாருங்க‌ளேன்!!
    ந‌ம்பிக்கை வ‌ச்ச‌வ‌ன‌ ம‌ட்டும் காப்பாத்த‌ற‌துக்கும், ந‌ம்பாத‌வ‌ன‌ கைவிட‌ற‌துக்கும் க‌ட‌வுள் ஒன்னும் சாமானிய‌ன் அல்ல‌!! இறைவ‌ன் மிக‌ப் பெரிய‌வ‌ன்!!
    வெற்றி///////////

    நீங்களே சொல்லிவிட்டீர்கள் க‌ட‌வுள் ஒன்னும் சாமானிய‌ன் அல்ல என்று!
    அதனால் யாரும் வந்து கண்ணைக் கட்டாமல் அவனே பார்த்துக் கொள்ளட்டும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com