மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.6.08

ஞானக் கதைகள்(3) - எவன் வெற்றி பெறுவான்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள எண் 3-

எவன் வெற்றி பெறுவான்?

புத்தர் தன்னுடைய சீடன் ஒருவனுக்கு தீட்சை அளித்து விடை கொடுக்கும்
போது கேட்டார்:

“நீ எந்தப் பகுதிக்குச் சென்று மக்களை நல்வழிப் படுத்தப் போகிறாய்?”

அவன் சொன்னான்; புத்தர் தொடர்ந்து கேட்டார்:

“அந்தப் பகுதி மக்கள் உன் பிரச்சாரத்தைக் கேட்க விரும்பாமல் உன்னை
நிந்தனை செய்தால் என்ன செய்வாய்?”

“இந்த மாட்டோடு விட்டர்களே என்று நினைக்காமல் மீண்டும் மீண்டும்
பிரச்சாரம் செய்வேன்”

“உன்னை அடித்தால்....?”

“ஆயுதம் கொண்டு தாக்கவில்லையே என்று சந்தோஷப்படுவதுடன், மீண்டும்
மீண்டும் பிரச்சாரம் செய்வேன்”

“ஆயுதம் கொண்டு தாக்கி உன்னைக் கொல்ல வந்தால்......?”

“இந்த ஜீவனுக்கு முக்தியளிக்க எவ்வளவு பேர்கள்? நமக்கு இவர்கள் சுலபமாக
முக்தி அளித்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று மகிழ்வேன்!”

புத்தர் சொன்னார்:

“நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”


வாழ்க வளமுடன்!

25 comments:

  1. நாந்தான் முதலாவது...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நல்ல கதை... நல்ல கருத்து... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. //புத்தர் சொன்னார்:

    “நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”//

    இந்த சீடன்(மற்றும் வகுப்பு கண்மனிகள்) வெற்றி பெற வாத்தியரே(புத்தர்) வாழ்த்துவீர் ஆகா!

    நாங்கள் புறப்பட உங்கள் (புத்தர்) அருள் வேண்டுகிறேன் வாத்தியரே

    ReplyDelete
  5. வாத்தியரே தசவாதாரம் பார்த்தசா?

    உங்கள் விமர்சனம் வேண்டி காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. வாத்தியரே தசவாதாரம் விமர்சனம் தனி பதிவு இடும் படி தாழ்மையுள்ல மாணவர்களின் வேண்டுகோள் (சட்டம் பிள்ளை சேர்த்து)

    உங்கள் கண்ணோட்டத்தில் எங்களுக்கு விமர்சனம் வேண்டும்

    ReplyDelete
  7. அன்பு குருஜி,
    ஹாட் டிரிக் அடித்து விட்டீர்கள்
    நீதிக்கதைகளில்..
    "winners never quit" என்று
    ஆங்கிலத்தில் கூறுவார்கள்..
    அதை உங்கள் புத்தர் கதையில்
    அழகாக விவரிக்க கண்டேன்.
    அத்தனையும் உண்மை!!!!!

    ReplyDelete
  8. புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் எனப் பொருள் என்பர்.யாரும் முய‌ற்சி செய்தால் புத்தராக மாறலாம் இது கோவை ஈசா யோகா வகுப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக் கேட்டது. ஆசிரியரின் ஞானக் கதைகள் தொடர்வது மன‌தை அந்த வகுப்புக்கு மீண்டும் வழிநடத்தி செல்வது போல் உள்ளது.நன்றி

    ReplyDelete
  9. /////VIKNESHWARAN said...
    நாந்தான் முதலாவது...////

    பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))

    ReplyDelete
  10. /////ச்சின்னப் பையன் said...
    நல்ல கதை... நல்ல கருத்து... நன்றி ஐயா.../////

    உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சியே ச்சின்னைப்பையன்!

    ReplyDelete
  11. /////கோவை விமல்(vimal) said...
    //புத்தர் சொன்னார்:
    “நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”//
    இந்த சீடன்(மற்றும் வகுப்பு கண்மனிகள்) வெற்றி பெற வாத்தியரே(புத்தர்) வாழ்த்துவீர் ஆகா!
    நாங்கள் புறப்பட உங்கள் (புத்தர்) அருள் வேண்டுகிறேன் வாத்தியரே////

    நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
    கட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!
    யாராவது பார்த்தால் (எனக்கு) அடி விழப்போகிறது. இது போன்ற பின்னூட்டங்களை அனுமதித்ததற்கு!

    ReplyDelete
  12. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே தசவாதாரம் பார்த்தசா?
    உங்கள் விமர்சனம் வேண்டி காத்திருக்கிறோம்/////

    அடுத்த பின்னூட்டாத்திற்கான பதிலைப்படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  13. ///////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே தசவாதாரம் விமர்சனம் தனி பதிவு இடும் படி தாழ்மையுள்ல மாணவர்களின்

    வேண்டுகோள் (சட்டம் பிள்ளை சேர்த்து)
    உங்கள் கண்ணோட்டத்தில் எங்களுக்கு விமர்சனம் வேண்டும்/////

    நான் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

    நேரமின்மைதான் காரணம். எனது நண்பர் திரு.வி.எஸ்.கே அவர்கள் படத்தைப் பார்த்து விமர்சனம்

    எழுதியுள்ளார். அவர் என்னவிட நன்றாக விமர்சிக்கக்கூடியவர். அதைப் படித்துப்பாருங்கள்!
    சுட்டி: http://aaththigam.blogspot.com/2008/06/blog-post_13.html

    ReplyDelete
  14. /////தமாம் பாலா said...
    அன்பு குருஜி,
    ஹாட் டிரிக் அடித்து விட்டீர்கள்
    நீதிக்கதைகளில்..
    "winners never quit" என்று
    ஆங்கிலத்தில் கூறுவார்கள்..
    அதை உங்கள் புத்தர் கதையில்
    அழகாக விவரிக்க கண்டேன்.
    அத்தனையும் உண்மை!!!!!

    இன்னும் நிறையக் கதைகள் வரவுள்ளன. தொடர்ந்து படியுங்கள் பாலா!

    ReplyDelete
  15. ////Anonymous said...
    Good one!
    -Shankar/////

    Thanks Sankar!

    ReplyDelete
  16. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் எனப் பொருள் என்பர்.யாரும் முய‌ற்சி செய்தால் புத்தராக

    மாறலாம் இது கோவை ஈசா யோகா வகுப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக் கேட்டது.

    ஆசிரியரின் ஞானக் கதைகள் தொடர்வது மன‌தை அந்த வகுப்புக்கு மீண்டும் வழிநடத்தி செல்வது

    போல் உள்ளது.நன்றி/////

    மன மாற்றம் சிறிதேனும் ஏற்பட்டால் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  17. //பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))
    //

    அப்படினா நாந்தான் லாஸ்ட்டு

    ReplyDelete
  18. //நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
    கட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!//

    வாத்தியார் ரொம்ப தெளிவாகவே இருக்கார்!
    கட்டம் போட்டாங்க, அவ்ளோதான், நீ இப்படி செய்யலாமான்னு எல்லாம் கேள்விகள் வரும்!

    ReplyDelete
  19. ஹலோ சார்,

    கதைகள் லாம் நல்லாவே இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதான்.

    ReplyDelete
  20. VIKNESHWARAN said...
    //பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))//
    அப்படினா நாந்தான் லாஸ்ட்டு////

    அதுவும் உங்கள் கையில் இல்லை!

    ReplyDelete
  21. /////திவா said...
    //நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
    கட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!//
    வாத்தியார் ரொம்ப தெளிவாகவே இருக்கார்!
    கட்டம் போட்டாங்க, அவ்ளோதான், நீ இப்படி செய்யலாமான்னு எல்லாம் கேள்விகள் வரும்!/////

    நாளுக்கு நாள் தெளிவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பின்னூட்டங்களும் காரணம்

    ReplyDelete
  22. ////Sumathi. said...
    ஹலோ சார்,
    கதைகள் லாம் நல்லாவே இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதான்.////

    அதெனாலென்ன சகோதரி. நீங்கள் வந்து படித்தால் போதும்!

    ReplyDelete
  23. அருமையான கதைகள். நன்றி

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  24. ////Anonymous said...
    அருமையான கதைகள். நன்றி
    அன்புடன்
    இராசகோபால்////
    நன்றி மிஸ்டர் கோபால்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com