மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.6.08

ரத்தத்தின் யுத்தங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரத்தத்தின் யுத்தங்கள்!

“பலராமன்: பலராமன்” என்று மூன்று முறை அழைக்கிறார் நீதி மன்றத்தின் டவாலி.
அடுத்தாற்போல “பரசுராமன் மகன் ரங்கராஜன்” என்று மூன்று முறை அழைக்கிறார்.

மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி.

நீதி மன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறது. பாச அணுக்களால்
ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி?

உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும்
உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.

மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சம அளவில் தேடித்
தரும் உறவு மனைவி உறவு. அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும்
அதைத் தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது. ஆனால் பிறப்பிலும்
உடன் பிறப்பிலும் மனித அறிவுக்கு வேலையே இல்லை!

அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது. பின் ஏனங்கே பகை வந்து,
பாசம் சாகிறது?

பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன். சில பிறப்புக்கள் பந்த பாசத்தினால்
உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன்
நிர்ணயித்திருக்கிறான் போலும்!
-- ---------------------------------------- எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

46 comments:

SP.VR. SUBBIAH said...

அடுத்த பாடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்னும் 5ஆம் வீட்டைப் பற்றியது
அதற்கு முன் விளக்கம்தான் கவியரசரின் வைர வரிகள்!
பாடம் 23.6.2008 திங்களன்று.

திருநெல்வேலி கார்த்திக் said...

தந்தை மகன் உறவின் உரசலின் காரணம்
அடுத்த பதிவில் !

அமர பாரதி said...

அய்யா,

தந்தை மகன் உறவு மற்றும் விரிசல் பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

கோவை விமல்(vimal) said...

//பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன்.//
வாத்தியரே பூர்வஜென்ம பற்றி கேட்கணும் என்றிறுந்தேன், ஆமாம் இந்து நியதி படி பூர்வஜென்மம் என்றி ருந்தால் 7 பிறப்புகள் என்றிருக்கும்(சரியோ, தவறோ), இது ஜாதக கணிப்பில் தெரியுமா? (எத்தனை யாவது பிறப்பு என்று!!!!)
இருந்தால் முன் ஜென்மம், அடுத்த பிறவி என்று கணிக்க இயலுமா? :-!!%!!

பூர்வ ஜென்மம் பற்றி தனி பதிவு இடும் படி உங்கள் மாண்வார்களின் சார்பாக வேண்டுகோள் விடுகிறேன், அப்படியெ சிறு சுவரயஸிய உண்மை சம்பவங்களோடு...

வேண்டுகோள் பரிசீலிிககவும்

SP.VR. SUBBIAH said...

////திருநெல்வேலி கார்த்திக் said...
தந்தை மகன் உறவின் உரசலின் காரணம்
அடுத்த பதிவில் !////

அடடா, எனக்காக நீங்களே எழுதிவிட்டீர்களே!
அடுத்த பின்னூட்டத்தையும் கொஞ்சம் படியுங்கள் நெல்லைக்காரரே!

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
அய்யா,
தந்தை மகன் உறவு மற்றும் விரிசல் பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்./////

தந்தை மகன் உறவு ஜாதகனின் லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும், சனீஷ்வரனும்
சம்பந்தப்பட்டதாகும். இதை பூர்வ புண்ணியத்தை (5th house) விளக்கமாகச் சொல்வதற்காக எழுத உள்ளேன். அதோடு தந்தை மகன் உறவையும் எழுதுகிறேன்

ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...

Again Kannadasan's Special. Waiting for the coming Monday to read your article on the 5th House.

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன்.//
வாத்தியரே பூர்வஜென்ம பற்றி கேட்கணும் என்றிறுந்தேன், ஆமாம் இந்து நியதி படி பூர்வஜென்மம் என்றி ருந்தால் 7 பிறப்புகள் என்றிருக்கும்(சரியோ, தவறோ), இது ஜாதக கணிப்பில் தெரியுமா? (எத்தனை யாவது பிறப்பு என்று!!!!)
இருந்தால் முன் ஜென்மம், அடுத்த பிறவி என்று கணிக்க இயலுமா? :-!!%!!////

”ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் பந்தம் உந்தன் பந்தமம்மா”

என்ற பாடல் மட்டுமே எனக்குத் தெரியும்! ஏழ் பிறப்பைப் பற்றித் தெரியாது!

/////பூர்வ ஜென்மம் பற்றி தனி பதிவு இடும் படி உங்கள் மாண்வார்களின் சார்பாக வேண்டுகோள் விடுகிறேன், அப்படியெ சிறு சுவரயஸிய உண்மை சம்பவங்களோடு..///.

இது உண்டு! பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
Again Kannadasan's Special. Waiting for the coming Monday to read your article on the 5th House.////

கண்ணதாசன் எப்போதுமே - எல்லோராலும் விரும்பப் படுகிறவர்
அவரைப் பற்றி எழுதுவது சுகம், படிப்பதும் சுகம்!

ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...

எழுதுவது சுகம!படிப்பது பேரானந்தம்!

கோவை விமல்(vimal) said...

//இது உண்டு! பொறுத்திருங்கள்!//
வாத்தியரே பொறுமை மட்டும்தான் மிஞ்சி உள்ளது உங்கள் வகுப்பில்.

பொறுத்தார் பூமி ஆழ்வார். ஆகவே பொறுமையுடன் காத்திருக்கிறேன். உங்கள் வகுப்பில்........

கோவை விமல்(vimal) said...

//ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
எழுதுவது சுகம!படிப்பது பேரானந்தம்!//
சரியாக சொன்னீர்கள் நண்பரே, நானும் உங்கள் ஸீட் தான்....:-)))

Anonymous said...

Waiting to read a blog about 5th house.

-Shankar

SP.VR. SUBBIAH said...

////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
எழுதுவது சுகம!படிப்பது பேரானந்தம்!////

ஆகா, அப்படியென்றால் எழுதுவதும் பேரானந்தமே!

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//இது உண்டு! பொறுத்திருங்கள்!//
வாத்தியரே பொறுமை மட்டும்தான் மிஞ்சி உள்ளது உங்கள் வகுப்பில்.
பொறுத்தார் பூமி ஆழ்வார். ஆகவே பொறுமையுடன் காத்திருக்கிறேன். உங்கள் வகுப்பில்........////
பொறுமை மட்டும்தான் மிஞ்சியுள்ளதா? பாடம் எதுவும் நினைவில் மிஞ்சவில்லையா?

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
எழுதுவது சுகம!படிப்பது பேரானந்தம்!//
சரியாக சொன்னீர்கள் நண்பரே, நானும் உங்கள் ஸீட் தான்....:-)))////

அவர் ஒழுங்காகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேச்சுக்கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்திருப்பதே நல்லது!:-)))

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
Waiting to read a blog about 5th house.
-Shankar////

நன்றி சங்கர்!

கோவை விமல்(vimal) said...

//பொறுமை மட்டும்தான் மிஞ்சியுள்ளதா? பாடம் எதுவும் நினைவில் மிஞ்சவில்லையா?//
பாடம் படிக்கத்தானே வந்தேன் வாத்தியரே உங்கள் வகுப்பில். படிக்காமல் விட்டு விடுவேனா? அருமை வாத்தியாரின் வகுப்பில்...!!!

என்னை போல சில LATE PICKUP (Diesal engine)இருப்பார்கள். கொஞ்சம் பொருத்தறுமையும்.

கோவை விமல்(vimal) said...

//அவர் ஒழுங்காகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேச்சுக்கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்திருப்பதே நல்லது!:-)))//

பின் வரிசை போய் விட்டேன், வகுப்பில் இனி யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன், தேர்வு சமையத்தில் கவனிக்கவும்...:-)))))

ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...

விமல், நானும் பின்னிருக்கையில் தான் உள்ளேன்.

ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...

//அவர் ஒழுங்காகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேச்சுக்கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்திருப்பதே நல்லது!:-)))//

பின் வரிசை போய் விட்டேன், வகுப்பில் இனி யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன், தேர்வு சமையத்தில் கவனிக்கவும்...:-)))))
///

நானும் பின்னிருக்கையில் தான் உள்ளேன். முடிந்தவரை பயில்வோம். முடியாதவற்றை ரசிப்போம்.

Anonymous said...

கவியரசின் பிறந்த நாளை முன்னிட்டுதான் இந்த பதிவா?

அன்புடன்
இராசகோபால்

தூக்கணாங்குருவி said...

கண்ணதாசனின் பரம ரசிகன் நான். ஜோதிடப்பாடத்துடன் சேர்ந்து அவரைப்பற்றியும் பதிவுகள் அமைந்தால் மிகவும் நன்று. (How could you type in Tamil so easily? It takes hours to type in Tamil Script).

கல்கிதாசன்

Vijay said...

//Vijay said...
//கோவை விமல்(vimal) said...
//வாத்யார் சுப்பையா சார் தான் புதிய வலைப்பதிவினருக்கு " inspiration "//
சரியாக சொன்னீகள், எனக்கு இது போல் வாத்தியார் அமையவில்லை எனது பள்ளி, கல்லூரி பருவத்தில். அதுதான் இப்பொழுது மாணவர் ஆகி உள்ளேனே...:-))))

வாத்தியாரின் வகுப்பறைக்கு ஒரு சிறிய சுட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும் உங்கள் வலைபூ-வில், பலருக்கு உபயோகபடும்.
வாத்யார் மாணவனின் வேண்டுகோள்

பரிசீலிிபீர தோழரே//

ஆசிரியப் பெருந்தகையின் அனுமதி பெற்று செய்கிறேன்
-விஜய்//ஆசிரியர் ஐயா,
வலைப்பதிவுலகில் வெற்றிப் பவனி வந்து கொண்டிருப்பவர்களின் தளத்துக்கு இணைப்பு பல்சுவையில் கொடுத்திருப்பது எளிதாக இருக்கிறது.அதை போல் தங்கள் மானவ்ர்கள், தங்களது தளத்துக்கு இணைப்பு கொடுக்க அனுமதிக்க வேண்டுகிறேன்.தங்கள் மாணவர்களை இது ஒருங்கிணைக்கும்.

-விஜய்
கோவை

கோவை விமல்(vimal) said...

//ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
நானும் பின்னிருக்கையில் தான் உள்ளேன். முடிந்தவரை பயில்வோம். முடியாதவற்றை ரசிப்போம்.//

அநேக நேரம் நானும் ரசித்து கொண்டுதான் இருக்கிறேன், நேரமின்மை காரணமாக.

இன்றுமுதல் வகுப்பறையில் ரசிக்கும் வரிசை மாணவர்கள் என்று அழைப்போம்.

என்ன வாத்தியரே சரிதானா?

Anonymous said...

வாத்தீ்யாரே எதிர்பார்க்கி்றேன் உங்கள் புதிய வரவை............ மு.செல்வராஜ் கரூர்

டி.பி.ஆர் said...

உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும்
உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.//

நிர்பந்தமாக மனிதனின் மீது இந்த உறவுகள் திணிக்கப்பட்டதால் தான் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகிறதோ!

தமாம் பாலா said...

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே என்று அன்றே சொன்னார் கவியரசர்!

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு என்பார்கள்

உங்கள் பிள்ளைகள், உங்களுக்கு சொந்தம் அல்ல. உலகுக்கு அவர்கள் வருவதற்கு நீங்கள் ஒரு காரண கர்த்தா மட்டுமே, அவர்கள் வாழ்வை நீங்கள் வாழ முயலவேண்டாம் என்கிறார் கவிஞர் கலீல் கிப்ரான்!!

குருஜி, சொந்த தொழிலுக்கு இடையே சொற்பநேரத்தில் ங்களுக்காக 'பொன் முட்டையிடும் வாத்தியார்'-நீங்கள்!!!

தம்பி விமல், பொறுத்தார் பூமி ஆள்வார் ;-D (தல மட்டுமே ஆழ்வார்!)

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//பொறுமை மட்டும்தான் மிஞ்சியுள்ளதா? பாடம் எதுவும் நினைவில் மிஞ்சவில்லையா?//
பாடம் படிக்கத்தானே வந்தேன் வாத்தியரே உங்கள் வகுப்பில். படிக்காமல் விட்டு விடுவேனா? அருமை வாத்தியாரின் வகுப்பில்...!!!
என்னை போல சில LATE PICKUP (Diesal engine)இருப்பார்கள். கொஞ்சம் பொருத்தறுமையும்.////

நன்று விமல்!

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//அவர் ஒழுங்காகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேச்சுக்கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்திருப்பதே நல்லது!:-)))//
பின் வரிசை போய் விட்டேன், வகுப்பில் இனி யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன், தேர்வு சமையத்தில் கவனிக்கவும்...:-)))))/////

இதுவும் நன்று!

SP.VR. SUBBIAH said...

/////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said..
விமல், நானும் பின்னிருக்கையில் தான் உள்ளேன்.////

/////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
//அவர் ஒழுங்காகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பேச்சுக்கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்திருப்பதே நல்லது!:-)))//
பின் வரிசை போய் விட்டேன், வகுப்பில் இனி யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன், தேர்வு சமையத்தில் கவனிக்கவும்...:-)))))
/// நானும் பின்னிருக்கையில் தான் உள்ளேன். முடிந்தவரை பயில்வோம். முடியாதவற்றை ரசிப்போம்.////

ஏதாவது ஒன்றைச் செய்தால் சரி!

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
கவியரசின் பிறந்த நாளை முன்னிட்டுதான் இந்த பதிவா?
அன்புடன்
இராசகோபால்/////

இல்லையில்லை! அவரின் பிறந்த நாள் ஜூன் 24

SP.VR. SUBBIAH said...

/////தூக்கணாங்குருவி said...
கண்ணதாசனின் பரம ரசிகன் நான். ஜோதிடப்பாடத்துடன் சேர்ந்து அவரைப்பற்றியும் பதிவுகள் அமைந்தால் மிகவும் நன்று. (How could you type in Tamil so easily? It takes hours to type in Tamil Script).
கல்கிதாசன்////

பல்சுவைப் பதிவில் வரும் நண்பரே!
ஈஸி டைப்பிங் எல்லாம் இல்லை! நானும் கஷ்டப்பட்டுத்தான் தட்டச்சுகிறேன்
ஒரு ஆர்வம்தான். கை வலிக்கவில்லை!

SP.VR. SUBBIAH said...

////Vijay said...
//Vijay said...
//கோவை விமல்(vimal) said...
//வாத்யார் சுப்பையா சார் தான் புதிய வலைப்பதிவினருக்கு " inspiration "//
சரியாக சொன்னீகள், எனக்கு இது போல் வாத்தியார் அமையவில்லை எனது பள்ளி, கல்லூரி பருவத்தில். அதுதான் இப்பொழுது மாணவர் ஆகி உள்ளேனே...:-))))
வாத்தியாரின் வகுப்பறைக்கு ஒரு சிறிய சுட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும் உங்கள் வலைபூ-வில், பலருக்கு உபயோகபடும்.
வாத்யார் மாணவனின் வேண்டுகோள்
பரிசீலிிபீர தோழரே//
ஆசிரியப் பெருந்தகையின் அனுமதி பெற்று செய்கிறேன்
-விஜய்//
ஆசிரியர் ஐயா,
வலைப்பதிவுலகில் வெற்றிப் பவனி வந்து கொண்டிருப்பவர்களின் தளத்துக்கு இணைப்பு பல்சுவையில் கொடுத்திருப்பது எளிதாக இருக்கிறது.அதை போல் தங்கள் மானவ்ர்கள், தங்களது தளத்துக்கு இணைப்பு கொடுக்க அனுமதிக்க வேண்டுகிறேன்.தங்கள் மாணவர்களை இது ஒருங்கிணைக்கும்.
-விஜய்
கோவை/////

இதற்கெல்லாம் அனுமதி எதற்கு? நன்றாக சுட்டியைக் கொடுங்கள்.

http://classroom2007.blogspot.com
http://devakottai.blogspot.com

Blogger Layout இல் இதற்கான வசதி உள்ளது!

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
வாத்தியாரே எதிர்பார்க்கி்றேன் உங்கள் புதிய வரவை............ மு.செல்வராஜ் கரூர்////

திங்களன்று எழுதுகிறேன்

SP.VR. SUBBIAH said...

////டி.பி.ஆர் said...
உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும்
உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.//
நிர்பந்தமாக மனிதனின் மீது இந்த உறவுகள் திணிக்கப்பட்டதால் தான் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகிறதோ!////

தான் வளரும்வரை (21 வயது வரை) அதை நிர்ப்பந்தமாக நினைக்காத மனிதன் - அதுவரை அவன் வளர அவனுக்கு உதவி செய்த பெற்றோர், சகோதர உறவுகளை - பின்னால் ஏன் நிர்ப்பந்தமாக நினைக்கிறான்? அதனால்தானே விரிசல்கள்.

சுயநலமும், நன்றியின்மையுமே அதற்குக் காரணம் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////தமாம் பாலா said...
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே என்று அன்றே சொன்னார் கவியரசர்!
தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு என்பார்கள்
உங்கள் பிள்ளைகள், உங்களுக்கு சொந்தம் அல்ல. உலகுக்கு அவர்கள் வருவதற்கு நீங்கள் ஒரு காரண கர்த்தா மட்டுமே, அவர்கள் வாழ்வை நீங்கள் வாழ முயலவேண்டாம் என்கிறார் கவிஞர் கலீல் கிப்ரான்!!////

பச்சை இலையும் ஒரு நாள் பழுத்த இலையாக மாறும். அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியும்!

///குருஜி, சொந்த தொழிலுக்கு இடையே சொற்பநேரத்தில் எங்களுக்காக 'பொன் முட்டையிடும் வாத்தியார்'-நீங்கள்!!!////

பொன்முட்டை எல்லாம் இல்லை! இது சதாரண முட்டைதான்:-))))

கோவை விமல்(vimal) said...

//தமாம் பாலா said...
தம்பி விமல், பொறுத்தார் பூமி ஆள்வார் ;-D (தல மட்டுமே ஆழ்வார்!)//

தல-யோ விஜய்-யோ, இந்த போட்டிக்கு நான் வரவில்லை, இறை அருளும் வாழ்க்கை நெறியும் தான் கற்கவந்தேன் இவ்விடம்.

எல்லாம் அவன் செயல் ..:-)))

தியாகராஜன் said...

வணக்கம் ஐயா.
கவியரசரை பற்றி எழுதுவதென்றால் தங்களுக்கு முக்கனிகளையும் சுவைப்பது போன்றது.கவிஞரைப் பற்றி தாங்கள் எழுதுவதைப் படிக்கும் இளையோருக்கு(தாங்களும் இதில் அடக்கம்) தேன் சுவப்பது போன்றது.
நாங்கள் அனைவரும் அவரவர் முன் ஜென்மம குறித்தறிந்துகொள்ள ஆவலாய் உள்ளோம்.

siv said...

வணக்கம் ஐயா
வகுப்பறை மிகவும் கலகலப்பாகவும் ஆர்ப்பாட்டமாகவும் போகின்றது வாழ்துக்கள் ஐயா. ஆரம்பத்தை விட இப்போது அதிகமாணவர்கள் வந்துபடித்துப் போகின்றார்கள் போல் தெரிகின்றது. வருகைப்பதிவேடும் கூடிக்கொண்டே போகின்றது. comment ம் அதிகளவாகவே இருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா.
மேலும் COMMENT பகுதியில் கூட பல விடையங்கள் அறியகூடியதாகவும் உள்ளது நன்றி ஐயா

மாணவன்
சிவா

SP.VR. SUBBIAH said...

////கோவை விமல்(vimal) said...
//தமாம் பாலா said...
தம்பி விமல், பொறுத்தார் பூமி ஆள்வார் ;-D (தல மட்டுமே ஆழ்வார்!)//
தல-யோ விஜய்-யோ, இந்த போட்டிக்கு நான் வரவில்லை, இறை அருளும் வாழ்க்கை நெறியும் தான் கற்கவந்தேன் இவ்விடம்.
எல்லாம் அவன் செயல் ..:-)))////

மொக்கைப் பதிவு போல இது மொக்கைப் பின்னூட்டமா?:-))))

SP.VR. SUBBIAH said...

////தியாகராஜன் said...
வணக்கம் ஐயா.
கவியரசரை பற்றி எழுதுவதென்றால் தங்களுக்கு முக்கனிகளையும் சுவைப்பது போன்றது.கவிஞரைப் பற்றி தாங்கள் எழுதுவதைப் படிக்கும் இளையோருக்கு(தாங்களும் இதில் அடக்கம்) தேன் சுவப்பது போன்றது.
நாங்கள் அனைவரும் அவரவர் முன் ஜென்மம குறித்தறிந்துகொள்ள ஆவலாய் உள்ளோம்.////

அவரவர் முன்ஜென்மமா? இல்லை தியாகராஜன் பொதுவாகத்தான் எழுதப்போகிறேன். அதுவும் பூர்வ புண்ணியத்தை மட்டும்தான்!

SP.VR. SUBBIAH said...

siv said...
வணக்கம் ஐயா
வகுப்பறை மிகவும் கலகலப்பாகவும் ஆர்ப்பாட்டமாகவும் போகின்றது வாழ்துக்கள் ஐயா. ஆரம்பத்தை விட இப்போது அதிகமாணவர்கள் வந்துபடித்துப் போகின்றார்கள் போல் தெரிகின்றது. வருகைப்பதிவேடும் கூடிக்கொண்டே போகின்றது. comment ம் அதிகளவாகவே இருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா.
மேலும் COMMENT பகுதியில் கூட பல விடையங்கள் அறியகூடியதாகவும் உள்ளது நன்றி ஐயா
மாணவன்
சிவா////

எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் (வகுப்பறை மாணவர்கள்) காரணம்!
மாணவர்கள் எவ்வழி வாத்தியார் அவ்வழி:-)))))

கோவை விமல்(vimal) said...

//மொக்கைப் பதிவு போல இது மொக்கைப் பின்னூட்டமா?:-))))//

வாத்தியரே இந்த மொக்கையை நான் ஆரம்பிக்கவில்லை.
என் பின்னூட்ாத்திற்கு மன்னிக்கவும்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன். சில பிறப்புக்கள் பந்த பாசத்தினால்
உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன்
நிர்ணயித்திருக்கிறான் போலும்!//

வாத்தியாரே முற்றிலும் உண்மை.

என்னளவில் உண்மையாகவே நடந்ததும்கூட.. ஆனால் என்ன செய்ய? உடன் பிறந்து தொலைத்துவிட்டோமே என்பதால் சகித்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நமது கவியரசர் தொடாமல் சென்ற வாழ்க்கைப் பாடங்கள் எதுவுமில்லை..

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு
உணர்வை வழங்கி இருக்கிறான் இறைவன். சில பிறப்புக்கள் பந்த பாசத்தினால்
உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன்
நிர்ணயித்திருக்கிறான் போலும்!//
வாத்தியாரே முற்றிலும் உண்மை.
என்னளவில் உண்மையாகவே நடந்ததும்கூட.. ஆனால் என்ன செய்ய? உடன் பிறந்து தொலைத்துவிட்டோமே என்பதால் சகித்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நமது கவியரசர் தொடாமல் சென்ற வாழ்க்கைப் பாடங்கள் எதுவுமில்லை./////

உண்மை! தமிழரே!
எனக்கு ஆசான் அவர்தான்!