மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.6.08

Astrology அடுத்த மாற்றம் எப்போது?

Astrology அடுத்த மாற்றம் எப்போது?

‘அடுத்தது என்ன?” என்று தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும்.
திரைப்படம், அல்லது வாய்மொழிக்கதை , வாழ்க்கை நிகழ்வுகள் என்று எதைப்பற்றியதாக
இருந்தாலும் அடுத்து நடக்க இருப்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையானது.

அதுவும் சொந்த வாழ்க்கை பற்றியதாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா?

ஜோதிடத்தில் பெரிய காய்களை நகர்த்துவது சனிதான், ஆகவே சனி எப்பொழுதெல்லாம்
இடம் மாறுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாற்றங்களும் நிகழும். இங்கே இடமாற்றம்
என்பது சனி ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்கு இடம்பெயர்வதைக் குறிக்கும்.

சனி, வானவெளியில் ஒரு முழுச்சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் சுமார்
30 ஆண்டுகள் 30 ஆண்டுகள் x 12 மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 டிகிரிகள
= மாதம் ஒன்றிற்கு ஒரு டிகிரி

ஜோதிடத்தில் விருப்பம் உள்ளவர்கள் மிகப் பெரிய கோள்களான சனி மற்றும் குரு ஆகிய
இரண்டு கிரகங்களும் இன்றைய தேதியில் எங்கே உள்ளன என்பதை நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும்!

சனி இன்றைய தேதியில் எங்கே உள்ளது?

சிம்ம ராசியில் உள்ளது

சிம்ம ராசியில் 128.48 டிகிரியில் உள்ளது.

அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் எல்லாம் பிட்ஸா காலத்தவர்கள், பஞ்சாங்கம் தெரியாது வேறு வழி சொல்லுங்கள்!

வழி இருக்கிறது

ஒரு இணையதளம் இருக்கிறது!

இந்த இணைய தளத்திற்குச் சென்று இன்றைய தேதியில் Mr.Chennai என்று குறிப்பிட்டு
பிறந்த நேரம் காலை 6 மணி அல்லது உங்களுக்குத் தோதான நேரத்தையும் - உடன்
சென்னையின் அட்சரேகை (Latitude) 13.05 North மற்றும் தீர்க்கரேகை (Longitude)
80.18 East கொடுத்தால் அது அன்றைய கிரக நிலைமையைக் கொடுக்கும். அடித்துப்
பாருங்கள்

இன்றைய தேதிக்கு சனி : 128.20 டிகிரியில் உள்ளது. அதாவது சிம்மராசியின் 8..2
டிகிரியில் உள்ளது சரி, அது எப்போது சிம்மத்தை விட்டு கன்னி ராசிக்கு இடம் பெயரும்?

15.09.2009 அன்று பெயர்கிறது. அதையும் உள்ளிட்டுப்பாருங்கள். அந்தத் தேதியில் சனி
150.34 என்ற டிகிரியில் இருக்கும்

நட்சத்திரங்களுக்கிடையே உள்ள இடைவெளி சம அளவில் இல்லை. சந்திரன் சில
நட்சத்திரங்களை 22 மணி நேரங்களிலும், சில நட்சத்திரங்களை 25 மணி நேரங்களிலும்
கடக்கும். அதுபோல சனியின் சுழற்சியின் வேகம் நேரான வேகம், வக்கிரகதியில்
(பின்சுழற்சி) என்று வித்தியாசம் உடையதாக இருக்கும். அதனால் ஒரு ராசியைக்

கடக்கும் காலம் துல்லியமாக 30 மாதங்கள் என்று இருக்காது. கூடுதல் குறைச்சல் இருக்கும்

இப்போது கடகம், சிம்மம், கன்னி ஆகிய மூன்று ராசிக்காரர்களும் முறையே கழிவுச் சனி,
ஜென்மச்சனி, விரையச்சனி என்று மூன்று வெவ்வேறு நிலைகளில் துன்பங்களைச் சந்தித்துக்
கொண்டிருப்பார்கள். அதேபோல மகர ராசிக்காரர்கள் அஷ்டமச்சனி (8ஆம் இடத்துச் சனி)
யால் சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் ஏற்படும்.

இதையே அஷ்டகவர்க்கத்திலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்துவரும் மாற்றம் நல்லதா? அல்லது கெட்டதா? என்று அதில் தெரியும்.

இப்போது சனி இருக்கும் சிம்மத்தைவிட அடுத்து மாற இருக்கும் கன்னி ராசியில் அதிக
பரல்கள் என்றால் நல்லது. ஏற்றமாக இருக்கும். இல்லை அதை விடப் பரல்கள் குறைவு என்றால்
இறக்கமான காலம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவ்வாறு அடுத்து வரும் ராசியின் பரல்களின்
அளவு ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பரான ஏற்றமாக இருக்கும். அடுத்து வரும் ராசியின்
பரல்களின் அளவு ஒரேயடியாகக் குறைவாக இருந்தால் சூப்பராக அடி விழுகும்

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்.

படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

------------------------------------------------------------------
கிரகங்களின் கோச்சார நிலைமையை (Transit Position) தெரிந்து கொள்ள மற்றொரு
இணையதளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளேன். இதில் சுற்றி வளைக்கும் வேலையெல்லாம்
கிடையாது. உடனே தெரிந்து கொள்லலாம். இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும்,
இதைத் தோண்டித் துருவி அதில்

கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற விஷயங்களையும் பாருங்கள்

அதற்கான சுட்டி இங்கே!


________________________________________

படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

இது நன்றாக மனதில் வாங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். ஆகவே இன்று
இது மட்டும்தான். அடுத்த பாடம் - இரண்டு நாட்கள் கழித்து வரும்

இது திங்கட்கிழமைக்கான பாடம். 12 மணி நேரம் முன்னதாகவே பதிவிட்டுள்ளேன்

முன்னதாகக் கொடுத்தால் தவறில்லையல்லவா? என்ன சொல்கிறீர்கள்?

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

33 comments:

 1. Attendance: Present sir.

  -Shankar

  ReplyDelete
 2. அய்யா, அதிகம் வேலைப்பளு காரணமாக நேரமில்லை. இருந்தாலும், இதுவரை எல்லாப் பதிவுகளையும் படித்து விட்டேன்.

  அதுவும் இன்றைய பதிவு மிகப் பயனுள்ளது; ராசி பலன்களை மிக எளிதாக அறியக் கொடுக்கிறது. எனக்கு இப்போது நடக்கும் விரயச்சனி ஊஞ்சலாட்டமாய் இருக்கிறது.... நல்லதோ கெட்டதோ, உங்கள் பதிவு அறிந்து கொள்ள உதவுகிறது. அளந்து கொடுப்பவன் கொடுக்கிற படி கொடுக்கத்தான் போகிறான். ஏதோ நம் மன நிம்மதிக்கு! நன்றி.

  ஒரு கேள்வி: அஸ்ட்ரோஜ்யோதி பதிவுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள். சனி இப்பொழுது இருப்பது சிம்மம் (உங்கள் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்) என்று ஒரு லிங்கிலும், சனி இப்போழுது இருப்பது கடகம் என்று மற்ற லிங்குகளிலும் அளித்துள்ளார்கள். என்னைப் போல் ட்யூப்லைட்டுக்காக ஒரு முன்னறிவிப்பு.

  ReplyDelete
 3. ////புருனோ Bruno said...
  உள்ளேன் ஐயா///
  வருகைப் பதிவு மட்டும்தானா டாக்டர்? படித்தீர்களா?

  ReplyDelete
 4. ////Anonymous said...
  Attendance: Present sir.
  -Shankar/////

  வருகைப் பதிவு மட்டும்தானா சங்கர்? படித்தீர்களா?

  ReplyDelete
 5. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  அய்யா, அதிகம் வேலைப்பளு காரணமாக நேரமில்லை. இருந்தாலும், இதுவரை எல்லாப் பதிவுகளையும் படித்து விட்டேன்.
  அதுவும் இன்றைய பதிவு மிகப் பயனுள்ளது; ராசி பலன்களை மிக எளிதாக அறியக் கொடுக்கிறது. எனக்கு இப்போது நடக்கும் விரயச்சனி ஊஞ்சலாட்டமாய் இருக்கிறது.... நல்லதோ கெட்டதோ, உங்கள் பதிவு அறிந்து கொள்ள உதவுகிறது. அளந்து கொடுப்பவன் கொடுக்கிற படி கொடுக்கத்தான் போகிறான். ஏதோ நம் மன நிம்மதிக்கு! நன்றி.
  ஒரு கேள்வி: அஸ்ட்ரோஜ்யோதி பதிவுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள். சனி இப்பொழுது இருப்பது சிம்மம் (உங்கள் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்) என்று ஒரு லிங்கிலும், சனி இப்போழுது இருப்பது கடகம் என்று மற்ற லிங்குகளிலும் அளித்துள்ளார்கள். என்னைப் போல் ட்யூப்லைட்டுக்காக ஒரு முன்னறிவிப்பு./////

  நீங்கள் சொல்லும் கடகம் சமாச்சாரம் பழைய பக்கமாக இருக்கலாம். அந்த தளத்துக்கார்கள் அதை அப்டேட் செய்யாமல் விட்டிருக்கலாம். அவர்களே முதல் பக்கத்தில் சிம்மத்தில் சனி 9.9.2009 வரை என்று கொடுத்திருப்பதைப் பாருங்கள் சகோதரி!

  ReplyDelete
 6. ///வருகைப் பதிவு மட்டும்தானா சங்கர்? படித்தீர்களா?///

  Yes Sir, I did...

  One reminder: Will we be having kalasarpa yoga/dosha class sometime soon? (Dont mistake me by interpreting your order of class.)

  -Shankar

  ReplyDelete
 7. Dear Sir
  Thank you for your useful lesson

  s arul

  ReplyDelete
 8. /////Anonymous said...
  ///வருகைப் பதிவு மட்டும்தானா சங்கர்? படித்தீர்களா?///
  Yes Sir, I did...
  One reminder: Will we be having kalasarpa yoga/dosha class sometime soon? (Dont mistake me by interpreting your order of class.)
  -Shankar//////
  கால சர்ப்ப தோஷம்/யோகம் சற்றுப் பெரிய பாடம் - நேரம் கிடைக்கும்போது எழுதிப் பதிவிடுகிறேன் நண்பரே!

  ReplyDelete
 9. //////s arul said...
  Dear Sir
  Thank you for your useful lesson
  s arul//////

  நன்றி நண்பரே உங்கள் பாராட்டிற்கு!

  ReplyDelete
 10. //அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவ்வாறு அடுத்து வரும் ராசியின் பரல்களின்
  ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பரான ஏற்றமாக இருக்கும். அடுத்து வரும் ராசியின்
  பரல்களின் ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பராக அடி விழுகும்//

  ???

  ReplyDelete
 11. புருனோ Bruno said...
  //அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவ்வாறு அடுத்து வரும் ராசியின் பரல்களின்
  ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பரான ஏற்றமாக இருக்கும். அடுத்து வரும் ராசியின்
  பரல்களின் ஒரேயடியாக அதிகமாக இருந்தால் சூப்பராக அடி விழுகும்//

  ???//////
  குறைவாக என்று இருக்க வேண்டும். திருத்திவிட்டேன் டாக்டர்
  அடுத்து வரும் ராசியின் பரல்களின் அளவு ஒரேயடியாகக் குறைவாக இருந்தால் சூப்பராக அடி விழுகும்
  சுட்டிக்காட்டியமைக்கு நன்றி டாக்டர்!

  ReplyDelete
 12. குருவே,

  பத்திரிகைகளில் வரும் பலன்கள் போது பலன்கள் மட்டும்தானா? அஷ்டவர்க்கத்தின் பரல் எண்ணிக்கைதான் பலன்களை தீர்மானம் செய்கின்றதா?

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 13. ஐயா, தாங்கள் முன்பே கால சர்ப்ப தோஷம்/யோகம்ப்பற்றி எழுதியுள்ளிர்.
  http://classroom2007.blogspot.com/2007/08/34.html

  ReplyDelete
 14. நண்பரே,ஜாதக ஹோராவில் அஷ்டவர்க்கப் பரல்களைக் கணிப்பது பற்றி இன்னும் சிறிது விளக்கமாகக் கூற இயலுமா?

  அதில் ஒன்பது பரல் கட்டங்கள் இருக்கின்றன,முதல் பரல் கட்டம் SUV என்று இருக்கிறது;பின்னர் இருக்கும் 8 பரல் கட்டங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் என்று தோன்றுகிறது.

  இவை எல்லாம் ராசியின் கிரக நிலைகளுக்கான பரல்களா?

  எனில் அம்சத்துக்கான பரல்கள் தனியாக உள்ளனவா?

  ராசிக்கும் அம்சத்திற்கும் உள்ள link என்ன?

  சில கேள்விகள் வெகு அடிப்படியாக இருக்கலாம்,விளக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 15. ஆசிரியரின் சனி/ குருப் பெயர்ச்சி பற்றிய விளக்கப் பதிவுக்கு நன்றிகள்

  15.9.2009 அன்று ந்டைபெறும் சனிப் பெயர்ச்சி தசா புத்தி( சனி,சனி) அவர்து தொழிலில் என்ன மாற்றம்/ஏற்றம் தரும்.

  உதாரணமாக:

  லக்ணம்: மகரம்
  ராசி: ரிஷபம்
  ஜன்மதிசை இருப்பு: சூரியதிசை 3 மாதம்,3 நாள்
  நடப்பு திசை: சனி
  நடப்பு புத்தி: சனி( மார்ச் 2008 முதல்)

  ராசிக் கட்டம்; லக்ணத்திற்கு 10 வது இடத்தில் சனி

  குறிப்பு: இவ்வளவு விவரமாகச் புரியச் செய்தமைக்கு ஆசிரியருக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. vanakkam Ayya,

  Very useful article, Thaks.
  GK, Blr.

  ReplyDelete
 17. ஐயா,

  சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி wholesales ராசிபலன்களில், தசாபுக்தி,ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறும் என்று கூறுவார்கள்.

  உங்கள் இந்த பதிவின் மூலம் அந்த சிதம்பர ரகசியத்தையும் உடைத்து சொல்லி இருக்கின்றீர்கள்.

  சுட்டிகளையும் பார்த்து விட்டு எனது சந்தேகங்கள் வந்தால் கேட்கிறேன்.

  மிக்க நன்றி, குரு அவர்களே :-))

  ReplyDelete
 18. வணக்கம் வாத்தியயரய்யா,

  நன்றாக புரியும் படி விளக்கியமைக்கு நன்றி. ஆனாலும் இந்த அஷ்டம சனியை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா? ஒருவரின் ஜாதகத்தில் எத்தனை முறை சனி வரும்?

  ReplyDelete
 19. //////Anonymous said...
  குருவே,
  பத்திரிகைகளில் வரும் பலன்கள் பொதுப் பலன்கள் மட்டும்தானா? அஷ்டவர்க்கத்தின் பரல் எண்ணிக்கைதான் பலன்களை தீர்மானம் செய்கின்றதா?
  அன்புடன்
  இராசகோபால்////

  பத்திரிக்கைகளில் வரும் பலன்கள் 110 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானது!

  ReplyDelete
 20. ///////Anonymous said...
  ஐயா, தாங்கள் முன்பே கால சர்ப்ப தோஷம்/யோகம்ப்பற்றி எழுதியுள்ளிர்.
  http://classroom2007.blogspot.com/2007/08/34.html///

  தகவலுக்கு நன்றி. அதைவிட இன்னும் விரிவாக எழுத ஆசை!

  ReplyDelete
 21. ///////அறிவன்#11802717200764379909 said...
  நண்பரே,ஜாதக ஹோராவில் அஷ்டவர்க்கப் பரல்களைக் கணிப்பது பற்றி இன்னும் சிறிது விளக்கமாகக் கூற இயலுமா?////

  பரல்களைக் கணிக்கும் முறை பெரிய பாடம். பின்பு ஒரு நாள் Scan செய்து தருகிறேன். இப்போதைக்கு மென்பொருளைப் பயன்படுத்துங்கள்

  ////அதில் ஒன்பது பரல் கட்டங்கள் இருக்கின்றன,முதல் பரல் கட்டம் SUV என்று இருக்கிறது;பின்னர் இருக்கும் 8 பரல் கட்டங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் என்று தோன்றுகிறது.
  இவை எல்லாம் ராசியின் கிரக நிலைகளுக்கான பரல்களா?
  எனில் அம்சத்துக்கான பரல்கள் தனியாக உள்ளனவா?
  ராசிக்கும் அம்சத்திற்கும் உள்ள link என்ன?
  சில கேள்விகள் வெகு அடிப்படியாக இருக்கலாம்,விளக்க வேண்டுகிறேன்./////

  1. SUV என்பது மொத்தப் பரல்களின் எண்ணிக்கை.சர்வ அஷ்டவக்கம் என்பதின் சுருக்கம் அது!
  2. பரல்கள் அனைத்துமே ராசிக்கு மட்டும்தான் அம்சத்திற்குக் கிடையாது.
  3. அம்சம் என்பது1/9 division of Rasi ராசியைச் Zoom பண்ணி பார்க்க உதவும்.
  ராசியில் நீசமான கிரகம் அமசத்தில் நட்பு வீட்டிலோ அல்லது அச்சமாக வாய்ப்பிருக்கிறது
  அதைவைத்துப் பலனைத் துல்லியமாகச் சொல்லலாம்

  ReplyDelete
 22. ///////Anonymous said...
  ஆசிரியரின் சனி/ குருப் பெயர்ச்சி பற்றிய விளக்கப் பதிவுக்கு நன்றிகள்
  15.9.2009 அன்று ந்டைபெறும் சனிப் பெயர்ச்சி தசா புத்தி( சனி,சனி) அவர்து தொழிலில் என்ன மாற்றம்/ஏற்றம் தரும்.
  உதாரணமாக:
  லக்ணம்: மகரம்
  ராசி: ரிஷபம்
  ஜன்மதிசை இருப்பு: சூரியதிசை 3 மாதம்,3 நாள்
  நடப்பு திசை: சனி
  நடப்பு புத்தி: சனி( மார்ச் 2008 முதல்)
  ராசிக் கட்டம்; லக்ணத்திற்கு 10 வது இடத்தில் சனி
  குறிப்பு: இவ்வளவு விவரமாகச் புரியச் செய்தமைக்கு ஆசிரியருக்கு நன்றிகள்./////

  உங்கள் கூற்றுப்படி உங்களுக்கு 52 வயது நடக்கிறது. சனி உச்சமாக உள்ளது. அது சுய புக்தி முடிந்த பிறகு (3 வருடங்கள்) நல்ல பலனைக் கொடுக்கும். அதுவும் அதன் சுயவர்கத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் இல்லை. நடப்புப் பலன்களே தொடரும்!
  இவ்வளவு சொல்லியிருக்கிறீகள் உங்கள் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்?

  ReplyDelete
 23. /////கனிமொழி said...
  vanakkam Ayya,
  Very useful article, Thaks.
  GK, Blr./////

  நன்றி ஜி.கே!

  ReplyDelete
 24. ///////தமாம் பாலா said...
  ஐயா,
  சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி wholesales ராசிபலன்களில், தசாபுக்தி,ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறும் என்று கூறுவார்கள்.
  உங்கள் இந்த பதிவின் மூலம் அந்த சிதம்பர ரகசியத்தையும் உடைத்து சொல்லி இருக்கின்றீர்கள்.
  சுட்டிகளையும் பார்த்து விட்டு எனது சந்தேகங்கள் வந்தால் கேட்கிறேன்.
  மிக்க நன்றி, குரு அவர்களே :-))/////

  நன்றி தமாம் பாலா அவர்களே!

  ReplyDelete
 25. //
  SP.VR. SUBBIAH said...
  ///////Anonymous said...
  ஐயா, தாங்கள் முன்பே கால சர்ப்ப தோஷம்/யோகம்ப்பற்றி எழுதியுள்ளிர்.
  http://classroom2007.blogspot.com/2007/08/34.html///

  தகவலுக்கு நன்றி. அதைவிட இன்னும் விரிவாக எழுத ஆசை!//

  ஆசிரியர் ஐயா,

  காலசர்ப்பம் தோசம் பற்றிய பதிவு பலர் சந்தேகங்களை நிவர்த்திசெய்யும்.
  பலர் பலவிதாமாய் சொல்கின்றனர்.

  அனுபவ ரீதியாக சொல்கிறென் கால சர்ப்ப தோச ஜாதகர் சிறு/இளைய வயதில் என்ன கஜ கர்ணம் அடித்தாலும் முன்னேற்றத்தடைகள் ஏராளம்.

  வாய்ப்பு வசதிகள் அதிகம் இருந்தும் ,பெற்றோர் உறுதுணையிருந்தும் கல்வி /வேலைவாய்ப்பு/திருமணம் முதலிய பாக்கியங்களில் தேக்கம்.


  கண்ணப்பநாயனார் திருத் தலத்தில்(காளஹஸ்தி) ராகு கால பூஜை இதன் பாதிப்பை சிறிதளவு சரி செய்யும் என்கிறர்கள்.

  35 வயதுக்கு மேல் நிலமை மாறூம் அதுவும் அவரவர் தசா புத்தி பலன்,பரல்களின் மதிப்பு படி.

  ( நான் சொல்வது சரியா சார்- எல்லம் உங்கள் பதிவை /வகுப்பில் படித்தால் தான்.நன்றி)

  காலஸர்ப்ப காலத்தில் வரும் சுக்கிரதிசை கூட ஏமாற்றிவிடுவது போல் உள்ளதே.

  special class ஆரம்பம் எப்போது சார்.

  ReplyDelete
 26. ஐயா,

  கிரக நிலைகள் தற்போது நாட்காட்டி காலண்டரிலேயே (இரண்டும் ஒன்றுதானே) வருகிறது. அதற்கு பஞ்சாங்கம் தேடவேண்டியதில்லை.

  என்ன சந்திரன் மட்டும் அதில் போடுவதில்லை 2. 1/2 நாளுக்கு ஒருமுறை மாறுவதால் போட முடியாமல் இருக்கலாம்

  மற்றபடி நானும் ஒரு உள்ளேன் ஐயா போடுகிறேன்

  ReplyDelete
 27. ////திருநெல்வேலி கார்த்திக் said...
  //
  SP.VR. SUBBIAH said...
  ///////Anonymous said...
  ஐயா, தாங்கள் முன்பே கால சர்ப்ப தோஷம்/யோகம்ப்பற்றி எழுதியுள்ளிர்.
  http://classroom2007.blogspot.com/2007/08/34.html///
  தகவலுக்கு நன்றி. அதைவிட இன்னும் விரிவாக எழுத ஆசை!//
  ஆசிரியர் ஐயா,
  காலசர்ப்பம் தோசம் பற்றிய பதிவு பலர் சந்தேகங்களை நிவர்த்திசெய்யும்.
  பலர் பலவிதாமாய் சொல்கின்றனர்.
  அனுபவ ரீதியாக சொல்கிறென் கால சர்ப்ப தோச ஜாதகர் சிறு/இளைய வயதில் என்ன கஜ கர்ணம் அடித்தாலும் முன்னேற்றத்தடைகள் ஏராளம்.
  வாய்ப்பு வசதிகள் அதிகம் இருந்தும் ,பெற்றோர் உறுதுணையிருந்தும் கல்வி /வேலைவாய்ப்பு/திருமணம் முதலிய பாக்கியங்களில் தேக்கம்.
  கண்ணப்பநாயனார் திருத் தலத்தில்(காளஹஸ்தி) ராகு கால பூஜை இதன் பாதிப்பை சிறிதளவு சரி செய்யும் என்கிறர்கள்.
  35 வயதுக்கு மேல் நிலமை மாறூம் அதுவும் அவரவர் தசா புத்தி பலன்,பரல்களின் மதிப்பு படி.
  ( நான் சொல்வது சரியா சார்- எல்லம் உங்கள் பதிவை /வகுப்பில் படித்தால் தான்.நன்றி)
  காலஸர்ப்ப காலத்தில் வரும் சுக்கிரதிசை கூட ஏமாற்றிவிடுவது போல் உள்ளதே.
  special class ஆரம்பம் எப்போது சார்.//////

  Special Class தனியாக இல்லை. அந்த எண்ணம் கைவிடப்பட்டது (நபர் ஒருவரின் அறிவுரையின்படி)
  எல்லாப் பாடங்களும் வகுப்பறையில்தான் நடக்கும்!

  ReplyDelete
 28. உள்ளேன் ஐயா...

  ReplyDelete
 29. ///////அறிவன்#11802717200764379909 said...

  //////ஐயா said...

  ராசிக்கும் அம்சத்திற்கும் உள்ள link என்ன?
  ராசியில் நீசமான கிரகம் அமசத்தில் நட்பு வீட்டிலோ அல்லது அச்சமாக வாய்ப்பிருக்கிறது/////

  அல்லது உச்சமாகவோ தானே ஐயா..
  இப்படி இருந்தால் அதை நன்மை என்று கருதலாமா?

  இதே போல ராசியில் நன்றாக இருந்து நவாம்சத்தில் இல்லையென்றால் தீமையா?

  தெளிவுபடுத்த இயலுமா ஐயா?

  ReplyDelete
 30. //////விக்னேஸ்வரன் அடைக்கலம் said...
  உள்ளேன் ஐயா.../////

  வெறும் வருகைப்பதிவு மட்டுமா?

  ReplyDelete
 31. தமாம் பாலா said..
  ///////அறிவன்#11802717200764379909 said..
  //////ஐயா said...
  ராசிக்கும் அம்சத்திற்கும் உள்ள link என்ன?
  ராசியில் நீசமான கிரகம் அமசத்தில் நட்பு வீட்டிலோ அல்லது உச்சமாக வாய்ப்பிருக்கிறது/////
  அல்லது உச்சமாகவோ தானே ஐயா..
  இப்படி இருந்தால் அதை நன்மை என்று கருதலாமா?
  இதே போல ராசியில் நன்றாக இருந்து நவாம்சத்தில் இல்லையென்றால் தீமையா?
  தெளிவுபடுத்த இயலுமா ஐயா?///////

  உச்சமாக இருந்தால் அதை நன்மை என்று கருதலாம். அதே போல ராசியில் நன்றாக இருந்து நவாம்சத்தில் இல்லை யென்றால் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்! அதற்குத்தான் நவாம்சம் It is like fine tuning of a radio station

  ReplyDelete
 32. எனக்கு இந்த சமயத்தில் மிக பயனுள்ள பதிவு. நன்றி குருவே!

  நான் ஒரு சேதி (மெயிலில்) அனுப்பி தங்கள் ஆசி வேண்டினேன். வந்ததா?னு தெரியலை.


  //Special Class தனியாக இல்லை. அந்த எண்ணம் கைவிடப்பட்டது (நபர் ஒருவரின் அறிவுரையின்படி)
  //

  அப்படியா சேதி? :)

  ReplyDelete
 33. //அப்படியா சேதி? :)//

  ஆமாம்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com