நாட்டு வைத்தியர் ஒருவர் இருந்தார். நாட்டு வைத்தியம் என்றால் மூலிகைகளைக்
கொண்டு வைத்தியம் செய்பவர். அவர் இருந்த இடம் ஒரு கிராமம்.
கிராமத்துக் கதை என்பதையும், வருடத்தையும் வைத்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்
இது என் சொந்த சரக்கல்ல - என் தந்தையார் சொல்லிய கதைகளில் ஒன்று என்று!
கதை நடந்த காலம் ‘சபாபதி' திரைப்படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்த காலம்.
அதாவது 1941ஆம் வருடம்.
அந்தப் படத்தில் பள்ளிக்கூட வாத்தியார் பாத்திரத்தில் வரும் திருவாளர் கே.சாரங்கபாணி
போலவே நமது வைத்தியரும் அச்சு அசலாக அப்படியே இருப்பார். வயது 50
அக்கம் பக்கத்துக் கிராமத்துக்காரர்கள் எல்லாம் தேடி வருவார்கள். அந்தக் காலத்தில்
மாதம் முப்பது ரூபாய் கிடைத்தாலே பெரிய வருமானம். அப்போது விலைவாசியும்
நாம் நம்ப முடியாத அளவிற்குக் குறைவாகவே இருந்தது.
ஒரு அணாவிற்கு (இன்றைய மதிப்பு ஆறு நயா பைசா) நாஷ்டாவை முடித்து விடலாம்
நாஷ்டா என்றால் காலைப் பலகாரம்.மற்றதை நீங்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்
வைத்தியர் நாளொன்றுக்கு பத்து ரூபாய் பார்த்துவிடுவார். பத்து ரூபாய் என்பது 160 அணா.
தலைக்கு இரண்டணா நாலணா என்று வருகிறவர்கள் கொடுப்பார்கள்
அதோடு சிலர், அரிசி, பருப்பு, புளி, காய்கறி என்று தங்கள் தோட்டத்தில் விளயும்
பொருட்களையும் கொண்டு வந்து கொட்டிவிடுவார்கள்.
அதனால் வைத்தியர் மதிப்பு, மரியாதை, செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தார்
வீட்டின் முன் பகுதியில் கிளினிக். தன்னுடைய ஒரே மகனையும் தயார் செய்து
வைத்திருந்தார். தந்தையோடு சேர்ந்து அவனும் வைத்தியம் பார்ப்பான்
வைத்தியர் ஒரு சீட்டாட்டப் பைத்தியம். மூலிகைகளைத்தவிர அவர் மண்டையில்
எப்போதும் கிங், க்யூன், ஜாக்கிதான் ஓடிக்கொண்டிருக்கும்.
அலாரம் வைக்காமலேயே காலை ஐந்து மணிக்கெல்லாம் டானென்று எழுந்து விடுவார்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உள்ளூர் மாரியம்மன் கோவிலைக் கடனே
என்று (மனைவிக்காக) சுற்றி வந்துவிட்டு, காலைப் பலகாரம், காப்பித் தண்ணி
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, சரியாக ஏழு மணிக்கெல்லாம் தன் தொழிலைத்
துவங்கி விடுவார்.
பத்து மணிவரைதான் வைத்தியம் பார்ப்பார்.அதற்குப் பிறகு சீட்டாடக் கிளம்பி விடுவார்.
அதற்குப் பிறகு கூட்டம் வராது. அப்படியே தப்பித்தவறி வருகிறவர்களுக்கு அவருடைய
புத்திரன் தனக்குத் தெரிந்த மருந்தைக் கொடுத்து அனுப்பி விடுவான். நாட்டு மருந்து
என்பதால் பக்க விளைவுகள் (Side effects) வராது. பயமில்லை!
அவர் வீட்டு மாடியில்தான் சீட்டாட்டம் நடக்கும். ஜமக்காளம் விரித்து அமர்க்களமாக
நடக்கும். ஊரில் உள்ள மிட்டா, மிராசுகள் எல்லாம் கூடி விடுவார்கள். அந்தக்
கால கட்டத்தில் வேலை வெட்டியில்லாத பணக்காரர்கள் (நிலச்சுவான்தாரர்கள்)
நிறைய இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பகலில் இதுதான் வேலை!
மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று வைத்தியர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்
வைத்தியருக்கு லாப ஸ்தானத்தில் 40 பரல்கள்.அதோடு லாபாதிபதியும், லக்கினாதிபதியும்
கூட்டணி போட்டு லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தை நிரந்தரமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் வைத்தியருக்கு சீட்டாட்டத்தில் பணம் கொட்டும்
வருகின்ற பணத்தை அப்படியே அன்று இரவு வீட்டு அம்மணியிடம் கொடுத்துவிடுவார்
அதனால் அந்த அம்மணியும் அவருடைய ஆட்டங்களுக்கு ஒன்றும் சொல்வதில்லை!
அடிப்படைத் தகவலையெல்லாம் கொடுத்துவிட்டேன். இனி வருவதுதான் மெயின்
ஸ்டோரி.
-------------------------------------------------------------------------------------
நம்ம வைத்தியர் மருந்து அரைப்பதற்கு இளைஞன் ஒருவனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
காலை 9 மணிக்கு முதல் மாலை ஐந்து மணி வரை மாங்கு மாங்கென்று மருந்தரைப்பது
தான் அவன் வேலை. விதம் விதமான மருந்துகள்.ஆசாமி சின்சியாரானவன். அது மாதிரி
ஆளெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் இப்போது கிடைக்காது.
அரைப்பது அவன் வேலை. கலக்கி ஜாடிகளில் வைப்பது தர்மபத்தினியின் வேலை.
அரைத்த மருந்தில் ஒரு கரண்டி அளவிற்குத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்து
அரைத்தது போதுமா என்று கேட்பான்.
வைத்தியர் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,“பத்தாது இன்னும்
கொஞ்சம் அரை!” என்பார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவன் காட்டும்போது
அதே போலத் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து விட்டு,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்பார்.
இரண்டு மணி நேரத்தில் முதல் மருந்து முடிந்து அடுத்த மருந்தை அவன் அரைக்கும்போதும்
இதே லோலாயி. எல்லாம் சீட்டாட்டம் படுத்தும் பாடு. அதோடு ஒரு நாளைக்கு அவனுக்கு
நான்கு மணி நேரம்தான் வேலை இருக்கும் என்றாலும், அவனுக்கு மாலை ஐந்து மணி
வரை வேலை சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் இந்த வெண்ணைப் புராணம்.
ஒரு ஆண்டாக வேலை பார்த்தவனுக்கு, ஒரு நாள் கடுப்பாகி விட்டது.
இன்றைக்கு இந்த வெண்ணெய்ப் புராணத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று எண்ணியவன்
ஒரு தட்டில் கால் கிலோ அளவிற்கு சுத்தமான வெண்ணெயையே வைத்துக் கொண்டு
போய்த்தட்டை நீட்டினான்.
நம்ம வைத்தியரும் வழக்கப்படி திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்றார்
கோபம் கொண்ட அவன், தட்டைச் சீட்டாடிக் கொண்டிந்த அத்தனை பேர்களுக்கும்
நடுவில் வைத்து விட்டுக் கனத்த குரலில் சொன்னான்:
“வெண்ணெயை எப்படி அய்யா வெண்ணை மாதிரி அரைக்க முடியும்? கடவுளே வந்து
அரைத்தாலும் அரைக்க முடியுமா? இப்போது சொல்லுங்கள் நான் விளக்கெண்ணையா?
இல்லை நீங்கள் விளக்கெண்ணையா?”
வைத்தியர் திகைத்துப் போய் விட்டார். அவன் அப்படிச் செய்வான் என்று அவர் எதிர்
பார்க்கவில்லை. அதோடு அங்கேயிருந்தவர்களெல்லாம் சிரிக்க, அவருக்கு வெட்கமாகி
விட்டது.
அவன் தொடர்ந்து சொன்னான்., “அய்யா,வைத்தியம் பார்ப்பது தெய்வத் தொழில்.கடவுள்
கொடுத்த வரம். அதை ஒழுங்காகப் பார்க்காமல் இப்படி அநியாயமாகச் சீட்டாடிக்
கொண்டிருக்கிறீர்களே! கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். என்னை போன்ற ஏழை
எளியவர்களை வதைக்காதீர்கள், போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ,
படிப்பில்லாமல் உடல் உழைப்பால் வயிற்றைக் கழுவ வேண்டியதிருக்கிறது. அடுத்த
பிறவியில் நீங்கள் செக்கு மாடாகப் பிறந்து அவஸ்தைப் படப் போகிறீர்கள்! இந்த
வேலை பார்பதற்குப்பதில் தெருவில் குப்பை கூட்டிப் பிழைக்கலாம். ஊருக்கு உதவி
செய்த புண்ணியமாவது கிடைக்கும். வருகிறேன்.”
அடுத்த நொடியில் அவன் வெளியேறிவிட்டான்.
அங்கிருந்த அனைவரின் மண்டையிலும் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது!
யார் முகத்திலும் ஈயாடவில்லை!
(தொடரும்)
பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!
தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, இன்னும் இரண்டு பதிவுகள் இத்தலைப்பில்
உள்ளன. நிறைவுப் பதிவில் அது வரும்!
வாழ்க வளமுடன்!

ஐயா வணக்கம்.கதை மிகவும் அருமையாக உள்ளது.சாரங்கபாணி அவர்களை உதாரணம் காட்டி எம் கண்முன்னால் வைத்தியரை கொண்டுவந்துவிட்டீர்கள்.தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன். அடியேனுக்கு லக்னாதிபதி 7ம் வீட்டிலிருந்து லக்னத்தை பார்க்கிறார். சூதாட்டம் தவிர்த்து,செய்தொழிலிலாவது பலன் பெறுவோமா? பணிவுடன் தியாகராஜன்.
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது
ReplyDeleteDear Sir
ReplyDeleteGood narration....The way you freeze is excellent...are you writing for any TV serials...juz kidding:-)))
-Shankar
/////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா வணக்கம்.கதை மிகவும் அருமையாக உள்ளது.சாரங்கபாணி அவர்களை
உதாரணம் காட்டி எம் கண்முன்னால் வைத்தியரை கொண்டுவந்துவிட்டீர்கள்.
தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன். அடியேனுக்கு லக்னாதிபதி 7ம் வீட்டிலிருந்து
லக்னத்தை பார்க்கிறார். சூதாட்டம் தவிர்த்து,செய்தொழிலிலாவது பலன் பெறுவோமா?
பணிவுடன் தியாகராஜன்.////
Thanks Mr.Thiagarajan
Lagna lord in the seventh house aspecting the lagna will give you standing power!
////sahul said...
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது/////
Thanks Mr.Sahul, I think you are vising my blog for the first time!
/////Anonymous said...
ReplyDeleteDear Sir
Good narration....The way you freeze is excellent...are you
writing for any TV serials...juz kidding:-)))
-Shankar//////
No Mr.Shankar.I pray The Almighty not to give me any chance for writing for TV:-)))
Really Superb!!
ReplyDeleteExpecting the next part..
GK, BLR
Really Superb!!
ReplyDeleteExpecting the next part..
GK, BLR
///மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
ReplyDeleteஎன்று ஜோதிடர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்///
You have mentioned astrologer wife...Is it doctors wife...
Eagerly waiting for core lessons...
-Shankar
சிரமம் பாராமல் வாய் வழியாக சொல்லப்பட்டக் கதையைத் திரித்து சுவாரசியமான உரைநடையோடு கொடுத்து இருக்கிறீர்கள்... மிக்க நன்றி...
ReplyDeleteExcellent. Loved it.
ReplyDeleteRamya
வற்றாத ஊற்றாக வந்து கொண்டே
ReplyDeleteஇருக்கிறது ஐயா,உங்கள் நடைமுறை
கதைகள்-இதை common sense stories என்றும் சொல்லலாம்.
தபாலுக்கு மாற்றாக ஈமெயிலும் லாண்ட் லயன் ஃபோனுக்கு மாற்றாக கைபேசியும் வந்தது போல நாட்டு மருந்துக்கு போட்டியாக அலோபதி வந்து விட்டது இன்று..
காலத்தோடு மாறும் தொழில் நுட்பம்,அறிவு நடைமுறை போன்றவற்றை அறிந்து கொள்ளாதவர்கள் நசிந்து விடுகிறார்கள்.
வேலைக்காரன் ஒருவன் கிடைத்து விட்டால் அவனை இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும் அகம்பாவம் விலங்குகளுக்கு கூட கிடையாது. அந்த வகையில் 'மனிதன் ஒரு பசியில்லா நேரத்திலும் வேட்டையாடும் விலங்கு'.அதை அழகாக திரைக்கதை போல சொன்னீர்கள் குருவே :-))
/////Geekay said...
ReplyDeleteReally Superb!!
Expecting the next part..
GK, BLR////
நன்றி ஜி.கே!
/////Anonymous said...
ReplyDelete///மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று ஜோதிடர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்///
You have mentioned astrologer wife...Is it doctors wife...
Eagerly waiting for core lessons...
-Shankar/////
திருத்தி விட்டேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சங்கர்!
////VIKNESHWARAN said...
ReplyDeleteசிரமம் பாராமல் வாய் வழியாக சொல்லப்பட்டக் கதையைத் திரித்து
சுவாரசியமான உரைநடையோடு கொடுத்து இருக்கிறீர்கள்... மிக்க நன்றி...////
என் தந்தையார் சொன்னது பத்துவரிக் கதை. கேட்பதற்கு நன்றாக இருக்கும்
இப்படி விவரித்து எழுதினால்தான் எழுத்தில் அது சுவைக்கும்!
////Anonymous said...
ReplyDeleteExcellent. Loved it.
Ramya////
உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி
//////தமாம் பாலா said...
ReplyDeleteவற்றாத ஊற்றாக வந்து கொண்டே
இருக்கிறது ஐயா,உங்கள் நடைமுறை
கதைகள்-இதை common sense stories என்றும் சொல்லலாம்.
தபாலுக்கு மாற்றாக ஈமெயிலும் லாண்ட் லயன் ஃபோனுக்கு மாற்றாக கைபேசியும்
வந்தது போல நாட்டு மருந்துக்கு போட்டியாக அலோபதி வந்து விட்டது இன்று..
காலத்தோடு மாறும் தொழில் நுட்பம்,அறிவு நடைமுறை போன்றவற்றை அறிந்து
கொள்ளாதவர்கள் நசிந்து விடுகிறார்கள்.
வேலைக்காரன் ஒருவன் கிடைத்து விட்டால் அவனை இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும்
அகம்பாவம் விலங்குகளுக்கு கூட கிடையாது. அந்த வகையில் 'மனிதன் ஒரு பசியில்லா
நேரத்திலும் வேட்டையாடும் விலங்கு'.அதை அழகாக திரைக்கதை போல சொன்னீர்கள் குருவே :-))////
நன்றி தாமம் பாலா, இனிய நண்பரே!
வாத்தியார் மர்மக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார்!
ReplyDelete:-))
அந்த வைத்தியருக்கு அந்தச் சம்பவம் ஒரு திருப்புமுனையாயிருந்ததா? இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்!
ReplyDelete//வைத்தியருக்கு லாப ஸ்தானத்தில் 40 பரல்கள்.அதோடு லாபாதிபதியும், லக்கினாதிபதியும்
ReplyDeleteகூட்டணி போட்டு லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தை நிரந்தரமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்///
ஐயா, எனக்கும் 11ல் 40 பரல்கள் உள்ளன ஆனால் பங்குமார்கேட்டில் விட்டதுதான் அதிகம்...
லக்னாதிபதி லக்னத்திலும் லாபதிபதி 2ல் உள்ளார்..
நான் எப்போது பங்கு மார்கேட்டில் ஈடுபடலாம்? 11ம் அதிபதியுன் தசையிலா?
அந்த காலத்துல எங்க தாத்தா கூட ஒக்காந்து கேட்ட கதைகள் நினைவுக்கு வருது...
ReplyDeleteசுவையான ஆனால் அதே சமயம் கருத்துள்ள கதைகள் அவை.
ஹலோ வாத்தியாரய்யா,
ReplyDeleteஅட கதை நல்லாயிருக்கே.ஆனா இப்ப இருக்கற காலமாற்றத்தில் இது போல கதைகளும் கூட நமக்கு தேவையாயிருக்கு.அதுவும் நல்ல கருத்துக்களோடு கூடிய இந்த மாதிரி கதைகளும் தேவை தான், இந்த ஜெனரேஷன் மக்களுக்கு முக்கியமாக. எங்க அப்பாவும் இது போல நிறைய்ய கதைகள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.அதனால் சில நல்லவற்றையும் நான் பின்பற்றியும் வருகிறேன். நல்லாயிருக்கு, தொடர்ந்து இப்படி நல்ல காரியங்களும் செய்யுங்கள். வரவேற்கிறேன்.
மீது கதைக்கு காத்திருக்கிறேன் ஆவலுடன்.
////திவா said...
ReplyDeleteவாத்தியார் மர்மக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார்! :-))///
மர்மக் கதையல்ல: தர்மக் கதை!
கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தைச் சொல்லும் கதை!
//////நெல்லை சிவா said...
ReplyDeleteஅந்த வைத்தியருக்கு அந்தச் சம்பவம் ஒரு திருப்புமுனையாயிருந்ததா?
இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்!/////
தெரியவில்லை நண்பரே!
/////கூடுதுறை said...
ReplyDelete//வைத்தியருக்கு லாப ஸ்தானத்தில் 40 பரல்கள்.அதோடு லாபாதிபதியும், லக்கினாதிபதியும்
கூட்டணி போட்டு லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தை நிரந்தரமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்///
ஐயா, எனக்கும் 11ல் 40 பரல்கள் உள்ளன ஆனால் பங்குமார்கேட்டில் விட்டதுதான் அதிகம்...
லக்னாதிபதி லக்னத்திலும் லாபதிபதி 2ல் உள்ளார்..
நான் எப்போது பங்கு மார்கேட்டில் ஈடுபடலாம்? 11ம் அதிபதியுன் தசையிலா?////
லாப அதிபதியும், லக்கின அதிபதியும் 1/12ல் பொஸிசனில் உள்ளார்கள். கவனிக்கவில்லையா?
பெரிய லாபம் எல்லாம் வர வாய்ப்பில்லை. இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
/////டி.பி.ஆர் said...
ReplyDeleteஅந்த காலத்துல எங்க தாத்தா கூட ஒக்காந்து கேட்ட கதைகள் நினைவுக்கு வருது...
சுவையான ஆனால் அதே சமயம் கருத்துள்ள கதைகள் அவை.////
ஆமாம் டி.பி.ஆர் சார்! அந்தக் காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை!
இப்போது எல்லாம் மைக்ரோ பாமிலிகளாகிவிட்டன!
கருத்துக் கதைகளுக்கு எங்கே வாய்ப்பு? போகோ தொலைக்காட்சிக்காரர்கள் போட்டால் உண்டு!
குழந்ைதைகள் அைதத்தானே பார்க்கின்றன!
////Sumathi. said...
ReplyDeleteஹலோ வாத்தியாரய்யா,
அட கதை நல்லாயிருக்கே.ஆனா இப்ப இருக்கற காலமாற்றத்தில் இது போல கதைகளும் கூட நமக்கு தேவையாயிருக்கு.அதுவும் நல்ல கருத்துக்களோடு கூடிய இந்த மாதிரி கதைகளும் தேவை தான், இந்த ஜெனரேஷன் மக்களுக்கு முக்கியமாக. எங்க அப்பாவும் இது போல நிறைய்ய கதைகள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.அதனால் சில நல்லவற்றையும் நான் பின்பற்றியும் வருகிறேன். நல்லாயிருக்கு, தொடர்ந்து இப்படி நல்ல காரியங்களும் செய்யுங்கள். வரவேற்கிறேன்.///
ஆகா, செய்துகொண்டிருக்கிறேன், செய்வேன் சகோதரி!
/////Anonymous said...
ReplyDelete///மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று ஜோதிடர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்///
You have mentioned astrologer wife...Is it doctors wife...
Eagerly waiting for core lessons...
-Shankar/////
ஐயா,பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
////தியாகராஜன் said...
ReplyDelete/////Anonymous said...
///மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று ஜோதிடர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்///
You have mentioned astrologer wife...Is it doctors wife...
Eagerly waiting for core lessons...
-Shankar/////
ஐயா,பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.////
இல்லை தவறைச் சுற்றிக் காட்டிய நண்பர் (யு.எஸ்.ஏ. சங்கர்) நல்லததைத்தான் செய்திருக்கிறார்
உடனே அதைத் திருத்திவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துப் பின்னூடமும் போட்டிருக்கிறேன்
பாருங்கள்.
பதிவுலகம் ஒரு தனி உலகம். குட்டி உலகம். இங்கே வருகிறவர்கள் எழுதுவதற்காகவும், படிப்பதற்காகவும்,
பலவற்றைத் தெரிந்து கொள்வதற்காகவும்தான் வருகிறார்கள். பணம், பதவி, புகழுக்கெல்லாம் இங்கே வேலையில்லை!
///இல்லை தவறைச் சுற்றிக் காட்டிய நண்பர் (யு.எஸ்.ஏ. சங்கர்) நல்லததைத்தான் செய்திருக்கிறார்
ReplyDeleteஉடனே அதைத் திருத்திவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துப் பின்னூடமும் போட்டிருக்கிறேன்
பாருங்கள். பதிவுலகம் ஒரு தனி உலகம். குட்டி உலகம். இங்கே வருகிறவர்கள் எழுதுவதற்காகவும், படிப்பதற்காகவும்,
பலவற்றைத் தெரிந்து கொள்வதற்காகவும்தான் வருகிறார்கள். பணம், பதவி, புகழுக்கெல்லாம் இங்கே வேலையில்லை!///
ஐயா, தவறை சொன்னதை தவறென்று சொல்லவில்லை.சும்மா. நானும் ஒரு டயலாக் விட்டு பார்த்தேன்.(எல்லாம் திருவிளையாடல் தருமியின் உபயம் தான்)
வணக்கம் வாத்தியாரே,
ReplyDeleteஅருமையான கதை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
(சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் வைத்தியருக்கு குறிப்பிட்டிருத்ததைப் போலவே எனக்கும் அதேபோலவே பரல்,கிரகஅமைப்பு இருக்கின்றது. ஆனால் எனக்கு சீட்டாட்டத்தில் விருப்பமில்லையே)
/////தியாகராஜன் said...
ReplyDelete///இல்லை தவறைச் சுற்றிக் காட்டிய நண்பர் (யு.எஸ்.ஏ. சங்கர்) நல்லததைத்தான் செய்திருக்கிறார்
உடனே அதைத் திருத்திவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துப் பின்னூடமும் போட்டிருக்கிறேன்
பாருங்கள். பதிவுலகம் ஒரு தனி உலகம். குட்டி உலகம். இங்கே வருகிறவர்கள் எழுதுவதற்காகவும், படிப்பதற்காகவும்,
பலவற்றைத் தெரிந்து கொள்வதற்காகவும்தான் வருகிறார்கள். பணம், பதவி, புகழுக்கெல்லாம் இங்கே வேலையில்லை!///
ஐயா, தவறை சொன்னதை தவறென்று சொல்லவில்லை.சும்மா. நானும் ஒரு டயலாக் விட்டு பார்த்தேன்.(எல்லாம் திருவிளையாடல் தருமியின் உபயம் தான்)//////
ச்சும்மா டயலாக் விட்டு பார்க்கிறீர்கள் என்பதை அந்த நண்பர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது இல்லையா?
அதனால்தான் அவர் செயலை நியாயமென்று சொல்லி நானும் பின்னூட்டமிட்டேன்!
/////கல்கிதாசன் said...
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே,
அருமையான கதை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
(சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் வைத்தியருக்கு குறிப்பிட்டிருத்ததைப் போலவே எனக்கும் அதேபோலவே பரல்,கிரகஅமைப்பு இருக்கின்றது. ஆனால் எனக்கு சீட்டாட்டத்தில் விருப்பமில்லையே)
வேறு எந்த ஆட்டத்தில் விருப்பம்?:-)))))))
Mr. Thyagarajan, you are very funny...
ReplyDelete-Shankar
Mr. Thyagarajan, you are very funny...
ReplyDelete-Shankar
ஹி..ஹி..ஹி
ReplyDeleteஐயா,
ReplyDeleteகதையோடு பாடத்தையும் நடத்திவிட்டீர்கள். சூப்பர். கதையின் கருத்து அதைவிட சூப்பர்.
ஐயா,
ReplyDeleteகதையோடு பாடத்தையும் நடத்திவிட்டீர்கள். சூப்பர். கதையின் கருத்து அதைவிட சூப்பர்.
ஐயா
ReplyDeleteதங்களின் பதிவிற்கு சில எளிய வழியேற்படுத்தி பதிவிட்டுள்ளேன்.
பார்த்து நிறைகுறைகளை கூறினால் பப்ளிஷ் செய்துவிடுகிறேன்
நன்றி
////கூடுதுறை said...
ReplyDeleteஐயா
தங்களின் பதிவிற்கு சில எளிய வழியேற்படுத்தி பதிவிட்டுள்ளேன்.
பார்த்து நிறைகுறைகளை கூறினால் பப்ளிஷ் செய்துவிடுகிறேன்
நன்றி////
சுட்டிகளுக்கு ஏது நிறைகுறை? நல்லததுதானே செய்கிறீர்கள்
செய்யுங்கள் கூடுதுறைக்காரரே!
நான் பதிவில் ஸைடு பாரில் இணைப்பிக்களை வரிசைப்படுத்திக் கொடுக்கலாம் என்று உள்ளேன்
நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்
////மணிவேல் said...
ReplyDeleteஐயா,
கதையோடு பாடத்தையும் நடத்திவிட்டீர்கள். சூப்பர். கதையின் கருத்து அதைவிட சூப்பர்.////
நன்றி நண்பரே!
//நான் பதிவில் ஸைடு பாரில் இணைப்பிக்களை வரிசைப்படுத்திக் கொடுக்கலாம் என்று உள்ளேன்
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது செய்கிறேன்//
ஐயா தங்களின் பொன்னான நேரத்தை இதற்க்காக வீணடிக்கவேண்டும். எனது பதிவை சைடுபாரில் ஒரு லிங்க் கொடுத்துவிடுங்கள்...
அந்த நேரத்தில் நல்ல இரண்டு பதிவிடலாமே...
கருத்துள்ள கதையை மருந்தாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஆசானே!
ReplyDelete////கூடுதுறை said...
ReplyDelete//நான் பதிவில் ஸைடு பாரில் இணைப்பிக்களை வரிசைப்படுத்திக் கொடுக்கலாம் என்று உள்ளேன்
நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்//
ஐயா தங்களின் பொன்னான நேரத்தை இதற்க்காக வீணடிக்கவேண்டும். எனது பதிவை சைடுபாரில் ஒரு லிங்க் கொடுத்துவிடுங்கள்...
அந்த நேரத்தில் நல்ல இரண்டு பதிவிடலாமே...///
நன்றி கூடுதுறையாரே! சைடுபாரில் லிங்க் கொடுத்துவிட்டேன். பாருங்கள்!
////VSK said...
ReplyDeleteகருத்துள்ள கதையை மருந்தாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஆசானே!////
சொன்னது மருந்தாக இருக்கிறதா இல்லை மருந்தோடு தேனைக் கலக்க விட்டுவிட்டேனா சார்?:))))
நன்றி
Aiya, Nandri. Enjoyed reading reflecting on your writings.
ReplyDeleteA great Effort on extraordinary stuff.
God Bless you,
anbudan,
srinivasan. V.
/////Srinivasan said...
ReplyDeleteAiya, Nandri. Enjoyed reading reflecting on your writings.
A great Effort on extraordinary stuff.
God Bless you,
anbudan,
srinivasan. ////
நன்றி உரித்தாகுக நண்பரே!
Respected Sir,
ReplyDeleteI read evil planets for each lagna.
My lagnam is Taurus.
JUPITER in the Sagittarius.JUPITER is seeing the 12th, 2nd and 4th houses.
May I know Jupiter’s the act of looking from 8th place whether good or bad or medium?
SATURN is seeing the 8th house from 6th house(Libra).
May I know is it “sani dosam” or not?
Thanking you,
With Regards,
Vanathi
Respected sir,
ReplyDeleteMay I know can I calculate paral for “Amsam chart”? Is it useful sir?
Thanking you,
With Regards,
Vanathi.
ஐயா வணக்கம்,
ReplyDeleteI wish to need some reference about how to calculate vakya panchagam. If you have any books like making of vakya panchaga and vakya calculation or tell me where i get this kind of books in market.