எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?
ஜோதிடம் கற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலைவிட, ஓரளவு கற்றுக்கொண்ட பின்
ஏற்படும் சிக்கல் அவஸ்தையாக இருக்கும். அதாவது பல சமயங்களில் இக்கட்டாக
இருக்கும்.
இந்த இக்கட்டு என்பது எங்கள் பகுதியில் (காரைக்குடி) உள்ள வழக்குச் சொல்!
"என்னடா, உன்னை நம்பி வந்தேன் பெரிய இக்கட்டில மாட்டிவிட்டாயே" என்று
ஒருவர் சொன்னால், இருக்கவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் உள்ள
சூழலில் அவர் மாட்டிக்கொண்டு விட்டார் என்று பொருள்!
அதாவது விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாத சூழ்நிலை!
ஆங்கிலத்தில் சொன்னால் Bottleneck Situation!
அந்தக் காலத்தில் கோலி சோடா இருக்கும். அதன் கழுத்துப் பகுதியில் இருக்கும்
கோலிக்குண்டு உள்ளேயும் போகாமல், வேளியேவும் வந்து விழுகாமல் இருக்கும்
அதை நினைவில் கொள்ளலாம்.
அதற்கு ஒரு கதை சொல்கிறேன் பாருங்கள். இந்தக் கதை என் தந்தையார்
சொல்லக் கேட்டது. சொன்னது என்னிடம் அல்ல! அவர் தன் நண்பர்களிடம்
சொல்லிக் கொண்டிருக்கும்போது கேட்டது. கதை கொஞ்சம் 'அ' கதை!
அதனால்தான் இந்த டிஸ்க்ளைமர் அல்லது உங்கள் மொழியில் டிஸ்கி!
--------------------------------------------------------------------------------------------
காலம்: 100 வருடங்களுக்கு முற்பட்டது
இடம்: ஒரு செழிப்பான கிராமம்
நாயகர்: பெரிய நாட்டு மருத்துவர்.கோட்டா தொந்தரவு இல்லாத காலத்தில்
படித்தவர். அனுபவம் மிக்கவர், கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர்.
சுற்றியுள்ள 18 பட்டிக் கிராமங்களுக்கும் அவர்தான் மருத்துவர்.
வேறு ஆள் கிடையாது.அறுவை சிகிச்சையைத் தவிர மற்ற எல்லாச்
சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யக்கூடியவர். வயது 50.
உப செய்தி: 50 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்திற்கு சென்றால்தான்
வேறு வைத்தியர்கள் கிடைப்பார்கள். ரோடு மண் ரோடு. வாகனம்
மாட்டு வண்டிகள் மட்டுமே! இதைக் கவனத்தில் கொள்ளவும்
நாயகி: பூவாத்தாள். செடியில் இருந்து பறித்த பூவைப்போன்று இருப்பாள்
வயது 22. மருத்துவருடைய மருமகள்
பில்ட் அப் கொடுத்து விட்டேன். இப்போது கதைக்குப் போவோம்
-------------------------------------------
பூவாத்தாளுக்குத் தொடையில் பெரிய கட்டி. அது வீங்கி எழுமிச்சம்பழ
அளவிற்குப் பெரிதாகி, பழுத்து உடையும் நிலையில் இருக்கிறது.
நான்கு நாட்களாகத் தாங்க முடியாத வலி!.
கணவன் வேறு ஊரில் இல்லை! தனியாக அமர்ந்து கண்ணீரில் கரைந்து
கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்த அவளுடைய தோழி, விசனத்திற்குக் காரணம் கேட்க
விவரத்தைச் சொன்னதோடு, தன்னுடைய சேலையை விலக்கி, அவளுக்கு
அந்தக் கட்டியைக் காட்டவும் செய்தாள்.
தோழி அரண்டு விட்டாள், "என்னடி இவ்வளவு பெரிதாக வீங்கி உடையும்
நிலையில் உள்ளது. சுத்த பைத்தியக் காரியாக இருக்கியே - உன்
மாமனாரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே?
சொல்லாம அழுதுக்கிட்டிருந்தா சுகமாயிருமா?"
"எப்படியடி காட்டுவேன், அவர் என் மாமனார் ஆயிற்றே?"
"மாமனார் என்று ஏன் நினைக்கிறாய்? வைத்தியர் என்று நினத்துக் காட்டு!"
"மனசு என்று ஒன்று இருக்கிறதே - எப்படிக் காட்ட முடியும்? காட்டிவிட்டு
அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனசு குறுகுறுக்குமே? அதோடு இந்த
கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய
பார்வையை எப்படித் தாங்குவேன். உனக்கு இப்படி ஒரு நிலைமை என்றால்
என்ன செய்வாய்? அதற்கு முதலில் பதில் சொல்லடி!"
தோழி மெளனமாகி விட்டாள்.
அழுதுகொண்டே தொடர்ந்து பூவாத்தாள் சொன்னாள்:
"எல்லாம் என் தலை எழுத்து. இப்படி ஒரு இக்கட்டு. காட்டினால் மானம்
போகும்; காட்டாவிட்டால் பிராணன் போகும்!"
--------------------------------------------------------------------
நான் மாட்டிக் கொண்ட இக்கட்டு ஒன்றைச் சொல்கிறேன்
புதுசா கல்யாணம் செய்துகொண்டவன் கையும், புண் வந்தவன் கையும்
சும்மா இருக்காது என்பார்கள் (அதெல்லாம் பதிவில் விவரமாகச் சொல்ல
முடியாது. ஆகவே புரிந்து கொள்ளுங்கள்) அதேபோல ஜோதிடம் கற்றுக்
கொண்டவன் கையும் சும்மா இருக்காது.
யார் கிடைத்தாலும் அல்லது எந்த ஜாதகம் கிடைத்தாலும் நோண்டிப்
பார்க்கச் சொல்லும்.
நான் தொடர்ந்து சொல்லப்போவதேல்லாம் 15 அல்லது 20 வருடங்களுக்கு
முன்பு நடந்த சம்பவங்கள்
--------------------------------------------------------------------
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் , நேற்று என்னை நாய்
கடித்து விட்டது!” என்றார்.
என் போதாத காலம், சும்மா இருக்காமல், அவரிடம் கேட்டேன்,” உங்களுக்கு
ராகு திசை சுய புத்தி நடக்கிறதா?”
“ஆமாம் எப்படி கரெக்டாகச் சொல்கிறாய்?”
“ராகு திசை சுய புத்தி நடந்தால், ஏதாவது ஒன்று கடிக்கும், அதுதான் கேட்டேன்”
“ஏதாவது ஒன்று என்றால்?”
“நாய், பாம்பு, தேள், பூரான் இப்படி ஏதாவது ஒன்று கடிக்கும். ஜாதகத்தின்
அமைப்பை வைத்து, கடிகள் வித்தியாசப்படும்!”
அவ்வளவுதான் ஜேட் வேகத்தில் தனது வீட்டிற்குப் போய்விட்டு பத்தே நிமிடங்களில்
திரும்பி வந்து விட்டார்.
அவர் கையில் ஒரு தடிமனான நோட்டுப் புத்தகம். அதில் அவருடைய குடும்பத்து
உறுப்பினர்களின் ஜாதகங்கள்.
நான் தப்பிப்பதற்காக, ”எனக்கு முழுமையாக ஜோதிடம் தெரியாது அமெச்சூர்,”
என்று சொல்லிப் பார்த்தேன்.
“தெரிந்தவரை பார்” அவர் விடுவதாக இல்லை!
கடைசியில் அன்றையப் பொழுதில் என்னுடைய நேரத்தில் நான்கு மணிகளை
இரண்டு ஃபில்டர் காப்பியுடன் சேர்த்துக் குடித்துவிட்டுத்தான் அவர் என்னை
விட்டார்!
--------------------------------------------------------------
அதேபோல இன்னொரு சமயம் எனக்கு நன்கு பரீட்சையமான நண்பர்
தன் சகோதரனுடன் என்னைத் தேடிவந்தார்.
வந்தவர் தன் தம்பியை அறிமுகப் படுத்துவிட்டு, மகாதேவி படத்தில் பி.எஸ்.வீரப்பா
தன் இடுப்பிலிருந்து பட்டாக் கத்தி ஒன்றை உருவி மிரட்டுவதைப் போல, ஒரு
ஜாதகத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் சொன்னார், “இந்த ஜாதகத்தில்
ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன என்று கண்டுபிடி பார்க்கலாம்?”
அவருடைய தம்பி மகனின் ஜாதகம் அது. அந்தப் பையனுக்கு வயது இருபது.
பிரச்சினை என்றால், மாந்தி இருக்கும் இடத்தைத்தான் பார்க்க வேண்டும்
அந்தப் பையனின் ஜாதகத்தில் ஐந்தில் மாந்தி. ஐந்தில் மாந்தி இருந்தால்
மன நோய் ஏற்படும் அபாயம் உண்டு. ஆறாம் வீட்டு அதிபதி (Sixth lord -
lord for diseases) எங்கே இருக்கிறார் என்று பார்த்தேன். அவர் தன்னுடைய
வீட்டிற்குப் பின் வீட்டில் (That is 12th house from his own house) அதாவது
அதே ஐந்தாவது வீட்டில் மாந்தியுடன் சேர்ந்து இருந்தார். இருவரும் ஒன்று
சேர்ந்தால் மனநோய்தான்!
உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be a
mentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இருவரும் திகைத்துப்போய் விட்டார்கள்
“எப்படிச் சொன்னாய்?”
“ஜாதகம் அதைத்தான் சொல்கிறது!”
(தொடரும்)
பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!
தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, அதுவும் அடுத்த பதிவில்
________________________________________________________
Request
Many people are asking my contact details and wants to speak with me either over
phone or in person. I do not have free time to speak with anybody for consultation or
discussion or clarification.
I know one contact will multiply by several times and totally disturb my routine
business work
I am writing in blogs out of my own interest
I am not a professional astrologer and I learned a portion of astrology only out
of interest
I am writing in blogs to share my knowledge and experiences with my
beloved blog readers like you!. In turn I never expect anything from anybody
I request all, particularly my blog readers to send their queries only
through blog comment box and if it is personal through email!
Please understand my problem and co-operate with me!
Those who know my phone number please do not give it to your friends!
Thanks & regards
SP.VR.Subbiah
வாழ்க வளமுடன்!
ஐயா,
ReplyDeleteஉங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் மிகவும்
சுவையாக இருந்தது. இன்றைய பாடமும் வித்தியாசமான நடையில் இருந்தது. நன்றி.
தங்கள் பதிவுகள் எனக்குப் பிடிக்கும்,ஜோசியத்தைத் தவிர.
ReplyDeleteஏற்கனவே தன்னம்பிக்கை குறைந்த ஒரு
சமுதாயத்தின் நேரம்,உழைப்பை இப்படி வீணடிக்கலாமா?
இது உங்களுக்கே நியாயமா?
ஜோசியத்தால் பணக்காரன் ஆனதைவிடப் பணத்தை இழந்தவன்தான் அதிகம்.
உண்டா,இல்லையா?
உங்களுக்குப் பொழுது போக்கு!
ஏமாந்தவனுக்கு உயிரே போயிருக்கிறதே!ஒரு கணிணி பொறியியல் வல்லுநர் ஜோசியக்காரன் சொன்னதை நம்பி விட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
வேண்டாமையா வீண் விளையாட்டு,வாத்தியாரய்யா!
Dear Sir
ReplyDeleteYou are great in writing blogs...juz amazing...
back to lesson, I remember that you mentioned about Mandhi in Ms. Jayalalitha horoscope too...Can you please explain what is mandhi is? and how to find this one? Does the Jaganath software calculate this? (Should I wait for the upcoming blogs for an answer:-))))
Thanks for your interesting lessons!
-Shankar
தமிழிலும் ஆங்கிலத்திலும்
ReplyDeleteமாறி மாறி வெளுத்துட்டீங்க
வாத்தியாரே.. ஒரு சந்தேகம்..
மாந்தியும்,குளிகனும் ஒண்ணுதானா?
ஆங்கிலத்துல என்ன பெயர், ஜகன்னாத ஹோரா சார்ட்டில் எப்படி பார்ப்பது?
ரசித்தேன் வாத்தியார் ஐயா.
ReplyDeleteதமிழனுக்கு:
ஜாதகம் ஜோசியம் எல்லாம் ஒரேதாப் பொய்ன்னு சொல்ல முடியாது. சரியான ஜோசியரிடம் காமிக்கணும்.
அதுதான் சிக்கலே......
அவரைத் தேடுவதுதான் கஷ்டம்.
எல்லாத்துறைகளையும் போல அரைகுறைகள் இதிலும் உண்டு(-:
You are right; allowing a one person to contact it will multiply and squeeze your time. Your writing about the horoscope is good and interesting. My mind says to check my Horoscope with you but the considering your time and the problem behind are stops me to ask about my horoscope. I believe in GOD, So why I needs to Worry. Nothing going to change by hurrying to know the future. Do the things properly and accept the things what ever comes. Don't expect much, most of the problems are due to our expectation. If you have more expectation and there is less you got then the problem comes.
ReplyDelete//தலைப்பிற்கான செய்தி எங்கே?
ReplyDeleteஅது சுவையானது, முக்கியமானதும் கூட, அதுவும் அடுத்த பதிவில்//
Waiting for your next class..
GK, BLR
ஐயா எனக்கும் 5ல் மாந்தி உள்ளார்.ஆனால் ஆறாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் சூரியொனொடு உள்ளார்...
ReplyDeleteஎனக்கு எப்போது மனநோய் வரும்???
(இப்ப மட்டும் என்னவாம்?)
//எனக்கு எப்போது மனநோய் வரும்???
ReplyDelete(இப்ப மட்டும் என்னவாம்?)
//
கூடுதுறை ஐயா,வலைப்பதிவு எழுதுவதை இப்படி கிண்டல் அடிக்கக் கூடாது நீங்கள்...
வாத்தியரே,
ReplyDelete//ராகு திசை சுய புத்தி நடந்தால், ஏதாவது ஒன்று கடிக்கும், அதுதான் கேட்டேன்//
சரிதான், எனக்கு வாழ்க்கையே கடித்து விட்டது அந்த புக்தியில்.. :-((
//I know one contact will multiply by several times and totally disturb my routine
business work//
யாருப்பா அது வாத்தியாரா தொந்தரவு செய்யறது?
சட்டாம் பிள்ளை இதை எல்லாம் கவனிக்காம எங்க சுத்துறாறு? எங்கப்பா அந்த கர்லா கட்டை?
வாத்தியார் ஐயா,
ReplyDeleteஇதுபோல் ஒரு ஜோசியர் ஒருத்தர் என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை சரியாக சொன்னார்.எதிர்காலத்தில் நடப்பதையும் சொன்னார். அப்படியே நடந்தது.
காசு பிடுங்க பார்த்த ஜோசியர்கள் உண்டு..எல்லா துறையிலும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..
இன்றைய பாடம் சூப்பர். மாந்தி என்பவர் சனிஸ்வரனின் பிள்ளையா? (அப்படி தான் கேள்விபட்டேன்)
ReplyDelete@கூடுதுறை, தமிழ்மணம் அதிகம் பாக்காதீங்க. பிளக்கோபோபியா வந்துரும். (இல்ல, வந்துடுச்சா?) :p
/////மணிவேல் said...
ReplyDeleteஐயா,
உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் மிகவும்
சுவையாக இருந்தது. இன்றைய பாடமும் வித்தியாசமான நடையில்
இருந்தது. நன்றி.////
நன்றி சொல்வேன் என் நடையைக் காட்டியதற்கு!
/////Thamizhan said...
ReplyDeleteதங்கள் பதிவுகள் எனக்குப் பிடிக்கும்,ஜோசியத்தைத் தவிர.
ஏற்கனவே தன்னம்பிக்கை குறைந்த ஒரு
சமுதாயத்தின் நேரம்,உழைப்பை இப்படி வீணடிக்கலாமா?
இது உங்களுக்கே நியாயமா?
ஜோசியத்தால் பணக்காரன் ஆனதைவிடப் பணத்தை இழந்தவன்தான்
அதிகம்.
உண்டா,இல்லையா?
உங்களுக்குப் பொழுது போக்கு!
ஏமாந்தவனுக்கு உயிரே போயிருக்கிறதே!ஒரு கணிணி பொறியியல்
வல்லுநர் ஜோசியக்காரன் சொன்னதை நம்பி விட்டுத் தற்கொலை செய்து
கொண்டாராம்.
வேண்டாமையா வீண் விளையாட்டு,வாத்தியாரய்யா!////
வாருங்கள் அருமை நண்பரே! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
நான் பதிவு போடுவதைப் பொழுதுபோக்கு என்று சொல்லிவிட்டீர்களே!
நியாயம்தானா?
பொழுதைப் போக்குவதற்கு எனக்கு வேறு வழியா இல்லை?
துளசி டீச்சர் சொன்னதை நான் வழி மொழிகிறேன்
வானவியல் ஜோதிடம் இரண்டையும் உலகுக்கு அளித்தவர்கள் நாம்
நம் பாரம்பரியம் பலருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவற்றைப் பதிவிடுகிறேன்
தற்கொலை செய்கிறவன் அதற்குரிய சூழ்நிலை வரும்போது தற்கொலை செய்து கொண்டு விடுவான்
எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. அது அவனுடைய ஊழ்வினை!
அறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன் தன் முடிவைத்தேடிக்கொண்டாரே அதற்கு எந்த ஜோதிடர் காரணம்?
மகாராஷ்ட்டிரத்திலும் ஆந்திரத்திலும் எத்தனை விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிரார்கள், அதற்கும் ஜோதிடம்தான் காரணமா?
அன்புகூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன் தோழரே, தோள் கொடுப்பவரே!
////Anonymous said...
ReplyDeleteDear Sir
You are great in writing blogs...juz amazing...
back to lesson, I remember that you mentioned about Mandhi in Ms.
Jayalalitha horoscope too...Can you please explain what is mandhi is?
and how to find this one? Does the Jaganath software calculate this?
(Should I wait for the upcoming blogs for an answer:-))))
Thanks for your interesting lessons!
-Shankar/////
பூமிக்கு, சந்திரன் உப கிரகமாக இருப்பதுபோல் சனிக்கு இந்த மாந்தி உப கிரகம். ...இந்த மாந்திக்கு குளிகன் என்ற மற்றொறு பெயரும் உண்டு!
ஜகன்னாத மென்பொருளில் GL என்று குறிப்பட்டிருக்கும் பாருங்கள்
அந்தக் கட்டம்தான் மாந்தி இருக்கும் இடம்!
/////தமாம் பாலா said...
ReplyDeleteதமிழிலும் ஆங்கிலத்திலும்
மாறி மாறி வெளுத்துட்டீங்க
வாத்தியாரே.. ஒரு சந்தேகம்..////
உஜாலா போட்டு வெளுக்கலாமா?;-))))
/////மாந்தியும்,குளிகனும் ஒண்ணுதானா?
ஆங்கிலத்துல என்ன பெயர், ஜகன்னாத ஹோரா சார்ட்டில் எப்படி பார்ப்பது?////
பூமிக்கு, சந்திரன் உப கிரகமாக இருப்பதுபோல் சனிக்கு இந்த மாந்தி உப கிரகம். ...இந்த
மாந்திக்கு குளிகன் என்ற மற்றொறு பெயரும் உண்டு!
ஜகன்னாத மென்பொருளில் GL என்று குறிப்பட்டிருக்கும் பாருங்கள்
அந்தக்க கட்டம்தான் மாந்தி இருக்கும் இடம்!
(இதையே கனடா சங்கரும் கேட்டிருந்ததனால் சுலபமாக வேலை முடிந்தது!
கட் & பேஸ்ட்!
///துளசி கோபால் said...
ReplyDeleteரசித்தேன் வாத்தியார் ஐயா.///
ஆகா, நன்றி டீச்சர், உங்களுக்குப் பயந்துதான் டிஸ்கி போட்டிருந்தேன் - பார்த்தீர்களா?:-)))
//////தமிழனுக்கு:
ஜாதகம் ஜோசியம் எல்லாம் ஒரேதாப் பொய்ன்னு சொல்ல முடியாது. சரியான ஜோசியரிடம்
காமிக்கணும்.
அதுதான் சிக்கலே......
அவரைத் தேடுவதுதான் கஷ்டம்.
எல்லாத்துறைகளையும் போல அரைகுறைகள் இதிலும் உண்டு(-://///
Thanks teacher for making my job very easy!
/////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteYou are right; allowing a one person to contact it will multiply and squeeze your time. Your
writing about the horoscope is good and interesting. My mind says to check my Horoscope with
you but the considering your time and the problem behind are stops me to ask about my
horoscope. I believe in GOD, So why I needs to Worry. Nothing going to change by hurrying to
know the future. Do the things properly and accept the things what ever comes. Don't expect
much, most of the problems are due to our expectation. If you have more expectation and there is
less you got then the problem comes.
நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். மற்றவர்களுக்கும் புரிய வேண்டுமே?
////Geekay said...
ReplyDelete//தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, அதுவும் அடுத்த பதிவில்//
Waiting for your next class..
GK, BLR///
நாளை பதிவிடப்படும் நண்பரே!
//கூடுதுறை ஐயா,வலைப்பதிவு எழுதுவதை இப்படி கிண்டல் அடிக்கக் கூடாது நீங்கள்...//
ReplyDeleteஅறிவன் அவர்களே ஐயாவை சொல்லவில்லை எனக்குதான் சொல்கிறேன்.
ஐயாவோடு சிண்டு முடியாதிர்...
//@கூடுதுறை, தமிழ்மணம் அதிகம் பாக்காதீங்க. பிளக்கோபோபியா வந்துரும். (இல்ல, வந்துடுச்சா?) :p///
அம்பி ஏற்கனெவே வந்துவிட்டது...
அதுக்குத்தான் ஐயாவிடம் கன்பர்ம் செய்யமுயற்சிக்க்றேன்...
ஐயா, பாருங்க ஐயா, பக்கத்து பெஞ்சு பசங்க கிண்டல் அடிக்கிறாங்க...
/////கூடுதுறை said...
ReplyDeleteஐயா எனக்கும் 5ல் மாந்தி உள்ளார்.ஆனால் ஆறாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் சூரியொனொடு
உள்ளார்...
எனக்கு எப்போது மனநோய் வரும்???
(இப்ப மட்டும் என்னவாம்?)////
என்னமோ லாட்டரிச் சீட்டு எப்போது விழுகும் - பணம் வரும் என்று கேட்பது போலக்
கேட்டிருக்கிறீர்கள்?
ஆறாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் நான் சொன்ன பலன் இல்லை!
5ல் இருந்தால், அதுவும் மாந்தியோடு ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால்
மட்டுமே அந்தப் பலன்:-)))
பைத்தியக்காரன் நம்மைவிடச் சந்தோசமாக இருப்பான் - தெரியுமா?:-))))
எப்படி என்று ஒரு பதிவு தனியாகப் போடட்டுமா?
/////அறிவன்#11802717200764379909 said...
ReplyDelete//எனக்கு எப்போது மனநோய் வரும்???
(இப்ப மட்டும் என்னவாம்?) //
கூடுதுறை ஐயா,வலைப்பதிவு எழுதுவதை இப்படி கிண்டல் அடிக்கக் கூடாது நீங்கள்...////
கிண்டல் அடித்தால் மட்டுமல்ல - சவுக்குக் கட்டையால் அடித்தால் கூட நான் கவலைப் பட
மாட்டேன். என் ராசி நாதன் சனி எனக்குக் கேடயமாக இருக்கிறான்!
அடிக்க வருகிறவன் என் முகத்தைப் பார்த்தவுடன் கட்டையைக் கீழே போட்டுவிட்டு
ஓட்டம் பிடித்து விடுவான்.
வேண்டுமென்றால் ஆளை அனுப்பி பரிசோதித்துக் கொள்ளுங்கள்!:-)))
இதோ டானிக்...
ReplyDeleteஅனுப்பிவிட்டேன்...
பிடித்துக் கொள்ளுங்கள்...
//பைத்தியக்காரன் நம்மைவிடச் சந்தோசமாக இருப்பான் - தெரியுமா?:-))))//
ReplyDeleteஐயா அதுக்குத்தான் ஐயா கேட்கிறேன் எப்போது எனக்கு அந்த வாய்ப்பு என்று...
இல்லை என்று சொல்லிவிட்டிர்களே என் செய்வேன்...
/////Blogger ambi said...
ReplyDeleteஇன்றைய பாடம் சூப்பர். மாந்தி என்பவர் சனிஸ்வரனின் பிள்ளையா? (அப்படி தான் கேள்விபட்டேன்)///
ஆமாம்! (அவருக்கு எப்போது பிள்ளை பிறந்தது.அவர் மனைவிக்கு யார் பிரசவம் பார்த்தது
என்று பில்கேட்ஸ்கள் வந்து கேட்பார்கள் - ஆகவே அதையெல்லாம் இங்கே எழுதாமல் இருப்பது உத்தமம்!)
////@கூடுதுறை, தமிழ்மணம் அதிகம் பாக்காதீங்க. பிளக்கோபோபியா வந்துரும். (இல்ல, வந்துடுச்சா?) ////
அவர் குமாரபாளையம் கூடுதுறை சங்கபரமேஷ்வரன் பராமரிப்பில் இருக்கிறார்
அவருக்கு எதுவும் நேராது. கவலையை விடுங்கள்
////VIKNESHWARAN said...
ReplyDeleteஇதோ டானிக்...
அனுப்பிவிட்டேன்...
பிடித்துக் கொள்ளுங்கள்.../////
வெறும் காலி சீசாதான் வந்திருக்கிறது!
டானிக் என்பது இதே பதிவில் சங்கர் மற்றும் மணிவேல் ஆகியோரின் பின்னூட்டங்கள்!
////கூடுதுறை said..
ReplyDelete//கூடுதுறை ஐயா,வலைப்பதிவு எழுதுவதை இப்படி கிண்டல் அடிக்கக் கூடாது நீங்கள்...//
அறிவன் அவர்களே ஐயாவை சொல்லவில்லை எனக்குதான் சொல்கிறேன்.
ஐயாவோடு சிண்டு முடியாதிர்...
//@கூடுதுறை, தமிழ்மணம் அதிகம் பாக்காதீங்க. பிளக்கோபோபியா வந்துரும். (இல்ல, வந்துடுச்சா?) :p///
அம்பி ஏற்கனெவே வந்துவிட்டது...
அதுக்குத்தான் ஐயாவிடம் கன்பர்ம் செய்யமுயற்சிக்க்றேன்..
ஐயா, பாருங்க ஐயா, பக்கத்து பெஞ்சு பசங்க கிண்டல் அடிக்கிறாங்க.../////
நான் பார்க்காமல் இருப்பேனா? manthly testல் இறுக்கிப் பிடித்துவிடுவோம்!
கவலைப் படாதீர்கள்!
////கூடுதுறை said...
ReplyDelete//பைத்தியக்காரன் நம்மைவிடச் சந்தோசமாக இருப்பான் - தெரியுமா?:-))))//
ஐயா அதுக்குத்தான் ஐயா கேட்கிறேன் எப்போது எனக்கு அந்த வாய்ப்பு என்று...
இல்லை என்று சொல்லிவிட்டிர்களே என் செய்வேன்.../////
சந்தோசமாக இருக்க வேறு வழி இருக்கிறது.
ஆண்டவனிடம் உங்களை ஒப்படைத்துவிடுங்கள்
Hand over என்ற பொருளில் வரும் ஒப்படைப்பு அல்ல
submission, surrender என்று பொருள் கொள்க!
////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே,
//ராகு திசை சுய புத்தி நடந்தால், ஏதாவது ஒன்று கடிக்கும், அதுதான் கேட்டேன்//
சரிதான், எனக்கு வாழ்க்கையே கடித்து விட்டது அந்த புக்தியில்.. :-((
//I know one contact will multiply by several times and totally disturb my routine
business work//
யாருப்பா அது வாத்தியாரா தொந்தரவு செய்யறது?
சட்டாம் பிள்ளை இதை எல்லாம் கவனிக்காம எங்க சுத்துறாறு? எங்கப்பா அந்த கர்லா கட்டை?////
சட்டாம்பிள்ளை அவுட் ஆஃப் ஸ்டேசன்!
////செல்வன் said...
ReplyDeleteவாத்தியார் ஐயா,
இதுபோல் ஒரு ஜோசியர் ஒருத்தர் என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை சரியாக சொன்னார்.எதிர்காலத்தில் நடப்பதையும் சொன்னார். அப்படியே நடந்தது.
காசு பிடுங்க பார்த்த ஜோசியர்கள் உண்டு..எல்லா துறையிலும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்../////
வாருங்கள் செல்வன். நீங்கள் சொல்லும் ஜோதிடர் கோவை இடையர் வீதி பரமேஷ்வர பணிக்கர்! சரிதானா?
பரமேஷ்வர பணிக்கரின் விலாசம் கிடைக்குமா வாத்தியரே?
ReplyDeleteவாத்தியாரே, ஆர்வத்தை அதிகமாக்கிவிட்டீர்கள் ஐயா. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
ReplyDelete-(((((என் ராசி நாதன் சனி எனக்குக் கேடயமாக இருக்கிறான்!
அடிக்க வருகிறவன் என் முகத்தைப் பார்த்தவுடன் கட்டையைக் கீழே போட்டுவிட்டு
ஓட்டம் பிடித்து விடுவான்.)))-
உங்களுக்கும் ராசிநாதன் சனிதானா? ஜாலி..
(நீங்கள் கும்பமா? மகரமா? எனக்கு மட்டும் சொல்லுங்கள்)
//அவர் குமாரபாளையம் கூடுதுறை சங்கபரமேஷ்வரன் பராமரிப்பில் இருக்கிறார்//
ReplyDeleteஐயா, சங்கபரமேஷ்வரன் அல்ல.... கூடுதுறை சங்கமேஸ்வரர்
//ஆண்டவனிடம் உங்களை ஒப்படைத்துவிடுங்கள்
Hand over என்ற பொருளில் வரும் ஒப்படைப்பு அல்ல
submission, surrender என்று பொருள் கொள்க!//
நன்றி ஐயா, handover லிருந்து surrender ஆகிவிடுகிறேன்....
//பரமேஷ்வர பணிக்கரின் விலாசம் கிடைக்குமா வாத்தியரே?//
ReplyDeleteவாத்தியாரிடம் சான்றிதழ் வாங்கியவர் விடுவோமா?
எனக்கும் வேண்டும் ஐயா....
////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteபரமேஷ்வர பணிக்கரின் விலாசம் கிடைக்குமா வாத்தியரே?///
கோவை இடையர் வீதிக்குச் சென்று யாரைக்கேட்டலும் சொல்வார்கள்!
சமீப காலமாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்று பாருங்கள். அவருடைய மகனும் ஜோதிடர்தான்
/////தூக்கணாங்குருவி said...
ReplyDeleteவாத்தியாரே, ஆர்வத்தை அதிகமாக்கிவிட்டீர்கள் ஐயா. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
-(((((என் ராசி நாதன் சனி எனக்குக் கேடயமாக இருக்கிறான்!
அடிக்க வருகிறவன் என் முகத்தைப் பார்த்தவுடன் கட்டையைக் கீழே போட்டுவிட்டு
ஓட்டம் பிடித்து விடுவான்.)))-
உங்களுக்கும் ராசிநாதன் சனிதானா? ஜாலி..
(நீங்கள் கும்பமா? மகரமா? எனக்கு மட்டும் சொல்லுங்கள்)
திருவோணம் நட்சத்திரம். மகர ராசி!
வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்:-))))
////கூடுதுறை said...
ReplyDelete//அவர் குமாரபாளையம் கூடுதுறை சங்கபரமேஷ்வரன் பராமரிப்பில் இருக்கிறார்//
ஐயா, சங்கபரமேஷ்வரன் அல்ல.... கூடுதுறை சங்கமேஸ்வரர்////
பவானி, மற்றும் காவேரி நதிகள் கூடும் இடத்தில் இருப்பதினால் அவர் கூடுதுறை நாதர்!
இரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் ஈஷ்வரனார் - அதானால் சங்கமேஷ்வரர்!
சங்கம் + பரமேஷ்வரன் என்பதனால் அடியேன் சொன்னதும் சரியே!
Are you convinced now?
//கோவை இடையர் வீதிக்குச் சென்று யாரைக்கேட்டலும் சொல்வார்கள்!
ReplyDeleteசமீப காலமாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்று பாருங்கள். அவருடைய மகனும் ஜோதிடர்தான்//
நன்றி வாத்தியரே, இவ்வார இறுதியில் கோவை வருகிறேன் அப்போது கவனித்து கொள்கிறேன்..
ஹலோ வாத்தியாரய்யா,
ReplyDeleteஇங்க நீங்க மனநோய் பத்தி சொல்லியிருக்கீங்க, சரி எனக்கு ஒரு சந்தேகம், சொல்லுங்க. அதாவது என் கணவருக்கு 6 வருடங்களுக்கு முன்னாடி ஒரு விபத்தில் தலையில் மூளையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு சொல்கள் லாம் கொஞ்சம் அழிஞ்சு வேற மாதிரி குணங்கள் வந்து இருக்கு. ஒரு சிலது தான் பழைய குணம் வந்திருக்கு.அதுக்கும் இது மாதிரி அமைப்பு தான் காரணமா? எனக்கு தெரிஞ்சு அவருடைய்ய ஜாதகத்தில் மாந்தி னு எதுவுமில்லயே.பதில் சொல்லுங்களேன்.
ஆகா மக்கள்ஸ்..
ReplyDeleteஐயா என்ற வார்த்தையை வைத்து அரசியல் பண்ணிட்டீங்களே...
அந்த 'ஐயா' கூடுதுறைக்குப் போட்டது...
சுப்பையா ஐயா வேறு தேர்வுல கவனிச்சுக்கலாம்னு சொல்றாரு....
பச்சைப்புள்ள மக்கா நான்...பாவம்,விட்றுங்க....
//Are you convinced now?//
ReplyDeleteYES SIR !
கூடுதுறை
எங்களுக்கு (அதாவது கிறீஸ்துவர்களுக்கு) ஜாதகமே இருப்பதில்லை. அதாவது ஐந்தாறு தலைமுறையாக கிறிஸ்துவ மதத்தில் இருப்பவர்கள் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள்.
ReplyDeleteஎன்னுடைய உறவினர் குடும்பத்தில் நெல்லை மாவட்டத்திலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஜாதகம் எழுதும் பழக்கம் உள்ளதுபோலும். பெண்ணுக்கு ஜாதகத்தில் செவவாய் தோஷமாம். என்னுடைய தந்தை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் இருக்கார் என்று சொல்லி திருமணத்தை நடத்தினார்கள். இது நடந்தது 1978. முப்பது வருடங்கள்! இருவரும் சந்தோஷமாகா குழந்தைகள், பேரன், பேத்தி என்று இப்போதும்....
வேறொரு நிகழ்வு. என்னுடைய நண்பர் ஒருவருக்காக (அவர் ஒரு NRI) நான் ஒரு நிலம் வாங்கினேன். அதில சில சிக்கல்கள் ஏற்பட்டன. அவருடைய மனைவி என்னுடைய நண்பருடைய ஜாதகத்தை ஜோஸ்யரிடம் காண்பித்து பிரச்சினையை விளக்க அவரஇவருக்கு தாவர சொத்து பிராப்தம் இல்லை. ஆகவே அதை உடனே விற்றுவிடுவதுதான் நல்லது. மேற்கொண்டு எந்தசொத்திலும் பணத்தை முடக்க வேண்டாம் என்றும் அறிவுரைத்தாராம். ஆனால் நான் அதை ஏற்காமல் நண்பரை வற்புறுத்தி வில்லங்கம் செய்ய முயன்றவர் மீதவழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றோம்/. இப்போது என்னுடைய நண்பருக்கு சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமாக நிலம், வீடு, கடைகள் என சொத்து உள்ளது.
ஆகவே இதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்கள் நம்புவதெல்லாம் நடக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
//சுப்பையா ஐயா வேறு தேர்வுல கவனிச்சுக்கலாம்னு சொல்றாரு....
ReplyDeleteபச்சைப்புள்ள மக்கா நான்...பாவம்,விட்றுங்க....///
ஹைய்யா நல்ல வேணும் வேணும் அறிவனுக்கு....
வணக்கம் ஐயா
ReplyDeleteவகுப்பில் கதைசொல்வது போல்கதையும்சொல்லி அதேகதையில் மாந்தீ, மாந்தீயின்ஐந்தாம்இடம் என்றபாடத்தையும் தந்துள்ளீகள் நன்றி ஐயா
பின்குறிப்பு; கதையில் வறும் A பகுதிகூட நன்ராக இருந்த்து நன்றி
மாணவன்
சிவா
வாத்தியாரே, ஆர்வத்தை அதிகமாக்கிவிட்டீர்கள் ஐயா. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.
ReplyDeleteஐயா வணக்கம்.சக தோழர்களுக்கும் வணக்கம்.தொழில் முறையல்லாத நிலையில் தெளிவாக ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு இத்தகைய சிரமங்கள் ஏற்படுவது இயற்கையே.(தங்களை நாங்கள் தொந்தரவு செய்வதைக் கொண்டே உணர்கிறோம்).தங்களை போல் எனக்கும் சனீஸ்வர பகவான் துணை இருக்கிறார் லக்னாதிபதி என்பதால்(சரியா ஐயா?). மகர லக்னம்
ReplyDelete/////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//கோவை இடையர் வீதிக்குச் சென்று யாரைக்கேட்டலும் சொல்வார்கள்!
சமீப காலமாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்று பாருங்கள். அவருடைய மகனும் ஜோதிடர்தான்//
நன்றி வாத்தியரே, இவ்வார இறுதியில் கோவை வருகிறேன் அப்போது கவனித்து
கொள்கிறேன்.///
பாவம் ஜோதிடர்; என்ன பாடு படப்போகிறாரோ!!!!!:-)))
////Sumathi. said...
ReplyDeleteஹலோ வாத்தியாரய்யா,
இங்க நீங்க மனநோய் பத்தி சொல்லியிருக்கீங்க, சரி எனக்கு ஒரு சந்தேகம், சொல்லுங்க.
அதாவது என் கணவருக்கு 6 வருடங்களுக்கு முன்னாடி ஒரு விபத்தில் தலையில் மூளையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு சொல்கள் லாம் கொஞ்சம் அழிஞ்சு வேற மாதிரி குணங்கள் வந்து
இருக்கு. ஒரு சிலது தான் பழைய குணம் வந்திருக்கு.அதுக்கும் இது மாதிரி அமைப்பு தான் காரணமா? எனக்கு தெரிஞ்சு அவருடைய்ய ஜாதகத்தில் மாந்தி னு எதுவுமில்லயே.பதில் ல்லுங்களேன்./////
என் சகோதரின் கணவருக்கு இதே போல பிரச்சினை இருந்தது. உடம்பின் எல்லா திசுக்களுக்கும் ஒரு புத்துயிர் உண்டு. அவைகள் மீண்டும் உதயமாகிவிடும்.
ஆனால் மூளையில் உள்ள செல்கள் அழிந்தால் திருப்பி அவைகள் புத்துயிர் பெற வாய்ப்பில்லை என்று பெரிய மருத்துவர்கள் எல்லாம் கையை விரித்துவிட்டார்கள்!
என்னுடைய பதிவின் சைடு பாரில் ஜகன்நாத ஹோரா என்னும் மென்பொருள் உள்ளது.அதில் கணித்தால் (to be down loaded in your system, before casting the horoscope) மாந்தியின் நிலை தெரியவரும் சகோதரி!
////அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteஆகா மக்கள்ஸ்..
ஐயா என்ற வார்த்தையை வைத்து அரசியல் பண்ணிட்டீங்களே...
அந்த 'ஐயா' கூடுதுறைக்குப் போட்டது...
சுப்பையா ஐயா வேறு தேர்வுல கவனிச்சுக்கலாம்னு சொல்றாரு....
பச்சைப்புள்ள மக்கா நான்...பாவம்,விட்றுங்க.../////
(வடிவேலின் குரலை நினைத்துக்கொண்டு படிக்கவும்) என்ன..இது-சின்னப்பிள்ளைத்தனமா?
//////கூடுதுறை said...
ReplyDelete//Are you convinced now?//
YES SIR !
கூடுதுறை////
Then, it is okay!
////டி.பி.ஆர் said...
ReplyDeleteஎங்களுக்கு (அதாவது கிறீஸ்துவர்களுக்கு) ஜாதகமே இருப்பதில்லை. அதாவது ஐந்தாறு
தலைமுறையாக கிறிஸ்துவ மதத்தில் இருப்பவர்கள் குறி்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள்.
என்னுடைய உறவினர் குடும்பத்தில் நெல்லை மாவட்டத்திலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஜாதகம் எழுதும் பழக்கம் உள்ளதுபோலும். பெண்ணுக்கு ஜாதகத்தில் செவவாய்
தோஷமாம். என்னுடைய தந்தை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் இருக்கார் என்று சொல்லி திருமணத்தை நடத்தினார்கள். இது நடந்தது 1978. முப்பது வருடங்கள்! இருவரும் சந்தோஷமாகா குழந்தைகள், பேரன், பேத்தி என்று இப்போதும்....
வேறொரு நிகழ்வு. என்னுடைய நண்பர் ஒருவருக்காக (அவர் ஒரு NRI) நான் ஒரு நிலம் வாங்கினேன். அதில சில சிக்கல்கள் ஏற்பட்டன. அவருடைய மனைவி என்னுடைய நண்பருடைய ஜாதகத்தை ஜோஸ்யரிடம் காண்பித்து பிரச்சினையை விளக்க அவரஇவருக்கு தாவர சொத்து
பிராப்தம் இல்லை. ஆகவே அதை உடனே விற்றுவிடுவதுதான் நல்லது. மேற்கொண்டு
எந்தசொத்திலும் பணத்தை முடக்க வேண்டாம் என்றும் அறிவுரைத்தாராம். ஆனால் நான் அதை ஏற்காமல் நண்பரை வற்புறுத்தி வில்லங்கம் செய்ய முயன்றவர் மீதவழக்கு தொடர்ந்துவெற்றிபெற்றோம்/. இப்போது என்னுடைய நண்பருக்கு சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமாகநிலம், வீடு, கடைகள் என சொத்து உள்ளது.
ஆகவே இதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்கள் நம்புவதெல்லாம் நடக்கும்
என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை./////
கண்ணதாசன் சொல்வார்: இறைவன் ஒருவனே. மதங்கள் எல்லாம் ஆறுகளைப் போன்றவை
எத்தனை ஆறுகள் இருந்தலும் கடைசியில் அவை கலக்கும் இடம் இறைவன் என்னும் கடலே!
அதுபோல வானவியலும், ஜோதிடமும் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானதுதான் நண்பரே!
இதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குப் பலிக்கும். இல்லாதவர்களுக்குப் பலிக்காது என்ற பேச்சுக்கே
இடமில்லை!
ஜாதகம் என்பது பெரிய விஷயம் இல்லை. உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மூன்றும் தெரிந்தால் ஐங்து நிமிடங்களில் கணித்து விடலாம். எனது பதிவின் சைடு பாரில் இலவச மென்
பொருள் உள்ளது. It is user friendly software. You can down load it and cast horoscopes for any number of persons
ஜோதிடர் சொல்லும் பலன்கள் பலிக்காமல் போவதற்கு இரண்டு காரணங்கள்:
1. பிறந்த நேரம் குறித்தில் உள்ள குறைபாடு
2. அரை குறை அறிவுள்ள ஜோதிடர்
/////கூடுதுறை said...
ReplyDelete//சுப்பையா ஐயா வேறு தேர்வுல கவனிச்சுக்கலாம்னு சொல்றாரு....
பச்சைப்புள்ள மக்கா நான்...பாவம்,விட்றுங்க....///
ஹைய்யா நல்ல வேணும் வேணும் அறிவனுக்கு....////
(வடிவேலின் குரலை நினைத்துக்கொண்டு படிக்கவும்) என்ன..இது-சின்னப்பிள்ளைத்தனமா?
////siv said...
ReplyDeleteவணக்கம் ஐயா
வகுப்பில் கதைசொல்வது போல்கதையும்சொல்லி அதேகதையில் மாந்தீ, மாந்தீயின்ஐந்தாம்இடம்
என்றபாடத்தையும் தந்துள்ளீகள் நன்றி ஐயா
பின்குறிப்பு; கதையில் வறும் A பகுதிகூட நன்றாக் இருந்தது நன்றி
மாணவன்
சிவா/////
அனைவருக்கும் பிடிக்கும் என்று எனக்கும் தெரியும். அதனால்தான் பதிவில் எழுதினேன் நண்பரே!
////THE BOSS said...
ReplyDeleteவாத்தியாரே, ஆர்வத்தை அதிகமாக்கிவிட்டீர்கள் ஐயா. அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.///
Yes Boss, It will be posted tomorrow boss:-))))
FYI: I am in Fort worth, TX -USA(not in canada)
ReplyDeleteThanks for your explanation...
-Shankar
////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா வணக்கம்.சக தோழர்களுக்கும் வணக்கம்.தொழில் முறையல்லாத நிலையில் தெளிவாக ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு இத்தகைய சிரமங்கள் ஏற்படுவது இயற்கையே.(தங்களை நாங்கள் தொந்தரவு செய்வதைக் கொண்டே உணர்கிறோம்).தங்களை போல் எனக்கும் சனீஸ்வர பகவான் துணை இருக்கிறார் லக்னாதிபதி என்பதால்(சரியா ஐயா?). மகர லக்னம்////
சரிதான் நண்பரே! மகர, கும்ப லக்கினக்காரர்கள் பொதுவாகக் கடும் உழைப்பாளிகள்
கூடுதுறை said...
ReplyDelete//பரமேஷ்வர பணிக்கரின் விலாசம் கிடைக்குமா வாத்தியரே?//
வாத்தியாரிடம் சான்றிதழ் வாங்கியவர் விடுவோமா?
எனக்கும் வேண்டும் ஐயா....////
சர்ட்டிஃபிகெட் கொடுக்கிற அளவிற்கு வாத்தியார் ஒன்றும் பெரிய ஆள் இல்லை!
///Anonymous said...
ReplyDeleteFYI: I am in Fort worth, TX -USA(not in canada)
Thanks for your explanation...
-Shankar///
நன்றி யு.எஸ்.ஏ சங்கர்!
ஐயா~! எப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்! சொல்வதைத் திருந்தச் சொல்வது தங்களுக்குக் கை வந்த கலை!
ReplyDelete//
ReplyDeleteதிருவோணம் நட்சத்திரம். மகர ராசி! //
உங்களுக்குமா?
அப்போ இப்ப எட்டாமிடத்துல உக்காந்துகிட்டு கெகேபிக்கேன்னு சிரிச்சிகிட்டிருக்காரே நம்ம ராசி நாதன்!
எப்பத்தான் சார் நம்மளை நல்லா பிழைக்க விடுவாரு?
////VSK said...
ReplyDeleteஐயா~! எப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்! சொல்வதைத் திருந்தச் சொல்வது தங்களுக்குக் கை வந்த கலை!///
வி.எஸ்.கே சார் நன்றி!உங்கள் வருகையும், பின்னூட்டமும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நேரம் இருக்கும்போது தவறாமல் வாருங்கள்!
////நாமக்கல் சிபி said... //
ReplyDeleteதிருவோணம் நட்சத்திரம். மகர ராசி! //
உங்களுக்குமா?
அப்போ இப்ப எட்டாமிடத்துல உக்காந்துகிட்டு கெகேபிக்கேன்னு சிரிச்சிகிட்டிருக்காரே நம்ம ராசி நாதன்!
எப்பத்தான் சார் நம்மளை நல்லா பிழைக்க விடுவாரு?////
அவர் (சனி) எங்கே வேண்டுமென்றாலும் உட்கார்ந்திருக்கட்டும். அவர்
நம்முடைய ராசிநாதர். நமக்குக் கொடுப்பவர்.கெடுப்பவர் அல்ல!
தர்மப் படி எட்டில் இருப்பதால் கையை மடக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வருடம் கழித்து
அவர் பக்கத்து வீட்டுக்குக்குடி போகிவிடுவார். அப்போது சரியாகி விடும்!
Please wait for a year my dear Sibi!
//Please wait for a year my dear Sibi!//
ReplyDeleteம்ம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!
பார்ப்போம்!
அடுத்த வீட்டுக்கு குடி போவதற்குள் நம்ம குடியை முழுகடிச்சிடுவார் போல!
நல்ல கதைகள் ஐயா. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கிறார்கள் போலும் சில நண்பர்கள்; அதனால் தான் நீங்கள் இந்த இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம்.
ReplyDelete///Blogger நாமக்கல் சிபி said...
ReplyDelete//Please wait for a year my dear Sibi!//
ம்ம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!
பார்ப்போம்!
அடுத்த வீட்டுக்கு குடி போவதற்குள் நம்ம குடியை முழுகடிச்சிடுவார் போல!////
அதெல்லாம் நடக்காது. நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் கருணை மிக்கவர். அவரை வழிபடுங்கள்!
////Blogger குமரன் (Kumaran) said...
ReplyDeleteநல்ல கதைகள் ஐயா. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கிறார்கள் போலும் சில நண்பர்கள்; அதனால் தான் நீங்கள் இந்த இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம்.////
இக்கட்டில் முன்பு மாட்டிக்கொண்டு முழிப்பேன். இப்போதெல்லாமம் கவனமாக இருக்கிறேன் குமரனாரே! இப்போது செய்யும் தவறு பதிவுகள் எழுதுவதுதான்.
அது ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன்:)))
வாத்தியாரே, மிதுன லக்னத்தில் மந்தி. என்ன பலோபலனென்று சொல்ல வேண்டுகின்றேன்.
ReplyDelete