மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

15,687,432

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.6.08

தேவதையின் பெயர் தெரியுமா?

எத்தனை எத்தனை தேவதைகள்?

கடவுளே இந்த தேவதைகளையெல்லாம் நீ படைக்காமல் இருந்திருந்தால்
.....................நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது!

இந்த உலகம் மொத்தமும் போர்க்களமாகவே போயிருக்கும்!

அன்பை அறியாமல் இருந்திருப்போம்!

பாசத்தை உணராமல் போயிருப்போம்!

நீ எங்களைப் படைக்கும் போது கொடுத்த இந்தப் பரிசிற்கு நிகரான
பரிசு இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!

அதனால் எங்கள் அறிஞன் ஒருவன் எழுதினான் போலும்:
கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் இவளே என்று!

அந்தத் தேவதை யார்? பெயரென்ன?

யோசித்துவிட்டு கர்சரைக் கீழே கொண்டுபோய் உங்கள் ஊகம் சரிதானா
என்று பார்த்துக்கொள்ளுங்கள்!

V

V

V

V

V

V

V

V

V

V

V

V















++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊகம் சரியாக இருந்ததா?

இது வகுப்பறையின் 150வது பதிவு!
அதனால் ஒரு சிறப்புப் பதிவு - தேவதையைவைத்து!

வாழ்க வளமுடன்!

50 comments:

  1. அந்த தேவதை குழந்தை தான். என்னைப் போன்ற தாயை (ஆணோ, பெண்ணோ) நம்பி அனுப்பித்த கடவுளுக்கு நன்றி:-)

    150வது பதிவு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள ஆவலுடன்!

    ReplyDelete
  2. Just superb!!!
    anbudan aruna

    ReplyDelete
  3. In yesterdays dinamalar there was a news about a mother sold her 2day old infant for just 40rs. In india dalily thousands of infants were abanded by their parents in the dust bins, autos and in hospitals. And still we need to say them they are also angels. There are devils not angels..
    C.V.Mahesh

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்.
    ஆம் ஐயா.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா. உண்மையிலேயே அவர்கள் தேவதைகள் தான்.
    150 வது பதிவுக்கு வாழ்த்துகளோடு "எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?" என்ற தலைப்பிட்ட பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. ஆம் வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் போதனையை கொடுத்து 150ஆவது வகுப்பு வரை வளர்த்து விட்டீர்கள்...

    மதியாம் புத்தகக் கடைக்கு போனேன்... நஸ்ட்ராடமஸ் புத்தகம் ஒன்று கிடைத்தது... உங்கள் பழைய பதிவு ஞாபகம் வந்தது... தீர்க்கதரிசிகளின் கதைகளை இப்பேதேல்லாம் பதிவிடுவதில்லையே... நேரம்மின்மைக் காரணமா??

    வகுப்பறையின் 150வாது பதிவிற்க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. Dear Sir,

    Yes, Child & mom are angel in this beautiful world...

    P.S. Still counting on lessons to read...

    -Shankar

    ReplyDelete
  7. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அந்த தேவதை குழந்தை தான். என்னைப் போன்ற தாயை (ஆணோ, பெண்ணோ) நம்பி அனுப்பித்த கடவுளுக்கு நன்றி:-)
    150வது பதிவு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள ஆவலுடன்!///

    தாயைப் பற்றிய பதிவில், முதல் பின்னூட்டம் ஒரு தாயிடமிருந்து: நன்றி கடவுளே!

    ReplyDelete
  8. ////Anonymous said...
    Mother.///
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////ARUVAI BASKAR said...
    உள்ளேன் ஐயா///

    பதிவேட்டில் குறித்தாகிவிட்டது பாஸ்கர்!

    ReplyDelete
  10. /////Aruna said...
    Just superb!!!
    anbudan aruna////

    நன்றி சகோதரி! ஜெய்ப்பூர் வந்தால் சாப்பாடு போடுவீர்களா?

    ReplyDelete
  11. /////Anonymous said...
    In yesterdays dinamalar there was a news about a mother sold her 2day old infant for just 40rs. In india dalily thousands of infants were abanded by their parents in the dust bins, autos and in hospitals. And still we need to say them they are also angels. There are devils not angels..
    C.V.Mahesh///

    எங்கேயோ நெருடுகிறது சகோதரரே!
    99.9% அத்தனை தாய்களும் தேவதைகள்தான்.
    0.01% பேய்கள் இருக்கலாம்.

    ReplyDelete
  12. /////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்.
    ஆம் ஐயா.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா. உண்மையிலேயே அவர்கள் தேவதைகள் தான்.
    150 வது பதிவுக்கு வாழ்த்துகளோடு "எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு சொல்ல முடியுமா?" என்ற தலைப்பிட்ட பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.////

    ஒருநாள் பொறுத்திருங்கள் சகோதரரே! தமிழில் தட்டச்சுவதுதான் கொஞ்சம் படுத்துகிறது!
    நேரத்தை உருஞ்சுகிறது!

    ReplyDelete
  13. /////VIKNESHWARAN said...
    ஆம் வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் போதனையை கொடுத்து 150ஆவது வகுப்பு வரை வளர்த்து விட்டீர்கள்...
    மதியம் புத்தகக் கடைக்கு போனேன்... நஸ்ட்ராடமஸ் புத்தகம் ஒன்று கிடைத்தது... உங்கள் பழைய பதிவு ஞாபகம் வந்தது... தீர்க்கதரிசிகளின் கதைகளை இப்பேதேல்லாம் பதிவிடுவதில்லையே... நேரமின்மைக் காரணமா??
    வகுப்பறையின் 150வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள்...////

    எங்கே போய்விடப்போகிறது? பாடங்கள் முடியட்டும். பின்னால் வைத்துக்கொள்வோம் கச்சேரியை!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஆசிரியரே...

    ReplyDelete
  15. தேவதைகள் குழந்தைகள்தான் யாரில்லையென்றது, சின்னச் சின்ன தேவதைகள்...

    ReplyDelete
  16. /////Anonymous said...
    Dear Sir,
    Yes, Child & mom are angel in this beautiful world...
    P.S. Still counting on lessons to read...
    -Shankar///

    Child & MOM are beautiful!: But astrology lesson is more beautiful and so you are counting? he ha ha :-)))))))

    ReplyDelete
  17. ////தமிழன்... said...
    வாழ்த்துக்கள் ஆசிரியரே...

    நன்றி என் அருமை நண்பரே!

    ReplyDelete
  18. ////தமிழன்... said...
    தேவதைகள் குழந்தைகள்தான் யாரில்லையென்றது, சின்னச் சின்ன தேவதைகள்.../////

    அதிலென்ன சந்தேகம்! மனிதன் கவலைகளை மறப்பது குட்டி தேவதைகளால்தான்!

    ReplyDelete
  19. ஹய்யோ... 150வது பதிவா...

    பசங்களுக்கெல்லாம் ஸ்வீட் ரெடி செஞ்சு கொடுத்துடுங்க. ஆவலோடு இருக்கோம்..

    வாழ்த்துக்கள் ஆசானே.... :))

    (உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு)

    (ஆசானே.. கோச்சுக்கப்படாது. எல்லார் வூட்டு வாசல்லயும் போய் பின்னூட்ட பெட்டிய மாத்துங்கன்னு குரல் கொடுத்துட்டு இருக்கேன். நம்ம கிளாஸ்ல கூட இப்படி இருக்கறது மன்சுக்கு கஸ்டமாக்கீது :( )

    ReplyDelete
  20. அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    அம்மா இல்லாத குழந்தைகட்கும்
    ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

    கவலையில் வருவதும் அம்மா அம்மா
    கருணையில் வருவதும் அம்மா அம்மா
    தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
    தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

    பூமியின் பெயரும் அம்மா அம்மா
    புண்ணிய நதியும் அம்மா அம்மா
    தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    அம்மா இல்லாத குழந்தைகட்கும்
    ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    -கவியரசர் பாடல்.

    ஆண்டவன் ஒரே சமயத்தில்
    எல்லோரையும் பார்த்துகொள்ள
    சிரமமாக உள்ளது என வீட்டுக்கு
    ஒரு அன்னை வைத்தான் என்று
    சொல்வார்கள்,ஒரு பேச்சுக்கு!

    அழகு,பிஞ்சு குழந்தைகளின் படங்கள்
    கவித்துவமாக இறைவனுடன் கற்பனை
    பேச்சுக்கள்,தேவதையின் வரவு என
    குருஜி உங்கள் 'வகுப்பு அறை' சினிமாவின் 150ம் பதிவு விழா அற்புதம்!!
    இந்த வரலாற்றில் நானும் ஒரு பின்னூட்ட வாயில் காப்போனாக பங்குபெறுவது பெருமை தருகிறது!!!!

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா
    மழலையின் சிரிப்பிலே தெய்வத்தையே காணலாம். உண்மை அவர்கள் தேவதைகளே
    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    மாணவன்
    சிவா

    ReplyDelete
  22. Times are changing. How many of the
    present day mothers breast feed their baby! Many opt to leave
    their child with strangers so that they can go out to work and make money!

    ReplyDelete
  23. ////சென்ஷி said...
    ஹய்யோ... 150வது பதிவா...
    பசங்களுக்கெல்லாம் ஸ்வீட் ரெடி செஞ்சு கொடுத்துடுங்க. ஆவலோடு இருக்கோம்..
    வாழ்த்துக்கள் ஆசானே.... :))
    (உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு)
    (ஆசானே.. கோச்சுக்கப்படாது. எல்லார் வூட்டு வாசல்லயும் போய் பின்னூட்ட பெட்டிய மாத்துங்கன்னு குரல் கொடுத்துட்டு இருக்கேன். நம்ம கிளாஸ்ல கூட இப்படி இருக்கறது மன்சுக்கு கஸ்டமாக்கீது :( )////

    நான் எழுதுவதே ஸ்வீட்டாகத்தானே (சுவாரசியமாக) எழுதுகிறேன். தினமும் உங்களுக்கு அதைத் தருகிறேனே! இருந்தாலும் அடுத்த பதிவு ரஸமலாய். திகட்டும்படி ஸ்வீட்டாக இருக்கும். படித்த பிறகு சொல்லுங்கள்!

    ReplyDelete
  24. ////தமாம் பாலா said...
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    அம்மா இல்லாத குழந்தைகட்கும்
    ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    கவலையில் வருவதும் அம்மா அம்மா
    கருணையில் வருவதும் அம்மா அம்மா
    தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
    தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை
    பூமியின் பெயரும் அம்மா அம்மா
    புண்ணிய நதியும் அம்மா அம்மா
    தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    அம்மா இல்லாத குழந்தைகட்கும்
    ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
    அம்மா என்பது தமிழ் வார்த்தை
    அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
    -கவியரசர் பாடல்.
    ஆண்டவன் ஒரே சமயத்தில்
    எல்லோரையும் பார்த்துகொள்ள
    சிரமமாக உள்ளது என வீட்டுக்கு
    ஒரு அன்னை வைத்தான் என்று
    சொல்வார்கள்,ஒரு பேச்சுக்கு!
    அழகு,பிஞ்சு குழந்தைகளின் படங்கள்
    கவித்துவமாக இறைவனுடன் கற்பனை
    பேச்சுக்கள்,தேவதையின் வரவு என
    குருஜி உங்கள் 'வகுப்பு அறை' சினிமாவின் 150ம் பதிவு விழா அற்புதம்!!
    இந்த வரலாற்றில் நானும் ஒரு பின்னூட்ட வாயில் காப்போனாக பங்குபெறுவது பெருமை தருகிறது!!!!/////

    பாட்டுடன் கூடிய சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி பாலா!
    வாயில் வழியாக வருகின்ற பார்வையாளர், விருந்தினர், உடன் பிறவா சகோதரர், உயிர் நண்பர்,
    வாசகர் என்ற ஏதாவது ஒரு அடையாளத்துடன் வருபவர்களாகத்தான் நான் ஒவ்வொருவரையும் நினைக்கிறேன். காப்பாளரென்று யாரும் இருக்க வாய்ப்பில்லை! நானும் அப்படி நினைக்கவில்லை:-)))

    ReplyDelete
  25. ////siv said...
    வணக்கம் ஐயா
    மழலையின் சிரிப்பிலே தெய்வத்தையே காணலாம். உண்மை அவர்கள் தேவதைகளே
    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    மாணவன்
    சிவா/////

    நன்றி சிவனாரே!

    ReplyDelete
  26. /////Anonymous said...
    Times are changing. How many of the
    present day mothers breast feed their baby! Many opt to leave
    their child with strangers so that they can go out to work and make money!/////

    அது இன்றைய அவலம். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை. எளிமையாக இருப்போம்
    பணம் மட்டும் சந்தோசத்தைத் தராது என்ற சிந்தனை இல்லாத நிலையே அதெற்கெல்லாம் காரணம் அனானி!

    ReplyDelete
  27. தாய் தேவதை மட்டும் அல்ல. அந்த தெய்வமே தாய்தான்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  28. 150 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போது எங்கள் வாத்தியருக்கு வாழ்த்துகள்.

    //பாவம் ஜோதிடர்; என்ன பாடு படப்போகிறாரோ!!!!!:-)))//
    அது அவரு டைய கஸ்ட காலம் போலும்...:-)))

    வாத்தியரே மாந்தி மாந்தி யோசிக்கிறேன், இந்த மாந்தி எங்க இருக்குன்னே கண்டுபிடிக்க முடியவில்லை. (ஜகன்நாத ஹோரா-வில்), அதை எப்படி பார்ப்பது என்று சொல்லி கொடுங்கள்...

    ReplyDelete
  29. வாத்தியரே, குழந்தைகள் படம் வேண்டுமென்றால் ஒரு மின்னன்சல் செய்திருகிலாமே.. எண்ணுடைய அன்மை புகைபடத்தில் இருந்து ஒரு 4புகைபடம் அனுப்பிருப்பேனே...அதுக்காக இப்படி காஸ்டபட்டு GOOGLE IMAGE-il தேடி இருக்க வேண்டியதிலை..

    சரி சரி. அடுத்த முறை குழந்தை பதிவு இடும் பொழுது என்னை நினைத்து கொள்ளுங்கள். :-)))

    ReplyDelete
  30. 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா!!

    GK, BLR..

    ReplyDelete
  31. /////Anonymous said...
    தாய் தேவதை மட்டும் அல்ல. அந்த தெய்வமே தாய்தான்.
    அன்புடன்
    இராசகோபால்/////

    தாயில்லாமல் நானில்லை
    தானே எவரும் பிறந்ததில்லை!
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னைக் காக்கின்றாள்!

    காப்பதால் தெய்வம்தானே சாமி!

    ReplyDelete
  32. ////கோவை விமல்(vimal) said...
    150 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போது எங்கள் வாத்தியருக்கு வாழ்த்துகள்.
    //பாவம் ஜோதிடர்; என்ன பாடு படப்போகிறாரோ!!!!!:-)))//
    அது அவரு டைய கஸ்ட காலம் போலும்...:-)))
    வாத்தியரே மாந்தி மாந்தி யோசிக்கிறேன், இந்த மாந்தி எங்க இருக்குன்னே கண்டுபிடிக்க முடியவில்லை. (ஜகன்நாத ஹோரா-வில்), அதை எப்படி பார்ப்பது என்று சொல்லி கொடுங்கள்...

    அதில் GL என்று ராசிக் கட்டத்தில் போட்டிருக்கும் பாருங்கள் அதுதான் குளிகன் = மாந்தி!
    அவருக்கு இரண்டு பெயர் உண்டு!

    ReplyDelete
  33. ////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, குழந்தைகள் படம் வேண்டுமென்றால் ஒரு மின்னன்சல் செய்திருகிலாமே.. எண்ணுடைய அன்மை புகைபடத்தில் இருந்து ஒரு 4புகைபடம் அனுப்பிருப்பேனே...அதுக்காக இப்படி காஸ்டபட்டு GOOGLE IMAGE-il தேடி இருக்க வேண்டியதிலை..
    சரி சரி. அடுத்த முறை குழந்தை பதிவு இடும் பொழுது என்னை நினைத்து கொள்ளுங்கள். :-)))////

    நீரே குழந்தைதான். படத்தை அனுப்பிவையுங்கள். அடுத்த குழந்தைப் பதிவில் போட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  34. /////Geekay said...
    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா!!
    GK, BLR..////

    கார்டன் சிட்டியில் இருக்கிறீர்கள் பொக்கேயெல்லாம் கிடையாதா?

    ReplyDelete
  35. //SP.VR. SUBBIAH said...
    நீரே குழந்தைதான். படத்தை அனுப்பிவையுங்கள். அடுத்த குழந்தைப் பதிவில் போட்டுவிடுகிறேன்.//

    நான் குழந்தையாய் இருந்த போது எடுத்த படத்தை அனுப்பி விட்டேன் வாத்தியரே.

    ReplyDelete
  36. 150வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  37. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    நீரே குழந்தைதான். படத்தை அனுப்பிவையுங்கள். அடுத்த குழந்தைப் பதிவில் போட்டுவிடுகிறேன்.//
    நான் குழந்தையாய் இருந்த போது எடுத்த படத்தை அனுப்பி விட்டேன் வாத்தியரே./////

    எதை அனுப்பினாலும் சரி!படத்தைப் பார்த்த பிறகு, பின்னூட்டத்தில் யாரும் வையாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  38. /////டி.பி.ஆர் said...
    150வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.////

    நன்றி நண்பரே உங்கள் மனமுவந்த வாழ்த்திற்கு!

    ReplyDelete
  39. //எதை அனுப்பினாலும் சரி!படத்தைப் பார்த்த பிறகு, பின்னூட்டத்தில் யாரும் வையாமல் இருந்தால் சரி!//

    என்னால் உங்களுக்கு புகழ் வருமே தவிர யாரும் வைய மாட்டார்கள் வாத்தியரே. இட்டு பாருங்கள் ஒருமுறை எனது படத்தை பிறகு பாருங்கள் வரவேற்பை

    ReplyDelete
  40. ஐயா,

    அருமையான பதிவு. தாயின் பெருமையை இவ்வளவு எளிதாக யாரும் கூற முடியாது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. 150 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    தேவதைகள் பொய்யய்யா!
    அம்மா,மகள்,பெயர்த்தி
    அன்பு மிக்க வார்த்தையுடன்
    அனைவர்க்கும் உண்மையையய்யா!
    வாழ்விணையர் அன்பிருந்தால்
    வாழ்வேதான் இன்பமன்றோ!
    வேறெதற்கு வெறும் வார்த்தை!

    ReplyDelete
  42. //கார்டன் சிட்டியில் இருக்கிறீர்கள் பொக்கேயெல்லாம் கிடையாதா?\\

    Sure, :-))

    ReplyDelete
  43. வகுப்புஅறை கோயிலில்'தேவதைகளை'ஆராதிக்கும்பூசாரி நீங்கள், வாசகராய் வந்து 'துவாரக பாலகர்கள்' ஆனவர்கள் நானும் கோவை விமலும் என்பது என் நகைச்சுவையான கற்பனை :-)))

    தேவதைகள் பெற்ற பிள்ளைகள் அவருக்கு வயதான காலத்தில் திருப்பி கொடுக்கும் பரிசு பற்றி அறிய வாருங்கள் என் வலை குடிசைக்கு..
    www.bala-win-paarvai.blogspot.com
    (யாதும் ஊரே யாவரும் கேளிர்-பதிவு)

    நீங்கள் ஒரு பின்னூட்டம் இட்டு பிள்ளையார் சுழி போட்டால், வகுப்பு அறை மாணவர்/விசிட்டர்களும் கூட எட்டிப்பார்க்க ஏதுவாகும் அல்லவா?
    -அன்பே சிவம், அறிவே தவம் :-))

    ReplyDelete
  44. //////கோவை விமல்(vimal) said...
    //எதை அனுப்பினாலும் சரி!படத்தைப் பார்த்த பிறகு, பின்னூட்டத்தில் யாரும் வையாமல் இருந்தால் சரி!//
    என்னால் உங்களுக்கு புகழ் வருமே தவிர யாரும் வைய மாட்டார்கள் வாத்தியரே.
    இட்டு பாருங்கள் ஒருமுறை எனது படத்தை பிறகு பாருங்கள் வரவேற்பை!///

    சரி, என் நண்பன் பழநியப்பனை வேண்டிக்கொண்டு விட்டுப் படத்தைப் போட்டு விடுகிறேன்.
    மிச்சத்தை அவன் பார்த்துக்கொள்ளட்டும்!:-)))

    ReplyDelete
  45. ////மணிவேல் said...
    ஐயா,
    அருமையான பதிவு. தாயின் பெருமையை இவ்வளவு எளிதாக யாரும் கூற முடியாது. வாழ்த்துக்கள்.////

    கட் & பேஸ்ட் பதிவு சாமி! மின்னஞ்சலில் வந்தது. பாராட்டு முதல் ஆசாமிக்கே (படைப்பாளிக்கே)!

    ReplyDelete
  46. ////Thamizhan said...
    150 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    தேவதைகள் பொய்யய்யா!
    அம்மா,மகள்,பெயர்த்தி
    அன்பு மிக்க வார்த்தையுடன்
    அனைவர்க்கும் உண்மையையய்யா!
    வாழ்விணையர் அன்பிருந்தால்
    வாழ்வேதான் இன்பமன்றோ!
    வேறெதற்கு வெறும் வார்த்தை!///

    நன்றி சொல்வேன் தமிழன்பருக்கு!
    பதிவில் பின்னூட்டம் இட்டதற்கு!

    ReplyDelete
  47. ///Geekay said...
    //கார்டன் சிட்டியில் இருக்கிறீர்கள் பொக்கேயெல்லாம் கிடையாதா?\\
    Sure, :-))////

    யாருக்குக் கொடுப்பதென்றாலும் பொக்கேயெல்லாம் வாங்கிக் காசை வீணாக்காதீர்கள்
    புத்தகங்களைக் கொடுங்கள். புத்தகங்களாவது விற்கட்டும்!
    சிலராவது அவற்றைப் படிக்கட்டும்!

    ReplyDelete
  48. /////தமாம் பாலா said...
    வகுப்புஅறை கோயிலில்'தேவதைகளை'ஆராதிக்கும்பூசாரி நீங்கள்,
    வாசகராய் வந்து 'துவாரக பாலகர்கள்' ஆனவர்கள் நானும் கோவை விமலும்
    என்பது என் நகைச்சுவையான கற்பனை :-)))

    தேவதைகள் பெற்ற பிள்ளைகள் அவருக்கு வயதான காலத்தில் திருப்பி
    கொடுக்கும் பரிசு பற்றி அறிய வாருங்கள் என் வலை குடிசைக்கு..
    www.bala-win-paarvai.blogspot.com
    (யாதும் ஊரே யாவரும் கேளிர்-பதிவு)
    நீங்கள் ஒரு பின்னூட்டம் இட்டு பிள்ளையார் சுழி போட்டால்,
    வகுப்பு அறை மாணவர்/விசிட்டர்களும் கூட எட்டிப்பார்க்க ஏதுவாகும் அல்லவா?////

    பிள்ளையார் சுழி மட்டும் அல்ல, சிவமயமும் சேர்த்துப்போட்டுவிட்டேன்

    1. முதலில் தமிழ்மணத்திற்கு இணைப்பைக் கொடுங்கள்
    2. கவிதை கதைகளைக் குறைத்துக் கொண்டு பொதுப் பிரச்சினைகளை எழுதுங்கள்
    3. நகைச்சுவைகளைப் படிப்பதற்குத்தான் கூட்டம் அதிகம். எைதயும் நகைச்சுவையோடு எழுதுங்கள்
    4. உணர்வுபூர்வமாக உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்
    5. நாள் ஒன்றுக்கு 500 இடுகைகள் பதிவாகின்றன. திருவிழாக் கூட்டம். பல நல்ல பதிவுகள்
    கண்ணில் படாமல் போய்விடும் அபாயம் உள்ளது
    6. பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். ஆத்மதிருப்திக்காக எழுதுங்கள்
    நம் சிந்தனைகளை, எண்ணங்களைப் பதிவிடுகிறோம் அவைகள் ஆவணமாகின்றன. காலத்தால் நிற்கும்
    என்ற மகிழ்வோடு எழுதுங்கள்

    அன்புடன்
    வகுப்பறை வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com