மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.2.08

வாழ்க்கையும் சீட்டாட்டமும்

வாழ்க்கையும் சீட்டாட்டமும்

மீண்டும்
ஜோதிடம் - பகுதி 3

இளைஞனாக இருந்த காலத்தில் எனக்கு ஜோதிடத்தின்
மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. உயர் நிலைப் பள்ளி
மற்றும் கல்லூரியில் படித்த காலத்தில் எல்லாம் அதாவது
1964ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாக இருந்த
வன் நான். அந்தக் கால கட்டத்தில், அரசியல் கூட்டங்க
ளுக்கு எல்லாம் தவறாமல் நண்பர்களுடன் சென்று வந்தி
ருக்கிறேன். அப்போதெல்லாம் ஜோதிடத்திலும், ஆன்மீகத்
திலும் நாட்டம் இல்லாமல் இருந்தது.

நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், கஞைர்.மு.க, சத்தியவாணி
முத்து அம்மையார், அறிஞர் அண்ணா ஆகியோர்கள் பேசும்
கூட்டம் என்றால் தவறாமல் போய் வருவேன். கலைஞரையெல்லாம்
அப்போதே மேடையிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன்
ஆட்டோகிரா·பெல்லாம் வாங்கிவைத்தது இன்றளவும் பத்திரமாக
இருக்கிறது.

எங்கள் வீட்டின் அருகில் ஒரு மன்ற அலுவலகம் இருந்தது. இருபது
சென்ட் காலி இடத்தில் பெரிய கூரை வேய்ந்த கொட்டகையில்
இருந்தது அது. ஆற்று மணல் தரை. நீளமான பெஞ்சுகள், சுற்றிலும்
பெரிய மரங்கள் என்று ரம்மியமான சூழ்நிலையோடு இருக்கும்.
நாளேடுகள், வார, மாத ஏடுகள் என்று படிப்பதற்கு இலவசமாக,
நிறையவே கிடைக்கும் பாதி நேரம் அங்கேதான் இருப்பேன்.

நான் சென்றால் அங்கே இருக்கும் பெரிசுகள் எல்லாம்
உற்சாகமாகி விடுவார்கள் பல கட்டுரைகளை, செய்திகளை
என்னைக் குரல் கொடுத்துப் படிக்கச் சொல்லி அனைவரும்
சுற்றி அமர்ந்து கேட்பார்கள். சுண்டல், வடை, காபி,
டீயென்று மன்றச் செலவிலேயே தின்பதற்கும் நிறையக்
கிடைக்கும். அதோடு வாரம் ஒரு ஆங்கிலப் படத்திற்கு
என்னைப் போன்ற இளைஞர்களை, அதுவும் மன்றச்
செலவிலேயே கூட்டிக் கொண்டு செல்வார்கள். நடைபெறும்
படத்தின் கதைச் சுருக்கம் பெரிய கரும்பலகையில் தமிழில்
எழுதி வைத்திருப்பார்கள். அதையும் என்னைப் படிக்கச்
சொல்லிக்கேட்டு விட்டுத்தான் அரங்கிற்குள் வருவார்கள்.
இம்பீரியல் திரை அரங்கிலும், விக்டோரியா திரையரங்கிலும்
கண்டு களித்த திரைப்படங்கள் ஏராளம்

அதெல்லாம் ஒரு கலக்கலான காலம். அது நடந்ததெல்லாம்
சேலத்தில். அப்போது எங்கள் தந்தையார் சேலத்தில்
இருந்ததால் நாங்களும் அங்கேதான் இருந்தோம்.

பிறகு கோவைக்கு எங்கள் தந்தையார் மாறி வந்தபோது,
அந்தத் தொடர்பெல்லாம் போய் விட்டது. இங்கே வேறு
மாதிரியான ஒரு நட்பு வட்டம் கிடைத்தது. அரசியல்
மாயை எல்லாம் நீங்கி ஒரு புத்தொளி கிடைத்தது.

எங்கள் அப்பாவின் ஜோதிட நண்பர்கள், எங்கள் உறவி
னர்கள் மூலமாக பல கவிஞர்கள், இலக்கியவாதிகளின்
நட்பெல்லாம் கிடைத்தவுடன், பாதை மாறியது.

ஒரு பத்தாண்டுகாலம், நிறைய ஜோதிடர்களைச் சந்திக்கும்
வாய்ப்பும் கிடைத்தது. அதில் எங்கள் தந்தையாரின் நண்பர்
பாலக்காடு கிருஷ்ண மூர்த்தி பணிக்கர் என்பவர் மிகவும்
அற்புதமான ஜோதிடர். அசத்தலாகப் பலன்களைச் சொல்
வார்.

என் சகோதரனுக்கு, "வேலை எப்போது கிடைக்கும்?" என்று
ஒருமுறை கேட்டபோது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு,
வேலை கிடைக்கும் தேதியையே எழுதிக் கொடுத்தவர்
அவர். அதோடு மட்டுமல்ல, "உனக்கு யோகமான ஜாதகம்,
நீ விரும்பும் வேலையே கிடைக்கும், ஒரு இடத்தில் அல்ல,
ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் இருந்து உனக்கு வேலை
கிடைக்கும். எதில் சேர்வதென்று திகைத்து, கடைசியில்
சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து வேலைக்குச் சேர்வாய்"
என்றும் சொன்னார்.

அதேபோல்தான் நடந்தது. மூன்று தேசிய வங்கிகளில்
இருந்து பணி உத்தரவு ஒரே நேரத்தில் வர, கடைசியில்
அவர் சொன்னபடியே சீட்டில்தான் முடிவு செய்து எனது
சகோதரன் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்த சகோதரனுக்
கும் அவர் சொன்ன தேதியில் தான் வேலை கிடைத்தது.

இதுபோன்று பல அசத்தலான பலன்களைச் சொல்லி எங்கள்
பெரு மதிப்பிற்கு ஆளான அவர் இன்று இல்லை. அவரால்
தான் எனக்கு ஜோதிடத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது.

அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பிறகு (ஓரளவு) கற்றுக் கொண்டேன். முழுதாகக் கற்றுக்
கொள்ளவில்லை. முழுதாகக் கற்றுக் கொள்ள யாராலும்
முடியாது! ஏன் என்பதைப் பின் ஒரு பதிவில் தெளிவு
படுத்துகிறேன்

எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும், அதற்கு உதவி
யவர் யார் என்பதையும் முன் பதிவில் எழுதியிருக்கிறேன்.

மருத்துவத்தில், ஒரு உடம்பிற்கு முப்பது வகையான டாக்டர்கள்
இருப்பதைப்போல ஜோதிடத்திலும் பல பிரிவுகள் உள்ளன.
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் கெட்டிக்காரராக
இருப்பவருக்கு அது மட்டும்தான் சூப்பராகச் சொல்லவரும்.
நோய் நொடிகள் ஆயுளைக் கணித்துச் சொல்லும் சோதிட
ருக்கு அது மட்டும்தான் வசப்படும். இப்படிச் சில குழப்பங்
கள் ஜோதிடத்திலும் உண்டு.

ஜோதிடத்தில், புத்தகப் பாடத்துடன், அனுபவப் பாடமும்
உள்ளவர்தான் சிறந்த ஜோதிடராகப் பரிணமிக்க முடியும்.
ஆயிரம் ஜாதகங்களுக்காவது பார்த்துப் பலன் சொல்லிய
வருக்குத்தான், அடுத்தடுத்து வரும் ஜாதகங்களுக்கு அசத்த
லாகப் பலன் சொல்ல முடியும்.

எனக்குத் தொழில் வேறு. ஆனால் அனுபவத்திற்கு எங்கே
போவது என்ற பிரச்சினை இல்லை. தொடர்ந்து,
1980 முதல் 2005ம் ஆண்டு வரை(சுமார் 25 ண்டு காலம்)
நான் வாங்கிச் சேர்த்த பல ஆங்கில ஜோதிட மாத இதழ்கள்
என்னிடம் சேமிப்பாக உள்ளன. அதில் பல ஜோதிடர்களின்
அபூர்வமான கட்டுரைகள் உள்ளன. How I predicted? என்று
வந்த பல தொடர் கட்டுரைகள் உள்ளன. இந்தியாவின் பிரபலங்
களின் ஜாதகங்கள் ஒன்று விடாமல் அவற்றில் உள்ளன.
Referenceற்குத் தேவைப்பட்டால் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அந்த மாத இதழ்கள்தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தன.

அதோடு அந்தக் காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
என் தாய் வழிப்பாட்டனார், எனது பெரியப்பா போன்ற அற்புதமான
மனிதர்கள் எழுதி வைத்திருந்தஅல்லது சேகரித்து வைத்திருந்த
பல நூற்றுக் கணக்கான ஜாதகக் குறிப்பு ஏடுகளும்
எனக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் Practical - பரிசோதனை
களுக்கு உட்படுத்தி நிறைய ஆராய்ச்சிகளும் செய்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு 'குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்.
ஆகவே இளம் வயதில் சுக்கிர திசை வந்தால்
படிப்பு பாழாகி விடும்' என்ற செய்தியைப்
படித்தால் என் கைவசம் உள்ள அந்த ஜாதகங்களில்
(அத்தனையும் உறவினர்களுடையது என்பதோடு,
நிலைமை தெரியும் என்பதால்) படிப்பைத் தவற விட்டவர்
கள் எத்தனை பேர், அவர்களுக் கெல்லாம் குட்டிச்
சுக்கிர திசைதான் காரணமா? அல்லது படிக்கிற காலத்தில்
ஏழரைச் சனி வந்தால் படிப்பு பாழாகும் என்று மற்றொரு
விதியும் இருக்கிறதே அதுதான்காரணமா என்று அறிந்து தெளிவதற்கெல்லாம் அந்த ஜாதகசேகரிப்புப் பழக்கம் கை கொடுத்தது.

சரி, விஷயத்திற்கு வருகிறேன். ஜோதிடத்தின் முதல் பாடம் என்ன தெரியுமா?

A person who know Astrology can only indicate what will take place in future and he should not certainly say what will definitely happen. That is in the hands of the Creator none other than the Almighty.

ஆமாம் ஜோதிடன் என்பவன் என்ன நடக்கலாம் என்று
கோடிட்டுக்காட்டலாமே தவிர, என்ன நடக்கும் என்று அறுதியிட்டுக் கூறக்கூடாது.அதைச் சொல்லும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு!

ஜாதகத்தின் ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம். அதில் பல
விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அதைத் தெளிவு படுத்திச் சொல்லும் திறமை. எந்தச் சோதிடனுக்கும்கிடையாது. மனித வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அதைவைத்து நடக்கும். அங்கே ஜோதிடன் தோற்று விடுவான். ஆகவே எவ்வளவு பெரிய ஜோதிடனுக்கும் 90% பலன் களைத்தான் சொல்ல இயலும்.அதையும் சொல்ல வல்ல மகான்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் சொன்னதெல்லாம் ஜோதிடத்தை வைத்தல்ல,
தெய்வ அனுக்கிரகம் என்று வைத்துக் கொள்ளலாம்.

It is called as intuition power. 

ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொள்ளுங்கள்.
தெய்வத்தை முழுதாக நம்புங்கள். உங்களை அவர் பார்த்துக் கொள்வார். அதைச் சொல்வதற்காகத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து
எழுதியிருக்கிறேன்.

இறைவனை மீறிய சக்தி எதுவும் கிடையாது. இறைவன்
ஒருவன்தான் கடலைப் போல! அத்தனை மதங்களுமே ஆறுகளைப்போல - வெவ்வேறுபெயர்களைக் கொண்டிருந்தாலும் இறுதியில் கலப்பது
என்னவோ கடலில்தான்.

இப்போது உள்ள பிரச்சினைகள் எப்போது தீரும் என்பதைத்
தெரிந்து கொள்ள ஜோதிடரிடம் போகலாம்.ஆனால் பிரச்சினைகள் முழுதாகத் தீராது. தொடந்து வேறு ஒன்று வரும். பிரச்சினைகள் மூற்றிலும் தீர்ந்தவனை சனி இங்கே விட்டு வைக்க மாட்டான். கூட்டிக் கொண்டு போய்
விடுவான். ஆமாம் சாகும் வரை ஏதாவதுபிரச்சினை ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டேதான் இருக்கும்

வாழ்க்கை என்பது சீட்டாட்டத்தைப் போல! உங்கள் கையில்
எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு சீட்டை இறக்கிவிட்டால், கீழே இருந்துவேறு ஒரு சீட்டை
எடுத்தே ஆகவேண்டும். சீட்டை மடக்கி வைத்து விட்டு ஆட்டத்தை
முடித்துவிடலாமா என்று நினைத்தால் அது முடியாது. அதையும்
சனிதான் அல்லது உங்கள் ஜாதகப்படி அதற்குரியவன் யாரோ
அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆகவே ஜோதிடத்தை ஊறுகாய்போல பயன் படுத்துங்கள். முழுச்
சாப்பாடாக ஆக்கிவிடாதீர்கள்.
-----------------------------------
அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று
நிறையப் பேர்கள்கேட்டுள்ளார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
இப்போது மென்பொருள் உள்ளதால் அது கணித்துக் கொடுத்துவிடும்.
ஆகவே அந்தப் பாடத்தைக்கற்றுக் கொள்வது தேவையற்றது -
நேரத்திற்குக் கேடு என்பது என் எண்ணம். ஒரு மணி நேரம் ஆகும்

நான் கற்றுக்கொண்ட காலத்தில் கணினி எல்லாம் கிடையாது.
வேறு வழியில்லாமல் மண்டையைக் குடைந்து அதையெல்லாம்
மனதில் ஏற்றினேன்.

இல்லை நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
என்பவர்களுக்காக அவற்றைக் கஷ்டப்பட்டு Excel Formatல்
தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறேன்.

ஆகவே விருப்பம் உள்ளவர்கள் அதைப் படித்து இன்புறலாம்
அல்லது கஷ்டப்படலாம்:-)))
=----------------------------------
சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.

அதேபோல மற்ற கிரகங்களுக்கும், லக்கினத்திற்கும் மதிப்
பெண் கொடுத்துக் கொண்டே வந்தால் மற்ற கிரகங்களின்
சுய வர்க்கம் கிடைக்கும்

சுயவர்க்கம் (7 கிரகங்கள் + லக்கினம்) எட்டு அட்டவனைகள் கிடைக்கும்
ராகு கேதுவிற்கு சொந்த வீடுகள் கிடையாது.ஆகவே சுய வர்க்கமும் கிடையாது.

அந்த எட்டு அட்டவனைகளையும் கூட்டினால் மொத்த மதிப்பெண் கிடைக்கும் அதுதான் மொத்த வர்க்கம் அல்லது அஷ்டகவர்க்கம்.

சூரியன் -------48
சந்திரன் ------ 49
செவ்வாய் --- --39
புதன் ---------- 54
வியாழன் ---- --56
சுக்கிரன் ----- 52
சனி ----------- 39
-----------------------
மொத்தம் -- -- 337
-------------------------
உங்கள் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டவணையாக
எழுதுங்கள். 8 x 7 = மொத்தம் 56 அட்டவனைகள் எழுத
வேண்டியதிருக்கும். எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்தீர்கள்
என்றால் இறுதியில் ஒவ்வொரு கிரகத்தின் தனி வர்க்கமும்,
மொத்த வர்க்கமும் 8 அட்டவனைகளாக உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த 8 அட்டவனைகளுக்கு உரிய பாடங்கள், பலன்கள் எல்லாம்
இனிமேல் தொடர்ந்து வரும். பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
உங்கள் ஜாதகப் பலனை யாருடைய உதவியும் இன்றி நீங்களே அறியும்
வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் 

Wishing you all the best

கட்டுரையின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கி
றேன். அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
வாத்தியார்

(தொடரும்)

========================================

32 comments:

Skumar said...

//
ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொள்ளுங்கள்.
தெய்வத்தை முழுதாக நம்புங்கள்
உங்களை அவர் பார்த்துக் கொள்வார்.
//

மிகவும் உண்மை.

Anonymous said...

Dear sir

Thank you very much for the posting. Your explanation is super! I have one question regarding minimum paral table which you had given in the previous lession..In that 11th house (which represents gains, acquistions) has 54 points, where as 7th house(spouse, martial happiness)has only 19 points...

What does this minimum point indicate? Is it minimum or maximum? Please explain me with your views and also let me know that wat the causes if the houses didnot meet the minimum requirement..

Thanks in advance!
Shankar

பிரேம்ஜி said...

அருமை. சுவாரஸ்யமான பதிவு.

Anonymous said...

குருவே,

அனைவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஜோதிட வகுப்புகளை நடத்துவதற்கு நன்றி.

அன்புடன்
இராசகோபால்

sara said...

Anbu aiyya,
Its simply intersting to read your pesentation. Thank you very much.

Regadrs,
Sara,
Colombo

வடுவூர் குமார் said...

ஐயா முதல் ரவுண்டைவிட இரண்டாவது அருமையாக இருக்கு.
உங்கள் ஆலோசனையும்/விளக்கமும் உண்மையை உரக்கச் சொல்கிறது.

vimal said...

உள்ளேன் ஐயா,
சோ அbba இப்பவே கண்ண கட்டுதே..!!

இம்முறை சிறிது தலை சுற்று கிறது, வீட்டு பாடம் அதிகமா இருக்கும் போல தெரிகிறது, இருந்தாலும் முயற்சி செய்கிறேன் அன்புள்ள வாத்தியாருக்காக.

SP.VR. SUBBIAH said...

////Skumar said... // ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொள்ளுங்கள்.
தெய்வத்தை முழுதாக நம்புங்கள்
உங்களை அவர் பார்த்துக் கொள்வார்.
// மிகவும் உண்மை.///

நன்றி குமார்!

SP.VR. SUBBIAH said...

////Anonymous said... Dear sir
Thank you very much for the posting. Your explanation is super! I have one question regarding minimum

paral table which you had given in the previous lession..In that 11th house (which represents gains, acquistions)

has 54 points, where as 7th house(spouse, martial happiness)has only 19 points...
What does this minimum point indicate? Is it minimum or maximum? Please explain me with your views

and also let me know that wat the causes if the houses didnot meet the minimum requirement..
Thanks in advance!
Shankar/////
அவைகள் குறைந்த அளவாவது இருக்க வேண்டிய பரல்கள். திருமணஸ்தானமான 7ஆம் வீட்டில்
19 பரல்களாவது இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தால் திருமண வாழ்க்கை சோபிக்காது!
11ஆம் வீட்டில் 28 பரல்கள் இருந்தால் போதுமானது. ஆனால் அந்தவீட்டின் முழுப்பலன்களும்
கிடைக்க 54 பரல்கள் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிட நூல்கள். 54 பரல்கள் இருந்தால்
ராஜ வாழ்க்கைத்தான். நமக்கு எதற்கு ராஜ வாழ்க்கை? அங்கே 54 என்றால் வேறு இடங்கள் பிய்த்துக்
கொண்டு போய்விடுமல்லவா? உதாரணத்திற்கு ஆயுள் ஸ்தானத்தில் பரல்கள் குறைந்து விட்டால் என்ன
ஆகும்? 32 வயதிற்குள்ளேயே போய்விடும் அமைப்பு என்றால் என்ன ஆவது?

SP.VR. SUBBIAH said...

/////பிரேம்ஜி said...
அருமை. சுவாரஸ்யமான பதிவு./////
நன்றி பிரேம்ஜி!

SP.VR. SUBBIAH said...

////Anonymous said... குருவே,
அனைவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஜோதிட
வகுப்புகளை நடத்துவதற்கு நன்றி.
அன்புடன்
இராசகோபால்/////

வாருங்கள் இராசகோபால் - எல்லாம் உங்களைப்போன்ற அபிமானிகளுக்காகத்தான்!

SP.VR. SUBBIAH said...

////sara said... Anbu aiyya,
Its simply intersting to read your presentation. Thank you very much.
Regards,
Sara, Colombo////
ஆமாம் சரவணன். உங்களைப் போன்றோர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால்
(நானும், எனது பாடங்களும்) அப்படித்தான் எழுத வேண்டும். அடிப்படையில் நான் ஒரு
வாசகன். ஆகவே எப்படி எழுதக்கூடாது என்பதை நன்கு உணர்ந்தவன்.

பிறகு சிறுகதை எழுத்தாளன். இதுவரை 40 சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
ஒரு மாத இதழில் அவைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
எனக்கு அந்த மாத இதழின் மூலம் 20,000 வாசகர்கள் கிடைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு நான் ஜோதிடப் பதிவுகள் எழுதுவது தெரியாது. கதை எழுதிப்
பழக்கப்பட்டதால் எப்படிச் சுவையாகச் சொல்வது என்பதும் பிடிபட்டுள்ளது.
அந்தச் சிறுகதைகளில் 25 கதைகள் புத்தக வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
கூடிய விரைவில் அதை வெளியிட உள்ளேன்

சில கதைகள் என்னுடைய இன்னொரு பதிவில் இருக்கிறது.
முடிந்தால் படித்துப் பாருங்கள்
முகவரி: http:// devakottai.blogspot.com

SP.VR. SUBBIAH said...

////வடுவூர் குமார் said...
ஐயா முதல் ரவுண்டைவிட இரண்டாவது அருமையாக இருக்கு.
உங்கள் ஆலோசனையும்/விளக்கமும் உண்மையை உரக்கச் சொல்கிறது./////

நன்றி வடுவூராரே! சிங்கப்பூர் வரை கேட்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான்
அப்படி உரக்கச் சொல்லியிருக்கிறேன்:-))))

SP.VR. SUBBIAH said...

/////vimal said..
உள்ளேன் ஐயா,
சோ அbba இப்பவே கண்ண கட்டுதே..!!
இம்முறை சிறிது தலை சுற்று கிறது, வீட்டு பாடம் அதிகமா இருக்கும் போல தெரிகிறது, இருந்தாலும் முயற்சி

செய்கிறேன் அன்புள்ள வாத்தியாருக்காக./////

என்ன விமல் கண்ணைக் கட்டுகிறது என்கிறீர்கள். அதெல்லாம் ஒன்றும் கட்டாது.
எளிமையாகத்தானே எழுதியிருக்கிறேன். நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம்
செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?

vimal said...

//நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம்
செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?
//
என்னை வச்சு காமடி கீமடி பன்னலயே
ஐயா !!!!!

மணிவேல் said...

ஆசான் அவர்களே, உங்கள் சிறப்பே
பாடங்களை நீங்கள் நடத்தும் விதம் தான். எந்த ஒரு விளக்கத்தையும் வாழ்க்கையின் அனுபவத்தோடு ஒப்பிட்டுக் கூறுவதால் எளிமையாக புரிகிறது.

மணிவேல் said...

ஆசானே, 10ஆம் இடத்தை வைத்து
அரசு உயர் உத்யோகம்(காவல்,ஆட்சி நிர்வாகம் போன்ற துறைகள்), அதன் பதவி உயர்வு விவரங்கள்
போன்றவற்றை எவ்விதம் கணிப்பது?
இதை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். இதை மையப்படுத்தி ஒரு தனி பதிப்பு கொடுத்தால் என் நண்பர்களும்(நானும்) பயன் பெறுவோம்.

எதிர்பார்ப்புடன்,
தங்கள் அன்புள்ள,
பா.மணிவேல்.

வால்பையன் said...

மன்னிக்கவும், பதிவின் தலைப்பை பார்த்து சீட்டாடத்தை பற்றி எதாவது சொல்வீர்கள் என்று வந்தால், ஒரே ஒரு இடத்தில் சீட்டாட்டத்தில் 13 கார்டு என்ற பெரிய ரகசியத்தை சொல்லிவிட்டீர்கள், இதற்கு பதில் வாழ்க்கையும் ஜோசியமும் என்று தலைப்பு வைத்திருக்கலாம்
ஏமாற்றத்துடன் திரும்பும்

வால்பையன்

Vijai said...

வணக்கம் ஆசிரியர் அவர்க்கு!
அருமையான பதிவு, யதார்த்தமான சூழலுடன் போவதால் மிகவும் நன்றாக இருக்கின்றது. நான் ஓர் புத்தகத்தில் படித்தது
1. லக்னம், உயிர், ரூபம், திறமை
2. தனம், குடும்பம், வாக்கு, கல்வி
3. தைரியம், காரியம், வெற்றி, போஜனம்
4. தாயார், வீடு, வாகனம், நிலம், சுகம்
5. பூர்வபுண்யம், புகழ், புத்திரம், புத்திக்௯ர்மை
6. எதிரி, கடன், நோய், பங்காளி
7. மனைவி-கணவன், இன்பம், சுற்றம்
8. ஆயுள், கண்டம், வழக்கு
9. பிதுர், பாக்யம், தர்மம், ஆலயசேவை
10. தொழில், ஜீவனம், கர்மம்
11. லாப மேன்மைகள்
12. விரயம், சயனம், மோட்சம்

தொடர்ந்து எழுதுங்கள், என்னைப்போல் நிறைய வாசகர்கள் நன்றியுடன் இருப்பார்கள்
நன்றி
விஜய்.

SP.VR. SUBBIAH said...

/////vimal said...

//நான் படித்த புத்தகங்களையெல்லாம் (எல்லாம்
செய்யுள் வடிவில் இருக்கும்)அப்படியே கொடுத்தால் என்ன ஆகும்?
// என்னை வச்சு காமடி கீமடி பன்னலயே
ஐயா !!!!!////

செய்யுள் வடிவில் கொடுத்தால் எவ்வளவு சிரமம் என்பதற்காகச் சொன்னேன் விமல்!

SP.VR. SUBBIAH said...

/////மணிவேல் said...
ஆசான் அவர்களே, உங்கள் சிறப்பே
பாடங்களை நீங்கள் நடத்தும் விதம் தான். எந்த ஒரு விளக்கத்தையும் வாழ்க்கையின் அனுபவத்தோடு ஒப்பிட்டுக் கூறுவதால் எளிமையாக புரிகிறது.////

ஆமாம், அது என்னையறிமால் எனக்குள் உருவாகிவிட்ட ஒரு எழுதும் நடை.
அடிப்படையில் நான் ஒரு வாசகன். பலரது எழுத்துக்களையும் படித்தவன், படிப்பவன். ஆகவே
எப்படி எழுதக்கூடாது என்பதும் - வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்க எப்படி எழுத வேண்டும் என்பதும். எனக்குப் பிடிபட்டு விட்டது.அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

SP.VR. SUBBIAH said...

/////வால்பையன் said...
மன்னிக்கவும், பதிவின் தலைப்பை பார்த்து சீட்டாடத்தை பற்றி எதாவது சொல்வீர்கள் என்று வந்தால், ஒரே ஒரு இடத்தில் சீட்டாட்டத்தில் 13 கார்டு என்ற பெரிய ரகசியத்தை சொல்லிவிட்டீர்கள், இதற்கு பதில் வாழ்க்கையும் ஜோசியமும் என்று தலைப்பு வைத்திருக்கலாம்
ஏமாற்றத்துடன் திரும்பும்////

சீட்டாட்டத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதுவும் ரம்மியைப் பற்றி நன்கு தெரியும்.
கார்டைப்போட்டவுடனே, எடுத்துப்பார்க்கையில் எத்தனை ஜோக்கர்கள் இருக்கிறது என்று பார்க்காதீர்கள்
ஒரிஜினல் ரம்மி உள்ளே அதுவாகவே வந்து விட்டதா என்று பாருங்கள். நான்கு ஜோக்கர்கள் இருந்தாலும்
ரம்மி வரவில்லை என்றால் ஆடாதீர்கள். டச் கார்டு உங்களைக் கவிழ்த்துவிடும் (அப்பாடா...போதுமா வாலாரே!)

SP.VR. SUBBIAH said...

////Vijai said... வணக்கம் ஆசிரியர் அவர்க்கு!
அருமையான பதிவு, யதார்த்தமான சூழலுடன் போவதால் மிகவும் நன்றாக இருக்கின்றது.
தொடர்ந்து எழுதுங்கள், என்னைப்போல் நிறைய வாசகர்கள் நன்றியுடன் இருப்பார்கள்
நன்றி
விஜய்.////
எழுதுகிறவருக்கு எது முக்கியமோ - அதை உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.நன்றி விஜய்

Eswari said...

//சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.//
ஐயா மதிப்பெண் எப்படி கொடுப்பது? எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து சொல்லி தரவும்.

SP.VR. SUBBAIYA said...

////Eswari said...
//சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.//
ஐயா மதிப்பெண் எப்படி கொடுப்பது? எனக்கு இந்த பரல்கள் கணக்கிடுவது கொஞ்சம் புரியமாட்டேன்குது. தயவு செய்து சொல்லி தரவும். /////

நீங்கள் எதற்காக மதிப்பெண் கொடுக்க வேண்டும்? கணினி ஜாதகத்தில் அது கிடைக்கும். கண்மூடித்திறக்கும் நேரத்தில் கணினி அந்த வேலையைச் செய்து தரும்!

ilayaraja said...

sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please......

SP.VR. SUBBAIYA said...

////ilayaraja said...
sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please...... ////

உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். மாதிரி ஜாதகம் ஒன்றை அனுப்பிவைக்கிறேன்!

Shahbir Hussain said...

sir for mars, mercury,venus ,jupiter all having two houses. how to calculate for benefic places for mars from himself . how to take parals for this. where to take from messa(mars) or viruchugam(mars) house. kindly explain me .


my mail id shahbir4757@gmail.com

Raghupathy K said...

ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி கண நேரத்தில் கணித்து கொடுத்துவிடும் என்றாலும், பின் வரும் பாடங்களில் சுயவர்க்க பரல் எண்ணிக்கை தேவைபடுகிறது. இளையராஜாவிற்கு அனுப்பிய மாதிரி ஜாதகத்தை ஏன் பக்கமும் அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன்.

முகவரி: k.raghupathy@gmail.com

saravana babu said...

sir,
your way of teaching is good.little get struggle as i am doing ashtakavarga calculation. please send sample horoscope with its parals calculation.my id is ssbabu1986@gmail.com

by
saravana babu
chennai

Balaji Prakash said...

sorry sir, i am not able to understand about parals. please explain how to calculate parals with an example horoscope. please......
this is my email id: balajiprakash27@gmail.com

Palani Shobi said...

ஐயா, இந்த பரல் கணக்கு புரிய மாட்டேங்குது.. கணினி கண நேரத்தில் கணித்து கொடுத்துவிடும் என்றாலும், பின் வரும் பாடங்களில் சுயவர்க்க பரல் எண்ணிக்கை தேவைபடுகிறது. இளையராஜாவிற்கு அனுப்பிய மாதிரி ஜாதகத்தை ஏன் பக்கமும் அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன். my e mail.id palanishobi@gmail.com