மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.2.08

நீங்கள் கேட்ட மென்பொருள்!

நீங்கள் கேட்ட மென்பொருள்!

மீண்டும் ஜோதிடம் - பகுதி 7

திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு உரிய மென்பொருள் எங்கே
கிடைக்கும் என்று பல அன்பர்கள் மின்னஞ்சல் கொடுத்துள்ளார்கள்
அவர்களூக்கான பதிவு இது.

மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளங்களைப் பற்றிய
விவரம் அறிய இங்கே சொடுக்கவும்
ஒரு லிட்டர் பாலிற்காக ஏன் ஒரு பசு மாட்டைப் போய் வாங்கிக்
கட்டிவைக்க வேண்டும்?

கீழே ஒரு இணையதளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளேன்.
அதை உங்கள் இணையக்குறிப்பில் (Book Mark) பதிவு செய்து
வைத்து, வேண்டும் போது சென்று விவரங்களைக் கொடுத்துப்
பார்த்துக் கொள்ளலாம். அது சுலபமும் கூட!

அந்த தளத்தின் முகவரி


படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்

என்னென்ன விவரம் வேண்டும்?

பெண் மற்றும் ஆண் இருவரின் பெயர்கள், பிறந்த தேதி, பிறந்த
நேரம், பிறந்த ஊர் ஆகியவை வேண்டும். அதோடு பிறந்த
நாட்டின் Standard Time Difference with Greenwich Mean Time
தெரிய வேண்டும் இந்தியா என்றால் +5.30 Hours

அதேபோல பிறந்த ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை தெரிய
வேண்டும். இணையத்தில் கேட்டால் அது கிடைக்கும். உதாரணத்திற்கு
சென்னையின் அட்சரேகை & தீர்க்க ரேகை தெரிய வேண்டுமென்றால்
Google Searchல் "What is the latitude and longitude of Chennai?"
என்று கேட்டால் கிடைக்கும்

மேலும், அதைத் தருவதற்கென்றே ஒரு தனித் தளம் இருக்கிறது.
உலகில் உள்ள 20 லட்சம் இடங்களுக்கு உரிய அட்சரேகை &
தீர்க்க ரேகை அதில் கிடைக்கும். அதன் பெயர் heavensabove.com

அதற்கான சுட்டி இங்கே உள்ளது

முக்கியமாக Chart Type என்னும் சின்னப் பெட்டியில்
North Indian or South Indian என்று இரண்டு option இருக்கும்
அதில் சவுத் இந்தியன் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

பயன் படுத்துங்கள். குதூகலமாக இருங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

5 comments:

vimal said...

நன்றி ஐயா

அறிவன்#11802717200764379909 said...

நண்பர் சுப்பையா அவர்களே,
இந்த திருமணப் பொருத்த மென்பொருளின் மூலம் பார்க்கும் போது வரும் பாயிண்ட்ஸ் எவ்வளவுக்கு,100 க்கா?
காட்டாக 25 என்று வந்தால் அவை எவ்வளவுக்கு எதிராக?
Benchmark எவ்வளவு?

Balraj said...

அய்யா,

இரண்டாம் இடம் குடும்ப வாழ்க்கைக்கு என்று சொல்கிறோம்
ஏழாம் இடம் மன வாழ்க்கைக்கு என்று சொல்கிறோம்

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

நன்றி

SP.VR. SUBBAIYA said...

////Blogger Balraj said...
அய்யா,
இரண்டாம் இடம் குடும்ப வாழ்க்கைக்கு என்று சொல்கிறோம்
ஏழாம் இடம் மன வாழ்க்கைக்கு என்று சொல்கிறோம்
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்////

ஏழாம் இடத்தை வைத்து வரப்போகும் மனைவியைத் தெரியும். இரண்டாம் இடத்தைவைத்து அவளுடன் குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்குமா? அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றால், அவளைப் பிரிந்து தனியாக இருக்க நேரிடுமா என்று தெரியும் (ஒரு உதாரணத்திற்க்காகத்தான்)

In short 7th place is for spouse and 2nd place is for family affairs

Balraj said...

தாங்கள் விளக்கத்திற்கு நன்றி அய்யா !