மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

20.2.08

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை!

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை!

நாம் வல்லரசாகும் வாய்ப்பு உள்ளதா?
இந்தியாவின் ஜாதகம் என்ன சொல்கிறது?

வாருங்கள் ஒரு பார்வை பார்ப்போம்!

"இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவில்லை! "

என்று இந்திய சுதந்திரதத்தைப் பற்றி ஒரு கவிஞன் பாடிய புதுக்கவிதை ஒன்று
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது

ஆனால் இன்று நிலைமை வேறு! அசுர வேகத்தில் எல்லா மாற்றங்களும் நடந்து
கொண்டிருக்கின்றன!

சர்வதேசத் தரத்தில் தொலைத் தொடர்புத்துறையில், தகவல் தொழில் நுட்பத்
துறையில், மருத்துவத் துறையில், கல்வித்துறையில் எல்லாம் அடிப்படைக்
கட்டமைப்புக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மற்ற துறைக்காரர்களும் விழித்துக்
கொண்டு வேலை செய்யத் துவங்கியிருகின்றார்கள்.

நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய, நமது நாட்டின் முந்நாள் முதல் குடிமகன்
டாக்டர்.திரு அப்துல் கலாம் அவர்கள் சொன்னதுபோல 2020ம் ஆண்டிற்குள்
நமது நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்!. அதில் ஒன்றும் சந்தேகமில்லை!

சரி, நமது நாட்டின் ஜாதகமும் அதைச் சொல்கிறதா என்று பார்ப்போம்.

இந்தியாவின் ஜாதகம்

பிறந்த தேதி: 15.08.1947
பிறந்த நேரம் நடு இரவு நேரம் - 00.01 நிமிடம்
பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்

இந்தியாவிற்கு காலசர்ப்ப தோஷம்/ யோக ஜாதகம். ஒரு பாதியில் ராகு மற்றும் கேதுவின்
பிடிக்குள் மற்ற எல்லா கிரகங்களூம் மாட்டிக் கொண்டிருப்பதைப்பாருங்கள்( All ths major
planets are hemmed between Rahu and Ketu). அதனால்தான்நமக்கு ஆரம்ப காலத்தில்
எல்லையில் நடந்த சீனயுத்தம் உட்பட பல சோதனைகள்!

காலசர்ப்ப தோஷம் எப்போது நீங்கியது?

பொதுவாக 33 வருடங்கள் என்பார்கள். ஆனால் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ
அத்தனை வருடங்கள் கழித்துத்தான் அது நீங்கும் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன

நமக்கு லக்கினத்தில் 44 பரல்கள் உள்ளன. 1947+44 வருடங்கள் =1991.
ஆகவே 1991லிலேயே அது (தோஷம்) நீங்கி விட்டது

நடப்பு திசையைக் கவனிப்போம்:
பிறந்த தேதி 1947-08-15
சனி திசை இருப்பு 18-00-14
புதன் திசை 17-00-00
கேது திசை 7-00-00
சுக்கிர திசை/சுய புக்தி 4-00-00
---------------------------------------------------
ஆக மொத்தம் 1993-08-29

இந்த தேதியில் இருந்து நம் நாட்டிற்கு நல்ல நேரம்தான்! சுக்கிர திசை நடப்பதைக் கவனியுங்கள்!

அமெரிக்க எண் கணித மேதை சீரோவின் காலச் சக்கர சுழற்சி முறையில் (Wheel of Fortune)
இன்னொரு பார்வையும் பார்ப்போம்

Birth year of India 1947
Add the numbers in the year 21
--------------------------------------------------
Sum up 1968
Again add the numbers 24
-------------------------------------------------
Sum up 1992

1968ஆம் ஆண்டுதான் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள்
ஏராளமான பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து இந்திய வளர்ச்சிக்குப்
பலமான அடிக்கல் நாட்டினார்! (உதாரணத்திற்கு இரண்டு செய்திகள் - வங்கிகளைத்
தேசிய உடமையாக்கியது, மற்றும் ராஜ குடும்பங்களுக்கு அளித்து வந்த மானியங்
களை ஒழித்தது)

1992ல் பொருளாதார மேதையும் அப்போதைய மத்திய நிதியமைச்சருமான
திரு.மன்மோகன் சிங் அவரகள் கொண்டுவந்த பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
எல்லாம் நமக்குத் தெரிந்தவையே!

நம் நாடு வல்லரசாக மாறப்போவதைப் பற்றி நாஸ்டர்டாமஸ் வேறு பிரமாதமாக
எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார்

சரி சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் - எப்போது வல்லரசாவோம் என்கிறீர்களா?

1992ல் உள்ள எண்களைக்கூட்டுங்கள் 21 வரும். 1992 + 21= 2013
2013ல் வல்லரசிற்கான கட்டமைப்பில் காலடி எடுத்துவைப்போம்.
அந்த கட்டமைப்பு பிரம்மாண்டமான கட்டிடமாகமாறி 2019ம் ஆண்டின்
முடிவில் நம்மை அதில் வல்லரசாக உட்காரவைத்துவிடும். எப்படி
என்கிறீர்களா?


2013 உள்ள எண்களைக்கூட்டுங்கள் 6 வரும். 2013 + 6= 2019

என்ன கணக்கு சரியாக உள்ளதா?

ஆம் 2019ல் நாம் வல்லரசாக மறுவோம்! அது திண்ணம்!

இன்னொரு பார்வையும் உள்ளது. அஷ்டவர்க்கத்தில் மொத்தப்பரல்கள் 337 தான்.
அதை (12 வீடுகளுக்காக - for 12 astrological signகளுக்காக)
12ஆல் வகுத்தால் 28 வரும். லக்கினம் என்பது நாட்டின் தலைமை வகிக்கும்
தன்மையைக் குறிக்கும். சாதாரணமாக 28க்கு மேல் இருந்தால் தான் ஒரு நாட்டிற்கு
நிற்கும் தன்மை கிடைக்கும் (Standing Power) ஆனால் நமது லக்கினத்தைப் பாருங்கள்.
40 பரல்கள் உள்ளன.ஆகவே பல நாடுகளுக்கும் வழி காட்டும் தலைமைப் பொறுப்பு
நமக்கு வந்து சேரப்போகிறது. ஜனரஞ்சகப் பொது மொழியில் சொன்னால்
நாம் வல்லரசாகப் போகிறோம்! அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை!

(இது ஒரு மீள் பதிவுதான். நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதியது.
இப்போது வகுப்பறையில் பல புதிய மாணவர்கள் வந்துள்ளதால் அவர்களுக்குப்
பயன்படட்டும் என்ற நோக்கில் மீண்டும் பதிவிட்டுள்ளேன்)

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.

எனது அலுவலக வேலைப் பளுவின் காரணமாக எழுத நேரமில்லை.
மீண்டும் ஜோதிடத்தின் அடுத்த பதிவு 25.2.2008 திங்களன்று வரும்!

படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் பெரிதாகத்தெரியும்
======================================

========================================

29 comments:

Anonymous said...

குருவே,

கலக்கி விட்டிர்கள் ! மீண்டும் ஒரு முறை பதிவிட்டதற்காக நன்றி.

அன்புடன்
இராசகோபால்

Anonymous said...

Simply superb!!! Hoping that great day will come to our nation.

-Shankar

உண்மைத்தமிழன் said...

வாத்யாரே..

நாட்டிற்கே ஜாதகமா..?

தங்களுடைய எதிர்பார்ப்பின்படி ஆண்டவனின் சித்தம் இதுவே என்றால் அப்படியே நடக்கட்டும்..

வாழ்க வளமுடன்

Partha said...

அய்யா

இந்தியா வல்லரசு.நாம் வல்லரசின் குடிமக்கள். மிக அருமை.

அமெரிக்காவின் கதி என்னவாகும்.

விம்ஷொத்த‌ரி த‌சா (120) வ‌ருட‌ங்க‌ள், ஒரு நாட்டின் கால‌ பல‌ன‌க‌ளுக்கு பொருன்துமா.

ந‌ம்முட‌ன் விடுத‌லை கிடைத்த‌ பாக்கின் நில‌மை என்ன‌

ந‌ன்றி.

பார்த்தா.

மணிவேல் said...

ஆசானுக்கு,

நாம் வல்லரசாகப் போவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதை ஜோதிடரீதியாக உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

Kalkithasan said...

வணக்கம் குருவே,
இந்தியா வல்லரசாகப்போகின்றது. மிகவும் மகிழ்ச்சி. அத்துடன் கீழே இருக்கும் எங்கள் குட்டி இலங்கைக்கும் ஏதாவது பார்த்து சொல்லுங்களேன்.

நன்றி
கல்கிதாசன்.

Anonymous said...

Kalkidasan karuththai naanum vazhi mozhigiren
Sara
CMB

SP.VR. SUBBIAH said...

////Kalkithasan said...
வணக்கம் குருவே,
இந்தியா வல்லரசாகப்போகின்றது. மிகவும் மகிழ்ச்சி. அத்துடன் கீழே இருக்கும் எங்கள் குட்டி இலங்கைக்கும் ஏதாவது பார்த்து சொல்லுங்களேன்.
நன்றி
கல்கிதாசன்./////

The Sri Lankan independence movement was a peaceful political movement to aimed at achieving independence for Sri Lanka from British imperial rule. It was ultimately successfully and Sri Lanka was granted independence on February 4, 1948. Dominion status under the UK was initially retained, but after British influence was gradually removed over the next few decades, Sri Lanka was declared of a full Republic in 1972.

கூகுள் ஆண்டவரிடம் தேடிகனேன் உங்களுக்காக!
சுதந்திரம் கிடைத்த தேதி 4.2.1948
இது மட்டும்தான் கிடைத்தது. சாசனத்தில் கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்ட நேரம்,
இடம் எல்லாம் கிடைக்கவில்லை. அதெல்லாம் இல்லாமல் எப்படி ஸ்வாமி ஜாதகத்தைக் கணிப்பது?

SP.VR. SUBBIAH said...

////Kalkidasan karuththai naanum vazhi mozhigiren
Sara
CMB////
மிஸ்டர் சரவணன் கல்கிதாசனின் பின்னூட்டத்திற்கு பதில் எழுதியுள்ளேன்.
அதைப் பார்க்கவும்!

SP.VR. SUBBIAH said...

////Anonymous said... குருவே
கலக்கி விட்டிர்கள் ! மீண்டும் ஒரு முறை பதிவிட்டதற்காக நன்றி
அன்புடன்
இராசகோபால்////

கலக்கியது உங்களுக்காகத்தான்!

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
Simply superb!!! Hoping that great day will come to our nation.
-Shankar////

நன்றி மிஸ்டர் சங்கர்

SP.VR. SUBBIAH said...

////உண்மைத்தமிழன் said...
வாத்யாரே..
நாட்டிற்கே ஜாதகமா..?
தங்களுடைய எதிர்பார்ப்பின்படி ஆண்டவனின் சித்தம் இதுவே என்றால் அப்படியே நடக்கட்டும்.
வாழ்க வளமுடன்///

ஆமாம். ஒரு நிறுவனத்திற்கு (ரிப்பனை வெட்டி அது துவங்கப்படும் அந்தக் கணம்) ஒரு துணிக்கடைக்கு

(குத்துவிளக்கேற்றி அது துவங்கப்படும் அந்த நேரம்) ஒரு நாட்டிற்கு (சாசனத்தில் கையெழுத்து இடம் அந்த

நேரம்) என்று அனைத்திற்கும் ஜாதகமும் உண்டு - பலனும் உண்டு உண்மைத் தமிழரே!

SP.VR. SUBBIAH said...

/////Partha said...
அய்யா
இந்தியா வல்லரசு.நாம் வல்லரசின் குடிமக்கள். மிக அருமை.
அமெரிக்காவின் கதி என்னவாகும்.////

ஒரு காலத்தில் (இரண்டாம் உலகப்போருக்கு முன்) இங்கிலாந்தும், ஜெர்மனியும் வல்லரசாக இருந்தன.அதற்குப்

பிறகும் ரஷ்யாவும், அமெரிக்காவும் வல்லரசு நாடுகளாக மாறின! ரஷ்யாவின் கதி அனைவரும் அறிந்ததே!
அமெரிக்காவின் நிலைமையைப் பொருத்திருந்து பாருங்கள்!

/////விம்ஷொத்த‌ரி த‌சா (120) வ‌ருட‌ங்க‌ள், ஒரு நாட்டின் கால‌ பல‌ன‌க‌ளுக்கு பொருந்துமா.?////
பொருந்தும்

//// ந‌ம்முட‌ன் விடுத‌லை கிடைத்த‌ பாக்கின் நில‌மை என்ன‌////
ந‌ன்றி.
பார்த்தா.///

பாகிஸ்தான் நம்மோடு ஒன்றாக வாங்கவில்லை. ஒரு நாள் முன்பு 14.8.1947 அன்று!

SP.VR. SUBBIAH said...

/////மணிவேல் said...
ஆசானுக்கு,
நாம் வல்லரசாகப் போவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதை ஜோதிடரீதியாக

உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.////

நன்றி மணிவேல்!

Kalkithasan said...

வணக்ககம் குருவே,
தங்களது முயற்சிக்கு மிகவும் நன்றி. அத்துடன் கீழ்க்கண்ட தகவல் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்டது. இதன் மூலம் ஏதாவது கணிக்க முடியுமா?
"Although technically known as the Dominion of Lanka the state was commonly known as Ceylon until the proclamation of the Republic of Sri Lanka on 22 May 1972. The proclamation took place in Colombo at 12:43 p.m., a time elected by the Government's astrologers. . . . Presumably this chart is that still used by Sri Lankan politicians (although in eastern form)."
நன்றி
கல்கிதாசன்.

SP.VR. SUBBIAH said...

////வணக்ககம் குருவே,
தங்களது முயற்சிக்கு மிகவும் நன்றி. அத்துடன் கீழ்க்கண்ட தகவல் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்டது. இதன் மூலம் ஏதாவது கணிக்க முடியுமா?
"Although technically known as the Dominion of Lanka the state was commonly known as Ceylon until the proclamation of the Republic of Sri Lanka on 22 May 1972. The proclamation took place in Colombo at 12:43 p.m., a time elected by the Government's astrologers. . . . Presumably this chart is that still used by Sri Lankan politicians (although in eastern form)."
நன்றி
கல்கிதாசன்./////

இல்லை நான் முன்பு கூறியதுதான் பிறந்த தினம். இது அந்தக் குழந்தை பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்ட நாள் என்று சொல்லலாம்! இதை வைத்துச் சொல்வது எப்படிச் சரியாக வரும்?

Obtaining independence is different from announcing republic!
Can you understand the difference my dear friend?

SurveySan said...

interesting :)

so, what is the life expectancy (aayul) for India? ;)

SP.VR. SUBBIAH said...

////Blogger SurveySan said...
interesting :)
so, what is the life expectancy (aayul) for India? /// ;)ஒருவர் தொழிற்சாலையொன்றைத் தொடங்குகிறார். சில ஆண்டுகள் சிறப்பாக
நடக்கீறது.பிறகு நஷ்டத்தில் ஓட ஆரம்பிக்கிறது. அவர் கை கழுவி விடுகின்றார்
வேறு ஒருவர் வாங்கி அதே இடத்தில் வேறு ஒரு தொழிலை நடத்துகிறார்.
பிறகு சிறிது காலம் கழித்து அவரும் விற்று விடுகிறார். வாங்குகிறவன் சற்று
கெட்டிக்காரன். அங்குள்ள இயந்திரங்களையெல்லாம் பாதி விலக்கு விற்றுக் காசாக்கி விட்டு
கட்டிடங்களையெல்லாம் இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு காலனியை உருவாக்கி ரியல்
எஸ்டேடில் நல்ல காசு பார்த்துவிடுகிறான். இப்போது சொல்லுங்கள் அந்த தொழிற்சாலை அதன் ஜாதகப்படி
சில காலம் இருந்த்து.பிறகு மறைந்து விட்டது.

ஆனால் அது இருந்த இடத்திற்கு என்ன ஆயிற்று?

ஒன்றும் ஆகவில்லை. அல்லவா?

அது போலத்தான் இடம், பூமிக்கெல்லாம் ஒன்றும் ஆகாது. அசோகர், அக்பர் என்று தொடங்கி
இந்தப் பூமி என்று எத்தனை ஆட்சியாளர்களைப் பார்த்துவிட்டது? அதுபோலத்தான்
நமது நாட்டிலும். ஆட்சிகள் மாறும், ஆட்சியாளர்கள் மாறுவார்கள்,மக்கள் மாறுவார்கள், ஏன் நீங்களும்,
நானும் மாறுவோம் (அதாவது நமது காலம் முடிந்து போவிடலாம்) ஆட்சி செய்யும் முறைகள் மாறூம்
ஆனால் இந்திய பூமி அப்படியேதான் இருக்கும்.

இந்த சுதந்திர நாட்டின் ஆயுளைக் கேட்டீர்கள். அது பற்றிப் பிறகு
ஒரு தினம் பேசுவோம். ஆயுள் என்ற பதம் சரியாக இராது. அடுத்த மாறுதல்,
அல்லது அடுத்த வடிவம் என்று அதைச் சொல்லலாம்!

குமரன் (Kumaran) said...

நல்ல சுவையான ஆருடம் ஐயா.

SP.VR. SUBBIAH said...

/////குமரன் (Kumaran) said...
நல்ல சுவையான ஆருடம் ஐயா.////

குமரனே சுவையாக இருக்கிறது என்று சொன்னால, உண்மையில் நன்றாக வந்திருக்கிறது (எழுதப்பெற்றிருக்கிறது) என்றுதான் பொருள்:-))))

shivadaasan said...

ஐயா,


பரல்கள் என்றால் என்ன?


அதை எப்படி கண்டுபிடிப்பது?

அது புரியவில்லை.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger shivadaasan said...
ஐயா,
பரல்கள் என்றால் என்ன?
அதை எப்படி கண்டுபிடிப்பது?
அது புரியவில்லை.//////

அஷ்டகவர்க்கம் என்னும் தலைப்பில் பாடங்கள் உள்ளன. பாடங்களை வரிசையாகப் படியுங்கள்.

Balaji P.B said...

i am writing this in 2013... bjp announced their party spearhead to be modi, i think this may be step for our greatness, dont think i incline to Bjp. but it struck me after all the current political progress

Saravanan Krishnan said...

sir i am proud to be an indian with ur blessings

thozhar pandian said...

திரு பாலாஜி, நானும் அதையே தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இங்கே கருத்திட நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள்:-)

திரு மோடி தலைமையில் இந்திய வல்லரசு ஆகும் தினம் வெகு தூரத்தில் இல்லை. தெய்வ பக்தி நிரம்பியவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும். மோடி நல்ல மனிதர். தெய்வ பக்தி உள்ளவர். பா.ஜ.க. அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அவர் தான் பிரதமர் என்று நினைத்தோம். நினைத்தபடி அறிவித்து விட்டார்கள். இனி அவரே பிரதமராக வருவார். கடவுள் அருளால் இந்தியாவிற்கு அப்போது தான் நல்ல காலம் தொடங்கும்.

venkatesh r said...

வல்லரசாகும் பொற்காலம் இன்றிலிருந்து தொடங்கி விட்டது. அச்சே தின் ஆனேவாலே ஹை!

lrk said...

I love india .

lrk said...

ஐயா வணக்கம் .
சுயவர்கம் என்பது கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்கான மதிப்பெண் BAV அட்டவணையில் பார்த்து குறித்து கொள்ள வேண்டும் .
உ.தான்
இந்தியா ராசி கட்டத்தில்
லக்னம் - 4
சூரியன். - 4
சந்திரன் - 5
புதன். -4
இவைகள் சரி என்றால் என் புரிதலும் சரியே .
தவறு என்றால் தாங்கள் விளக்கினால் நல்லது ஐயா .

rajesh said...

Amazing predictions sir. Seems lot of talk about 3rd world War nowadays. But can't be happy even though India can become prime.