மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.2.08

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 6

(இதற்கு முன் பதிவைப் படித்தீர்களா? இல்லையென்றால்
படித்துவிட்டு இங்கே வாருங்கள். அப்போதுதான் இந்தப்
பதிவிலுள்ள சில விஷயங்கள் புரியும்)

பெண் பல அவதாரம் எடுக்கின்றாள். குழந்தை, சிறுமி, கன்னி, முதிர்
கன்னி, மனைவி, தாய், நாத்தனார், அண்ணி, மாமியார், என்று ஒரே
பெண் பல அவதாரங்களை எடுத்தாலும் அவள் மிகவும் சோபிப்பது
அல்லது பிரகாசிப்பது (அதாவது நூறு சதவிகிதம் பிரகாசிப்பது) தாய்
ரோலில் (அவதாரத்தில்) மட்டும்தான்.

ஆனால் பெரும்பான்மையான பெண்கள் மாமியார் ரோலில் சொதப்பி
விடுவார்கள்.நல்ல மாமியாராக இருப்பதில்லை. 80% வீடுகளில் மாமியார்
மருமகள் உரசல் நிச்சயமாக இருக்கும். அங்கே பெண்ணிற்குப் பெண்ணே
விரோதி ஆகி விடுவாள்.

அதற்கு என்ன காரணம்? Possessiveness தான் காரணம். தான் வளர்த்து
இத்தனை நாள் தன் கட்டுப்பாட்டில் இருந்த மகனை முழுதாக ஒரு
பெண்ணிடம் (அது மருமகள்தான் என்றாலும்) இழப்பதற்கு ஒரு பெண்
மனம் ஒப்புக்கொள்வதில்லை. தானும் தன் திருமணத்திற்குப் பிறகு
அப்படித்தானே வேறு ஒருத்தி வளர்த்த பிள்ளையைக் கொத்திக்
கொண்டு வந்தோம் என்று நினைப்பதில்லை. அந்த சிந்தனை பெரும்
பான்மையான பெண்களுக்கு வராது!

அதுவும் பெண் தேடும் படலத்தின் ஆரம்ப நிலையில் செய்யும்
அலம்பல் இருக்கிறதே அது சொல்லி மாளாது.

என் நண்பர் ஒருவரின் மனைவி தன் மகனுக்குப் பெண் தேடும்
விஷயமாக என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கீழ்க்கண்ட
கண்டிஷன்களைச் சொன்னார்.

பெண் Fair looking girl ஆக இருக்க வேண்டும் என்றார். நான்
சொன்னேன் Fair looking girl என்று தேடாதீர்கள் Good looking
Girl ஆகத் தேடுங்கள் என்று சொன்னேன்.

Fair looking girl என்றால் சிவந்த நிறமுள்ள திருத்தமான பெண்
என்று அர்த்தம். Good looking Girl என்றால் கருப்போ அல்லது
மாநிறமோ - திருத்தமான பெண் என்று அர்த்தம்.

அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அவருடைய அடுத்த
கண்டிஷனைச் சொன்னார். பெண் Technically Qualified ஆக
இருக்க வேண்டும் என்றார். அதாவது பெண். B.E அல்லது
M.C.A அல்லது M.Sc(IT) படித்த பெண்ணாக இருக்க வேண்டும்
என்றார். அவருடைய பையன் அமெரிக்காவில் இருப்பதால்,
பெண்ணும் அங்கே வீட்டில் சும்மா இருக்கமுடியாது ஆகவே
அங்கே வேலைக்குச் சேரும் தகுதியுடைய பெண்ணாக இருக்க
வேண்டும் என்றார்

"இது பரவாயில்லை, அடுத்த கண்டிஷன் என்ன?" என்றேன்.

"ஜாதகம் பொருந்த வேண்டும். அதோடு மூலம், ஆயில்யம் ஆகிய
இரண்டு நட்சத்திரங்களில் பிறந்த பெண் வேண்டாம்" என்றார்.

இதை எதிர்பார்த்த நான் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டேன்
(பேச்சில்தான்)

மூலம் மாமனாருக்கு ஆகாது (மாமியாரை மூலையிலே உட்கார
வைத்துவிடும்) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற
சொல்லடைகள் உள்ளதால், அதை நம்புபவர்கள் அதிகம்.
அதே போல பூராடம் பெண்ணிற்கு ஆகாது (பூராடம் நூலாடாது,
அதாவது மாங்கல்யம் தங்காது). கேட்டை குடும்பத்திற்கு ஆகாது
என்ற சொல்லடைகளும் உண்டு. அதை நம்புபவர்களும் உண்டு.

அதெல்லாம் உண்மையல்ல! எல்லா நட்சத்திரங்களும் ஒன்றுதான்.

சில பகுதிகளில் உள்ள ஜோதிடர்கள், மூலம் முதல் பாதத்தில்
பிறந்த பெண்ணையும், ஆயில்யம் கடைசி பாதத்தில் பிறந்த
பெண்ணையும் தோஷ நட்சத்திரங்கள் என்று கூறி அப்பா இல்லாத
பையனாகப் பார்த்துச் செய்யப் பரிந்துரைப்பார்கள். ஆனால் நமது
பெண்கள் ஒட்டு மொத்தமாகவே அந்த இரண்டு நட்சத்திரங்களையும்
ஒதுக்கி விடுவார்கள். அந்த நட்சத்திரப் பெண்கள் உள்ள
வீட்டினருக்கு இந்த அவஸ்தை பழக்கமான ஒன்று!

அந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களையெல்லாம் என்ன செய்வது?
வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானா?

"சரி திரு என்று துவங்கும் நட்சத்திரமான திருவோணத்திலோ
அல்லது திருவாதிரையிலோ அல்லது தரணி ஆளும் பரணி
நட்சத்திரமாகவோ அல்லது தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும்
என்பார்களே அந்த மகத்திலோ ஒரு பெண்ணைப்
பார்த்து விடலாம் suppose அந்த நட்சத்திரப்பெண்ணிற்கு
அது நல்ல நட்சத்திரம்தான் என்றாலும் ஏழில் சனி இருந்தால்
என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன்

அந்தப் பெண்மணி திடுக்கிட்டுக் கேட்டார்கள், "ஏழில் சனி
இருந்தால் என்ன செய்யும்?"

ஏழில் சனி இருந்தால் விதவை தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.
இந்திரா காந்தி அம்மையாருக்கு ஏழில் சனி (சில ஜாதகர்களுக்கு
அதற்குப் பரிகாரம் இயற்கையாகவே உடன் இருக்கும் ஆகவே
தங்கள் ஜாதகத்தில் ஏழில் சனி இருக்கும் பெண் வாசகர்கள்
குழம்ப வேண்டாம்)

நான் அதைச் சொல்லாமல், "ஏற்கனவே நீங்கள் குழம்பிப்போய்
இருக்கிறீர்கள் சனி என்ன செய்யும், ராகு என்ன செய்யும்
என்பதையெல்லாம் சொல்லி நான் உங்களை மேலும் குழப்ப
விரும்பவில்லை. நீங்கள் நட்சத்திரங்களை மட்டும் ஒதுக்காதீர்கள்"
என்றேன்

அந்த அம்மையார் விடவில்லை, "இருந்தாலும் மூலம் மட்டும்
வேண்டாம் சாமி!" என்றார்கள்

மாமனாரின் ஆயுள் அவர் பிறந்த அன்றே நிர்ணயிக்கப்
பட்டிருக்கிறது. மூல நட்சத்திர மருமகள் வந்தால் அவர் எப்படி
மாண்டு போவார்? மருமகள் வந்தவுடன் அவர் மாண்டு போவார்
என்றால் எந்த நட்சத்திர மருமகள் வந்தாலும் அவர் மாண்டு
போவார் இல்லையா?

இந்த லாஜிக்கெல்லாம் நமது மக்களுக்கு ஏன் பிடிபட மாட்டேன்
என்கிறது என்று நினைத்துப் பல தடவைகள் நொந்து போயிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து பல மூல நட்சத்திர மருமகள் கையால்
சாப்பிட்டுக் கொண்டு இன்றும் பல கிழங்கள் ( மாமனார்கள்)
உயிரோடுதான் இருக்கின்றன!

அனாலும் திருமணச் சந்தையில் பல பேர்களுக்கு, இவற்றை
எப்படி எடுத்துச் சொன்னாலும் ஏறுவதில்லை!
-----------------------------------------------------
சரி, அரட்டை போதும்; பாடத்திற்கு வருகிறேன்.

(இந்தப் பாடத்தை சும்மா தெரிந்து கொள்வதற்காகப் படித்தால்
போதும். மனப் பாடம் செய்து மண்டையை உடைத்துக் கொள்ள
வேண்டாம். இதைக் கணித்துத் தருவதற்கு மென்பொருள்கள்
உள்ளன. ஒரே நிமிடத்தில் இரு ஜாதகங்களையும் ஆராய்ந்து
பொருந்துகின்றன அல்லது பொருந்தவில்லை என்று நெத்தியடி
யாகக் கணினி கணித்துக் கொடுத்துவிடும்)

1. பெண்ணுடைய நட்சத்திரத்தில் இருந்து பையனுடைய நட்சத்திரம்
2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக இருந்தால் நல்லது
பொதுவாக ஏழு நட்சத்திரங்கள் தள்ளியிருந்தால் நல்லது.
பெண் ராசிக்கு எட்டாவது ராசியைச் சேர்ந்த நட்சத்திரங்கள்
வேண்டாம்

1-A, ஏக நட்சத்திரம். அதாவது பெண், மாப்பிள்ளை இருவருடைய
நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் என்ன செய்வது?
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம் ஆகிய
ஆறு நட்சத்திரங்களில் ஒன்றில் இருவரும் பிறந்திருந்தால் தவறில்லை
திருமணத்தை நடத்தலாம். பொருந்தும் மற்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.
அஸ்விணி, கார்த்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை,
அனுஷம் உத்திராடம் ஆகியவை மத்திமம் (பரவாயில்லை) செய்யலாம்
என்பவர்களும் உண்டு. பெரும்பாலும் ஏக நட்சத்திரத்தில் செய்வதில்லை.
காரணம் ஏழரைச் சனி போன்ற கோச்சாரக் கேடுகளில் இருவரையும்
அந்தக் கிரகங்கள் ஒரு சேரப் படுத்தி எடுத்திவிடும். தனித் தனி
நட்சத்திரங்கள் என்றால் ஒரு வசதி உண்டு ஒருவர் அடிவாங்கும் போது
மற்றவர் ஒத்தடம் கொடுக்கலாம் ஆகவே என்னைப் பொறுத்தவரை
ஏக நட்சத்திரம் எல்லாம் வேண்டாம் சாமி!

2,கணப் பொருத்தம். கணம் என்றால்
அட்டவணை கீழே உள்ளது.


பெண்ணிற்கும் பையனுக்கும் ஒரே கணம் என்றால் நல்லது
பெண்ணிற்கு மனிதகணமும், பையனுக்குத் தேவகணமும்
என்றாலும் நல்லது
-------------------------------------------------

பெண்ணிற்குத் தேவகணமும் பையனுக்கு மனிதகணமும்
என்றால் மத்திமம் (average)
பெண்ணிற்கு தேவகணமும், பையனுக்கு ராட்சசகணமும்
என்றால் மத்திமம் (average)
--------------------------------------------------
மற்றவை பொருந்தாது.

3. மகேந்திரப் பொருத்தம் (இருவருக்கும் குழந்தை பாக்கியம்
இருக்கிறதா என்பதைப் பார்க்கும் வழி. இதைத் தவிர்த்துவிடலாம்.
சமயங்களில் இந்தப் பொருத்தம் இல்லாதவர்களுக்கெல்லாம்
குழந்தை பிறந்திருக்கிறது. இருவரில் ஒருவருக்கு பாக்கியம்
இருந்தாலும் குழந்தை பிறக்கும். அதை அஷ்டகவர்க்கத்தில்
தெரிந்து கொள்ளலாம். அந்தப் பாடம்வரும் வரை பொறுமையைக்
கடைப் பிடிக்கவும்)

பெண் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம்வரும்வரை
எண்ணும்போது 1-4-7-10-13-16-19-22-25 வந்தால் நல்லது.
இல்லையென்றால் பொருந்தாது.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்:
பெண் நாள் முதலாக எண்ணும்போது 13ற்கு மேல் வந்தால் நல்லது.
7ற்கு மேல் வந்தாலும் நல்லதாக எடுத்துக் கொள்ளலாம்
(அது 50 ரன் கணக்கில் வரும். 13ற்கு மேல் என்றால் செஞ்சுரி
அடித்த கணக்கில் வரும் என்று வைத்துக் கொள்ளூங்கள்)

5. யோனிப் பொருத்தம் (இது சிக்கலானது. எனக்கு இதில்
உடன்பாடு இல்லை. அந்தக்காலத்து ரிஷிகள் இதை எந்தக்
கணக்கில் வடிவமைத்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள்
அர்த்தம் இல்லாமல் செய்து இருக்கமாட்டார்கள். ஜோதிடத்தை
நம்புவதைப் போல அவர்கள் எழுதி வைத்துள்ள இதையும்
நம்பத்தான் வேண்டும். பதிவில் எழுதினால் பலர் குறுக்கு
கேள்வி கேட்டு என்னை நைத்து விடுவார்கள் ஆகவே
எழுதவில்லை. இல்லை அய்யா - நாங்கள் கட்டாயம் தெரிந்து
கொள்ள விரும்புகிறோம் என்பவர்கள் மின்னஞ்சலில் தெரிவியுங்கள்.
அதை மின்னஞ்சல் மூலம் அறியத் தருகிறேன்.

இந்தப் பகுதியின் மீதிப்பாடங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்தப் பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)

27 comments:

 1. Dear sir

  I didnot understand theerka porutham? can u explain in detail?

  Shankar

  ReplyDelete
 2. வாத்யாரே.. பாடம் ரொம்ப சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு.. என்னை எத்தனை கிரகங்களும், நட்சத்திரங்களும் பாடா படுத்துதுன்னு தெரிஞ்சுக்கிட்டே இருக்கேன்..

  அப்புறம் கடைசியா தனி மடல்ல சொல்லித் தரேன்னு எழுதியிருக்கீங்களே.. முதல் மெயில் எனக்குத்தான் அனுப்பணும்.. சொல்லிப்புட்டேன்..

  ReplyDelete
 3. ///Anonymous said...
  Dear sir
  I didnot understand theerka porutham? can u explain in detail?
  Shankar///
  பெண் தீர்கப் பொருத்தம் என்பது பெண்ணிற்குத் தடைகளற்ற திருமண வாழ்க்கை
  என்று பொருள் கொள்ளூங்கள்.
  ஆனால் பஞ்சாங்கங்களில் இதற்குக் கண்டம் என்று கொடுத்திருக்கிறார்கள்.
  என்ன பெரிதாக கண்டம் வந்துவிடப் போகிற‌து?
  அந்தக் கண்டம் என்ற சொல்லிற்கு மண முறிவு அல்லது மன முறிவு என்று வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளலாம்.
  அதை நான் எளிமைப் படுத்தித் தடைகளற்ற திருமண வாழ்விற்கான பொருத்தம் என்று சொல்கிறேன். விளக்கம் போதுமா நண்பரே?

  ReplyDelete
 4. ///உண்மைத்தமிழன் said...
  வாத்யாரே.. பாடம் ரொம்ப சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு.. என்னை எத்தனை கிரகங்களும், நட்சத்திரங்களும் பாடா படுத்துதுன்னு தெரிஞ்சுக்கிட்டே இருக்கேன்..
  அப்புறம் கடைசியா தனி மடல்ல சொல்லித் தரேன்னு எழுதியிருக்கீங்களே.. முதல் மெயில் எனக்குத்தான் அனுப்பணும்.. சொல்லிப்புட்டேன்..///

  சரி! தனி மடலில் அறியத் த‌ருகிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள் உண்மைத் தமிழரே!

  உண்மைத்தமிழர் அட் ஜிமெயில் டாட் காம் என்று போட்டு அனுப்பிவிடட்டுமா?:)))

  ReplyDelete
 5. i don't understnad how to calculate the theerka porutham. Are u missing anything? Paen Naal Muthal.. can u explain with example?

  ReplyDelete
 6. இந்தப் பகுதி நல்ல சுவாரசியமா இருக்கு.

  ReplyDelete
 7. இதெல்லாம் என் கல்யாணத்துக்கு முன்பு பார்த்தார்களா? இல்லையா என்று தெரியவில்லை.
  பெரிய இழப்பும் ஏதும் இல்லை.
  வாழ்கை சுவாரஸ்யமாகத்தான் போய் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 8. அன்பான ஆசிரியருக்கு!
  நிறையத் தகவல்களை திடீரெனத் தந்துவிட்டீர்கள். நன்றி. எனக்கும் அந்த விளக்கத்தை அனுப்பி வைப்பீர்களா?
  dhalia0@gmail.com

  நன்றி
  விஜய்

  ReplyDelete
 9. ஐயா எனக்கும் ஒரு மடல் பிரதி அனுப்புங்கள், யோனி பொருத்தத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 10. ஐயா, மென்பொருள் சோடுக்கியை தர முடியுமா!, என்பொன்றவர்களுக்கு மிக எளிய வழி அதுவே.

  ReplyDelete
 11. அன்பான ஆசிரியருக்கு!
  நிறையத் தகவல்களை திடீரெனத் தந்துவிட்டீர்கள். நன்றி. எனக்கும் அந்த விளக்கத்தை அனுப்பி வைப்பீர்களா?
  நன்றி
  விஜய்

  ReplyDelete
 12. ///aravindaan said...
  i don't understnad how to calculate the theerka porutham. Are u missing anything? Paen Naal Muthal.. can u explain with examples///

  பெண்ணின் நட்சத்திரம் முதலாக, அதாவது பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்‍து
  அதை முதலாவதாக வைத்து எண்ணிக் கொண்டு வரும்போது என்று பொருள் கொள்ளுங்கள். இப்போது புரியும் என்று நினைக்கிறேன் நண்பரே!
  இல்லையென்றால் மீண்டும் வாருங்கள்

  ReplyDelete
 13. ///துளசி கோபால் said...
  இந்தப் பகுதி நல்ல சுவாரசியமா இருக்கு.///

  நீங்களே சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லும்போது வசிஷ்டர் வாயால் கேட்டதைப்
  போலிருக்கிறது சகோதரி!

  ReplyDelete
 14. ////வடுவூர் குமார் said...
  இதெல்லாம் என் கல்யாணத்துக்கு முன்பு பார்த்தார்களா? இல்லையா என்று தெரியவில்லை.
  பெரிய இழப்பும் ஏதும் இல்லை.
  வாழ்கை சுவாரஸ்யமாகத்தான் போய் கொண்டிருக்கிறது.///

  பொருத்தம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் நடப்பதுதான் நடக்கும் வடுவூராரே!.
  அதை நான் என்னுடைய முதல் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
  மனப்பொருத்தம் மட்டும் பாருங்கள். மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்

  ReplyDelete
 15. ///////Vijai said...

  அன்பான ஆசிரியருக்கு!
  நிறையத் தகவல்களை திடீரெனத் தந்துவிட்டீர்கள். நன்றி. எனக்கும் அந்த விளக்கத்தை அனுப்பி வைப்பீர்களா?/////

  உங்களுக்குப் பதினெட்டு வயது ஆகிவிட்டதா?:-))))

  ReplyDelete
 16. ////vimal said...
  ஐயா, மென்பொருள் சோடுக்கியை தர முடியுமா!, என்பொன்றவர்களுக்கு மிக எளிய வழி அதுவே///

  தந்து விட்டேன். அடுத்த பதிவைப் பாருங்கள் மிஸ்டர் விஜய்!

  ReplyDelete
 17. /////vimal said...
  ஐயா எனக்கும் ஒரு மடல் பிரதி அனுப்புங்கள்,
  யோனி பொருத்தத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.////

  அட்டவனையை எழுத வேண்டும். திங்கட்கிழமை அனுப்பி
  வைக்கிறேன்.

  ReplyDelete
 18. இந்த softwares கொடுக்கும் ஜாதகமும், நமது வீட்டினர் வைத்திருக்கும் ஜாதகத்திற்க்கும் வேறுபாடு இருக்கின்றதே, அப்பொழுது என்ன செய்வது?

  ReplyDelete
 19. காலசந்தியில் பிறந்தவர்களுக்கு அப்படித்தான் வித்தியாசம் வரும். உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தில் ///////SKumar has left a new comment on your post "பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?":
  இந்த softwares கொடுக்கும் ஜாதகமும், நமது வீட்டினர் வைத்திருக்கும் ஜாதகத்திற்க்கும் வேறுபாடு இருக்கின்றதே, அப்பொழுது என்ன செய்வது?/////  காலை 7.30 மணிக்கு சிம்ம லக்கினம் முடிந்து கன்னி லக்கினம் ஆரம்பமாகிறது என்று வைத்துக்கொள்வோம். 7.28 அல்லது 7.29 மணிக்குப் பிறந்தவர்களுக்கு இந்தியன் எ·ப்மரீஸ்
  - திருக்கணிதமுறையில் - அதாவது கணினி ஜாதகத்தில் சிம்ம லக்கினம் என்று வரும். அதே நேரத்திற்கு மனதால் கழித்து ஜோதிடர் எழுதும் ஜாதகம் கன்னி லக்கினம் என்று வரும். அதோடு இரண்டு பஞ்சாங்கங்கள் உள்ளன. ஒன்று வாக்கியப் பஞ்சாங்கம் மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம் - அதில் திருக்கணிதம் மட்டுமே துல்லியமாக இருக்கும். வாக்கியப் பஞ்சாங்கத்தை (சில பகுதிகளில்) வைத்துக் கணிக்கப்படும் ஜாதகம் வேறு படும். அது கால சந்தியில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான். எந்த சந்தியில் பிறந்தாலும் கணினி ஜாதகத்தை வைத்துக் கொள்ளூங்கள் அதுதான் சரியாக இருக்கும்,. இது என் அனுபவம்!

  ReplyDelete
 20. விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 21. ஆசானுக்கு,

  இன்றைய பாடமும் நன்றாக இருந்தது.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 22. முக்கால்வாசி உண்மை:)

  எங்க குடும்பத்திலும் ஒரு மூலம் உண்டு.
  தெளிவாகத்தான் தேர்ந்தெடுத்தோம்.
  மிகவும் , படித்துச் சேமிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
  நன்றி சுப்பையா சார்,.

  ReplyDelete
 23. வல்லிசிம்ஹன் said...
  முக்கால்வாசி உண்மை:)
  எங்க குடும்பத்திலும் ஒரு மூலம் உண்டு.
  தெளிவாகத்தான் தேர்ந்தெடுத்தோம்.
  மிகவும் , படித்துச் சேமிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
  நன்றி சுப்பையா சார்,.////

  உங்கள் வாசகங்கள் எழுதும் எனக்கு‍ ஊக்க மருந்‍துபோல இருக்கிற‌து.மேலும் என்னை உற்சாகத்துடன் எழுதவைக்கும்!
  நன்றி சகோதரி!

  ReplyDelete
 24. வணக்கம் வாத்தியாரே... நான் கொஞ்சம் லேடாக வந்த மாணவன். இப்பொளுதான் உங்கள் பதிவுகளை ஒன்ரொன்ராக படித்து வருகிரேன். தங்களின் பதிவுகள் படிக்க சுவாரஸ்சியமாக இருக்கிரது. முக்கியமாக வாழ்க்கை சிரு-கதைகள். மிகவும் விரும்பி படிக்கிறேன்.

  யோனி பொருத்தத்தின் விளகத்தை எனக்கும் அனுப்பிவையுங்கள் ஐயா...

  நன்றி
  vishwanathan.n@gmail.com

  ReplyDelete
 25. ஐயா. தாங்கள் குடுத்த site குடுக்கும் ராசி கட்டங்கள் தவராக இருக்கிரது. நானும் தாங்கள் உபயொகிக்கும் "Jagannatha Hora" தான் உபயோகிக்கிறேன். இதர்க்கும் அந்த வெப் சைட்டிர்க்கும் வித்தியாசங்கள் உள்ளது. எனக்கு தெரிந்ததை தங்கள் அகவனத்திர்க்கு கொண்டு வர நினைக்கிறேன்

  வணக்கம்

  ReplyDelete
 26. அன்புள்ள அசிரியரே!

  நான் உங்களுடைய பதிவுகளை 1 வருடமாக படித்து வருகிறேன். அத்தனையும் மிகவும் அருமை.

  இராஜேஷ்

  ReplyDelete
 27. வணக்கம் வாத்தியார் ஐயா

  தயவுசெய்து அடியேனுக்கும் யோநிப்பொருத்தத்தை பற்றி மின்னஞ்சல் அனுப்புங்களேன்.

  நன்றியுடன்,
  முருகன் அடிமை

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com