மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.2.08

யாருடைய ஆட்சி உங்கள் வீட்டில்?

யாருடைய ஆட்சி உங்கள் வீட்டில்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 4

"காலையிளங் காற்று, பாடிவரும் பாட்டு எதிலும் அவன் குரலே"
என்று கவியரசர் கண்ணதாசன் எல்லாவற்றிலும் கண்ணனைக் கண்டார்.

இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரமில்லை. கண்ணனைவிட
முக்கியமான ஒன்று பலருகும் இருக்கிறது.

அதுதான் பணம்!

இன்றைய நவ நாகரீக உலகில், சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு
எல்லா மனிதனுமே பணம், பணம் என்று அலைந்து கொண்டிருக்கிறான்.

மனிதனில் இரண்டுவகைதான் உண்டு. பணத்திற்கு என்ன செய்வது என்று
தெரியாமல் அல்லும் பகலுமாக அதைத் தேடி, டவுன்பஸ் போல ஓடிக்
கொண்டிருப்பவன் ஒரு வகை. பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன
செய்வது, எப்படிக் காப்பாற்றுவது, எதில் முதலீடு செய்வது என்று
அலைந்து கொண்டிருப்பவன் மற்றொறு வகை

இந்தப் பணத்தால் யாருக்குமே, எதற்குமே நேரமில்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை!

பணம் என்பது ஒரு மாயமான். அதை வேட்டையாடப் புறப்பட்டவன்
எவனுமே திருப்தியோடு திரும்பியதில்லை. அம்பானி, பில் கேட்ஸ்
உட்பட அனைவருக்கும் இது பொருந்தும்!

என்னைப் போல வலையில் எழுதுபவர்களும் குறைவு, உங்களைப் போல
வந்து படிப்பவர்களும் குறைவு. சில ஆயிரம் பேர்களுக்குள் அடங்கிவிடும்.

நான் ஒரு மனத்திருப்திக்காக எழுதுகிறேன். நீங்களும் ஒரு மனத்திருப்திக்
காகத்தான் மீண்டும் மீண்டும் வந்து படிக்கின்றீர்கள்.

இந்த மனத்திருப்தி (Mental Satisfaction) யைத் தருவது சந்திரன் தான்.
ஒரு ஜாதகத்தில் சந்திரனும், ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகமும் (Lord of
the 5th house, House of Mind) நன்றாக இருந்தால்தான் மனம் தெளிவு
உடையதாக இருக்கும், குழப்பம் இல்லாத ஆசாமியாக இருப்பான்.

சரி, அந்த இரண்டு கிரகங்களும் வலிமை உடையதாக இருப்பதை
எப்படித் தெரிந்து கொள்வது? அதற்கு எதாவது Testing Meter
இருக்கிறதா என்றால் - இல்லை!

ஆனால் சுலபமான வழி இருக்கிறது. சந்திரன் தன் சுய வர்க்கத்தில்
ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அதே போல் ஐந்தாம் வீட்டு அதிபதியும் தன் சுய வர்க்கத்தில் ஐந்து,
அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

(புதியவர்களுக்கு: ஐந்தாம் வீட்டின் அதிபதி என்பது லக்கினத்திலிருந்து
ஐந்தாம் வீடு - லக்கினத்தையும் சேர்த்து எண்ண வேண்டும் - அந்த வீட்டின்
அதிபதி. உதாரணத்திற்கு நீங்கள் சிம்மலக்கினம் என்றால் ஐந்தாம் வீடு, தனுசு,
தனுசு வீட்டின் அதிபதி. குரு, நீங்கள் மகர லக்கினம் என்றால் ஐந்தாம் வீடு
ரிஷபம் - அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன். இன்னும் விவரம் வேண்டுபவர்
கள் என் பழைய பதிவுகளைப் படிக்கவும்)

அப்படியிருந்தும், ஒருவர் அடிக்கடி குழப்பங்கள், அல்லது கவலைகளைக்
கொண்டிருக்கக்கூடும். "எனக்கு ஏன் சார் அப்படி?" என்று அவர் கேட்கக்
கூடும். அதற்குத் தவிர்க்க முடியாத வேறு ஒரு காரணம் இருக்கும்.

ஐந்தாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள்
அமர்ந்திருந்தால் அவை மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கும், சாதாரண
விஷயத்திற்குக் கூடக் கவலைப் பட வைத்துக் கொண்டிருக்கும்.

அதற்கு என்ன செய்வது?

ஒன்றும் செய்ய முடியாது! நமக்கு நாமேதான் தட்டிக் கொடுத்துக்
கொள்ள வேண்டும் அல்லது ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும்.

"போனால் போகட்டும் போடா" என்று எவ்வளவு பெரிய பிரச்சினை
யையும் உள் வாங்கிக் கொள்ளாமல், அதன் போக்கிலேயே விட்டு விட
வேண்டும்.

அதற்குத்தான் ஜாதகம் பார்ப்பது! பார்த்துத் தெரிந்து கொண்டபின்,
சரி நாம் இவ்வளவு உயரம்தான் - குருவியைப் போல பறக்க முடியும்
புறாவையும், கழுகையும் பார்த்து நாம் ஆசைப் படக்கூடாது என்று
தெளிந்து தேற வேண்டும்.

நம் ஜாதகம் கவலைப் படுகிற ஜாதகம், ஆகவே இன்று எது நடந்தாலும்
கவலைப் படக்கூடாது, என்று காலையில் எழுந்தவுடன் ஒன்றிற்கு மூன்று
முறை சொல்லி மனதைக் காலையிலேயே கடிவாளம் போட்டுப் பிடித்து
கொள்ள வேண்டும்!

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே"

என்று தலைவனின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இங்கே
தலைவன் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு வாங்க
மட்டுமே நம்மிடம் வரும் தலைவர்களில் ஒருவர் அல்ல!

அவர் நமக்கெல்லாம் ஒரே தலைவர் என்றாகிவிட்ட இறைவன்.

அதைத்தான் வேறொரு கவிஞன் இப்படி எழுதினான்.

"ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி"

அய்யா, சொல்கிறது சுலபம், கடைப்பிடிப்பது கடினம் அல்லவா
என்பவர்களுக்கு ஒரு செய்தி.

ஆரம்பத்தில் எல்லாம் கஷ்டம்தான். ஆனால் ஒரு யானையைக்கூட
பாகன் ஒருவன் பயிற்சியினால் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்து விடுவதில்லையா? அதுபோல நாமும் முயன்றால் நம்
மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்.

பயிற்சினால் எல்லாம் சாத்தியப்படும், ஒன்றே ஒன்றைத் தவிர!

அது என்ன?

பாடலைப் பாருங்கள்.

"சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்,
நடையும் நடைப்பழக்கம்
தயை, ஈகை, கொடை
இம்மூன்றும் குடிப்பழக்கம்"

நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பயிற்சியின் மூலம் பெற்று
விடலாம். ஆனால் தயவு தாட்சண்யம், ஈவு இரக்கம், தான
தர்மம் செய்யும் பழக்கத்தைப் பயிற்சியின் மூலம் பெற முடியாது.
அது உங்களுக்கு வாய்த்த நல்ல பெற்றோர்களால், குடும்பத்தாரால்
மட்டுமே கிடைக்கும். என்று விவேக சிந்தாமணி என்ற நூல் கூறுகிறது.

அதே போல நமக்கு வாய்க்கபோகும் பெண் எப்படி இருப்பாள்
என்பதைத் தெரிந்து கொள்ளவும் அஷ்டகவர்க்கம் துணை செய்யும்.

திருமனத்திற்கு முன்பாக எல்லோருமே தெனாவெட்டாக இருப்பார்கள்
நமக்கு ஒரு தேவயானி அல்லது சிநேகா காத்துக் கொண்டிருப்பதாகப்
பலரும் பலவிதமான கனவோடு இருப்பார்கள். அதுவும் பெண்கள்
இன்னும் ஒருபடி அதிகமாகக் கனவு கண்டு தங்களைக் கொத்திக்
கொண்டுபோக ஒரு பிரித்திவிராஜன் பென்ஸ்காரில் வருவான் அல்லது
ஒரு அஜீத் குமாரோ அல்லது ஒரு சூர்யாவோ அல்லது அரவிந்தசாமியோ
வந்து சேருவான் என்று கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

கடைசியில் அந்தக் கனவு கண்டவனுக்கு ஒரு காந்திமதியோ அல்லது
சுந்தரிபாயோ வந்து சேருவாள்.அதுபோல கனவு கண்ட அம்மணிகளுக்கு
ஒரு பி.எஸ்.வீரப்பவோ அல்லது ஒரு பிரகாஷ் ராஜோ வந்து சேருவான்.
அதுதான் வாழ்க்கை.

கடைசியில் "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்
ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும்
இல்லை"
என்ற பாட்டை ஒலிக்கவிட்டு மன நிம்மதி அடைய வேண்டியதுதான்

கடவுள் அப்படியெல்லாம் ஜோடி சேர்க்கவில்லை. சினிமாவில் மட்டும்
தான் ஜோடிப் பொருத்தமாக நாயகன் - நாயகியைப் போடுவார்கள்.
வாழ்க்கையில் ஒருவர் ரயிலாகவும், ஒருவர் தண்டவாளமுமாகத்தான்
கணவன் மனைவி அமைந்திருப்பார்கள். இருவருமே ரயிலாக எந்த
ஜோடியும் இதுவரை படைக்கப் படவில்லை!

இருவருமே ரயிலாக இருந்தால் வாழ்க்கை என்ற வண்டி எப்படி ஓடும்?

வாழ்க்கை என்ற பூமாலையில் ஒருவர் பூக்களாகவும் மற்றொருவர்
அதைகட்டும் வாழை நாராகவும்தான் இருப்பார்கள். மனைவி பூவாக
இருந்தால் கணவன் நாராக இருப்பான். கணவன் பண்ணீர்ப்பூப்போல
மணம் பரப்புபவனாக இருந்தால் மனைவி அதைக் கட்டி மாலையாக்கும்
நாராக இருப்பாள். அதுதான் படைப்பின் தத்துவம். அதனால்தான்
உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.

நம் ஜாதகத்திற்கு ஒரு வடிவுக்கரசியைப்போன்ற பெண்தான் கிடைப்பாள்
அதுவே பெரியது. நாம் வெட்டியாக நயன்தாராவிற்கும் அல்லது திரிஷா
விற்கெல்லாம் ஆசைப்படாமல் இருப்போம் என்று மனதைத் தேற்றிக்
கொள்ள வேண்டும். அதுவும் ஜாதகத்தில் தெரியும்

நம் லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால்
அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள். குரு
இருந்தால் நல்ல குணமும், தோற்றமும் உடைய பெண் மனைவியாக
வந்து கரம் பிடிப்பாள். 7க்குரிய கிரகமும், சுக்கிரனும் தங்கள் சுய
வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்டிருந்தாலும் மனம் விரும்பியது போல மனைவி கிடைப்பாள்

உரிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும், நல்ல அழகும்
நல்ல குணமும் (சொன்ன பேச்சை - அட்லீஸ்ட் ஆரம்ப காலத்திலாவது
கேட்கக்கூடிய) மனைவி வேண்டும் - அதாவது த்ரீ இன் ஒன் வேண்டும்
என்பவர்களுக்கு - அது போல கிட்டுமா? கிடைக்குமா? என்பதைக்
கண்டு பிடிக்க ஒரு வழியிருக்கிறது.

எழாம் வீடு, ஏழுக்குரியவன் அமர்ந்த வீடு, திருமணகாரகன் (authority
for marriage) சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய மூன்று இடங்களுமே
முப்பது பரல்களையோ அல்லது அதற்கு அதிகமான பரல்களையோ
கொண்டிருந்தால் அதுபோல நடக்கும்.

லக்கினத்தின் பரல்களை விட ஏழாம் வீட்டின் பரல்கள் அதிகமாக
இருந்தால் வீட்டில் உங்கள் மனைவிதான் பிரதம மந்திரி. நீங்கள்
வெறும் ஜனாதிபதி மட்டுமே. அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் உள்ள
பரல்களைவிட லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் நீங்கள்
தான் எல்லாம் - அதாவது பர்வேஷ் முஷ்ர·ப் போல சர்வ
அதிகாரமும் உங்கள் கையில்தான்.

மனைவி உங்களிடம் மயங்கிக் கிடப்பாள் அல்லது கட்டுண்டு கிடப்பாள்
அல்லது அடங்கிக் கிடப்பாள். இல்லையென்றால் நீங்கள் அடங்கிக்
கிடப்பீர்கள்.

சரி விடுங்கள் யாராவது ஒருவர் மற்றொவருக்கு அடங்கிப்போவதுதானே
வாழ்க்கை. "Life is nothing but adjusting with the better half"
என்பதுதானே வாழ்க்கையின் (Married Life) முதல் நியதி!

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களுக்குமே இது பொருந்தும்!

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.
மற்றவை அடுத்த பாடத்தில்.
படிப்பவர்கள் ஒரு வரி பின்னூட்டம் இடுங்கள்
Feedback இல்லையென்றால் எப்படித் தொடர்ந்து சுவையாக
எழுத முடியும்?

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்,

(தொடரும்)

39 comments:

Anonymous said...

As usual wonderful and an excellent info. I really enjoyed this post. Thanks for posting.

Rumya

sundar said...

Dear Sir,

Thank you. I am new to your post. Have you already told how to calculate parals? Where I can refer to? Also can you tell me what is suyavargam?

Thank you

SP.VR. SUBBIAH said...

///Anonymous said...
As usual wonderful and an excellent info. I really enjoyed this post. Thanks for posting.
Rumya///

Thanks Mister Annani!
What is your good name?
Is it Rumya or Ramya or Romeyo?

SP.VR. SUBBIAH said...

////sundar said...
Thank you. I am new to your post. Have you already told how to calculate parals? Where I can refer to? Also can you tell me what is suyavargam?////

Mr.Sundar, Please read my previous posts (Particularly Meendum Jothidam Part 1 to Part 3)

Anonymous said...

Dear sir

Thanks for your post. Its really interesting! checking this blog everyday for update. Really Interesting to read.

-Shankar

Kicha said...

அய்யா,
இப்போதுதான் மெதுவாக இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும்(வாழ்க்கைத்துணை சம்பந்தமான)பகுதிகளை தொடுவது போல தெரிகிறது.நன்று..நன்று.
-கிச்சா.

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
Dear sir
Thanks for your post. Its really interesting! checking this blog everyday for update. Really Interesting to read.
-Shankar

நன்றி மிஸ்டர் சங்கர்.

SP.VR. SUBBIAH said...

Kicha said...
அய்யா,
இப்போதுதான் மெதுவாக இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும்(வாழ்க்கைத்துணை சம்பந்தமான)பகுதிகளை தொடுவது போல தெரிகிறது.நன்று..நன்று.
-கிச்சா.////

ஆமாம் கிச்சா, எல்லாம் உங்கள் வேண்டுகோளூக்காகத்தான்!

துளசி கோபால் said...

வந்துட்டீங்களா வாத்தியார் ஐயா?

நானும் வகுப்புக்கு வந்துட்டேன்.

என்ன சமையல் என்ற முக்கியமான விஷயங்களில் மறுபாதியை முடிவு எடுக்கச் சொல்றது வழக்கமா இருக்கு நம்ம வீட்டில்:-)

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

அய்யா, எங்க ஊட்டுல ரெண்டு முஷரஃப்.... நல்லாட்சி டபுள் "டைம்";-)

(இருவருக்குமே லக்கினத்தில் ஏழாம் வீட்டை விட பரல்கள் அதிகம். என்ன‌வருக்கு பரல் வித்தியாசம் குறைவு, அய்யோ பாவம்!)

Anonymous said...

குருவே,

இன்றைய பாடம் அருமை. மாணவர்களுக்கு தேர்வும் வைக்கவும்.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

///துளசி கோபால் said...
வந்துட்டீங்களா வாத்தியார் ஐயா?
நானும் வகுப்புக்கு வந்துட்டேன்.///

வாங்க டீச்சர், நீங்க வந்துட்டீங்கல்ல ... இனிமேல் வகுப்பு களை கட்டிவிடும்

//// என்ன சமையல் என்ற முக்கியமான விஷயங்களில் மறுபாதியை முடிவு எடுக்கச் சொல்றது வழக்கமா இருக்கு நம்ம வீட்டில்:-)////

பெரும்பாலான வீடுகளில் அதுதான் நிலைமை!

SP.VR. SUBBIAH said...

///கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அய்யா, எங்க ஊட்டுல ரெண்டு முஷரஃப்.... நல்லாட்சி டபுள் "டைம்";-)
(இருவருக்குமே லக்கினத்தில் ஏழாம் வீட்டை விட பரல்கள் அதிகம். என்ன‌வருக்கு பரல் வித்தியாசம் குறைவு, அய்யோ பாவம்!)////

அதற்கு நஷ்ட ஈடாக அவருடைய ஜாதகத்தில் வேறு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதையும் பார்த்து விட்டு, அதற்குப் பிறகு அந்த அய்யோ பாவத்தை வைத்துக்கொள்ளுங்கள்

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
குருவே,
இன்றைய பாடம் அருமை. மாணவர்களுக்கு தேர்வும் வைக்கவும்.
அன்புடன்
இராசகோபால் ////

வாருங்கள் இராசகோபால் பாடம் உங்களுக்குப் பிடித்துப்போனதைப் பற்றி எனக்கும்
மகிழ்ச்சிதான். அதுதானே நானும் எதிர்பார்ப்பது!

மாதம் ஒரு முறை தேர்வு வைத்து விடவா?

Anonymous said...

Dear Sir,
All the lessons are very nice. Thanks.

வடுவூர் குமார் said...

இப்படி ஒரு பதிவை எழுத எத்தனை காலம் எடுத்துக்கொண்டீர்கள்?
அருமையாக, கோர்வையாக சொல்லியுள்ளீர்கள்.
எங்கள் வீட்டில் யார் பாஸ் என்று யோசித்துப்பார்த்தால்...தெரியலை.யாரும் யாரையும் அடக்கவில்லை என்பது தான் தெரிகிறது.

SP.VR. SUBBIAH said...

Anonymous said...
Dear Sir,
All the lessons are very nice. Thanks.

அனானியாக எழுதுங்கள். ஏதாவது, அட்லீஸ்ட் புனைப்பெயரையாவது போடுங்கள் சாமிகளா!

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டில யாரோட பரல்கள் அதிகமமெண்று இன்னும் தெரியலை.


சொல்லுவதைச் சொல்லுவேன் நடப்பதுதான் நடக்கும்:))

இரண்டு பேருமே அடங்கிப் போகிற (ஆ ) சாமிகள் தான்.
மனசு சஞ்சலம் எனக்குத்தான் அதிகம்.
அவர் ஸ்டெடி.

SP.VR. SUBBIAH said...

///வடுவூர் குமார Said:
இப்படி ஒரு பதிவை எழுத எத்தனை காலம் எடுத்துக்கொண்டீர்கள்?
அருமையாக, கோர்வையாக சொல்லியுள்ளீர்கள்.///

இரண்டு மணி நேரம் ஆயிற்று மிஸ்டர் குமார். எழுதும் மன நிலை (Mood)
உள்ள சமயத்தில் எழுதுவேன். அப்படியே நேரடியாக word Pad ல்
தட்டச்சு செய்துவிடுவேன். கோர்வை மனதிற்குப் பழக்கமாகிவிட்டது.
சிலசமயங்களில் விறுவிறுப்பிற்காக எடிட் செய்து பத்திகளை cut & paste
முறையில் மாற்றி அமைத்துவிடுவேன்.

SP.VR. SUBBIAH said...

////வல்லிசிம்ஹன் said...
எங்க வீட்டில யாரோட பரல்கள் அதிகமமெண்று இன்னும் தெரியலை.
சொல்லுவதைச் சொல்லுவேன் நடப்பதுதான் நடக்கும்:))
இரண்டு பேருமே அடங்கிப் போகிற (ஆ ) சாமிகள் தான்.
மனசு சஞ்சலம் எனக்குத்தான் அதிகம்.
அவர் ஸ்டெடி.///

வாருங்கள் சகோதரி. உங்களைக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்‍தேன்.
முன் பதிவுகள் மூன்றையும் படித்தீர்களா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

பாடங்கள் தொடர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு கோர்வையாக, அழகுடன் கூடிய எளிமையாக உள்ளது.
நன்றி..
அப்புறம் டெஸ்ட் வைக்கலாமான்னு வேற கேட்டிருக்கீங்களே.. ந்த அபாயகரமான வேலையெல்லாம் வேணாம் வாத்தியாரே..
நாங்க எல்லாம் நல்ல புள்ளைங்கதான்.. ஒரு தடவை படிச்சாலே போதும்.. எங்க ஜாதகம் என்னன்னு எங்களுக்குத் தெரிஞ்சு போயிருது..
அப்புறம் எதுக்கு டெஸ்ட்டு..
நேரா சர்டிபிகேட்டு வாங்கிக்க வேண்டியதுதான்..

SP.VR. SUBBIAH said...

///உண்மைத் தமிழன் அவர்கள் சொல்லியது: ஒரு தடவை படிச்சாலே போதும்.. எங்க ஜாதகம் என்னன்னு எங்களுக்குத் தெரிஞ்சு போயிருது..
அப்புறம் எதுக்கு டெஸ்ட்டு..நேரா சர்டிபிகேட்டு வாங்கிக்க வேண்டியதுதான்..///

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் நண்பரே!
இங்கே வலைப் பதிவிற்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் டெஸ்ட் என்றால்
சுவர் ஏறிக்குதித்து ஓடிவிட மாட்டார்களா என்ன?
அப்படிச் சொல்வதெல்லாம் ஒரு சுவைக்காகத்தான்.

மணிவேல் said...

அன்புள்ள ஆசானுக்கு,

ஆம். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது ஒரு மனத்திருப்தி ஏற்படுகிறது.களத்திரம் என்ற திருமணயோகம் பற்றி நீங்கள
கூறியுள்ள அனைத்து விஷயங்களும் சூப்பர். இதனால் நமக்கு எப்படிப்பட்ட மனைவி அமைந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. களத்திர யோகம் பற்றி இன்னும் என்னைப் போன்ற இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்.

தென்றல் said...

படிக்க தூண்டும் எழுத்து நடை, ஐயா!

அனுபவ பாடங்களை படிக்கும்பொழுதும் விறு விறுப்பாகவே இருக்கிறது.

மணிவேல் said...

அன்புள்ள ஆசானுக்கு,

ஆம். தங்கள் எழுத்துக்களை படிக்கும்போது ஒரு மனத்திருப்தி ஏற்படுகிறது. களத்திரயோகம் பற்றிய வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.இதன் மூலம் நான் உள்பட யாரும் ஓவராக வரக்கூடிய மனைவி பற்றி கற்பனை செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன். இதனால் இப்போதே நல்ல மனப்பக்குவம் கிடைக்கிறது. மிக்க நன்றி. களத்திர யோகம் பற்றி இன்னும் நானும் என் நண்பர்களும் விரிவாக எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

SP.VR. SUBBIAH said...

///மணிவேல் said...
அன்புள்ள ஆசானுக்கு,
ஆம். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது ஒரு மனத்திருப்தி ஏற்படுகிறது.களத்திரம் என்ற திருமணயோகம் பற்றி நீங்கள
கூறியுள்ள அனைத்து விஷயங்களும் சூப்பர். இதனால் நமக்கு எப்படிப்பட்ட மனைவி அமைந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.///

ஆமாம், இந்‍தத்தொடரின் நோக்கம் வெறுமனே ஜோதிடத்தை மட்டும் சொல்லித் தருவதல்ல! அத‌ற்குமேலே ஒரு படி சென்று ஜாதகம் எப்படியிருந்‍தாலும் இறையருள் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்தி, அனைவருக்கும் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பை ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மற்றுமொரு முக்கியமான நோக்கம்!

SP.VR. SUBBIAH said...

///தென்றல் said...
படிக்க தூண்டும் எழுத்து நடை, ஐயா!
அனுபவ பாடங்களை படிக்கும்பொழுதும் விறு விறுப்பாகவே இருக்கிறது.///

என் எழுத்துக்கள் உங்களைப் போன்ற பல இளைஞர்களையும் சென்றடைகிறது என்பதைக் கேட்கும்போது எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே!

SP.VR. SUBBIAH said...

///மணிவேல் said...
அன்புள்ள ஆசானுக்கு,
களத்திரயோகம் பற்றிய வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.இதன் மூலம் நான் உள்பட யாரும் ஓவராக வரக்கூடிய மனைவி பற்றி கற்பனை செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன். இதனால் இப்போதே நல்ல மனப்பக்குவம் கிடைக்கிறது. மிக்க நன்றி. களத்திர யோகம் பற்றி இன்னும் நானும் என் நண்பர்களும் விரிவாக எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.////

தொடர்ந்‍து 4 அல்லது 5 பதிவுகள் களத்திரயோகம் என்னும் திருமண யோகம் பற்றியதுதான். தொடர்ந்‍து படியுங்கள் மணிவேல்!

Anonymous said...

This is interesting topic than others.

//நம் லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால்
அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள்//

Is it really true ? Because I've Sukkiran in my 7th House.

Balaji

SKumar said...

மிகவும் நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி.

vimal said...

ஐயா,
மன்னிக்கவும், நான்கு நாட்கள் விடுப்பில் கோவை சென்று விட்டதால், தொடர முடியவில்லை, உங்கள் நான்காம் பதிப்பை படித்தேன், அருமை. முக்கியமாக peace மற்றும் மனைவி விளக்கம்.

மக்கு மாணவன்

vinoth said...

"If chandra in lagna or in 7th House(aspects lagna) the native will be beautiful

If venus in lagna or in 7th House the native will be beautiful"

this is what you said in the previous lessons 1-10.Now you are suddenly saying ,if these condition is fulfilled partner will be beautiful.please clarify.

SP.VR. SUBBIAH said...

/////Anonymous Anonymous said...
This is interesting topic than others.
//நம் லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால்
அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள்//
Is it really true ? Because I've Sukkiran in my 7th House.
Balaji///////

ஆமாம்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger vimal said...
ஐயா,
மன்னிக்கவும், நான்கு நாட்கள் விடுப்பில் கோவை சென்று விட்டதால், தொடர முடியவில்லை, உங்கள் நான்காம் பதிப்பை படித்தேன், அருமை. முக்கியமாக peace மற்றும் மனைவி விளக்கம்.
மக்கு மாணவன்/////

நன்றி விமல்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger vinoth said...
"If chandra in lagna or in 7th House(aspects lagna) the native will be beautiful
If venus in lagna or in 7th House the native will be beautiful"
this is what you said in the previous lessons 1-10.
Now you are suddenly saying ,if these condition is fulfilled partner will be beautiful.please clarify./////

ஏழில் சுக்கிரன் இருந்து, எழாம் அதிபதி மற்றும் குரு அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் ஜாதகனும் அழகான தோற்றத்துடன் இருப்பான். அவன் மணைவியும் அழகாக இருப்பாள்

Made for each other!

ஏன் இருவரும் அழகாக இருக்கக்கூடாதா?:-)))))))))

sudhakar said...

dear sir,
i am T.Sudhakar, in jathagam the kala sorba thasam is there the planets are kumba lakinam and second ragu and theird sani fourth manthi and sixth(kadaga)seivai and seven(leo)five planets like,sooryan,sugkiran,guru,chandranand pudhan are there, in eight kethu. thats all. my age is 40.
My date of birth is 23.08.1968(11th avani,keelaga varsham)and time is 7.45pm. for me not yet married?
When my marriage and which girl will come. pls confirm me. i already passed my age. i from middle class brahmin

Rajha said...

Dear sir,

Last two year i am learning your astrology lesson.it is really super work.

lrk said...

பாடங்கள் அருமை .படிக்க படிக்க தெளிவாக புரிகிறது .நன்றி ஐயா .

SRI said...

பரல் கணக்கு எப்படி என்பது புரியவில்லை ஐயா. தயவுசெய்து கணினி link அல்லது மாதிரி கணக்கீடு ஜாதகம் அனுப்பவும் vsridharanmba@gmail.com