மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.2.08

பெண்ணிற்கு என்ன வேண்டும்?===================================================
பெண்ணிற்கு என்ன வேண்டும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 5

ஆணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் சாதிக்கக்கூடியவன்
என்ற நிலைப்பாடு கொண்டவனாக அல்லது திறமையுடையவனாக
அவன் இருக்க வேண்டும்.

சரி, ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் எனக்காகச்
செய்யக்கூடியவன் என்று சொல்லும்படியான ஆடவன் ஒருவனின் துணை
கிடைத்தால் போதும். அதாவது அத்தகைய இளைஞன் அவளுக்குக்
கணவனாகக் கிடைக்க வேண்டும்!

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்...
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் .
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ..
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை ...
வேறேதும் இல்லை"

என்று இருவரும் மனதாரப் பாடும் விதமாக ஜோடிப்பொருத்தம் அமைய
வேண்டும்!

அப்படியெல்லாம் அமையுமா?

ஆயிரத்தில் ஒன்று அமையலாம்! மற்றபடி நோ சான்ஸ்!

கல்யாணமானவர்களைக் கேட்டுப் பாருங்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக்
கொடுத்தால் இதே பெண்ணைத் திருமணம் செய்துகொள்வீர்களா?
அல்லது பெண்ணாக இருந்தால் இதே ஆடவனைத் திருமணம்
செய்து கொள்வீர்களா? என்று கேட்டுப் பாருங்கள்

தொண்ணுறு சதவிகிதம் பதில் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

ஆனாலும் இந்திய மண்ணில், பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒரு
சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக அல்லது தங்கள் பெற்றோர்கள், குடும்பச்
சூழ்நிலைக்காக விட்டுக் கொடுத்து அல்லது சகித்துக் கொண்டு குடும்பம்
நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அந்த சகிப்புத் தன்மைதான், பொறுமைதான் நமது பலம்.
ஏன், நமது கலாச்சாரம்!

என் உறவினர் வீடுகளில் பெண் தேடும் படலம் நடக்கும்போது கேள்வி
கேட்பேன். "எந்த விதமான பெண் உங்களுக்கு மருமகளாக வரவேண்டும்
என்று விரும்புகிறீர்கள்?"

பலருக்குக் கோர்வையாகப் பதில் சொல்லத்தெரியாது."என் பையனுக்குப்
பிடிக்கிற மாதிரி பெண் இருந்தால் போதும். எங்களுக்கு ஒரே ஒரு
ஆசைதான் அந்தப்பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தால்
போதும்!"

நல்ல குடும்பத்திற்கு ஏது அளவுகோல்?

நான் என் பாணியில் கேட்பேன், "ஒரு பெண்ணிற்கு என்னென்ன தகுதிகள்
வேண்டும் தெரியமா?"

சொல்லுங்கள் என்பார்கள், உடனே சொல்வேன்

தோற்றம் (Appearance), கல்வி (education), அறிவு (skill),
திறமை (talent),
குணம் (character) அதிர்ஷ்டம் (luck) ஆகிய ஆறும்
ஒரு பெண்ணிற்கு வேண்டும். அப்படிப்பட்ட பெண் ஒருத்தி இருக்கிறாள்..."
என்றூ சொல்லி நிறுத்திவிடுவேன்.

உடனே படாரென்று கேட்பார்கள்,"எங்கே இருக்கிறாள்?"

"அவள் பெயர் அலமேலு மங்கை. திருச்சானூரில் இருக்கிறாள்.
ஆனால்
அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவளைத் திருப்பதி
பாலாஜி
திருமணம் செய்துகொண்டு விட்டார்" என்பேன்.

அப்போதுதான் அவர்களுக்கு உறைக்கும் நான் என்ன சொன்னேன் என்பது!

ஆகவே அந்த ஆறும் ஒருசேரக் கொண்ட பெண்னோ அல்லது ஆணோ
உலகத்தில் கிடையாது.

அதிக பட்சம் அந்த ஆறில் மூன்று இருக்கலாம்.

அந்த ஆறும் இருக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்டவைகள் எல்லாம்
ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும் - ஒன்று கூடத் தவறாமல்!

அதாவது ஒவ்வொரு வீட்டிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கிரகத்திற்
கும் அதனதன் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும்.

1. தோற்றம் (Appearance) - 1st House and the Sun
2. கல்வி (education) - 4th House and Mercury
3. அறிவு (skill), - 5th House and Jupiter
4. திறமை (talent) - Mars and Saturn
5. குணம் (character) - 1st House and the Moon
6. அதிர்ஷ்டம் (luck) - 9th house and 11th House

உங்களுக்கு அல்லது உங்கள் மனைவிக்கு அல்லது உங்கள் would be க்கு
எத்தனை இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------
திருமணப் பொருத்தம்

பிள்ளைகளைப் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான வேலை ஒன்று
இருக்கிறது என்றால் அது தங்களுடைய பிள்ளைகளுக்குத் தகுந்த வரனைத்
தேடிப் பிடிப்பதுதான். அதைத் தேடியவர்களுக்குத்தான் தெரியும் Pain of
searching என்றால் என்னவென்று!

முன்பெல்லாம் மனப் பொருத்தம் இருந்தால் போதும் திருமணத்தை நடத்தி
விடுவார்கள். இபோது அப்படி இல்லை. நாளிதழ்களும், வார, மாத
இதழ்களும் விற்பனைக்காக விடாமல் ஜோதிடத்தைப் பிராதனப்படுத்தி
எழுதிக் கொண்டிருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் ஜோதிடத்தின்
மேல் ஒரு நம்பிக்கை வந்து விட்டது.

சரி ஜோதிடப்படி ஆராய்ந்துதான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும்
என்று நினைத்தால் என்ன ஆகும்? பெண்ணைப் பிடித்தால் ஜாதகம்
பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால் பெண் பிடித்தாற்போல இருக்க
மாட்டாள். ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்.

என்ன ஆகும்? வேறு என்ன ஆகும் வயது ஏறிக்கொண்டே போகும்.
கடைசியில் 21 வயதில் திருமணம் ஆக வேண்டிய பெண்ணிற்கு
32 வயதிலும், 24 வயதில் திருமணம் ஆகவேண்டிய ஆணிற்கு
35 வயதிலும் ஆகும்படி நேரிடலாம்.

அதற்கு ஏதாவது ஜாதகத்தில் குறிப்புத் தென்படுமா என்றால் படும்.
7ல் ராகு அல்லது கேது, அல்லது சனி இருந்தாலோ அல்லது சுக்கிரன்
6ல் அல்லது 8ல் அல்லது 12ல் மறைந்து. வலுவிழந்து விட்டாலோ
தாமதமான திருமணம்தான். இதுபோன்று இன்னும் சில காரணங்கள்
உள்ளன

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு கருத்துத்தான் - மனப்பொருத்தம்
மட்டும் பார்த்துத் பெண்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
மற்றவற்றை இறைவனிடம் விட்டு விடுங்கள்.

அதேபோல காதல் திருமணங்களிலும் எனக்கு ஒரு பிடிப்புக் கிடையாது
அதில் கவியரசர் கண்ணதாசன் சொல்லியதுதான் என் கருத்து.

அவர் என்ன சொன்னார்?

"காதலை இலக்கியத்திற்கு விட்டு விடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டு விடுங்கள்"

திருமணத்திற்குப் பிறகுதான் காதலனின் அல்லது காதலியின் முழுக்
குணமும் அல்லது செயல்பாடுகளும் அறிய வருவதால் பாதிக் காதல்
திருமணங்கள் பரிதாபத்தில் முடிந்து விடுகிறது. பெற்றோர் நடத்தி
வைத்த திருமணம் என்றால் - அவலம் நேர வேண்டாம் - ஒரு வேளை
நேர்ந்தால் அவலத்தில் கை கொடுக்க உற்றார்கள், உறவினர்கள்
என்று ஆட்கள் இருக்கும். காதல் திருமணத்தில் யார் இருப்பார்கள்
- உடன் வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிக்
கையெழுத்துப் போட்ட நண்பர்களைத் தவிர?

இரு மனங்களைத் திருமணத்தால் கட்டிப்போட ஜோதிடர் எதைப் பார்ப்பார்?

1. இரு ஜாதகங்களும் ஒன்றுக் கொன்று பொருந்துகிறதா என்று பார்ப்பார்
அதாவது அடிப்படையான பத்து (நட்சத்திரம், கணம், மகேந்திரம்,
பெண்தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரச்சு,வேதை ஆகிய
பத்து) பொருந்தி இருக்கிறதா என்று பார்ப்பார்! இந்தப் பத்தில் ரச்சுப்
பொருத்தம் (Duration of Married Life) அதி முக்கியம். மற்ற ஒன்பதில்
ஐந்து பொருந்தினால் போதும்.

2. செவ்வாய் தோஷம் குறுக்கிடாமல் இருக்கிறதா என்று பார்ப்பார்

3. 7ம் வீடு, சந்திர லக்கினம் ஆகியவற்றில் தீய கிரகங்களின் ஆதிக்கம்
இருக்கிறதா? பாபகர்த்தாரி அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்

4. அஷ்டம சஷ்டமம் (6ம் வீடு - 8ம் வீடு) இருவருக்கும் ஒத்துப் போகிறதா
என்று பார்ப்பார்.

இவ்வளவையும் யார் பார்ப்பார்? நல்ல ஜோதிடர் மட்டுமே பார்ப்பார்.
அரைகுறை ஆசாமி என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள 4ல் இரண்டை
மட்டும் பார்த்து அனுப்பி விடுவார். அதற்குப் பெரும்பான்மையான
தவறு நம் மேலும் இருக்கும். வருகிற ஆசாமி தன் பையனின் ஜாதகத்தைக்
கொடுத்துக் கூடவே பத்துப் பெண்களின் ஜாதகத்தையும் கொடுத்து
இதில் பொருந்துகிற்றவற்றை மட்டும் எடுத்துக் கொடுங்கள் என்று
கட்டளை இடும்போது, அவர் எப்படி ஒவ்வொன்றாகத் தோண்டிக்
கொண்டிருக்க முடியும்? அதுவும் நாம் கொடுக்கிற 50க்கும் 100க்கும்
அவர் எப்படி பத்து ஜாதகத்தையும் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில்
ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியும்? அவருக்கு சம்பளம் என்ன
நாஸா விஞ்ஞானிகள் ரேஞ்சுக்கா கிடைக்கிறது? ஆகவேதான் இந்தக்
குளறுபடிகள். அதனால் ஏற்படும் அவப்பெயர்கள்.

அவருக்கு மட்டுமா அவப்பெயர்? அரிய கலையான ஜோதிடத்திற்கும்
அல்லவா அவப்பெயர்!

அந்த நான்கையும் விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். பதிவின்
நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்


(தொடரும்)15 comments:

 1. அத்தனையும் உண்மை ஐயா.
  நாம் திருமணம் செய்வது நடந்து போன ஒன்று,.
  நாம் பெற்ற செல்வங்களின் திருமண கால கட்டங்களில் தேடல் இருக்கிறது பாருங்கள்.அதைச் சொல்லி முடியாது.
  சுற்றிச்ச் சுற்றி வந்தீங்க பாட்டுத்தான்:)
  நன்றி.. உங்களை 15 வருடங்கள் முன்னால் சந்திக்காமல் போனேனே என்று இருக்கிறது. இணையத்தில் தான்.:))

  தேடல் குறைந்து இருக்கும்.

  ReplyDelete
 2. ////வல்லிசிம்ஹன் said...
  அத்தனையும் உண்மை ஐயா.
  நாம் திருமணம் செய்வது நடந்து போன ஒன்று,.
  நாம் பெற்ற செல்வங்களின் திருமண கால கட்டங்களில் தேடல் இருக்கிறது பாருங்கள்.அதைச் சொல்லி முடியாது.
  சுற்றிச்ச் சுற்றி வந்தீங்க பாட்டுத்தான்:)
  நன்றி.. உங்களை 15 வருடங்கள் முன்னால் சந்திக்காமல் போனேனே என்று இருக்கிறது. இணையத்தில் தான்.:))
  தேடல் குறைந்து இருக்கும்.///

  வாருங்கள் சகோதரி! வருகைக்கு நன்றி!

  எனக்கும் ஒரு குறை இருக்கிறது!

  கணினி எனக்குப் பத்து வருடங்களுக்கு முன்னால்தான் கிடைத்தது.
  இணையம் எட்டு வருடங்களுக்கு முன்னால்தான் கிடைத்தது.
  பதிவுகள் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் தெரிந்‍தது.

  இவை எல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பாகவே எனக்குக்
  கிடைத்திருந்‍தால் ‍ என் மனதிற்குப் பிடித்தவற்றையெல்லாம் ‍‍‍‍‍
  பாதியையாவது இந்நேரம் எழுதி முடித்திருப்பேன்!

  ReplyDelete
 3. Dear Sir

  Well... like always this post also rocking! simply superb.

  I have venus in 12th place, is that the reason my marriage is getting delayed...will you be also writting about kalasarpa yoga and its remedies...becos one astrologer told that I have kalasarpa yoga.

  Very useful information.

  Thanks
  Shankar

  ReplyDelete
 4. Anonymous said...
  Dear Sir
  Well... like always this post also rocking! simply superb.
  I have venus in 12th place, is that the reason my marriage is getting delayed...will you be also writting about kalasarpa yoga and its remedies...becos one astrologer told that I have kalasarpa yoga.
  Very useful information.
  Thanks
  Shankar ////

  Yes, you are right Mr.Shankar. Venus, karaka for marriage in 12th place
  which is inimical will cause delay in marriage to the native of the horoscope. But to certain extend. If the right dasa or bukthi
  (7th lord's) comes, he will fix it

  ReplyDelete
 5. Sir,

  I came across your blog when searching for articles on astrology in Tamil. The presentation is very simple & lucid coupled with practical instances of how to apply what is being covered for the session.

  I am yet to complete your first series of 51 articles. Will come up to pace in a few days.

  Thanks a lot for your efforts in helping us learn astrology.

  Diwakar

  ReplyDelete
 6. ////I came across your blog when searching for articles on astrology in Tamil. The presentation is very simple & lucid coupled with practical instances of how to apply what is being covered for the session.

  I am yet to complete your first series of 51 articles. Will come up to pace in a few days.
  Thanks a lot for your efforts in helping us learn astrology.

  Diwakar////

  I welcome you Mr.Diwakar!
  Thanks for your appreciation!

  ReplyDelete
 7. அந்த சகிப்புத் தன்மைதான், பொறுமைதான் நமது பலம்.
  ஏன், நமது கலாச்சாரம்!

  இப்ப நிறையவே குறைந்து போனதாக தெரிகிறது.
  சமீபத்திய விவாகரத்து- யுவன் சங்கர் ராஜா!!

  ReplyDelete
 8. ஐயா,
  உங்கள் 2 திருமண யோக பதிப்பை பார்த்தால் காதலர் தின சிறப்பு பதிப்பு போல இருக்கிறது. காலமாற்றதிற்கேட்ப பதிவுகளை கோர்வையாக கொண்டு செல்கீர்கள்.

  ReplyDelete
 9. குருவே
  பாடமும் அருமை. பாடங்களுக்கு பக்க பலமாக கொடுக்கப்படும் பாடல்களும் அருமை.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 10. ////வடுவூர் குமார் said...
  அந்த சகிப்புத் தன்மைதான், பொறுமைதான் நமது பலம்.
  ஏன், நமது கலாச்சாரம்!
  இப்ப நிறையவே குறைந்து போனதாக தெரிகிறது.
  சமீபத்திய விவாகரத்து- யுவன் சங்கர் ராஜா!!///

  ஆமாம் Mr.குமார் குறைந்து கொண்டே வருவது என்னவோ உண்மைதான்.

  ReplyDelete
 11. ///vimal said...
  ஐயா,
  உங்கள் 2 திருமண யோக பதிப்பை பார்த்தால் காதலர் தின சிறப்பு பதிப்பு போல இருக்கிறது. காலமாற்றதிற்கேட்ப பதிவுகளை கோர்வையாக கொண்டு செல்கீர்கள்.///

  பதிவை முழுதாகப் படித்தீர்களா?

  ReplyDelete
 12. ///பாடமும் அருமை. பாடங்களுக்கு பக்க பலமாக கொடுக்கப்படும் பாடல்களும் அருமை.
  அன்புடன்
  இராசகோபால்///

  நவாருங்கள் இராசகோபால். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

  ReplyDelete
 13. ஆசானுக்கு,

  ஆம் ஐயா, கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டு விடுதல் நல்லது. அதில் தான் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு குணங்களில் ஒரு நல்ல மனைவிக்கு குறைந்த பட்சம் இருக்க வேண்டிய மூன்று குணங்கள் என்ன ஐயா ?

  ReplyDelete
 14. ////மணிவேல் said..ஆசானுக்கு,
  ஆம் ஐயா, கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டு விடுதல் நல்லது. அதில் தான் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு குணங்களில் ஒரு நல்ல மனைவிக்கு குறைந்த பட்சம் இருக்க வேண்டிய மூன்று குணங்கள் என்ன ஐயா?///

  கீழ்க்கண்ட மூன்றில் 2ஆவது இருந்தால் போதும்.
  அறிவு (skill),
  திறமை (talent),
  குணம் (character)
  அல்லது குறைந்த பட்சம் இது இருந்தால் போதும்
  அதுதான்
  குணம் (character)

  வங்க எழுத்தாளர் காண்டேகர் சொன்னார்:
  அழகான பெண் ஒரு ஆபரணம் (Jewel) -ஆனால்
  குணமான பெண் ஒரு புதையல் (Treasure)

  எப்படியிருக்கிறது?

  ReplyDelete
 15. //பதிவை முழுதாகப் படித்தீர்களா?//

  திருமண யோகம் என்று சொன்னது வாழ்க்கை துணை , கணவன் மனைவியுடய அமைப்பு பற்றி கூற முற்பட்டேன். நான் சொன்னது சரிதானா வாத்தியாரையா?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com