மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.4.16

கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!


கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!

கவியரசரின் அசத்தலான பாடல்: அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நாளையப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க” என்று எழுதினார் பார்த்தீர்களா? அவைதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்!

எனது உடல் நலம் தேறி வருகிறது. தற்சமயம் பரவாயில்லை!  உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

32 comments:

  1. வணக்கம் குருவே!
    தங்கள் உடல்நிலை தேறி வருகிறது என்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்க வளமுடன், ஐயா!

    ReplyDelete
  2. திருமுருகன்
    துணை செய்வார்.

    முருகன் அருள்
    முன் நிற்கும்

    ReplyDelete
  3. நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க

    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குன்றாத நவநிதியாக
    குன்றாத நவநிதியாக
    துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
    நீ வாழ்க.. நீ வாழ்க..

    நூறாண்டு புலவர் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க

    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
    நீ வாழ்க... நீ வாழ்க...

    அன்பு மாணவன்
    ந.மோகனசுந்தரம்,
    திருநெல்வேலி

    ReplyDelete
  4. Respected Sir,

    So happy to see your post and we pray for your good health.

    May God will bless you and your family forever.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. Dear Sir
    Every day I keep coming to the site. So happy to see the post. Keep getting better, in no time you will be back to your normal self.
    Warmest Regards
    Rajam Anand

    ReplyDelete
  6. Dear Sir
    Nice to see your post again and happy to hear that you are recovering.Our prayers are always there for our guru.

    Sriram

    ReplyDelete
  7. தங்களின் உடல் நலம் தேறி வருவது குறித்து மிகவும் குதூகலம் கொண்டேன்.

    "வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல"

    என்ற கவிஞரின் வரிகளுக்குத் தாங்களே உதாரணம்.

    நீர் மற்றும் மோர் அதிகம் பருகவும்; நிறைய ஓய்வும் கொள்ளவும்!!

    -அன்பன் ராஜுலு

    ReplyDelete
  8. மாணாக்கனுக்கு வாத்தியார் நன்றி உரைப்பது அழகல்ல. முழு உடல் நலம் தேறிய பின் புதிய உற்சாகத்துடன் பாடம் தொடருமாரு வாத்தியாரிடம் விண்ணப்பித்து கொள்கிறேன்.

    தா.சுதர்சன்,
    காஞ்சிபுரம்.

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,நல்ல செய்தி(பாடல்+பின்குறிப்பு).மேலும் நலம் பெற வாழ்த்துக்கள்.அன்புடன் ஆதித்தன்.

    ReplyDelete
  10. நல்ல பாடல்.
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  11. வணக்கம் குருஜி அவர்களே!. ”பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!” அருமையான பதிவு. அதிலும் இந்த ”நடப்பும்” என்பது ஒரு மனிதனின் அனைத்தையும் சொல்லி விடுகிறது. அதில் வரும் நடப்பும் என்பதுதான் முக்கியமானது. இரத்தின சுருக்கம் என்பது போல உள்ளது. உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நலம் பெற வாழ்த்துக்கள்.

    ஒரு வேண்டுகோள்: கிணறு அல்லது ஆழ்துளை கிணறு(போர்வெல்) அமைப்பதற்கு ஜாதகத்தில் எந்த மாதிரி அமைப்புகள் வெற்றீயை தரும். அல்லது எந்த தசா, புத்தி அல்லது ராசி, நட்சத்திரம் காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை ஒரு பாடமாக நடத்தும் படி பணிவுடன் வேண்டுகிறேன். என்னடா உடல் நிலை வேறு சரியில்லை, இந்த நேரத்தில் இது வேறயா? என நினைக்க வேண்டாம்.



    வெங்கடேஷ்.சி
    சென்னை.

    ReplyDelete
  12. Happy to see you back again. How is your health, Sir?

    ReplyDelete
  13. அன்பின் குருவே ஐயா,
    தங்கள் ஆரோக்கிய முன்னேற்றம் எங்களை மிக்க மகிழ்வூட்டுகிறது ஐயா எல்லோர்க்கும் நல்லதே நினைப்போர் நெஞ்சில் அந்த செந்தில் ஆண்டவன் குடிகொள்வான் என்பது திண்ணம் ஐயா.

    மற்றும் அருமையான நம்பிக்கையூட்டும் தத்துவப் பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    விரைவில் நலமுடன் சந்திப்போம் ஐயா.
    அன்புடன்
    விக்னசாயி.

    ============================================

    ReplyDelete
  14. ஐயா வணக்கம்
    தங்கள் சேவை தொடர ஆண்டவர் அனுமதி கொடுத்து விட்டார் ஐயா.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  15. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தங்கள் உடல்நிலை தேறி வருகிறது என்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்க வளமுடன், ஐயா!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  16. /////Blogger Subathra Suba said...
    Good evening sir how ru//////

    உடல் நலம் தேறி வருகிறது சகோதரி! நன்றி!

    ReplyDelete
  17. //////Blogger வேப்பிலை said...
    திருமுருகன்
    துணை செய்வார்.
    முருகன் அருள்
    முன் நிற்கும்////

    ஆஹா! அவர் இன்றி நாம் இல்லை. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  18. /////Blogger mohan said...
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குறையாது வளரும் பிறையாக
    குவியாத குமுத மலராக
    குன்றாத நவநிதியாக
    குன்றாத நவநிதியாக
    துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
    நீ வாழ்க.. நீ வாழ்க..
    நூறாண்டு புலவர் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போலே
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வளர்க
    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    விளையாத மண்ணில் தளிராக
    மலராத கொடியில் கனியாக
    வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
    நீ வாழ்க... நீ வாழ்க...
    அன்பு மாணவன்
    ந.மோகனசுந்தரம்,
    திருநெல்வேலி/////

    நிறைவான பாடலுக்கு நன்றி மோகனசுந்தரம்!

    ReplyDelete
  19. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    So happy to see your post and we pray for your good health.
    May God will bless you and your family forever.
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  20. /////Blogger Rajam Anand said...
    Dear Sir
    Every day I keep coming to the site. So happy to see the post. Keep getting better, in no time you will be back to your normal self.
    Warmest Regards
    Rajam Anand//////

    உங்களின் அன்பிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. //////Blogger sriram1114 said...
    Dear Sir
    Nice to see your post again and happy to hear that you are recovering.Our prayers are always there for our guru.
    Sriram/////

    நல்லது. உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger Srinivasa Rajulu.M said...
    தங்களின் உடல் நலம் தேறி வருவது குறித்து மிகவும் குதூகலம் கொண்டேன்.
    "வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல"
    என்ற கவிஞரின் வரிகளுக்குத் தாங்களே உதாரணம்.
    நீர் மற்றும் மோர் அதிகம் பருகவும்; நிறைய ஓய்வும் கொள்ளவும்!!
    -அன்பன் ராஜுலு/////

    நல்லது. உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////Blogger Sudharsan Dhamu said...
    மாணாக்கனுக்கு வாத்தியார் நன்றி உரைப்பது அழகல்ல. முழு உடல் நலம் தேறிய பின் புதிய உற்சாகத்துடன் பாடம் தொடருமாரு வாத்தியாரிடம் விண்ணப்பித்து கொள்கிறேன்.
    தா.சுதர்சன்,
    காஞ்சிபுரம்./////

    நல்லது. உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்ல செய்தி(பாடல்+பின்குறிப்பு).மேலும் நலம் பெற வாழ்த்துக்கள்.அன்புடன் ஆதித்தன்.////

    நல்லது. உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல பாடல்.
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா./////

    நல்லது. உங்களின் அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!. ”பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!” அருமையான பதிவு. அதிலும் இந்த ”நடப்பும்” என்பது ஒரு மனிதனின் அனைத்தையும் சொல்லி விடுகிறது. அதில் வரும் நடப்பும் என்பதுதான் முக்கியமானது. இரத்தின சுருக்கம் என்பது போல உள்ளது. உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நலம் பெற வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டுகோள்: கிணறு அல்லது ஆழ்துளை கிணறு(போர்வெல்) அமைப்பதற்கு ஜாதகத்தில் எந்த மாதிரி அமைப்புகள் வெற்றீயை தரும். அல்லது எந்த தசா, புத்தி அல்லது ராசி, நட்சத்திரம் காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை ஒரு பாடமாக நடத்தும் படி பணிவுடன் வேண்டுகிறேன். என்னடா உடல் நிலை வேறு சரியில்லை, இந்த நேரத்தில் இது வேறயா? என நினைக்க வேண்டாம்.
    வெங்கடேஷ்.சி
    சென்னை./////

    உங்கள் விருப்பத்தை இன்னொரு நாள் எழுதிப் பூர்த்தி செய்கிறேன்!

    ReplyDelete
  27. /////Blogger kmr.krishnan said...
    Happy to see you back again. How is your health, Sir?//////

    இப்போது பரவாயில்லை. மருந்துகளில் ஓடிக்கொண்டிருக்கிறது! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. /////Blogger Vicknaa Sai said...
    அன்பின் குருவே ஐயா,
    தங்கள் ஆரோக்கிய முன்னேற்றம் எங்களை மிக்க மகிழ்வூட்டுகிறது ஐயா எல்லோர்க்கும் நல்லதே நினைப்போர் நெஞ்சில் அந்த செந்தில் ஆண்டவன் குடிகொள்வான் என்பது திண்ணம் ஐயா.
    மற்றும் அருமையான நம்பிக்கையூட்டும் தத்துவப் பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.
    விரைவில் நலமுடன் சந்திப்போம் ஐயா.
    அன்புடன்
    விக்னசாயி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    தங்கள் சேவை தொடர ஆண்டவர் அனுமதி கொடுத்து விட்டார் ஐயா.
    நன்றி
    கண்ணன்//////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  30. Sir,

    I have sent a mail request to add me in your galaxy2007 blog. Kindly approve Sir

    Regards
    Manickavasagam
    Muscat

    ReplyDelete
  31. Vanakkam ayya thangalin udalnalam munetra seithi megavum mazhetchi all krathu pooragunam petru endrumpola thangalin samuga pani thodra ellamvalla kanchi kumarakottam muruga petumalinai prathikiren vazhga valamudan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com