மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.4.16

Astrology: Quiz 109 Answer புதிருக்கான விடை


Astrology: Quiz 109 Answer புதிருக்கான விடை

17-4-2016

முந்தைய பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்!.

ஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது. 1. என்ன பிரச்சினை? 2. அது சரியானதா அல்லது இல்லையா? என்று இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.

ஒரு க்ளூவையும்  கொடுத்திருந்தேன். வயதுதான் அந்தக் க்ளூ.  வயது 28 என்றும் சொல்லியிருந்தேன்.  ஜாதகர் திருவோண நட்சத்திரக்காரர். பிறப்பு திசையில் இருப்பு 7 ஆண்டுகள் 3 மாதங்கள், 14 நாட்கள் என்பதும் கொடுக்கப்பெற்றிருந்தது. அத்துடன் அடித்து வந்த செவ்வாய் மகா திசையையும் சேர்த்தால் ஜாதகரின் 14வது வயதில் ராகு மகாதிசை ஆரம்பம். 32 வயது வரை அந்ததிசைதான். 28 வயது எனும்போது ராகுதான் நடந்து கொண்டிருந்தது. ஜாதகத்தில் ராகுவுடன் இருப்பது யார் என்று பாருங்கள் கூட்டாக இருப்பது சந்திரன். சந்திரனும் ராகுவும் கை கோர்த்தால் ஜாதகனின் மனதைப் பாதிக்கும். ஆமாம். ஜாதகருக்கு மன நோய் உண்டானது. எதனால் உண்டானது. இருவரும் 7ம் பார்வையாக ஜாதகனின் 10ம் இடத்தைப் பார்க்கிறார்கள். வேல பார்த்த இடத்தில் ஏற்பட்ட வேலைப் பளுவினால் ஜாதகனுக்கு கடுமையான மனநோய் ஏற்பட்டது. வைத்தியம் பார்த்தார்கள். ஜாதகனைப் ப்ரட்டிப் போட்டுவிட்டு 32 வயதில் ராகுதிசை முடிந்தவுடன் ஜாதகனுக்கு மனநோய் குணமானது. விடுபட்டார். அடுத்து வந்த குரு மகா திசை அதற்கு உதவியது. குரு பகவானும் தனது 9ம் பார்வையால் தொழில ஸ்தானத்தைப் பார்ப்பதைப் பாருங்கள். அவர் ஜாதகனின் வேலைப் பளுவை முற்றிலுமாகக் குறைப்பதற்கு உதவி செய்து ஜாதகனைக் காப்பாற்றினார்.

ஒரு க்ளூ நம்மை எங்கே கொண்டு போய் சேர்க்கிறது பார்த்தீர்களா?
---------------------------------------------------------------------------மன நோய்

மனநோய் வந்துவிட்டால், அதுவும் தன்னையே மறக்கும்படியான சூழ்நிலை பாதிப்புடன் வந்து விட்டால் அது மிகவும் சிக்கலானது. அது வந்தவனுக்கு மட்டுமல்ல, அவனுடய உற்றார் உறவினருக்கும் அது துன்பத்தையே கொடுக்கும்.

மன நோயில் பல லெவல்கள் உள்ளன. சந்திரன் மனகாரகன். ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பிற்கு உள்ளாகும்போது அதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருப்பது நல்லதல்ல. மன நோய் உண்டாகும்.

துலா லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்.

ஜாதகன் உத்தியோகத்தில் இருந்தான். 32 வயதுவரை ராகு மகா திசைக் காலம். அவனுடைய 28ஆவது வயதில் வேலைப் பளுவின் காரணமாக மன நோய் ஏற்பட்டது.

சந்திரன், ராகு மற்றும் செவ்வாயால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சந்திரன் பாதிப்பிற்கு உள்ளானால் மன நோய்தான் வேறென்ன?

ராகு  மகா திசையில் ஜாதகனைப் போட்டுப் பார்க்கத்துவங்கியது. ராகுவின் பார்வை பத்தாம் இடத்தில் மேல் விழுவதைப் பாருங்கள். தன் திசை முடியும் வரை ராகு தன் பிடியில் இருந்து ஜாதகனை விடவேயில்லை!

பிறகு குரு திசை ஆரம்பித்தவுடன் ஜாதகனுக்கு நல்ல காலம் துவங்கியது. குரு பகவான் தன்னுடைய விஷேசப் பார்வையால் பத்தாம் இடைத்தைப் பார்ப்பதைக் கவனியுங்கள். ஜாதகனின் மன நிலை சரியானது. வேலையில் அதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி ஜாதகன் முற்றிலும் மனநிலை சரியாகி நிம்மதியானதுடன், உற்றார் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தான்.

இதுதான் சரியான விடை!

இன்றைய புதிர் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டமைக்காக பாராட்டுக்கள். சரியான விடையை (அதாவது மன நோய் என்பதை) ஒருவர் கூட எழுதவில்லை. ஒட்டிய விடையை ஒருவர் மட்டும்தான் (சந்திரசேகர் சூரியநாராயணா அவர்கள்) எழுதியுள்ளார் அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
16/05/1971 ஆம் ஆண்டு மாலை 4:22;23 மணிக்கு ஞாயிறு கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை
துலா லக்கின அதிபதி சுக்கிரன். அவர் 8ம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். (ரிஷப ராசி)
ஜாதகருக்கு 28 வயதில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.அதாவது 1999ஆம் அண்டு .ராகு தசை சுக்கிர புக்தியில் (19/03/1997 முதல் 17/03/2000 வரை ) கால கட்டத்தில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.
4ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் 7ம் பார்வை 10ம் விட்டின் மீது உள்ள கேதுவை பார்க்கிறார் . மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.
10ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டு சேர்ந்து 10ம் வீட்டை பார்க்கிறார். சந்திரனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் ஜாதகன் சிறுவயதிலேயே தாயைப் பிரிய நேரிடும்.
8ம் வீடு தான் அதிக கஷ்டங்களை கொடுக்ககூடியது. 8ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டில் அதாவது அந்த வீட்டிற்க்கு 12ல். நவாம்சத்தில் 8ம்வீட்டு அதிபதி சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.அவர் கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்
8ம் வீட்டில் சூரியனும் சனியும் வந்து அமர்ந்துள்ளனர். சனியின் 3ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது . எட்டில் சனி அமர்ந்து தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல. அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும் தன்னுடைய வேலையில் சந்திக்க நேரிடும்.
இந்த லக்கினத்திற்கு யோக காரனான சனி (2 பரல்) அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
உடல் வலிமையை கொடுக்க கூடிய சூரியன் (2 பரல்) பலவீனமாக உள்ளார். மன வலிமையை கொடுக்க கூடிய சந்திரன் (3 பரல்) ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.
4ம் வீட்டில் செவ்வாயுடன் ராகு சேர்ந்து இந்த இடத்தில் இருப்பதால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சொத்துக்கள் போன்றவைகள் கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.
குரு 6ம் வீட்டு அதிபதியும் ஆவார். இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம்.
32 வயதில் குரு தசை குரு புக்தியில் ஜாதகருக்கு பிரச்சனை நீங்கியது. காரணம் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.
Saturday, April 16, 2016 7:18:00 AM Delete/////
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

Healthcare Raja Nellai said...

Sir i Will publish this article in healthcare June 2016

mohan said...

உண்மையில் கஷ்டமான புதிர் தான்
ஐயா.
நன்றி.

வரதராஜன் said...

குருவே துணை!
தாங்கள் இட்ட தலைப்பிலேயே " கொஞ்சம் கஷ்டமான கேள்வி" என்று சொல்லிவிட்டீர்கள். தங்கள் மாணவர்கள், அடுத்த முறை தேறிவிடுவோம்.
சரியான அலசல்!

mohan said...

உச்ச செவ்வாயினால்
ஒரு பயனும் இல்லையா ஐயா...

adithan said...

வணக்கம் ஐயா,ஆசிரியர் கற்ப்பித்த பழைய பாடங்களை நினைவில் கொள்ளாதலால் வந்த பலன்.2008ல்" சந்திரனை காணாமல் அல்லி மலர்மலருமா"தலைப்பில் வலிமை குன்றிய சந்திரனுக்கும் சித்த சுவாதீனத்திற்கும் உள்ள தொடர்பு ஒரு வரி பதிவில் உள்ளது.மேலும் ராகுவை பற்றிய பதிவிலும் இருக்கலாம் என்று நினைவு.பழைய பாடங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்.நன்றி.

siva kumar said...

புதிர் விளக்கம் அருமை ஐயா

B. Lakshmi Narayanan, Tuticorin said...

மிக அற்புதமான விளக்கம் வாத்தியார் அவர்களே!!! இதுபோன்ற கேள்விகளே மாணவர்களின் திறமைகளை அதிகரிக்க உதவும் என நம்புகிறேன்...

வாத்தியாரின் பயிற்றுவிக்கும் விதம் அருமை...

நன்றி.அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

C.P. Venkat said...

வணக்கம் குருஜி அவர்களே!.. வாழ்த்துக்கள்!..அருமையானதொரு பதிவு!.. இது போன்ற புதிர்களை படிக்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

வெங்கடேஷ்.சி
சென்னை.

kmr.krishnan said...

//சந்திரன் ராகு கூட்டணி சிறிது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது முன் யோசனை இல்லாமல் நடந்து கொள்ளுதல் ஆகியவை இருக்கும்.//

இப்படி நான் கூறியுள்ளேன் ஐயா!
தங்களுடைய க்ளூ கொஞ்சம் மிஸ்லீடிங் தான்!

kannan Seetha Raman said...

வணக்கம் ஆசானே \
கடகுந்த 6 மாதத்திற் மேல் வவகுப்பறைக்கு வரமுடியாமல் செய்து விட்டார் சூரிய பகவான் (அவருடைய ) திசையில் கடைசி புத்தியில் .

1. அந்நிய தேசைத்து அரசாங்க வேலை போச்சி
2. துணையால் பிரிந்து செல்ல வழக்கு நீதி மன்றத்தில் .


சூரியனும் புதனும் ஒரே வீட்டில் இருந்தால் மன நோய் வரும் உன்ண்மையாகின்றனரே ஆசானேஜாதகம் உண்மை இல்லை என்பவருக்கு ஒரு நடந்த உண்மை உதாரணம் .

மேலே கூறிய 2 நடக்கும் . தாய் நாடிற்கு வருவீர்கள் . என்ற பொழுது எனக்கு சிரிப்பு தான் வந்தது . காரணம் அரசாங்க வேலை எப்படி போகும் என்று என்று. கச்சா எண்ணை விலை குறைய நிர்வாகம் ஆள் குறைப்பு செய்ய அடியவன் வேலை போக எல்லாம் மிகவும் சரியாக நடந்து விட்டது aachaane
/

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம். தாங்கள் க்ளூ கொடுக்காமல் இருந்திருந்தால் ராகு தசை சந்திர புக்தி என்று நான் எடுத்து கொண்டு இருப்பேன். தாங்களின் அனுபவம் தான் எனக்கு பாடம்.
குழப்பம் என்னவென்றால் மன பிரச்சனை ஏன் ராகு சந்திர புக்தியில் வரவில்லை.

Subathra Suba said...

உள்ளேன் ஐயா