மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.16

உங்களுக்குப் பொருத்தமானவருடன்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?


உங்களுக்குப் பொருத்தமானவருடன்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?

இந்தக் கேள்வியைத் தம்பதியரிடம் கேட்டால் பாதிப்பேர்கள் இல்லையென்றுதான் சொல்வார்கள். சமூகத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் நடப்பை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பார்கள்.

திரைப்படங்களில் மட்டும்தான் நாயகன், நாயகியைப் பொருத்தமானவர்களாகப் போட்டுப் படம் எடுப்பார்கள். அந்தக்
காலத்து அரவிந்தசாமிக்கு ஜோடியாக காந்திமைதியைப் போட்டால்
அல்லது நயந்தாராவிற்கு ஜோடியாக ஓமக்குச்சி நரசிம்மனை
ஜோடியாகப் போட்டால் படம் எப்படி இருக்கும்? படம் ஊற்றிக்
கொண்டு விடாதா?

காலதேவன் ஜோடிகளை சில காரணங்களுக்காக மாற்றிச் சேர்த்துவிடுவான்.

ரயில் ஓட, தண்டவாளம் அப்படியே இருக்கும். கணவன் ரயிலாக
இருந்தால் மனைவி தண்டவாளமாக இருப்பான். அல்லது கணவன் தண்டவாளமாக இருந்தால் மனைவி ரயிலாக இருப்பான். இரண்டு
ரயில்களை காலதேவன் ஒருபோதும் ஜோடியாக சேர்ப்பதில்லை.
நீங்கள் இதைப் பலரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு உதாரணமாக சிந்து பைரவி படத்தை நீங்கள் நினைவு படுத்திக்கொள்ளலாம்
------------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு என்னுடைய ஜோதிட ஆராய்ச்சிக்காக
3 ஜோதிட மென்பொருட்களைப் பணம் கொடுத்து வாங்கினேன். 3ம்
சேர்த்து சுமார் 15 ஆயிரம் ரூபாய் விலை. தேவைப்பட்டதால் பரவாயில்லை என்று பணம் செலவழித்து வாங்கிவிட்டேன்.

அந்த மென்பொருளை விற்பவர்கள் படு உஷாரானவர்கள். ஆன்லைனில்,
டீம் வீவர் மூலம் அவர்கள் ஊரில் இருந்தே எனது கணினிக்குள் நுழைந்து
அவற்றை நிறுவிக் கொடுத்துவிட்டார்கள். யாரும் அதைக் காப்பி எடுக்காத முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பெற்றுள்ளது.

அதைவிட முக்கியமானது 3 மென்பொருட்களுமே துல்லியமாக உள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் வேண்டிய தகவல்களைக் கொடுத்துவிடுகிறது.

1. தனிப்பட்ட ஜாதகங்களின் எல்லா விவரங்களையும் (ராசி, நவாம்சம், தசா புத்திகள், அஷ்டகவர்க்கம் போன்ற அனைத்துத் தகவல்களையும் 24
பக்கங்களுக்குக் கொடுத்துவிடுகிறது. நீங்கள் பேனாவை வைத்து எந்த விவரத்தையும் கணக்கிட வேண்டாம், குறிக்க வேண்டாம். அவ்வளவு
அற்புதமாக உள்ளது.

2. இரண்டாவது மென் பொருள், ஒரு பெண் மற்றும் ஆணின் பிறப்பு விவரங்களை மட்டும் நீங்கள் உள்ளிட்டால் போதும். கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் பொருத்தம் உள்ளதா அல்லது இல்லையா என்று சொல்லிவிடுகிறது. திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய வரப் பிரசாதம் இது. நட்சத்திரப் பொருத்தங்கள், தோஷப் பொருத்தங்கள், பாவ சமயப் பொருத்தங்கள் போன்ற அனைத்தையும் அலசிப் பதில்
சொல்லிவிடுகிறது.

காதலிப்பவர்களும், தாங்கள் காதலிக்கும் நபர் சரியானவர்தானா, ஏற்றவர்தானா என்று தெரிந்துகொள்ளலாம்

அதுதவிர மணமாகி சந்தோஷமில்லாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர்களும் தங்களுடைய பார்ட்னர் பொருத்தமானவர்
தானா என்று தெரிந்து  பிணக்கங்களை தவிர்த்துக்கொள்ளலாம். பொருத்தமில்லாதவர் என்று தெரிந்தால் விதிப்பயன் என்று ஏற்றுக்
கொண்டு பிணக்கங்களை  சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தலாம்.

என் உடல்நிலை காரணமாக அவற்றை உபயோகப் படுத்தாமல் இருந்தேன். இப்போது அவற்றைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் ஜாதகத்தை அலசி, ஜாதகத்தில் உள்ள சாதக, பாதக விஷயங்களையும், நல்ல நேரம் கெட்ட நேரம், ஏற்ற இறக்கங்கள்
போன்ற மேட்டர்களையும் அலசிப் பலன் சொல்ல முனைந்ததெல்லாம்
அந்த மென்பொருட்கள் அடிப்படை விஷயங்களுக்கு உதவும் என்ற
மனத் துணிச்சலில்தான்!

ஜாதகத்தை மட்டும்தான் அது கொடுக்கும். பலனை நான் தான் பார்த்து
முடிவு செய்ய வேண்டும்.நீங்கள் கொடுக்கும் பிறப்பு விவரங்களை
வைத்துக் கொண்டு உங்களின் ஜாதகத்தை தனிப்பட்ட முறையில் கணிப்பதென்றால் எத்தனை நேரம் பிடிக்கும் நீங்களே யோசித்துப் பாருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

 1. வணக்கம் குருவே!
  தாஙகள் மென்மையானவர் குணத்தளவில் ஆனால், மனத்தளவில், மேன்மையானவர் என்பதைத் தாங்களின் பலவேறு செயல்பாடுகள் மற்றும் கருத்துப் பரிமாரல்கள் வழியாக உணர்கிறோம். வெளிப்படையான பேச்சு, எதையும் மறைத்து வைக்காத தன்மை இவையெல்லாம் தங்களிடம் நிறைந்து காண்பது பாராட்டப்பட வேண்டியவைகள்.வியாபார நோக்கமே பெரிதெனக் கொண்டு வாழ்பவர் மத்தியில்,தாமரையிலைத்
  தண்ணீர் போல் அவர்களுடன் நாட்களை நகர்த்தப் பெருந்துணையாய் இருப்பது ஆண்டவன் அருள் அன்றி வேறொன்றுமில்லை!!
  எங்கள் அன்பும்,ஆதரவும் என்றும் உண்டு, வாத்தியாருக்கு!!

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning... We are living with our great companion Class Master Shri S.P.V.R.S

  This is blessed. Hare Krishna.

  Have a great Bava vimochana eakadasi.

  With kind regards,
  Ravi-avn

  ReplyDelete
 3. Respected sir,

  Thank q very much for your information about the latest software on astrology. Could you tell me sir about the software name and other uses of the software.

  Visu

  ReplyDelete
 4. //////Senthil Kumar said...
  wish you best of luck sir./////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 5. //////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  தாஙகள் மென்மையானவர் குணத்தளவில் ஆனால், மனத்தளவில், மேன்மையானவர் என்பதைத் தாங்களின் பலவேறு செயல்பாடுகள் மற்றும் கருத்துப் பரிமாரல்கள் வழியாக உணர்கிறோம். வெளிப்படையான பேச்சு, எதையும் மறைத்து வைக்காத தன்மை இவையெல்லாம் தங்களிடம் நிறைந்து காண்பது பாராட்டப்பட வேண்டியவைகள்.வியாபார நோக்கமே பெரிதெனக் கொண்டு வாழ்பவர் மத்தியில்,தாமரையிலைத்
  தண்ணீர் போல் அவர்களுடன் நாட்களை நகர்த்தப் பெருந்துணையாய் இருப்பது ஆண்டவன் அருள் அன்றி வேறொன்றுமில்லை!!
  எங்கள் அன்பும்,ஆதரவும் என்றும் உண்டு, வாத்தியாருக்கு!!/////////

  நான் எளிமையானவன். உங்களைப் போல் சாதாரண மனிதன். அவ்வளவுதான். என்னை அதிகமாகப் புகழாதீர்கள்!

  ReplyDelete
 6. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... We are living with our great companion Class Master Shri S.P.V.R.S
  This is blessed. Hare Krishna.
  Have a great Bava vimochana eakadasi.
  With kind regards,
  Ravi-avn/////

  இதற்கு முந்தைய பின்னூட்டத்திற்கான என்னுடைய பதிலைப் படியுங்கள்1

  ReplyDelete
 7. //////Blogger Visvanathan N said...
  Respected sir,
  Thank q very much for your information about the latest software on astrology. Could you tell me sir about the software name and other uses of the software.
  Visu//////

  விவரித்து எழுத தற்சமயம் நேரமில்லை. பின்னொரு நாள் பார்க்கலாம்!

  ReplyDelete
 8. உங்களின் சேவைக்கு, நீவிா் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றியுடன் ரமேஷ். G

  ReplyDelete
 9. You are a very good master sir and more helping tendency person

  ReplyDelete
 10. /////Blogger RameshG Samy said...
  உங்களின் சேவைக்கு, நீவிா் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றியுடன் ரமேஷ். G//////

  உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!

  ReplyDelete
 11. /////Blogger Subathra Suba said...
  You are a very good master sir and more helping tendency person//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 12. Sir,
  All the best sir...I have sent my horoscope for analysis.I will help u for the good cause.

  Regards
  Manikandan P

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com