மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.4.16

Short Story: சிறுகதை: மனைவி சொல்லைத் தட்டாதே!


Short Story: சிறுகதை: மனைவி சொல்லைத் தட்டாதே!
--------------------------------------------
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி சென்ற மாதம் வெளியான கதை. நீங்களும் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
================================================================
நாளிதழில் வந்த செய்தியைப் பார்த்தவுடன் அழகப்ப செட்டியார் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். பேச்சே வரவில்லை.

அதிகாலை நேரம். அவருக்குக் காப்பியைக் கொண்டு வந்து வைத்த அன்னபூரணி ஆச்சி, “என்ன விஷயம்? எந்தக் கப்பல் கவிழ்ந்துவிட்டது? ஏன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?”

“பங்குச் சந்தையில் ஒரே வாரத்தில் இரண்டாயிரம் புள்ளிகள் சரிவாம். மேலும் சரியும் என்ற செய்தியைப் போட்டு வயிற்றில் புளியைக் கரைக்கிறான்!”

ஆச்சி அவர்கள் பதில் சொன்னார்கள்:

“நான்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேனே. பங்குச் சந்தை நமக்கு வேண்டாம். உழவர் சந்தை மட்டும் போதும் என்று. நீங்கள் கேட்டால்தானே! வணிக இதழ்களில் வரும் கட்டுரைகளை வெட்டி வைத்துப் படித்துப் படித்துக் கெட்டுப் போனது நீங்கள்தான்!”

“சும்மா எதையாவது சொல்லாதே! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பஃபெட்" என்ன சொன்னார் தெரியுமா? ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். என்றார். அதாவது ஒன்றில் நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றுமாம்.”

ஆச்சியும் எல்லாவற்றையும் படிப்பவர்கள். அதிரடியாக செட்டியாருக்கு, அதாவது தன் கணவருக்குப் பதில் சொன்னார்கள்:

அதெப்படிக் காப்பாற்றும். நம் தலை எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்.அதே வாரன் பஃபெட்தான் சொன்னார். தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நம்மைத் தெருவில் நிறுத்திவிடும். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் போதாதா? வங்கியில் உங்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் வருகிறது. சொந்த வீடு. உங்களுக்கு ஐம்பத்தாறு வயதாகிறது. நமக்கு ஒரே ஒரு பெண்தான். அவளையும் கட்டிக் கொடுத்தாயிற்று. வேறு என்ன தேவை?”

“ வீட்டுக் கடன், மற்றும் இதர பிடித்தங்களெல்லாம் போகக் கைக்கு இருபத்தையாயிரம்தானே வருகிறது. இன்னும் நான்கு வருடங்களில் பணி ஓய்வு என்று சீட்டைக் கொடுத்து, கழுத்தைப் பிடித்து, வங்கியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விடுவான். அப்போது என்ன செய்வதாம்? வீட்டில் சும்மா இருக்க முடியுமா? அதற்காகத்தான் பங்குச் சந்தையைப் பழகிக் கொண்டிருக்கிறேன்,”

“தெரிந்த தொழிலைச் செய். தெரியாத தொழிலைச் செய்யதே! என்று பெரியவர்கள் சொல்வார்களே! அதை ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. உங்களுக்குத் தெரிந்த தொழில் வங்கிப் பணிகள் மட்டுமே. உங்கள் பெரியப்பச்சி மகன் வங்கியை விட்டு வந்தவுடன், அடுத்த மாதம் முதலே வங்கிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கன்சல்டன்சி தொழில் செய்து நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இல்லையா? அதுபோல நீங்களும் செய்ய வேண்டியதுதானே?”

“புரியாமல் பேசாதே! சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் அதெல்லாம் சாத்தியம். நாமிருக்கும் மதுரையில் அது சாத்தியமில்லை.”

“எல்லா ஊர்களிலும்தான் தொழிற்சாலைகளும், தொழிலதிபர்களும், செல்வந்தர்களும், வியாபாரிகளும் இருக்கிறார்கள். நீங்களாகவே மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு, தேவையில்லாமல் குழம்பிக் கொள்ளாதீர்கள். நான்கு வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?
மாதாமாதம் ஓய்வூதியம் வரும். அது போதாதா? இறைவன் இருக்கிறார். நம்மைப் படைத்த அவர் நம்மையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளைத் தினமும் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் அவர் எழுதிவைத்துவிட்டுப் போனார்:

”நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க 
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல”

ஆச்சியின் சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்த செட்டியார், அதற்கு மேல் வாதிட்டுப் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்!

இதெல்லாம் நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. இது முன் கதை. இப்போது என்ன நிலைமை? வாருங்கள், அதையும் பார்ப்போம்!

                   ******************************************************

கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாட்களுக்கு வரும்? இரண்டு நாட்களுக்கு மேல் வராது என்பார்கள்.

அதுபோல ஆச்சியின் அறிவுரைகள் எல்லாம் செட்டியாரின் மனதில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

அவர் ஆச்சியின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பங்கு வணிகம் செய்து கொண்டுதான் இருந்தார். வங்கி நேரம் போக, காலையிலும் மாலையிலும்
அதைச் செய்து கொண்டுதான் இருந்தார். கடைசியில் பங்கு வணிக ஏற்ற இறக்கங்களில் ஐந்து லட்ச ரூபாய்கள் அளவிற்கு தொடர் நஷ்டம் ஏற்பட்ட பிறகுதான், அதைத் தலை முழுகினார்.

எப்படி முழுகினார் தெரியுமா? விட்டதடி ஆசை விளாம்பழத்தோடு என்று கிராமங்களில் சொல்வார்களே, அதை போல விட்டொழித்தார்.

அதென்ன விளாம்பழ ஆசையும், அதை விட்டொழித்த கதையும் என்கிறீர்களா? இடமின்மை காரணமாக அதை விவரிக்க முடியாது. இன்னொரு நாள் அதைப் பார்ப்போம். இப்போது செட்டியாரின் கதையை மட்டும் பார்ப்போம்.

ஓராண்டிற்கு முன் செட்டியாருக்கு வங்கியில் பணி ஓய்வு கிடைத்தவுடன், தன் நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்து கொடுத்து அதைச் சிறப்பாகக் கொண்டாடினார். இருபதாயிரம் ரூபாய் செலவு. ஆனால் கவர்களில் வைத்துக் கிடைத்த பரிசுப் பணமும் அதே அளவிற்கு இருந்ததால், பெரிய செலவின்றி செட்டியார் தப்பினார். அத்துடன் தன்னுடைய சிக்கன மனப்பான்மை காரணமாக அவர் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்து கொள்ளவில்லை. மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டு வந்ததோடு தன்னுடைய அறுபதாவது வயது பூர்த்தியைக் கொண்டாடி முடித்தார்.

இனிமேல் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டியதுதான். பொழுது போக்கிற்கு புத்தகங்களும் தொலைக் காட்சிகளும் இருக்கின்றன. போதும் என்ற முடிவோடு இருந்தார்.

ஆனால் மனிதனை நிம்மதியாக இருக்க விதி விடாது என்பார்கள். நாம்தான் இறைவனை வழிபடுவதோடு, விதியை எதிர்கொண்டு வருவதை சமாளிக்க வேண்டும்.

செட்டியாருக்கு புதன் மகா திசை முடிந்து கேது மகா திசை ஆரம்பமானது. கேது கொடுத்துத்தான் கெடுப்பான் என்பார்கள். அதுபோல கேதுவும் செட்டியாருக்கு தாராளமாகப் பணத்தைக் கொடுத்து தன் ஆட்டத்தைத் துவக்கினான்.

ஊரில் இருந்த பொதுச் சொத்து ஒன்றை விற்றதில், செட்டியாருக்கு, அவருடைய பங்குப் பணமாக முப்பது லட்ச ரூபாய் கைக்கு வந்து சேர்ந்தது.

செட்டியார் குஷியாகி விட்டார். கள் குடித்த குரங்கு போல ஆகிவிட்டார்.

அதற்கு உரிய வருமான வரியைக் கட்டிவிட்டு மீதப் பணத்தை வங்கியில் போட்டு வையுங்கள். என்று ஆச்சி சொன்னார்கள். ஆனால் செட்டியார் அதைக் கேட்கும் மன நிலையில் இல்லை. “வங்கியில் குறைந்த வட்டி, நான் அந்தப் பணத்தை நன்றாகப் பெருகும்படியாக முதலீடு செய்து, வருமானத்திற்கு வழி செய்கிறேன் பார்” என்று களத்தில் இறங்கினார்.

அண்ணா நகரில் புதிதாகக் கட்டப் பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகம் ஒன்றில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். அறுபது லட்ச ரூபாய் விலை. கையில் இருந்த பணம் போக வங்கியில் பதினைந்து லட்ச ரூபாய் வீட்டுக் கடன் பெற்று அந்த வீட்டைத் தனக்கு சொந்தமாக்கினார். பால் காய்ச்சிய அன்றே அந்த வீட்டைக் கணக்காய்வாளர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டார். மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகை. வரப்போகும் சிக்கல் தெரியாமல் வாடகைக்கு விட்டு விட்டார்.

வாடகைக்கு வந்த அன்பர், அதை அரசியல்வாதி ஒருவருக்கு உள் வாடகைக்குக் கொடுத்து, அவரைக் குடியமர்த்தி விட்டார். அதற்குக் கமிஷனாக அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைத்ததை வெளியில் சொல்லவில்லை.

விஷயம் தெரிந்தவுடன் பதட்டமான செட்டியார், வீட்டிற்குச் சென்று, உடனே காலி செய்து கொடுத்துவிடு என்று வாதம் செய்தார். அவன் அசரவில்லை. கையை ஓங்கி செட்டியாரை மிரட்டி வெளியேறச் செய்தான்.

தான் குடியமர்த்திய கணக்காய்வாளரைச் சென்று பார்த்தார். ”எனக்கு இருபதாயிரம் வாடகை எல்லாம் கட்டுபடியாகாது. அதனால்தான் அவரைக் குடிவைத்தேன். யார் குடியிருந்தால் என்ன? உங்களுக்கு மாத வாடகை ஒழுங்காக வந்தால் போதாதா? அதற்கு நான் கயாரண்டி தருகிறேன்” என்று சால்சாப்பு சொல்லி செட்டியாரை அனுப்பிவைத்தார்.

செட்டியாருக்கு கலக்கமாகிவிட்டது. மூன்று நாட்கள் தூக்கமே வரவில்லை. ஒரு மாதகாலம் அலைந்து திரிந்து தனக்குத் தெரிந்த அரசியல்வாதி ஒருவர் மூலம் கட்டைப் பஞ்சாயத்து வைத்ததோடு, பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்து அந்த ஆசாமியைக் காலி செய்ய வைத்ததுடன், தனக்கு புதிய சொத்தாக அந்த வீடு வேண்டாம். அதைப் பாதுகாப்பதிலும், வாடகைக்கு விடுவதிலும் உள்ள சிக்கல்களை உணர்ந்து, அந்த வீட்டை விலை பேசி, வாங்கிய விலையை விட ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொடுத்து விற்றுவிட்டு மீண்டு வந்தார்.

மொத்தத்தில் பதினைந்து லட்ச ரூபாய் நஷ்டம்.

ஆச்சி அவர்கள் சொன்னார்கள்.”குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டுவந்த கதையாகிவிட்டது உங்கள் கதை.

“நானே நொந்துபோய் இருகிறேன் அன்னம். நீ வேற நோகடிக்காதே”

“என் பேச்சைக் கேட்டிருந்தால் இப்படியாகி இருக்குமா? தாசில்தார் நகர் ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி, சும்மா இருங்கள் என்று எத்தனை தடவைகள் சொன்னேன் கேட்டீர்களா? கேட்டிருந்தால் இப்படியாகியிருக்குமா?”

செட்டியார் மனம் வருந்தி ஆதங்கத்துடன் சொன்னார்:

”இனிமேல் உன் பேச்சைத் தட்ட மாட்டேன். பழநி அப்பன் மீது சத்தியம்!”
                           **********************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

Subathra Suba said...

Good morning sir.nice story

Kumanan Samidurai said...

Ayya Vanakkam

Super Super Story.

Thanks.

Regards,
S.Kumanan

M RAMSUDARSAN said...

Haha haha haha...

Sir, I am at the edge of Ketu dasa Sani bukthi only. This story reaches so well to me. After reading this I couldn't stop laughter when I compare my present with crux of the story. :)

Thanks

Regards,
Ram

Hema Thiru said...

கதை அருமை .என் வாழ்கையிலும் நடந்துள்ளது ஐயா

Vasudevan Tirumurti said...

நல்ல கதை!
விளாம்பழக்கதையை விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறேன்!

ravichandran said...

Respected Sir,

Happy morning... Nice story...

Have a pleasant day.

Thanks & Regards,
Ravi-avn

kmr.krishnan said...

யாருக்குமே பட்டுத்தான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.கதையில் வரும் செட்டியார் மட்டும் விதிவிலக்கா என்ன?

நல்ல கதை. உண்மைக் கதையைப் படித்த உணர்வு.

dgjagadeesan jaga said...

உங்கள் கதை கொஞ்சம் மாதம் / வருடம் முன் வந்து இருந்தால்? உங்கள் சொல் கேட்கும் மாணவன் நான் .... நல்லது நடந்து இருக்கும் ..... விதி யாரை விட்டது...
விடும் முன் எதுவும் தெரியவில்லை கண்ணுக்கு !!! விட்ட பின் எல்லாம் தெரிந்தது மனதிற்கு !!!
(விடும் முன் அய்யாவை தெரியாது விட்ட பின் மனதை தேற்ற கிடைத்தவர் அய்யா!! புன்னை வன நாதர் கபாலி அருளால் )
நான் உங்களுக்கு எழுதிய முதல் mail போல் உள்ளது.
செட்டியாருக்கு கேது , எனக்கு ராகு தசை.....பணிவுடன் ஜெகதீசன்

வல்லிசிம்ஹன் said...

பட்டுத் தெளிவது ஒரு இனம். பட்டும் தெளியாமல் இருப்பவர்களை இறைவன் தான் காக்க வேண்டும். நன்றி ஐய்யா.

adithan said...

வணக்கம் ஐயா,Wise knows from others but the other category knows from their experience only பழமொழி நினைவுக்கு வந்தது.நன்றி.

siva kumar said...

உள்ளேன் ஐயா

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
சிறு கதையானாலும் அது தரும் கருத்து பெரியது.பட்டுத் தெளியவேண்டும் என்பது அவரது விதி,எனலாம்.

Subbiah Veerappan said...

/////Blogger Subathra Suba said...
Good morning sir.nice story////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
Ayya Vanakkam
Super Super Story.
Thanks.
Regards,
S.Kumanan//////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger M RAMSUDARSAN said...
Haha haha haha...
Sir, I am at the edge of Ketu dasa Sani bukthi only. This story reaches so well to me. After reading this I couldn't stop laughter when I compare my present with crux of the story. :)
Thanks
Regards,
Ram/////

உண்மைதான். நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Hema Thiru said...
கதை அருமை .என் வாழ்கையிலும் நடந்துள்ளது ஐயா/////

அப்படியா? இப்போது எச்சரிக்கையாக இருங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Vasudevan Tirumurti said...
நல்ல கதை!
விளாம்பழக்கதையை விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறேன்!/////

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Nice story...
Have a pleasant day.
Thanks & Regards,
Ravi-avn////

நல்லது. நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
யாருக்குமே பட்டுத்தான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.கதையில் வரும் செட்டியார் மட்டும் விதிவிலக்கா என்ன?
நல்ல கதை. உண்மைக் கதையைப் படித்த உணர்வு./////

ஆமாம். பட்டறிவுதான் முக்கியம். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger dgjagadeesan jaga said...
உங்கள் கதை கொஞ்சம் மாதம் / வருடம் முன் வந்து இருந்தால்? உங்கள் சொல் கேட்கும் மாணவன் நான் .... நல்லது நடந்து இருக்கும் ..... விதி யாரை விட்டது...
விடும் முன் எதுவும் தெரியவில்லை கண்ணுக்கு !!! விட்ட பின் எல்லாம் தெரிந்தது மனதிற்கு !!!
(விடும் முன் அய்யாவை தெரியாது விட்ட பின் மனதை தேற்ற கிடைத்தவர் அய்யா!! புன்னை வன நாதர் கபாலி அருளால் )
நான் உங்களுக்கு எழுதிய முதல் mail போல் உள்ளது.
செட்டியாருக்கு கேது , எனக்கு ராகு தசை.....பணிவுடன் ஜெகதீசன்/////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வல்லிசிம்ஹன் said...
பட்டுத் தெளிவது ஒரு இனம். பட்டும் தெளியாமல் இருப்பவர்களை இறைவன் தான் காக்க வேண்டும். நன்றி ஐய்யா.////

வாருங்கள் சகோதரி. வெகு நாட்களுக்குப் பிறகு உங்களின் வருகை. மகிழ்ச்சியை அளித்தது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,Wise knows from others but the other category knows from their experience only பழமொழி நினைவுக்கு வந்தது.நன்றி./////

உண்மைதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
சிறு கதையானாலும் அது தரும் கருத்து பெரியது.பட்டுத் தெளியவேண்டும் என்பது அவரது விதி,எனலாம்./////

பட்டுத் தெளிவதுதான் அனைவருடைய விதியும். நன்றி வரதராஜன்!

Spalaniappan Palaniappan said...

அய்யா வணக்கம் .
சிறு கதை சூப்பர்
தாய் சொல்லை தட்டாதே
மனைவி சொல்லை மதித்து நடக்க வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் .
மனைவியே மதி மந்திரி என்பதை புரிந்து கொண்டாலும் விதி வலியது என்பதையும் மறுப்பதற்கில்லை .\

சோமசுந்தரம பழனியப்பன், மஸ்கட்

Visvanathan N said...

Respected sir,

Really very good message for those actively in the stock market. But no other way to earn money for the persons, who completed his service period in the office. With less pension amount how can the retired person can run the family with other commitments like medical, daughter' marriage, etc.

with kind regards,
Visu

C.P. Venkat said...

வணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு.. நாள்தோறும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் தங்களின் புதிய மாணவன். எனக்கும் புதிர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவல்.. ஆனால் என்ன செய்ய? இருப்பு திசையை வைத்து பிறந்த நாள் நேரம் கணித்து, தசா புத்தி காலங்களில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எனவே புதிர் போட்டிகளை எதிர் கொள்வது எப்படி என ஒரு பாடம் இருந்தால் நன்றாக இருக்கும். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. பாராட்டுகள்.