மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.15

மனதிற்கான மருந்துகள்


மனதிற்கான மருந்துகள்

மனவளக் கட்டுரை

1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்கா
விட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப்
 பணத்தைச் செலவழியுங்கள்.

2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்

3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,
நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.

5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ
அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள்
என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!

8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை  ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!

9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,
நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.

10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!

11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.
அதுதான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச்
செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
 நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. vanakkam aiya...migavum arumaiyana varthaithaigal...mikka nandri...

    ReplyDelete
  2. தனிமையிலே யும்
    இனிமை காண முடியும்

    ஒரே மாதிரி இருப்பதிலும்
    ஒரு வகை சுகம் இருக்கிறது

    வாழ்ந்து பாருங்கள்
    வாழ்க்கை புரியும்

    கணக்கு பார்த்து வாழ்பவருக்காக
    கண்ணதாசன் எழுதியது அது

    வந்ததை வரவு என்றும்
    சென்றதை செலவு என்றும்

    கணக்கே போடாமல் ஈசன் போட்ட
    கணக்கில் வாழ்ந்தால்

    துன்பம் என்பதே இல்லை
    இன்பமே எந்நாளும் இதுஅப்பர்வாக்கு

    ///சுருக்கமாக, .... புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்....///

    இந்த புத்திசாலிதனம்
    இல்லை என்பதினால் தான்

    இத்தனை கஷ்டங்களும்
    இந்த புத்திசாலி தனம்

    எங்கே கிடைக்கும்
    என்பது பற்றியும் சொல்லுங்களேன்

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியா(ர்) ஐயா!.

    நல்ல தொரு படைப்பு ஆசானே.

    வெளி நாட்டில் வாளுபவருக்கு தங்களுடைய புத்தகங்கள் கிடைக்க வழிவகை ஏதேனும் உள்ளதா ஐயனே.

    ஜாதகம் பார்ப்பது என்பது ஒரு

    "கர்ம தொழில்",

    என்று ஒரு கூற்று உள்ளதே ஐயனே,

    இந்த கர்ம தொழில் என்பதனை பற்றி தங்களுடைய வாயால்

    "நான்கே நான்கு",

    வார்த்தை கூறுங்களேன் அய்யனே.

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் முத்துக்கள்..

    நன்றி அய்யா.

    ReplyDelete
  5. Hello master

    I have a doubt, few people's are lived more than 120 years. How this was possible. Even in their life also 8/3 lords dasha/ bukthi have also been crossed.
    Then what is the destiny of this type of person's. They crossed total dasha and bukthi periods. And then how we found/ calculate their
    Life days

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com