மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.4.15

குட்டிக்கதை: உண்மை எப்போது பலியாகும்?


குட்டிக்கதை: உண்மை எப்போது பலியாகும்?

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால்,
அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..

மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து,

“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது
தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான்.

மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் ,அந்த விவசாயி.பின்பு
சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம்,
"நண்பா, நீ  எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை
ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.

அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்."
என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,“நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க
முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.

அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத்
தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி
அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.

மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான். அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு
நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க
வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த
ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....

இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படித்ததில் பிடித்தது.

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

kmr.krishnan said...

குழந்தை, கீரிப்பிள்ளை, பாம்பை வைத்து ஒரு படக்கதை உண்டு.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு தாய் தண்ணீர் எடுக்கச் செல்வாள். அப்போது ஒரு பாம்பு குழந்தையை நெருங்கும். அதனைப் பார்த்த கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்டு அதனைக்கொன்று குழந்தையைக்காகும்.வாயில் பாம்பின் ரத்தத்துடன் இருக்கும் கீரியை தாய் சந்தேகப்பட்டுக் கொன்றுவிடுவாள்.

எப்போதுமே, எல்லாச் செய்திகளிலுமே உண்மை ஊமை போல்தான் ஒதுங்கியிருக்கும்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

நல்ல கதை ஐயா!நன்றி

hamaragana said...

Anbudan vanakkam vathiyar ayya..
Armani arumai armaiyaana Nethi kathai..

My Mobile Studios said...

Karthu ulla kathai vaalthukal.

ravichandran said...

Respected Sir,

Happy morning... Useful and nice story.

Have a great day.

With kind regards,
Ravichandran M.

Unknown said...

Super Iyaa!.

kannan Seetha Raman said...

Yes Sir.

Kirupanandan A said...

நல்லதிற்கு காலமில்லை என்பதைதான் இந்தக் கதை சொல்கிறதோ.

வேப்பிலை said...

ஆடாக நான்
ஆடாமல் அவன்

ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாவே என்பது அப்பர் வாக்கு

உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை

கண்ணதாசனின்
கவி மணிகள்..

கதையாக வந்தாலும்
கருத்தை சொன்னது

ஆடு இறந்தது பிரியாணிக்காக
அந்த நண்பனின் பிரிவால்

குதிரையும் இறந்தது என ஒரு
குறிப்பு இந்த கதையின்

அடுத்த பக்கத்தில் இருப்பதை
அறிய முடிகிறது...

Govindasamy said...

அடாடா... மிக அருமையான கதை.

அது சரி அப்போது ஆடாக இருக்கக் கூடாதா?
நீங்கள் சொல்வது போல உண்மை பலியாவது உண்மைதான். உண்மையில் உண்மைக்கு விதியே அதுதானா?
ஆனால் வாய்மையே வெல்லும் என்கிறார்களே...

நீங்கள் சொல்வது யதார்த்தமாக இருந்தாலும் உண்மையின் மனம் கலங்கி ஒதுங்கிப் போகும்போலுள்ளது.

குழப்பமாக இருக்கிறது அய்யா..!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
குழந்தை, கீரிப்பிள்ளை, பாம்பை வைத்து ஒரு படக்கதை உண்டு.
குழந்தையை வீட்டில் விட்டு விட்டு தாய் தண்ணீர் எடுக்கச் செல்வாள். அப்போது ஒரு பாம்பு குழந்தையை நெருங்கும். அதனைப் பார்த்த கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்டு அதனைக்கொன்று குழந்தையைக்காகும்.வாயில் பாம்பின் ரத்தத்துடன் இருக்கும் கீரியை தாய் சந்தேகப்பட்டுக் கொன்றுவிடுவாள்.
எப்போதுமே, எல்லாச் செய்திகளிலுமே உண்மை ஊமை போல்தான் ஒதுங்கியிருக்கும்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
நல்ல கதை ஐயா!நன்றி////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
Anbudan vanakkam vathiyar ayya..
Armani arumai armaiyaana Nethi kathai..////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger My Mobile Studios said...
Karthu ulla kathai vaalthukal./////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Useful and nice story.
Have a great day.
With kind regards,
Ravichandran M.//////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Useful and nice story.
Have a great day.
With kind regards,
Ravichandran M.//////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

///Blogger Unknown said...
Super Iyaa!.////

நல்லது. நன்றி Unknown
எதற்கு முகமூடி? பெயரைச் சொல்லலாமே!

Subbiah Veerappan said...

///Blogger Unknown said...
Super Iyaa!.////

நல்லது. நன்றி Unknown
எதற்கு முகமூடி? பெயரைச் சொல்லலாமே!

Subbiah Veerappan said...

////Blogger kannan Seetha Raman said...
Yes Sir./////

யெஸ் கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger Kirupanandan A said...
நல்லதிற்கு காலமில்லை என்பதைதான் இந்தக் கதை சொல்கிறதோ./////

ஆமாம் சாமி ஆமாம்!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
ஆடாக நான்
ஆடாமல் அவன்
ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாவே என்பது அப்பர் வாக்கு
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை
கண்ணதாசனின்
கவி மணிகள்..
கதையாக வந்தாலும்
கருத்தை சொன்னது
ஆடு இறந்தது பிரியாணிக்காக
அந்த நண்பனின் பிரிவால்
குதிரையும் இறந்தது என ஒரு
குறிப்பு இந்த கதையின்
அடுத்த பக்கத்தில் இருப்பதை
அறிய முடிகிறது...//////

அறிந்தால் சரிதான் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger Govindasamy said...
அடாடா... மிக அருமையான கதை.
அது சரி அப்போது ஆடாக இருக்கக் கூடாதா?
நீங்கள் சொல்வது போல உண்மை பலியாவது உண்மைதான். உண்மையில் உண்மைக்கு விதியே அதுதானா?
ஆனால் வாய்மையே வெல்லும் என்கிறார்களே...
நீங்கள் சொல்வது யதார்த்தமாக இருந்தாலும் உண்மையின் மனம் கலங்கி ஒதுங்கிப் போகும்போலுள்ளது.
குழப்பமாக இருக்கிறது அய்யா..!//////

குழப்பம் எதற்கு? பகவான் இருக்கிறார். பார்த்துக்கொள்வார்! இறை நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
raja lingam said...

vazhka valamudan iya