மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.4.15

Astrology: quiz number.82 உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்!


Astrology: quiz number.82 உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்!

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் 
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே. 
------------------------------------------------------------------------
Quiz No. 82

27.4.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!


மேலே உள்ள ஜாதகத்தை வைத்து 3 கேள்விகள்:

1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?

ஜாதகத்தை அலசி  உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

 1. 1.ஜாதகர் பிறந்த தேதி 1 ஜூலை 1969; நேரம் காலை 3 மணி 30 நிமிடங்கள் 30 வினாடிகள்.

  2.எட்டாம் அதிபதி குரு ஐந்தில் அமர்ந்ததே ஜாதகத்தில் மிகவும் கேடான அமசம்
  கூடவே கேது இருப்பதும்.

  3.குழந்தை பிறப்பதில் பிரச்சனையோ அல்லது பிறந்த குழந்தை ஊனமாக இருப்பதோ ஜாதகருக்கு ஆயுள் காலமும் மனக்கவலையையும் நரம்புத் தளர்ச்சியையும் அளித்தது.

  ReplyDelete
 2. DOB : 2.7.69
  Dear Sir,
  I cannot recognize what point your are expecting. However I submit the following facts I revealed from this Horoscope.

  Dharma Karmathipathi Saneeswaran is at 12th Place and also Neecham

  Laknam is in Pabakarthariyokam

  Chandran is alone which is a Avayokam

  Guru is in 5th place associated with Kethu

  Budhan Sukkiran Association at Laknam is not good.

  Raghu Looks Laknam, Kethu Looks 7th place.

  Saturn aspect Suriyan

  These above position gives a problematic life to the native and the native is lived a very tough life.

  ReplyDelete
 3. 1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?

  ஜாதகர் பிறந்த தேதி 31-06-1969
  (கலை 5 மணி முதல் 6 மணிக்குள் பிறப்பு உதயம் )

  2.ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?

  லக்கினம் ரிசபம் லக்கினாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பினும் லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது . சுக்கிரனே 6ஆம இடத்து அதிபதியும் ஆவார்

  மேலும் விரயாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று 7ல் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறது .

  6ம் இட அதிபதி பாபகர்த்தாரி யோகத்திலும் 6ம் இடமும் செவ்வாய் மற்றும் கேதுவிற்கு இடையில் சிக்கி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது

  6ம் இடத்தில் 12 இல் அமர்ந்த நீசம் பெற்ற சனியின் பார்வை

  8ஆம் இட அதிபதி குரு திரகோணம் பெற்று லக்கினத்தை பார்க்கிறார்

  6அம் இடத்தில் சுப கிரகங்களின் பார்வை இல்லை

  3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?

  இங்கு 6,8,12 ஆம் இடங்கள் வலுபெற்றுவிட்டன

  6ஆம் இடமானது முற்றிலும் கேட்டுவிட்டது .எனவே ஜாதகர் நோய் நொடியாலும் , கடன்களாலும் , எதிரியாலும் பாதிக்கப்பட்டு மரணமடைவார்

  ReplyDelete
 4. Vanakkam Iyya,


  1) Jathagar pirantha neram - (1 - 7 -1969) - (3.25 am)
  pirantha oor - Chennai endru veithu konden.

  2) Jathagathil mosamana amaipu :

  Rishaba lagnathiruku yogathipathi+Karma kaaraganaana saneeshawaran neecham petru + Lagnathiruku 12 aam veetil ullar

  3)

  Neecham petra saniyin 7 aam paarvai 6 aam veetin mel vizhugirathu.

  6 aam veetin athipathium lagnathipathium sukran aavar.

  Intha jathagathil 6 aam veetu kaarar antha veetiruku 8 aam veetil (Lagnathil) amarnthullar.

  6 veetiruku neecha saniyin paaravaiyai thavirthu vera entha subha grahangalin paarvai illai.

  Intha kaarangalinaal avaruku miga periya vyathi vanthirukum.
  Saneeshawaran neecham aagi vera entha subha grahangalin paravai avar mel illai endral aayul migavum kuraivu.

  avarudaya maranathiruku intha vyathiye vazhi vaguthirukum.

  Nandri,
  Bala

  ReplyDelete
 5. பிறந்த தேதி ‍
  ஜுலை 1 1969 3.17 AM

  ஜாதகத்தில் உள்ள கேடான அம்சங்கள்.

  லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது. லக்னாதிபதிக்கும் அதே நிலைமை.

  எட்டாம் அதிபதி (மிக வலுவாக 8 பரல்கள் கொண்ட) குருவின் ஒன்பதாம் பார்வை லக்னம்‍‍ மற்றும் லக்னாதிபதியின் மேல். அத்தோடு கேதுவின் கூட்டணி.

  ஏழில் வக்கிர செவ்வாய் ஆட்சி. அதன் ஏழாம் பார்வை லக்னத்தின் மேல்.இரண்டில் சூரியன். சனி செவ்வாயின் பார்வை இரண்டாம் வீட்டின் மேல்.

  ஒன்பதாம் வீட்டில் (பாதக வீடு) மாந்தி மற்றும் சந்திரன். அந்த வீட்டின் அதிபதி சனியின் பத்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மேல்.

  சுக்கிரனும் சனியும் 1/12 என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

  மிக கேடான அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழில் பாப கிரகங்கள். ஒன்பதில் மாந்தி குழந்தைகளால் மனக்கஷ்டம் வரலாம். தாய், தந்தை ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். கண் பார்வை கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ராகு திசையில் திருமணம் நிலைக்காமல் போயிருக்கலாம் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.

  thanks
  sree

  ReplyDelete
 6. பிறந்த தேதி 01.07.1969
  தர்ம, கர்மதிபதி சனி லக்னத்திற்கு 12 ல் நீசம் (கேடான அம்சம் )
  செவ்வா தசா சனி (பாதகாதிபதி )புததியில் மரண்ம்

  ReplyDelete
 7. Ayya,

  1. DOB: 1-July-1969, 4AM Chennai
  2. Two bad reasons: a)Shani is sitting in 12th house, because he is owner for 9th and 10th houses.b) 8th house hemmed by Chevvai & Mandhi. So he would have got minimal life(Arpa Ayul).
  3. a)This person might not got all in luckily in his life, because Shani is sitting in 12th house(Shani is lucky house owner in his horoscope). Moreover he would not have got sexual desires in his life, because shani is sitting in his 12th house.
  b) He would have undergone lot of struggles because of 8th house is under Papa Karthari Yogam.

  Your Student,
  Trichy Ravi

  ReplyDelete
 8. Respected Sir,

  My answer for our Quiz No.82:

  1. He/she has born on 01.07.1969 at04:00 to 05:00am.

  2. Saturn is placed in 12th place. This is the bad sign of this given horoscope.

  3. When Saturn is situating 12th place, It makes Baba kathri Yoga for Lagna and Lagna lord. The Native has to struggle in their life.

  4. Saturn is affecting couch pleasure as well as family life (Second house) and also second house lord Mercury is placing 12th place from its own house.

  5. Saturn is the Yogakaraga as well as karmakaraga(Authority of 10th house). Hence, The native couldn't get better job in their life. It affects his life too.

  6. Hence, Saturn is so weak and affects the Native's family life as well as profession.

  With kind regards,
  Ravichandran M.

  ReplyDelete
 9. Quiz.82 ற்கான பதில்

  1. பிறந்த தேதி & நேரம் : 01 July 1969 அதிகாலை 3:26 am.
  2. ரிஷப லக்கின யோகாதிபதி சனி 12ல் மறைவு, 7ல் வக்கிர செவ்வாய் மேலும் சந்திரன் மீது சனியின் பார்வை, 5ல் குருவும் கேதுவும் ஆகியவை கேடான அம்சம் ஆகும்.
  3.
  a. யோகாதிபதி சனி 12ல் அமர்ந்து 2ம் இடத்தை பார்த்து தூக்கத்தையும் தனத்தையும் கெடுத்தது.
  b. 7ல் இருந்த மாரகாதிபதி வக்கிர செவ்வாய் தனது திசையில் அதாவது ஜாதகரின் 20வயதிற்குள்ளேயே ரண சிகிச்சை செய்யும் அளவுக்கு கண்டத்தை கொடுத்தான், மேலும் திருமணத்தை தாமதபடுதினான்.
  c. 5ல் குருவும் கேதுவும் புத்திர பாக்கியத்திற்கு வேட்டு வைத்தது.
  d. சந்திரன் மீது சனியின் பார்வை கணவன் மனைவிக்குள் அன்யோன்யத்தை கெடுத்தது.


  உபரி: லக்கினத்தின் மீதும் சந்திரன் மீதும் குருவின் பார்வை உள்ளதால் திருமணம் உண்டு.  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 10. yogakaaragan sani in 12th place.

  Mars is sitting at kalathira place.

  ReplyDelete
 11. sani in 12th place and sun in 2nd place

  in between laknaathibathi with mercury..paabakathaari yogam

  ReplyDelete
 12. 1. ஜாதகர் பிறந்த தேதி : 01-07-1969
  2. குரு மற்றும் கேது சேர்க்கை 5ம் பாவகத்தில்
  3. புத்திரகாரகன் 5ல் (காரகோபாவக நாஸ்தி) கூட்டணி கேது (ஜாதகருக்கு புத்திர தோஷம்)
  க. சரவணக்குமார்

  ReplyDelete
 13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  ஜாதகர் பிறந்த தேதி – 01.07.1969 நேரம் 3.30 AM

  லக்னமும் லக்னாதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு செவ்வாயின் நேரடிப் பார்வை வேறு. 7ல் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்தைக் குறிக்கும்.

  குடும்ப ஸ்தானமும், சந்திரனும் சனியின் பார்வை இருக்கிறது. அது குடும்ப வாழ்க்கையில் சண்டை ச்ச்சரவு மற்றும் பிரச்சினையை உண்டு பண்ணி பிரிவினையை ஏற்படுத்தும். சனி 12ல் இருப்பதால் ஜாதகர் தனியே வாழ நேரிடும்.

  லக்னத்துக்கும், லக்னாதிபதிக்கும், சந்திரனுக்கும் குரு பார்வை இருந்தாலும் குரு கேதுவாலும் ராகுவாலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.

  5ம் வீட்டில் குருவும் கேதுவும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. குரு 5ல் இருப்பதால் காரகோ பாவ நாஸ்தி. கேது இருப்பதால் புத்திர நாஸ்தி

  ReplyDelete
 14. வணக்கம் அய்யா!

  புதிர் எண்: 82க்கான அலசல்:

  ரிச‌ப லக்னம், மகர ராசி ஜாதகர்.

  1. ஜாதகர் பிறந்த தேதி ஜூலை 1, 1969,விடியற்காலை 4 மணி 30 நிமிடம்.
  2. ஜாதகத்தில் உள்ள கேடான அம்சம் : ரிசப லக்கினத்திற்கு யோகாதிபதியும், கர்மகாரகனுமான‌ சனி லக்கினத்திற்கு 12ல் நீசமடைந்து மறைந்து விட்டார்.லக்கினாதிபதி சுக்கிரனும், தனாதிபதி புதனும் பாப கர்த்தாரியின் பிடியில் உள்ளனர்.
  3.இதனால் நிலையற்ற வேலை, கைக்கும் வாய்க்குமான நிலை, வாழ் நாள் ஏழ்மை போன்ற‌ கெடுதல்கள்.

  விரிவான அலசல்:

  லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே உள்ளார். அவருடன் இரண்டாம் அதிபதி புதன் அமர்ந்துள்ளார். லக்கினத்திற்கு 12ல் சனியும், 2ல் சூரியனும் சேர்ந்து இவர்களை கத்திரியின் பிடியில் அமுக்கி செயல்படாமல் செய்து விட்டனர். பிரபல யோகாதிபதியும் கர்ம காரகனுமான‌ சனிபகவான் 12ல் நீசமடைந்து மறைந்து விட்டார். ஜாதகரை வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தில் தள்ளி விட்டார்.
  "ரகசியத்தை சீக்கிரம் போட்டு உடையுங்கள் அய்யா!"

  ReplyDelete
 15. 1. < ஜாதகர் பிறந்த தேதி 01.07.1969 >

  2. < ஜாதகத்தில் கேடான அம்சம் > ‍‍ < < 9 ஆம் பாவ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது >>>>>>. < லக்னத்திற்கு யோககாரகன் மற்றும் 9, 10 உரிய தர்ம கர்ம அதிபதி சனி நீசம் பெற்று விரயத்தில் அமைந்துள்ளது >

  < நீச சனியும் , பகை பெற்ற குருவும் 9 ஆம் வீடடை பார்க்கிறார்கள் >

  < மாந்தியும், 3 க்கு உடைய சந்திரனும் 9 ல் அமர்ந்து தன் பங்கிற்கு நாசம் செய்து விட்டர்கள் >.

  < சனிக்கும் சூரியனுக்கும் இடையில் பாபகர்தாதாரி யோகத்தில் லக்னம்

  3.கேடான அமைப்பு: ஏழ்மையும், தரித்திரமும் வாழ்க்கையில் கண்ட பலன்

  ReplyDelete
 16. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  விடை: “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா!”
  1) ஜாதகர் பிறந்த தேதி ஆகஸ்ட்01,1969.
  2) கேடான அம்சம் லக்னம்,6மிடம்,8மிடம் மூன்றும் பாபகர்த்தாரி யோகத்தில்.
  3)ஜாதகர் தனது 29 வயதில் ராகு தசை சனி புத்தியில் இறைவனடி சேர்ந்திருப்பார்.(மன்னிக்கவும்).
  அலசல்:
  இந்த ஜாதகம் அற்பாயுசு யோகம்.
  a)லக்கினத்தில் 6மதிபதி சுக்கிரன் ஆட்சி & பாபகர்த்தாரியில் உள்ளது.
  b)5ல் கேது 8ம் பதி குருவுடன் கூட்டு.
  அவரே 11க்கும் அதிபதி.
  ரிஷப லக்கின பாதகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சனி 12ல் அமர்வு மற்றும் நீச்சம்.
  c)சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7ல் ஆட்சி.லகிகினத்தையும் 2ல் அமர்ந்த ஆத்மகாரகன் சூரியனையும் பார்வை செய்து இரண்டையும் கெடுத்தார்.
  d)ஆயுள் ஸ்தானம் பாபகர்த்தாரி யோகம் மற்றும் சூரியனின் தீய பார்வை.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 17. ஜாதகர் ௦1 - July - 1969 அன்று ௦3:3௦ AM இல் பிறந்தவர். ரிஷப லக்னத்திற்கு யோக காரகன் பன்னிரண்டில் நீசமாகி மறைந்தாலும், செவ்வாய் நீச பங்க ராஜ யோகத்தை உருவாக்கி அதைப் போக்கி விட்டது. மேலும் பல யோகங்களை உள்ளடக்கிய ஜாதகம் இது. கேந்திரமான 5-இல் இருக்கும் குரு பூர்வ புண்ணிய பலத்தைக் கொடுத்தாலும் கூடவே இருக்கும் கேது எதையும் தனக்கென வைக்க விடாமல் பிறர்க்குக் கொடுக்க வைத்து விடுவான். தனக்கென வாழா பெருந் தலைவன் என்று சொல்லலாம்.... சரியா ??

  ReplyDelete
 18. 1. July 01 1969

  2. Sani in debility

  Guru sandala yogam.

  kaala sandhippil piranthu ullaar.

  ReplyDelete
 19. 1) DOB: 1 Jul 1969

  2) ஆயுள்காரகன் சனி 12ல் நீசம், ஆயுள்ஸ்தானாதிபதி குரு கேதுவுடன் இருப்பது. இருவரும் ஒருவருக்கொருவர் 6, 8 ஆக இருப்பது.

  3) ஜாதகருக்கு அற்பாயுளைக் கொடுத்தார்கள்.

  ReplyDelete
 20. Respected Sir vanakkam,

  Date of Birth is : 01 / July / 1969

  Migavum kedaana visayam : 1.) Rajayogadhipathy Sani Neecham petradhu.

  neecham petradhal, thozhil sarivara illai.

  2.) Puthira karagan Guru, budhan veetil udan kethu. Rishaba lagnathirku guru kedhudal seibavar pattiyalil mudhalil iruppavar, adhanal ivarukku puthira baagiyam thadai seidhuruppar.

  3.) Chandran kemadhruma yogathil ullar. idhuvum oru theengana amaippu.

  Thank You.

  ReplyDelete
 21. 1. 10க்குரிய சனி 12ல் நீச்சம்.
  இதனால் ஜாதகருக்கு உத்தியோகம் கிடைப்பது அரிது.

  2.மன காரகன் சந்திரனுடன் மாந்தி இருப்பது மிகவும் கேடு. இதனால் ஜாதகருக்கு மனநோய்க்கான வாய்ப்பு கூடுதலாக உண்டு. இந்த அமைப்பு ஒன்பதாம் வீட்டில் இருப்பது பாக்கியமாய் மற்றவைகள் அமைவதையும் கெடுக்கும்.( சந்திரன் மூன்றாம் வீட்டுகுரியவன்..)

  2. ஏழில் செவ்வாய் இருந்தபோதிலும் இது மகாபுருச யோகமான ருசக யோகம். இதனால் ஜாதகருக்கு மிகுந்த சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தச் செவ்வாய் லக்கினத்தையும் சுக்கிரனையும் இரண்டுக்குரிய புதனையும் பார்ப்பதால் ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அவ்வளவு சீராக இருக்காது.

  3. அய்ந்தாமிடத்தில் குரு இருப்பது சற்று ஆறுதலானது ஆனால் 8,11க்குரிய குருவுடன் கேது இருப்பது குருவின் அமைப்பை கெடுக்கிறது. இதனால் வலுவிழந்த குரு 9ம் இடத்தையும் லக்கினத்தையும் பார்த்துப் பிரயோஜனமில்லை.

  ReplyDelete
 22. புதிர் எண் 82 க்கு விடை

  ஜாதக அன்பருக்கு கர்மகாரகன் சனி பகவான் 9,10 வீட்டு அதிபதி,
  12 ல் அமர்ந்து மறைந்து, நீசமாகி இருக்கிறார்.

  அதனால் அன்பர் சரியானவேலை இல்லாமலும் , சொந்த தொழில் நஷ்டமடைந்தும் , குடும்பம் மங்கியும் இருக்கும்.

  கண்ணன்.

  ReplyDelete
 23. ஜாதகரின் பிறந்த தேதி 01.07.1969

  கேடான அம்சம் 5‍ல் குரு கேதுவுடன் ‍ காரக தோசம்.

  பாதிப்பு ‍ குழந்தை பாக்கியம் இல்லை

  AMG

  ReplyDelete
 24. வணக்கம் குரு,

  1. பிறந்த தேதி 1969-Jul-01
  2. 5ல் குருவும் கேதுவும் அமர்ந்தது
  3. புத்திர பாக்கியத்தை தடை செய்தார்கள்

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 25. Dear Sir,
  I have already posted my observations.
  In addition to that I wish to submit further that Budhan and Sukkiran is in association at Laknam with the Sevvai aspect from 7th house which creates the indecent behaviour of the native. The character of the native is not much pleasant.

  ReplyDelete
 26. ஜாதகர் ஜூலை 1 1969ம் ஆண்டு பிறந்தவர்.

  ஜாதகத்தில் சற்று வலுவில்லாத அமைப்பு என்று பார்த்தால் இடப இலக்கினத்திற்கு யோககாரகரான சனி நீசம் அடைந்திருப்பது, பாக்கிய ஸ்தானத்தில் மாந்தி இருப்பது மற்றும் மாரகாதிபதி செவ்வாய் 7ம் இடத்தில் இருந்து இலக்கினத்தை தனது நேரடி பார்வையில் வைத்து இருப்பது. இவற்றை விட கேடு என்றால் இலக்கினமும் இலக்கினாதிபதி மற்றும் களத்திரகாரகரான சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லாமல் போனது. அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அதில் மகிழ்ச்சி இருந்திருக்காது. புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பதால், கல்வியிலும் சிக்கல் இருக்கும். 14 வயதிற்கு மேல் வரும் செவ்வாய் மகாதசை ஜாதகருக்கு பல சிரமங்களை கொடுத்திருக்கும். ஒரே ஆறுதல் இலக்கினத்திற்கும் இலக்கினாதிபதிக்கும், சந்திரனுக்கும், புதனுக்கும் குரு பார்வை இருப்பதுதான்.

  ReplyDelete
 27. Answer
  DOB July 1st 1969 Chennai 5 00 am.
  Lagnathiruku & lagnathipathikku irandu pakkamum pabikkal. Yogakarakan sanibhagavan 12il athuvm neesam.

  Jathakar sattavirotha seyyalkal seithuirupar

  ReplyDelete
 28. வாத்தியார் ஐயா விற்கு

  உங்களிடம் மட்டும்! உங்களிடம் மட்டும் இந்த கேள்வியை கேட்பேன்!
  தாங்கள் உருப்படாத!
  உருவம் இல்லாத கேள்வி என்று ஒதிக்கி விடாதீர்கள் .

  கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு,

  அதாவது

  "குடிக்காமல் இருப்பது அழகு இல்லை . ஆனால், பட்டை சாராயம்
  ( பெரும் பணக்காரர்களுக்கு மது பானம் தயாரிக்கும் ஆலை) காட்சியும் குடிக்காமல் இருப்பது தான் அழகு என்று.

  சரி கதைக்கு வருகின்றேன் .

  ஜாதகம் பார்பவர்கள் குடும்பம் விருத்தி ஆனதாக சரித்திரம் இல்லை என்று இன்றும் தங்களை போன்ற
  மிக்க அனுபவசாலி ஜோதிடர்களும் கூறுகின்றனரே ஐயா!

  இதைப்பற்றி சற்று பாடம் எடுக்கலாமே ?

  இதைப்பற்றி இதற்க்கு முன்னர் வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளீர்களா என்று என்னுடைய சிற்றறிவிற்கு தெரியவில்லை.

  (நடத்தி இருப்பின் மன்னிக்கவும்)

  அடியவன் குடும்பத்தில் இருந்த எமது முன்னோர்கள் சுமார் நான்கு தலை முறையாக ஜாதகம் பார்க்க தெரியும்.

  அடியவனும் ஜாதகத்தை ஆர்வம் கொண்டு படித்த பொழுது தாயாருக்கு விசையம் தெரிந்து ஜாதகம் படிப்பது வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

  அதனால் தான் தங்களுடைய வகுப்பறையில் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக கடைசி பென்சு கடைசி மாணவனாக இருந்து மற்ற மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றேன். ( எம்மால் முடிந்தது ஆசானே!)


  இங்கு ஜாதகத்தை படித்து நிபுணத்துவம் பெற்று அதனை கொண்டு பணம் சம்பாதிப்பது மட்டும் பொருள் இல்லை அய்யனே!

  " குடும்ப விருத்தியை ", மனதில் கொண்டு எழுதுகின்றேன் அய்யனே!

  ஒரு ஜோதிட மேதை எமக்கு நன்கு தெரிந்தவர்

  (அன்னாரின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால )

  ஜோதிடம் பார்பதையே நிறுத்தினார் .

  " காரணம் குடும்ப விருத்தி இல்லை",

  என்பது .

  அதனால் எத்தனை பேர்கள் பாதிக்க பட்டனர் என்பது எமக்கு தெரியாது அய்யனே .

  ஆனால்,

  அவரிடம் ஜாதகம் பார்க்க முடியாமல் பாதிக்க பட்டவர்களில் அடியவனும் ஒருவன் என்பது தான் மிகவும் பரிதாவம் அய்யனே .

  (பணம் சம்பாதிப்பதர்க்காக ஜாதகம் பார்பவர்களை அடியவன் இங்கு குறிப்பிட வில்லை அய்யனே ).

  ஜாதகம் பார்ப்பதை "தவமாக", நினைத்து வாழ்பவர்களை பற்றி மட்டும் இங்கு குறிப்பிட்டு உள்ளேன் அய்யனே.

  கடந்த ஒரு வாரமாக எம்முடைய ஜாதகத்தை எடுத்து ஆராய்ந்ததில் எம்முடைய 37 வருட வாழ்கையில்

  தாங்கள் வகுப்பறையில் குறிப்பிட்டு உள்ளீர்களே .

  கெட்ட தசையில் தான் கெடுதல் நடக்கும் என்று பொருள் இல்லை.

  நல்ல தசையிலும் கெட்ட புத்தியில் "கையையும், காலையும் கட்டி தலை கீழாக தொங்க போட்டு, சும்மா பின்னி பிரானை ( மூச்சு முட்டும் அளவிற்கு) எடுத்து விடுவார் என்று .


  தங்களுடைய பொன்னான கூற்று போலதான் நடந்து உள்ளது ஆசானே!

  எம்முடைய ஜாதகத்தின் படி மிகவும் சரியாக உயர் திருவாளர் போற்றுவதற்கு உரியவர்

  "இராகு' பகவான்",

  மற்றும் அவருடைய கூட்டாளி

  "கேது"

  பகவானின் புத்தியில் போது தான்.


  எல்லாம் நடந்து முடிந்த பின்னர் தான்

  "நடந்தது என்ன",

  என்று பார்த்தால் விதி (ஜாதகம்) நன்றாக விளங்குகின்றது .

  இதற்க்கு பேர் தான் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது என்பது :-))

  சரி தானே ஐயனே.

  முன்னரே ஒன்றுக்கு பத்து மேல்பட்ட ஜோதிடர்கள் "ஜாதகம்"' பார்த்ததை நம்பி மேற்கொண்டு செயலில் இறங்கிருக்க வேண்டாம் என்று தோன்றுகின்றது தற்பொழுது தான் ஐயனே .

  குடும்ப ஸ்தானத்தில் (2 ம் வீட்டில்) கேது இருக்கின்றவனுக்கு கேது புத்தியில் நல்ல நாள் குறித்து கொடுத்து உள்ளார்கள் அய்யனே .

  இந்த கொடுமையை எங்கு போகி சொல்வது .

  அன்னையாரின் அனுமதியுடன் அடியவன் இனிமேல் ஒழுங்காக பாடங்களை ( ஜோதிடத்தை) படிக்கலாம் என்று முடிவி பண்ணி புள்ளையார் சுழி போட

  "குரு",

  உடைய நல்ல ஆலோசனையை

  ( என்முடைய விருப்பம் கொண்டு)

  விரும்பி கேள்கின்றேன்.

  தாங்கள் அறிவுரை வழங்க வேண்டும் ஐயனே.

  ஜோதிடம் என்னும் தவத்தை கற்க வேண்டி அய்யனே! ஆசானே! குருவே!
  நன்றி!

  வணக்கம்!

  வந்தனம்!

  நமஸ்காரம்!.

  ReplyDelete
 29. 1.ஜாதகர் பிறந்த தேதி என்ன?

  01.07.1969

  2.ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?

  ஜாதகரின் 2 ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  ஜாதகரின் 2 ம் வீட்டில் சூரியன் அமர்ந்து ,அந்த வீட்டை பாக்கியாதிபதி சனி’யின் நீச பார்வை. மேலும் 2 ம் வீட்டிற்கு 12 ம் அதிபதியின் 8 ம் பார்வை. ‘2 ம் அதிபன் புதன் ‘2’க்கு 12 ஸ்தானமான லக்கினத்தில் மறைந்து பாப கர்த்தாரியில் உள்ளார்.
  மேலும் சந்திரனுக்கு ‘2’ அதிபனான சனி’ நீசத்தில்..

  3.அந்த கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலை செய்தது?

  a. ஜாதகரின் வாக்கு ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாதகர் பிறவியிலேயே வாய் பேச வராதவர். கண் பார்வை குறைபாடு உடையவராகவும் இருப்பார்..

  b. 2 ம் வீடு பாதிப்பில் உள்ளதால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமைந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்க வாய்ப்பில்லை.

  க.சிவராஜன்
  (பாண்டிச்சேரி)

  ReplyDelete
 30. ஐயா,
  பதிலுக்கானக் காரணம்:
  1. பிறந்த தேதி:02/07/1969
  2 முற்றிலும் பாதிக்கப்பட்ட தொழில்ஸ்தானம். 10ஆம் அதிபதியும், தொழில்காரகனும் ஆகிய சனி 12-ல் மறைந்ததோடு, 12-ல் நீசம். 10ஆம் வீட்டின் மீது விரையதிபதி செவ்வாயின் 4-ஆம் பார்வை. மேலும் ராகு மற்றும் தேய்பிறை சந்திரனனுடன் சேர்ந்த மாந்தியின் பிடியிலுள்ள 10ஆம் வீடு. அடிமை தொழிலைக் குறிக்கும் 6ஆம் வீடும் பாபாகத்திரி யோக பிடியில். வருமானத்தைக் குறிக்கும் 2ஆம் வீட்டோன் அந்த வீட்டிற்கு 12-ல்.
  3. மனதிற்கு காரகன் சந்திரன் சனியின் பார்வையில் உள்ளதால், ஜாதகர் சொந்தத்தொழிலில் நட்டம் ஏற்பட்டு, 6ஆம் வீட்டின் மீதுள்ள தொழில்காரகன் பார்வையின் முலம் ஏதேனும் அடிமைத்தொழிலைச் செய்து, வயிற்றுக்கும் வாய்க்குமான வருமானத்தில் இருப்பார்.

  நன்றி.
  பிரபாகரன்.

  ReplyDelete
 31. வணக்கம்.

  1. பிறந்த தேதி: 1‍/07/1969 காலை 03.30 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். ( இடம்: சென்னை)

  2. கேடான அம்சம்: குடும்பஸ்தானம், (2ம்வீடு பலவீனமாக உள்ளது).

  3. வாழ்க்கையில் குடும்பம் இல்லாமல் அமைந்து விட்டது.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com