மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.4.15

நகைச்சுவை: ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?


நகைச்சுவை: ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?
++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவையை ந்கைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
-------------------------------------------------------
1
"டேய் மண்டையா, அங்க என்னடா லோலாயி?”

“நீங்க திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா, அண்ணி என்ன செய்யும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக போய்க் கேட்டேன்”

“அந்தக் கருமாந்திரம் புடிச்சவ என்னடா சொன்னா?”

“அவங்க தங்கச்சியோட போயி தங்கிருவாங்களாம்!”

“ஓஹோ”

“இப்ப அதே கேள்விய உங்ககிட்ட கேக்கிறேன் - அண்ணி திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“இதில யோசனை பண்றதுக்கு என்னடா இருக்கு? நானும்
சந்தோஷமாப் போயி அவ தங்கச்சியோட தங்கிருவேன்டா!”
--------------------------------------------------------
2
”டேய் மண்டையா?”

”என்ன அண்ணே?”

”அந்த சைக்கிள் கடைக்காரன் பொண்ணு வந்து உன்னிய லவ்ஸ்
பண்றேன்னு சொன்னுச்சாமே?”

”ஆனா, நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”

”ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?”

”எங்க வீட்டில எல்லோருக்கும் சொந்தத்திலதாண்ணே கண்ணாலம் ஆகியிருக்கு அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

”எல்லோருக்குமே சொந்தத்திலேயா? அதிசயமாயிருக்கேடா!”

”ஆமாண்ணே, எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கட்டிக்கிட்டாரு.
எங்க அத்தை மாமாவைத்தான் கட்டிக்கிட்டிருக்கு. அதைவிடுங்க
எங்க அண்ணி எங்க அண்ணனைத்தான் கட்டிக்கிட்டிருக்கு!”
-------------------------------------------------------------------
3
“அண்ணே...!”

“என்னடா, மண்டைய்யா?”

“என்னோட போன் நம்பர் மாறிடுச்சு! குறிச்சிக்கிடுங்கண்ணே!

“வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா”

“முன்னாடி (நோக்கியா) 3310 ; இப்ப 6610 அண்ணே!”
------------------------------------------------------------------
4
“என்னடா சொல்றே?”

“ஆமாண்ணே, எம் பையனை மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துட்டேண்ணே”

“என்னது, மெடிக்கல் காலேஜ்லயா? அங்க என்ன படிப்புடா இவன் படிக்கப்போறான்?”

“இவன் படிக்கலேண்ணே, இவனை வச்சு அவங்க படிக்கப்போறாங்க!”
------------------------------------------------------------------------------------
5
“டேய், இதுக்கு மட்டுமாவது ஒழுங்கா பதில் சொல்டா!”

“நான் அப்பவே ரெடி, கேள்வியைக் கேளுங்க”

“ராமர், கிரிஷ்ணர், காந்திஜி, இயேசுநாதர் இவிங்க நாலு பேருக்குள்ளார இருக்கிற ஒற்றுமை என்னடா?”

“இது ஜுஜூபி கேள்வி, யாரைக் கேட்டாலும் பதில் சொல்வானே!
கொஞ்சம் கஷ்டமான கேள்வியாக் கேளுங்கண்ணே!”

“மவனே, முதல்ல இதுக்கு நீ ஒழுங்கா பதில் சொல்டா”

“நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே!”

“அடப்பாவி!”
--------------------------------------------------------------------------------
6
“அண்ணே, டி.வியைத் தவிர வீட்டிலேயிருக்கிற மத்த சாமானெல்லாம் திருட்டுப் போயிருச்சண்ணே!”

“அத மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?”

“நான் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்ல!”

-------------------------------------------------------------------------------
இந்த ஆறில் எது நம்பர் ஒன்?

அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

hamaragana said...

Anbudan vathiyar ayya vanakkam
Ellame nanraaka ullathu!!!

Kirupanandan A said...

//இந்த ஆறில் எது நம்பர் ஒன்?//

முதல் பார்வையில் இது one line நகைச்சுவையோ என்று நினைத்தேன். புரிய சிறிது நேரமானது.

முதலில் ஒன்று நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்ததைப் படிக்கும் போது மனம் மாறி விடுகிறது. மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் படித்தால் வேறொன்று நன்றாக இருப்பது போல் தெரிகிறது.

ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவரின் ஜாதகத்தைப் பின்னாளில் பகிர்ந்துக் கொள்ளலாமே.

lrk said...

ஐயா வணக்கம்

///வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா”///

3 அண்ணே !

நன்றி
கண்ணன்.

SELVARAJ said...

அத்தனையும் அருமை. இருப்பினும் போன் நம்பர் சூப்பர்.

ravichandran said...

Respected Sir,

Happy morning. All are best and No.6 is superb.

With kind regards,
Ravichandran M

வேப்பிலை said...

7 தான் அண்ணே..

kannan Seetha Raman said...

வணக்கம் ஐயா

எல்லாமே நன்றாக தான் உள்ளது .

asbvsri said...

ஆறும் அருமை. அதில் ஐந்து கலப்படமில்லாத முதல் தர நகைச்சுவை மிகவும் அருமை

Pathrachalam Chalam said...

Ayya kodaiyai marakka vaikkum..arumaiyana nagai suvai.....

B. Lakshmi Narayanan, Tuticorin said...

4th one is very nice

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
Anbudan vathiyar ayya vanakkam
Ellame nanraaka ullathu!!!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

Blogger Kirupanandan A said...
//இந்த ஆறில் எது நம்பர் ஒன்?//
முதல் பார்வையில் இது one line நகைச்சுவையோ என்று நினைத்தேன். புரிய சிறிது நேரமானது.
முதலில் ஒன்று நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்ததைப் படிக்கும் போது மனம் மாறி விடுகிறது. மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் படித்தால் வேறொன்று நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவரின் ஜாதகத்தைப் பின்னாளில் பகிர்ந்துக் கொள்ளலாமே./////

எனக்குத் தெரிந்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் கிரேசி மோகன் அவர்கள். அவரின் ஜாதகம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளலாம்!

Subbiah Veerappan said...

Blogger Kirupanandan A said...
//இந்த ஆறில் எது நம்பர் ஒன்?//
முதல் பார்வையில் இது one line நகைச்சுவையோ என்று நினைத்தேன். புரிய சிறிது நேரமானது.
முதலில் ஒன்று நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்ததைப் படிக்கும் போது மனம் மாறி விடுகிறது. மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் படித்தால் வேறொன்று நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவரின் ஜாதகத்தைப் பின்னாளில் பகிர்ந்துக் கொள்ளலாமே./////

எனக்குத் தெரிந்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் கிரேசி மோகன் அவர்கள். அவரின் ஜாதகம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளலாம்!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
///வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா”///
3 அண்ணே !
நன்றி
கண்ணன்./////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
அத்தனையும் அருமை. இருப்பினும் போன் நம்பர் சூப்பர்./////

நல்லது. நன்றி செல்வராஜ்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning. All are best and No.6 is superb.
With kind regards,
Ravichandran M////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
7 தான் அண்ணே..////

8 எட்டவில்லையா?

Subbiah Veerappan said...

/////Blogger kannan Seetha Raman said...
வணக்கம் ஐயா
எல்லாமே நன்றாக தான் உள்ளது ./////

நல்லது. நன்றி சீதாராமன்!

Subbiah Veerappan said...

/////Blogger kannan Seetha Raman said...
வணக்கம் ஐயா
எல்லாமே நன்றாக தான் உள்ளது ./////

நல்லது. நன்றி சீதாராமன்!

Subbiah Veerappan said...

/////Blogger asbvsri said...
ஆறும் அருமை. அதில் ஐந்து கலப்படமில்லாத முதல் தர நகைச்சுவை மிகவும் அருமை////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Pathrachalam Chalam said...
Ayya kodaiyai marakka vaikkum..arumaiyana nagai suvai...../////

கோடையை மறந்து சிரித்தமைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
4th one is very nice////

நல்லது. நன்றி தூத்துக்குடியாரே!

சுபத்ரா said...

No. 3 :)