மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.4.15

இனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்!:


இனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்!:

✨தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨ நிறைய புத்தகம் படியுங்கள்.
✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
✨ மன்னிக்கப் பழகுங்கள்.
✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

அன்புடன்,
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

My Mobile Studios said...

vaalthukal.

slmsanuma said...

super

B. Lakshmi Narayanan, Tuticorin said...

நன்றி வாத்தியாரே!!!


வேப்பிலை said...

இதெல்லாம் சரி...
இது எந்த வயதினருக்கு

சுபி யா
சுமு வா.. அதவாது
சுதந்திரத்திற்கு முன் பிறந்தவருக்கா
சுதந்திரத்திற்கு பின் பிறந்தவருக்கா

நாங்கள் முதுநிலை குடிமகன்கள்
(சீனியர் சிட்டிசன்)
எங்களுக்கும் ஏதாவது சொல்லுங்கள்

gayathri devi said...

Nandri iyya

kmr.krishnan said...

அருமையான ஆலோசனைகள்.

உணவைப் பொறுத்தவரை இந்த ஆலோசனை வசதியானவர்களுக்கே பொருந்தும். உழைப்பாளிகள் இரவு உணவைத்தான் நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டால் வேலை செய்ய முடியாது.

மனதிற்கு இதம் தரும் இசையைக் கேட்க சற்று நேரம் ஒதுக்க வேண்டும்.

ஏதாவ்து ஒரு 'ஹாபி'யை வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.

அடியேன் diet,drill,discipline பற்றி ஒரு வகுப்பு எடுக்கிறேன் சுமார் 3 மணி நேரம் ஆகும் இலவசம்தான்.

murali krishna g said...

arumaiyana paadam !! nandri , ayya !

வேப்பிலை said...

///kmr.krishnan said...
உணவைப் பொறுத்தவரை .....///

எந்த உணவு...?

///மனதிற்கு இதம் தரும் இசையைக் கேட்க .......////

கோடை இசை மழை உங்களுக்கும் வருதா?

////அடியேன் diet,drill,discipline பற்றி ஒரு வகுப்பு எடுக்கிறேன் சுமார் 3 மணி நேரம் ஆகும் இலவசம்தான்.///

இது ஆன்லைன் வகுப்பா
இல்லை ஆப்லைன்னிலா?

இதில் இன்னமும் 2 dயை
இணைத்திருக்கலாம்

Subbiah Veerappan said...

/////Blogger My Mobile Studios said...
vaalthukal.////

நல்லது. நன்றி நண்பரே!! உங்களுடைய பெயர் என்ன? அதைச் சொல்லுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger slmsanuma said...
super////

நல்லது. நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
நன்றி வாத்தியாரே!!!

நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
இதெல்லாம் சரி...
இது எந்த வயதினருக்கு
சுபி யா
சுமு வா.. அதவாது
சுதந்திரத்திற்கு முன் பிறந்தவருக்கா
சுதந்திரத்திற்கு பின் பிறந்தவருக்கா
நாங்கள் முதுநிலை குடிமகன்கள்
(சீனியர் சிட்டிசன்)
எங்களுக்கும் ஏதாவது சொல்லுங்கள்//////

சீனியர் சிட்டிசனா? வாழ்த்துக்கள். உங்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்திருக்கிறது! அரசிற்கு நன்றி சொல்லுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger gayathri devi said...
Nandri iyya//////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
அருமையான ஆலோசனைகள்.
உணவைப் பொறுத்தவரை இந்த ஆலோசனை வசதியானவர்களுக்கே பொருந்தும். உழைப்பாளிகள் இரவு உணவைத்தான் நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டால் வேலை செய்ய முடியாது.
மனதிற்கு இதம் தரும் இசையைக் கேட்க சற்று நேரம் ஒதுக்க வேண்டும்.
ஏதாவ்து ஒரு 'ஹாபி'யை வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.
அடியேன் diet,drill,discipline பற்றி ஒரு வகுப்பு எடுக்கிறேன் சுமார் 3 மணி நேரம் ஆகும் இலவசம்தான்./////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும், சமூக சேவைகள் பற்றிய செய்திக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger murali krishna g said...
arumaiyana paadam !! nandri , ayya !/////

நல்லது. நன்றி நண்பரே!