மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.15

Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!


Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் 
தெருவெங்கும் ஊர்வலமாம்!

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல
சீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம் 
சிரிச்சிருப்பாளாம் ஹோஹோஹோஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம் நல்ல
சேலஞ்சில்லா மாம்பழம் போல் கனிதிருப்பாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா இந்த
மணமகனைக் கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ஹோஹோஹோஹோ ஹொஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

பாடல்: திருமணமாம் திருமணமாம்
திரைப்படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
-----------------------------
என்னவொரு வர்ணனை பாருங்கள்:
கூரைநாட்டுப் புடவை. தலையில் ஒருகூடை பூ,
சேர நாட்டு யானைத் தந்தம்போன்ற தோற்றம்,
சீர்கச் சம்பா அரிசி போன்ற சிரிப்பு
செம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த மேனி
செப்புச்சிலை போன்ற வடிவமைப்பு,
சேலம் ஜில்லா மாம்பழம் 
என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தியிருக்கிறார் பாருங்கள்
------------------------------------------------------------------------
Quiz No. 81

6.4.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!


மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகத்தை அலசி அம்மணியின் திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. Sir, the lady got married on mars dasha but the marriage life was end on diverce the reason is the 2nd lord is in 7th place with 12th lord and the 7th lord is in 10th place neecham and the sukaran is in 6th place and kethu is in 2nd place and ragu is in 8th place mars aspecting the ragu so the first marriage was end but the second marriage is good because the the 3rd house give the 2nd marriage this is virgo the lord budha he give double marriage.

    ReplyDelete
  2. HELLO SIR,

    Jathagathin DOB 03-02-1971 place chennai yena eduthu konden.

    Karthikai natsathiram, rishabha rasi,kataga lagnam. yogathi pathi chevvai + bhakiyathipathi guru 5th amarvu sirapu. melum avargalai utcham pettra chandran parpathu melum palam.

    Ans: 7il athipathi sanibhagavan neesam petralum navasam vil utcham. melum avarin 10m parvai 7th house il.

    7il amaratha suriayan+bhudan serkai and sukran 6il maraivu may delayed the marriage.
    marriage might have happend at her 34 age. raghu dasa,sukuran bhudhi (chevvai antharam)in 2004 year.

    guru 5il amarthu looking to 9,11 and 1st place. 7th athipathi utcham. she is blessed happy married life.

    Thavaru irunthal poruthukollavum

    ReplyDelete
  3. Quiz No. 81
    ANSWERS
    1) Karagan Sukkiran --- Sukkiran is in 6th place (Hidden) to laknam --- 12th place to 7th place --- Pabakarthariyogam

    2) Bhavagaathipathi Saneeswaran --- Saneeswaran is in 10th place to Laknam (Kenthiram) --- 4th place to 7th place (Kenthiram) -- Look the 7th place --- association with Mandhi

    3) Bhavaga Nilai --- Suriyan Budhan association gives Budha Adhithya Yogam --- 20 Bindhus for 7th place --- 7th place aspect by Neechapanga Saneeswaran who is the Bhavagaathipathi --- Raghu is in 2nd place to 7th place --- Kethu in 2nd place to laknam with 30 bindhus for 2nd place.

    4) Laknathipathi – Chandiran Ucham with 28 Bindhus --- Guru with 6 bindhus looks Laknathipathi and Laknam

    As per the above conditions much delayed marriage and subsequently the marriage is annulled by divorce and thus she lasts here family bakkiyam. Babies are there.

    ReplyDelete
  4. ayya,

    1.Kadaga Lagnam. Lagnathipathy Ucham. Kajakesari matrum Chandra Mangala Yogam Ulla Jaadhagam.

    2. 7m Athibathy Neesam, Mandhiyudan. Kalathira Kaaragar Sukkiran 7-irkku 12-il. Iruppinum, Yogakaaragar Chevvai, Guruvudan than sondha veettil iruppadhaalum, Lagnathibathy Chandranukku Guru matrum (5-9 adhibadhigal) Chevvaayin Paarvai ulladhalum, 7m Athibathy than sondha veedaana 7m veettai paarpadhaalum, Chevvai Thasa Chandra Budhiyil, Kochara Guru Kadagathirrku varumbodhu thirumanam Nadandirukkum.

    3. Thirumana Vaazhkkai Sandhoshamaagave Irukkum. Amsathil 7m athibathy Sani Ucham Rahuvudan matrum kalathira kaaragar Sukkiran than sondha veedaana rishabathil. Thanks.

    ReplyDelete
  5. Dear Guruji,
    1. As guru said in earlier lesson lagna lord in 11 house will give native comfort and achieve everything without much effort.
    2. Ketu in second house is bad.
    3. 12th lord in seventh house.
    4. sun in seven house which is its enemy house.
    5. Guru with the mars which is yogakarakka for kadaka lagna.
    6. Venus in the sixth house which is bad.
    7. venus is 12th from 7th house.
    8. sun 2nd lord in 6th house from its house.

    In native guru dasa, at her age of 28 she will get married.
    Native's marriage life is not very happy one.
    There will be second marriage because either by way of divorce from first marriage or spouse would have died.
    Even though she has very successful life, her marriage life is marred by unhappiness.

    ReplyDelete
  6. Quiz 81க்கான பதில்.

    அம்மணி பிறந்த நேரம் : 3 Feb 1971, 17:15

    கடக லக்கினம், கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி,
    லக்கினாதிபதி சந்திரன் 11ல் உச்சம், அதன் மீது கடக லக்கின யோகாதிபதி செவ்வாயின் பார்வை. ராஜ கிரகமான சந்திரன் லக்கினாதிபதி 11ல் உச்சம் பெற்றதால் அனைத்து செல்வ செழிப்பும் உடையவர்.

    லக்கினம் மற்றும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் நிச்சயம் திருமணம் உண்டு. 5ல் குரு, செவ்வாய். நிச்சயம் ஒரு ஆண் குழந்தைக்கு தாய்.

    7ல் 2ம் அதிபதி சூரியன் மற்றும் 3, 12 அதிபதி புதன் கூட்டு. சுபர் பார்வை இல்லை. அதன் மீது நீட்ச சனியின் 10ம் பார்வை. விவாகரத்து பெற்றவர்.

    திருமண வாழ்க்கை திருப்தி இல்லை.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  7. ஐயா,

    நான் உன்கல் மனவனாக என்ன செஇய வேன்டும்,

    ReplyDelete
  8. sir
    According to me marriage has not been taken place. If marriage taken it could be end with divorce
    so many reasons.
    1.Seventh place saturan in debilitated.
    2.in 7th place sun and budhan.
    3 in second place kethu and in eighth rahu.

    ReplyDelete
  9. ஜோதிட ஆசானுக்கு வணக்கம்.

    ReplyDelete
  10. Answer to Quiz no – 81:

    1. The lady born on 3rd Feb 1971 at 5.13 PM.
    2. Kadaka lagnam, lagnathipathi Chandran Ucham.
    3. 7th house owner Sani, Neecham in Rasi but Ucham in Navamsam.
    4. Kudumbasthanathipathi Suriyan, 2nd house owner in 7th house with Budan.
    5. Ketu in 2nd house with Rahu parvai from 8th house.
    6. 12th and 3rd house owner Budan varkothamam in 7th house. Budan is enemy to lagnathipathi.
    7. Yogathi9. pathi Sevvai Atchi in 5th house
    8. Guru – 9th and 6th house owner in 5th house – thirikonam looking at 9th house and lagnam Hence definitely she has child.
    9. Rahu dasa started on 12/11/1991 at the age of 20 and was there till 2009 till the age of 38.
    10. Rahu is Atma Karakan and being in 8th house would have given a tough time during this period.
    11. She should have had a very turbulent marriage / family life.
    After 2009 Guru dasa started and till 2011 and would have given some relief. But again during Sani bukthi trouble would have started and till 2020 end of Sukra bukthi she will have tough time.

    K R Ananthakrishnan,
    Chennai

    ReplyDelete
  11. Positives
    Lagna lord moon exalted and positioned in 11th house. jupiter aspects both lagna and lagna lord.

    5th and 9th lord together in 5th house.
    Also mars-jupiter gives Dharma karmathipathi yoga in 5th house.

    7th lord saturn is in kendra, debilitated in rasi but exalted in navamsa.

    yogakaraka mars in own house with jupiter under the aspect of lagna lord. also got vargottama.

    3rd and 12th lord Mercury(got vargottama) in 7th house.

    Marriage might have happened in mars dasha. possibly in the sub period of moon.

    Negatives
    ketu in leo (inimical house) rahu in 8th aspected by mars.
    7th lord afflicted in navamsa.
    2nd lord sun in 7th house which is 6th to 2nd aspected by saturn in both rasi and namvamsa.
    9th house under papakartari yoga. lagna lord in 11th house (badhaka sthana for cancer ascendants)

    my prediction
    Strong 2nd,3rd 4th 5th house suggests native might be living far away from her family, possibly in a foreign land after marriage.however rahu maha dasha is unpredictable. anything might have happened during that period.

    thnks
    sree







    ReplyDelete

  12. ஜாதகிக்கு ராகு திசை சனி புத்தியில் தன் 26 வயதில் திருமணம் நடந்தது.
    ஜாதகியின் திருமண வாழ்வு சிறப்பாக இல்லை .ஜாதகி தன்னுடய கணவனை இழந்திருப்பார் இல்லயேல் பிரிந்திருப்பார் .

    காரணம் :
    7ஆம் இடத்து அதிபதி சனி நீசமடைந்துவிட்டான் .

    களத்திரகாரன் சுக்கிரன் 6 இல் மறைந்து விட்டான் .

    சனியின் மேல் சுபகிரகங்களின் பார்வை இல்லை.

    லக்கினத்தின் மேல் 3,12 அதிபதி புதனின் பார்வை

    ReplyDelete
  13. 1. Lagnathipathi Chandran is ucham. Bagyathipathi Guru (9th lord) is placed in 5th house along with 5th house and 10th house lord Mars.
    2. 7th lord Shani is in neecham along with Mandhi in 10th house. Shani aspects 7th house. Suryan (2nd lord ) andd 12th lord Budhan are in 7th house. Sukran is weakly placed in 6th house.
    3. Rahu and ketu in 2nd and 8th house.
    4. Marriage would have happened in Rahu dasa and Shani bukthi considering the strong lagnathipathi, 5th lord and 9th lord. However, marriage would have been troublesome due to non favourable position of Sukran, 7th lord (neecham).

    ReplyDelete

  14. வணக்கம் குரு,

    இந்த ஜாதகிக்கு தாமதமாக 32 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கும். காரணம் 2ல் கேது, 7ல் சூரியன் மற்றும் விரயாதிபதி புதன், 8ல் ராகு, களத்திரகாரகன் சுக்கிரன் லக்னதிர்க்கும் ராசிக்கும் மறைவு ஸ்தானத்தில், குடும்பாதிபதி சூரியன் பகை பெற்று அவர் வீட்டிற்கு 6ல் மறைவு, சுக ஸ்தானாதிபதி சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் உள்ளார், சுக ஸ்தானத்தை சனி பார்கிறார். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் ஜாதகி ஒரு பாக்கியசாலி. காரணம் பஞ்சமாதிபதி செவ்வாயும் பாக்கியாதிபதி குருவும் சேர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்ததோடு உச்சமடைந்த லக்னாதிபதி சந்திரனின் பார்வை பரிவர்த்தனையிலும் உள்ளார்கள். தர்மகர்மாதிபதி, கஜகேசரி, குருமங்கள, சசிமங்கள, அனபா, வேசி, புதஆதித்ய, சச போன்ற யோகங்களும் உள்ள ஜாதகம்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  15. ஜாதகி 3 பிப்ரவரி 1971;மாலை 5 மணி12 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    ஜாதகிக்குத் திருமணம் ஆனது.

    கஜகேசரி, சங்க யோகங்களுடைய ஜாதகம்.

    குரு சந்திரனின் பார்வை பலத்தாலும், 7ம் அதிபதி சனி கேந்திரம் ஏறி நீசபங்கம் அடைந்ததாலும், ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.

    ராகு தசா புத‌ புக்தியில் 29‍/30 வயதில் திருமண்ம நடந்தது.

    கணவர் வேலை நிமித்தம் பிரிந்து இருப்பதால் குழந்தை பிறப்பதில் தாமதம், சங்கடங்கள்.

    இரண்டில் கேது எட்டில் ராகு என்பதால் வேறு விதமாக சிந்தனை ஓடுகிறது என்றாலும், நவாம்சத்தில் குரு கன்னி லக்னத்தில், 7ம் இடத்திற்கு குருபார்வை, சுக்கிரன் ஆட்சியில் 9ல், செவ்வாய் ஆட்சியில், சனி உச்சம், சந்திரன் 5ல் இருந்து தன் வீட்டைப் பார்த்தது,சந்திரனுக்குக் குருபார்வை, சுக்கிரனுக்கு குருபார்வை ஆகியவை ஜாதகிக்குத் திருமண வாழ்வைக் கொடுத்திருக்கும் என்றே கணிக்கிறேன்.தாமதத் திருமணம்.கணவரிடமிருந்து தள்ளி வாழும் வாழ்க்கை, சில காலமாவது.வேலை காரணமான பிரிவு.

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் போட்டி எண் 81க்கான எனது கணிப்பு:-
    லக்கின அதிபதி சந்திரன் உச்சம், 5ம் இடத்தில் அமர்ந்த குருவின் 9ம் பார்வை லக்கினத்தில், 7ம் அதிபதி சனி மேஷத்தில் நீசமுற்றாலும் அம்சத்தில் துலாத்தில் உச்சம் அடைந்துள்ளார், ராசியில் சுக்கிரன் 6ல் இருந்தாலும் அம்சத்தில் ரிஷபத்தில் ஆட்சி பெற்றுள்ளார், ஆகையால் ஜாதகியின் 25வயதில் அதாவது ராகு திசை குருபுத்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    2ம் வீட்டில் கேது இருத்தலும், அதிபதி சூரியன் 6ல் மறைந்ததையும், குடும்ப காரகன் குரு நட்பு வீட்டில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை சுமாராக இருந்திருக்கும்.

    சுபம்...

    ReplyDelete
  17. வணக்கம் வாத்தியார் ஐயா !

    " மாதா, பிதா, குரு, தெய்வம் ", இது தான் நம்மலுடைய தாரக மந்திரம்.

    அடியவனும் எம்மால் முடிந்த வரைக்கும் இன்று வரை இதை தான் கடை பிடித்து வருகின்றேன்.

    ஆனாலும் பாருங்கோ ஐயா மாதா காண்பித்து தான் தாரத்தை கண்டேன்.

    ஏனெனில் அறிவை தந்த பிதா இல்லாமல் போனதால் எடுத்த முடிவு

    அங்கு தான் விதி விளையாடி விட்டது என்னத்த ஐயா சொல்ல என்னையும் " இரண்டு பொண்டாட்டி காரனாகிவிட்டதே என்பது தான் மிக்க கவலை.

    நான் ஒழுக்கமாக வாழ்ந்தது தவறா ஐயா ?


    இளங்கோவடிகள் சொல்லுவாரே

    " சிலப்பதிகாரத்தில் ", ஊழ்வினை முன்னர் வந்து நிற்கும் என்று


    திருக்குறளில் திருவள்ளுவர் கூறி உள்ளது போல " விதி மதியை விட வலிமை வாயின்தது ",

    என்று .


    குருவும் தக்க சமயத்தில் உதவவில்லை விதி வலிமை வாயிந்ததது ஆனதாலோ என்னமோ ;-))


    தெய்வம் அல்லவா எல்லாவற்றையும் நடத்தி வைப்பது அல்லவா.


    சரி ஐயா பாடத்திற்கு வருகின்றேன்

    என்னுடைய அண்ணாச்சியின் பதில்கள்

    1 . 7 ம் அதிபதி சனி பகவான் ஆனவர் நீசமாகி மந்தியுடன் உள்ளார்.

    2. களத்திரகாரகன் 6 ல் மறைந்து உள்ளார் மேலும் பாபகர்திரி யோகத்தில் உள்ளார் .

    3. 2 க்கு உடையவர் அவருடைய இடத்திற்கு 6 ல் மறைந்து 3 , 12 க்கு உடையவருடன் சேர்ந்து இருப்பது ஆகும்.

    4. 38 க்கு முன்னர் கல்யாணம் ஆகி இருக்க வாயிப்பு இல்லை .

    5. கல்யாண வாழ்க்கையும் அவ்வளவிற்கு சிறப்பாக இருக்க வாயிப்பும் இல்லை என்பது ஆகும்.


    குறிப்பு ;


    அம்சத்தில் ஐயா அவர்கள் லக்னதினை குறிக்க வில்லை.

    ஜாதகர்கள் பிறந்த நேரத்தினை பின்னர் வரும் பாடம்களில் கொடுத்தால் நாங்கள் நன்கு ஆராட்சி செய்ய உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன் . ஆதலால் தாங்கள் இந்த வேண்டுகோளை பரிசிலனை செய்ய வேண்டி விரும்பி கேட்டுகொள்கின்றேன் வாத்தியார் ஐயா

    ReplyDelete
  18. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் .81

    1.கடக லக்னம் .லக்னாதிபதி உச்சம் .
    2.லக்னத்திற்கு 7ல் சூரியன் புதன் மகரம் ..7ம் வீட்டதிபதி சனி நீசம் உடன் மாந்தி .
    3.களஷ்திரகாரகன் சுக்கிரன் 6ல் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளான்
    4.லக்னத்திற்கு 2. கேது 8ல் ராஹு ..8ம் வீட்டை செவ்வாய் 4ம் பார்வையாக பார்ப்பது நல்லதல்ல ..
    5.பக்கியஷ்தானமான 9 ஐ மீனத்தை குரு 5ம் பார்வை

    இந்த காரணங்களினால் இந்த ஜாதகிக்கு திருமணம் 32 வயதுக்கு மேல் நடை பெறும் ஆனால் ***முன்னாள் சுமங்கலி** என்ற பெயர் கிடைக்கும்

    ReplyDelete
  19. என்ன வாத்தியாரே வர வர கேள்வி கடினமாகிக் கொண்டே வருகிறது. குத்து மதிப்பாக ஒரு பாடலை பதிலாகச் சொல்லி விட்டு நாளைக்கு நீங்கள் பதிலைச் சொன்னவுடன் அதற்கு தகுந்தாற்போல் விளக்கத்தை மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    லக்கினத்திற்கு 7ல் புதன், சூரியன் ஆகிய இரு கிரகங்களால் திருமணம் உண்டு. மிகத் தாமதமாக ராகு தசை பிற்பகுதியில் 30 வயதிற்கு மேல் திருமணம். ஆனால் அதிக காலம் நிலைக்காது. பிரிவு/விவாகரத்து உறுதி. காரணம் குடும்பஸ்தானமான 2ல் கேது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. 7ம் அதிபதி சனி 10ல் நீசம். உடன் மாந்தி இருக்கிறார். யோகக்காரகன் செவ்வாய், 9ம் அதிபதி குரு சேர்க்கை திருமணத்தை நடத்தித் தரும் அதே நேரத்தில் 6ம் அதிபதியாகவும் குரு வருவதால் பிரிவு நிச்சயம்.

    ReplyDelete
  20. ஐயா. வணக்கம்

    புதிர் 81 ----- விடை

    அம்மணிக்கு தாமத வயதில்
    திருமணம் நடந்தது.

    காரணங்கள்

    7 ஆம் அதிபதி நீசமாகி உள்ளார்.
    ஆனால் லக்கினாதிபதி உச்சமாகவும்
    லக்கினத்தை குரு 9 ஆம் பார்வையாகவும் பார்கிறார் .
    7 ல் புத ஆதித்திய யோகம் உள்ளது.

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக
    இல்லை

    காரணங்கள்

    சுக்கிரன் 6 ல் மறைவு
    2 ஆம் இடத்தில் கேது
    7 ஆம் வீட்டுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளார்
    மாங்கல்ய ஸ்தானம் 8 ல் ராகு உள்ளார்.
    மேலும் 8 ஆம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார்.

    நன்றி ஐயா
    கண்ணன்.

    ReplyDelete
  21. வாத்தியார் ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
    புதிர் எண் 81
    இ ந்த அம்மினி, கடக லக்னத்தில் பிற ந்தவர்கள். சாதகத்தின் படி , கேது 2 லும் ராகு 8லும் ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலை. இதன்படி, ராகு 8 ல் இருப்பதால் மாங்கல்ய தோஷம் இருக்கிறது. இதனால் இவருக்கு கிடைத்த கணவர் கெட்ட மொழிகளில் பேசுபவராக இருக்க வேண்டும். இரண்டாவதாக இவருக்கு மன கிலேசம் இருக்கும். கணவனுன் சரியாக உறவு இருக்காது.
    தனது 38 வயதுவரைக்கும் திருமண வாழ்க்கை அவ்வுளவு நன்மை பயக்கக்கூடிய நிலைமையில் இல்லாமல் மஇருப்பார். தனது இ ந்த வயதில் குரு திசை ஆரம்பம் ஆகிறதால் அவருக்கு நிலைமை மாறி
    நல்ல சுகபோகங்களை அனுபவிக்க நேரும்.

    ReplyDelete
  22. ஐயா,
    தரப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்னமாகி லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் உள்ள
    ஜாதகம். குடும்ப ஸ்தானத்தில் கேது. எழில் சூரியன் புதன். ஏழாம் அதிபதி சனி நீச்சம்.
    பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம்.
    தாமத திருமணம் ஆனால் சிறப்பான குடும்ப வாழ்க்கை.
    அ.நடராஜன்

    ReplyDelete
  23. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
    காரணங்கள்:

    1. ஏழுக்குரிய சனி 10ல் மாந்தியுடன் நீசம்.
    2. 2க்குரிய சூரியன் ஏழில் 12க்குரிய புதனுடன்.
    3. இரண்டாமிடத்தில் கேது.
    4. சுக்கிரன் ஆறில் மறைவு.
    ஜாதகிக்கு திருமணம் செய்துகொள்ளும்படியான உணர்வே..சந்தர்ப்பமே..எண்ணமே 52 வயது வரை வர வாய்ப்பில்லை.

    ReplyDelete
  24. 1. குடும்பத்திற்கு அதிபதி சூரியன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்து, ஜாதகிக்கு சிறிய வயதில் திருமணத்தை நடத்திவைப்பான்.(அதாவது 21 -23க்குள்)
    2.ஆனால் குடும்ப வாழ்க்கை சிறக்காது. நீசமான களத்திரக்காரன், 6ஆம் இடத்தில் மறைந்த சுக்கிரன், 2ஆம் இடத்திலுள்ள கேது, 7ஆம் பார்வையாக 2ஆம் வீட்டைக்கெடுக்கும் ராகு, ஆகிய காரணாங்களால் குடும்ப வாழ்க்கை சிறக்காது.7ல் அமர்ந்த சூரியன் மற்றும் 8ல் உள்ள ராகு, நிரந்திர களத்திர பிரிவை(கணவன் இறப்பு/விவாகரத்து) ராகு மகா தசையில் ஏற்படுத்திருக்கும்.

    ReplyDelete

  25. Dear Sir,

    The given chart the native has high kalathra dosha . There might be delay in her marriage but she is married . probability of marital disharmony is seen in this chart, no happy marital life.

    Reasons :

    Kalathra dosha causes trouble, delay or break in marriage. So compatibility of both the bride and groom are studied by analyzing their charts to check for doshas before marriage.

    To judge Kalathra dosha in a chart, one must study the 2nd, 7th and 11th houses. The 7th house is however given the most importance in evaluating this dosha.

    Seventh house is combust with Sun here.

    Third and 12 th lord mercury is seen present with surya in 7th house, so 7th house is highly corrupted here. There is no aspect of Guru over 7th house.

    planets like Sun, Mars, Saturn, Rahu and Ketu are called papa grahas or malefics. If papa grahas are positioned in the 1st, 2nd, 4th,7th 8th and 12th houses from the lagna, or moon then they cause doshas.

    Kethu is seen present in second house which is not auspicious for marital life. Rahu placed alone in 8th house is causing Mangalya dosha here.No aspect of Guru over 8th house which is to be noted here.

    For cancer lagna 11th house is bhadaka stahna . Moon , lagna lord is placed in 11th house , tells the marital life has no happiness for this native . It is also one of the kalathra dosha as stated by me above.

    From Chandra rasi too we are able to note kalathra dosham in this chart.( Kindly see the placement of planets as explained above from Chnadra Rasi too )

    I conclude there is no marital happiness for this native though she is married.

    Regards,
    Prasanna.

    Dubai.
    http://devarshivedicastrology.freeforums.org

    ReplyDelete
  26. Respected Sir,

    My answer for our today's Quiz No.81:

    I.She has got married after 38 of her age. delayed marriage.

    Reasons:

    1. lagna lord is exalted in 11th place.

    2. Bagyathipathi is in good place.

    3. Yogathipathi also along with bagyathipathi in 5th place.

    4. In Navamsa, Seventh house is good and seventh house lord is exalted.

    5. Seventh house lord is sitting 4th house from its own house and debilitated along with manthi and aspecting its own house as its 10th aspect.

    6. Kalathra karaga Venus is sitting 12th place from seventh place. This is the reason for delayed marriage.

    II.Family life may not be happy.

    Reasons:

    1. Second house lord is sitting 6th place from its own house.

    2. Kethu is sitting in second house.

    3. Lagna lord and seventh house lord are in 2/12 position as well as both are enemies.

    4. In Seventh house, sun is sitting along with 12th house lord. It's bad sign for family life.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com