மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.7.14

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வாருங்கள், படித்துவிட்டுச் சிரித்து வைப்போம்!

 
நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வாருங்கள், படித்துவிட்டுச் சிரித்து வைப்போம்!

1.
உண்மையான பதற்றம்  (Real Tension)

சர்தார்ஜி அன்பரும் அவர் மனைவியும் நீதி மன்றத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு.

நீதிபதி, தன்னுடைய தீர்ப்பை வழங்கும் முன்பாகக் கேட்டார்:

“ஒரு ஒரு பிரச்சினை பாக்கி உள்ளது. உங்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளன. அவற்றை எப்படிப் பிரித்துக்கொள்வீர்கள்?”

சர்தார்ஜி தன்னுடைய மனைவியுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு வந்தவர், நீதிபதியிடம் சொன்னார்.

“மாண்புமிகு நீதிபதி அவர்களே, அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுங்கள். அடுத்த ஆண்டு இன்னும் ஒரு குழந்தையுடன், இருவரும் வருகிறோம்”

புன்னகை செய்த நீதிபதி, அவர்கள் கேட்டபடி ஒரு ஆண்டுகாலம் அவகாசம் அளித்ததுடன். வழக்கையும் ஒரு ஆண்டிற்குத் தள்ளிவைத்தார்!

பிரச்சினை அத்துடன் முடியவில்லை. ஜோக்கும் முடியவில்லை...... மேலே படியுங்கள்.

                                                                                V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
                                                                                V


பத்து மாதங்கள் பறந்து சென்றது.

அடுத்து, இருவருக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தது!
===========================================================
2
சாமியாருக்கும் அதே தொழில்நுட்பம்தான்

"சுவாமிஜி, என் கணவர் என்னை ஏமாற்றுகிறார். அவருக்கு வேரு ஒரு பெண்னுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுகிறேன். அதை நிருபித்து அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

சுவாமிஜி பதில் சொன்னார்: “வெரி சிம்ப்பிள். சந்தேகப்படும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்பாக உன் கணவனைக் கொண்டுபோய் நிறுத்து. உன் கணவனுடைய போனில் உள்ள வைஃபி (wifi) தன்னிச்சையாகக் கனெக்ட் ஆகும். அதைவைத்துப் பிடித்துக்கொள்”
============================================================
3
“குட் மார்னிங்” என்ற இனிமையான குரல் கேட்டவுடன், அந்தப் பெண்மணி தன் வீட்டுக் கதவைத் திறந்தார்.

வாக்கும் கிளீனரை விற்க வந்திருந்த சேல்ஸ்மேன், நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணி என்ன ஏது என்று கேட்கு முன்பாக அதிரடியாக உள்ள நுழைந்த அந்த விற்பனைப் பிரதிநிதி, வரவேற்பு அறையில் நுழைந்ததோடு, தன் கைப் பையைத் திறந்து, அதில் இருந்த மாட்டுச் சாணியை, அங்கே தரையில் விரித்திருந்த கார்பெட் மீது கொட்டினார்.

அத்துடன் தன்னுடைய குரலை உயர்த்திச் சொன்னார்:

“மேடம் இன்னும் மூன்றே நிமிடங்களில், எங்கள் கம்பெனியின், பவர்ஃபுல் வாகும் க்ளீனரை வைத்து, இந்தச் சாணம் முழுவதையும் க்ளீன் செய்து விடுகிறேன் பாருங்கள். அப்படி முடியாவிட்டால் இந்தச் சாணம் முழுவதையும் நானே தின்று விடுகிறேன்.”

அந்தப் பெண்மணி கேட்டார்:

“சில்லி சாஸ் வேண்டுமா?”

“சேல்ஸ்மேனுக்குக் குழப்பமாகிவிட்டது.” எதற்காகக் கேட்கிறீர்கள் மேடம்?”

“இன்று மின் தடை உள்ளது. வீட்டில் மின்சாரம் இல்லை. மாலை ஆறு மணிக்குத்தான் வரும்!”

ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்குள் நுழையும் முன்பாக தேவையான எல்லாத் தகவல்களையும் தெரிந்து கொண்டுதான் போக வேண்டும். அத்துடன் தேவையில்லாத சவால்களையும் விடக்கூடாது. அதற்காகத்தான் இந்தக் கதை!
=======================================================================
மூன்றுமே மின்னஞ்சல்களில் வந்தவை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம். மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது? அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. Respected Sir, Sardarji jokes are always best. G.Murugan

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் ..
    சிரிப்பு அருமை இன்றைய காலத்திற்கு ஏற்ரர்போலவும் wi fi.. .பழமைக்கும் sarthaarji....நல்லா....... இருக்கு ..!!!

    ReplyDelete
  3. சிரிக்க கூட சொல்லி தர வேண்டியுள்ளது

    ReplyDelete
  4. எல்லாமே நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. அன்புள்ள வாத்தியாருக்கு,

    வணக்கம்.

    தங்கள் blogல் தினமும் ஒரு பாடம் இடம் பெற வேண்டும் என்பது என் போன்ற கத்து குட்டிகளின் வேண்டுகோள். முன்பு வாரம் 2பாடம் என்பது, இப்போது வாரம் 1என்று என்றாகிவிட்டது. பக்தியும் நகைச்சுவையும் வகுப்பறையில் அவசியம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது போக பாடம் ஒன்றாவது தெரிந்து கொண்டால்தானே இந்த வகுப்பறை தினமும் அர்த்தமுள்ளதாகிறது...

    தங்களை போன்ற எளிய நடையில் எழுதுவோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். நீங்களும் வாரத்திற்கு ஒரு பாடம் என்று வைத்து விட்டால் நாங்கள் கற்றுக்கொள்ளும் நேரம் குறைந்து விடுகிறதே அய்யா... தாங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்... நன்றாக கவனித்தால் புதன், வியாழன் தவிர மற்ற நாள்களில் மாணவர் வருகை குறைவதை அறியலாம்...

    தினமும் உங்கள் blogக்கு வந்து பாடல் அல்லது நகைச்சுவையுடன் ஒரு பாடமாவது இடம் பெற ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்... என் கருத்தில் பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும். ...

    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  6. மூன்றுமே அருமை என்றாலும் மூன்றாவதுதான் சூப்பர்.

    ReplyDelete
  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. Respected Sir
    All 3 are good... Chile sauce cracked me up.

    ReplyDelete
  9. ////Blogger GANAMURUGU said...
    Respected Sir, Sardarji jokes are always best. G.Murugan////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் ..
    சிரிப்பு அருமை இன்றைய காலத்திற்கு ஏற்ரர்போலவும் wi fi.. .பழமைக்கும் sarthaarji....நல்லா....... இருக்கு ..!!!////

    நல்லது நன்றி கணபதி சுவாமி!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    சிரிக்க கூட சொல்லி தர வேண்டியுள்ளது/////

    சொல்லித்தரமுடியாது. அது தானாக வரவேண்டும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. ////Blogger Venkatesh Nagarajan said...
    எல்லாமே நன்றாக இருக்கிறது////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger BLAKNAR said...
    அன்புள்ள வாத்தியாருக்கு,
    வணக்கம்.
    தங்கள் blogல் தினமும் ஒரு பாடம் இடம் பெற வேண்டும் என்பது என் போன்ற கத்து குட்டிகளின் வேண்டுகோள். முன்பு வாரம் 2பாடம் என்பது, இப்போது வாரம் 1என்று என்றாகிவிட்டது. பக்தியும் நகைச்சுவையும் வகுப்பறையில் அவசியம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது போக பாடம் ஒன்றாவது தெரிந்து கொண்டால்தானே இந்த வகுப்பறை தினமும் அர்த்தமுள்ளதாகிறது...
    தங்களை போன்ற எளிய நடையில் எழுதுவோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். நீங்களும் வாரத்திற்கு ஒரு பாடம் என்று வைத்து விட்டால் நாங்கள் கற்றுக்கொள்ளும் நேரம் குறைந்து விடுகிறதே அய்யா... தாங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்... நன்றாக கவனித்தால் புதன், வியாழன் தவிர மற்ற நாள்களில் மாணவர் வருகை குறைவதை அறியலாம்...
    தினமும் உங்கள் blogக்கு வந்து பாடல் அல்லது நகைச்சுவையுடன் ஒரு பாடமாவது இடம் பெற ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்... என் கருத்தில் பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும். ...
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    உங்களின் வேண்டுகோளுக்கு நன்றி இதுவரை கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 800 பாடங்களை எழுதியுள்ளேன். அவைகளை எல்லாம் படித்து விட்டீர்களா?

    ReplyDelete
  14. ///Blogger kmr.krishnan said...
    மூன்றுமே அருமை என்றாலும் மூன்றாவதுதான் சூப்பர்.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    All 3 are good... Chile sauce cracked me up./////

    நல்லது. நன்றி டல்லாஸ்காரரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com