மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.7.14

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

 

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!


மொத்தம் 72 வரிகள்.இதைத் தினமும் பாராயணம் செய்து பயன்பெறுங்கள்!

3 தினங்களாக உடல் நலக் குறைவு. பருவநிலை மாற்றம் காரணமாக, சளி காய்ச்சல் என்று நோய்கள் ஏற்பட்டு, அடித்துப் படுக்க வைத்துவிட்டன. இன்றுதான் தேறி எழுந்துள்ளேன். 3 நாட்களாக வகுப்பறைப் பக்கம் வராததற்குக் காரணமும் அதுதான். அனைவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

Manikandan said...

en appan muruga peruman arulal viraivil nalam peruga!!!.

Om Saravanabhava!!!

S.Namasu said...

நலம் பெற வேண்டுகிறேன்....

Sakthivel K said...

dear sir.
thuvakgan erunthal.

mutivu? ethai patri sollavilaye?

shanmugam prakash said...

sir wush you speedy recovery from cold
s.prakash

shanmugam prakash said...

wish you\a speedy recpvery from cold and fever sir
s.prakash
10 th yeat student

Kalai Rajan said...

அய்யா
உடம்பை கவனித்து கொள்ளவும்.இப்பொழுது எப்படி உள்ளது?.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..இந்த விநாயகர் அகவல் சைவ சித்தாந்த சாஸ்திரம் 36 தத்துவங்கள் உள்ளடக்கியது .. ..ராகு கேது நவக்ரக தோஷம் அனைத்திற்கும் படிக்கலாம் . ..!!அனுபவத்தில் கண்டுள்ளேன் ..!!!பசுவைக்காணாத கன்றென 3 நாட்களும் தவித்து போனேன் ...உடல் நலக் குறைவினால்தான் அய்யா வாரதிருப்பார்கள் என் உள் மனது ..இறை அருளல பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் ..sn கணபதி ..

venkatesh r said...

ஐயா வணக்கம். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பிற்கு அப்புறம் வரலாம். எவ்வளவு முறை படித்தாலும் திகட்டாத அளவிற்கு பழைய பாடங்கள் எங்களுக்கு இருக்கின்றனவே.தங்களின் உடல், நலம் பெற்று மீண்டும் வழக்கம் போல் வகுப்பு நடைபெற எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

dhana lakshmi said...

Dear Sir

Take Care. My heart is always pray for your good health. Wishing for your happiness and speedy recovery.

With affection
J.Dhanalakshmi

seenivasan said...

Dear sir,

wish you speedy recovery from cold & fever . after long time I just try to see some of lessons & observed you have shifted these lessons to special class .It is good but sir when you are going to publish the book as I want to buy .Thanks


G.seenivasan.Bharuch

நடராஜன் said...

நன்றி.
சும்மா வருமோ தனு
சும்மா வருமோ சுகதுக்கம்
சும்மா வருமோ பிணி
சிவபோகசார பிடித்த வார்த்தைகள்

இறையருள் துணை இருக்க எல்லாம் அவன் கருணை

சே. குமார் said...

ஐயா...
உடல் நலம் கவனியுங்கள்...
பதிவு எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்...

Dallas Kannan said...

Respected Sir
I had a hunch that are not feling well as you always inform us the before you go on vacation.

Please get proper rest and our prayers for your speedy recovery.

GANAMURUGU said...

Respected Sir, Take care. I pray for your good health. G.Murugan

Rk naryan said...

Astrology is the part of human being from the ancient time that is developed by thousand years of practice and research of astrologer.

love marriage specialist
famous astrologer in india

Rk naryan said...


Love guru in India says that love star divination allows United States to recognize the accuracy of any individual nature.

love guru in india
love problem solution

sivaradjane said...

ஐயா.. விரைவில் குணமடைந்து வந்து வகுப்பறையை சிறப்பிக்க வேண்டுகிறேன்..

raju maharajun said...

அய்யா வணக்கம் சவுக்கியமா கொஞ்சநாள என்னை பாலைவனத்தில் இருந்து கடலில் தூக்கி போட்டு விட்டார்கள் அதான் வரமுடியவில்லை மன்னிக்கவும். நான் மின் அமைப்பலரகா சவூதி அரேபியாவில் பணிபுரிகிறேன். இங்கு நான் வேலை பார்க்கும் கம்பெனி பிளான்ட் மெயிண்டனன்ஸ் கம்பெனி அதனால் அவர்களுக்கு சவூதி அரேபியாவில் எங்கேங்கள்ளம் கான்றைட் இருக்கோ அங்கெல்லாம் அனுப்பி விடுகிறார்கள் வாழ்க்கையில் பணம் முக்கிய பங்குவகிப்பதானால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை .

Yagneswaran Ganapathyraman said...

health is wealth , pls take care of you health, we pray to god for quick recovery of your issue

Subbiah Veerappan said...

எனது உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்து எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது பூரண நலம்.
அன்புடன்
வாத்தியார்