மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

16.7.14

ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்?

 
                 
ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்?

மனவளக் கட்டுரை
----------------------------------------------------------------------------
உலகில் உள்ள மக்களை எல்லாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அல்லது இரண்டாகப் பிரிக்கலாம்.

1.  பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறவன்.
2. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறவன்.

ஆனால் இரண்டு பேர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேர்களுமே பணத்தேடலில் உள்ளார்கள். செல்வம் உள்ளவனும் பணத் தேடலில் உள்ளான். செல்வம் இல்லாதவனும் பணத் தேடலில் உள்ளான். நூறு கோடிகள் உள்ளவன் ஆயிரம் கோடிக்கு முயற்சி செய்கிறான். ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளவன் அடுத்த நிலைக்கு (next stage) முயற்சிக்கிறான்.

என்னால் நிறையப் பேர்களை அடையாளம் காட்ட முடியும். உதாரணத்திற்கு சிலரை மட்டும் அடையாளப் படுத்துகிறேன். ஜி டிவியின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா, முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா, பில் கேட்ஸ், வாரென் ப்ஃபெட் போன்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் பணம் தேவைப்படுகிறது, உங்களுக்கும் எனக்கும் உள்ள லெவல் ஆயிரங்கள் என்றால். அதுவே சிலருக்கு லட்சங்கள். சிலருக்குக் கோடிகள். எண்ணிற்குப் பின்னால் வரும் சைபர்கள்தான் வேறுபடும்.

மெய்ஞானம் என்ன சொல்கிறது? பணத்தின் மீது ஆசை வைக்காதே! ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறது.
விஞ்ஞானம் என்ன சொல்கிறது. ஆசைப்படு. கனவு காண்.
அப்போதுதான் உன் கனவுகள் நனவாகும் என்கிறது.

அந்தக் கனவை கவியரசர் கண்ணதாசன் மூன்றே வரிகளில் சொன்னார்:

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்


நிர்வாக இயலும் அதைத்தான் சொல்கிறது. ஆசைப்படுவதை நிறுத்தாதே, நிறுத்தினால் உன் வளர்ச்சி முடிந்துவிடும்
(your prosperity will come to an end)

”சரி எல்லோரும் பணம் சம்பாதிக்க முடியுமா?

”முடியும்”

”ஜாதகப்படி இரண்டாம் வீடும் பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால்தானே பணம் வரும்?”

“அப்போது முயற்சிக்கு என்ன பலன்?”

“என்ன சொல்கிறீர்கள்? முயற்சி செய்தால் பணம் வருமா?”

“உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந்தால் பணம் வரும்.
உழைக்கிறேன் என்று நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு மணி நேரம் கூலிக்கு மண் வெட்டினால் பணம் வராது. புத்திசாலித்தனம் கலந்த உழைப்பில் பணம் வரும். அதாவது செய்யும் தொழிலைப் புத்திசாலித் தனத்தோடு செய்தால் பணம் வரும்.”

“ஜாதகம்?”

“கவியரசர் கண்ணதாசன் கவிஞராக வேண்டும் என்பதுதான் ஜாதகம். ஆனால் அவர் 5,000ற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், அதற்குச் சமமான எண்ணிக்கையில் தனிப்பாடல்களையும் எழுதினாரே - அதை எப்படி ஜாதகக் கணக்கில் சேர்க்க முடியும்? அல்லது அதிர்ஷ்டக் கணக்கில் எப்படிச் சேர்க்க முடியும்? அவர் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தார். புத்திசாலித் தனத்தோடு உழைத்தார்.அதனால்தான் அவரால் சாதிக்க முடிந்தது. மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது.” ”

நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால், மாடுகளை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அந்த எண்ணிக்கை உன்னுடைய உழைப்பால் மாறுபடும். நான்கு மாடுகள் நாற்பதும் ஆகலாம் அல்லது நானூறும் ஆகலாம். அதைத்தான் நமது முன்னோர்கள் முயற்சி திருவினையாக்கும் என்றார்கள்.

சரி, இப்போது சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.

ஒரு செட்டியார் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தோட்டம், துறவு, வயல், நகை நட்டு, மனைகள், இடங்கள், வங்கி இருப்புக்கள், பங்குப் பத்திரங்கள் என்று எல்லா செல்வங்களும் உள்ள வசதி படைத்த சீமான் அவர்.

இத்தனை வசதிகள் இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு வீட்டில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்காமல்,தன்னுடைய உழைப்பால், சிறப்பாகப் பணி செய்து, நிதிவர்த்தகத்தில் மென் மேலும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்தார். கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய மகன் வணிகவியலில் முதுகலைக் கல்வியை முடித்து விட்டு வெளியில் வந்தான். மகனையும் தன்னுடைய தொழிலேயே ஈடுபடுத்த விரும்பினார் அவர்.  அதற்காக அவனுக்குத் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு வேலை கொடுத்ததோடு, அவரே முன்னின்று பயிற்சியும் கொடுக்கத் துவங்கினார்.

"ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது. கூடை கவிழ்ந்தால் எல்லா முட்டைகளும் உடைந்து, ஊற்றிக் கொண்டுவிடும். பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகவே நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை நான்கு பங்காக வைத்து, ஒரு பங்கை நிலத்திலும் (lands & real estates), ஒரு பங்கை தங்கத்திலும் (gold) , ஒரு பங்கை பங்கு வணிகத்திலும் (shares), மீதமுள்ள ஒரு பங்கை வட்டித் தொழிலிலும் (money lending) ஈடுபடுத்த வேண்டும்.புரிந்ததா?”

“ஒன்று இறங்கினாலும், மற்றவை நம் முதலீட்டைத் தக்க வைக்கும். நம்மைக் காப்பாற்றும்”

“கரெக்ட்” என்று சொன்னவர், அந்த நான்கு தொழிலிலும் உள்ள நெளிவு சுளிவுகளைச் சொல்லிக் கொடுத்து, சுமார் 15 நாட்களுக்குப் பயிற்சியையும் கொடுத்தார்.

அடுத்து, இருக்கும் செல்வத்தையும், சேரும் செல்வத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்று சொல்லிக்கொடுத்தார். அதற்கும் ஒரு விரிவான 15 நாள் பயிற்சியைக் கொடுத்தார்.

ஒரு மாதம் ஆயிற்று?

அவனுக்கு என்று தன் அலுவலகத்தில் ஒரு தடுப்பறையைக் கொடுத்து (exclusive cabin) வேலையைத் துவக்கி வைத்தார்.

அன்று மாலை, வேலைகள் முடியும் சமயத்தில் அவரை வந்து சந்தித்த அவன், “அப்பச்சி ஒரே ஒரு சந்தேகம் உள்ளது.கேட்கலாமா?” என்றான்.

“ஆஹா...தாராளமாகக் கேள்”

”உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்' என்றார் கவியரசர் கண்ணதாசன். அதுபோல துவக்கம் என்று
ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்று இருக்குமல்லவா? பிஸினஸின் துவக்கத்தை மட்டும் சொல்லிக் கொடுத்தீர்கள். பிஸினசின் முடிவை நீங்கள் சொல்லித் தரவில்லையே? அதாவது எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித் தரவில்லையே?

”நல்ல கேள்வியடா மகனே! அதற்கு பதில் இருக்கிறது. சொல்கிறேன் கேள்” என்று அவர் அசத்தலாக சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை, மற்றும் நேரம் கருதியும், எனது ஆக்கம் மற்றும் தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். கட்டுரையின் அடுத்த பகுதி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

Dallas Kannan said...

Respected Sir
I came in to the site expecting for a test. But you gave differnt test...Waiting test for the answer :)

Govindasamy said...

அற்புதம்...

வாத்தியாரின் பழைய ஜோர் பதிவில் தெரிகிறது.

நல்ல கதை.பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..

வேப்பிலை said...

அறிவு,தொழிலில் வளர்கிறோமே..
ஆண்டவன் பக்தியில் வளர்கிறோமா

அடுத்த பகுதியை
ஆவலுடன் எதிர்பார்ப்பதால்

காத்திருக்கின்றோம் நாளைய
காலை விடியலுக்காக

seethalrajan said...

Respected Sir,
I early waiting horoscope testing...

kmr.krishnan said...

"ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீது ஆணை செலவே நினைப்பர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்தபேரும்...." தாயுமானவ்ர்.

"காசேதான் கடவுளப்பா அந்தக்கடவுளுக்கும் இது தெரியுமப்பா..."

'வரும் ஆனா வராது' போல காசு 'வேணும் ஆனா வேணாம்'

பொருளாக எதுவும் கிடைக்காத இடத்தில் பணத்தால் என்ன பயன்?

செல்வம் என்பது தனம் தான்யம் பஹு புத்ர லாபம் நூறாண்டு கால நோயற்ற வாழ்க்கை. இங்கே தனம் என்பது காகிதப் பணமல்ல.தனம் என்பது தங்கம் வெள்ளி, தாமிரம்,அலுமினியம், வெண்கலம் போன்ற 'கம்மாடிடீஸ்'

நானும் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்த்து விட்டேன்.தானம் கொடுக்கும் மனம் உள்ளவர்களுக்கு எங்கிருந்தோ குறைவில்லாமல் பணம் வந்து குமிகிறது.'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாட வைக்கிறது.

பணமும், குழந்தைச் செலவமும் போதும் என்பவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. வேண்டும் என்று ஏங்கினால் விலகிப்போய் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது.

என் நண்பர் ஒருவரின் காற்றுப்பட்டாலே அவர் மனைவி கர்ப்பம் தரித்து விடுவார். நண்பரின் 10 குழந்தைகளும் ஒரு வயது வித்யாசத்திலே பிறந்தவர்கள்.ஓரிரு குழந்தைகள் 10 மாத வித்தியாசத்தில் பிறந்தவர்கள்.
ஓரே தமிழ் ஆண்டில் வைகாசியில் ஒன்றும் பங்குனியில் ஒன்றும் அவருக்கு
குழந்தைகள் பிறந்தன.

இது ஒருபுறம் என்றால் திருமணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்காத வீடுகளையும் நானறிவேன்.

என்ன செய்வது? எல்லாம் அவன் செயல்.

சே. குமார் said...

தொடருங்கள்... தொடர்கிறோம்...

C.Senthil said...

Dear Kmr.Krishnan,

Super statement..

C.Senthil said...

dear members,

kindly watch below url

https://in.screen.yahoo.com/four-snakes-protect-sleeping-baby-211000137.html

C.Senthil said...

முயற்சியை கொடுப்பதுவும் ஜாதகத்தில் தான் உள்ளது

அதற்கு தான் உச்சம் அடைந்த கிரகத்திற்கு ஒரு பலன் நீசம் அடைந்த கிரகத்திற்கு ஒரு பலன்.

ராசியிலும் அம்சத்திலும் உச்சம் அடைந்தாள் ஒரு பலன், ராச்யில் மட்டும் உச்சம் அடைந்து அம்சத்தில் நீசம் அடைந்தாள் ஒரு பலன்.

ஆகையால் அவன் 4 மாடு வாங்குவானா? அல்லது 100 மாடுகள் வாங்குவானா? என்பது அவனுக்கு விதிக்க பட்டதே!

மனிதன் முயற்சி கொடுப்பதுவும், கெடுப்பதுவும் அவனது கிரக செயலே..

Radha Krishnan said...

nantrka ullathu.meendum nallai padikka avalaka ullaen.

Manikandan said...

I am waiting for next part for last 3 days. Sir, when will you publish?