மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

25.7.14

காலை இளம் கதிரில் என்ன தெரிகிறது?

 
காலை இளம் கதிரில் என்ன தெரிகிறது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதிகொள்ளுது
குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது
சிவ சுப்ரமண்ய சுப்ரமண்யம் என்று சொல்லுது
சுகமாகுது ... குக நாமமே ... சொல்லாகுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
சக்தி வேல் சக்தி வேல் என்றே சேவல் கூவுது
சக்தி வேல் வேல் சக்தி வேல் வேல் என்றே சேவல் கூவுது

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது வடி வேலது துணையாகுது
ஆகுது ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா ... முருகா ...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
முருகா ...

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது குருநாதனே
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா
   

பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================

6 comments:

வேப்பிலை said...

முருகா பெருமாளுக்கு
அரஹரோகரா...

முத்து தமிழ் வேந்தனுக்கு
அரஹரோகரா...

venkatesh r said...

அருமையான பாடல். சீர்காழியின் குரலில் கேட்க மிக இனிமை. பகிர்வுக்கு நன்றி!

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...

சுடர்மிகு வடிவேலா...

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

kmr.krishnan said...

அருமையான பாடல் ஐயா!நன்றி.

S.Namasu said...

வாத்தியார் அய்யா,

இன்றைய பக்தி மலர் பாடல் வரிகள் அறுமை....

S.நமசு (எ) S.நமச்சிவாயம்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
புதிய நுழைவு சொல்லும் ...பழைய நுழைவு சொல்லும் ..பயன்படவில்லை.. galaxy தளத்தினுள் நுழைய முடியவில்லை.. .தயவு செய்து .. புதிய பாடம் படிக்க உதவி செய்ய வேண்டுகிறேன்.. நன்றியுடன். s.n. கணபதி